Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Thenmazhai Thoovuthadi

Thenmazhai Thoovuthadi 35 1

தேன் துளி 35

 

மும்பையில் கோவையிலிருந்து வந்த பி.ஆர்க் பிரிவு கல்லூரி மாணவர்களுக்கு அங்கிருந்த உள் அலங்காரப் பிரிவினர் தங்களது நிறுவன அமைப்புகளைக் காட்டி விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

 



Advertisement

தானும் மேசையில் குனிந்து ஏதோ வரைந்துக் கொண்டிருந்த வரு ,திடீரென்று அறையில் சத்தம் குறையவும், தன் முன் விழுந்த நீண்ட ஜடையை பின்னால் போட்டுக் கொண்டே நிமிர்ந்துப் பார்க்க , கருநீல நிற கோட் ஒன்றைக் கையில் போட்டுக் கொண்டு எம்டி அறைக்கு செல்லும் முன் , இவர்களுடன் பேசிக் கொண்டிருந்தவரிடம் வந்துப் பேசியவனைக் கண்டவள் … தன்னையறியாமல் எழுந்து நின்று விட்டாள்.

 

அருகிலிருந்த தோழி அவள் கையைச் சுரண்ட,

Advertisement

 

Advertisement

பட்டென்று அமர்ந்தவளிடம்,

 

“ஏன்டி நானும் தான் சைட் அடிக்கிறேன் … உன்னைப்போல இப்படி எழுந்து நின்னுப் பார்க்கல…..”

Advertisement

 

” என்ன சைட் அடிக்கிறேனா … ” என மனதுள் நினைத்து சிரித்தவள் , அவளிடம் சைகையால் பேசி.. ஒரு அடியும் வைத்தாள்.

 

” ஆனாலும் என்ன ஒரு ஸ்டைல் … என்ன ஒரு கம்பீரம்…. ஹன்சம் … நானும் இங்க வந்த நாலு நாளா அவரப் பார்த்துட்டுத்தான் இருக்கேன் … அப்படியே மனசுல பச்சக் னு ஒட்டிக்கிட்டார்.

 

வருவுக்கு அதிர்ச்சியே அவளுடன் தான் தானும் இருக்கிறோம் … இன்று தானேப் பார்த்தோம்…. என யோசித்து அவளிடம் கேட்க ,

 

தன் மொபைலை எடுத்துக் காட்டியவள் அவனது ஃபோட்டோக்களைக் காட்ட ,

 

“இன்னைக்குத் தான் நேர்ல பார்க்குறேன்டி….இந்த கம்பெனி வாறோம்னு செக் பண்ணும் போது ரொம்ப யங் எம்.டினு தெரிஞ்சது…சரினு ஃபோட்டோத் தேடுனேனா … அன்னைலருந்து என் கனவு நாயகன் , மிஸ்டர் எஸ்.வி.ஆதித்யன் தான். வாயேன் ரெண்டு பேரும் ஒரு ஹாய் சொல்லிட்டு வருவோம் … ”

 

புன்னகைத்த வரு தோழியின் குணம் அறிந்தவளாதலால் தவறாக எடுக்காது … ‘நீ போ ‘என, அவள் வருவையும் இழுத்துக் கொண்டு செல்ல ,

 

இதயம் வேகமாக துடிக்க அவன் முன் நின்றவர்களை அவன் புரியாதுப் பார்க்க ,

 

“சார்….” என ஆரம்பித்து அவர்களது கம்பெனியை புகழ்ந்து பேசிய தோழியிடம் , ஒரு புன்னகையோடு தலையசைத்து , ‘தேங்க்ஸ் ..’ என்றவன் சென்று விட்டான்.

 

வெகு நாட்களுக்குப் பிறகான அவனது அருகாமை கண்ணில் நீர் தர அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனுக்கு தன்னை அடையாளம் தெரியாது என்பது நிச்சியமே … அவன் பேசவில்லை என்றாலும் வருவிற்கு வருத்தத்திற்குப் பதில் மகிழ்ச்சியே மனதில் குடிக் கொண்டது.

 

பேசி போன

வார்த்தைகள் எல்லாம்

உனது பேச்சில் கலந்தே

இருக்கும் உலகம் அழியும்

உருவம் அழியுமா …

 

பார்த்து போன பார்வைகள்

எல்லாம் பகலும் இரவும்

உன்னுடன் இருக்கும் உனது

விழிகள் என்னை மறக்குமா…

 

பேசினால் அவனுடன் எப்படியும் மெதுவாக பேசியிருப்பாள் தான் … அவனைப் பார்ப்பதே போதும் என்று இருந்து விட்டாள். அவன் வேலை செய்யும் அழகை ரசித்தவளுக்கு … இப்போது வித்யாவின் ஞாபகம் வர அதற்கான முயற்சியில் இறங்கி அண்ணனிடம் திருமணப் பேச்சு எடுக்க … அவன் பிடி கொடுக்கவில்லை மனதிலுள்ளதையும் சொல்லவில்லை.

 

ஒரு வழியாக அவனிடம் வித்யாவை பெண் கேட்கலாம் என்ற போது அரவிந்த் கண்ணில் கண்ட காதலை அறிந்த வரு எப்படியாவது திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்று ஆவல் கொண்டாள்.

 

ஆனால் அரவிந்த் அவள் திருமணத்திற்கு சம்மதித்தால் தான் தானும் திருமணத்திற்கு சம்மதம் சொல்வேன் என்றுக் கூறி விட … சிறிது யோசித்தவள் ,

 

“அம்மா இல்லாத எனக்கு அண்ணி தான் அம்மா….அதுவும் வித்யாவ சொல்றேன்னா அவ எனக்கு எவ்வளவு ஸ்பெஷல்… நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து என் கல்யாணத்த நடத்தி வைங்க சரியா … நான் அப்பாகிட்ட பேசுறேன்…. ” எனச் சென்றாள்.

 

மகிழ்ச்சியில் வித்யாவிற்கு ஃபோன் செய்ய எடுத்தவன்,  பின் இத்தனை நாள் பேசாத குற்றவுணர்வில் வைத்து விட்டான்.

 

தங்கை சம்மதிக்கவும் , மருத்துவராகவும் , தாய் வழி உறவினராகவும் இருக்கும் கோமல் கிஷோர் தம்பதியரின் புதல்வன் ரிதேஷிற்கு வருவைப் பேசினர். ரிதேஷ் மருத்துவனல்ல, கோவையில் இரு தொழிற்சாலைகளை நிர்வகித்துக் கொண்டிருந்தான். சிறு வயதில் டெல்லி வரும் போது வருவைப் பார்த்திருக்கிறான். அவனது தாய் மூலம் அவளைப் பற்றியும் அறிந்திருந்ததால் அவனும் திருமணத்திற்கு சம்மதித்திருந்தான்.

 

இந்த நிலையில் தான் கனிக்கு உடல் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது அவர்களைப் பார்க்க ஆசைப்படுகிறார் என்றதும் ,விஸ்வனாதன் மட்டும் கிளம்புவதாக இருந்தார். ஆனால் அன்று காயங்களுடன் கோவை வந்தப் பிறகு… அவர் மட்டுமல்ல அவளும் யாருடனும் தொடர்பில்லாது இருந்தவள் , பாட்டியைக் காணத் தானும் வருவதாக சொல்ல தயங்கினாலும் அழைத்துச் சென்றார்.

 

ஆனால் கனி திருநெல்வேலி மருத்துவமனை ஒன்றில் இருந்ததால் அங்கு தான் அழைத்துச் சென்றார் . வருவின் நிலை அறிந்த அனைவருக்கும் அதிர்ச்சியே .அப்போது தான் கனிமொழி ,

 

“தாய்க்கிட்ட கோவிச்சுட்டு இப்படி ஒட்டுல்ல உறவில்லனு போலாமா….உன் கல்யாணத்த தான் நான் பார்க்க முடியல … உன் மவன் கல்யாணத்தையாவது என்னையப் பார்க்கவிடு … ” எனவும் வருவும் விஸ்வனாதனும் ஒருவரை ஒருவர் பார்க்க , அவர் தன் தங்கையிடம் வித்யாவை மகனுக்கு கேட்டார்.

 

மகிழ்ந்த கனிப் பாட்டி வருவுக்கும் மாப்பிள்ளைப் பார்க்கச் சொல்ல , ரிதேஷின் பெயரைச் சொல்லவும் அவர் முகம் வாடி தான் விட்டது. ஆனாலும் சம்மதித்து நாளை விரைவாகக் குறிக்கச் சொன்னார். பரணி மூலம் விவரம் அறிந்த வித்யாவின் பெற்றோர் மகனுக்கும் தெரிவிக்க ,அரவிந்தை தெரிந்தவனாதலால் தன் சம்மதத்தையும் தர நாளும் குறிக்கப் பட்டது.

 

அரவிந்த் சொன்னது போல தன்னைக் கைப்பிடிக்கப் போகிறான் என்ற மகிழ்ச்சியில் இருந்தவளுக்கு வருவுக்குப் பேச்சுப் போனது பேரதிர்ச்சியே … அவள் ஏன் தன்னைத் தவிர்த்தாள் என்பதை விட , நீ என் மனைவி என்று மோதிரம் போட்டு விட்டவன் இது நாள் வரை தன்னிடம் தெரிவிக்கவில்லயே … தன்னை நம்பவில்லையா என்ற ஏக்கம் மனதை வருத்த ஃபோன் செய்யவில்லை.

 

ஒரு நல்ல நாளில் வரு வீட்டினர் அனைவரும் வித்யாவை பெண் பார்க்க வர , அழகிய அலங்காரத்துடன் சங்கீதா திருமணத்தில் அவன் சொன்ன புடவையில் வந்து நின்றவள் குனிந்த தலை நிமிர வில்லை. அருகில் மெல்லிய உடலோடு புடவையில் வந்து தன்னை அழைத்துச் செல்லும் பெண்ணை யார் எனக் கூர்ந்துப் பார்த்தவள் அதிர்ந்து தான் விட்டாள். அழகான சிரிப்பில் வந்த கன்னக் குழியும் கண்களுமே அவளை அடையாளம் காட்டின.

 

சைகையால் தன்னிடம் பேசிய வருவை வித்யாவால் பார்க்க முடியாமல் அழுகை வர … அரவிந்த் தங்கை என்பது இப்போது தான்… தனக்கு முதலிலேயே தோழி அல்லவா …..

 

“என்… என்னடி ஆச்சு… ” என அவள் முகம் பற்றிக் கேட்க …

 

“ஆக்ஸிடன்ட் … கீழே விழுந்துட்டேன் … “என சைகையிலயேச் சொன்னாள். தோழியை இறுக அணைத்தவள் அரவிந்த் தன்னைப் பார்ப்பது தெரிந்தும் பார்க்கவில்லை.

 

வேகமாக திருமண வேலைகள் சென்னையில் நடக்க , குமரியில் இருந்த ஆதி தான் திருமணத்திற்கு முதல் நாள் வந்து விடுவேன் என்று விட்டான். தங்கை கணவனாக வரப்போகும் அரவிந்திற்கு ஃபோன் செய்து வாழ்த்து தெரிவித்ததோடு அவனை காண முடியாததற்கு வருத்தமும் தெரிவித்தான்.

 

தந்தையிடம் ஆதி பேசியதை சொன்னபோது அருகிலிருந்த வரு , “விக்கி … நீ எப்பவும் லாஸ்ட் செகன்ட்ல என்ட்ரி கொடுக்கிறவன்னு எனக்குத் தான் தெரியுமே … ஐ … அம் …வெய்டிங் … விக்ஸ்டப்பா …..” எனப் புன்னகைத்துக் கொண்டாள்.

 

இந்நிலையில் ரிதேஷுடனான திருமணத்தை தன் உறவுகள் முன்னிலையில் அறிவிக்க விரும்பிய விஸ்வனாதன் அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார்.

 

இதோ அதோ என அரவிந்த் வித்யா திருமணமும் வந்தது . இரு நாட்களுக்கு முன்பே சென்னை வந்து அங்கு சிவனாதனும் ராணியும் மகனுக்காக கட்டியிருந்த வீட்டில் தங்கிக் கொண்டனர்.

 

மாலையில் நிச்சயதார்த்தம் மறுநாள் காலை திருமணம் என ஏற்பாடாகியிருக்க , பெண் வீட்டினர் முதலிலேயே வந்து மண்டபத்தில் மணப்பெண்ணை அலங்கரித்து அமர வைத்தனர்.

 

தன் அண்ணன் அருகே கரும் பச்சை நிறப் பட்டுபுடவை அணிந்து அன்றுப் போலவே இன்றும் , பெண்ணிற்கான நிச்சியதார்த்த புடவை ,நகைகளோடு பூவும் வைத்த பெரிய தாம்பூலத் தட்டோடு வந்தாள்.

 

அனைவரும் மண்டப வாசலில் வந்து மணமகனை வரவேற்க , மைத்துனனை முன் வந்து கைக் கொடுத்து அழைத்துப் போன விக்ரமின் கம்பீரத்தில் மயங்கி தான் நின்றாள் வரு .

 

திருமண நிச்சியதார்த்தம் நல்லபடியாக முடிய … உறவினர்கள் மட்டுமே மிஞ்சியிருந்தனர்.

 

உணவுக்கூடத்தின் உள்ளே வரு செல்ல , எதிரே கையைத் துடைத்துக் கொண்டே வந்தவன் வழியை வேண்டுமென்றே மறித்து ஃபோனைப் பார்ப்பதுப் போல் நின்றாள் வரு.

 

ஆம் காதலனை அருகில் கண்ட மகிழ்ச்சியில் பழைய குறும்பு திரும்ப … விக்ரம் ,

 

“எக்ஸ்க்யூஸ் மீ … ” எனவும் நகர்ந்து நின்றவள் , அவன் பின்னால் நாக்கைத் துருத்தி அழகுக் காண்பித்து…

 

“எஸ்… கிஸ் … மீ…” எனச் சிரித்துக் கொண்டே வெளியே வந்தாள். மனம் முழுவதும் அவனுடன் இருக்கிறேன் என்ற சந்தோஷம். தன் மனம் கவர்ந்த கணபதி பப்பாவை வாசலருகேப் பார்த்தவள் , மகிழ்ச்சியைப் பகிர்ந்துக் கொள்ள அங்கு செல்ல ,

 

மண்டபத்தின் முன்பிருந்த தோட்டத்தில் ரிதேஷ் ஃபோன் பேசிக்கொண்டிருந்தான். அவனருகில்  வந்த வரு, “ஹாய் … ” என்றவள் ஓரமாக இருந்த சிறிய பிள்ளையார் கோவிலைக் காட்டி ,

 

“அங்கு வெய்ட் பண்றேன்…. ” என சைகையில் சொல்லிவிட்டுச் செல்ல , ஃபோனைக் கட் செய்தவன் அங்கு சென்றான்.

 

அவனிடம் சைகையில் பேச , புரிந்துக் கொள்ள கஷ்டப்பட்டவனிடம், மொபைலைக் காட்டியவள் அவன் எண் கேட்டு மெசேஜ் செய்தாள்.

 

“நம்ம கல்யாணம் பண்ணிக்கிட்டா வாழ் நாள் முழுசும் இப்படித்தான் பேச முடியும் … எனக்கு திரும்ப பேச வரும்னு சொல்லியிருப்பாங்க  .. ஆனா … ”

 

“பரவாயில்ல … நான் மெதுவா புரிஞ்சுக்குவேன்” எனப் பதில் சொன்னான்.

 

சிரித்துக் கொண்டவள் , “கோமல் ஆன்ட்டி ..உங்க கிட்ட என்ன சொன்னாங்க தெரியாது…. பட் நான் இப்ப உண்மைய சொல்றேன் ….ஒரு கல்யாணத்துக்கு தேவை நம்பிக்கைத் தானே … உங்களுக்கும் என் மேல நம்பிக்கை இருக்கலாம் .. அது பொய்யா இருக்கக் கூடாதில்லயா…. ”

 

“வர்ஷு … எனக்கு உன் மேல நிறைய நம்பிக்கை இருக்கு ….. அம்மா எல்லாம் என்கிட்ட சொல்லியிருக்காங்க … நீ ஒன்னும் சொல்ல வேண்டாம் … ”

 

அவர்களது உரையாடல் இந்தியிலும் ஆங்கிலத்திலும் தான் நடந்தது. ரிதேஷின் தாய் மொழியும் அது தான் ….. வரு தாயின் மொழியும் அது தான். அவ்வளவு நேரம் அவனை நிமிர்ந்து பார்த்து பேசாமல் இருந்தவள் , இப்போது கம்பீரமாக நிமிர்ந்தவள் ,

 

“ஆன்ட்டி என்ன சொன்னாங்க தெரியாது … ஆனா நான் உண்மையைச் சொல்லணும் …என் உடல் தூய்மையானது அல்ல …. அடையாளம் தெரியாத நான்கு பேர்களால் தீண்டப்பட்ட உடல் ….இது உண்மை … ”

 

ரிதேஷின் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாகத் தெரிந்தது. ஆனாலும் சமாளித்தவன் ,

 

“பரவாயில்லை  வர்ஷூ….அம்மா அப்பாவுக்கு நான் ப்ராமிஸ் பண்ணியிருக்கேன் . அவங்க ஃபிரண்ட் ஷர்மிளா பொண்ணை நான் பார்த்துக்கிறேன்னு…. ”

 

“எனக்கு அது வேண்டாம் ரிதேஷ் … என்னை எனக்குப் பார்த்துக்கத் தெரியும் ….. ஆன்ட்டி அங்கிளுக்காக , எங்கப்பா அம்மா அண்ணனுக்காக கூட நானும் சரின்னு சொல்லலாம் நீங்களும் சொல்லலாம் …. அப்படி ஒரு வாழ்க்கை நல்லாருக்குமானத் தெரியல ….”வேகமாக டைப் செய்து அவனுக்கு அனுப்பினாலும் அதையே சைகையால் அவனுக்கு உணர்த்த முயன்றவளுக்கு … கோபமும் அழுகையை அடக்குவதும் மூச்சு வாங்க செய்ய , அருகில் வர முயன்றவனைத் தடுத்தவள் ,

 

“ப்ளீஸ் …. இந்த பரிதாபம் … பாவம் எல்லாம் வேண்டாம்….. என் மேல பரிதாபப்பட்டு பண்ற கல்யாணம் எனக்கு வேண்டவே …வேண்டாம்…. நீங்க ரொம்ப நல்லவங்க … நல்ல பிஸ்னஸ்மேன்கூட .. ஏன் ரொம்ப ஹேன்சம் கூட …. உங்களுக்கு என்னைப் போல குறைகளோட இல்லாம அழகான  பொண்ணேக் கிடைப்பா…. ” என்றவள் ,

 

“எனக்கும் அப்படித்தான் … என்னைய பரிதாபமாக பார்க்காம … என் கடந்த காலம் … நிகழ்காலம்னு எதுவுமே பார்க்காம எனக்காக மட்டுமே ஒருத்தர் வருவார்… ” என்றவளது கண்கள் விக்ரமின் நினைவில் ஒளிர ,மெல்லிய புன்னகை உதடுகளில் தோன்ற சொல்லிக் கொண்டு இருக்க ,

 

“ஐ திங்க் … யு ஆர் இன் லவ் … ” என புன்னகையோடு கைகட்டி அவள் முகம் பார்த்து ரிதேஷ் சொல்ல ,

 

திடுக்கிட்டு கண்களைச் சிமிட்டியவளைப் பார்த்தவன் … இப்போது வாய்விட்டு சிரித்தான்.பின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!