Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kandaenadi Un Kaathalai

Kandaenadi un Kaathalai – 5

போன் பேசிவிட்டு வந்தவன் தூரத்தில் மலருடன் ஒரு சில பேர் வம்பு இழுத்து கொண்டு இருப்பதை பார்த்தவன் கோபம் தலைக்கு ஏற அவர்கள் இருக்கும் இடம் நோக்கி சென்றான்.

“மலர்” என்ற சூர்யாவின் அழைப்பு காதில் விழ கோடி மின்னல்கள் கண்ணில் மின்ன அவன் அருகில் போய் நின்றுகொண்டாள்.

தன் கையை இறுக்கி பிடித்து இருந்த அவளது கரத்தில், அழுத்தம் கொடுத்தவனாக அவள் புறம் தலையை மட்டும் திருப்பி பார்த்தவாறு

“இங்கே, என்ன செய்கிறாய் மலர்?… அம்மா உன்னை அங்கே தேடுறாங்க போ” அவள் பயத்தை கருத்தில் கொண்டு கோபத்தை அடக்கி தன்மையாக சொல்லி அனுப்பினான்.



Advertisement

அவன் போக சொல்லவும், அங்கு நின்று கொண்டு இருந்த ஐந்து நபர்களில் நடுநாயகமாக நின்று கொண்டு இருந்தவன் மீது பயத்தோடு மலரின் பார்வை செல்வதை அறிந்தவன்.,

அவள் முன்னாடி எதுவும் கேட்காது “நீ, அம்மாகிட்ட போ நான்  இப்போ ரேன்”  அவளை அங்கு இருந்து அனுப்புவதில் கவனமாக இருந்தான்.

“இல்லை அத்தான், நீங்களும் என்கூட வாங்க நான் அத்தைகிட்ட போனதும் நீங்கள்…..” என்று அவள் முடிப்பதற்குள்,

Advertisement

“போடி… அம்மாகிட்ட” என்று கோபத்துடன் கடித்த பற்களுக்கு இடையே வார்த்தைகளை அமைதியாக அவளுக்கு மட்டும் கேட்கும் படி சொன்னான்.

Advertisement

அவனின் கோபமான பேச்சில் அரண்டு போனவள் பட்டென்று அவன் கரங்களை விடுத்து…. மலங்க மலங்க விழித்து பார்த்தபடி  தன் அத்தையிடம் கிட்டதட்ட பயந்து ஓடிவிட்டாள்.  

அவள் சென்றதும் நிதானமாக திரும்பி அங்கு நடுவில் கருப்பு மற்றும் சிகப்பு கலந்த உடை அணிந்தவனின் புறம் பார்வையை திருப்பி அவனை கூர்ந்து கவனித்து கொண்டு இருந்தான்.

அவன் பேச வாய் திறக்கவும் “ஹோ.. நீங்கள் இரண்டு பேரும் இங்கு தான் உள்ளீர்களா” என்றபடி அனிக்கா சூர்யா பக்கத்தில் வந்து நின்று கொண்டாள்.

Advertisement

“சூர்யா, இது விக்கி என்னுடைய கசின்… இவன் பேரன்ட்ஸ்  லண்டன்இருக்காங்க.  இவன் இங்கு எங்கள் கூடத்தான் இருக்கிறான்” என்றாள் சிரிப்புடன்.

“விக்கி, இது சூர்யா என் காலேஜ் சீனியர்” .

“ஓஹோ… இவன் உன் கசினா, கொஞ்சம் பார்த்து இருக்க சொல். நான் வருகிறேன்” என்று அவளிடம் சொல்லி விட்டு அவன் புறம் எச்சரிகையாக ஒரு பார்வையை செலுத்தி விட்டு நகர்ந்தான்

அனிக்கா பதட்டத்துடன் விக்கி அருகில் சென்று அவன் சட்டையை பிடித்து “டேய்,  எங்க ரெண்டு பேர் மேரேஜ் முடியிற வரை அவன்கிட்ட எந்த வம்பும் வச்சிக்காத.” கோபத்துடன் சொன்னாள்.

மெதுவாக அவளின் கைகளை தன் சட்டையில் இருந்து எடுத்துவிட்டபடி…. அவன் செல்லும் திசையை பார்த்தவாறு “ஓஒ… நீ சொன்ன சூர்யா இவன்தானா… ம்ம் நல்லாத்தான் இருக்கிறான். சரி, அந்த மஞ்சள் காட்டு மைனா யாரு” என்றான் கண்களில் ஆர்வம் மின்ன.

“யாரு, அந்த மலரையா கேட்கிறாய்… அவள் இவன் வீட்டில் தான் வசிக்கிறாள். அவனோட மாமா பொண்ணு  அப்பா, அம்மா இருவரும் இறந்துவிட்டதால் சூர்யா வீட்டில் தான் அவளை பார்த்துக்கிறாங்க

பின்தான் நினைவு வந்தவளாக “அது இருக்கட்டும், நீ ஏன் அவளை பற்றி விசாரிக்கிற??!” என்று அவன் முகம் பார்த்தவள் அதில் மின்னிய ஆசையில் ஒரு நிமிடம் திகைத்து போய்விட்டாள்.

“டேய்,  நீ அந்த மலரை என்ன வேண்டுமானாலும் செஞ்சிக்கோ அவள் இருப்பது எனக்கு கூட ஒருவிதத்தில் பிரச்சனை தான், ஆனால் சூர்யாவிற்கு எதுவும் தெரியாத படி பார்த்துக்கோ”.

“ஏன், இவன் இல்லாவிட்டால் வேறு பணக்காரன் கிடைக்க போகிறான்… ஹ்ம்ம், என்னமோ முதல் காதல் மாதிரி பினாத்திட்டு இருக்க” உதடு சுளித்து அலச்சியமாக சொன்னான்.

‘ஹ்ம்ம், சும்மாவே இவன் என்னை மதிக்க மாட்டான்… இதில் நான் போய் இப்படி கெஞ்சினால் இருக்கிற மரியாதையும் போய் விடும்’  மனதிற்குள் நொந்து கொண்டாள்.

“இங்கு பார் விக்கி, நீ என்ன வேணுனாலும் செய். ஆனால், உன்னால் என் விஷயத்தில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் நான் சும்மா இருக்க மாட்டேன்” என்று  அங்கு இருந்து சென்று விட்டாள்.

அனிக்கா பேசியதை காது கேட்டாலும் விக்கியின் பார்வை எல்லாம் அங்கு தூரத்தில் தன் அத்தையின் அருகில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்த மலர் மீது தான் இருந்தது. அவளோட அந்த சாம்பல் கண்ணு அவனை ரொம்பவே ஈர்த்து விட்டது.

விருந்தில் இருந்து கிளம்பும் பொழுது சங்கர், கங்காவின் முகம் சற்று இறுக்கமாகவே இருந்தது. மற்ற நேரம் என்றால் சூர்யா இதை கவனித்து இருந்திருப்பான்., ஆனால் , இப்போ அவனே தன் சுயம் இல்லாது மலரின் மற்றும் அந்த விக்கியின் மீது கோபத்தில் இருந்ததால் அவன் தன் பெற்றோரின் முகம் மாறுதலை கவனிக்க வில்லை.

சூர்யா நான் மிஸ்டர். கேசம் ஃபமிலிய அவங்க வீட்ல விட்டுட்டு வரேன். நீ மலர கூட்டிட்டு வீட்டுக்கு போ” என்றவர் கிளம்பி விட்டார்.

வீட்டிற்கு வரும் பொழுதும் அதே அமைதி தான் காருக்குள் நிறைந்து இருந்தது… மலருக்கு சூர்யாவின் புறம் திரும்பவே பயமாக இருந்தது, அவன் அத்தனை கோபத்துடன் வண்டி ஓட்டி கொண்டு இருந்தான். அவனின் கையில் கார் பறந்தது என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்.

அவன் கார் ஓட்டியதில் இன்னும் பயந்து போனவள்.. கொஞ்சம் துணிவை வரவளைத்து கொண்டு அவன் புறம் திரும்பி “அத்தான்,  கொஞ்..சம் மெது…வா போங்க, எனக்கு பயமாக இருக்கு” என்றாள் திக்கி திணறி.

உக்கிரமாக அவளை பார்த்து முறைத்தவன்…. எதுவும் பேசாது வண்டியின் வேகத்தை குறைத்தான்.

ஏய் நீ படிச்சவதான? ஒரு அஞ்சு பேரு முன்னாடி உன்னால தைய்ரியமா பேச முடியாது? சின்ன பப்பா மாதிரி பயந்து போய் என் பின்னாடி ஒழிஞ்சி நிக்கிற??”

என்ன இவன் விட்டா நான் ஏதோ பெரிய தப்பு செஞ்ச மாதிரி ஜெயில தூக்கி போட்ருவா போல “சும்மா சும்மா கத்தாதீங்க அத்தான். யெஸ், பயப்பட்டேன்… அந்த பயம் என் கூடவே பொறந்த்து போல அது என்னை விட்டு போக மாட்டிக்கு. சும்மா அதையே சொல்லி காட்டாதீங்க” இதையும் அவள் ஏதோ நடுங்கிய பயந்த குரலில் தான் சொன்னாள்.

“ஹ்ம்ம் இதுக்கு ஒன்னும் குறையில்லை.” சத்தமாக சொன்னவன், ‘அந்த பூனை கண்ண உருட்டி பார்க்கிறதுக்கு இந்த பேச்சு மச் பெட்டர்’ முனுமுனுத்தான்.

அவன் முனுமுனுப்பு மலர் காதுக்கு எட்டினாலும் என்ன சொன்னான் என்பது அவளுக்கு புரியல… மொர்ஓவர் அவள் அதுல இன்ட்ரெஸ்ட்டும் காட்டல. சூர்யா அவளை திட்டிய கடுப்பில் இருந்தாள்.  

வீட்டிற்குள் வந்ததும் காரின் கதவை திறந்து வேகமாக அடித்து சாத்தவிட்டு மலரின் புறம் திரும்பாது தன் அறையை நோக்கி சென்று விட்டான்.

மலருக்கு, காரில் இருந்த அந்த தைய்ரியம் இப்போ இல்லை. அவனை எப்படி சமாதனம் படுத்துவது என்று தெரியாது முழித்தாள். ‘இன்னும் ஒரு நாள் தான் இருக்கிறது அவன் அமெரிக்கா போக’ என வருந்தியவள், வரண்டாவில் பேச்சு குரல் கேட்டு உள்ளே சென்றாள்.

“சூர்யா, காலையில் எழுந்ததும் என் ரூமுக்கு வா உன்கிட்ட கொஞ்சம் பேசனும்” என்றார் சங்கர் இறுகிய குரலில்.

சூர்யாவும் ஒன்றும் ஆராயாது “சரிப்பா” என்று  தன் அறைக்கு சென்று விட்டான்.

ஆனால், மலர் அவரின் குரலின் வேறுபாட்டை அறிந்து கொண்டாள். பக்கத்தில் நினற அவள் அத்தையின் முகத்திலும் ஏதோ வருத்தம் போல் தெரிய அவரிடம் ஓடி சென்று

“என்ன அத்தை, ஒரு மாதிரி இருக்கீங்க. தாவது உடம்புக்கு சரி இல்லையா” என்றாள் பதட்டத்துடன்.

அவளை பார்த்ததும் இருவருக்குமே தொண்டை அடைத்தது. சங்கர் தான் நிதானத்திற்கு வந்து “அது ஒன்னும் இல்லைடா கண்ணா, அங்க ரொம்ப நேரம் இருந்தாள் அல்லவா அதான் ஒரு மாதிரி தெரிகிறா, நான் பார்த்து கொள்கிறேன் உன் அத்தையை… நீ போய் தூங்கு” என்று அவளை அனுப்பி வைத்தார்.

அவளும் மேலும் எதுவும் கேட்காது ‘சரி’ என்று தலை ஆட்டிவிட்டு யோசனையுடன் மாடி ஏறினாள். தன் அறைக்கு செல்லும் வழியில் சூர்யா நிற்பதை பார்த்தவள், அது வரை இருந்த மனநிலை மாறி பயத்துடன் அவனை ஏறிட்டாள்…. இன்னும் அவன் முகத்தில் கோபம் கனன்று கொண்டு தான் இருந்தது.

“உனக்கு அந்த விக்கி-கிட்ட என்ன பேச்சு… அவனை பார்த்தாலே பொறுக்கினு தெரியிது. பின் ஏன் அங்கேயே நின்னுட்டு இருந்த விலகி வர வேண்டியதுதானஅதே கோபம்.

சூர்யா சற்று மாநிறம் அவனது அப்பா போல். அது ஒன்னு மட்டும்தான் அவனுக்கு அப்பா வழி மத்தபடி அந்த ஆழ்ந்த பார்வை, கண்களின் கூர்மை, வளமையான் உடல், மூக்கு நுனி கோபம் எல்லாமே அவன் அம்மா வழி அதாவது அவன் தாத்தா போலனு கங்கா அடிக்கடி சொல்வாள்.

இப்பொழுது அந்த மாநிறம் கோபத்தில் சற்று அதிகமாவே கருஞ்சிவப்பேரி மலருக்கு தெரிந்தது.

‘யார் அந்த விக்கி, யாரை பற்றி இவன் பேசுகிறான்’ என்று யோசித்தவளுக்கு பின்புதான் புலப்பட்டது அவன் யாரை சொல்கிறான் என்று.

சலிப்புடன் ம்ச்ச் அத்தான் பிளீஸ் லெட்ஸ் பீ ஃபுல்ஸ்டாப் தட் டாப்பிக். நான் அங்கு சும்மா தான் நின்னுட்டு இருந்தேன். அந்த கும்பல் தான் என்கிட்ட வந்து பேச்சு கொடுத்தாங்க”.

அவளது அந்த சலிப்பு அவனை என்னமோ செய்தது. அவளிடம் மேலும் எதுவும் கேட்காது “சரி, போய் தூங்கு” என்றவன் தன் அறைக்கு சென்று விட்டான்.

அவளும் விட்டாள் போதும் என்னும் மனநிலையில் தான் இருந்தாள். அதுவும் அங்கு ரொம்ப நேரம் நின்றது  கால் வேற வலிக்க ஆரம்பித்தது.

 அதனால் தன் அறைக்கு சென்றவள் உடனே தன்னை சுத்த படுத்தி கொண்டு படுக்கையில் சாய்ந்தவள் சீக்கிரமே தூங்கி விட்டாள்.

இங்கு சூர்யா தூக்கம் வராமல் தவித்து கொண்டு இருந்தான். அவனுக்கு அந்த விக்கியின் பார்வையை இப்பொழுது நினைத்தாலும் அவனை தூக்கி போட்டு மிதிக்க வேண்டும் என்ற அளவுக்கு கோபம் கட்டு கடங்காமல் வந்தது கூடவே விருந்தில் ரொம்ப நேரம் நின்றதால் அசதியும் வர, இந்த விஷயத்தை ஒதிக்கி வைத்துவிட்டு அப்படியே கண் அயர்ந்துவிட்டான்.

 மறுநாள் காலையில் சீக்கிரம் குளித்து முடித்து கீழே தன் தந்தையின் அறையை நோக்கி சென்றான். அங்கு தன் பெற்றோர் இருவரும் இருக்க…. யோசனையுடன் அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்து தன் தந்தையை நோக்கி கூர் பார்வையுடன் “சொல்லுங்க அப்பா, ஏதோ பேசனும்னு சொன்னீங்க

அதற்கு அவர் சொன்ன பதிலில் சூர்யாவும், காபி கோப்பையுடன்  அறைக்கு உள்ளே வந்த மலரும் ஒருங்கே அதிர்ந்து நின்றனர்.

தன் தந்தையின் பதிலுக்காக காத்து கொண்டு இருந்தவன் காதில் “ஏன். சூர்யா உனக்கு பெத்தவுங்க யாருமே இல்லையா…. அதுக்குள்ள உன் கல்யாணத்திற்கு பொண்ணு பார்த்துட்ட போல..” இறுகி போன குரலில்.

சங்கர் சொன்ன அந்த வார்த்தையை கேட்டு கங்காவின் முகம் வேதனைய வெளிபடுத்தியது என்றால் ….. சூர்யாவும், மலரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றனர்.

ஏனெனில், சங்கர் ந்த மாதிரி பேசுபவர் இல்லை…. ஏன், அவர்கள் வீட்டில் யாருமே இப்படி பேசுபவர் அல்ல, பேசும் பேச்சு மிக மரியாதை  இருக்கும்.

தன் தந்தையின் கூற்றில் தன் குணம் அடிபடுகிறது என்பதை சூர்யாவால்  ஏற்க முடியவில்லை. “அப்பா, என்ன கேட்கிறதா இருந்தாலும் நேரடியாக கேளுங்கள் ….”  கர்ஜிக்கும் குரலில் சூர்யா.

 ஒரு நொடி அவன் கோபத்தில் கங்காவும், மலரும் அதிர்ந்து மீண்டு வந்தனர்… ஆனால், சங்கரின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.

அவன் கோபத்தில் கண்டு “அத்தான், எதுக்கு இந்த கோபம் கொஞ்சம் அமைதியா பேசுங்க..” என்றாள் குரலில் கெஞ்சலுடன்.

அவளை திரும்பி பார்த்து ஒரு முறை முறைத்தவன்… தன் தந்தையின் முன் நின்று “எனக்கு பதில் தெரிந்து ஆக வேண்டும்”.

இதற்கு மேல் இருவரும் பேசினால் பெரிய பிரச்சனை வரும் என்று கங்கா அவன் அருகில் சென்று “கண்ணா, நேற்று விருந்துல உன் அப்பாகிட்ட யாரோ அனிக்காவாம்… அவளுடைய அப்பா வந்து ஏதோ ஏதோ சொன்னார்” என்றாள் வேதனையுடன்.

மலர், அனிக்கா என்ற பெயர் கேட்டவுடன் இறுகி போய் நின்றுவிட்டாள். சூர்யாவுக்கு அப்பொழுதுதான் தான் அனிக்கா பற்றி இவர்களுடன் பேசவில்லை என்ற நினைவு வந்தது. நேற்றே அறிமுக படுத்தி வைத்து இருப்பான்… ஆனால், இந்த மலர் பிரச்சனையால் அதை சுத்தமாக மறந்து விட்டான். திரும்பி மலரை பார்த்தவன் கண்களில் அவளின் இறுகிய தோற்றம் தெரிய ‘ஏன் இவள் இப்படி நிற்கிறாள்’ .

“என்னடா சூர்யா, உனக்கு அந்த பொண்ணை முன்னமே  தெரியுமா??” என்று கேட் தன் அன்னையை ஒரு அழுத்தமான பார்வை பார்த்தான்.

பின், சங்கரின் அருகில் சென்று  “அவளின் அப்பா எது சொன்னாலும் சரி… உங்களுக்கு உங்க புள்ளை மேல நம்பிக்கை இருக்கனும்”  அனல் கக்கும் விழிகளுடன்.

மலர், அங்கு நடப்பதற்கும் தனக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லாது ஒரு வேடிக்கையாளராக மட்டும் இருந்தாள். கங்காதான் பதட்டத்துடன் ‘ஐயோ, இது என்ன இவனுக்கு கோபம் அதிகமாகுதே தவிர குறைந்த பாடு இல்லையே’ என்று தவித்து கொண்டு இருந்தார்.

“என் பிள்ளைகள் மீது நம்பிக்கை இல்லாத அளவுக்கு நான் சின்ன புத்தி உடையவன் அல்ல…. என் பிள்ளையின் மனம் பற்றி யாரோ ஒருவன் சொல்லி எனக்கு தெரியுதே என்ற ஆற்றாமைதான்” என்றார் வருத்ததுடன்.

 “அப்பா, நான் அனிக்கா பற்றி உங்ககிட்ட சொல்லி இருக்கனும். பட் அட் த சேம் டைம்  நான் அதை மறைக்கனும்  நினைச்சது இல்லை.

“இங்கு, பார் கண்ணா உன் அம்மாவும் நானும் காதலுக்கு எதிரி இல்லை. அது உனக்கும்  தெரியும் நீ முன்னமே எங்ககிட்ட சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்” .

 “சொல்ல வேண்டாம் என்றெல்லாம் இல்லை அப்பா. நான் அமெரிக்கா போகும் முன் சொல்லிறனும் நினைச்சேன் பட்துக்குள்ள ஏதேதோ நடந்து முடிந்து விட்டது” என்றவன் அனிக்கா மற்றும் அவர்களின் காதல் வரை சொல்லி முடித்தான்.

பெற்றோர் இருவருக்கும் இதில் விருப்பம் இல்லைதான். ஆனால், மகனின் ஆசை என்று வரும் பொழுது அவர்கள் விருப்பு, வெறுப்பு எல்லாம் பின்னுக்கு சென்று விடும் அல்லவா…. அதனால், அவன் காதலை பற்றி அறிந்தும் ஒன்றும் சொல்லாது இருந்தனர்.

“ஆனால், அப்பா இப்பொழுது அவங்களுக்கு எந்த வாக்கும் கொடுக்க வேண்டாம். நான் அமெரிக்கா போய்ட்டு வந்ததும் எல்லாம் பார்த்து கொள்ளலாம்” என்றான் முடிவாக.

சங்கர், கங்கா இருவருக்கும் அது சரி என்றே பட்டது… அப்பொழுதுதான் மலர் என்ற ஒருத்தியின் நினைவு சூர்யாவுக்கு வந்தது, திரும்பி பார்த்த பொழுது அவள் நின்ற இடம் வெறுமையாகவே இருந்தது.

“சரி, இரண்டு பேரும் சாப்பிட வாங்கள்” என்று கங்கா சென்று விட்டார்.

மலர் சமையல் அறையில் தான் இருந்தாள்…. கைகள் தானாக வேலை செய்தாலும் மனம் அதில் ஒன்றவில்லை. அனிக்கா பற்றி எப்போ தெரிந்ததோ தன் காதலுக்கு எதிர்காலம் இல்லை என்பதை அறிந்து கொண்டாள்.  

இருந்தும் மலருக்கு அதனை தாங்கி கொள்ள முடியவில்லை. இத்தனை நாட்கள் அவனே எல்லாம் என்று வாழ்ந்து விட்டவளுக்கு உடனே மனதை மாற்ற முடியவில்லை. பின், ஒருவாறு தன்னை தேற்றி கொண்டு வேலை செய்ய ஆரம்பித்தாள்.

றுநாள், விமான நிலையத்தில் இருந்தவன் மனம் முழுவதும் மலரின் நினைவே பிரதானமாக இருந்தது. காலையில் அவனை வழி அனுப்பி வைக்க கூட அவள் வரவில்லை… தன் அன்னையிடம் கேட்டதற்கு ‘அவள் வயிறு வலியில் படுத்து இருக்கிறாள்’ என்றதும் ஒன்றும் சொல்லாது தன் அம்மாவிடம் மட்டும் சொல்லிவிட்டு வந்துவிட்டான்.

 அவனுக்கு ‘மலர் தன்னை விட்டு ஒதுங்கி போகிறாளோ’ என்று நினைத்தவனுக்கு அது ஏன் என்று புரியவில்லை…. தேவையில்லாமல் கோபம் வேறு வந்தது அவனுக்கு.

சங்கர் அவன் அருகில் வந்து அமர்ந்ததும் தன் எண்ணத்தில் இருந்து மீண்டவன் அவரிடம் ஏதோ சொல்ல வரும் முன் அவரே “இங்கு பாரு கண்ணா, எதை பற்றியும் கவலை கொள்ளாது உன் படிப்பில் மட்டும் கவனம் செலுத்து. மற்றவை எல்லாம் நீ வந்ததும் பார்த்து கொள்ளலாம் சரியா” என்றார் அவன் மனம் அறிந்தவராய்.

தன் மனதில் உறுத்திய விஷயத்தை… தந்தை தெளிவாக புரிந்து கொண்டு சொன்னதும் மனதில் ஒருவித இதம் பரவ தன் தந்தையை கட்டி அணைத்து “தேங்க்ஸ் டாடி” உணர்ச்சி மிக.

முதல் கொஞ்ச நாட்கள் ஏதோ கடமைக்கு என்று திரிந்து கொண்டு இருந்தாள் மலர்…. பின், தன் அத்தை, மாமா இருவருக்காக மனதை தேற்றி கொண்டு சகஜமாகி விட்டாள்.

அவளை பொறுத்த மட்டில் அவளுடைய காதல் ராதையின் காதல். அதை தன் மனதின் உள்ளே பூட்டி பூஜித்து கொண்டு, இனி சூர்யா தனக்கு கிடையாது என்ற நிதர்சனம் தெரிந்து வாழ பழகி கொண்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.

இதற்கு இடையில் தன் இருப்பை, சூர்யாவின் காதலி மற்றும் சங்கரின் தொழில் துறை நண்பரின் மகள் என்ற பெயரின் மூலம் அனிக்கா சூர்யாவின் வீட்டிற்கு வந்து போவாள்….. முதலில் அவளின் வரவு கங்காவிற்கு சங்கடமாக இருந்தாலும்… தன் மகனின் மனதில் இடம் பிடித்தவள் என்ற எண்ணம் வர ஒன்றும் சொல்லாது அமைதி காத்தார்

ஆனால், போக போக கங்காவின் மனதில் அவளின் நடிப்பு மூலம் ஏதோ ஓரளவுக்கு இடம் பிடித்து விட்டாள். மலர் மட்டும் இவள் வரும் நேரம் தன் அறையே தஞ்சம் என்று இருப்பாள்…..

ஏனெனில், அனிக்காவின் உண்மையான குணம் வெளிப்படுவது மலரிடம் மட்டும் தான். அப்பொழுது எல்லாம் அவளிடம் பேச்சு கொடுக்காது முடிந்த மட்டும் அவளிடம் இருந்து ஒதுங்கியே இருக்க முற்படுவாள்.

அன்று, தன் அத்தையுடன் சமையல் அறையில் வாய் அடித்து கொண்டு இருந்தவள் “ஹாய், ஆன்ட்டி” என்ற குரலில் முகம் சுருங்கி நின்று விட்டாள்.

“வாமா அனிக்கா, என்ன கொஞ்ச நாளாவே இங்கு வரவே இல்லை”  காய் நறுக்கி கொண்டே கேட்டார்.

எக்ஸாம் ஆன்ட்டி, அதான் வர முடியல” தேனொழுகும் குரலில் கங்காவிடம் சொல்லி கொண்டு இருந்தாலும் பார்வை மலரிடமே இருந்தது.

“என்ன மலர், உன் காலேஜ் படிப்பு எல்லா எப்படி போய்ட்டு  இருக்கு. பரிட்சை எல்லாம் முடிஞ்சிட்டா?

“ம்ம் நெக்ஸ்ட் வீக் எக்ஸாம்”  ஏதோ கடனுக்கே என்று பதில் சொன்னவள்…. தன் அத்தையிடம் திரும்பி “அத்தை நான் படிக்க போறேன்”  நகர போனவளை, அனிக்காவின் குரல் நிறுத்தியது,

“என்ன மலர், நான் வந்தால் மட்டும் உனக்கு தாவது வேலை வந்துவிடும், இல்லை தலை வலி வந்துவிடும்…. அது ஏன் மலர்?!” கண்களை விரித்து ஆச்சிரிய்பட்டாள் அனிக்கா.

கங்கா அவளின் பேச்சை சரியாக கவனிக்கவில்லை, அதனால் மலரிடம் “சரி மலர் நீ போ. இன்னும் அறைமணி நேரத்துல சாப்பாடு ரெடி ஆகிரும் அப்போ வா”.

அனிக்காவிடம் ஒரு வெற்று பார்வையை செலுத்தி விட்டு… மனம் முழுவதும் கோபத்திலே முழ்கி இருந்தவளின் கவனத்தை வீட்டு தொலைபேசி சத்தம் போட்டு கலைத்தது.

‘சை, யாரு இது… ஒரே இம்சையா இருக்கு’ கோபத்தில் முனங்கி கொண்டு போனை எடுத்தவள் “ஹலோ, யாரு” என்றாள் கோபத்தில்.

எதிர் புறம் ஒன்றும் சொல்லாது அமைதியாக இருக்கவும் மலரின் பொறுமை கரைய தொடங்கியது. அனிக்காவின் மேல் உள்ள கோபம் எல்லாம் சேர்ந்து அவளை எரிச்சல் படுத்த “ஹலோ, யாரு சார் அது…. போன் செய்து விட்டு பேசாமல் இருக்கீங்க” .

அவளின் பொறுமையை சோதிக்காது மறுபுறம் “மலர்” என்ற குரல் கேட்டதும் நுரையீரலுக்கு செல்லும் காற்று தொண்டையிலே நின்ற உணர்வு, மேலும் இதயம் வேறு படபடக்க வெற்று நாக்கை எச்சியால் சற்றே உலர்த்தி தொண்டையில் நின்ற காற்றை மெதுவாக சுவாச பைக்குள் கடத்தி  “அத்தான்” என்றாள்.

போன்ல யாருமா??,” என்றபடி கங்கா அவள் அருகில் வந்து நின்றார்.

எங்கே அவங்கிட்ட பேசினால் தான் உடைந்து அழுது விடுவோமோ என்று பயந்து போனை கங்காவிடம் கொடுத்து “அத்தான் பேசுகிறார்” என்று  தன் அறையை நோக்கி கிட்டத்தட்ட ஓடினாள்.

அறைக்கு வந்த பின் தான் அவளால் மூச்சு சீராக விட முடிந்தது. சூர்யா இதுவரைக்கும் அவளை இருமுறை மட்டும் தான் ‘மலர்’ என்று பெயர் சொல்லி அழைத்து இருக்கிறான்.

எப்போவும் அவனுக்கு அவள் ‘ஃப்ளவர்’தான். அன்று கோபத்தை வெளிபடுத்தும் பொழுது கூறியது. பின், இன்று போனில்….. ‘தனக்கு மட்டும் ஏன், இப்படி??’ என்று தன்னிரக்கத்தில்  அழுது கரைந்து கொண்டு இருந்தாள்.

‘தன் மனதை கட்டுபடுத்தி வைத்து இருப்பதாக’  நினைத்து கொண்டு இருந்தவளுக்கு அது ‘இல்லை’ என்ற உண்மை வெட்ட வெளிச்சமாக தெள்ள தெளிவாக இன்று தெரிந்தது மலருக்கு.

சூர்யாவின் குரல் கேட்டதும் குற்றால மழை சாரல் போல் இருந்தாலும் அந்த குளிர்ச்சி சுகத்தை முழுதாக அனுபவிக்க முடியாது தன் மனதில் அவனை பற்றி சூரியாவுக்கு மட்டும் சொந்தமான்  உணர்வுகளை அடக்க பெறும் பாடு பட்டு விட்டாள் மலர்.

இன்னும், ஒரு மாதம் தான் இருக்கிறது அவன் திரும்பி இந்தியா வருவதற்கு. ‘அவனை பார்த்து தான் தடுமாற கூடாது’ என்று இதுவரை ஒரு ஆயிரம் முறையாவது கடவுளிடம் சொல்லி தஞ்சம் அடைந்து இருப்பாள்.

மலரின் வேண்டுதல் இறைவனுக்கு எட்டியதா? இல்லையா? என்பது அவளின் நாயகன் வந்த பின்பு தான் தெரியும்.

 

மலரும்…..

 

  

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!