Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Thenmazhai Thoovuthadi

Thenmazhai Thoovuthadi 36 2

பிரசவ அறை உள்ளே வந்தவன் கையை வரு விட மறுத்துவிட்டாள். அவளது கைப்பிடியிலிருந்தே அவளின் வலி உணர்ந்தவன் .. சங்கரி அருகே வந்து அமர்ந்துக் கொள்ள , பேரனின் முகம் பார்த்தவர் அவன் கையைப் பிடித்துக் கொண்டார்.

அவனுடன் இருக்கும் போது வலியைத் தாங்கியவள் உள் சென்றதும் கதற ஆரம்பித்து விட்டாள்.

அப்போதும் இடை இடையே ‘விக்… கீ ‘ என்ற அழைப்பே வர , சங்கரி

” எல்லாம் அம்மானு கத்துனா.. உன் பொண்டாட்டி என்ன கீ… கீ . ங்கிறா…” எனவும் , புரிந்துக் கொண்ட ராணிக்கு அந்நேரமும் சிரிப்பு வர அடக்கிக் கொண்டவர் விக்ரமைப் பார்க்க, அவன் அப்படியே கண்கள் மூடிக்கொண்டான்.



Advertisement

பாலத்தின் புறம் இருந்தும் கீ… என்ற அழைப்பு தான் காதில் விழுந்தது.வலியில் போராடும் போதும் அவனையே அழைக்கும் அவன் மீது கரை காணா காதல் பொங்கியது …. அது அவன் மூடியிருந்த கண்கள் வழியே நீராக வெளிவந்தது.

அரை மணி நேரத்தில் விக்ரமின் புதல்வர்கள் ஒருவர் பின் ஒருவராக தாயை ஒரு வழி செய்து இவ்வுலகைக் காண வந்தனர். வெளியே வந்த செவிலியர் ,

“ஆச்சிக் கையில பேபீஸ தரச் சொன்னாங்க ….”

Advertisement

இந்த ஆறு மாதமாக அவள் பாட்டியைப் புகழாத நாளில்லயே…மனைவியின் எண்ணம் அறிந்த விக்ரம் புன்னகையோடு குழந்தைகளைப் பார்க்க.. சங்கரி செவிலியரின் வார்த்தையிலயே கண் கலங்க நின்று விட்டார். பின் இருவரையும் ராணி வைத்துக் கொள்ள ,

Advertisement

“இவரு விக்ரமராஜா … இவரு செல்வராஜா … ” எனவும் , ” அப்ப பாட்டி நான் … ” , “அடுத்து பெத்துக் கொடு சொல்றேன் … ”

“அப்ப..சரி…”ஃபோன் செய்வது போல செய்து , “தாத்தா பாட்டி உங்க பேரைச் சொல்றாங்க .. ”

“உன் பொண்டாட்டி ஊரே கேக்கிற மாதிரி உன் பேரைச் சொல்லுவா… நான் சொல்லக் கூடாதா … ”

Advertisement

அதற்குள் வருவை அறைக்கு மாற்றிவிட,  மகிழ்ச்சியோடு இருவரையும் இரகரங்களிலும்  வாங்கியவன் , மனைவியைக் காணச் சென்றான்.

இரு கைகளிலும் குழந்தைகளை ஏந்திக் கொண்டு வந்தவன் , செவிலியர் உதவியோடு அவளது இருபுறமும் படுக்க வைத்தவன் , அவர் வெளியேறியதும் … தன்னையே கண்கலங்க சோர்வில் பார்த்துக் கொண்டிருந்தவளின் இரு கன்னம் மற்றும் நெற்றியில் முத்தமிட்டு …

“ஐ டூ … மை டியர்” என அவள் கையை, ஆச்சரியமாகப் பார்த்தவளிடம் ,

“நீ எனக்கு கிஃப்ட் தந்துதான் ஐ லவ் யூ சொல்லணும்னு காத்திட்டுருந்த … இப்ப ..” குழந்தைகளை கண்களால் காட்டி ,கிஃப்ட் தந்து இந்தக் கண்கள் ஐ லவ் யூ சொல்லிச்சே… அது தான் பதில் சொன்னேன் .. ”

கை நீட்டி அவன் முகத்தை அருகில் கொண்டு வந்தவள் , அவன் நெற்றியில் முத்தமிட்டு “ஐ ..டூ.. விக்ஸ்டப்பா…” அவனது கலங்கிய கண்களைக் காட்டி ….”என்னை விட அதிகமா காதல் சொல்லுது…..” எனவும் , அவள் நெற்றியிலயே முகம் வைத்துக் கொண்டவன் ,

“உயிர் போய் உயிர் வந்த … ஃபீல் … “ஆறு மாசமும் … இந்த அரை மணி நேரமும் ….. எப்படித் தான் இத்தனை வருஷம் இருந்தியோ ”

… சங்கரி பாட்டி கதவை தட்டி பார்த்து திறக்கவும் இல்லை என்றதும் உள்ளே வந்தவர் ,

“ராணி உன் மருவனப் புடிச்சு மெட்ராஸுக்கு அனுப்பு … இன்னும் மூணு மாசத்துக்கு என் பேத்தி பக்கத்துலயே விடாத …

” பாட்டீ… ” எனச் சத்தமிட , அவன் சத்தத்தில் குழந்தைகள் தாயைத் தேட … அங்கு இருந்தது மகிழ்ச்சி …மகிழ்ச்சி… மகிழ்ச்சி…. மட்டுமே….

மூன்று மாதங்களுக்குப் பிறகு ……

கனிப் பாட்டி அமர்ந்திருந்த இடத்திலயே இருந்து அனைவரையும் வேலை வாங்கிக் கொண்டு இருந்தார். திலீபனும் அரவிந்தும் விக்ரம் வீட்டினரை வரவேற்க காத்திருந்தனர். முதல் நாள் இரவு தான் சென்னையிலிருந்து வித்யாவைக் குழந்தையோடு நெல்லைச் சீமைக்கு அழைத்து வந்திருந்தார்கள். இரவிலும் உறவுகளோடு வித்யா இருந்துக் கொண்டாள்… மகளைக் கொஞ்சுகிறேன் … என வித்யா அறைப் பக்கம் வந்து வந்து  சென்றவனைக் கண்ட சங்கீதா … திலீபனிடம் ,

“அரவிந்தத்தான இன்னைக்கு ஒரு நாள் பொறுக்கச் சொல்லுங்க … உங்களுக்கு மேல இருப்பார் போல உங்கத்தம்பி … ” எனச் சிரிக்க ,

” பின்ன பிள்ள பிறந்தன்னைக்கு கூட இருந்தவன் தானாம்….உங்க அம்மாவும் பெரியம்மாவும் ,இவன் வந்தாலே ஹால்ல கொண்டு வந்து தொட்டிலப் போட்டு வித்யாவ உட்கார வச்சிருராங்களாம்… ஒரு முத்தமாவது பொண்டாட்டிக்கு குடுக்க விடலாமல்ல… ”

“ஆஹா…. நீங்கலாம் இடத்தக் கொடுத்தா … ” என்றவள் அதற்கு மேல் சொல்லாமல் கண்ணடித்துச் சென்று விட …..

” அடிப்பாவி ….. பிள்ளப் பொறந்ததும் உங்க வாயெல்லாம் என்னாப் பேச்சுப் பேசுது …. மச்சான்… அரவிந்துக்கு மேல கடுப்புல இருக்கான்…” என விக்ரமிற்கு ஃபோன் செய்ய ,

” என்ன மாப்ள ரெடியாகிட்டியா….”

“நான் கிளம்பி உட்கார்ந்துட்டேன்டா … இன்னைக்கு மட்டும் நம்ம பாட்டிமார நீ பிடிச்சு வைக்கல…. நீ ஒத்தப் பிள்ளையோட தான் டா இருக்கணும் .. “அப்படியொருக் கடுப்பில் இருந்தான் ஆதி … பிரசவம் முடிந்து வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட வருவை கனிப் பாட்டி தன் வீட்டில் தான் வைத்துப் பார்ப்பேன் என்று விட்டார்.

குழந்தைகள் பிறந்த அந்தவ ஒரு வாரமும் விக்ரம் ஊரில் இருந்தாலும் வரு அருகே விடாது பேரன் பின்னாடியே சங்கரி சுற்றவும் , தொழிலைக் கவனிக்கச் சென்றவன் , சொல்லாமல் கொள்ளாமல் நடு இரவில் வந்தாலும் , கனிப்பாட்டி விக்ரமைச் சுற்றினார்.

“பேரா நீ என்ன பண்ணினாலும்… மூணு மாசத்துக்கு உன்ன பக்கத்துலயே விடமாட்டேன்….”

விக்ரமராஜாவும் பேரனின் நிலைக் கண்டு மனைவியை ,

“நீயேன் குறுக்க குறுக்க வாறே… ”

“ம்… செல்வனுக்கு ஒரு வயசு பிறந்த நாளுக்கு அடுத்த வாரமே இன்பன் பொறந்துட்டான் … உங்க பேரன் உங்களுக்கு மேல இருக்கானே… அது தான் அதுவும் ரெட்டை பிள்ளைகள பெத்த பச்ச உடம்பு….”

“பேரன் எல்லாத்துலயும் என்னைப் போல….” என மீசையை முறுக்கிக் கொண்டார்.

இதோ பெயர் சூட்டி ,  தாய் மற்றும் சேயை… புகுந்த வீடு அழைத்துச் செல்ல கிளம்பி விட்டார்கள்.

அறை ஜன்னல் வழியாக எப்போதும் விக்ரமைக் காண நிற்கும் இடத்தில் நின்றுக் கொண்டிருந்தாள். இந்த மூன்று மாத வீட்டினர் கவனிப்பில் … தாய்மையின் பூரிப்பில் மிளிர்ந்த வரு கணவனைக் காண ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவர்கள் வீட்டுக்கார்கள் வரிசையாக வர , சங்கீதாக் கையில் ஒரு குழந்தையும் தன் கையில் ஒருக் குழந்தையுமாக மாடிப்படி இறங்கி வந்தவளை ரசனையோடு பார்த்திருந்தான் அவள் கணவன்.

இருவரையும் அமர வைத்து , தாய் மாமன் வேட்டியில் குழந்தைகளை படுக்க வைத்து , தந்தையின் உடன் பிறந்த அத்தைமார்கள் ஆளுக்கொரு குழந்தையாக அவர்கள் காதில் மூன்று முறை… விக்னேஷ்  … வருண் என அண்ணன் சொன்னப் பெயரைச் சூட்டி மகிழ்ந்தனர்.

விழாவைச் சிறப்பாக முடித்து மாலையில் வீடு வர … சென்னைக்கு நாளை மறுநாள் செல்வதாக ஏற்பாடு . இங்கு பேத்தியை வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்த விஸ்வனாதனிடம் பேசிவிட்டு எழுந்து வந்த அரவிந்த் …அறையில்  அன்றைய அலுப்பில் படுத்திருந்த மனைவியின் அருகில் படுத்து பின்புறமாக கட்டிக் கொண்டவன் , அவள் கழுத்தில் முகம் புதைத்து ,

” கேண்டி …. மிஸ் யூ டா … மிஸ் யூ லாட்… எப்படித்தான் நீ இல்லாத நாலு வருஷம் போச்சுனேத் தெரியல … இன்னும் ஒரு வருஷத்துக்கு உன்னைய எங்கையும் அனுப்ப மாட்டேன் .. ” என பிரிந்திருந்த நாட்களை ஈடுகட்ட முயல …. மகளின் அழுகை வீட்டையே நிறைக்க , “அம்மா கூப்பிடுறாங்க… வா வா … ” என எழுந்தவன் முதல் ஆளாக கதவைத்திறந்துக் கொண்டு சென்றான்.

வித்யாவிற்கு சிரிப்பு வந்துவிட்டது… “அடடா முதல்ல தங்கச்சி … இப்ப மக …. உங்கள” என்றவாறே எழுந்து சென்றாள் . இதுவும் ஒரு புரிதலே…

ஐப்பசி மாதம் … குற்றாலச்சாரல் அவர்கள் வீட்டு மொட்டை மாடியிலும் அடிக்கிறதோ என்றொரு எண்ணம் விக்ரமிற்கு ,இரவு உணவு முடிந்ததும் , குழந்தைகளோடு அறையில் இருந்த வருவிடம் பெண்கள் அனைவரும் பேசிக் கொண்டு இருக்க கண்டவன் மொட்டை மாடிக்குச் சென்று விட்டான்.

அனைவரும் அறைக்குச் செல்ல… குழந்தைகளும் தொட்டிலில் உறங்கிவிட கணவனைத் தேடி வெளியே வந்த வரு … வீடு மொத்தமும் உறங்கச் சென்றுவிட்ட நிலையில் , மொட்டை மாடிச் செல்லும் படிகள் ஏறி விட்டாள்.

கைகட்டி நின்றிருந்தவன் அருகில் வந்தவள் , ‘விக்கி’ என அவன் கைகளுக்குள் கை நுழைத்து தோளில் சாய்ந்துக் கொள்ள …

“இரு பாட்டி நிற்கிறாங்களாப் பார்த்துட்டு வாறேன்: …”

“விக்கி ஆச்சிய ஒன்னும் சொல்லாத …” எனச் சிணுங்கியவளை , தன்முன் நிறுத்தி , இருபுறமும் சிறைப்பிடித்தவன் ,

“பம்கின்….”

“சொல்லு விக்ஸ்டப்பா…”

“இனி உன்னைய விட்டு ஒரு செகன்ட் கூட இருக்க மாட்டேன்… சென்னைப் போனதும் .. அம்மாகிட்ட குழந்தைகங்கள விட்டுட்டு உன்னை ஆஃபிஸுக்கு தள்ளிட்டு போயிடுவேன். டிசைன் டீம் ல உன்னையும் அப்பாய்ன்ட் பண்ணியாச்சு …. இனி என் கூட தான் வேலை … என்னோட மட்டும் தான் வேலை ….”

“பேச்சைப் பார்… ” என அவன் வாயிலடிக்க , அந்த விரல்களைப் பிடித்துக் கொண்டவன் ,

“இங்க தான் நான் உன் மனசுக்குள்ள வந்தனா..” அந்த நினைவில் “ஆம்” எனப் புன்னகையுடன் தலையசைத்து …

” உன்னால மட்டும் தான் நான் இன்னைக்கு இங்க இருக்கிறேன் விக்கி .. உடலாலும்… உணர்வாலும்…. ஐ லவ் யூ டா .. நீ மட்டும் இல்லனா..” எனக் கட்டிக் கொள்ள , அவளை பழைய கசப்பான நினைவுகள் ஆக்கிரமிப்பதற்குள் , பேச்சின் போக்கை மாற்ற எண்ணி,

“ஆமா அப்ப சுய நினைவு இல்லாம என்னவோ பண்ணினேன்னு சொன்னியே … அதை ஒரு தடவை ஞாபகப்படுத்திப் பார்க்க வா … ” என இறுக்கமாக . அணைத்தவனை தள்ளி விட்டு மாடிப்படிகளில் இறங்கியவள் அவனுக்குப் பழிப்புக் காட்டி அறையினுள் செல்ல , பின்னாடியே வந்தவன் , கதவைத் தாழிட்டு , கட்டிலில் படுத்திருந்தவள் மேலேயே விழ ,

“விக்ஸ்டப்பா… வலிக்குதுடா … ”

“எங்க வலிக்குது பம்கின்…” என சரசமாக கேட்க,

” இப்படி விழுந்தா எங்க வலிக்குமோ … அங்கெல்லாம் வலிக்குது டா … ” எனச் செல்ல சிணுங்கலோடு அவனை அணைத்துக் கொள்ள ,

“வலி இருக்கும் இடமெல்லாம் ஒத்தடம் தரப் போறேன்…” என இதழ்களால் ஒத்தடம் தர ஆரம்பிக்க ,

“விக்கி … இப்ப என் குரல் பரவாயில்லயா … ”

“தேன் மாதிரி இனிமையா இருக்கு .. டியர்….”

“ம்… நீ சும்மா சொல்ற … ” எனச் சிணுங்கியவளிடம்…

“நிஜம் …. ப்ரூவ் பண்ணட்டா …”

” எப்படி…” , ” இப்படி ” என்றவன் தேனிதழில் தேனெடுக்கும் வேலையைத் துவங்க… தேன் போலவே என்றும் இனிமையாக அவர்கள் வாழ்வும் இருக்க … வாழ்த்துக்களோடு அவர்களுக்கு தனிமைக் கொடுத்து விடைபெறுவோம் மக்களே…..

?நான் வாழும் வாழ்வே உனக்காக தானே

நாள்தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே

எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே…..?

??     நன்றி வணக்கம்.??

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!