Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Varam Vaangi Vanthaval

Varam Vaangi Vanthaval Naan 6 2

 

 இருவரும் குடித்து  பழங்கதை பேசி அங்கேயே சாப்பிட்டு அவன் அந்த மண்டபம் செல்லவே மணி 11 மணிக்கு மேல் இருக்கும்.. சுந்தருக்கு சற்று போதை அதிகமே., ஒருவாறு தங்கள் ரூம்சாவியை வாங்கியவன் ரூமில் சென்று படுத்ததுதான் தெரியும் உடைக்கூட மாற்றவில்லை.. அப்படியே தூங்கிப் போனான்..

 

காலை மணி ஆறிருக்கும் சுந்தரின் தாயும் தங்கைகளும் குளித்து பட்டுச்சேலை கட்டி தயாராகிக் கொண்டிருந்தார்கள்.. அந்த பெரிய மண்டபத்தின் முன்புறமே ஹோட்டலும் அதோடு சேர்த்துதான் மண்டபமும் இருந்ததால்.. அந்த ஹோட்டலிலேயே எதிர் எதிர் அறைகளாக பத்து அறைகள் திருமணத்திற்கு வந்தவர்கள் தங்கி கொள்ள பிடித்திருந்தார்கள்.. உறவினர்கள், இவர்கள் ஊர்காரர்கள் என பாதிபேர் அங்குதான் இருந்தார்கள்..  



Advertisement

 

ஆத்தா மணியாச்சு அண்ணே எப்ப வந்திச்சுன்னு தெரியல.. போய் அப்புவும் அண்ணனும் என்ன பண்றாங்கன்னு பார்த்துட்டு வரவா..?”

 

Advertisement

அடியே கூறுகெட்டவளே இப்படி தலைவிரி கோலமா வெளியில போவாத..? யாராச்சும் பார்த்தா அபசகுனமா நினைச்சுகுவாக.. அவுகளுக்கென்னடி ஆம்பளைக சுளுவா கிளம்பிருவாக போகும்போது பார்த்துட்டு போவோம்.. நீ போய் தலையை சீவு.. ஆத்தா வள்ளி என்ன பூ வைச்சிக்காம இருக்க.. வா வைச்சு விடுறேன்..

Advertisement

 

ஆத்தா அண்ணே ஏன் இப்புடி பண்ணுது.. அது மேல எங்க வீட்டுக்காரவுக எல்லாரும்.. ரொம்ப கோபமா இருக்காக..??”

 

Advertisement

ஏட்டி கிறுக்கி அண்ணே என்ன பண்ணுனான்..?”

 

அப்புறம் என்னத்தா ராத்திரியே வா எல்லாம் பேசி முடிச்சிரலாம் பொண்ணையும் பார்த்திரலாம்னு தான சொல்லியிருந்தோம்.. அப்படியும் அது வராம இருந்தா என்ன அர்த்தம்..

 

ஏய் ரொம்ப வருசத்துக்கபறம் அவுக சினேகிதப்பிள்ளைய பார்த்திட்டு வர்றதாதானே சொன்னான்.. இதுல என்ன குத்தம் அதான் இன்னைக்கு வாரான்ல பார்க்கலாம்.. நீயும் அவுகளோட சேர்ந்துட்டு அண்ணன பேசுற வேலை வைச்சிக்காத வள்ளி சொல்லிட்டேன்..

 

வெளியில் ஏதோ சத்தம் பலமாக கேட்க அனைவரும் என்னவோ ஏதோவென அங்கு ஓட அங்கு அழகம்மை அப்பத்தா தரையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார்.. சுற்றிலும் பெண்கள் நின்று அவரை சமாதானம் செய்து கொண்டிருந்தார்கள்..

 

ஏக்கா.. எதுக்கு அயித்த இப்ப அழுதுட்டு இருக்காக..?” இவர்களும் அவர்களிடம் வேகமாக  செல்ல அவரின் அழுகை நின்றபாடில்லை..

 

என்னத்தாச்சி அயித்தைக்கு என்னாச்சு..?” பக்கதில் இருந்த பெண்ணிடம் விசாரிக்க,

 

[the_ad id=”6605″]

 

அவுக பேத்தி ராத்திரி அதோடத்தான் படுத்திருந்திச்சாம்.. இப்ப காணாம்னுதான் அழுகுறாக.. வயசுப்பிள்ள எங்க போச்சோன்னு தெரியலையே.. அதுவும் அந்த பொண்ணுக்கு இந்த ஊரெல்லாம் தெரியாது.. எங்க போச்சோ எப்ப போச்சோ அதான் ஆத்தா ஒரே அழுகை..?” மாமியார் அழுவதை பார்க்க பார்க்க பார்வதிக்கு ஒரே சந்தோசம் நல்ல வேளை தொலைஞ்சாளா..இப்பத்தான் நிம்மதி இந்த பாலா பயல தேடனுமே.. அவன் என்னமும் வில்லங்கம் பண்ணி வைச்சிருக்கப் போறான்..

 

அங்கே சிறுக சிறுக கூட்டம் சேர ஆரம்பித்தது.. ஆளாளுக்கு ஒன்று பேச பாலாவும் சுப்பையா குடும்பமும் அங்கே வந்தனர்.. தன் மகனை தனியாக பார்க்கவும்தான் பார்வதிக்கு நிம்மதி.. பாலா மனைவிவேறு தன் பெற்றோரோடு இந்த கல்யாணத்திற்கு வருவதாக சொல்லியிருந்தாள்.. நல்லவேளை இந்த பய இங்கனதான் இருக்கானா..

 

இவ்வளவு கலவரத்திலும் ஒரு அறை மட்டும் சாத்தியிருக்க அப்போதுதான் ராமையாவும் அங்கு வந்து சேர்ந்தார்.. தன் மனைவியிடம் நடந்ததை விசாரிக்க,” அப்பு நீங்க இப்பத்தான் வாறிகளா.. ராத்திரி தூங்க வரலையா..?”

 

இல்லத்தா கறிய உறிச்செடுக்கவே மணியாச்சு அதான் அங்கனயே இருந்திட்டு இப்பத்தான் வேலை முடிஞ்சிச்சு…  அண்ணே வந்திட்டானா..??”

 

 

அவர் குரல் அங்கிருந்த ஒரு பெண்ணின் காதில் விழ.. அயித்த ஒருவேளை அன்னைக்கு மாதிரி உன்ர பேத்தி சுந்தரோட வெளிய போயிருக்கோ என்னமோ..??”

 

ஏன்க்கா இப்படி சொல்றிக எம்புள்ள ராத்திரி பத்து மணிக்கு மேலதான் இங்கனயே வந்தான்.. அதோட அயித்த அவுக பேத்தியோட வந்ததே எங்களுக்கு இங்கன வந்துதான் தெரியும்.. வாயிருக்குன்னு ஏதாவது இப்படி பரப்பி விடாதிக சொல்லிட்டேன்..

 

வள்ளி கணவரும் அங்கே வந்திருக்க என்ன வள்ளி இப்பவாச்சும் உங்க அண்ணன் வருவாரா..?? இல்ல என்ன சேதி..?? இல்ல பொண்ண பிடிக்கலைன்னா வேண்டாம்ன்னு சொல்ல சொல்லு.. நாங்க வேற இடம் பார்த்துக்குறோம்.. முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு சொல்ல,

 

 

ஏட்டி சுந்தரி ஓடுடி போய் அண்ணன எழுப்பு.. அவனும் குளிச்சு கிளம்பட்டும்.. அங்கிருந்தவர்களை விலக்கிக் கொண்டு சுந்தரி அண்ணன் அறைக்கு ஓட இங்கோ தர்ஷினியை ஆளாளுக்கு அவலாக மென்று கொண்டிருந்தார்கள்..

 

அயித்த விடுங்க அந்த பொண்ணு இங்கனதான் இருக்கும்.. இவ்வளவு பெரிய மண்டபத்துல எந்த பக்கமாவது இருக்கும் நாலுபேரவிட்ட நல்லா தேட சொல்லுங்கயித்த..?”

 

இரண்டு நிமிடங்கள் கழிந்திருக்கும்… ஐயோ ஆத்தா போச்சு போச்சு இங்கன ஓடிவாங்களேன்..??” சுந்தரி அலர அனைவரும் அங்குதான் ஓடினார்கள்..

 

 ஏட்டி இப்படி கத்துர.. என்னாச்சு..?”

 

அங்கன பாருங்க..?” தெய்வானை மெதுவாக எட்டி பார்க்க அந்த பெரிய கட்டிலில் சுந்தர் படுத்திருக்க அவன் மார்பில் தலைவைத்து தர்ஷினி படுத்திருந்தாள்.. இருவரும் நல்ல உறக்கத்தில் இருந்தார்கள்.. பார்த்த  அனைவரும் அப்படியே நிற்க.. சற்று நேரத்தில் ஒரே சத்தம் ஆளாளுக்கு ஒன்று சொல்ல ஒரே கலவரம்..

 

 சுந்தரி உள்ளே ஓடி அண்ணே அண்ணே..??” அவனை எழுப்ப மெதுவாக கண்விழித்த சுந்தருக்கு தான் எங்கே இருக்கிறோம் என்றே தெரியவில்லை.. இரவு அடித்த சரக்கு அதன் வேலையை காட்ட தலை விண் விண் என தெரித்தது..

 

தன் மேல் யாரோ படுத்திருப்பதை உணர்ந்தவன் மெதுவாக தலைதூக்கி பார்க்க தர்ஷினி.. இவனோ இது என்ன கனவா.. இந்த வெற்றி காதல் காதல்ன்னு சொல்லி நம்மள உசுப்பேத்தி விட்டுட்டான் அதான் இந்த பொண்ணு படுத்திருக்க மாதிரி தெரியுதோ..

 

[the_ad id=”6605″]

 

தம்பி என்ன நடக்குது இங்க..?” தாயின் கோபக்குரலில் சட்டென சுயநினைவு வர தன் மேல் படுத்திருந்த தர்ஷினியை பார்த்து அதிர்ச்சி அடைந்தவன் அதைவிட தன் குடும்பம் உறவினர்கள் என எல்லார் முன்னிலும் இந்த நிலையிலா.. சட்டென தர்ஷினியின் தலையை தலகாணியில் வைத்து வேகமாக எழ வள்ளியின் கணவன் அப்படி ஒரு கோபத்தில் நின்றிருந்தான்.. இவ்வளவு சத்தத்திலும் தர்ஷினி இன்னும் எழவில்லை..

 

பார்வதியோ, ஒய்யார கொண்டையாம் தாழம்பூவாம்.. உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும் ..அதுமாதிரியில்ல இருக்கு இங்கன நடக்கிறது.. ஏக்கா என்னமோ என்மவன் நல்லவன் வல்லவன்னு பேசின இதானா அது.. என்ன தைரியம் இருந்த எங்கவீட்டு பொண்ணுகூடவே இப்படி இருப்பான்.. இந்த அநியாயத்தை கேட்க ஆளே இல்லையா.. ஐயோ கடவுளே..!!” அவர் சத்தமாக சண்டையிட ஆரம்பித்தார்.. அவர் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். இதை பெரிதாக்கி இங்கேயே தர்ஷினிக்கு ஒரு முடிவு  கட்டிவிடுவதென..

 

சுந்தர் வாழ்க்கையில் முதல்முறையாக தலைகுனிந்திருந்தான்…எவ்வளவு பெரிய அவமானம்.. தர்ஷினி எப்படி தன்னோடு அவனால் நம்பவே முடியவில்லை.. இரவு நடந்தது எதுவும் நியாபகத்திலும் இல்லை..

 

 வெற்றி சொன்ன அடையாளத்தை வைத்து இந்த மண்டபத்தை கண்டுபிடித்தவன் வண்டியை நிறுத்திவிட்டு ரிசப்ஷனில் சாவி வாங்கியது மட்டும்தான் நினைவில் இருந்தது.. ரூமுக்கு வந்தது படுத்தது எதுவுமே தெளிவாக நினைவில்லை.. அதிலும் இந்நிலையில் இருப்பதென்றால் தான் தர்ஷினியை தொட்டுவிட்டோமோ நினைக்க நினைக்க தன் மேல் வெறுப்பாக இருந்தது..

 

அனைவரும் சுந்தரையே பார்த்திருக்க அதிலும் அவன் குடும்பமே அதிர்ச்சியாகத்தான் பார்த்திருந்தார்கள்..சுந்தருக்கு அவமானம் தாங்கவில்லை.. யார் முகத்தையும் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.. இதுவரை அண்ணனாக, அந்த வீட்டு மூத்தவனாக எல்லாரையும் சரியாக வழிநடத்தியவன் இன்று வாய் திறக்க முடியாமல் நின்றான்..

 

ஒரு கணவன் மனைவி தனியாக இருக்கும்போது அனுமதி கேட்டுதான் பெற்றவர்களே வரக்கூடிய நம் சமுதாயத்தில்  ரூமில் தன்னை இந்த நிலையில் அனைவரும் பார்த்ததை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. நல்லவேளை தர்ஷினியின் முகத்தை தவிர மற்ற எல்லாம் போர்வையால் மூடியிருந்தது..

 

மெதுவாக நிமிர்ந்து தன் தந்தையின் முகத்தை பார்க்க அவர் என்ன உணர்ந்தாரோ… எல்லாரும் வெளியில வாங்க.. தம்பி முகத்தை கழுவிட்டு அந்த பொண்ண எழுப்பி விடுப்பா …மத்தத வெளியில பேசிக்கலாம்..?” தன் குடும்பத்தை அதட்டி முதலில் வெளியில் வரச் சொன்னார்.. பார்வதியும், வள்ளி கணவரும் ஏதோ பேசவர அவர்களை அடக்கியவர் முதல்ல வெளியில வாங்க.. சுந்தர் வரட்டும் பேசிக்கலாம்..

 

[the_ad id=”6605″]

 

அப்பத்தாவை மட்டும் இருக்க சொன்னவன் பேத்தியை எழுப்பச் சொல்லி இவன் பாத்ரூமின் அருகில் செல்ல, இவனுக்கு நன்றாக நினைவிருந்தது தூக்க கலக்கத்திலேயே தர்ஷினியை அரைகுறை உடையோடுதான் பார்த்தான்.. இருவரையும் சேர்த்து போர்வை போர்த்தியிருந்ததால் மற்றவர்கள் கவனிக்க வாய்ப்பில்லை.. ஆனால் தான் கண்ணால் பார்த்ததுதானே..!!

 

அப்பத்தா தன் பேத்தியை எழுப்பி கொண்டிருக்க அவள் அசைந்தபாடில்லை..அங்கிருந்த ஜக்கில் இருந்து தண்ணீரை அவள் மேல் தெளிக்க மெதுவாக கண்விழித்தவள் இன்னும் கொஞ்சநேரம் தூங்குறேன் கிரான்மா..??”

 

இப்போதுதான் நன்றாக கவனித்தார் தர்ஷினியின் தலையெல்லாம் கலைந்து அரைகுறை ஆடையில் இருப்பதை… பேத்தியை இப்படி பார்த்தவர் அப்படியே நெஞ்சில் கைவைத்து மயக்கமாகி தடால் எனும் சத்தத்தோடு விழ பாத்ரூமில் இருந்து வெளியில் வந்த சுந்தரும் அப்போதுதான் தூக்கம் நன்கு கலைந்த தர்ஷினியும் அதிர்ச்சியில் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றிருந்தனர்..

 

                                                   இனி……………..?????

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!