Skip to content
Post Views: 1,945
“அப்புறம் கறரா இருந்தா தான உங்களை மாதிரி ஒரு புள்ளபூச்சிய வச்சிக்கிட்டு என்னால இந்த உலகத்துல வாழ முடியும்” என்றவரின் சொல்லுக்கு அடுத்து எதுவும் பேசாமல் தனது வாயை மூடிக் கொண்டார் ரவி.
“ஏதாவது உங்களை பத்தி சொன்னா மட்டும் வாயை மூடுங்க. அது சரி உங்க பையன் இந்த மாசம் சம்பளம் அனுப்பிட்டானா இல்லையா”
“அதெல்லாம் என் அக்கவுண்டுக்கு கரெக்டா டிரான்ஸ்ஃபர் பண்ணிடான் மா. இந்தா இப்பவே போய் ஏடிஎம்ல காசு எடுத்துட்டு வந்து உன் கையில தந்துடறேன்”
“அது சரி எல்லாம் கேட்டா தான் பதில் வரும் அப்படித்தான. நான் கேக்கலனா இந்த காச ஆட்டைய போட்டுலாம்னு இருந்தீங்களா என்ன”
Advertisement
“உன் கிட்ட போய் அப்படிலாம் ஆட்டைய போட முடியுமா. அப்படி பண்ணிட்டு தான் இந்த வீட்ல என்னால நிம்மதியா தூங்க முடியுமா. உன் புருஷனை நீ அப்படியாமா வளர்த்து வெச்சிருக்க” என்றார் பாவமாக.
“ சரி சரி இப்படியே பேசிக்கிட்டு அந்த காசு எடுத்து தராமல் இருக்கலாம் நினைக்காதீங்க போங்க ஏடிஎம்மில் போய் அந்த காசு எடுத்துட்டு வாங்க” என்றாள் காரராக வசுந்தரா.
“அதானே உன்னை ஏமாத்த முடியுமா” என்று தனக்குள்ளே முழங்கிக் கொண்டு பைக் சாவி எடுக்க உள்ளே சென்றார் ரவி.
Advertisement
“காசு எடுத்துட்டு வர சொன்னா என்ன உள்ள போறீங்க”
Advertisement
“பைக் சாவி எடுக்க போறமா அது எடுத்தா தானே பைக்ல போய் எடுத்துட்டு வர முடியும்”
“ஏன் சைக்கிள்ல போக வேண்டியது தானே. பெட்ரோல் இப்ப என்ன விலையில இருக்கு தெரியுமா”
“கரெக்ட் தாம்மா. நான் இந்த சைக்கிள்ல போய் இந்த வெயிலுக்கு எங்கேயாவது விழுந்து கிடந்தாலோ இல்லை என் எதிர்ல வர்ற பஸ் காரன் என் மேல ஏத்திட்டாலோ ஆகுற செலவு விட பெட்ரோல் விலை கம்மிதான்னு தோணுது. நீ என்ன நினைக்க மா”
Advertisement
“வாய குறைங்க வரவர வாய் கூடிட்டே போகுது எப்படிலாம் பேசுறீங்க. போங்க பைக்ல போய் காசு எடுத்துட்டு வாங்க” என்றாள் பல்லை கடித்துக் கொண்டு
“அதான எப்படி பேசுனா உன்கிட்ட வேலை நடக்கும்னு எனக்கு தெரியாதா”என்று மனதில் நினைத்துக் கொண்டவர் வெளியே, “சரிமா” என்று பாவமாக முகத்தை வைத்து பேசி சென்றார் ரவி.
“வரவர இந்த ஆளுக்கு குசும்பு கூடி போயிட்டு எப்படி பேசிட்டு போறார் பாரு” என்று தனக்குள்ளே பேசிக் கொண்டு அந்தப் பெரிய வீட்டின் வரவேற்பு அறையில் உள்ளே சோபாவில் அமர்ந்து வீட்டுக்கு வரவு செலவு கணக்கை பார்த்துக்கொண்டு இருந்தவரை, “அக்கா” என்ற சத்தம் கலைத்தது.
அதில் நிமிர்ந்து வெளி வாசலை பார்க்க அங்கே வியர்த்து வடிய தலை கலைந்து சாயம் போன சேலையில் முகம் முழுவதும் புன்னகையுடன் வாடிய மலராய் நின்ற தனது உடன்பிறப்பை பார்த்து முகம் சுருக்கியவள் மனதில், “இவ ஏன் பஞ்சம் பிழைக்க வந்த மாதிரி இங்கே வந்து நிற்கிறா. ஆனா இவ்வளவு கஷ்டத்திலும் இவ முகம் மட்டும் எப்படி அழகா இருக்குன்னு தான் தெரியல. நம்ம வீட்டுக்கு எதுக்கு வந்திருக்கா ஒருவேளை காசு ஏதாவது புடுங்க வந்திருப்பாளோ” என்று நினைத்துக் கொண்டு வெளியே பெரியதாக புன்னகைத்து, “அடடா என் தங்கச்சிக்கு கடைசியா என் வீடு எங்க இருக்குன்னு தெரிஞ்சிட்டு போல. ஏன் அங்க நிக்கிற வா”என்று வேகமாக தனது கனத்த உடலை தூக்கிக்கொண்டு அவளை உள்ளே வரவிடாமல் கையைப் பிடித்து வெளி வாசலில் உள்ள தார்சாவில் இருந்த இருக்கையில் அமர வைத்து, “இந்திரா எப்படி இருக்க. என்ன சொல்லாம கொள்ளாம வந்து இருக்க. ஏதாவது குடிக்கியா. நீ இங்கேயே உட்கார்ந்து இருமா நான் போய் உனக்கு குடிக்க ஏதாவது கொண்டுவரேன்” என்று பட்டாசாக அவளை பேச விடாமல் உள்ளே சென்றார் ஈஸ்வரி.
“போயும் போயும் இவளுக்கு ஏன் பிரிட்ஜில் இருக்க காஸ்ட்லி ஜூஸ் கொடுக்கணும். இவளுக்கெல்லாம் இந்த பழைய மோர் போதும்” என்று சொல்லி ஒரு பழைய சொம்பில் மோரை ஊற்றிக் கொண்டு அவளிடம் சென்றார்.
“ரொம்ப வெயிலா இருக்குல்ல இந்து. இந்தா இந்த மோரை குடி முகமெல்லாம் வாடி போய் இருக்கு இத குடிச்ச தான் பிரஸா ஆகும்” என்று அவள் முகத்தில் உள்ள வேர்வையை தனது கையால் துடைத்து பாசமாக நடித்தாள்.
அவள் நடிப்பு தெரியாத இந்திரா தனது அக்கா தன் மீது வைத்துள்ள பாசத்தில் கண்கலங்கி அவள் கொடுத்த மோரை குடித்துவிட்டு, “அக்கா எப்படி இருக்க. மாமா எப்படி இருக்கார். ரமேஷ் எப்படி இருக்கான் அவனை பார்த்து ரொம்ப வருஷம் ஆகிட்டு பெரிய பையனா இருப்பான் இல்ல. அவன் போன் நம்பர் இருந்தா கொடுக்கா அவன் கிட்ட பேசனும்” என்றாள் அக்கா மகனிடம் பேசும் ஆசையில்
“அவன் ரொம்ப பெரிய கம்பெனில வேலை பாக்கான் மா எப்ப ஃப்ரீயா இருப்பான்னு உனக்கு தெரியாது. அதனால உன் நம்பரை கொடு நான் அவன்கிட்ட கொடுத்து பேச சொல்றேன்” என்றவர் மறந்தும் கூட தனது மகனின் அலைபேசி எண்ணை சொல்லவில்லை.
“சரிக்கா மாமா எங்க காணோம்”
“அவர் இப்ப தான் சாப்டுட்டு நூலகத்துக்கு போனாரு இனி திரும்ப சாயந்திரம் தான் வருவார்”
“ஓ சரிக்கா” என்றவள் தனது அக்காவிடம் எப்படி காசு கேட்க என்று தெரியாது முழித்துக் கொண்டு இருந்தாள்.
“ஆமா இந்திரா நீ சாப்பிட்டு வந்தியா இல்ல இனிமேதான் சாப்பிடனுமா. சாப்பாடு எடுத்து வைக்கவா”
“இல்லக்கா நான் சாப்பிட்டு தான் வந்தேன் இப்ப எனக்கு பசி இல்லை” என்றவள், “அக்கா நம்ம ஊரு கொடைக்கு நீ வருவியா”
“ இல்லம்மா நான் எங்க வர நான் இருந்தா தான் இந்த வீடு, தோட்டம், ஆடு,மாடு, கோழி எல்லாத்தையும் பாத்துக்க முடியும் அதனால நான் வரமாட்டேன்”
“ஓ சரிக்கா” என்றவள் வந்ததிலிருந்து தனது குழந்தைகளைப் பற்றி விசாரிக்காத தனது அக்காவிடம் எப்படி பணம் கேட்க என்ற தயக்கத்தோடு இருந்தாள்.
“இன்னும் நீ சொல்லவே இல்லையே எதுக்கு வந்தனு”
“அது வந்து கா கொஞ்சம் காசு இருந்தா தாக்கா கோவில் கொடைக்கு பிள்ளைகளுக்கு டிரஸ் எடுக்கனும் நான் ஒரு ரெண்டு வாரம் கழிச்சு உனக்கு தந்துடுறேன்” என்றாள் தயக்கமாக
“ஐயோ கொஞ்சம் முன்ன வந்திருக்கக் கூடாதா உன் மாமா கிட்ட தான் பணம் எல்லாம் இருக்கும். எங்கிட்ட அஞ்சு பைசா கூட தர மாட்டாரு. என்கிட்ட காசு இருந்தா இப்படி யாராவது வந்து கேட்டா உடனே எடுத்து கொடுத்துடுறேன்னு என்கிட்ட அஞ்சு பைசா கூட இப்பயெல்லாம் தரமாட்டார் தெரியுமா. நானே செலவுக்கு அவர் கிட்ட தான் கையேந்தி நிற்கிறேன். இதுல உனக்கும் என்னால எப்படிமா பணம் கேட்க முடியும். அவர் கிட்ட போய் என் தங்கச்சிக்கு காசு வேணும்னு சொல்லி கேட்டா. உன் தங்கச்சி வந்தனா சோத்த மட்டும் போடு அது என்ன காசு கேட்கிறது அறிவே இல்லையா அவளுக்குனு சொல்லி திட்டுவாரு மா. உன் அக்காவே இங்க சும்மா பொம்மை மாதிரி தான் இருக்கா. அவகிட்ட வந்து கேட்டா எப்படி மா தர முடியும். பாத்தியாமா என் நிலைமையை பட்டுதான் நகைதான் எல்லாம் என்கிட்ட இருக்கு ஆனா கஷ்டம்னு வந்து நிக்கிற என் தங்கச்சிக்கு கொடுத்து உதவ பத்து பைசா கூட கையிலே இல்லை” என்று கண்ணீர் வடித்தவளை பார்த்து, “ஐயோ அழதாக்கா எனக்கு புரியுது உன் கிட்ட இருந்தா நீ தந்து இருப்ப. நீ அழறது எனக்கு கஷ்டமா இருக்கு கா சரி விடு நான் எப்படியாவது பாத்துக்குறேன். சரி கா நான் கிளம்புறேன்” என்று அவளை தேற்றினாள் இந்திரா.
“என்னம்மா அக்கா அழறத பாத்து கஷ்டப்படாதம்மா சாப்பிட்டு போ இந்திரா” என்றாள் கண்ணை துடைத்துக் கொண்டு வசுந்தரா.
“இல்லக்கா பஸ் டைம் ஆகிட்டு இன்னொரு டைம் வந்து சாப்பிடுறேன் இப்ப நான் கிளம்புறேன் கா” என்று சொல்லி சென்றாள் இந்திரா.
போகும் அவளைப் பார்த்து, “உனக்கு கொடுக்க தான் கஷ்டப்பட்டு நான் பணம் சேர்த்து வச்சிருக்கேன்னா. வந்துட்டா அக்கா காசு குடு சீப்பு குடுனு. இவள எல்லாம் முதல்ல யாரு என் வீட்டுக்கு வர சொல்றது. இதுல என் பையன் கிட்ட வேற பேசணுமா. எதுக்கு அவன் கிட்ட பேசி காசு கறக்க தான விட்ருவனா நான் வசுந்தராவா கொக்கா என்ன யாரும் ஏமாத்த முடியாது” என்று தனது தங்கையை பழித்தும் தன்னை புகழ்ந்தும் பேசிக்கொண்டு இருந்தாள் வசுந்தரா.
error: Content is protected !!