Skip to content
Post Views: 744
“அக்கா அம்மா எங்கே? காலைல இருந்து நான் பாக்கவே இல்ல” என்றான் கோச்சிங் கிளாஸ் முடித்துவிட்டு வந்த சுபாஷ்.
“தெரிலடா நானும் பார்க்கவே இல்லை. நான் காலேஜ் விட்டு வந்த நேரத்துல இருந்து அவங்கள தேடிக்கிட்டு தான் இருக்கேன். ஆளவே காணும்” என்றாள் திவ்யபாரதி தனது தம்பிக்கு குடிக்க காப்பிக் கொண்டு வந்து
அந்த காபியை கையில் வாங்காமல், “அத வை க்கா நான் போய் கை,கால், முகத்தை கழுவிட்டு வரேன்” என்று வீட்டின் பின்பக்கம் சென்றான்.
அவன் பின்னே காபியுடன் சென்ற திவ்யபாரதி, “டேய் ஒரு வேல பெரியம்மா வீட்டுக்கு மறுபடியும் காசு கேட்டு போய்ட்டாங்களா” என்றாள் சந்தேகமாக
Advertisement
“இல்லக்கா அம்மா அங்கெல்லாம் போய் இருக்காது வேற எங்கேயோ போயிருக்காங்க. இரு கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுவோம். அவங்க வந்த பிறகு கேட்போம்” என்று சொல்லி முகம் கை காலை கழுவி விட்டு வந்தான் சுபாஷ்.
அவனுக்கு முகத்தை துடைக்க டவளை கையில் கொடுத்து விட்டு, “சரிடா நீ முகத்தை தொடச்சிட்டு இந்த காப்பிய குடி” என்று அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போது வீட்டு வாசலில் ஏதோ ஆட்டோ நிற்கும் சவுண்ட் கேட்க, “நம்ம வீட்டுக்கு யார் வரது. அதுவும் ஆட்டோல”என்றாள்.
“வா போய் யாருன்னு பாப்போம்”என்று இருவரும் வாசலுக்கு சென்று பார்த்தனர்.
Advertisement
அங்கே ஆட்டோவிலிருந்து கையில் சில பையுடன் கீழே இறங்கிய அன்னையை பார்த்து விட்டு இருவரும் தங்களுக்குள் பார்வையை பரிமாறி கொண்டனர்.
Advertisement
அவர்கள் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே, “டேய் பசங்களா அம்மா கையில பையோட வரேனே அத வந்து வாங்காம வாசல மறைச்சிட்டு ஒருத்தர் முகத்த ஒருத்தர் பாத்துட்டு என்ன டா பண்ணுறீங்க”என்று அதட்டலாக கேட்டுக்கொண்டு உள்ளே நுழைந்தார் இந்திரா.
“அம்மா நில்லு எங்க போற” என்று அவரின் பின்னாடி இருவரும் உள்ளே செல்ல
“என்னடா கேள்வி இது வீட்டுக்குள்ள தான் ஏன் கேக்க”
Advertisement
“அம்மா.. என்று பல்லை கடித்தவன், ‘அது எனக்கு தெரியாதா என்ன இது கையில”
“என்னடா பாத்தா தெரியல துணி தான்”
“அது தெரியுது இந்த துணி யாருக்கு”
“வேற யாருக்கு உங்களுக்கு தான். இது உனக்கு திவி மா. இது உனக்கு டா”என்று தன் கையிலிருந்து 2 பார்சலில் ஆளுக்கு ஒன்றாக கொடுத்தாள்.
அதனை வாங்கியவர்கள் திறந்து உள்ளே இருப்பதை பார்க்காமல் அன்னையின் முகத்தை கேள்வியாக பார்த்தனர்.
அவர்கள் கேக்கும் கேள்வி புரிந்தாலும் புரியாது போல, “திவிமா உனக்கு சாரீ வாங்கி இருக்கேன் பாரு.இந்த கலர் உனக்கு நல்லா இருக்கும் பாரு” என்று அவள் கையில் இருந்த பையை வாங்கி உள்ள இருந்து புடவையை எடுத்துக்காட்ட போக
“அம்மா போதும் நீங்க சமாளிச்சது இந்த டிரஸ் வாங்குறதுக்கு எங்க இருந்து காசு வந்துச்சி அதை முதல்ல சொல்லுங்க” என்றான் காரராக சுபாஷ்.
“டேய் என்ன புள்ளைங்கடா நீங்க. அங்கங்க பசங்களுக்கு டிரஸ் வாங்கி கையில கொடுத்தா ஆசையா என்ன டிரஸ் இருக்குன்னு பாப்பாங்க. நீங்க ஏண்டா அது எப்படி வந்துச்சு இது எப்படி வந்துச்சுன்னு கேள்வி கேட்டுகிட்டே இருக்கீங்க இதே உங்க அப்பா வாங்கி தந்தா ஒன்னு சொல்லாம எடுத்து பாப்பீங்க தான. நான் வாங்கிட்டு வந்தா மட்டும் ஏன்டா இப்படி கேள்வியா கேட்டுட்டு இருக்கீங்க” என்று கேட்டுக் கொண்டு இருந்தவர் திடீரென, “எப்பவுமே உங்க அப்பா தானே உங்களுக்கு ஒசத்தி நான் உங்களுக்கு யாருமே கிடையாது தானே. என்னங்க பாத்தீங்களா எப்படி நான் கஷ்டப்படுறேன்னு. இதெல்லாம் நான் அனுபவிக்க தான என்ன விட்டுட்டு போயிருக்கீங்க” என்று அழ தொடங்கி விட்டார் இந்திரா.
அவர் அழுவதை பார்த்து பதறி போன சுபாஷும் திவ்யாவும், “அம்மா” என்று இருவரும் அவளை அணைத்துக் கொண்டனர்.
“என்னம்மா நீங்க இப்படி அழுறீங்க. இப்ப என்ன உங்க கிட்ட எந்த கேள்வியும் கேட்காம நாங்க இந்த டிரஸ் போட்டுக்கணும் அவ்வளவு தான சரி ஓகே போட்டுக்குறோம் போதுமா” என்றான் அவரை சமாதானப்படுத்தும் விதமாக சுபாஷ்.
“ஆமாம்மா என்ன இப்போ உனக்கு இந்த டிரஸ் வாங்க காசு எப்படி வந்துச்சுன்னு நாங்க கேட்க கூடாது அவ்வளவு தான அதுக்கு ஏம்மா இப்படி எல்லாம் பேசுற கஷ்டமா இருக்குமா இப்படி எல்லாம் நீ பேசாத. எங்களுக்குன்னு இந்த உலகத்துல இருக்குது நீ மட்டும் தான் நீயே இப்படி பேசினா நாங்க எங்கம்மா போவோம்” என்றாள் கலங்கிய குரலுடன் திவ்யபாரதி.
“தங்கம் என்னடா எதுக்குடா கலங்குற அம்மா இருக்கிற வரைக்கும் நீங்க எதுக்கும் கலங்க கூடாது சரியா. இந்த ஊரே புதுசு ட்ரஸ்ல இருக்கும்போது என்னோட பிள்ளைகள் மட்டும் பழைய டிரஸ்ல இருக்கிறத பார்க்க என்னால முடியாது டா. அம்மாவ நம்புங்கடா இந்த காச நான் யார்கிட்டயும் கடன் வாங்கிட்டு வரல. அம்மா உங்களுக்காக கஷ்டப்பட்டு ஒன்னும் செய்யும்போது அத எந்த கேள்வியும் கேட்காம அனுபவிக்க மட்டும் செய்யுங்க சரியா. உங்க அப்பா தான் உங்கள விட்டு போயிருக்காரு உங்க அம்மா இன்னும் உங்க கூட தான் இருக்கா. நான் இருக்கிற வரைக்கும் என் பிள்ளைக்கு எதுக்காவும் கலங்கி நிற்க கூடாது” என்று சொல்லி இருவரையும் தோளோடு அணைத்து நெற்றியில் முத்தம் வைத்தார். இருவரும் அவளின் அணைப்பிலிருந்து கொண்டு ஆளுக்கு ஒரு கன்னத்தில் முத்தம் வைத்தனர்.
திடீரென்று “அய்யோ” என்று கத்திக்கொண்டு சமையலறையை நோக்கி ஓடினாள் பாரதி.
“என்ன ஆச்சுடி எதுக்கு இப்படி கத்துற” என்று அவளின் பின்னே பதறி போய் ஓடினார் இந்திரா.
அங்கே கேஸ் அடுப்பு முன்பு தலையில் கை வைத்து நின்ற பாரதியை பார்த்து தலையில் அடித்துக் கொண்ட சுபாஷ், “அம்மா வழக்கம்போல உன் பொண்ணு கொலம்ப தீச்சுட்டா இன்னைக்கு நைட்டு எல்லாருக்கும் கஞ்சி தண்ணி தான்” என்றான் இந்திராவின் பின்னே வந்து நின்று
“டேய் போடா எல்லாம் உன்னால தான் உனக்கு காபி கொண்டு வர போய் தான் நான் குழம்ப மறந்துட்டேன் ஆள பாரு. அம்மா பாரும்மா எப்ப பார்த்தாலும் ஒரே என்னையவே குறை சொல்றான்” என்று அவனிடம் சண்டைக்கு சென்றாள் பாரதி.
“உண்மைதான சொன்னேன் அம்மா இவளை எல்லாம் கல்யாணம் பண்ணி கொடுத்தா கூடவே குக் ஒரு ஆள அனுப்ப வேண்டியதுதான் இவளாம் குழம்பு வச்சா அந்த வீடு தாங்காது மா. இல்லையா நல்ல சமைக்க தெரிஞ்சவரா பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிருக்க வேண்டியது” என்று தனது அக்காவை கலாய்க்க தொடங்கினான்.
“அம்மா இவன பாருமா எப்ப பாத்தாலும் இப்படியே சொல்றான். நான் என்ன அவ்வளவு கேவலமாவா சமைக்கிறேன்”
“அடிப்பாவி நீ என்ன சமைக்கிறியா வேணா தீக்கிறன்னு சொல்லு. அதுதான் உன் சமையலுக்கு பொருத்தமா இருக்கும்”
“போடா தீவட்டி தடியா உன்னால தான் எல்லாம் ஆளு மண்டையும் பாரு”
“ஏய் யாரை பார்த்து தீவட்டி தடியான்னு சொல்ற நீதாண்டி குந்தாணி”
“என்ன நான் குந்தாணியா நீ தாண்டா தீவட்டி தடியா”
“ஏய் யாரைப் பார்த்து என்ன சொல்ற” என்று இருவரும் சண்டைக்கோழி போல சீற
“ஐயோ ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் வாய மூடுறிங்களா. இதுக்கு மேல ரெண்டு பேரும் சண்டை போட்டீங்க ரெண்டு பேருக்கும் சோறு நைட்டு கட்டு” என்றார் இந்திரா.
“அம்மா சோறு செல்லாத கஞ்சி தண்ணின்னு வேணா சொல்லு. இவ புண்ணியத்துல இன்னைக்கு நைட்டு கஞ்சி தண்ணி தான் சரி நான் போய் ஊறுகாய் வாங்கிட்டு வரேன்” என்று கடைக்கு செல்ல கிளம்பியனை தடுத்து நிறுத்தினார் இந்திரா.
“ஐயோ மறந்தே போயிட்டேன் பாரு. உங்க ரெண்டு பேருக்கு சேர்த்து நான் பிரியாணி வாங்கிட்டு வந்தேன். இருடா போய் எடுத்துட்டு வரேன்”என்று அதனை எடுக்க சென்றவரை ஏதோ யோசனையுடன் பார்த்துக்கொண்டு இருந்தவனின் தோளில் கை வைத்த பாரதி, “அது எப்படி வந்துச்சுன்னு எதுவும் கேட்காத டா அம்மா ஏற்கனவே நொந்து போய் இருக்காங்க நம்மளும் கேள்வி மேல கேள்வி கேட்டு அவங்கள கலங்க வைக்க வேண்டாம். சரி வா போவோம்” என்று தனது தம்பியை அழைத்துக்கொண்டு அன்னையிடம் சென்றாள் பாரதி.
“என்ன பாரதி சும்மா வர்ற மூணு பிளேட்டும் தண்ணியும் எடுத்துட்டு வா” என்றார் சமையலறையில் வந்த தனது பிள்ளைகளை பார்த்து
அன்னை சொன்னதைப் போல் பிளேட்டும் தண்ணியும் எடுத்து வந்த பாரதி, “அம்மா என்ன பிரியாணி” என்று கேட்டுக் கொண்டு அவரின் அருகில் அமர்த்தாள்.
“எல்லாம் நீ பரிட்சையில வாங்குறியே ஒரு பெரிய முட்டை அதோட அம்மா பிரியாணி தான்” என்றான் நக்கலாக சுபாஷ்.
“போடா அது நீ வாங்குறது நான் வாங்குறது கிடையாது” என்று சொல்லி அவனை தலையில் தட்டினாள்.
“ஐயோ அம்மா குந்தாணி அவ உருளக் கட்ட கையை வைச்சி என் தலையை உடைச்சிடா” என்று பொய்யாக அலற தொடங்கினான் சுபாஷ்.
“அம்மா பாருங்க எப்படி நடிக்காணு”
“டேய் ரெண்டு பேரும் விளையாடாம பிரியாணி சாப்பிடுங்க” என்று மூவருக்கும் பரிமாற வர அவரின் கையைப் பிடித்து தடுத்த சுபாஷ், “அம்மா இன்னைக்கு உன்னோட கையால எங்க ரெண்டு பேருக்கும் ஊட்டி விடுமா”
“ஆமாம்மா நீ ஊட்டி விட்டு ரொம்ப நாள் ஆச்சு எங்க ஊட்டி விடு பார்ப்போம்” என்று இருவரும் கோரிஸ் பாட
“சரி சரி ரெண்டு பேருக்கும் நானே ஊட்டி விடுறேன் கொஞ்ச நேரம் பேசாம சாப்பிடுங்க” என்று இருவருக்கும் ஒரு ஒரு வாய் ஊட்டி விட்டார் இந்திரா.
“அம்மா சாப்பாடு எவ்வளவு மொக்கையா இருந்தாலும் உங்க கையில சாப்பிடும் போது அமிர்தம் மாதிரி இருக்கு” என்றான் ரசித்து சாப்பிட்டுக் கொண்டு சுபாஷ்.
“ஆமாமா உங்க கைல சாப்டா பழைய சாதம் கூட பிரியாணி மாதிரி தான் இருக்கும். உன் கைல ஏதாவது மந்திரம் வச்சிருக்கீங்களா” என்று இந்திராவின் கையை பிடித்து செக் செய்தாள் பாரதி.
“ஏய் என் கையில என்ன இருக்கு ஒண்ணுமே இல்ல. உங்க ரெண்டு பேருக்கு தான் என் மேல நிறைய பாசம் இருக்குன்னு நினைக்கிறேன். அதனால தான் உங்க ரெண்டு பேருக்கு அப்படி தோணுது” என்றார் இந்திரா பிள்ளைகளை பார்த்து சிரித்துக்கொண்டு
அவரின் சிரிப்பை பார்த்து ரசித்த இருவரும், “ஒருவேளை அப்படியும் இருக்குமோ” என்று இருவரும் கோரசாக சொல்ல அதில் மூவரும் சத்தமாக சிரிக்க தொடங்கினர்.
அவர்களின் அந்த சிரிப்பு கடவுளுக்கே பிடிக்கவில்லையோ என்னவோ அவர்களின் நோக்கி இரு பெரும் ஆபத்துக்கள் வந்து கொண்டு இருந்தது. இனிவரும் நாட்களில் மூவரின் முகத்தில் இந்த சிரிப்பு இருக்குமா???????
அவர்களை வஞ்சிக்க வரும் இரு பெண்களிடம் இருந்து காப்பாற்ற அந்தக் குமரன் வருவானா????????
error: Content is protected !!