Skip to content
Post Views: 1,249
“ஹாய் பிரண்ட்ஸ். எல்லாரும் எப்படி இருக்கீங்க”
“ஹாய் வேதா டார்லிங்❤️❤️”
Advertisement
“ஹாய் யங் மேன்😍”
“ஹாய் ஸ்வீட் ஹார்ட்🥰”
Advertisement
Advertisement
“வேதா பாய் லவ் யூ ❤️”
“ஹாய் டார்லிங்ஸ், ஹாய் ஸ்வீட்டி லவ் யூ டா. எல்லாரும் நாங்க இப்ப எங்க வந்து இருக்கோம்னு சொல்லுங்க பாக்கலாம்”
Advertisement
“எஸ் நீங்க எல்லாரும் ரொம்ப ஆவலுடன் எதிர்ப் பார்த்துட்டு இருந்த என்னோட சூப்பர் ஜீனியருக்கு மொட்டை அடிச்சி காது குத்த எங்களோட குலதெய்வம் கோயிலுக்கு வந்திருக்கோம் பிரண்ட்ஸ்.” என்று வழக்கம் தனது இன்ஸ்டா லைவ்வில் இருந்தார்.
“ஏன் சீனியர் எப்ப அவங்க உங்க பேரனுக்கு மொட்டை போட்டுறத ஆவலுடன் எதிர் பார்த்தாங்க” என்று வந்தான் பாலா
“ஆமா கேளுடா இவங்களுக்கு எல்லாம் வேற வேலை இல்ல எப்ப பார்த்தாலும் அவங்க வீட்டுல சின்னதா ஒரு பங்ஷன் நடந்தாலும் ஒரு கேமெராவ தூங்கிட்டு வந்துருவாங்க”என்றான் கடுப்பாக கார்த்திக்.
“ஆமா அதுவும் இந்த சீனியர் கொஞ்சம் ஓவரா தான் போறாரு”என்றான் ரமேஷ்.
“ஆமா டா வர வர இந்த சீனியர் குசும்பு அதிகமாகிட்டே போகுது”என்றான் சரண் அவரை முறைத்துக் கொண்டு
இப்படி நால்வரும் அவர் மேல் கோவமாக இருக்க காரணம் உண்டு. ஏனென்றால் இவர்கள் திருமணத்தில் அவர் செய்த கலாட்டா அப்படி. ஆமாங்க நால்வருக்கும் மேரேஜ் ஆகிட்டு அதுவும் ஒரே நாள் ஒரே மேடையில். சரண் திருமணத்திற்கு தான் பெரியவர்கள் நாள் குறித்தனர். ஆனால் சரண் நால்வருக்கும் ஒன்றாக தான் கல்யாணம் நடக்க வேண்டும் இல்லையென்றால் தனக்கு கல்யாணம் வேண்டாம் என்று விட்டான். அதனால் பாலா மற்றும் ரமேஷ்க்கு அவர்கள் லவ் பண்ணும் பெண்கள் வீட்டில் பேசி சம்மதம் வாங்கி விட்டனர். ஆனால் கார்த்திக் மட்டும் பெண் கிடைக்காமல் போக வேதா தான் பெண் பார்த்து பேசி விட்டதாக சொல்லி திருமணத்திற்கு நாள் குறிக்க சொல்லி விட்டார். வீட்டில் உள்ளவர்கள் பெண்ணைப் பற்றிய விவரம் கேட்டும் சொல்ல மறுத்து விட்டார். ஏன் கார்த்திக் கூட பெண்ணின் கழுத்தில் தாலி கட்டிய பிறகு தான் அவளின் முகத்தை காட்டினார். ஏனென்றால் மணப்பெண் அந்த ஏரியா ரவுடி ஏம்.எல்.ஏ வின் பெண். அவள்தான் கார்த்திகை இன்ஸ்டாவில் மெசேஜ் செய்து தொல்லை செய்தது.அவள் செய்த காதல் தொல்லை தாங்க முடியாமல் கார்த்திக் பட்டன் சொல்லுக்கு மாறிவிட இவன் சரிபட்டு வர மாட்டான் என்று வேதாவிடம் தனது காதலை செல்ல உடனே களத்தில் குதித்த வேதா பாய் தனது தில்லாலங்கடி வேலையால் அவளின் ரவுடி தந்தைக்கு தெரியாமல் பெண்ணை கடத்தி வந்து வீட்டில் உள்ளவர்களுக்கும் தெரியாமல் திருமணத்தை முடித்துவிட்டார். ஆனால் அதற்கு பிறகு அவளின் தந்தை தனது படையுடன் வந்து கல்யாண வீட்டை கலவரமாக்கிவிட்டார்.திரு தான் தனது பதவியை பயன்படுத்தி சமாதானம் செய்து வைத்தான். ஆனால் இப்பொழுது வரை கார்த்திக்கின் மாமனார் அவனை முறைத்து கொண்டுதான் திரியுறார். பாவம் அவன் மனைவி மற்றும் மாமனாரிடம் மாட்டிக்கொண்டு அல்லல்படுகிறான். அது போதாது என்று அவன் திருமணத்தை லைவ்வில் போட்டு அவனை ட்ரெண்டிங் செய்து விட்டார். இப்போதுவரை அதனால் அவன் படும்பாடு, “தல நானும் லவ் பண்றேன்.என் ஆள மேரேஜ் பண்ண ஹெல்ப் பண்ணுங்க இல்ல ஐடியா தாங்க. எங்க லவ் குருவே நீங்க தான்” என்று தினமும் பத்து போன் கால் வந்துவிடும். அவன் எத்தனை நம்பர் மாற்றினாலும் அதனை கண்டுபிடித்து கரெக்டாக போன் செய்து விடுவார்கள்.
“ டேய் யாருடா நீங்க எல்லாம் நான் எங்கடா லவ் பண்ணுனேன். என்னை ஏன்டா இப்படி வச்சி செய்றீங்க” என்று வெறுத்துப் போய் அவன் புலம்புவது அவனுக்கு மட்டும் தான் தெரியும்.
அவனை மட்டும் இல்லை ஒரே நாளில் திருமணம் செய்த நால்வரும் ஒரே நாளில் குழந்தை பெற்றுக்கொள்ள போகின்றனர் என்று நால்வரின் போட்டோவை போட்டு போஸ்ட் செய்து விட்டார். அதனைப் பார்த்த டூகே கிட்ஸ் நால்வரின் புகைப்படத்துடன் “என் நண்பனைப் போல் யாரும் இல்லை” என்ற சாங்குடன் எடிட் செய்து ட்ரெண்டிங் ஆக்கிவிட்டனர். இப்போது வரை சில யூடியூப் சேனல்கள் மைக்கை தூக்கிக்கொண்டு இவர்கள் பின்னாடி அலைக்கின்றனர். இப்படி நால்வரின் வாழ்க்கையும் அவரிடம் கிடந்து அல்லல் படுகிறது.
“அண்ணா லைட்டிங் போகுது பாருங்க எதுக்கு இந்த வெட்டி பசங்க கிட்ட கிடந்து வீணா டைம் வேஸ்ட் பண்றீங்க. வாங்க நம்ம அந்த பக்கம் போலாம்” என்றார் கேமரா மேன் ராஜேந்திரன்.
“ஆமா தம்பி இவங்களோட நமக்கு என்ன பேச்சு வா அந்த பக்கம் போலாம்” என்று இருவரும் வேறு பக்கம் செல்ல
“மச்சான் ஒரு காலத்துல எப்படி இருந்த மனுஷன். எவ்வளவு பெரிய வில்லன்டா அவரு. அவர போய் கேமரா மேன் ஆக்கிட்டார் பாருடா இந்த சீனியர்” என்றான் ராஜேந்திரனை பார்த்து கார்த்திக்.
“ஆமா மச்சான் இருந்தாலும் இந்த சின்ன தாத்தா இவ்வளவு மாறுவார்னு நினைச்சு கூட பாக்கல டா” என்றான் முற்றிலுமாக மாறி போய் இருந்த ராஜேந்திரனை பார்த்து சரண்.
“ எல்லாம் நம்ம சீரியர் வேலை தாண்டா” என்றான் பாலா
“ ஆமா மச்சான் இருந்தாலும் சொல்லியே ஆகணும். இதுவும் பார்க்க கொஞ்சம் நல்லா தான் இருக்கு” என்றான் ரமேஷ்.
இப்போதுதான் வாழ்க்கையை ரசித்து வாழ தொடங்கி இருக்கும் ராஜேந்திரன். முன்பு எப்படி இருந்தாரோ அதற்கு மாறாக தற்போது முற்றிலுமாக வேறு ஆகிப் போனார். அவர் மாற்றத்தில் முக்கியமானது தனது பேரனுக்கும் சுதாவின் மகள் கீதாவிற்கும் திருமணம் செய்து வைத்தது தான். எப்படிடா இது என்று ஊரே ஆச்சரியமாக பார்த்தது. மகளின் காதல் திருமணத்தை எதிர்த்தவர் பேரனின் காதலை முன்னின்று சேர்த்து வைத்தார். இது எல்லாவற்றிலும் காரணமாக இருந்தது வேற யாரு எல்லாம் நம்ம வேதா பாய்தான்.
“ஆமாடா நீ சொல்றது ரொம்ப கரெக்ட்….” என்ற சரண் திடீரென்று எங்கேயோ பார்த்து செல்ல
“ டேய் மச்சான் மச்சான்” என்று பாலா அழைப்பது கூட கேட்காமல் சென்றவனை பார்த்த கார்த்திக், “அங்க பாருடா அவனோட ஜோடி புறா வந்துட்டு. இனி நம்ம என்ன கூப்பிட்டாலும் அவனுக்கு காதுல விழாது” என்று சாராவின் அருகே சென்ற சரணை பார்த்து சொன்னான்.
“அடியே சாரப்பாம்பு இந்த புடவையில அப்படியே கும்முனு இருக்குடி. இது மட்டும் நம்ம பெட்ரூமா இருந்தா” என்றான் கிறக்கமாக புடவையில் தனது மனைவியை பார்த்து பின்ன வருஷத்துக்கு ஒரு தடவை மட்டும் காண கிடைக்கும் காட்சி அல்லவா இது. சாரா பொதுவாக புடவை கட்ட மாட்டாள். இன்று இந்த ஃபங்சனுக்காக மட்டும் கட்டி இருக்கிறாள்.
“பெட்ரூமா இருந்தா” என்று மயக்கும் குரலில் அவள் அவனுக்கு எடுத்துக் கொடுக்க
“ இது சரிப்பட்டு வராது நம்ம வீட்டுக்கு போலாம் வா” என்று அவள் கையை பிடித்து இழுத்தான்.
“ ஐயோ விடுங்க நானே கஷ்டப்பட்டு சாரி கட்டி இருக்கேன். உங்களோட இதே வேலையா போச்சு. இதுக்கு தான் நான் புடவை கட்டுறதே இல்ல. விடுங்க என்னை பாரதி கூப்பிடுறா அவ கிட்ட போறேன்” என்று அவன் கையில் இருந்து நழுவி பாரதியிடம் ஓடி விட்டாள் சாரா.
“வட போச்சே” என்ற ரியாக்சன் உடன் நின்ற சரணை நெருங்கிய, “என்ன மாப்பிள்ளை அய்யனார் சீலை மாதிரி நிக்கிறீங்க என்ன ஆச்சு” என்றார் முத்துவேல்.
“ யாரு இவன் அய்யனார் சிலையா. வர வர உங்களுக்கு கண்ணு சரியா தெரியல மச்சான்” என்று கலாய்த்தார் விநாயகம்.
“ ஒருவேளை அப்படி இருக்குமோ மச்சான்” என்று இருவரும் பேசிக் கொண்டு செல்ல
“ இந்த குடும்பத்துல உள்ளவங்களுக்கு நம்மள பார்த்தா எப்படித்தான் தெரியுது” என்று தனியாக நின்று சரண் புலம்ப
“ வேற என்ன மெண்டல் மாதிரி தான்” என்று போன போக்கில் சொல்லிச் சென்றார் வேதாச்சலம்.
“ வேதா பாய்… இந்த சீனியரால இன்னும் என்னென்ன எல்லாம் நான் படனுமோ” என்று கடுப்புடன் பல்லை கடித்து நின்றான் சரண்.
“டேய் வாடா தேவையில்லாம மெண்டல் மாதிரி புலம்பிக்கிட்டு இருக்காதே. அங்க பந்தி பரிமாற ஆள் தேவைப்படுது வா” என்று அவனை அழைத்து பந்தி பரிமாற சென்றான் திரு.
இங்கே இவ்வளவு கலவரம் நடக்க இந்த விழாவிற்கு ஹீரோவான நமது திரு மற்றும் பாரதியின் புதல்வன் விக்ரமாதித்தன் என்ற விக்கி பாய் தனது பெரிய பாட்டி வசுந்தராவிடம் இருந்த மாமன் மகளை தன்னிடம் தர சொல்லி வம்பு செய்து கொண்டு இருந்தான்.
“ஆச்சி அவ என் வைசு ரவி தாத்தா சொல்லி இருக்காரு அவளை நான் தான் பாத்துக்கணுமாம். நீ என் கையில தா நான் அவள வச்சுக்குவேன்” என்று இரண்டு வயது ஆகிய குட்டி வாண்டு ஒரு வயதான ரமேஷ்- ஆர்த்தியின் குழந்தை வைசாலியை அவன் கையில் தரச் சொன்னான்.
“ ஆள பாரு மொளைச்சு நாலு இல விடல. அதுக்குள்ள உனக்கு ஆளா. உன்ன பாத்துக்கவே ஒரு ஆள் வேணும். இதுல நீ இவள பாத்துக்க போறியா. அப்படியே பாட்டிக்கு தப்பாம பிறந்திருக்கு. போடா உன் கையில எல்லாம் என் பேத்தியை தர முடியாது” என்றார் வசுந்தரா இன்னும் அவருக்கு தனது தங்கை மேல் உள்ள பொறாமை மாறவில்லை. அதற்கும் காரணம் இருக்கிறது ஏனென்றால் இப்போது இந்திரா துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். அதில் மெட்டீரியல் துணிகளை வாங்கி தங்கள் ஊரில் உள்ள பெண்களை வைத்து தைத்து அதனை தனது கடையில் விற்பனை செய்து வருகிறார். இதனால் அந்த ஊரில் உள்ள பெண்கள் அனைவருக்கும் ஒரு வருமானம் அவர்கள் கையில் வர இப்போது எல்லாம் அவர்கள் கடன் வாங்குவது இல்லை. ஒரு கடனால் இவர் பட்ட பாடு அதனால் அவர் குடும்பம் சந்தித்த பின் விளைவுகள் அனைத்தும் சேர்ந்து அவரை யோசிக்க வைத்தது. தங்களை நம்பி ஒரு வருமானம் வந்தால் ஏன் அவர்கள் லோன் எடுக்கப் போகிறார்கள் என்று யோசித்த இந்திரா தான் முன்னேறியது இல்லாமல் தன்னுடன் இருந்தவர்களையும் முன்னேற்றி விட்டார். இப்போது அவர் நிமிர்ந்த நடையோடு இந்த சமூகத்தின் முன் வளர்ந்து நிற்கிறார். அதனால் இந்திரா மீது உள்ள கோபத்தினை அவரின் பேரன் மேல் இப்படி காட்டுகிறார் வசுந்தரா.
“தரமாட்டிங்களா இருங்க நான் போய் ராஜா தாத்தாவ கூட்டிட்டு வரேன்” என்று ராஜலிங்கத்தை கூப்பிடச் செல்ல
“ டேய் டேய் நில்லுடா வரவர இந்த வாண்டு கூட என்ன மதிக்கமடக்கு எல்லாம் அவரை சொல்லணும்” என்று தனது கணவனை திட்ட
“ என்னடி ஏன் என் பேரனை அழ வைக்க” என்று வந்தார் ரவி.
“தாத்தா என் வைசுவ என்கிட்ட தர மடக்காங்க” என்று வசுந்தராவை முறைத்துக் கொண்டு அவரிடம் போட்டுக் கொடுக்க
“விஷம் விஷம் இப்பவே எப்படியெல்லாம் போட்டு கொடுக்கு பாரு” என்று அவன் தலையில் மெதுவாக கொட்டினார்.
அவ்வளவுதான் அவன் கத்தியக் கத்தில் குடும்பம் முழுவதும் வந்துவிட்டது. இனி கேட்க வேண்டுமா வழக்கம் போல ராஜலிங்கம் அவரை முறைத்துக் கொண்டு விக்ரமை கையில் வைத்து சமாதானம் செய்துவிட்டு இவரை திட்ட ஆரம்பிக்க மொத்த குடும்பத்தின் முன்பும் குற்றவாளி போல நின்று திட்டு வாங்கினார் வசுந்தரா. விக்ரம் இப்படி ஏதாவது செய்து தினமும் அவரை அனைவரிடமும் திட்டு வாங்கி நிற்க வைத்து விடுவான் இதுதான் அவனின் பொழுதுபோக்கு. குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் செல்லப்பிள்ளை அவன். அதனால் அவன் சின்னதாக கத்தினால் கூட அனைவரும் வந்துவிடுவர். இப்போது கூட அவர் திட்டு வாங்குவதை கள்ள சிரிப்புடன் ராஜலிங்கம் தோளில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் விக்கி பாய்.
அவன் குறும்பினை சிரிப்புடன் பார்த்து நின்ற திருவை அழைத்து கொண்டு வந்து பாரதி, “மாமா அங்க ஐயர் எல்லாரையும் வர சொல்றார். நீங்க எல்லாம் இங்க நின்னு என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க. வாங்க எல்லாரும் அங்க போலாம்” என்று அனைவரையும் திட்டி மூடி காணிக்கை செலுத்தும் இடத்திற்கு அழைத்து சென்றாள் பாரதி.
சுபாஷ் மற்றும் ரமேஷ் மடியில் அமர வைத்து விக்ரம் தலையை மொட்டை அடித்தனர். சுபாஷ் தற்போது மூன்றாம் ஆண்டு மருத்துவம் பயின்று வருகிறான். இந்திரா இந்த ஊரே மெச்சும் அளவுக்கு தனது பேரனுக்கு சீர் செய்து விட்டார். தனது மகள் கல்யாணத்தின் போது செய்ய முடியாததை தற்போது செய்துவிட்ட மகிழ்ச்சி அவரின் முகத்தில் தெரிந்தது.
அவனுக்கு மொட்டை அடிக்கும் வரை அமைதியாக விக்ரம் காது குத்த வர ஓ வொன்று அழத் தொடங்கி விட்டான். அவன் அழுவதை பார்த்து பொறுக்க முடியாமல் சரண் அவனை துக்க வர, “டேய் இருடா உடனே போய் அவனை தூக்காத காது குத்தவே இல்லை எப்படி எல்லாம் நடிக்கிறான் பாரு. தாத்தா அந்த கேமராவ அவன் முகத்துல கொஞ்சம் போகஸ் வைங்க” என்று இதனை வீடியோ எடுத்துக் கொண்டு இருந்த ராஜேந்திரனிடம் சொன்னான் திரு.
தனது முகத்திற்கு நேராக கேமரா லைட் பட்ட உடன், “பிரண்ட்ஸ் இதுலாம் ரொம்ப சிம்பிள் தான். இதுக்கெல்லாம் சின்ன பசங்க தான் அழுவாங்க” என்று லைவ்வில் இருப்பவர்களிடம் கெத்தாக சொல்லிக் கொண்டிருந்தான் விக்கி.
அப்போது காது குத்துவரிடம் கண்ணை காட்டினான் திரு. உடனே அவரும் குத்தி விட்டார் லைவ்வில் இருப்பதால் தனது கண்ணீரை மறைத்துக் கொண்டு பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் விக்கி பாய்.
அவன் அழாமல் இருப்பதை பார்த்து,
“ விக்கி பாய் நீங்க மாஸ் 🔥🔥🔥”
“ விக்கி டார்லிங் ஐ லவ் யூ டா 😍😍😍”
“ சோ க்யூட் செல்லம் 😘😘”
“ கெத்து விக்கி பாய் நீங்க 🔥🔥”
“ அடுத்த வேதாபாய் நீங்க தான் 😘🥰🔥🔥” என்று தொடர்ந்து கமெண்ட் வர அதனை வாசித்த கார்த்திக், “யப்பா டேய் முடியாதுடா சாமி ஒரு வேதாபாயே எங்களால வச்சு சமாளிக்க முடியல. அடுத்ததா ஆள விடுங்கடா சாமி” என்று இடத்தை காலி பண்ண
“ டேய் இருடா நாங்களும் வரோம்” என்று மற்றும் மூவரும் அவனின் பின்னே ஓட இவர்கள் நால்வரையும் பார்த்து அனைவரும் சிரித்துக் கொண்டு நின்றனர்.
இதனை சிரிப்போடு பார்த்த பாரதியின் இடுப்பினை கிள்ளிய திரு, “ உன் புள்ள ரொம்ப சேட்டை பண்றான் டி. மரியாதை எனக்கு ஒரு பொண்ணு பெத்து கொடு” என்றான் புடவையில் புதுப்பெண் போல நின்ற பாரதியை பார்த்து மயக்கமாக திரு.
“அதான் அதுக்கான எல்லா வேலையும் முடிச்சிட்டீங்களே. இன்னும் ஒன்பது மாத தவணைல நீங்க கேட்ட பொண்ணு உங்க கையில இருக்கும் மாமா” என்றாள் அவள் கண்ணை பார்த்து வெக்கத்துடன்
“உண்மையாவா பாருக் குட்டி சொல்லுற” என்றான் ஆவலாக
ஆமாம் என்பது போல் அவள் தலையை ஆட்ட அவளின் கைகளை இறுக பிடித்துக் கொண்டு,
“எப்பவும் தவணை வாழ்க்கைக்கு அவசியம் கிடையாது. ஆனா இந்த தவணை ரொம்ப அவசியமானது அழகானதும் கூட….
தவணை முறையில் நெஞ்சம் கொல்லுதே இல்ல அன்பே அள்ளுதே… ”
என்று சொல்லி அவன் சிரிக்க அவளும் அவன் சிரிப்பில் கலந்து கொண்டாள்.
இவர்களின் இந்த தவணை முறையில் தங்கள் வாழ்க்கையைக் கொண்டு செல்லட்டும் என்று வாழ்த்திய விடை பெறுவோம்…
error: Content is protected !!