Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

தவணைமுறையில் நெஞ்சம் கொள்ளுதே

TNK- FINAL-1

“அக்கா அம்மா இங்க பாருங்க நியூஸ்ல மாமா வராங்க” என தனது அக்கா மற்றும் அம்மாவிடம் மொபைலில் வந்த நியூஸை காட்டினான் சுபாஷ்.

 

 சாரா சொல்லியது போல காலையில் வந்த சீப் டாக்டர் இந்திராவை செக் செய்துவிட்டு ரூமுக்கு மாற்றி இருந்தார். இவர்களின் அந்த பாச போராட்டம் எல்லாம் ஓய்ந்து இப்போதுதான் ஓய்வாக படுக்கையில் அமர்ந்து தனது மகளிடம் பேசிக் கொண்டிருந்த இந்திரா, “என்ன நியூஸ்டா எங்க காட்டு பாப்போம்” என்றார்.

 



Advertisement

“இங்க பாருங்கம்மா” என்று அவரின் கையில் அந்த மொபைலை கொடுத்தான்.

 

“சார் எப்படி தொடர்ந்து நடக்கிற முதியவங்களோட தற்கொலைக்கு இவங்க தான் காரணம் நீங்க சொல்றீங்க. எப்படி இத நீங்க கண்டுபிடிச்சீங்க” என்றார் ரிப்போர்ட்டர்.

Advertisement

 

Advertisement

“ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் நான் மட்டும் இத கண்டுபிடிக்கல என்னோட டீமும் சேர்ந்து தான் இத கண்டுபிடிச்சி இருக்கு. முதல்ல எங்களுக்கு தொடர்ந்து 50 வயசுக்கு மேலே உள்ள முதியவர்கள் தற்கொலை பண்ணிகிறது ஒரு கேள்வியை கொடுத்துச்சி. அதுலயும் குறிப்பா செத்தது புல்லா பெண்கள் தான். அதுவே எங்களுக்கு ஒரு டவுட்டா இருந்துச்சு அதுலயும் 50 வயசுக்கு மேல உள்ளவங்க ஏன் தற்கொலை பண்ணிக்கணும். 50 வயசு வரைக்கும் அவங்க பாக்காத கஷ்டங்களா சோதனைகளா அப்படி இருக்கும்போது எல்லாம் செட்டில் ஆகி ஒரு நிலைமைக்கு வரும்போது இவங்க ஏன் சூசைட் பண்ணிக்கணும் அப்படின்னு ஒரு டவுட் எங்களுக்கு ரொம்பவே ஸ்ட்ராங்கா இருந்துச்சு. அதோட எல்லா பேருமே ஒரு கலெக்சன் ஏஜென்ட் பேச்சு தாங்க முடியாம தற்கொலை பண்ணிக்கிறாங்க. இதுவரைக்கும் செத்த எல்லாருக்குமே பொதுவா இருந்தது இவங்களோட அந்த கேபி பைனான்ஸ் மட்டும்தான். அங்கதான் எங்களுக்கு டவுட் இவங்க மேல வந்துச்சு. அது என்ன நிறைய பேரு லோன் எடுக்கும்போது குறிப்பா 50 வயசுக்கு மேல உள்ளவங்க மட்டும் ஏன் இவங்க பேச்சு தாங்க முடியாம தற்கொலை பண்ணிகணும். முதல்ல அம்பது வயசுக்கு மேல இவங்களுக்கு என்ன பண தேவை வந்துச்சு. மோஸ்ட்லி அம்பது வயசுக்கு மேலே எல்லா பேருமே தங்களோட பசங்கள செட்டில் பண்ணி இருப்பாங்க. இல்லையா அவங்களோட பசங்க கண்டிப்பா ஏதோ ஒரு வேலையில இருப்பாங்க. ஒரு சிலருக்கு மட்டும் தான் தன்னோட பையன படிக்க வைக்கிறதுக்காகவோ இல்ல மகளுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கவோ இல்லன்னா அவங்களுக்கு சீர் செய்யவோ காசு தேவைப்படும். இல்லையா ஏதோ ஒரு மெடிக்கல் எமர்ஜென்சிக்காக காசு தேவைப்படும். ஆனா இப்ப இறந்து போனவங்களுக்கு அப்படி எந்த ப்ராப்ளமும் இல்ல. மோஸ்ட்லி அவங்க எல்லாம் தனியா தான் இருக்காங்க. அப்படி இருக்கும்போது இவங்க ஏன் லோன் எடுக்கணும். அப்படின்னு நாங்க ஒரு சர்வே பண்னோம். அப்பதான் தெரிஞ்சுச்சு இவங்களோட ஆசையை தூண்டிவிட்டு லோன் எடுக்க வைக்கிறாங்கனு. இப்ப கூலி வேலைக்கு போறவங்க கைல ஒரு நாள் சம்பளம் ஒரு 300 ரூபாய் இருக்குமா. ஆனா இவங்க லட்ச ரூபாய் உங்க கையில நாங்க தந்துடுவோம்னு சொல்றாங்க. அதுக்கு ஆசைப்பட்டு வட்டி எவ்வளவு வருது எத்தனை மாசம் கட்டணும் எந்தவித விசாரணையும் இல்லாம அவங்க காட்டுற எல்லா இடத்திலும் சைன் பண்றாங்க. மோஸ்ட்லி எல்லா லோனுக்குமே இன்சூரன்ஸ் கிளைம் பண்ண முடியும். அதனால இவங்க சின்னதா லோன் எடுத்து கட்டுற வரைக்கும் அமைதியா இருந்துட்டு இவங்க பேர்ல எப்ப பெரிய அமௌன்ட் எடுக்கலாம்னு ஒரு ஸ்டேஜ் வரும்போது அவங்களே அந்த அமௌன்ட் எடுத்துக்கிறாங்க. இவங்க கைல ஒரு கம்மி அமௌன்ட் மட்டும் கொடுத்துட்டு வட்டியை அதிகம் ஆக்கி இவங்கள கட்டவிடாம பிரஷர் பண்ணி தகாத முறையில் பேசி இவங்கள தற்கொலை பண்ண தூண்டிவிட்டு அத பண்ணவும் வைக்காங்க. அப்படி இவங்க இறந்துட்டா ஏற்கனவே இவங்க பேர்ல எடுத்த லட்ச ரூபாய் பைனான்ஸ்க்கு தான் கூடவே இன்சுரன்ஸ்னு சொல்லி ஒரு அமௌன்டையும் அவங்க க்ளைம் பண்ணி வாங்கிடுவாங்க. இப்படித்தான் நூதன முறையில் இவங்க தொடர்ந்து வயசுல அதிகமான தன்னோட கஷ்டமர தற்கொலை பண்ணிக்க வச்சு அவங்க பேர்ல உள்ள மொத்த அமௌன்ட் இவங்க பைனான்ஸ் எடுத்துக்குறாங்க” என்று சொல்லி முடித்தான் திரு.

 

 “சார் இந்த கிரைம்ல யார் யார் சம்பந்தப்பட்டிருக்காங்க அதை சொல்லுங்க சார்”

Advertisement

 

“ இதுல கேபி பைனான்ஸ் ஓனர் மிஸ்டர். கந்தன் மற்றும் அவரோட சன் மிஸ்டர். அருண்குமார் இவர் தான் கேபி பைனான்ஸ் சிஇஓ. அண்ட் இவங்க கூட எல்லா விஷயத்துலயும் கூடவே இருந்த கலெக்ஷன் ஏஜென்ட் மிஸ்டர். பிரகாஷ்” என அவர்கள் மூணு பேரையும் மீடியா முன்பு நிறுத்தினான்.

 

“ சார் நீங்க சொல்றத வச்சு பார்க்கும்போது இவங்களால மட்டும் மக்கள தன்னோட ஏஜென்சிக்கு வர வைக்க முடியாது. இவங்களுக்கு கண்டிப்பா ஒருத்தங்க உதவி செஞ்சி இருப்பாங்களே அவங்க எங்க”

 

“ நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட். இவங்களால கண்டிப்பா நேரடியா போய் எந்த கஷ்டமரையும் அவங்க ஏஜென்சிக்கு வர வைக்க முடியாது. அதனால இவங்க கிட்ட இருக்கிற கலெக்சன் ஏஜெண்டுகளை வைச்சி ஆளுக்கு ஒவ்வொரு ஏரியான்னு பிரிச்சு கொடுத்து அந்த ஏரியாவுல பிரபலமா இருக்கிற ஒரு பெண்ணோ இல்ல ஒரு குழுவோட தலைவியையோ அவங்கள பிரைன் வாஸ் பண்ணி இப்ப ஒரு லோன் எடுக்க நீங்க ஒரு கஸ்டமர் எங்களுக்கு சேர்த்து விட்டீங்கன்னா உங்களுக்கு 2000 ரூபா நாங்க தர்றோம் அப்படின்னு சொல்லி அவங்கள நல்லா பிரைன் வாஸ் பண்ணி இவங்களோட அந்த க்ரைம் குள்ள இழுத்துக்குறாங்க. மோஸ்ட்லி அவங்க சூஸ் பண்ற அந்த லேடிஸ் வேலைக்கு போவாம வீட்ல இருக்குறவங்கள தான் இருக்குறாங்க. அதாவது தனக்கு ஏதாவது ஒரு வகையில சின்னதா இன்கம் வராதா எதிர்பார்க்கிறவங்களை தான் இவங்க சூஸ் பண்ணி எடுப்பாங்க. அதுக்கு பிறகு அவங்கள வச்சு கஸ்டமர் பிடிப்பாங்க”

 

“சார் நீங்க சொல்றதெல்லாம் சரியா தான் இருக்கு ஆனாலும் 50 வயசு மேல உள்ளவங்க அதுவும் தனியா உள்ளவங்க ஏன் லோன் எடுக்கனும். அவங்க அவ்ளோ அமௌன்ட் வச்சு என்ன செய்யப் போறாங்க”

 

“ குட் கொஸ்டின் அங்க தான் நம்ம மக்கள் ஸ்மார்ட்டாக ஒரு விஷயம் பண்றாங்க. அதாவது இவங்கள அந்த லோன் ஏஜென்சி ஏமாத்தணும்னு நினைச்சா. நம்ம மக்கள் அவங்களே ஏமாத்தறதுக்கு நிறையவழி வச்சிருக்காங்க”

 

“அப்படி என்ன வழி சார் மக்கள் வச்சிருக்காங்க”

 

“ அதுவா அது ஒன்னும் இல்ல. உங்களுக்கு புரியிற மாதிரி சொல்லவா நீங்க எனக்கு லோன் எடுத்து கொடுத்தா உங்களுக்கு நான் 2000 ரூபாயும் ஒரு பிரியாணி சாப்பாடு வாங்கி தருவேன். என்ன புரியலையா அதாப்பா நம்ம அரசியல்வாதிகெல்லாம் பண்ணுவாங்களே ஒரு நாள் கட்சி கூட்டத்துக்கு வந்தனா ஒரு நாள் சம்பளம் 500 ரூபாயும் அண்ட் கோட்டரும் கோழி பிரியாணியும் தருவாங்களே அதுதான் மக்கள் இங்க அப்ளை பண்றாங்க. எந்த வேலையும் இல்லாம வீட்டுல சும்மா இருக்குறவங்களுக்கு என் கூட ஆட்டோல வந்து அவங்க காட்டுற எடத்துல கையெழுத்து போட்டு 2000 ரூபாய் சம்பளம் ஒரு பிரியாணி சாப்பாடு வாங்கிக்கன்னு சொன்னா நம்ம மக்கள் போகாம இருப்பாங்களா. அவங்க தர்ற வெறும் 2000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு இவங்க காட்டுற எல்லா இடத்திலும் சைன் பண்ணிடுவாங்க. அதுலயும் சொந்தத்துக்குள்ள கேட்கவே வேண்டாம். இந்த அத்தைக்காக, பெரியம்மாக்காக, அம்மாவுக்காக, சித்திக்காக,தங்கச்சிக்காக, அண்ணிக்காகன்னு எப்படி எத்தனை பேருக்கு லோன் எடுத்துக் கொடுக்குறாங்கனு உங்களுக்கு தெரியுமா. இப்படி எல்லா பேர்த்துகிட்டையும் லோன் வாங்கி அத கட்ட முடியாம எத்தனை பேர் வீட வித்துட்டு ஊர விட்டு போறாங்கன்னு உங்களுக்கு தெரியுமா. சிலர் அப்படியே எல்லாத்தையும் எடுத்துட்டு ஓடிப் போயிட்டு வாங்க. அதுக்கு பிறகு தான் நம்மாளுங்க அவளுக்கு லோன் எடுத்து கொடுத்தது தப்பா போச்சுன்னு சொல்லி எங்ககிட்ட வந்து கம்ப்ளைன்ட் கொடுக்குறவங்க நிறைய பேர் இருக்காங்க. நாங்க அவங்கள கண்டுபிடித்தாலும் சிலர் காசு கட்டிருவாங்க. சிலர் நான் ஜெயிலுக்கே போறேன் எனக்கும் அதுக்கும் சம்பந்தமே கிடையாது சொல்லுறவங்களும் இருக்காங்க. அதுக்கு பிறகு இவங்க வாங்காத காசுக்கு இவங்க தான் காசு கட்ட வேண்டியதா இருக்கும். இதுவும் இந்த பைனான்ஸ்க்கு தெரிஞ்சு தான் நடக்குது. ஆனா வெளிய பாமர மக்களுக்கு எங்களுக்கு எதுவும் தெரியாது அப்படின்னு இவங்க கைய விரிச்சிடுவாங்க”

 

“சார் நீங்க சொல்லுறத பார்த்தா இருக்கிற எல்லா ஏஜென்சியுமே தப்புங்கற மாதிரி இல்ல  சொல்றீங்க”

 

“நான் அப்படி சொல்லவே இல்லையே. ஏஜென்சில நியாயமா வட்டி வாங்குற ஏஜென்சி இருக்கு அநியாயமா வட்டிய புடுங்குற ஏஜென்சியும் இருக்கு. நான் சொல்ல வர்றது மக்களுக்கு தான் உங்களுக்கு உண்மையாவே காசு தேவை இருந்தா மட்டும் லோன் எடுங்க. ஒரு மெடிக்கல் எமர்ஜென்சிக்காகவோ இல்ல படிப்புக்காகவோ இல்லன்னா ஒரு மேரேஜ்காகவோ இல்லை என் நகை ஏலத்துல போகப் போகுது அப்படின்னு ஏதாவது ஒரு எமர்ஜென்சிக்காக மட்டும் லோன் எடுங்க. அத விட்டுட்டு தீபாவளி வருது அதுக்கு டிரஸ் எடுக்கணும், வெடி வாங்கணும் செலவு இருக்கு அப்படின்னு சொல்லி ஒரு லோன் எடுக்கிறீங்களே அதெல்லாம்  ரொம்ப தப்பு. இந்த லோன் ஏஜென்சி எல்லாம் வந்த பிறகு மக்கள் கிட்ட நம்ம கிட்ட இருக்கிறத வச்சு வாழணும் என்கிற ஒரு நினைப்பு இல்லாம போய்க்கிட்டே வருது. சேமிப்பு அப்படின்னா என்னன்னு மக்கள் மறந்து ரொம்ப நாளாச்சு. உங்களோட ஆடம்பர செலவுக்காக நீங்க லோன் எடுத்தீங்கனா உங்ககிட்ட எப்படி சேமிப்பு இருக்கும். தேவைக்கு அதிகமா லோன் எடுக்கும் போது அதை எப்படி உங்களால அடைக்க முடியும். அத கட்ட முடியாம அடுத்த லோன் வாங்கி அதை கட்டுனா எப்படி உங்களால முன்னேற முடியும். உங்ககிட்ட இருக்கிற எல்லாத்தையும் இழந்து நடுத்தெருல நிற்க தான் முடியும். ஒரு சிலர் சொல்லலாம் என்னோட புருஷன் குடிகாரன் நானே இந்த லோன வச்சு தான் என் பிள்ளைகள படிக்க வச்சேன் அப்படி இருக்கும்போது நீங்க ஏன் லோன் எடுக்க கூடாதுன்னு சொல்றீங்கனு. நீங்க லோன் எடுத்து உங்க பிள்ளைல படிக்க வைக்கிறது உங்க குடும்பத்தை நடத்துறது எல்லாம் சரிதான் இப்படி எல்லா பொறுப்புகளையும் உங்க தலையில நீங்க போட்டுகிறேங்கனா உங்க குடிகார புருஷன் எப்படி திருந்துவான் அவனுக்கு எந்த பொறுப்பும் அங்க இருக்காதே. நீங்க உங்க பேர்ல கடன் வாங்கி வச்சிக்கிட்டே இருந்தனா அவனுக்கு எப்படி தன்னுடைய பிள்ளைய, குடும்பத்தை நம்ம தான் பார்த்துக்கணும்னு பொறுப்பு வரும். நீங்க இப்படியே உங்க தலையில எல்லாம் சுமையும் ஏத்த ஏத்த அவங்க ப்ரியா குடிச்சிட்டு தன்னோட உடம்பையும் அழிக்கிறதும் இல்லாம உங்களுக்கும் மருத்துவ செலவு கொண்டு வந்து வைப்பாங்க.

சரியோ, தப்போ இருக்கோ, இல்லையோ அவங்கள எல்லா பொறுப்பையும் செய்ய விடுங்க. எல்லா சுமைகளும் உங்களால சுமக்க முடியாது. குடும்பத்துல இருக்கிற அம்மா,அப்பா, குழந்தைங்க வர ஆளாளுக்கு ஒவ்வொரு சுமைய சுமந்தா மட்டும்தான் அந்த குடும்பம் முன்னேற முடியும். அதனால எமர்ஜென்சி இல்லாம லோன் எடுக்கிறது தப்புதான். அதே மாதிரி காசு தராங்கன்னு அவங்க காட்டுற இடத்தில எல்லாம் சைன் பண்ணவும் கூடாது என்ன இருக்குதுன்னு படிச்சு பார்த்து தான் சைன் பண்ணனும். அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் யாரையும் நம்பி உங்களோட ஆதார்கார்ட், ரேஷன் கார்டு, பான் கார்டு, பேங்க் கார்டு இப்படி ஒரிஜினல் ப்ரூப் கொடுக்காதீங்க. அத வச்சு எப்படி எல்லாமோ ஏமாத்தலாம். முக்கியமா கிராமப்புறத்தில் இருக்கிற பெண்கள் தான்  கொஞ்சம் விழிப்புணர்வோட இருங்க. அப்படி இல்லனா இவங்க மாதிரி ஆளுங்க  ஏமாற்ற தான் செய்வாங்க” என்று சொல்லி தனது பேட்டியினை முடித்து அந்த மூவரையும் அழைத்துக் கொண்டு சென்றான் திருக்குமரன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!