Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Un Sari Paathi

Un Sari Paathi 7

அத்தியாயம்       7

இரவு உணவு முடிந்ததுதான் கிளம்பினர் அனைவரும்… அண்ணன்      தங்கை இருவரும் இப்போது மொட்டைமாடியில் இருக்க… கீர்த்தி,         தன் அத்தைக்கு உதவி விட்டு மேலே வந்தாள்… இல்லை இல்லை மைதிலிதான் விரட்டி விட்டார் அவளை… “ஏதாவது எக்கு தப்பா          பேச போறாங்க ரெண்டு பேரும் போய் பாரு” என்றார்.

ஆனால் மாடி மிகவும் அமைதியாக இருந்தது சத்தமே           வரவில்லை. மற்ற வீடுகளின் மாடியிலும் அங்காங்கே பளீச்              பளீச் என விளக்கெரிய… ஏதோ சத்தம், வெளிச்சம்       எல்லாவற்றிலிருந்தும் தங்களை தனிமைபடுத்திக்                கொண்டாதாக நினைப்பவர்கள் அங்காங்கே நின்றிருக்க…



Advertisement

கன்யா அவள் வீட்டின் மாடியில் ஒருமூலையில் அமர்ந்திருக்க…       கார்த்தி அந்த இடத்தை அளந்து கொண்டிருந்தான்… மெல்லிய       நடையால். அவனிற்கு பேசி புரியவைக்கும் நிலையில் அவள்      இருப்பதாக தெரியவில்லை… எனவே அவளுடன் இருந்தான்      அவ்வளவே…

இப்போது வந்த கீர்த்தி “என்ன கன்யா… ஏன் என்னமோ போல         இருக்க” என்றாள். உற்சாக குரல்தான்.

கன்யா கண்கள் சிவக்க திரும்பினாள்… அழுது கண்ணீர் எல்லாம் விடவில்லை, ஆனால் மூக்கு நுனி சிவந்திருந்தது… அப்படியே         திரும்ப, கீர்த்தியின் தோற்றம் அதிர்ச்சியை காட்டியது அவளை        பார்த்து இப்போது கன்யா “ஒண்ணுமில்ல… புகுந்த வீட்டுக்கு     போறேன்ல்ல… அதான் “ என்றாள் இடக்காக.

Advertisement

கார்த்தி அவளின் தோற்றத்தை பார்த்து அதிர்ந்தாலும்.. “அத            அப்படி சொல்ல கூடாது… என் புருஷன் ஊர்லருந்து        வந்துட்டான்ன்ன்…. அப்படி சொல்லனும்.. கத்தி சொல்லணும்..”        என்றான் விளையாட்டாய்..

Advertisement

கீர்த்தி சின்னதாக சிரிக்க, கன்யாவிற்கு இப்போது சிரிப்புதான்           வந்தது, ஆனாலும் கார்த்தியை முறைத்தாள்… கார்த்தி “ஏய்…            என்ன உன் நாத்தனார பார்த்து சிரிக்கிற… கப்சிப்ன்னு இருக்கணும்      கன்யா கோவக்காரி… அப்புறம் ஏதாவது சாபம் தந்துடுவா” என்றான் கீர்த்தியை பார்த்து சிரியாமல்.

கன்யா “போடா… அட்ட காமெடி “ என்றாள் கொஞ்சம் இயல்பாகி..

கீர்த்தி “சரி விளையாட்டை விடுங்க… கன்யா நாளைக்கு ஷாப்பிங் போலாமா… உனக்கு தேவையானது எல்லாம் வாங்கலாம்…          கொஞ்சம் டிரஸ், மேக்கப்திங்க்ஸ்… எல்லாம்  வாங்கலாம்”           என்றாள்.

Advertisement

கன்யா “எதுக்கு கீர்த்தி… உங்க கல்யாணத்துக்கு வாங்கியாச்சு         போதும் பார்த்துக்கலாம்” என்றாள் ஏதோ சலிப்பு வார்த்தையில்,      முகத்தில்.

கீர்த்திக்கு அந்த த்வனியை கேட்டதும் வேறு பேச தோன்றவில்லை…   எனவே அமைதியாகிவிட்டாள். திரும்பவும் திரும்பி நின்று வெறிக்க தொடங்கினாள் கன்யா.

கார்த்திக்கு இப்போது எப்படி அவளை பேசவைப்பது என        புரியவில்லை… என்ன சொன்னாலும் இடக்காக ஒரு பதில் வைத்திருக்கிறாள்… எனவே அமைதியாகினர் இவருவரும்.

கன்யாவிற்கு அவனின் எரிச்சல் முகம் அடிகடி தோன்ற…            அவளுள் இனம்புரியாத பயம்.. இனி இப்படியேதான் இருக்குமோ          என் வாழ்க்கை. முன்பு தூரத்தில் இருந்தவன், இப்போது அருகில்      இருக்க போகிறான், மற்றபடி ஒன்றும் பெரிதாக வேறுபாடு            இல்லை. என அவளை பயமுறுத்த தொடங்கியது அவனின்         நினைவு…

இப்படியே வெகு நேரம் கன்யா நிற்க… கார்த்தியும் கீர்த்தியும்          “போதும் கன்யா யோசிச்சது… நல்லாதாவே நினை…” என்றாள்          கீர்த்தி

கார்த்தி அருகில் வந்து “அவளைதோளோடு அனைத்து… நீ ஏன்         கவலை படர… உன்னை புரிஞ்சிக்கலைன்னா… வேறு யாரையும்       அவரால புரிஞ்சிக்க முடியாது… என்னிக்கும் காத்திருப்பு வீண்      போகாதுடா” என்றான் சின்ன குரலில்… நம்பிக்கையான      வார்த்தைகாளால்..

வார்த்தைகள் வாழ்க்கைக்கு வலு சேர்ப்பவை… அதுவும்        நம்பிக்கையான மொழி… இன்னும் பலம்தரும்.. கன்யாவும்               அந்த வார்த்தையை ஏற்பதாக மேலும் கீழும் தலையசைத்து         நின்றாள். அதன்பிறகுதான் இறங்கி வந்தனர் அனைவரும்…

மறுநாள் காலை ஆபீஸ்க்கு கிளம்பிவிட்டாள் கன்யா, அன்னையும் அண்ணியும் சொல்லி கேட்கவில்லை… ஆனால், ஆபீஸ் சென்று       வேலை என்னோ ஓடவில்லை. அதெல்லாம் முதல் ஒருமணி       நேரம்தான் அதன்பிறகு… சுறுசுறுப்பானது இவளிற்கு.

இன்று காலையிலிருந்தே யெஸ்வந்த் கண்ணில்படவில்லை. முன்      மாலை பொழுதில்தான் வந்தான் டீ டைம்க்கு… எப்போது கன்யா       எழுந்து செல்லமாட்டாள் அந்த நேரத்திற்கு… இன்று யெஸ்வந்த்         வந்து “ஹாய் … பிஸியா” என்றான்.

கன்யாவின் அண்ணன் திருமணத்திற்கு செல்லவில்லை.. அதன்பிறகு இப்போதுதான் இவளும் வருகிறாள்… எனவே விசாரிக்கலாம் என   கேட்டான்…

கன்யா “ல்ல… வரேன்” என்றவள்… அங்கிருக்கும் சின்ன… லஞ்ச்     ஹாலுக்கு சென்றனர்.

யெஸ்வந்த் “ம்… சொல்லு மேரேஜ் எப்படி போச்சு… கார்த்திக்கு          போன் செய்யணும்னு நினைச்சேன்… ஊருக்கு வந்தாச்சா… ட்ரிப் போயிருக்காங்களா… இந்த சண்டே வரேன் வீட்டுக்கு..”              என்றான்… ஹிந்தி, இங்கிலீஷ், தமிஷ் என மூன்று மொழியும்     கலந்துகட்டி…

கன்யா ஏதும் சொல்லாமல் வெறுமையாக அமர்ந்திருந்தாள்…             தன் அண்ணன் மேரேஜ் இப்போது அவளிற்கு நினைவே வரவில்லை. அவளின் அமைதி பார்த்து யெஸ்வந்த் “என்னச்சு…” என்றான்.

இப்போதும் ஏதும் சொல்லவில்லை அவள்…  திரும்பவும் யெஸ்வந்த “என்னாச்சு …” என்றான்.

கன்யா பெருமூச்சுடுக்க… புரிந்தது போல டக்கென “என்ன ஹுப்பி வந்தாச்சா…. ஹேய்… வெல்கம் டு கன்யா ஹுப்பி” என்றான் விரிந்த சிரிப்புடன்.

கன்யா இன்னும் தெளியாமல் இருக்க.. “என்னாச்சு… இன்னும்      பேசலையா” என்றான்.

கன்யா கண்கலங்க… நிமிர முடியாமல் தலையாட்ட… நண்பன்           “விடு… கனி.. ஜெட்லர்க்… வொர்க் லோட்… மீட்டிங் இப்படி ஏதாவது    இருக்கும், இன்னும் கொஞ்ச நாள்ள.. சரியாகிடும்” என்றான்.

கன்யா புரிகிறது எனும் விதமாக தலையாட்ட.. அவனே தொடர்ந்து “நீங்கதானே இவர்தான் வேணும்னு ஐந்து வருடம் டவம் இருந்தீங்க…” என்றான் சிரித்தபடி. அவனின் தமிழ் அப்படி..

கன்யா மேசையில் வைத்திருந்த தனது இடது கையை காற்றில்         ‘விடு..’ என்பதாக அசைத்தபடி “நாளைக்கு அங்க போறேன்… இனி அங்கிருந்துதான் வரணும்… எ.. எனக்கு.. அன்ஈசியா இருக்கு… ச்சு”     என்றாள்.

“இதுதான் மாமியார் வீட்டுக்கு போறதா… கவல படாத, களியெல்லாம் போடமாட்டாங்க…” என்றான் இன்னும் சிரித்தபடி.

கன்யா லேசாக சிரித்தாள்… அவனுக்கு என்னவோபோல் இருந்தது    “என்னப்பா… ஒய்… இவ்வளோ பீல்… வா கொஞ்சமா வெளிய        போயிட்டு வரலாம்… சம் ச்சேஞ்சுக்காக…” என்றான்.

கன்யா “இன்னொரு நாள் போலாம் யெஸ்வந்த்.. நான், எனக்கு         இப்போ வேணாமே… அப்புறம் ஒருநாள் ப்ளீஸ்” என்றாள்..

“ஹேய்… ஓகே ஓகே… விடு… இன்னிக்கு என்ன ப்பெர்ப்யூம்…       ஜாஸ்மின்!…” என்றான் கேலியாக..

கன்யா “ஹேய் இவ்வளோ நேரம் இருக்கா… ஸ்மெல் வருதா..”       என்றாள், மலர்ந்த முகமாக.

“தலையவே வலிக்குது… அந்த ஸ்மெல்… ப்பா… “ என்றான்  எப்போதும் போல…

“அப்பாடா… அப்போ இதுதான் சதாக்கு குடுக்க போறேன்” என்றாள்.

நண்பன் அழகாக சிரித்தான்… “அவரே இப்போதான் வந்திருக்கார்… பார்த்துக்கோ” என்றான் வில்லங்கமாக…

கன்யா “உன்ன மேனேஜர் தேடுறாராம்” என்றாள் அவளை முறைத்தபடி

“தப்பிச்சு..” என்றான்.. எழுந்து சென்றும்விட்டான்.

ஒரு சின்ன டைவர்ஷன் கன்யாவிற்கு… இதுவரை இருந்த             சலிப்பு இல்லாமல் நேரம் சென்றது, வீடு வந்தாள்.

கீர்த்தி அவளின் கல்யாண புடவை, ப்ளௌஸ்… அவளிடம்            கொடுத்து, அளவு பார்க்க செய்து, ஆல்ட்டர் செய்து கொடுத்தாள்…       நாளை காலையில் அவள் செய்ய வேண்டியது எல்லாம்      சொல்லப்பட்டது… முக்கியமாக முகம் தூக்க, கூடாது என            மைதிலி மிரட்டி இருந்தார்.

கன்யா “முதல்ல.. அவர்கிட்ட சொல்லுங்க யாராவது” என முனு     முனுத்து கொண்டாள்..

மறுநாளும் அழகாதான் விடிந்தது எல்லோருக்கும்… மைதிலி,        பம்பரமாக சுற்றினார்… கார்த்தியின் திருமணத்தின் போது கூட       இவ்வளவு ஆரபாட்டம் இல்லை… இப்போது எல்லோரையும்           விரட்டிக் கொண்டிருந்தார்.

“கன்யா… ஆச்சா… நேரமாச்சு” என நான்காவது முறையாக           அவளின் பாத்ரூம் அருகே சென்று சொல்லிவிட்டு வந்தார்..

ஏனோ கன்யாவிற்கு இன்னும் காதில் விழவில்லை போல…             பத்து நாள் குளிக்காதவள் போல் குளித்தாள்… கார்த்திதான் “போ         கீர்த்தி, கன்யாவ பாரு.. அம்மா டென்ஷன் ஆகறாங்க” என்றான்.

கீர்த்தி சென்று அவளிற்கு எல்லாம் தயார் செய்தாள்.. அழகான       பட்ரோஸ் நிற… அவளின் கல்யாண பட்டு… உடல் முழுவதும்           வைர ஊசிகாளாக ஜரி ஓட… அது ஒரு நிறத்தை புடவைக்கு தர…          இரு வண்ணங்களில் மின்னியது புடவை.. அதற்கு தக்க…            மல்லிகை இரட்டை சரமாக அவளின் தோளில் விழ, ஒரே               ஒரு குடை ஜிமிக்கி… நீண்ட ஹாரம்.. கண்மை, உதட்டில்..             புடவை நிற லிப்ஸ்டிக்… கை நிறைய ஒரு கண்ணாடி              வளையல், ஒரு தங்க வளையல் என அடுக்கி இருக்க,            மொத்தமாக ஜொலித்தாள் கன்யா…

சரியாக அதிகாலை நான்கரை மணிக்கு.. வந்து விட்டனர்… சதா வீட்டிலிருந்து. அவர்கள் ஒரு, பத்து பேர் பெண்ணழைத்து       போவதற்காக…

எல்லோருக்கும் காபி கொடுக்கப்பட்டது. வெங்கட் “ரெடியாம்மா… கிளம்பலாம்… மணியாச்சு” சென்றார்.

கன்யா வெளியே வர, கல்யாணி சிறு கண்ணீரை துடைத்தபடி          “வாடா நம்ம வீட்டுக்கு போலாம்…” என தன் இரு கைகளாலும்        அவளின் கைகளை பற்றி கூட்டி சென்றார் காருக்கு.

இப்போது எல்லோரும் சதாவின் வீட்டிற்கு சென்றனர். சதா            வேட்டி சட்டையில்… இருந்தான். அவளின் மெல்லிய வெளுத்த      நிறத்திற்கு அழகாக பொருந்தி இருந்தது அந்த பட்டு வேட்டி…

இப்போது சதாவை வெளியே அழைத்து இருவரையும் சேர்தது..           நிற்க வைத்து, ஆரத்தி எடுத்து.. பூஜை அறை கூட்டி சென்றனர்.

அங்கு… அன்று கல்யாணத்திற்கு செய்த மாங்கல்யம் இருந்தது…      இப்போது அதற்கு இன்னும் அழகு சேர்க்கும் வகையில்… நிறைய சேர்த்திருந்தார் கல்யாணி, கூடவே தன் மகனின் சம்பாத்தியத்தில்…       பத்து பவுன் சங்கிலியில் கோர்த்திருந்தார்… அவர்களின் குலதெய்வ    படத்தின் முன் வைத்திருந்தனர்…

கல்யாணி “சதா… மருமக கழுத்தில் கூட்டுப்பா…” என்றார்      மாங்கல்யத்தை எடுத்து அவன் கையில் கொடுத்தப்படி..

எல்லோரும் வெளியே நின்றனர்… பூஜை அரை சிறியது. எனவே      அவர்கள் குடும்பம் மைதிலி கார்த்தி இவர்கள்தான் முன் நின்றனர்.

சதாக்கு இந்த ஏற்பாடெல்லாம்… பீதியை தர.. எத்தனை உயிரை காப்பாற்றியவன் கைகள் லேசாக நடுங்க… கன்யாவின் கழுத்தில்  மாங்கல்யம் கூட்டினான்.

ஆனால் மனதில் ஏதோ அழுத்தம் அவனிற்கு.. முன் ஜென்ம          நினைவு போல்… அவளிற்கு முதல் முறை தாலி கட்டியது             அவன் நினைவில் வரவே செய்தது.

எல்லோரும் அட்சதை தூவ… நிமிர்ந்தான்… தன்னவளை திரும்பி    பார்த்தான்… சர்வலங்காரத்துடன் தன்னுடன் நிற்பவளை   யோசனையுடனேயே பார்த்தான்.

ஆனால் கன்யாவிற்கு ஒரு திருப்தி… ஏதோ விடுபட்டது நிரம்பியது      போல் எண்ணம். அவன் அருகாமையில், முழுமையாக அவனையே    மனதில் நினைத்தாள்.

இப்போது பெரியவர்கள் குங்குமம் வைக்க சொல்ல… கன்யாவின்       நெற்றி தெரியவேயில்லை அவனிற்கு.. அவ்வளவு குனிந்திருந்தாள்..

இப்போது சதாக்கு சின்ன பெருமை வந்தது… “க்கும்” என்றான்.      எல்லோரும் “கன்யா… சதாவ பாரு…” என்க. எல்லாத்தையும்        மறந்தவள் நிமிர்ந்தாள். கண்கள் அவனை பார்ப்பதை தவிர்த்து          இறுக மூடியிருந்தது.

சதாக்கு அதனை பார்க்க… ஏதோ போல் ஆனது… அமைதியாக       குங்குமம் வைத்துவிட்டான். அவனின் மென்மையான தீண்டல்,        இவளுள் ஜில் என இறங்கியது… ஆனால் கண்கள் திறக்கவில்லை…

வெளியே வந்தனர் இருவரும்.

இருவரும் அமரவைக்கப்ட்டு.. பால் பழம் குடுத்தனர்…                அதனை தொடர்ந்து சொந்தங்கள் ஏதோ சொல்ல… கன்யா “மாமா      எனக்கு டைம் ஆச்சு மாமா… பேங்க் போகணும்… ஈவ்னிங்     பார்த்துக்கலாமே” என்றாள்.

வெங்கட் “சரிம்மா, சரி… இனி இங்கதானே இருக்க போற… நீ       கிளம்பும்மா” என்றார்.

கூடவே சதாவை பார்த்து “நீ இருக்கும் போது அவள, நீயே            ட்ரோப் பண்ணுப்பா..” என்றார். சதா மையமாக தலையசைத்தான்.

ஷண்முகம் “அண்ணி ஒரு போட்டோ “ என்றான்.

இருவரையும் சேர்ந்து நிற்க வைத்து எடுத்தான், அதன்பின் “கீர்த்தி      நானு” என்றாள். கார்த்தியும் கீர்த்தியும், அப்புறம் குடும்பமே           எடுத்துக் கொண்டது.

எல்லாம் முடிந்து… கன்யா புடவை மாற்றவென அவர்களுக்கான      அறைக்கு அனுப்பி வைக்கபட்டாள். மேலே ஒரே ஒரு அறை          மட்டும் அனாதையாக இருந்தது, அப்படிதான் தெரிந்தது            இவளிற்கு… மற்றது எல்லாம் மொட்டைமாடியாக இருந்தது.

மாடியேறி சின்ன வராண்ட.. அதன் பிறகு இவர்களின் அறை…     பெரிதாகவே இருந்தது. ஆனால் ஏதோ லைப்ரரி போல்             இருந்தது.. அதது அதது இடத்தில்… மிகவும் சுத்தமாக…               இருந்தது. கதவை ஒட்டினாற்போன்று தொடங்கிய புக் ரேக்…             அந்த அறையின் எல் வடிவில் சென்றுதான் முடிந்தது.

அதன் நடுவில் டேபிள் அதன் மேல் லாப்டாப்.. ஸ்பீக்கர்… மைக்…          வெப் கேமரா… அதை தவிர ஒரே ஒரு ஹைடராளிக் ஷோபா..            ஒரு புது கட்டில் அவ்வளவுதான்…

இப்போது கன்யாவிற்கு தன்னுடைய அறை நினைவில்              வந்தது… ‘பரவாயில்ல, இதென்ன ம்மியுசியமா… அப்படியே அழகு      பார்க்க… யூஸ் பண்ண தெரியாதவன்… இன்னும் ரெண்டே நாள்…           இது எனது கண்ரோல்லில்” என எண்ணியபடி உடையை மாற்ற தொடங்கினாள்…

வேண்டுமென்றே தனது புடவையை அப்படி இரண்டாக               மடிந்தது, கட்டிலின் விளிம்பில் காய போட்டுவிட்டு              மற்றவற்றை மடித்து வைத்தாள் தனது… பாகில்.

இப்போது கதவை தட்டும் சத்தம் கேட்டது கீர்த்துதான் “அண்ணி,        மதியம் வந்துடுவீங்களா… பெரியம்மா கேட்க சொன்னாங்க..”          என்றாள்

கன்யா “என்ன அண்ணி… உங்களுக்கு தெரியாதா” என்றாள் இவளும் வேண்டுமென்றே, கீர்த்தி அண்ணி என சொன்னதால், கன்யாவும்   சொன்னாள்.

கீர்த்தி “ச்சு… போங்கண்ணி, நாங்களும் கிளம்பிடுவோம்…” என்றாள்.

கன்யா “ என்னமோ பண்ணுங்க” என்றாள் சலிப்பாக.

கீர்த்தி கிளம்பியிருக்க. ஒரு ஐந்து நிமிடம் சென்று கதவு       திறக்கப்பட்டது… தட்டவில்லை.. சதாதான், அவனிற்கு இங்கு           கன்யா, இருப்பாள் என தெரியவில்லை மேலே வந்துவிட்டான்.

கன்யா, புடவையை கட்டிலில் பார்த்தவன்.. பின்புதான்              உணர்ந்து கன்யாவும் இங்கிருப்பதை. அங்கிருந்த டேபிள்              அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.

கன்யா ரெஸ்ட் ரூமிலிருந்து வெளியே வர.. இவனை கவனிக்க       வில்லை “பார்த்த முதல்நாளே… உன்னை பார்த்த முதல்நாளே..”             என பாட்டை ஹம் செய்ய தொடங்கியபடியே… தனது பேக்கிலிருந்து       டவல் எடுத்து துடைத்தாள்.

சதா “க்கும்..” என கனைத்தான். கண்டுகொள்ளவில்லை அவள்.       தன்போல், பூவெல்லாம் எடுத்துவிட்டு தலைவாரி… மற்ற அணிகலன் எல்லாம் கழற்றிவிட்டு… இப்போது அவன் போட்ட, தாலியில் வந்து          நின்றது அவளது கைகள். சதா அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்… ‘என்ன செய்கிறாள் என பார்க்கலாம்’ என நினைத்து.

கன்யா ஒரு நொடிக்கும் குறைவான நேரம் யோசித்தவள்… பின்பு      அதனை அசால்ட்டாக கழற்றி… அங்கிருந்த ஒரே டேபிள்… சதா   அமர்ந்திருந்த டேபிள் மேல் வைத்தாள், அது சதாவை பார்த்து கண்சிமிட்டியது.

இப்போது மீண்டும் தனது நகைகளை பாக்ஸ்சில் போட்டு, பாகில்    வைத்தாள். சதாவும் ஒன்றும் சொல்லவில்லை.. அவளையே        இப்போது ஆழமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

கன்யா அமைதியாக கிளம்ப.. சதா “அந்த சரீய… என்ன இப்படியே        விட்டு போற, எடுத்து வைத்து போ… எனக்கு வீடியோ கால் வரும்…      இப்படி இருந்தா எப்படி” என்றான் மெலிதான குரலில்… அழுத்தமாக சொன்னான்.

கன்யா “இது ரூம்தான் ஆபிஸ் இல்ல… அது பட்டுப்புடவைய           வெளிய போடா முடியாது. நீங்க வேண்ணா.. வெளியே போய்        பேசுங்க… எனக்கு மணியாச்சு… “ என்றாள் கைகளில் இருந்த       வளையலை கழட்டியபடி…

இப்போது சதா “இது என்னோட ரூம்.. என் பெர்மிஷன் இல்லாமல்..      இப்படி எல்லாம் பண்ணாத… தூக்கி போட்டுடுவேன்” என்றான்        கத்தமால், காரமாக.

கன்யா “ம்… நானே உங்க பெர்மிஷன் இல்லாமா வந்தவதான்…            சோ எதையும் தூக்கி போடா முடியாது… எதையும்” என்றாள் சற்று     திமிராக.

சதா.. ஏதும் சொல்லாமல்.. கதவின் அருகில் சென்று அதன் மேல்    சாய்ந்தபடி நின்று கொண்டான்.. இப்போது கன்யா கிளம்ப… தன்     கண்களால் புடவையை காட்டினான்..

கன்யா “என்ன..” என்றாள் சத்தம் குறைந்த குரலில்.

சதா வாயே திறக்காமல் மீண்டும் கண்களால் புடவையை காட்ட…     இரண்டு நிமிடம் நின்றாள், சதாவும் நின்றான்… கன்யா புடவையை    எடுத்து… நான்காக மடித்து… கட்டிலில் வைக்கவும், ஒன்றும்      சொல்லாமல் நகர்ந்தான்.

கன்யா வெளியே செல்ல போக… சதா சின்ன குரலில் “தேங்க்ஸ்        பெப்பி தட்ஸ் குட்” என்றான் சின்ன சிரிப்புடன். கன்யா காதிலேயே வாங்காமல் சென்றாள் அவனை கடந்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!