Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Un Vizhigalin Mozhi Ennavo

Un Vizhigalin Mozhi Ennavo 21

ஜெய் ஸ்ரீ ராம் 

 

EPI-21

 



Advertisement

மது சொன்னதை கேட்டதும் சக்தி குழப்பத்துடன் அமர்ந்துவிட்டான். சட்டென மனத்தில் ஏதோ எண்ணம் தோன்ற திரும்பி கடிகாரத்தை பார்க்க;மணி பதினொன்று. மனதில் ஏமாற்றம் சூழ்ந்த போதும் தனது மொபைலை எடுத்து யாருக்கோ அழைப்பு விட்டுத்தான் .

மறுபக்கம் அடுத்த நொடி அழைப்பு  ஏற்கப்பட்ட தோடுஹப்பா ஒரு வழியா கூப்ட்டுட்டீங்க  சார்.என்ன பண்றதுனு யோசிச்சிட்டே இருந்தேன்என்று அசுவாசப்பட்டார் பிரவீன்.

ஏன்….. பிரவீன் நீங்க எங்க இருக்கீங்க

Advertisement

நீங்க எங்க  சொன்னிங்களோ அங்கதான் சார். என் பொண்டாட்டிக்கு தெரிஞ்சா என்ன பின்னி எடுத்துருவா,” 

Advertisement

ரத்தினத்துடன்பேசி முடித்ததும்சக்தி பிரவீனை தொடர்பு கொண்டு நான் முக்கியமான விஷயமா வெளில இருக்கேன். கொஞ்சம் இவனுங்களை பாலோவ் பண்ண முடியுமா என்று கேட்டதோடு அந்த பாரின் முகவரியையும் அனுப்பி வைத்தா ன்.

அடுத்த பத்தாவது நீமிடத்தில் இருந்து  இப்போது வரை பிரவீன் பாரில் தான் இருக்கிறான். அவர்கள் இருவரும் இப்போதைக்கு வெளியில் செல்வதை போல் தெரியவில்லை 

ம்ம்ம்ம் சரி பிரவீன் ரொம்ப நல்லதா போச்சு.

Advertisement

இன்னும் ஒரு ஹெல்ப் பன்னிட்டு நீங்க  கிளம்புங்க.

சதிஸ் போன்கு ஓர் நோட்டிபிகேஷன் வரும் அதுக்கு மட்டும் எஸ் குடுத்துட்டு நீங்க கிளம்புங்க ,”

ஐயோ என்ன சார் நீங்க யதோ சாக்லட் வாங்கி சாப்பிடுன்னு  சொல்லுற மாதிரி ஈஸியா சொல்றிங்க ,அவன் ஒரு கருநாகம் அவன் கிட்ட போய் என்ன மாட்டிவிடுரிங்க, “

இதுவரைக்கும் அவன் கண்ணுல படமா இறுக்கவே நான் படாத பாடு படுட்டுஇருக்கேன்

சக்திஅப்டினா நான் வர வரைக்கும் அங்கேயே இருங்க நா வரதுக்கு ஒரு  அரைமணி நேரம் அப்புறம் நீங்க உங்க வீட்டுக்கு போறதுக்கு ஒரு அரை மணி நேரம் ஆகும்.

அதுனால நான் இப்போ கால் பண்ணி உங்க வைப் கிட்ட 

நீங்க பார்  இருகிங்க வர்ரதுக்கு லேட்டா ஆகும்னு  சொல்லிர்றேன்” .

 

[the_ad id=”6605″]

 

 

ஏன் சார் உங்களுக்கு நான் என்ன பாவம்  பண்ணேன்

என் பொண்டாட்டிக்கு இந்த சதிஷ் எவ்ளவோ பெட்டெர். நீங்க பத்திரமா வீட்லயே இருங்க  என்றவர்

அங்கு வேலை செய்யும் பையனுக்கு பணம் குடுத்து சதிஷ் மொபைலை எடுத்து வர சொல்லி 

சக்தி சொன்ன வேலையை செய்து விட்டு மொபைலை திரும்ப அந்த பையனிடம் அளித்து 

சதீஷிடம் சேர்த்துவிட சொன்னார் .

பின் சக்தியிடம் சொல்லிவிட்டு இன்ணைக்கு வீட்ல என்ன மண்டகப்படி காத்துட்டு இருக்கோ ,ஆண்டவா என்ன காப்பாத்து என்று வேண்டியவாறு வீட்டை நோக்கி சென்றார் .

பிரவீன் மெசேஜ் ஆக்சப்ட்  பன்னதும் சதிஷ் லேப்டாப்பில்  இருந்த அணைத்து விபரங்களும்  கிடைத்து விட்டது .

மது தன் வலக்கையின்  கட்டைவிரலை உயர்த்தி காட்டி முடித்தது என்பது போல் தலை அசைக்க,தேங்க்ஸ் பேபி என்று சக்தி அவளை அணைத்து  கொண்டான் .

 

அடுத்தநொடி விளக்கெண்ணெய் குடித்தது போல் முகத்தை சுளித்தவள், பேபி யன்றவனை விசித்திரமாய் பார்த்துவிட்டு மறக்காமல் 

லட்டடையும் எடுத்துக்கொண்டு அறைக்குள் இருந்து வெளியேறினாள் .

வெளியேறினால் என்பதை விட மூவராலும் காவியாவையும் சேர்த்துக்கொண்டு வெளியேற்றப்பட்டால் .

பிசாசுங்க வேலை முடிஞ்சதும் கழட்டி விட்ருச்சுங்க.என்று உள்ளுக்குள் பொறுமியவளை,”ரொமப தேங்க்ஸ் அக்கா என்று காவியா அனைத்து கொண்டாள்.

திடீர்னு என் புருஷன்பேபினு சொன்ன சாக்ல இருந்தே நான் இன்னும் வெளிலவரல 

அதுக்குள்ளஇவ வேற புதுசா ஷாக் குடுக்குறாளே!!

என்னடி  மது உனக்கு வந்த சோதனை என்று  உள்ளுக்குள்  புலம்பியவள் வெளியில் 

காவியாவை  பார்த்து யென்று  இளித்துவைத்தாள் .

காவியா சொன்னது போல்  நெறய பெண்களின் வீடியோ இருந்தது . ப்ரியா மற்றும் இன்னும்  மோசமான சில வீடியோகளை  டெலிட் செய்து விட்டு .நாளை என்ன என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்டு கீழே  சென்றனர்.

ஏற்கனேவே சதிஷ் மிரட்டியதை  காவியா ரெகார்ட்  செய்து வைத்து இருந்தாள் .

மது உட்பட அனைவரும்  சாப்பிட்டுவிட்டு  தூங்க ஆய்தமாகி கொண்டு இருந்தனர்.இவர்கள் மூவருக்கும் காவேரி பரிமாற சக்தி நீ சாப்பிட்டியா என்பது போல் மதுவை பார்த்தான்

அவன் விழிகளின் மொழியை புரிந்தவள்.நேத்து பாதி சாப்பாட்டுல விட்டுட்டு போயிட்டு இப்போ வந்து கேக்குறான் என்று நினைத்தவள் வெடுக்கென்று முகத்தை திருப்பி கொண்டாள்

அவளின் செயலில் சிரிப்பு தான் வந்தது .இவ்வளவு நேரம் கிரிமினல் வேலையை பாத்துட்டு  ஒன்னும் தெரியாதவ  மாதிரி உட்காந்து இருக்க பாரு ,சாப்டலானு தெரிலையே !!!!

வீட்டில் அனைவரும் இறுக்க  அதுவும் இன்னும் திருமணம் முடியாத ஜோடிகளும் இருக்க,

இப்போது அவளுக்கு ஊட்டுவது சாத்தியப்பாடாது என்று அமைதியாக சாப்பிட அமர்ந்து விட்டான் .

இருந்தும் மனது கேளாமல் அவளையே திரும்பி திரும்பி பார்க்க காவேரி  சிரித்துக்கொண்டேமது சாப்டாப்பாஎன்றார் .

மதுவோமவனே நேத்து தான் தப்பிச்ச, இன்ணைக்கு ரூம்க்கு வா உனக்கு இருக்கு என்று உள்ளுக்குள் கருவிக்கொண்டு இருக்க. காவியா சென்று  காவேரியோடு உணவு பரிமாற  ஆரம்பித்தாள் .

இன்னும் கல்யாணம் முடியாத சின்ன புள்ள எப்டி அழகா,நாசுக்கா வேலை செய்து   என்று கங்காவிடம் புகழ்ந்த பரிமளா திரும்பி தன் மகளை பார்க்க, சோபாவில் இரண்டு மாமாவிற்கும் நடுவில் அமர்ந்து கொண்டு

 மொபைலில் வீடியோ கேம் விளையாடிக்கொண்டே அவ்வப்போது நிமிர்ந்து கணவனையும் 

முறைத்து கொண்டிருந்தாள்.

அவளை பின்பற்றி  யாழினியும்  வீடியோ கேம் விளையாடிக்கொண்டு இருந்தது. “அடியே புருசனுக்கு சாப்பாடு போடாம உனக்கு என்னடி கேம்னுதலையில் கொட்ட வேண்டும் .என்று ஆத்திரம் கிளம்பியது .  

 ஏற்கனவே ஒரு முறை கொட்டி பட்டது போதாது யென்று அறிவு எச்சரிக்கை செய்ய, அமைதியாக  சென்று மகனிடம் அமர்ந்து கொண்டார் .

 

[the_ad id=”6605″]

 

 

என்ன பா  தமிழ தனியா விட்டுட்டு தம்பியும்,புருசனும் இங்க வந்துட்டீங்க,ஏதோ  முக்கியமான வேலையா தான் வந்து இருப்பிங்கஇருந்தாலும் புள்ள அவ்ளோ பெரிய வீட்ல தனியா எப்டி இருக்கும் .

அர்ஜுன்ஆமா அம்மா ரெண்டு பேருக்கும் முக்கியமான வேலை அதான் வந்தோம்,

ழினி  நைட் டூட்டி  போயிருக்கமா ,அதுனால ஒன்னும் பிரச்சனை இல்லை.நாளைக்கு வேலை முடிஞ்சிறும்   நம்ம எல்லாரும் சேர்ந்து கெளம்பிடலாம் .”

மகன்  சொல்ல கூடிய வேலை என்றால் இந்நேரம் சொல்லி இருப்பான்.

இது யதோ அவன் வேலை சம்மந்தமானது  போல என நினைத்தவர்.”மமம்ம்ம்ம்    சரிப்பா நீ வேணும்னா  பொறுமையா வேலை முடிஞ்சதும் வா நானும் யாழினியும் வேணும் னா  போய் தமிழ் கூட இருக்கோம்.”

மேக்ஸிமும் நாளைக்கு முடிஞ்சிரும் இல்லைனா நாளைக்கு  பார்த்துட்டு சொல்றேன் நீங்க கிளம்புங்க

ம்ம்ம் சரி பா நான்  தூங்க போறேன்.மதுவை முறைத்து விட்டு எப்போ பாரு கையில  போன் வச்சிக்கிடே இரு.யாழினி இடம்  இருந்து  மொபைலை பிடுங்கியவர் .அவளை அழைத்து கொண்டு தூங்க சென்றார் .

 இவர்கள் சாப்பிட்டு முடித்ததும் ,கங்கா ,காவேரி இருவரும் சமயலறையை ஒதுங்க வைத்துவிட்டு ,கங்கா தங்கள் வீட்டிற்கு  செல்ல  வந்தவர்மது தூங்க போடா ,காவியா நீயும் போய் தூங்கு நாளைக்கு காலேஜ் போகணும்ல“, என்று சந்தோசமாக சொன்னார்

சில நாட்களாய் மகனை பற்றி இருந்த கவலை காவியா ,மனோவின் ரகசிய பார்வை மாற்றங்களைக் கண்டதும் சென்று விட்டது .

 

மதும்ம் சரிங்க அத்தை என்றவள் .”சக்தியை பார்த்து ரூம்க்கு வா உனக்கு இருக்கு என்று உதடசைத்து விட்டு செல்ல ,”

ஸ்ரீ  நீ  காவியா கூட படுத்துக்கோ ,புது இடம் பயப்பட போறா ,நாங்க மூனு  பேரும்  சித்தப்பா வீட்ல படுக்க போறோம்“. என்று மர்ம புன்னகையோடு அவளை ஏறிட்டான் .

ம்ம் ம்ம் சரிஎன்றவள்.என்கிட்ட  மாட்டாமையா போய்டுவ அப்போ இருக்கு உனக்கு.என்று தன் பார்வையால் மிரட்டல் விடுக்க ,

 

அவளருகில் நெருங்கி வந்தவன்சரிதான்  போடி முட்டக்கண்ணிநீயா நானான்னு  பத்துடலாம்  “என்று சவால் விட்டான்.

சரிதான் போடா ஐயனார் ….என்று அவளும் முணுமுணுத்தாள் .”

 

இங்கு மனோ  “ஒன்னும் பிரச்சனை இல்லை.அந்த வீடியோ டெலிட் பண்ணி ஆச்சு,நீ போய்  நிம்மயா தூங்குமிஸ் யு…….. “

ம்ம் சரி மாமா,நீங்களும்  நல்லா தூங்குங்க,குட்  நைட் “

ம்ம்ச்  குட் நைட் மட்டும் தானா …..வேற ஒன்னும் இல்லயா ……..

 அர்ஜுன்

டய் இங்க என்னடா நடக்குது நேத்து வரைக்கும் சாமியார் மாதிரி இருந்த ரெண்டு  பேரும்இப்படி அநியாயதுக்கு நடு வீட்லயே ரொமான்ஸ் படம்  ஓட்றிங்க,

நீங்க இப்படி இவளவு சீக்ரம் மாறிநா நாடு தாங்காதுடா ,”   என்று  இருவரையும் வீட்டை விட்டு வெளியில் இழுத்து கொண்டு வந்தான் .

மனோ 

ஏன் மாமா எவ்ளோ நாள் தான் நீ மட்டும்  ரொமேன்ஸ் பன்னுவ நாங்களாம் பண்ண கூடாதா,

உனக்கு தான் வயசாயிடுச்சு இல்ல…… ஒதுங்கி   யங்ஸ்டர்ஸ்க்கு  வழி  விடலாம் இல்ல,

என்ன இப்போ கூட்டிட்டு  வந்ததுக்கு தண்டனையா  உன்ன கட்டி பிடிச்சி தான் தூங்க  போறேன் .”

அர்ஜுன்எல்லாம் யன் தலை எழுத்து  குரங்கு  கூட எல்லாம் தூங்க வேண்டி இருக்கு,”

மனோமாமா எதுக்கும் பேசறதுக்கு முன்னாடி யோசிச்சு பேசணும் பின்னாடி சேதாரதுக்கு நான் பொறுப்பு இல்ல ,எங்களை குரங்குனா சொல்றிங்க ,”

டேய்  நீங்க குரங்கு மட்டும் இல்ல பேய்பிசாசுஅண்டங்காக்கா எல்லாம் தான் “.

அக்கா பாரு  நம்ம ரெண்டு பேரையும் எப்டி டேமேஜ்  பண்றாரு, “உங்க அக்கா எங்க இங்க வந்தா,என்று திரும்பி பார்க்க தமிழினி மனோவுடன் வீடியோ  காலில்  இருந்தாள் .

அடப்பாவி  நீ எல்லாம் ஒரு மச்சான் மனோவை முறைத்தவன்.”ஹாய்  பேபி  சாப்டயாடா ,எனக்கு கூப்டாம இந்த நாதாரிக்கு எதுக்கு கூப்பிட்ட , பாரு  முகம் கிலீயாரா தெரில ,”

உங்க போன எடுத்த்து தலையை சுத்தி  வெளில வீசுங்க , எத்தனை தடவை கூப்டுட்டு இருக்கேன் .நான் அண்டங்காக்காவா,உங்களுக்கு  என்ன பெரிய  ஹீரோன்னு நினைப்பா,”

ஆஹா யாழினிக்கு கேம் விளையாட மொபைல் குடுத்த நியாபகம் இப்போ தான் வந் தது.

ழினி  க்கு    தெரிந்தது  சாமி ஆடுவாள்.

அய்யோ பேபி கோவப்படாதா டா  யப்படி முச்சு வாங்குது  பாரு, உன்ன போய் நான்அப்படி சொல்வனா ,அந்த நாய் எதோ  காண்டுல இப்படி பேசுது“. என்று ஏதேதோ சமாதனம் பேச ,

ஏன் மாமா நான் உனக்கு ரொம்ப போர் அடிக்கிறேனா , தொல்லை பன்றேனா, நான் உனக்கு பொருத்தமான ஜோடி இல்லையா ,”

 ” ஏய் லூசு  பொண்டாட்டி,விளையாட்டுக்கு   பேசினா அதை எல்லாம் சீரியசா யடுத்துப்பியா ,பக்கத்துல இருத்துருந்தா நீ எனக்கு எவ்ளோ பொருத்தமான ஜோடின்னு காட்டி இருப்பேன்.நாளைக்கு வரைக்கும் வெயிட்  பண்ணு சரியா,”இன்னும் சிறிது நேரம்  பேசி சமாதானப்படுத்தி முடித்து போனை அணைத்தான் .

ஒரு  நாள் விட்டுட்டு வந்ததுக்கு  ரொம்ப தான் ரொமான்ஸ் பண்றீங்க,என்று மனோ நொடித்து கொள்ள,

உனக்கு என்னடா யன் பொண்டாட்டி  நான் பண்றேன்.என்றவன் மனதில்  தமிழினியின்  எண்ணமே !!

வெளியில் மருத்துவராக எவ்வளவு  தெளிவாக,உறுதியாக இருந்தாலும்  அர்ஜுன்     என்று வந்துவிட்டால் குழந்தையாக மாறிவிடுவாள்.

அவள்  யாழினியோடு  போட்டி போட்டு செய்யும்  எல்லா குறும்புகளும் ரசிக்க கூடியதாகவே   இருக்கும் .

மனோவின் வீடு பெரியதாக,நிறைய அறைகள் கொண்டு இருந்தாலும்  மூவரும் ஒரே அறையில்,

ஒரே கட்டிலில் நெருக்கி படுத்து இருந்தார்கள்மூவருக்கும் இந்த பழக்கம் சிறிய வயதில் இருந்தே  பழக்கமானது .

இரவு எவ்வளவு  நேரம்  கழித்துப்படுத்தாலும் மூவரும்  காலை விரைவிலேயே  குளித்து தயாராகி வெளியில் கிளம்பி விட்டனர்நேற்று அவர்கள் எடுத்த முடிவை செயலாற்ற எண்ணி ,

சுரேஷ்  குணமாகி வீ டுதிரும்பி விட்டான்.

இவர்களோடு பிரவீனையும் அழைத்து கொண்டு நேராக சென்றது தினகரனின்  மாமனாரிடம். அவரால் நம்ப முடியவில்லை.ஆனால்  கண் முன்னாடி ஆதாரம் இருக்கும் போது நம்பி தானே ஆக வேண்டும் .

சட்டப்படி  என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ எடுத்து விடுங்கள்.நான் ஜாமின்  எடுக்க  வரமாட்டேன்.

அவரோட  அப்பா காலத்துல இருந்து கட்டி காப்பாத்துன காலேஜ் எங்களுக்கு அது கோவில் மாதிரி . 

எங்களோட  உணர்வ மதிச்சு காலேஜ்  ஷேர்ஸ் பிரித்து குடுக்கக்கூடாது ப்ளீஸ்என்று முடித்து கொண்டார் .

ஏறக்குறைய  பதினைந்து பேர் இருந்த கான்பிரன்ஸ் ஹாலில்  சக்தி மட்டும் நிற்கவைக்கப்பட்டு இருந்தான்

அர்ஜுன் ,மனோ  இருவரையும் உள்ளே அனுமதிக்கவில்லை சதிஷ்,தினகரன்  இருவரும் நடுநாயகமாக அமர்ந்து இருந்தனர் .

 

[the_ad id=”6605″]

 

 

சுரேஷை அடித்ததின் விசாரனை  இன்று  சுரேசும் அங்கு தான் இருந்தான். விசாரணையை ஆரமித்தது கரஸ்பாண்டெண்ட் என்கிற முறையில் தினகரன் தான்.

அங்கு சக்தி ஒரு ஷேர்  ஹோல்டராக பார்க்கப்படாமல்  சாதாரண ஆசிரியராகவே பார்க்கப்பட்டான் .”  மிஸடர் .

சக்தி பிரியன்  நீங்க எதுக்காக சுரேசை அடிச்சீங்க,உங்களுக்குள்ள எதாவது ப்ராப்லம்ன்னா  மேனேஜ்மென்ட்ல இன்பார்ம்  பண்ணனும்.

அதை விட்டுட்டு நீங்க அவரை அடிக்கிறது தப்பு உங்கள பார்த்து ஸ்டுடென்ட்ஸ் தப்பு பண்ண ஆரம்பிச்சா,

நம்ம காலேஜ் நிலைமை என்ன ஆகும் .நீங்க அவங்களுக்கு  நல்ல உதாரணமா இல்லாம இப்படி தான்  இருப்பிங்களா, “என்று நிறுத்த ,

சக்தியை பேச விடாமல் தினகரன் விட்ட இடத்தில இருந்து சதிஷ் தொடர்ந்தான் அதுனால மேனேஜ்மென்ட்ல இருந்து உங்களை டிஸ்மிஸ் பண்றோம். உங்க வைப் பேருல இருக்க ஷேர்ஸ்க்கு ,ஆனா….. பணம் எல்லாம்  வாங்கிட்டு நீங்க கிளம்பலாம் .”

அங்கிருந்த  அனைவரும்  அதிர்ச்சியாய்  சதீஷை பார்த்தனர் .

அவர்….சக்தி  செஞ்சது தப்பு தான் அதுக்காக சஸ்பெண்ட் பண்ணலாம் ஆனா டிஸ்மிஸ் பண்ண வேண்டிய அவசியம்  இல்லை அதோடு ஷேர்ஸ் பிரித்து கொடுப்பது ஒன்னும் சாதாரண விஷயம் இல்லை .

ஆனால்  சதீஷை திருப்பி ஒரு வார்த்தை கேட்க முடியாது .

அமர்ந்து இருந்தனர் .அவன் மாமனை எதிர்த்து கொண்டு இந்த ஊரில் வேறு எந்த தொழிலும் பண்ண முடியாதே !!! சக்தியை அனைவரும் பாவமாக பார்த்து இருந்தனர் .

சுரேஷ் அனைவரையும் பார்த்து‘  என்ன அடிச்சதுக்கு தான இங்க விசாரணை என்னை அடிச்சது சக்தி சார் இல்லை .நானா தான் கீழே விழுந்துட்டேன் .

அவருக்கும் எனக்கும் கொஞ்சம் ஆகாது அதுனால பழிய அவர் மேல் போட்டேன் .என்ன எல்லோரும் மன்னிச்சி  கோங்க என்று கை எடுத்து கும்பிட்டான் .

சதீசும் ,தினகரனும் அவனை அதிர்ச்சியாக பார்க்க ,

சக்தியோ !! அங்கிருந்த  சூழல் நாற்காலியை இழுத்து அதில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தவன் .

தன் தாடையை தடவியவாறுஎன்ன சதிஷ்  அமெரிக்காவுல இருந்து வந்துருக்கான் .அவனுக்கு ஒன்னும் தெரியாது ஈஸியா வெளில அனுப்பிடலாம்னு  பார்த்திங்களாஎன்று சிரிப்போடு கேக்க அந்த சிரிப்பின் பின் சக்தியின் கோவம் மறைந்து இருந்தது .

சட்டென என்ன பேச என்று தெரியாமல்  சதிஷ் முழித்து கொண்டு இருக்க ,சதீஷை வாயடைக்க வைக்கும்  சக்திக்கு அங்கு  ஆதரவு கூடியது .

 

மொழி தொடரும்………….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!