Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Un Vizhigalin Mozhi Ennavo

Un Vizhigalin Mozhi Ennavo 28

ஜெய் ஸ்ரீ ராம்

 

EPI-28

 



Advertisement

தன்னை மறந்து உறங்கியவள்  விழிக்கும் வேளையில் இரவு உணவின் நேரம் கடந்து விட்டிருந்தது   அன்று ஞாயிறு என்பதால் சில பெண்கள் வீடு சென்றிருக்க  ஹாஸ்டல் ஒருவித அமைதியில் இருந்ததால் மதுவிற்கு  நேரம் தெரியாமல் உறங்கி விட்டிருந்தாள்

 

மதுவின் அறையிலும் மது மட்டுமே ஒருவாறு தன்னைத் தானே தேற்றிக்கொண்டு குளித்து உடை மாற்றி அவள் படுக்கையில் அமர்ந்து ஹெட்போன் உடன் ஏதோ பாடலை கேட்டவாறு கண்மூடி இருந்தாள்   பசி வயிற்றைக் கிள்ளியது நிச்சயம் இந்த நேரத்திற்கு மெஸில் எந்த உணவும் இருக்க வாய்ப்பில்லை

Advertisement

 

Advertisement

மனோ வாங்கிக் கொடுத்திருந்த சில நொறுக்குத்தீனிகளை எடுத்து உண்ண    ஆரம்பிக்க  வாடிய தோற்றத்துடன் வார இறுதியான ஞாயிறு அன்று கூட நாள் முழுவதும் வேலை செய்த களைப்பில் அறையினுள் நுழைந்தாள் வருணி

 

மது கண் விழித்து அவளை பார்க்க” கேம்ப் போயிட்டு வந்தேன் என்றவள்   குளித்துவிட்டு வந்து கையோடு வாங்கி வந்திருந்த உணவை மதுவிற்கு பகிர்ந்து கொடுத்து   மது சொல்லாமலே அவள் கையில் வைத்திருந்த நொறுக்குத் தீனியை வாங்கி  தன் உணவோடு சேர்த்து உண்ண ஆரம்பித்தாள்

Advertisement

 

இவ என்ன டிசைன் நான் கேட்காமல் என் பசி உணர்ந்து அவள் சாப்பாட்டையும் கொடுத்து என்கிட்ட கேட்காமல் என்னோட  ஸ்நாக்ஸ்யும் எடுத்து சாப்பிடறா என்று அவளை ஆ வென்று பார்த்திருந்தாள்

 

ஹாஸ்டல்  லைபில் இவை எல்லாம் சாதாரணம் என்று அவளுக்கு தெரிய வில்லை

 

“ஹே மது என்ன இப்படி உட்கார்ந்து இருக்க பிரியாணி ஆரிட போகுது சாப்பிடு  செம டேஸ்ட்  ” வருணி உணவில் கண்ணாய் இருக்க  மதுவிற்கும் பசி வயிற்றைக் கிள்ளியது   அமைதியாய் சாப்பிட ஆரம்பித்தாள்

 

வருணி உண்டு முடித்து போனை எடுத்து அவள் வீட்டினருடன் வளவளவென்று பேசி விட்டு  மதுவிடம்” குட் நைட்” என்றவள்   தன் எதிரில் இருந்த குட்டி கிருஷ்ணரின் படத்தை பார்த்து குட் நைட் கிருஷ்ணா என்று படுக்கையில் படுத்தவுடன் உறங்கியும் விட்டாள்

 

அவளின் உறக்கத்தை கண்ட மதுவிற்கு கடந்த ஆறு வருடத்தில் கண்ணை மூடியதும் உறங்கியது என்றால் அது சக்தி அவளுடன் இருந்த நாட்களில் மட்டுமே!! அவன் இல்லாத நாட்களில் எல்லாம் உறங்கா இரவு தான் அவளுக்கு

 

இந்த வருணிக்கு காதல் என்று எதுவும் இல்லை போல என்ற பெருமூச்சுவிட்டு இவளும் தங்கள் வீட்டினர் உடன் பேசிவிட்டு உறங்க முயற்சி செய்தால் முயற்சி மட்டுமே செய்தாள்

 

அவள் நினைத்ததை புரிந்து கொண்ட அந்த  குட்டி கிருஷ்ணனோ நீ என்ன கஷ்ட படுற வருங்காலத்துல இந்த வருணி  அவளை திரும்பி கூட பார்க்க மறுக்கும் ஒருவன் மேல் காதல் முத்தி தூக்கம்  வராமல் உன்ன விட பைத்தியமா சுத்த போறா  யென்று புன்னகை புரிந்து கொண்டிருந்தான்

 

வழக்கம்போல் அந்த ஞாயிறு அர்ஜுன்  தமிழினி இருவரும் இவளை காண வந்தனர்  வந்த உடனே திரும்புவதால் குழந்தைகளை அழைத்து வர வில்லை   வந்தவர்கள்அங்கிருந்த பார்க்கில் அமர்ந்து சக்தியைப் பற்றியோ  ஊருக்கு வா என்று அழைக்கவும் இல்லை   இவளின் கல்லூரி  ஹாஸ்டல் வாழ்க்கை பற்றியே பேசிக் கொண்டிருந்தனர்   இவர்கள் பேசிக் கொண்டிருக்க

 

சட்டென  பின்னிருந்து ஒரு கரம் தமிழினியின்   கண்களைப் பொத்தியது மதுவும் அர்ஜுனும் யார் என்று பார்க்க இவர்களைப் பார்த்து சொல்லாதீங்க  என்பது போல் கண் சிமிட்டினாள்   அந்த கரத்தை தடவிப் பார்த்த தமிழனி” வருணி கையை எடு”என்று புன்னகையோடு கூற

 

“ஹை அக்கா கண்டுபிடிச்சுட்டாங்க  பரவாயில்லையே” என்றவள்   தமிழினியின் கன்னத்தில் முத்தமிட்டு  “என்ன மாமா எப்படி இருக்கீங்க” என்று அர்ஜுன் பக்கத்தில் அமர்ந்தாள்

 

“யேய் வாலு நீ எப்படி இருக்க ” என்று கேட்க  மடை திறந்த வெள்ளம் போல் வெள்ளம் போல் உரையாட ஆரம்பித்தாள்   மது கேள்வியாய் தன் அண்ணியை பார்க்க நான் gynec முடிச்சுட்டு வேலூர்ல ட்ரைனிங் போயிருந்தப்போ UG படிச்சிட்டு இருந்தா

 

என்னோட உடன்பிறவா தங்கச்சி  நான் அங்க இருக்கிற வரைக்கும் தமிழ் அக்கா தமிழ் அக்கானு என் பின்னாடியே  சுத்திட்டு இருப்பா உங்க அண்ணாக்கு அவளை நல்லா தெரியும்   ”

 

[the_ad id=”6605″]

 

 

 

என்றவள்” இது மதுஸ்ரீ என்னோட நாத்தனார் அண்ட் அண்ணி “என்று வருணிக்கும் அறிமுகப்படுத்த  அவளோ “எனக்கு தெரியும் கா என்னோட பிரண்டு தான் எங்க ரூம்ல தான் இருக்காங்க” என்க

 

மது தான் நான் எப்போ இவளுக்கு பிரண்ட் ஆனேன் என்று நினைத்தாலும் அவளின் வெள்ளை மனதை எண்ணி அவளும் புன்னகைத்தாள்

 

அர்ஜுன்” அப்புறம் வருணி பிஜி முடிச்சாச்சா  எப்போ கல்யாணம்”

 

“ம்ம் பீஜி தான் போயிட்டு இருக்கு மாமா  நீங்க ஓகே சொன்னா உடனே கல்யாணம் தான் “என்றாள்

 

“எனக்கும் ஓகேதான் உன் அக்காவை ஒரு வார்த்தை கேட்டு சொல்லு”

 

“அட என்ன போலீஸ்காரர் நீங்க அவங்க கிட்ட பர்மிஷன்  கேட்டுட்டு இருக்கீங்க  பேசாமல் வண்டியை மருதமலைக்கு விடுங்க  இன்னைக்கு முகூர்த்த நாள் தான் “என

 

“அடிங்க என் புருஷனை ஆடையப்போட பாக்குறியா” என்று தமிழினி வருணியை அடிக்கப் பாய

 

“ஐயோ !!!மாமா காப்பாத்துங்க”என்று அவள் அர்ஜுனன் பின்னாலே ஒளிந்து கொண்டு ஓட ஆரம்பித்தாள்   சற்று நேரத்தில் அவளை துரத்தி அவள் கையில் சிக்கியதும் பிடித்துக் கொண்டு” நீங்க எங்கேயாவது மதுவை வெளில கூட்டிட்டு போங்க

 

நான் இவளை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கேன்  ” என்று தன் கணவனை அர்த்தத்துடன் பார்த்து கூறிவிட்டு ஹாஸ்டலை நோக்கி சென்றாள்

 

அர்ஜுன்  மது இருவரும் அங்கிருந்த ரெஸ்டாரண்டில் அமர்ந்து ஐஸ்கிரீம் உண்ண ஆரம்பிக்க

 

மது”வருணி நல்ல பொண்ணு இல்லனா  ரொம்ப வெகுளியா இருக்கா  நான் அவகிட்ட பேசினதே இல்ல  ஆனாலும் எப்பவும் என் மேல பாசமா இருப்பா  ரூம்ல கூட எப்பவும் வாய் ஓயாமல் பேசிட்டே இருப்பா ”

 

“ஆமாண்டா உன்ன மாதிரியே !!!ஆனா நீ ஏன் இப்போ ரொம்ப அமைதியா கிட்ட எப்பவும் போல ஜாலியா இரு  வரணும்னு தோணுச்சுனா கிளம்பி வந்துடு  வீட்ல ஏதாவது சொல்லுவாங்கனு பீல் பண்ணாத என்றவன்   எப்போதும் உனக்காக இந்த அண்ணன் இருப்பேன்   “என்று அவள் தலையை வருடி ஆதரவாய் தோள் சாய்ந்து கொண்டான்

 

அன்றும் இவர்களை மற்றொரு பேராசிரியரான ப்ரியாவின் தோழி பார்த்துவிட்டாள்

 

ஆயிரம் முறை பத்திரம் சொல்லி வருணியிடமும் மதுவை பார்த்துக்க சொல்லிவிட்டு அண்ணனும்  தமிழும்  விடைபெற்றனர்   அன்று முதல் வருணி மதுவைப் பற்றிய அனைத்து விவரங்களும் தமிழினி இடம் சொல்ல

 

அது அப்படியே சக்தியிடம் சென்றது   காவேரி  கங்கா தங்கள் கணவருடன் மதுவை பார்க்க வருவதாய்க் கூற மது அவர்களை தடுத்து விட்டாள்   அதன் பின் மனோ வேலை விசயமாக மும்பை சென்று விட

 

வாராவாரம் தன் வேலைகளுக்கு இடையில் அர்ஜுன் வரமுடியாமல் போனது   இருப்பினும் வாரம் ஒரு முறை தன் நண்பர்கள் யாரையாவது அனுப்பி மதுவை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க வைத்து அவளுக்கு தேவையான பொருட்கள் கிடைக்குமாறு பார்த்துக் கொண்டான்

 

 

 

இப்படியே  ஒரு மாதம் ஓடி இருக்க மதுவிற்கு முதல் மாத சம்பளம் கிடைத்தது   எல்லையில்லா மகிழ்ச்சியில் துள்ளி குதித்தாள்  அவள் வாழ் நாளில் முதன் முதலில்  சம்பாதித்தது ஆயிற்றே !!

 

அவளின் காதுகளில் ஒரு ரூபாய் சம்பாதிச்சாலும் உன் கையால் உழைத்து சம்பாதித்து சாப்பிட்டு பாரு என்ற கணவனின் வாசகம் காதில் கேட்க  இப்போது உண்மையில் அவள் அதை ஏற்று கொண்டாள்

 

ஏதோ இந்த பணத்தை வைத்து உலகத்தையே வாங்கி விடலாம் என்ற உணர்வு

 

தன் கணவன் உட்பட வீட்டினர் அனைவருக்கும் உடைகளை வாங்கி கொரியர் அனுப்பியவள்   தன் கணவன்  உடைகளை  மட்டும் தன்னோடு வைத்துக் கொண்டாள்

 

அறையில் இருக்கும் மற்ற மூன்று பெண்களுக்கும் இனிப்பு வாங்கிக் கொண்டு சென்று அவர்களுக்கும் கொடுத்து மகிழ்ந்தாள்

 

இவள் அனுப்பவில்லை என்றாலும் அவள் கணவனுக்கு தெரியும் நிச்சயம் அவனுக்கும் வாங்கி இருப்பாள் என்று   அன்று மனோ வந்து பேசியதன் பின் அவனிடம் பேசவில்லை என்றாலும் தினமும் காவேரி உடன் பேசிக் கொண்டிருப்பாள்

 

அவனும் இவளை அழைக்கவில்லை ஆனால் அவன் எண்ணில் இருந்து தினமும் குட் மார்னிங்  குட் நைட் என்ற எஸ்எம்எஸ் மட்டும் வரும்   அதை தவிர்த்து வேறு எந்த மெசேஜும் வராது

 

[the_ad id=”6605″]

 

 

 

இவனை நினைத்து இவளுக்கு தான் குழப்பமாய் இருந்தது   ஆனாலும் அவன் மெசேஜ் இவளுக்கு நிம்மதியை தருவது என்னவோ உண்மை   இப்படியே அடுத்த மாதம் சென்றிருக்க  இதற்குள் மதுவும் வருணியும் ஓரளவு நெருங்கி இருந்தார்கள்

 

அறையில் இருக்கும் மற்ற பெண்களுடன் ஒற்றை புன்னகையோடு கடந்து விடுவாள்   அன்றும் வழக்கம்போல் மது பணி முடிந்து திரும்ப  ஹாஸ்டல் ரூமில் அவளுக்கு ஒரு கடிதம் வந்திருந்தது

 

சக்தியின் வக்கீலிடம் இருந்து

 

ஒரு வேளை  அதுவாய் இருக்குமோ!!! கைகள் நடுங்க அதைப் பிரித்துப் பார்க்க  அவளின் இதயம் பந்தய குதிரையைப் போல் துடித்துக்கொண்டிருந்தது

 

அவள் கையிலிருந்த வியர்வையில் அந்தக் கவரை இரண்டு முறை கீழே தவற விட்டவள்   ஒருவாறு இதயத்தை அமைதிப்படுத்தி அதைப் பிரித்துப் பார்க்க காலேஜ் ஷேர்ஸ் சம்மந்தப்பட்ட பேப்பரில் இவளின் கையெழுத்திற்காக அனுப்பப்பட்டிருந்தது

 

அப்போதுதான் மதுவிற்கு போன உயிர் திரும்பி வந்தது போலிருந்தது   எவ்வளவு ஈஸியா சயின் பண்ணி தரேன்னு சொன்னேன்   அந்த பேப்பரோன்னு நெனச்சாலே உயிர் போகிற மாதிரி இருக்கு   என்று இன்னும் மூச்சு கூட சரியாய் விட முடியாமல் திணற

 

எப்பா சாமி இனி சாகற வரைக்கும் சாதாரணமா கூட   டிவோர்ஸ் என்கிற  வார்த்தை என்  வாயிலிருந்து வர கூடாது முடிவெடுத்தாள்

 

இவள் இங்கு இப்படி இருக்க அங்கு ப்ரியாவின் தோழிகளோ மதுவை தேடி அடிக்கடி புதுப்புது நபர்கள் வருவதாகக் கூற அவளும் அர்ஜுன்  சக்தி  மனோ இந்த மாதிரி யாராவது இருக்கும் என்று நினைத்து விட்டு விட்டாள்

 

ஒரு ஞாயிறு ரூமில் மிகவும் போரடிக்க அறையில் மற்றவர்கள் சொந்த ஊர் சென்றிருக்க   அங்கு  அருகிலிருக்கும் மாலிற்கு சென்று வரலாம் என்று சென்றிருந்தாள்   எதேச்சையாய் தன் பள்ளி தோழி ஒருத்தியை சந்திக்க நேர்ந்தது

 

இந்த திடீர் சந்திப்பில் இருவரும் மகிழ்ந்து உரையாட ஆரம்பித்தனர்   சிறிது நேரம் பொதுவான பேச்சுக்கு பின் சொந்த வாழ்வை பற்றி பேச ஆரம்பிக்க  மது தான்  லெக்சரராக பணியாற்றுவதாக மகிழ்ச்சியாய் உரைக்கவும்

 

அந்த தோழி ரேவதியின் முகத்தில் அப்படி ஒரு சோகம்   காரணம் அவள் ஒரு டிகிரி மட்டுமே அவளின் சிறிய வயது கனவு IAS என்பது மதுவும் அறிந்த ஒன்றே!! அவர்கள் ஓரளவு நடுத்தர வர்க்கம் கூட

 

மது” ஏண்டி  யூ பி எஸ் சி எக்ஸாம் பாஸ் பண்ண முடியலையா “என்று கேட்க  அவளைப் பார்த்து ஒரு சோக புன்னகை உதிர்த்தவள்   எழுதினா தானே பாஸ் பண்ண முடியும்

 

டிகிரி முடிச்சதுமே பணக்கார வரன் வந்திருக்கு  மேரேஜ் பண்ணிட்டு படினு சொல்லி மேரேஜ் பண்ணி வச்சுட்டாங்க  அப்புறம் உடனே குழந்தை உண்டாயிடேன்   இப்போ அவனுக்கு மூணு வயசு ஆகுது

 

அவருக்கு என்னை படிக்க வைக்க தோணலை   இன்ட்ரஸ்ட் இல்லை போல அவருக்கு எப்பவும் நான் கூடவே இருக்கணும்     நானும் housewife ஆகிவிட்டேன்” என்று கூற

 

தன் வருத்தத்தை மறைத்துக்கொண்டு “குழைந்தை இருந்தா படிக்க கூடாதுனு ஒன்னும் இல்லை   உன் ஹஸ்பன்ட் கிட்ட சொல்லிப் புரிய வைக்கலாம் இல்ல  அது உன்னோட கனவு இல்லையா ” என்ற கேள்விக்கு

 

“இங்க ஏன் குழந்தையால் எந்த பிரச்சனையும் இல்லடி  என் கனவை பற்றி கவலைப்பட அவருக்கு நேரம் இல்லடி  சொல்லப்போனால் அவசியமும் இல்லை   அவருக்கு அவரோட உணர்வும் சந்தோஷமும் மட்டும் தான் முக்கியம்

 

“எல்லாருக்கும் தன் கனவை நிறைவேற்றும் புருஷன் கிடைக்கிறது இல்ல அதை பத்தி பேசி  இருக்க வாழ்க்கையையும் கெடுத்துக்க வேண்டாம்னு  பாக்கறேன்  இந்த ஜென்மத்துல என் வாழ்கை புருஷன்  குழந்தை  என்கிற வட்டத்துக்குள் மட்டும் தான் போல

 

ஆனாலும் நீ கொடுத்து வச்சவடி 12th முடிச்ச உடனே உனக்கு கல்யாணம் ஆனாலும் உன் ஆசைப்படி உன் கணவர்

 

” உன் கனவை நிறைவேற்றி இருக்காரே  நீ ரொம்ப கொடுத்து வச்சவடி கிரேட்” என்க

 

அப்போது தான் மதுவின் மரமண்டைக்கு புரிந்தது

 

அவளின் சிறிய வயதில் பெரியவளாகி என்ன படிக்கப் போற என்று யாராவது கேட்டால் “நான் படித்து அம்மா  அப்பா மாதிரி டீச்சர் ஆகுவேன்   ஆனால் அவங்கள மாதிரி குட்டிப் பசங்களுக்கு சொல்லித் தராமல்   எங்க அண்ணா மாதிரி சக்தி மாமா மாதிரி பெரியவங்களுக்கு கிளாஸ் எடுப்பேன்

 

எங்க அப்பா அந்த பெரிய ஸ்கூல் எனக்கு வாங்கித் தருவார்   என்று தன்முட்டை கண்ணை விரித்து   இரு கைகளையும் இடுப்பில் ஊன்றி  அவளின் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்று பெருமையுடன் கூறுவாள்

 

அவளின் அப்பாவும் “அது பேரு ஸ்கூல் இல்ல மது மா  காலேஜ்   நீ சமத்தா படி அப்பா உனக்கு வாங்கி தரேன் என்பார்

 

அப்படிப்பட்ட தன் தந்தையின் இடத்திலிருந்து அவன் தன்னை கவனிக்க தான் அவனை எப்படியெல்லாம் கஷ்டப்படுத்தி இருக்கும் என்று நினைத்தவள்   ரேவதி சொன்னது போல் தான் மிகவும் குடுத்து வைத்தவள் தான்

 

தன் உணர்வுகளை எல்லாம் அடக்கி  எனக்காக சொந்த ஊரை  தாய் தந்தையை பிரிந்து திருமணம் முடிந்தும் மூன்றரை வருடம் பிரம்மச்சரிய விரதம் காத்து

 

பின்பு இருவரும் இணைந்ததும் இவளின் வற்புறுத்தலால் தானே !!அப்படி இருந்த பின்னும்    தன் சந்தோஷத்தை மறந்து இவளை மாஸ்டர் படிக்க வைத்து இவளின் பெயரில் காலேஜில் பல ஷேர்ஸ் வாங்கி இப்போது எக்பெரியன்ஸ் வேண்டும் என்று வேலைக்கும் செல்ல சொல்லி இருப்பவனை  எப்படி காயப்படுத்தி விட்டாள்

 

அதுவும் எத்தனை முறை டிவோர்ஸ் தருகிறேன் என்று கூறி இருப்பேன்  பாவம் அவனுக்கு எவ்வளவு வலித்ததோ!!!

 

அழுகை கூட அவளுக்கு வரவில்ளை ஒரு மாதிரி மறத்து போன நிலையில் இருந்தாள்   எப்படி ஹாஸ்டல் வந்து சேர்ந்தால் என்று அவளுக்கே தெரியவில்லை

 

[the_ad id=”6605″]

 

 

 

இங்கு சக்தியும் இதைச் சொல்லித்தான்   தன் நண்பன் பைந்தமிழனிடம் புலம்பிக் கொண்டிருந்தான்   பைந்தமிழ்லிப்போது தான் மூன்று மாதம் கழித்து கனடாவிலிருந்து திரும்பி இருக்க

 

சக்தி முழு போதையுடன்” ஈஸியா எனக்கு டைவர்ஸ் தாரேன்னு சொல்றா  அதுவும் நான் ட்ரெயின் பண்றதுக்கு ஒரு பொண்ணு  அவளே அனுப்புறேன்னு சொன்னா பாரு செத்துட்டன்டா வலிக்குது

 

அவளுக்காக தாண்டா நான் லெக்ச்சரர் வேலைக்கே போனேன்  டேய் பைந்தமிழ்  ஸ்ரீ என்ன புரிஞ்சுக்கவே மாட்டாளா  ஆனால் எனக்கு அவளை புரிஞ்சிக்க  முடியுதுடா என்னோட பேபி டா அவ  publy என்  மேல இருக்க லவ் ல தான் இப்படி பேசுறா

 

லவ் பன்னா அவ கனவு  இல்லைனு ஆய்டனுமா  அப்படி இல்லாம ஆயிட்டா  என் லவ் தோத்து போனதா தானே அர்த்தம்  என் லவ்  என் ஸ்ரீ ய பெருமை படுத்துறதா இருக்கணும் டா  ஆனாலும் அவ பேசினது ரொம்ப வலிக்குதுடா” என்று கலவையாக புலம்ப  அங்கிருந்த  அர்ஜுன் பைந்தமிழை பார்த்து தர்ம சங்கடமாய் புன்னகைத்தான்

 

“ஜீ நீங்க ஃப்ரீயா விடுங்க  இது எல்லாம் எங்களுக்கு வழக்கம் தான்   நான் தண்ணியடிச்சா இவனைவிட புலம்புவேன்   காலையில் எல்லாம் சரியாயிடும்   என்று தட்டிக் கொடுத்தான்

 

காலையில் கண் விழித்ததும் மது ஒரு தீர்மானமான முடிவு எடுத்தாள்    தன் கணவனுக்காக இதுவரை எதுவும் செய்ததில்லை   அட்லீஸ்ட் அவன் சொன்ன பேச்சைக் கேட்டு ஒரு வருடமாவது பணிபுரிவது என்று

 

வகுப்பறையில் தங்கள்  போல இருபதில் இருக்கும்  பேராசிரியரை  மாணவர்கள் ஈஸியாய்  ஏற்று கொள்ள வகுப்பில் இருக்கும் நேரம் மதுவின் மனம் சற்று நிம்மதியாக இருந்தது

 

பின் வந்த நாட்களை சாதாரணமாகவே கடந்தாள்   அப்போதும் சக்தியிடம் பேசவில்லை   அவ்வளவு பேசிய பின் எப்படி எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவனிடம் பேச

 

மொழி தொடரும்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!