Unai Velvaen Anbaalae 7 2
அங்கு செழியன் வீட்டிலோ அரசி அழுகையில் கரைந்து கொண்டிருந்தார்.. செழியன் ஒருவன் வீட்டை விட்டு சென்றதிலேயே இந்த வீடு கலை இழந்தார் போலிருக்க…தாத்தாவுக்கும் மனது ஆரவில்லை.. காலையில் இருந்து நான்கைந்து முறையாவது தன்னிடம் வந்து பாசமாக பேசும் பேரன்..!!! செழியனை மிகவும் பிடிக்கும் அவருக்கு.. தன்னை போலவே நடை உடை பாவனை அனைத்தும் இருப்பதில் எப்போதும் ஒரு கர்வம்..
இப்போது சௌந்தர்யாவும் தன் புகுந்த வீட்டிற்கு கிளம்ப.. தன் பேரன் கிருஷ்ணாவை அழைத்தவர்.. “இங்க ஒருவாரம் இரு அப்புறம் போகலாம்..??” கிருஷ்ணாவை பொறுத்தவரை எங்கு இருந்தால் என்ன சௌமி குட்டி பக்கத்தில் இருந்தால் போதும்… அதைவிட ஹனிமூனிற்கு வேறு செல்ல இருப்பதால் தாத்தா என்ன சொன்னாலும் தலையாட்டிக் கொண்டிருந்தான்..
Advertisement
மறுநாளே கௌதமை பள்ளியில் சேர்த்திருக்க நன்றாக படிக்கும் மாணவன் என்பதால் அவன் தன் படிப்பில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தான்.. கணேசனும் அவன் உறவினர்களும் மீண்டும் மீண்டும் அவளை வந்து பார்த்து பேச அவர்கள் மூலம்தான் தெரிந்தது..செழியன் தங்களுக்காக பேசப்போய் இப்போது தனியாக தோப்பு வீட்டில் இருப்பது… கேட்டதிலிருந்து லெட்சுமிக்கு கொஞ்சம் குற்றவுணர்வு..!!
Advertisement
கௌதமை பள்ளியில் சேர்த்ததிலிருந்து செழியன் இந்த பக்கம் வரவில்லை.. அவனை தான் படித்த அந்த பெரிய பள்ளியிலேயே சேர்க்க ஆசை.. ஆனா இந்த சீனிவெடி ஒத்துக்காதே அதைவிட ரெண்டுபேரும் பிரிஞ்சு இருக்கனுமே..சரி காலேஜ் போகும்போது பார்த்துக்கலாம்..
Advertisement
செழியனுக்கு வேலைகளே ஏகப்பட்டதிருக்க வீட்டிற்குத்தான் செல்லவில்லையே தவிர அனைத்து இடத்திலும் தன் வேலையை பார்த்துக் கொண்டுதான் இருந்தான்.. அதோடு தோப்பிலிருந்து பழங்கள் பறிக்க வேண்டிய பக்குவத்தில் இருக்க அந்த வேலையே நிறைய இருந்தது..
ரைஸ்மில்..வெல்ல மண்டி என அவனுடைய தனிப்பட்ட தொழிலோடு குடும்பத் தொழிலையும் பார்க்க எல்லாம் அவன் விரல்நுனியில்தான்.. சரணை தோப்பிற்கே வரச் சொல்லுபவன் அவனிடம் அன்று பார்க்கவேண்டிய வேலைகளை ஒப்படைத்துவிடுவான்..
Advertisement
தினமும் வீட்டிலிருந்து யாராவது அவனை பார்க்க வர.. வரும்போதே வீட்டுச் சாப்பாடு கொண்டு வந்துவிடுவார்கள்.. வேண்டாம் என்றாலும் கேட்பதில்லை.. அரசி தினமும் தன் மகனை பார்த்துச் செல்ல செழியனுக்கும் இத்தனை நாள் குடும்ப பாசத்தை உணராமல் சற்று தள்ளி நின்றார் போல ஒரு உணர்வு.. இளவட்டங்கள் மாலையானாலே அண்ணனை பார்க்கவரும் சாக்கில் கிளம்பிவர அந்த தோப்பு அவ்வளவு பிடித்தது அவர்களுக்கு… இது இப்போதுதான் 3 வருடத்திற்கு முன் வாங்கியிருந்தான்..
அவனுடைய உழைப்பில் இப்போது அது வருமானம் கொட்டுமிடமாக மாறியிருக்க …… கைகெட்டும் தூரத்தில் அனைத்துப் பழங்களும் பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவர்களுக்கு.. இவ்வளவு நாள் இங்கு வந்தால் அண்ணனுக்கு பிடிக்காதோ என்று நினைத்திருந்தவர்கள் இப்போது அவர்களை கண்டாலே அவன் முகத்தில் ஒளிரும் சிரிப்பு… ஒரு வாஞ்சை… வந்த நிமிடத்தில் அவர்களுக்கு பிடித்த பழச்சாறு என அவன் அன்பில் திளைத்த இளவட்டங்களுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை..
தங்கள் கூட்டணியோடு சௌந்தர்யாவையும் அழைத்து வர கிருஷ்ணாவும் கூடவே வந்தான்.. ஸ்ரீக்கே ஒரு வித ஆர்வம் தன் அத்தான் மேல்.. “ஏய் சுவி இது உங்க அண்ணா தானாடி..?? எப்ப பார்த்தாலும் கர்ருபுர்ருன்னு இருப்பாங்க.. இப்போ என்னன்னா என்கிட்டக் கூட பேசுறாங்க.. சிரிக்கிறாரு.. பல்லெல்லாம் நல்லாத்தான்டி இருக்கு.. அப்ப ஏன் இவ்வளவு நாள் பல்லுல சுளுக்கு புடிச்சாப்புல இருந்தாரு….!!”
சூர்யாவோ அவள் மண்டையில் ஓங்கி ஒரு கொட்டு வைத்தவன் “எங்க அண்ணன ஏன்டி டேமேஜ் பண்ற….??”
“ஸ்ஸ்ஸ்ஸ்… ஆமாண்டா ஊருக்கு தொக்கு பிள்ளையார் கோவில் ஆண்டிங்கிற மாதிரி உங்க குடும்பத்துக்கே நான்தான் கிடச்சனா அடிக்க.. இனி எவனாச்சும் அடிங்க கையை ஒடிக்கிறேன்..”
சுவியோ” ஸ்ரீ அண்ணா உன்கிட்ட ரொமான்ஸ் பேசினா உனக்குள்ளயே வைச்சுக்கோ.. வெளியில சொல்லாத…??”
“அடங்குங்க எல்லாம்… ப்பா ரொமான்ஸ்..!! அதுவும் உங்க அண்ணன் என்ன பார்த்து..??”
எல்லாரும் அவளை ஒரு லுக்விட..
“அடச்சீ… என்ன ஸ்ரீ எப்படி இருக்க..? படிப்பு எப்ப முடியிதுன்னு கேட்டாரு அத சொல்ல வந்தேன்.. அவர் என்னகிட்ட பேசின வார்த்தையிலே இதுதான்டா ரொம்ப நீளமான வார்த்தை அத சொல்ல வந்தா எல்லாரும் இப்படி படுத்துறிங்க..”
அவள் சொல்லியதை கேட்டதும் இளவட்டங்கள் அவளை சுற்றி நின்று தூ…. என துப்பவும்.. கொலைவெறியில் அனைவரையும் விரட்ட ஆரம்பித்தாள்..
இங்கு லெட்சுமி வீட்டிற்கு செழியன் வராவிட்டாலும் வேலையாட்கள் வந்தபடியிருக்க அத்தை வீட்டை சுற்றி சுத்தபடுத்தி மரங்களை மட்டும் வைத்துவிட்டு மற்ற இடங்களை உழுது போட சொல்லியிருந்தான்..
நல்ல வளமான மண் உள்ள பூமி அது…பத்து இருபது தென்னை மரங்கள் இருக்க அவற்றை சுத்தப்படுத்தி சேதடைந்திருந்த தென்னை மரங்களுக்கு உரம் வைத்து அதற்கு மண்ணணைத்திருக்க.. இப்போதுதான் ஒரு அழகான இடமாக காட்சியளித்தது.. மறுநாளே தன் தோப்பிலிருந்து பலவகை மரக்கன்றுகளை கொண்டு வரச் சொல்லியிருந்தவன் அதை லெட்சுமியையே இடம் பார்த்து வைக்கச் சொன்னான்..
இவள் அவனின் அதிரடியில் திகைத்துத்தான் போனாள்.. தினம் ஒரு மாற்றம் அவள் வீட்டில்.. ஓடுகள், கைமரங்கள் மாற்றப் பட்டிருக்க வீட்டில் சிமெண்ட் தரை மேல் டயல்ஸ் ஒட்டப்பட்டு தனியாக பாத்ரூம் கட்டப்பட்டது.. கதவுகள் மாற்றப்பட்டு பெயிண்ட் அடிக்கப்பட புதுவீடு போல காட்சி அளித்தது..
இவள் வேண்டாம் வேண்டாம் என்றாலும் கேட்பார்தான் யாருமில்லை… வரும் வேலைக்காரர்களிடம் சொன்னால் “செழியன் தம்பி திட்டும்மா… அதுக்கிட்ட சொல்லுங்க..??” அவள் பேச்சை காதில் கூட வாங்காதவர்கள் வந்த வேலையை பார்த்துவிட்டு செல்ல இவளுக்கு வேடிக்கை பார்த்திருப்பதைவிட வேறு வழியில்லை..
அங்கிருந்த பெரிய கிணற்றிலேயே புது மோட்டார் பொருத்தியிருக்க மாலையானால் மரங்களுக்கு தண்ணீர் விடுவது , சமைப்பது, சாப்பிடுவது இதுதான் லெட்சுமியின் வேலை.. கௌதம் தன் படிப்பில் மூழ்கிவிட்டான்.. லெட்சுமியோ செழியன் மீது கடும் கோபத்தில் இருந்தாள்… வரட்டும் வீட்டுக்கு.. அதென்ன அவங்க இஷ்டத்துக்கு எல்லாம் செய்றது.. நம்மகிட்ட கேட்க கூட மாட்டாங்களோ.. அவனிடம் போனில் பேசவும் தயக்கம்..
அவன்தான் அப்படியென்றால் கணேசனோ தினம் ஒரு காயோடும், வீட்டிற்கு வேண்டியோ பொருளோடும் நிற்க.. வேண்டாம் என்று சொல்லவும் முடியவில்லை… தங்கச்சி தங்கச்சி என பாசம் காட்ட மீறி ஏதாவது சொன்னால் “ஏம்மா அவன்கிட்ட வாங்கலாம் என்கிட்ட வாங்க கூடாதா..??”
பேசினால் எதாவது எதிர்த்து பேசலாம்.. பாசம் காட்டுபவரிடம் என்ன செய்வது.. ஒருவன் வீட்டிற்கு வராமலே அவன் காரியங்களை அதிரடியாய் நடத்திக் கொண்டிருக்க மற்றொருவனோ பாசம் காட்டியே அவளை ஒருவழியாக்கி கொண்டிருந்தான்..”டேய் இம்சைகளா.. இம்புட்டு நாளும் நீங்கல்லாம் எங்கடா இருந்திங்க…??”
இந்த சொந்தங்களை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை… விலக்கவும் முடியவில்லை.. இதென்ன இம்சை இதை எப்படி நிறுத்துவது என்று யோசிப்பதுதான் இப்போது லெட்சுமியின் பெரிய வேலையாய் இருந்தது..
இரண்டு மூன்று நாட்கள் கழிந்திருக்கும் காலை 10 மணி போல செழியன் தன் அத்தை வீட்டுக்கு ஜீப்பை விட…. லெட்சுமி எங்கேயே கிளம்பினாற் போல கதவை பூட்டிவிட்டு வாசலை நோக்கி வந்து கொண்டிருந்தாள்…
அவனை பார்க்கவும் பதறியவள் கழுகுக்கு மூக்குக்கு வேர்த்தாற்போல இப்போ கரெக்டா வந்து நிக்குறான்… என்னமாச்சும் ஏழரைய இழுப்பானே..!! சிவா… இவன் என்ன சொன்னாலும் உன் முடிவுல இருந்து மாறிறாத..
மேலிருந்து கீழாக அவளை ஒரு பார்வை பார்த்தவன் “என்ன சுண்டெலி எங்க போற..??
சுண்டெலியா… இருடா.. “நான் எங்கயோ போறேன்… அது ஏன் உங்களுக்கு…?? எல்லாம் உங்ககிட்ட சொல்லனுமா..??”
“ம்ம்ம் சரிடி குட்டிக் குரங்கு எங்கயே போ…!! இப்போ பாட்டி வரேன்னு சொன்னாங்க உன்ன பார்க்க… அவங்க பார்த்துட்டு போகட்டும்… அப்புறமா மரத்துக்கு மரம் தாவு..”
ஐயோ 11 மணிக்குள்ள வரச் சொன்னாங்களே..
“ம்ம் எதுக்காம் அவங்க எதுக்கு இங்க வாராங்க…?? போங்க போங்க யாரும் எங்களுக்கு தேவையில்ல..??”
ஹாஹாஹா…. அவன் சிரிக்க…
இடுப்பில் கைவைத்து அவனை முறைத்தவள் “இப்ப என்ன சொல்லிட்டேன்னு இப்படி சிரிக்கிறிங்க… பார்த்து பல்லு கொட்டிர போகுது..”
“ம்ம் உலகத்தை நினைச்சேன் சிரிச்சேன்.. சரி பால் இருக்கா வாங்கிட்டு வரவா..??”
“ம்ம்ம் பாட்டிய இப்ப வர வேணாம் சொல்லுங்க சனி, ஞாயிறு வரட்டும் அப்பத்தானே கௌதமும் இருப்பான்.. அப்ப வேணா வந்து பார்த்துட்டு போகட்டும்… எங்களுக்கு எந்த உறவும் தேவையில்ல ஏதோ பாட்டி ஆசைப்படுறதுக்காக.. ஆனா நான் எதுவும் செஞ்செல்லாம் தரமாட்டேன்..!!!”
அவளையே கூர்ந்து பார்த்தவன் லெட்சுமி டென்சனில் வாட்சை பார்ப்பது பின் பாதையை பார்ப்பதுமாக இருக்க,
“எனக்கு ஒரு காப்பி போட்டுத்தா…?”
இம்சை இவன் ஒரு விடாக்கொண்டன்.. “போங்க பால் இல்ல.. உங்கள யாரு வீட்டை விட்டு வரச் சொன்னது … நாங்க சொன்னமா வாங்க வந்து உதவி பண்ணுங்கன்னு… உங்க இஷ்டத்துக்கு ஆளுகள விட்டு வேலை செய்ய சொல்றிங்க.. இதுக்கெல்லாம் எவ்வளவு செலவுன்னு சொல்லுங்க கொஞ்ச கொஞ்சமா திருப்பி தந்துடுறேன்..”
“யேய் சிவா வாய மூடு நல்ல மூடுல இருக்கேன் என் கோபத்தை கிளறாத சொல்லிட்டேன்..”
“சிவா…. சிவான்னு நீங்க ஏன் கூப்பிடுறிங்க..?? எங்க அம்மா மட்டும்தான் கூப்பிடுவாங்க… மரிதையா லெட்சுமின்னு கூப்பிடுங்க.. அப்புறம் உங்களுக்கு கோபம் வந்தா எனக்கென்ன எங்கள பத்தி முடிவு நாங்கதான் எடுப்போம்… நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க.. போங்க உங்க வீட்டுக்கு..”
வாசலில் ஹாரன் சத்தம்.. கணேசன் தன் புல்லட்டில் அவளுக்காக காத்திருக்க,
“சரி நீங்க போங்க இனி எங்கள பார்க்க வராதிங்க.. நாங்களே இனி எங்கள பார்த்துக்கிறோம்…உங்க வீட்டுக்கு போங்க.. இதோ எங்க அப்பா சொந்தகாரங்க இருக்காங்க..அவங்க எல்லாம் பார்த்துப்பாங்க.. வரவா..??”தன் கைப்பையை எடுத்துக் கொண்டவள் வெளியில் செல்ல கால்வைக்க எட்டி அவள் கையை பிடித்தவன் பல்லை கடித்து..
“ எல்லாம் பேசி முடிச்சிடியா.. எங்க போற சொல்லிட்டு போ..??”
“சொல்ல முடியாது… விடுங்க என்ன…??” அவள் கையை உதறவும்,
“உன்ன…!!” அவள் அவளை தன்னை நோக்கி இழுக்க,
லெட்சுமியை காணாமல் கணேசன் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே வந்தான்..
இனி………….??????
