Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

uyir kaakkum uyir kolli

Uyir Kaakkum Uyir Kolli – Final

நிறைவு பதிவு

சென்னை மெட்ரோ ரயில் நிலையம் வழக்கமான தனது பரபரப்பை இழந்து காணப்பட்டது. ரயில் பெட்டிகள் தேங்கி நிற்க…….. மக்கள் கூட்டம் அலைமோதும் அந்த ரயில் நிலையத்தில் ஒருவர் இருவருக்குமே பஞ்சம் ஆகிவிட்டது. 
மேலும் மக்கள் கூடும் பல பிரம்மாண்டமான மால்கள் திரையரங்குகள் போன்றவை வெறிச்சோடிப் போயின.

சுவாசிக்கும் காற்றையும் நச்சுத் தன்மை உடையதாய் மாற்றிய தொழிற்சாலைகள் மூடப்பட்டன.

காற்று சுத்தமானது ஆனால் மனிதன் சுதந்திரமாக சுவாசிப்பதற்கு ஏற்றவாறு அல்ல. 
பறவைகளும் விலங்குகளும் சுதந்திரமாய் சுவாசிப்பதற்கு ஏற்றவாறு.



Advertisement

மனிதன் அனைத்தையும் ஆட்டுவிக்க…… கண்ணுக்கு புலப்படாத ஒரு கிருமி அவனையே ஆட்டுவித்தது.

பகுத்தறிவோடு மனிதனைப் படைத்தால்…….. பல உயிர்களையும் காப்பான் என, படைத்தவன் எண்ணி இருக்கையில்……. அவனோ பல உயிர்களுக்கும் பகைவனாகவே மாறினான். உலகம் தனக்கு மட்டுமே  சொந்தமானது என எண்ணி….. பிற உயிர்களை கணக்கில் எடுக்காது பல காரியங்கள் செய்தான்….. அதனால் பல பல உயிரினங்கள் அழிந்தன….

தனக்கு வசதியான இடத்தை உருவாக்க…… விலங்குகளின் இடத்தை அபகரித்தான்.
தான் ருசியாக குளிர்பானம் அருந்த….. பறவைகள் கூடும் நீர்நிலைகளை அழித்தான்.
தான் வறுமை இன்றி வளமாக வாழ…. பல்வேறு தொழிற்சாலைகளை நிறுவி பூமித்தாயை வளம் இழக்கச் செய்தான்.

Advertisement

இன்றும் அவன் செய்த செயல்களுக்காக அவன் வருந்தி திருந்தவில்லை…. கண்ணுக்குப் புலப்படாத ஒரு கிருமி அவனுடைய பலபல தவறுகளுக்கு தடை விதித்திருக்கிறது.

Advertisement

[the_ad id=”6605″]

*******

அன்று இளம்பருதி தன்னுடைய அத்தையின் மீது அந்த மருந்தினை செலுத்தி சோதிக்க மறுத்தவன்……. அதை தன் உடம்பிலேயே செலுத்தி சோதித்து பார்த்தான் இரு நாட்களுக்குப் பின் அவன் உடம்பில் எந்த வகையான பக்கவிளைவுகளும் இல்லாமல்…… அவன் உடம்பிற்குள் வந்த நோய் கிருமியும் அழிந்து விட்டது என உறுதி செய்த பின்பு, அதனை தன் வீட்டில் உள்ள அனைவருடனும் செலுத்தினான் அனைவரும் பரிபூரணமாக குணம் அடைந்தனர்.

Advertisement

இருப்பினும் பல நாடுகளில் பல பல மனிதர்கள் இறந்து கொண்டிருக்கும் செய்தி அவனை துணுக்குறச் செய்தது. தன்னுடைய இந்த கண்டுபிடிப்பை பற்றி எடுத்துரைத்து அதனை மக்களிடம் கொண்டு சேர்க்க அவன் எண்ணற்ற முயற்சிகள் எடுத்தான். ஆனால்லஞ்சமத்திலும் ஊழலிலும் ஊறியிருந்த நாட்டில் அவனால் தன்னுடைய படைப்பை இத்தனை நாட்களாக வெளியில் கொண்டுவர முடியவில்லை. அவனுடைய இந்த உயிர் காக்கும் உயிர்க்கொல்லி பத்தோடு பதினொன்றாக நிலுவையில் தான் இருந்தது.

நோயின் தாக்கம் அதிகமாக மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கின….. உலகநாடுகளின்பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது அரசாங்கம் எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைக்கு வந்தது அப்போதுதான் இளம்பரிதி இன் கோப்புகளும் பிரிக்கப்பட்டன.

அவன் உருவாக்கிய SV2020 என்னும் இந்தக் கிருமி அப்பொழுது பரவிக்கொண்டிருந்த  நோய்தொற்று மட்டுமின்றி அதற்கு முன்பு மருந்து கண்டுபிடிக்கப்படாமல் இருந்த பலவித வியாதிகளுக்கும் மருந்தாகி போனது. இளம்பருதியின் இந்த கண்டுபிடிப்பானது பல உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது உலக நாடுகளின் பார்வையில் தன் நாட்டை உயர்த்தி காட்டிவிட்டான் இளம்பரிதி.

*****
“டேய் நல்லா இருப்பியா டா நீ? கோடான கோடி ஸ்கூல் பசங்க காலேஜ் பசங்களோட சாபம் எல்லாம் உன்ன சும்மாவே விடாது……” என்று இளம்பருதியை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தான் ரகு.

[the_ad id=”6605″]

“ஆமா அத்தான் நீங்க மட்டும் எதுவும் சொல்லாம அமைதியா இருந்திருந்தீங்கன்னா இந்நேரம் நான் வீட்டுல ஜாலியா இருந்திருப்பேன்….. இப்ப பாருங்க அசைன்மென்ட் செமினார் ஐயோ என்னால முடியல….”
என்று நளினியும் தன் பங்கிற்கு புலம்பினாள்.

நாட்டின் முதல் அமைச்சரும் பிரதமரும் கூட அவனை அழைத்து பாராட்டி இருக்க….. அவனுடனேயே சுற்றிக்கொண்டிருக்கும் அவனுடைய நெருங்கிய நண்பர்கள் என அழைக்கப்படும் இருவர் மட்டும் அவனை எப்பொழுதும் திட்டிக் கொண்டே இருந்தனர்.

“ஹலோ நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டு இருக்கீங்களே மெக் டோனட்ஸ் பீட்சா……. இதைப் பார்த்து கூட இருக்க மாட்டீங்க……. வீட்டுக்குள்ளே தான் இருந்திருக்கணும்…… அவுட்டிங் எல்லாம் கிடையாது அதையும் கொஞ்சம் யோசிச்சிட்டு பேசுங்க” என்று இளம்பரிதி சிரிக்காமல் இருவரையும் நக்கலடிக்க.

“யாருடா இவன்!!! எங்களுக்கு பீட்சா சாப்பிடணும் போல இருந்தா நாங்க ஆன்லைன்ல ஆர்டர் பண்ணுவோம்” என்று ரகு அவன் காலை வார….

நளினியோ “அவுட்டிங் எல்லாம் எதுக்கு போய்கிட்டு….. ஃப்ரெண்ட்ஸ் ஓட டைம் ஸ்பெண்ட் பண்ணனும்னு தோனிச்சுன்னா பப்ஜி விளையாட போறோம்…..” என்றாள்.

கல்லூரி ஆரம்பித்ததிலிருந்து எப்பொழுதும் இப்படித்தான் நடந்து கொண்டிருந்தது. அவர்கள் எதையாவது சொல்லி அவனை திட்ட…….. அவனும் தனக்கு கிடைத்த எதாவது ஒரு காரணத்தை கூறி இருவரையும் சமாளிக்க பார்ப்பான்….. ஆனாலும் எப்படியாவது இருவரும் சேர்ந்து அவனை நாக்அவுட் செய்துவிடுவார்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இருவரும் அவன் மீது கொலைவெறியில் இருந்தார்கள்.

நல்ல வேளையாக இளம்பருதியை அவர்களிடம் இருந்து காப்பாற்றவே அவனுக்கு கல்லூரி முதல்வரிடம் இருந்து அழைப்பு வந்தது. அவனும் அவர்கள் இருவரிடம் இருந்து தப்பித்து அவரைக் காணச் சென்றான்.

எந்த காரணத்திற்காக கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டானோ….. அதே காரணத்திற்காகத் தான் இன்று அவன் நோபல் பரிசும் வாங்க இருக்கிறான்.

அவன் கல்லூரி முதல்வர் அறையில் நுழைய….. அவனுக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது…… இருக்காதா பின்னே அவன் தன் நாட்டிற்கு மட்டும் பெருமைக்குரியவனாய் மாறவில்லை….. தன் நாட்டை மட்டும் பெருமைப் படுத்தவில்லை……. தன் கல்லூரிக்கும் சேர்த்து பெருமை தேடி தந்துள்ளான்……. அதனால் தன் கல்லூரிக்கும் பெருமைக்குரியவனாய்  மாறியிருக்கிறான்.

“நம்ம காலேஜ்க்கு ரொம்ப பெரிய பெயரை சம்பாதித்துக் கொடுத்து இருக்க பா நீ……. நான் அன்னைக்கே உன்கிட்ட பேசி இருக்கணும்….. நீ சொல்ல வர்றத கேட்டுக்கணும்….. அன்னைக்கு நான் அந்த மாதிரி நடந்துகிட்டது ரொம்ப பெரிய தப்பு என்ன மன்னிச்சிடு பா இனி எந்த ஒரு ஸ்டுடென்ட் கிட்டயும் இந்த மாதிரி நான் நடந்துக்க மாட்டேன்…..” என்று அவர் உளமார வருந்தியே அவனிடம் மன்னிப்பு கேட்டார்.

இளம்பருதி அந்த ஆண்டின் சிறந்த மாணவனாக தேர்ந்தெடுக்கப்பட்டான் அவனுடைய திறமையை பாராட்டி பல்வேறு விருதுகளும் அவனுக்கு வழங்கப்பட்டது.

பல்வேறு நிறுவனங்கள் அவனுக்கு வேலை வழங்க முன்வந்தன.
********

அவனுடைய கனவு எளிதில் அவனுக்கு கிட்டவில்லை.
அதற்காக அவன் பல பல இன்னல்களை கடந்து வந்தான். நம்முடைய கனவுகள் பலிக்க வேண்டும் என்றால் நாமும் அதற்காக பல சோதனைகளை சந்திக்க வேண்டும் அந்தச் சோதனைகளை வெற்றியும் கொள்ள வேண்டும்.

*********

இனி எல்லாம் சுபமே இன்று இந்த கதையை நான் முடிக்க விரும்பவில்லை……..

இந்தியா அதிக இளைஞர்களை கொண்ட நாடு. ஆதியிலேயே எண்ணிலும் எழுத்திலும் சிறந்து விளங்கிய நாடு. இன்று லஞ்சம் ஊழல் என்னும் கொடுங்கோன்மை ஆட்சி புரிவதால் பல வளங்களை இழந்து நிற்கிறது.

*******
மீட்டெடுப்போம் நம் நாட்டை………. வாய்பளித்தமைக்கு நன்றி.❤❤

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!