Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Niththirai Kalaiththa Maayaval

Niththirai Kalaiththa Maayaval 25

காற்றில் கையை வீசிட தோன்றும்

மேகம் பார்த்து பேசிட தோன்றும்

காதல் வந்து செய்யும் மாயம் புரியாதே

நேரம் கெட்ட நேரத்தில் எழுப்பும்



Advertisement

நடக்கும் போதே பறந்திட துடிக்கும்

காதலுக்கு காதல் செய்ய தெரியாதே

பறவைக்கு வேறாரும் பறக்க கற்று தருவதில்லை

Advertisement

நீயாக முன்னேறு நண்பன் உதவி தேவையில்லை

Advertisement

கஷ்ட நஷ்டம் கணக்கை பார்த்தால் இதயம் வாழ முடியாதே

தட்டு தட்டு மீண்டும் தட்டு காதல் கதவை திறந்திடுமே

 

Advertisement

காதல் வந்து பொய்யாக உன்னை சுற்றினாலே

உள்ளுக்குள்ளே பொல்லாத பூ பூக்கும்

பூக்கள் என்று கை நீட்டி நீயும் தொடும் போது

பூவிதழ்கள் சொல்லாமல் தீ மூட்டும்

 

“டேய்… அன்பு இலக்கியா… சீக்கிரம் கீழ இறங்கி வாங்கடா… மாப்பிளையை நீங்க தான் கூட்டிட்டு வரணும்னு சொன்னா..  நீங்களே மாப்பிளை மாதிரி ரெடி ஆகிட்டு… பாருங்க விக்கியே வந்துட்டான்” கீழே செல்லம்மாள் கத்தி கொண்டு இருக்க… 

 

மேலே தாங்கள் அறையில் இருவரும் 

டேய்.. இலக்கியா… இந்த சென்ட்  பாரு… நல்லா இருக்கானு…  இனியாக்கு பிடிக்கும் தானே… என்று மொத்தம் நான்கு பாட்டில் சென்டை வைத்து கொண்டு இதுவா, அதுவா என்று அன்பு அலப்பறை செய்து கொண்டு இருக்க… 

 

மறுபுறமோ… “இந்த சட்டை போட்ட ஹாண்ட்சமா தெரியுறேனா.. இல்லை இந்த சட்டை போடவா”மொத்தம் ஆறு சட்டைககளை கையில் வைத்து கொண்டு… போடுவதும் கழட்டுவதுமாக இருந்தான் இலக்கியன் 

 

“நீ எந்த சட்டையை போட்டாலும் தேவாங்கு மாதிரி தான் இருப்ப… சட்டையை போட்டு, போட்டு இப்டி கழட்டுரியே… அதுலயே அது கசங்கிடும்…கசங்குன சட்டைல மனித குரங்கா தான் தெரிவ” இலக்கியனிடம் பேசிய படி, இறுதியாக ஒரு சென்ட்டை அடித்தான் அன்பு 

 

அது மல்லிப்பூ வாசம் வீசும் சென்ட்.. “இந்த வாசனைல மாமன் மேல காதல அப்டியே கவிதையா கொட்டுவா பாரு” என்றான் கண்ணாடியில் தன்னை பார்த்து கொண்டு 

 

“கவிதையா சொல்லுவாளா..  கழுவி ஊத்தாம இருந்தா சரி”என்றான் இலக்கியன்… தன் சட்டையோடு சண்டையிட்ட படி 

 

அதில் கடுப்பான அன்பு… இலக்கியனின் தலையை கலைத்து விட்டு.. கீழே சென்று விட்டான்….. 

 

“டேய்… அண்ணா… போட போ… இன்னைக்கு இனியா உன்ன பார்த்து வாந்தி தான் எடுப்பா… நம்ப அழகா ரெடி ஆயிட்டா, நாமலும் கமிட் ஆகிட போறோம்ன்ற பொறாமை அவனுக்கு(ஆகிட்டாலும் -இது என்னோட மின்ட் வாய்ஸ் )”புலம்பிய படியே சட்டையுடன் சண்டையை தொடர்ந்தான் 

 

அன்பு கீழே இறங்கி வர…அவனின் அந்த கம்பீர தோரணையில் அவனையே பார்த்த படி நின்று கொண்டு இருந்தார் செல்லம்மாள்…. 

 

சூரியன் மறையும் நேரத்தில் வானில் தெரியும் சிகப்பும் இல்லாமல் மஞ்சளுமில்லாமல் நடுவில் ஒரு ஆரஞ்சு போன்ற நிறத்தில் சட்டை… வேட்டியின் ஒரு மடிப்பை மட்டும் கையில் பிடித்த படி… ராஜா நடையுடன் வந்த அன்பின் ஆண்மை பார்ப்போரை மயங்க தான் செய்தது… 

 

அவனை அடுத்து வந்தான் இலக்கியன்… அன்பை வாஞ்சையாய் பார்த்து கொண்டு இருந்த செல்லம்மாள்… இலக்கியனை பார்த்த அடுத்த நொடி வயிற்றை பிடித்து கொண்டு சிரிக்க ஆரம்பித்து விட்டார்… 

 

 

[the_ad id=”6605″]

 

 

 

“என்னடா… கல்யாணத்துக்கு இப்படியேவா போக போற” கலைந்த தலை கேசம்… கொஞ்சமே கொஞ்சம் கசங்கிய சட்டை… அதுவும் பிங்க் கலரில்…வேட்டியோடு நடக்க சிரம பட்டு கொண்டு வரும் அவனை பார்த்த செல்லம்மாவிற்கு புதிதாக வேட்டி காட்டும் குழந்தை போல… அவனை கொஞ்ச வேண்டும் போல… அவ்வளவு அழகாக இருந்தான் இலக்கியன்… 

 

அவனை அருகில் அழைத்து… தலை முடியை தன் கைகளாலேயே சரி செய்து விட்டு…சட்டையையும் சரி செய்தவர். ஒரு கல்யாணத்துக்கு தயார் ஆக தெரியுதா..  இதுல இவனுக்கு கல்யாணம் வேற பண்ணி வெக்கணுமாம்… 

 

“இதோ பாருமா… நீ மட்டும் பொண்ண காட்டு… நான் எப்படி வந்து நிக்குறேன்னு பாரு” வீர வசனம் பேசியவனை 

 

“டேய்..  உனக்கு பொண்ணு பாக்குறது இருக்கட்டும்டா. எனக்கு பார்த்து வெச்சி இருக்க பொண்ணை காலினம் பண்ணனும்டா…. சீக்கிரம் வாங்கடா ” தவித்து கொண்டு இருந்தான் விக்கி(அவன் அவன் பிரச்னை அவன் அவனுக்கு )

 

“சரிடா சரிடா.அழுகாதே… என் தங்கச்சி உன்னை விட்டுட்டு எங்கயும் போக மாட்ட” என்று பேசிக்கொண்டு கொண்டு இருக்கும் இலக்கியன் மண்டையில் “நங் ” என்று கொடிய ஜானகி 

 

“இனி அவன் உங்களுக்கு மச்சான்… நியாபகம் இருக்கட்டும்… அதனால மரியாதை குடுத்து பழகுங்க”

 

“சரிடா மச்சா… வாங்கடா மச்சா என்று வம்பிழுக்க” அவ்விடமே மகிழ்ச்சியில் திளைத்தது… 

 

“சரி சரி பேசிக்கிட்டே இறுக்கமா… கோவிலுக்கு கிளம்புங்க… எல்லாரும் அங்க வந்துகிட்டு இருங்காக்கலாம்… முகுர்த்த நேரம் வேற நெருங்க போகுது” மூவரையும் அனுப்பி வைத்து விட்டு மற்றவர்களும் கோவிலுக்கு கிளம்பினர்… 

 

ஆம் திருமணம் கோவிலில் தான் நடத்த ஏற்பாடு செய்ய பட்டு இருந்தது…. இவர்களின் வழக்க படி… திருமணத்தை மாப்பிளை வீட்டில் நடத்துவது தான் வழக்கம்…. ஆனால் சகுந்தலா பிறந்த வீட்டிலேயே தங்கி விட்டதால்…. அங்கு நடத்த முடுயாது என்பதால்…மருதமலை  முருகர் கோவிலில் திருமணம் ஏற்பாடு செய்ய பட்டு இருந்தது…. 

 

கோவிலை அடைந்த மூன்று ஆண்களும்… அவர் அவர் துணையை தேடுவதில் மூழ்கி போயினர்… 

 

விக்கி மண்டபத்தில் காயுவிற்கு காத்திருக்க… கூட்டத்தில் பெண் பார்க்கும் வேளையில் இறங்கினான் இலக்கியன்… 

 

அன்போ….இனியாவை தேடி கொண்டு இருக்கும் போது… 

 

கோவிலில் வாசலில் வந்து நின்றது ஒரு போலீஸ் ஜீப்… அதில் இருந்து காக்கி சட்டை போட்ட அதிகாரி ஒருவர் இறங்க… அவர் நேரே கோவிலுக்குள், திருமணம் நடக்கும் இடத்தை தேடி செல்ல 

 

அது வேலுச்சாமி மற்றும் அனைவரையும் கொஞ்சம் கலங்க வைத்தது என்று தான் சொல்ல வேண்டும்… 

 

“என்ன சார்.என்ன வேணும்… இங்க என் பின்னும் கல்யாணம் நடக்குது… நீங்க யாரு” என்றார் சிறு பதட்டத்துடனே… 

 

“டேய் சந்துரு எப்போடா வந்த” என்று அன்பு பின்னால் இருந்து… அன்பிற்கு தெரிந்தவர் போல… என்பது புரிந்த உடன் தான்… வேலுச்சாமிக்கு ஹப்பாடா என்று இருந்தது 

 

“அப்பா இவன்… சந்துரு… என்னோட நம்பன்… நம்ப ஊருக்கு தான்பா இன்ஸ்பெக்டரா வந்து இருக்கான்… நேத்து தான் ஊருக்கு வந்தான்..  நான் தான் கல்யாணத்துக்கு கூப்பிட்டேன்” என்றான் அன்பு விவரமாக 

 

சந்துருவை வரவழைத்து… உள்ளே கூட்டி சென்றான் அன்பு 

 

“மச்சா…எங்கடா அண்ணியை காணோம்… அவுங்க யார்னு காட்டு மொதல்ல” என்றான் அன்பின் காதை கடிக்கும் விதமாய் 

 

அப்போது தான் காயுவை அழைத்து கொண்டு மணவறை நெருங்கி கொண்டு இருந்தாள் இனியா… 

 

[the_ad id=”6605″]

 

 

 

அன்பின் சட்டை நிறத்தை பொறுத்தி எடுத்தார் போல்.. அதே நிறத்தில் சேலை கட்டி… அதிகம் நகைகள் எதுவும் இல்லாமல்… தலை நிறைய பூ வைத்து… சிரித்த படி வந்தவளை பார்த்த அன்பு சிலையாய் நிற்க 

 

சந்துருவோ… அதிர்ச்சியில் நின்றான் 

 

“இவங்க… இவங்க பேரு இனியாவாள் தானே என்றான் பார்த்த மாத்திரத்திலேயே” 

 

“இவனுக்கு எப்படி அவளோட பெயர் தெரியும்”என்ற சிந்தனை வந்தாலும்…தன் முன் இருக்கும் இனியவளை ரசித்து கொண்டு இருந்தவனுக்கு… “நாம தான் சொல்லி இருப்போம்”என்று தோனி அமைதியாகி விட்டான் 

 

பார்வை முழுதும் அவள் மேல் இருக்க… வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்த இந்த கள்வனை தான் தான் தேடி கொண்டு இருந்தாள் அந்த மாயக்காரி… 

 

இனியாவிற்கு இன்று காலை எழுந்ததில் இருந்தே எதோ ஒரு சொல்ல முடியாதா மன வலி… எதோ மனதை கட்டி இழுப்பது போன்ற உணர்வு… இன்று இந்த குடும்பத்தை விட்டு செல்ல போகிரோமே என்ற கவலை அவளை ஆட்கொண்டு இருக்க… 

 

இங்கு இருக்கும் சிறிது நேரமாவது அம்பை தன் மன கண்ணில் நிறைத்து வைத்து கொள்ள ஆசைப்பட்டு… காலையில் இருந்து தேடுகிறாள்… அன்பு தான் கண்ணிற்கு எட்ட வில்லை… இப்போது தெரிந்த அவனின் முகத்தை ரசித்த படியே சென்றவளுக்கு முன்னால் இருக்கும் பாதை தான் தெரியவில்லை 

 

[the_ad id=”6605″]

 

 

 

அன்பை நெருங்கிய இலக்கியன்”அண்ணா இந்தாடா செம்பு” என்றான் பித்தளை சென்பு ஒன்றை கையில் வைத்து கொண்டு 

 

இதை ஏன்டா என்கிட்ட தர என்றான் கடுப்பாக..  

 

“பின்ன நீ ஊத்துற ஜொல்லுல இந்த இடம் நெனஞ்சி போச்சுன்னா…. கல்யாணம் எப்படி பண்ணுறது” என்றான் மிக சீரியஸ்ஸாக முகத்தை வைத்து கொண்டு… 

 

அதில் கடுப்பானவன்… அவனிடம் அடிக்க கை ஓங்க… அதற்குள் சந்துரு அன்பை அழைக்க.. என்ன என்று கேட்க 

 

“உன் கிட்ட ரொம்ப முக்கியமான விஷயத்தை பேசணும்டா… கொஞ்சம் இங்க வாயேன்” என்றான் மெல்லிய குரலில் 

 

அதற்குள் வேலுச்சாமி அழைக்க… மேடையை அடைந்தவன்… இனியவளை உரசிய படியே நின்று இருந்தான் 

 

“எல்லாரும் பாக்குறாங்க… கொஞ்சம் தள்ளி நீக்கலாம் இல்ல” என்றவளை 

 

பாக்கட்டும்… அடுத்து நம்மளோட கல்யாணம் தானே நடக்க போகுது என்றான் வேறு ஒரு அர்த்தத்தில்… அவன் பேசி கொண்டு இருக்கும் போதே “ததாஸ்து” என்றார் அய்யர் 

 

“பத்தியா… அய்யர் கூட ஓகே சொல்லிட்டார்” என்றான் கண் அடித்த படியே 

 

அவனை புரியாமல் பார்த்த இனியாவிடம் “சமஸ்கிரத்துல ததாஸ்துனா அப்டியே அகட்டும்னு அர்த்தம்” என்றான் புரியும் படி 

 

ஓஒ என்றவளின் இதழையே பார்த்து கொண்டு இருந்தவனை முறைக்க… 

 

அதற்குள் அய்யர்… முகுர்த்த நேரம் நெருங்கிடுச்சி….”மாப்ள தாலியை காட்டுங்க” என்றார் 

 

ஊரார் அனைவரும் ஒன்று கூடி ஆசிர்வதிக்க…தன் மனதில் நாயகி தனக்கு இல்லாள் ஆனா மகிழ்ச்சியில்.. காயூ கழுத்தில் மங்கள நாணால் மூன்றும் முடிச்சிட்டு வாழ்க்கை துணையாக ஏற்றான் விக்கி… 

 

அதை பார்த்து கொண்டு இருந்த பெற்றோருக்கு அந்த கண்ணீர் வந்து விட… மகிழ்ச்சியில் அவ்விடம் திளைத்தது… 

 

அக்கனியை சுற்றி வளம் வந்து முடித்த மணமகள்… விக்கியிடம் குங்குமம் கொடுத்து அதை காயுவின் நெற்றியில் வைக்க… 

 

அதை பார்த்து கொண்டு இருந்த இனியாவிற்கு இந்த நாள் நம்  வாழ்வில் வராதா என்ற படி அன்பை பார்க்க… அவனோ “வரும்” என்ற அர்த்த படி… அவளின் தோல் மேல் கை போட்டு தன்னுடன் அணைத்து கொண்டான்…. 

 

இவர்களின் பேச்சு கடவுளுக்கு கேட்டு… அவர் அதற்கு சம்மதம் தெரிவித்து விட்டார் போல….

 

 திருமண சடங்குகள் நடந்து கொண்டு இருக்க… அதை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தவர்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் 

 

கோவில் வாசலில்…வரிசையாக புழுதியை கிளப்பி கொண்டு… ஐந்து வாகனங்கள் வந்து நிற்க… அதில் நடுவில் இருந்த பெரிய வாகனத்தில் இருந்து இருவர் இறங்க… 

 

அவர்களை பார்த்த அனைவருமே யார் இவர்கள்… கோவிலுக்கு வந்தவர்களா… இல்லை திருமணத்திற்கு வந்தவர்களா… என்று யோசித்து கொண்டு இருக்க 

 

அங்கு இருக்கும் ஒருத்திக்கு மட்டும் தான் தெரியும் அவர்கள் யார் என்று…

 

புரிந்தவள் மனதில் பயம் ஏற்பட… வைஷு எங்கே என்று ஒரு முறை எட்டி பார்த்தவள்… இலக்கியன் கையில் பாதுகாப்பாக இருந்தாள் அவள்… 

 

அவர்களை கண்ட அதிர்ச்சியில் உடல் நடுங்க…மனம் பதைபதைக்க… 

 

அருகில் நிற்கும் அன்பின் கையை இருக்கி பிடித்தவள் உடல் நடுக்கத்தை உணர முடிந்தது அன்பால் 

 

“இனியா என்ன ஆச்சு… ஏன் இப்டி”என்று கேட்டு கொண்டு இருக்கும் போதே 

 

லோகநாதன், மோகன் என்றாள் துக்கம் தேய்ந்த குரலில் 

 

அவள் கூறியது இரண்டு நிமிடம் கழித்தே அவனுக்கு புரிய… உண்மையா என்ற படி இனியாவையே பார்த்து கொண்டு இறந்தவனின் கண்ணிற்கு நேரே ஒரு கத்தி பாய்ந்து வந்து… அவனை தாக்கும் வேளையில்… அதை அவன் கண்ணிற்கு மிக அருகில் பிடித்தான் அன்பு 

 

                     மாயம் தொடரும்…… 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!