Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Amuthangalaal Nirainthaen

Thazhampoo Vaasam Nee 4 1

தாழம்பூ வாசம்  நீ…..

4

 

அப்பாவிடம் சரி சரி என வந்தவன்.. அண்ணனிடம் வந்து ஒரே தர்க்கம்.. “எனக்கு, என்ன பதில்… நான் போய் என் ட்ரீமிய பார்க்கவா.. இல்ல நீ கேட்டு சொல்லுவியா ” என கேள்விதான்  லிங்கா.



Advertisement

இளாக்கு, கோவம்… “இங்க பார்.. லிங்கா, பெரிய பிரச்சனையில் தான், நான் இருக்கேன். இங்க பர்மிட் வாங்கி நான் லோட் அனுப்பனும்.. இல்ல பெரிய லாஸ்…

இப்போவே வட்டிக்காரன்.. என்னை பிடுங்கறான்.. நான் பல்ல கடித்துக் கொண்டு பொறுமையாக இருக்கேன். இதல் நீ, வேற படுத்தாத, அவளை விடு. உனக்கே இங்க வீடு இல்ல.. இதில் காதல், கத்தரிக்காய் எல்லாம் எதுக்கு..

முடிஞ்சா போ.. மினிஸ்டர பார்த்து வேலையை முடி.. இல்ல, லீவ் இட்… என்னை கார்னர் பண்ணாத…” என்றான் கட் அண்ட் ரைட்டாக.

Advertisement

லிங்கா, முறுக்கிக் கொண்டேக் கிளம்பினான்.

Advertisement

காலை பதினோரு மணிக்கு வண்டி எடுத்து கிளம்பினான். விமான டிக்கெட்டை கான்செல் செய்து.. கிளம்பினான்.

அழகான ஆரஞ்சி நிற ரெணால்ட் வண்டி.. காற்றை கிழித்துக் கொண்டு, பறந்தது அந்தி வேளையில், புதுசேரி நோக்கி.

வண்டியில் இதமான ஒலியில் “நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே..

Advertisement

மேகம் கூட வானில் இல்லை…

எங்கும் நீல வண்ணமே…” என கசிந்து கொண்டிருக்க…

 

[the_ad id=”6605″]

 

 

லிங்கா.. தன்னுடைய.. கனவு நாயகியை குறித்த சிந்தித்தபடியே சென்றான். எல்லையை தொட்டதும்.. தனது நண்பர்களுக்கு போன் செய்தான்.

“டேய் எங்கடா இருக்கீங்க…” என்றான் எடுத்த உடன்.

“வா டா, நீ  எங்க இருக்க…” என ஆரம்பித்தது அந்த படையும்.

மொத்தமாக ஐவர் சென்னையிலிருந்து கிளம்பி மதியமே புதுசேரி வந்திருந்தனர். கடற்கரையோர விடுதியில்.. பொரித்தது.. வாட்டியது என எல்லாவற்றையும் ருசி பார்த்த படியே இருந்தனர். 

மீண்டும் ஏதோ.. பழைய மாணவர்களான நினைப்பு.. இப்போது நான்கு வருடம் சென்று.. லிங்காவை பார்க்கும் ஆவல் என எல்லாம் சேர்ந்தது அவன் நண்பர்களுக்கு.

லிங்காக்கு, அவர்கள் லோக்கேஷன் ஷேர் செய்ய… இன்னும் பத்து நிமிடத்தில் வந்து விடுவான் லிங்கா இங்கே.

இங்கே அதற்குள்.. மேலே சென்றது அந்த படை. தேவையான ப்ரண்ட் உடனெடுத்து.. ஏதோ திருவிழாவிற்கு தயாராவது போல தயாராகினர் எல்லோரும், மேலே அறைக்கு வந்தனர்.

ரூம் எண்ணை சரியாக கண்டுபிடித்து உள்ளே வந்த லிங்காவை ஆர்பாட்டமாக வரவேற்றனர் நண்பர்கள். நான்கு வருடம் கழித்து கல்லூரி நண்பர்களை பார்க்கிறான்.. என்னதான் பேஸ் புக்.. வாட்ஸ் அப் இருந்தாலும்.. நேரில் பார்ப்பதும் பேசுவதும் அலாதியானது தானே அந்த சந்தோஷம் எல்லோரின் முகத்திலும் தெரிந்தது.

லிங்காக்கு தாங்கவில்லை.. ‘என்னை மதிக்க இத்தனை நண்பர்களா.. என் துக்கத்தை பகிர இத்தனை நண்பர்களா..’ என தோன்ற.. வார்த்தைகளே வரவில்லை அவனுக்கு, திக்கு முக்காடி போனான் அவர்களின் அன்பிலும், வரவேற்பிலும். 

ஏனோ நட்புக்கு மட்டும் ஒரு தனித்துவம் உண்டு.. நண்பன்.. துவளும் போதெல்லாம்.. ஏன், எதனால்.. எதற்கு..  என கேள்வியே கேட்க்காமல் அரவணைத்து ஆறுதல் தரும். 

காதலில் தோற்ற, துக்கத்தை.. இப்படியும் கொண்டாடலாம் என தெரிந்திருந்தால், லிங்கா இன்னும் இரண்டு மூன்று பேரிடம் தோற்றிருப்பான் போல.

எல்லோரும் பெரிய வேலையில் இருப்பவர்கள், தொழில் செய்பவர்கள்.. என எல்லோரும் நல்ல நிலையில் உள்ள பொறுப்பான மனிதர்கள்தான். ஆனால், அதெல்லாம் அந்த மஞ்சள், வெள்ளை… கருப்பு நிற.. மந்திர திரவங்கள் உள்ளே செல்லும் வரை மட்டும்தான். அதன்பின்.. எல்லோரும் ஒரே நிலை, பரவச நிலைதான். ஏதோ இவர்களுக்கு மட்டுமே துக்கம்.. அது மட்டுமே பெரிது.. என தங்களுக்கு தாங்களே பேசிய படி.. இல்லை உளறிய படியே.. நிகழ் காலத்தை மறக்கும் விந்தை நிகழ்ந்தது அங்கே.

ஆம்.. தன் ட்ரீமியை, தான் எப்படி எல்லாம் காதலித்தேன்.. எப்படி அவளிடம் அன்பு செலுத்தினேன்.. என புலம்ப தொடங்கினான் லிங்கா. அமைதியாக ஓரிருவர் கேட்க.. ‘வா மச்சான்.. நாமா பொண்ண தூக்கிடுவோம்…’ என ஒன்றிரண்டு.. ‘விடு, மாப்பள அவங்களுக்கு கொடுப்பன இல்லை’ என ஒன்றிரண்டு.. ஆக, காக்டையில்… ப்ளஸ் காக்டையிலான உணர்வுகளால் கலைகட்டியது அந்த இரவு.

இப்படியே அந்த இரவு முழுவதும் கடந்தது. காலை ஓவ்வொருவராக விழிக்க.. பதினோரு மணிக்கு மினிஸ்டரிடம் அப்பாயின்மென்ட் என்பதால், லிங்கா பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருந்தான்.

அவனுடன் இருவர் மட்டும் கிளம்பினர். மற்றவர் இங்கேயே டேரா. லிங்கம், மாலை இங்கு வருவதாக ஏற்பாடு. எனவே, அடுத்த.. பார்ட்டிக்காக லிங்கத்திற்கு, கம்பெனி கொடுக்க இங்கு காத்திருந்தனர் மற்ற மூவர்.

சொன்ன நேரத்திற்கு முன்பே அங்கே கட்சி அலுவலகம் சென்றுவிட்டான் லிங்கா. போனில் அழைத்து கேட்ட அண்ணன் இளாக்கு நிம்மதி..  ‘மற்றது எப்படியோ, வேலை நடந்தால் சரி’ என அமைதியாக இருந்தான்.

பதினோரு மணி தாண்டிற்று.. கட்சி அலுவலகத்தில் காத்திருக்கிறான் லிங்கா. இன்று கஸ்டம்ஸ் கிளியர் செய்தால்தான்.. நாளை தூத்துக்குடி வழியா.. லோட் அனுப்ப முடியும். 

அதன் பிறகுதான் இந்த மூன்று மாதமாக இரவு பகலாக உழைத்த உழைப்பிற்கு.. பலன் கிடைக்கும். இங்கு கண்டைனர் ரெடியாக இருக்கிறது. எனவே, இளாக்கு அவசரம். வேலை நல்லபடியாக முடிய வேண்டுமே என.

மதியம் ஒன்று… இன்னும் மினிஸ்டர் வரவில்லை கட்சி அலுவலகத்திற்கு. லிங்காக்கு பொறுமையில்லை.. அங்கேயே, குறுக்கும்… நெடுக்கும்.. நடக்க தொடங்கினான். தன் அண்ணனிடமிருந்து ஐநூறு போன் கால்ஸ் வந்திருக்கும்.. இந்த இரண்டு மணி நேரத்திற்குள்.

லிங்கத்திற்கு, ஏதும் புரியவில்லை… ‘என்னாச்சு.. ஏன் இத்தனை ஆர்பாட்டம்’ என இவன் யோசித்தான். பாவம் விடை கிடைக்கவில்லை.

 

[the_ad id=”6605″]

 

 

லிங்கா.. அங்கிருந்த அமைச்சரின் உதவியாளரிடம் விசாரித்தான், அவரும் “திடீர்ன்னு போராட்டம் ஒன்னு, அதுக்காக.. காஞ்சிபுரம் வரைக்கும் போயிருக்காரு… வந்திடுவார்… ஈவ்னிங்…” என்றார் பொறுப்பாக.

இது அரசியல் உலகம்.. எனவே யாரையும் தவறு சொல்ல முடியவில்லை.. எனவே லிங்கம், மதியம் உணவு முடித்து, மீண்டும் வந்தான். அமர்ந்து கொண்டான்.. அந்த அலுவலகத்தில்.

இளாக்கு, பேசவில்லை அதன் பிறகு. அதுவே லிங்காக்கு.. ஏதோ போலானது.. ‘என்ன இப்போ.. இரண்டு நாள் கழிச்சி சரக்க அனுப்பிக்கலாம்’ என கொஞ்சம் உள்ளே புலம்பிக் கொண்டிருந்தான்.

இவன் பொதுவாக அலுவலகத்தில், கணக்கு, ஆடர்.. என எதையும் பார்ப்பதில்லை.. மேலோட்டமாக.. சூப்பெர்வைஸ் மட்டும் செய்து வருவான். எனவே அதன் முக்கியத்துவம் ஏதும் தெரியவில்லை லிங்காவிற்கு. அதை சிந்தித்தும்.. ஏன் மினிஸ்டர் நம்மை அவாயிட் செய்கிறார் எனவும் சிந்தனை அவனுக்கு.. நேரம் மெல்ல மெல்ல ஊர்ந்தது.

மணி மாலை ஏழு…

அப்போதுதான் சரியாக Gm போன் செய்தார் லிங்காக்கு. அவனுக்கு, பிடி படாத சந்தேகத்தை, கொஞ்சம் தயங்கியப் படியே கேட்டான் லிங்கம் ‘என்ன சர், பிரச்சனை பெருசா..’ என. அவரும் சிரித்த படியே எல்லா விவரமும் சொன்னார்.

“ஆமாம் தம்பி.. மினிஸ்டர், அனுமதி தரேன்னு சொல்லி… 6c வாங்கியிருக்கார்… நம்ம.. பெரிய டையிங் யூனிட்டுக்கு. அனுமதி வந்திடும்ன்னு நாம ஆடர் எடுத்து, இதோ.. முடிச்சாச்சு.. (66c..) சரியா,  லோட் கண்டைனரில் நிக்குது. அவரு கையெழுத்து போட்டாதான்.. கஸ்டம்ஸ் கிளியர் ஆகும்.

அவன்.. டியூட்டி பே செய்து நம்ம சரக்க எடுப்பான். அப்போதான், இங்க அமௌண்ட் வரும். வந்தாதான்.. எல்லோருக்கும் தீபாவளி.. இனி யாருகிட்டயும் கடன் கேட்க.. நம்ம கிட்ட எந்த ப்ராப்பர்டியும் இல்ல தம்பி.. 

அங்கேயே இருங்க, எவ்வளோ நேரமானாலும்.. இன்னிக்கு மினிஸ்டர பிடிங்க.. அங்க நமக்கு தெரிஞ்சவங்க… அதான் சம்பத்..கு..மார். அவர, வர சொல்லி இருக்கோம். அவர் உங்க கூடவே இருப்பார். எங்கையும் போயிடாதீங்க தம்பி… மினிஸ்டர்.. வந்திடுவார். போன் ட்ரை பண்றோம்.. PAதான் எடுக்கிறார்.. ஏதோ வேலையில்.. இருக்கார்ன்னு சொல்றாங்க… பார்ப்போம் தம்பி. “ என போனில் GM செந்தில்நாதன்… பேசிக் கொண்டிருக்க, இளங்கோவின் குரல் இடை மறித்தது “டேமிட்… எய்க்கிராண்டா.. நம்மை.. மொத்தமா கொடுத்திருக்கேன்… ராஸ்கல்… இன்னும் ஐந்து கேட்டான்… ‘இது கிளியர் ஆன உடனே தரேன்னு சொன்னேன்..’ பழி வாங்கறான்… நம்மை…” என பல்லை கடித்துக் கொண்டு பேசியது கேட்டது லிங்காவிற்கு.

லிங்கா, செந்திலிடம் “ஏன், கடைசி நேர டென்ஷன்.. கொடுத்து விட வேண்டியது தானே.. பணம்தான் வேலை செய்யும்ன்னு தெரியுமில்ல செந்தில் சார்…

ஏன் அண்ணன் ரிஸ்க் எடுக்கிறான்” என்றான் கேள்வியாக..

“தம்பி.. பத்துதான் இருக்கு. தொழிலாளர்களுக்கு.. சம்பளம் போனஸ் கொடுக்கவே அது பத்தாது. அவங்கள.. பார்த்துட்டுதான் அடுத்தது நமக்கு. இவங்களுக்கு.. இது அதிகப்படி வருமானம்.. ஆனால், நமக்காக வேலை செய்தவங்களுக்கு.. அதுதான் வருமானமே தம்பி.

அதெல்லாம் ஒன்னும் ஆகாது.. இளங்கோ சாருக்கு, டென்ஷன்.. நம்ம மினிஸ்டர் கிட்ட எல்லாம் பேசியாச்சு… ஒன்னும் பிரச்சனை இல்லை.. அவர் வந்திடுவார்.

நீங்க டென்ஷன் ஆகாதீங்க.. பொறுமையா இருங்க.. அவர் PA பேசினாலும் பொறுமையா பேசுங்க… சம்பத்தை கூட வைச்சிக்கோங்க… எல்லாம் சரியா நடக்கும்.” என பாஸிட்டிவாக பேசி போனை வைத்தார், செந்தில்நாதன்.

லிங்கத்திற்கு .5 சதவீதம் புரிந்தது. ஆக, முழுதாக இறங்கியுள்ளான் அண்ணன். கரணம் தப்பினால் மரணம்தான்.. என மூளை சொல்ல.. சின்ன நடுக்கத்தை உணர்ந்தான் தன் உடலில்.

எப்படி ஒரு நம்பிக்கையில் இதை செய்தான்.. அப்பாக்கு தெரியுமா.. அவர் கையெழுத்தில்லாமல்.. இதெல்லாம் நடக்குமா, அவருக்கு தெரியுமா.. தெரிந்தும் அமைதியாக இருக்கிறாரா… என எண்ணம் மனம் முழுவதும்.. வந்தது தம்பிக்கு.

 

[the_ad id=”6605″]

 

 

தன் காதல் தோல்வி என்ற கோடு.. அண்ணன் போட்ட ‘கடன்’ என்ற பெரிய கோட்டின் மூலம் சின்னதாக தெரிந்தது. லிங்காக்கு ஒன்றும் புரியாத நிலை.. அமைதியை தந்தது அவனுள். என்ன நடக்கும் என வேடிக்கை மட்டுமே பார்க்க வேண்டும் என எண்ணினான், அதைதான் செய்தான்.

இரவு மணி ஒன்பது.. அப்போதும் வரவில்லை அமைச்சர். ஓரளவுக்கு லிங்கா இதை எதிர்பார்த்தான்.. ‘பணத்தை பார்த்தவன்.. வேறு எதற்கும் மசியமாட்டான்’ என உள்ளே எண்ணம் எழுந்தது. 

மனதில் மானசீகமாக சொல்லிக் கொண்டான் ‘ண்ணா.. பணத்தை கொடுத்திடுண்ணா.. நம்ம வொர்க்ஸ்ச கூட இரண்டு நாள் சமாளிச்சிக்கலாம்.. இவர்கள் எல்லாம் அதில் புரள்பவர்கள். முடியாது ண்ணா.. உன்னால் இவர்களுடன் போராட முடியாதுண்ணா… ‘ என தனக்குள் மட்டுமே சொல்லிக் கொண்டான்.

‘இத்தனை நாள் எப்படி கம்பெனி ரன் ஆகுதுன்னு கூட தெரியாம இருந்தேனே.. ஐயோ.. என்ன நடக்குமோ’ என தோன்றியது லிங்காக்கு..

தன் நண்பர்களுக்கு போன் செய்து… செய்தியை சொல்லியவன்.. ‘நீங்க என்ஜாய் பண்ணுங்க டா… எனக்கு வேலையிருக்கு.. முடிச்சிட்டு கூப்பிடுறேன்’ என சொல்லி சமாளித்து வைத்து விட்டான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!