Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Varam Vaangi Vanthaval

Varam Vaangi Vanthaval Naan 14 1

வரம் வாங்கி வந்தவள் நான்

                          

                                அத்தியாயம் –  14

 



Advertisement

 

அதிகாலையிலேயே சுந்தருக்கு போன் வர அதை பேசி முடித்தவன் மச்சானை எழுப்பியபடி வெளியில் வர பசுமாடுகள் நான்கினை டெம்போவில் கொண்டு வந்து வாசலில் நிறுத்தியிருந்தனர்..

 

Advertisement

மாப்பிள்ளை ஆச்சர்யப்பட,

Advertisement

 

மச்சான் அப்பு எப்பவும் வாங்குற இடத்திலயிருந்து வாங்கி அனுப்பச் சொன்னேன்.. வேகமாக அந்த இரு டெம்போவிடம் சென்றவன் பார்த்து இறக்குங்க.. அவற்றின் கன்றுகளோடு அவற்றை மெதுவாக இறக்க அந்த பசுக்களை பார்த்தாலே தெரியும் அதன் விலையும் அதிகமென்று.. பாலும் அதிகம் தரும்.. பல வருடங்களாக பால்வியாபாரத்தில் இருக்கும் நாயகியின் கணவருக்கு தெரியாதா..

 

Advertisement

ஒவ்வொருராக எழுந்து வர அனைவருக்கும் ஆச்சர்யமும் ஆனந்தமும்தான்..

 

அடுத்த அரைமணி நேரத்தில் வேறு டெம்போவில் ஆஸ்பெட்டாஸ் சீட்கள், டேபிள் சேர் பெரிய டீ பாய்லர் மற்றும் பெரிய பெரிய பாத்திரங்கள் வந்திருங்கியது.. வேலையாட்கள் வந்து வீட்டின் முன்புறம் வந்த வேலையை ஆரம்பித்திருந்தார்கள்..

 

நாயகியின் மாமியாரை அழைத்தவன் அத்தை நீங்க இனி வெளியில எங்கயும் போக வேண்டாம்.. இங்கயே நாயகிய துணைக்கு வைச்சிட்டு சின்ன ஹோட்டல் மாதிரி நடத்துங்க… இட்லியோட பொங்கல் வடைன்னு என்ன தேவையோ பார்த்து செய்ங்கத்த.. நாயகியும் நல்லா சமைப்பா..

 

தயங்கியவர்.. தம்பி ஏன் இது தேவையில்லாத செலவு..??”

 

ம்கூம் செலவில்லத்த.. உங்க தொழில் தொடங்க சின்ன முதலீடு மட்டும்தான்.. மச்சானுக்கு நல்ல திறமை இருக்கு.. நீங்க உட்கார்ந்துகிட்டு அவங்கள செய்ய சொல்லுங்க.. அவங்களும் இனி முன்னேறிருவாங்க அப்புறம்..!!” சற்று  தயங்கியவன்..

 

அத்த நாயகியும் சின்னப் பொண்ணுதான் ஏதாவது தப்பா பேசியிருந்தாலோ, நடந்திருந்தாலோ மன்னிச்சிருங்க..” கையெடுத்து கும்பிட,

 

ஐயோ தம்பி அவன் கையை பிடித்தவரோ அவன் தலையில் கைவைத்து ஆசிர்வாதம் செய்தபடி என்மவன் சொன்னான் உங்க நல்ல குணத்தை பத்தி நீ நல்லாயிருக்கனும்பா.. நிறைய பிள்ளகுட்டிகளோட சந்தோசமா இருக்கனும்.. விடு விடு அவளும் என் மவமாதிரிதான் நான் பார்த்துக்குறேன்.. இவ்வளவுநாள் வேலையில்லாம இருந்திச்சு அதான் வீண் சகவாச போதனைகளை கேட்டுட்டு இருந்தா.. இப்பத்தான் அவளுக்கும் வேலை கொடுத்திட்டியே.. இனி எல்லாம் சரியா நடந்திரும்..

 

அன்று பிள்ளைகளும் லீவ் போட்டு ஆளுக்கொரு வேலையை பார்த்தார்கள்.. நாயகிக்குத்தான் என்ன சொல்வதென்று தெரியவில்லை.. அண்ணனிடம் பலமுறை நன்றியும் மன்னிப்பும் கேட்டுவிட்டாள்..குடும்பத்தினரும் வேலையாட்களோடு நின்று அவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்க தர்ஷினியை மட்டும் காணவில்லை.. மெதுவாக அவளை தேடியவன் வீட்டிற்குள் வர அப்போதுதான் குளித்திருப்பாள் போல உள் அறையில் சேலை கட்டிக் கொண்டிருந்தாள்..

 

இவன் உள்ளே செல்லும்போது சேலைகட்டி முடித்திருக்க… வடபோச்சே பீலிங்…. உள் கட்டிலில் அமர அவனை பார்த்தாலும் கண்டு கொள்ளாமல் பொட்டை சரிசெய்து கொண்டிருந்தாள்..

 

 

[the_ad id=”6605″]

 

 

ஏய் என்னடி ரொம்ப பண்ற..??”

 

அவள் உதட்டை சுழிக்க,

 

ஏய் என்னடி நக்கலா… பாவம் சின்னப்புள்ளன்னு கொஞ்சம் அமைதியா இருந்தா ரொம்ப பண்ற.. பேசுடி..அவளை நோக்கி வேகமாக செல்ல கண்ணாடி வழியே அவனை பார்த்தவள் பின்னோக்கி நகர ஆரம்பித்தாள்..

 

என்ன இருந்தாலும் சுடிதாரவிட சேலைதாண்டி என் லட்டுகுட்டிக்கு செம அழக கொடுக்குது.. அவளை இன்ச் பை இன்ச்சாக லுக் விட்டவன்… மாமன பார்த்தா பாவமா இல்ல… ப்ளிஸ்டா லட்டு பேசுடி.. அவளிடம் கெஞ்ச

 

அடப்பாவி சோனமுத்தாஆஆஆ இப்படி கெஞ்சத்தான் இவக்கிட்ட வேகமா வந்தியா.. நான்கூட ஒரு நிமிசம் ஷாக் ஆகிட்டேன் அவள அடிச்சிரகிடிச்சிர போறியோன்னு.. போடா டேய்..நீயும் உன் ஜொள்ளும்..’

 

அவளுக்கு இருபுறமும் கைகளை வைத்து நகரவிடாமல் தடுத்தவன் அவளையே விடாமல் பார்க்க இந்த லேசர் பார்வையை அவளால் பார்க்கமுடியவில்லை..

 

விடு மேன் நான் வெளியில போகனும்..

 

போகலாம் போகலாம் மாமனோட கொஞ்சநேரம் பேசு அப்புறமா போகலாம்.. என் தங்கச்சி தப்பு பண்ணினாடா அதான் திட்டினேன்.. அவ பண்ணின தப்புக்கு அன்பா சொன்னா அண்ணன் நமக்கு சப்போர்ட் பண்றான்னு ஒரு எண்ணம் வந்திரும் கொஞ்சம் அதட்டி பேசினதாலதான் அவளும் தப்பை உணர்ந்தா.. இதுக்கு போய் நீ மாமனோட பேசாம இருக்கிறது ரொம்ப ரொம்ப பேட் பேபி.. மெல்ல மெல்ல அவள் முகத்திற்கு நேராக செல்ல, பேசமாட்டியா..” கிசுகிசுப்பாக கேட்க,

 

அவன் மார்பில் கைவைத்து தள்ளியவள் ஓகே மாம்ஸ் நான் பேசுறேன்… ஆனா இப்ப நான் ஒன்னு கொடுப்பேன்.. அதுக்காக நீயும் என்ன திட்டக்கூடாது.. நோ சொல்லக்கூடாது..

 

ஐயோ தங்கம்டி நீ.. மாமன் அதுக்காகத்தான வெயிட்டிங் ஒன்னுல்ல பத்துவேணாலும் கொடு மாமா வாங்கிப்பேன்…வெட்கமா இருந்தா கண்ண மூடிக்கிறேன் நீ குடுத்துட்டே இரு மாமா வாங்கிட்டே இருக்கேன்..

 

அவன் கண்ணை மூடி சுவற்றில் தன் இருகைகளை வைத்தபடி இருக்க நேரம்தான் கடந்தது .. அண்ணி இந்தாங்க..

 

ஐயோ அத்தாச்சி என்ன இது வேண்டாம்… ஆத்தி என்ன பண்றிங்க..?”

 

அண்ணே.. அண்ணே.. இங்க பாரேன் அத்தாச்சி என்ன பண்றாங்கன்னு பாரு..  அண்ணனுக்கு என்னாச்சு அத்தாச்சி ஏன் சுவத்துக்கு முட்டு கொடுத்துட்டு நிக்குறாங்க..?”

 

இவள நமக்கு முத்தம் கொடுக்கச் சொன்னா.. அங்க கொடுக்கிறாளா..  கண்களை திறந்தவன் திரும்பி பார்க்க,

 

அங்கு தர்ஷினி தன் கழுத்தில் இருந்த சங்கிலியை கழட்டி நாயகிக்கு போட்டுக் கொண்டிருந்தாள்..

 

அண்ணே இங்க பாருங்க.. ஐயோ வேண்டாம் அண்ணி ..”அவள் சங்கிலியை கழட்ட போக,

 

தடுத்தவள் போட்டுக்கோங்க.. நான் உங்க அண்ணாட்ட கேட்டுட்டேன்..

 

அது எப்படியும் எட்டு பவுனுக்கு மேல் இருக்கும்.. அண்ணே இங்க பாருங்க..

 

தர்ஷினியை முறைத்தவன்.. இதத்தான் இவ குடுக்கிறேன்னு நம்மகிட்ட பர்மிசன் வாங்கினாளா.. நமக்கு பல்ப் கொடுக்கிறதயே வேலையா வைச்சிருக்கா..அதுக்காக இவ்வளவு பெரிய செயினா என்ன சொல்ல வந்திருப்பானோ அவன் கையை பிடித்தவள் ப்ளிஸ் என உதட்டை சுருக்கி பர்மிசன் கேட்க,

 

[the_ad id=”6605″]

 

 

இவ நம்மள பத்தி என்னத்தான் நினைச்சிருக்கா.. தர்ஷினியை முறைத்தவன் நாயகியிடம் என்கிட்ட கேட்டுட்டா நீ போட்டுக்கோ.. முகத்தை உர்ரென்று வைத்து வெளியில் சென்றிருந்தான்.. அன்று மாலைவரை அங்கிருந்தவர்கள் முக்கால்வாசி வேலை முடிந்த பிறகே ஊருக்கு கிளம்பினர்..

 

இந்த வார கடைசியில் வீடு தச்சு செய்வதற்கு வரச் சொல்லியவன் ஹோட்டலை நல்ல முறையில் திறக்க வாழ்த்தும் சொல்லி கிளம்ப நாயகி குடும்பத்தில் அனைவருக்கும் ஒரே நாளில் தங்கள் வாழ்க்கையே மாறியது போலிருந்தது..

 

ரொம்ப நன்றி மாப்பிள்ள.. நான் இத எதிர்பார்க்கல.. எங்கள தனிக்குடித்தனம் போகாம தடுக்கத்தான் உங்கள வரச்சொன்னேன்.. ஆனா நீங்க ரெண்டுபேரும் வந்து எங்க வாழ்க்கையையே மாத்திட்டிங்க.. இனி வாழ்க்கையில ஜெயிச்சு வந்திருவோம்ன்னு ஒரு நம்பிக்கை வந்திருச்சு..

 

என்ன மச்சான் நன்றின்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிட்டு இருக்கிங்க.. நாம எல்லாருமே ஒரே குடும்பம்தான்..நான் அப்படித்தான் நினைக்கிறேன்.. தங்கையின் தலையில் கைவைத்து அழுத்தியவன்

 

மச்சான் சொல்றத கேட்கனும்த்தா.. பெரியவுகளுக்கும் மரியாதை கொடுத்து பழகு.. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம்னு காரியத்தை பண்ணிறாத வரவா.” அனைவரிடமும் விடைபெற்று கிளம்ப வண்டியில் ஒரே அமைதி..

 

அவர்கள் ஊரை விட்டு தாண்டும் வரை அமைதியாக வந்தவள் அடுத்து ஒரு ஆரஸ்வதி காடு ஆரம்பிக்கவும் அவளுக்கு அந்த சூழல் ஏதோ பயத்தை ஏற்படுத்தியது அவனை இன்னும் ஒட்டி அமர்ந்து அவன் இடுப்பில் இருந்த கையை இன்னும் இறுக்க சுந்தர் ஒன்றும் சொல்லாமல் வண்டியின் வேகத்தை அதிகப்படுத்தியிருந்தான்.. ஏற்கனவே அவளின் சொத்துக்களை வாங்கியிருப்பது அவனுக்குள் ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியிருக்க இப்போது இத்தனை பவுன் நகையை தன் தங்கைக்கு கொடுத்தது  ஏதோ போலிருந்தது..

 

அவனை இன்னும் நெருங்கியவள் என்ன மேன் என் மேல கோபமா.. ரொம்ப சைலண்டா வர்ற..

 

அடுத்து ஏதோ ஒரு ஊர் ஆரம்பிக்க அங்கிருந்த கோவிலின் அருகே வண்டியை நிறுத்தியவன் அங்கிருந்த தெப்பக்குளத்திற்கு அருகே செல்ல தர்ஷினியும் பின்னாலே சென்றிருந்தாள்..

 

அவன் அந்த படியில் அமர இவளோ உள்ளே இறங்கி தண்ணீருக்குள் காலை விட்டபடி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்…

 

தர்ஷினி இங்க வா..?”

 

தர்ஷினியா தன்னை பேர் சொல்லி அழைக்கும் கணவனை வித்தியாசமாக பார்த்தவள் மெதுவாக படியேறி அவன் அருகில சென்று அமர,

 

இதோ பாரு தர்ஷினி இன்னைக்கு நீ என்னை கேட்காம நகையை கழட்டி கொடுத்தது சரி.. இனி எக்காரணம் கொண்டும் என்னை கேட்காம யாருக்கும் பணமோ நகையோ  கொடுக்கிற வேலை வைச்சிக்காத..??”

 

அவன் முகத்தில் கோபத்தை காணவும் உங்க சிஸ்டர்க்குத்தான கொடுத்தேன்.. அதுக்கு ஏன் மேன் முகத்தை உர்ருன்னு வைச்சிருக்க..??”

 

ப்பச் நான் சொல்றத முழுசா கேளு.. பணம்தான் இங்க நிறைய பிரச்சனைக்கு காரணமா அமையும்.. எனக்கு அவ ஒருத்தி மட்டும் தங்கச்சி இல்ல.. இன்னும் மூனு பேர் இருக்காங்க..நீ ஒருத்திக்கு மட்டும் இப்படி கொடுத்தா அது எல்லாரோட ஒத்துமையை குறைச்சிரும்.. எனக்கு தெரியும் யாருக்கு எப்ப என்ன செய்யனும்னு..?”

 

அப்ப நான் உங்க சிஸ்டர்ஸ்க்கு எதுவும் செய்யக்கூடாது அதுதானே ஓகே மேன்.. விடு..

 

[the_ad id=”6605″]

 

 

யேய் புரியாம பேசாத..நீ வளர்ந்த விதத்துல உனக்கு பணத்தோட அருமை தெரியல.. எங்களுக்கு அப்படி இல்ல..பணத்தோட அருமை ரொம்ப நல்லாவே தெரியும் .. இந்த பணத்துக்காகத்தான் நான் இவங்க எல்லாரையும் விட்டுட்டு பலவருசம் வெளிஊரு, வெளிநாடுன்னு கிடந்தேன்.. ஹோட்டல்ல சாப்பிட்டாக்கூட அதிகபணம் செலவாகுமேன்னு நானே சமைச்சு சாப்பிடுவேன்..

 

ஒவ்வொரு சிஸ்டர் மேரேஜ்க்கும் எப்படி பணம் சேர்த்தேன் அதுக்காக எத்தனை நாள் தூக்கம் இல்லாம வேலை பார்த்தேன்.. எனக்குத்தான் தெரியும்.. பணம் இல்லைனா சொந்தக்காரங்களே எப்படி கேவலப்படுத்துவாங்கன்னு அத சொன்னா புரியாது அனுபவிச்சவங்களுக்குத்தான் அதோட வேதனை தெரியும்.. இப்ப நீ தூக்கி எங்களுக்கு கொடுக்கிற பணமோ நகையோ உங்க அப்பா கஷ்டப்பட்டு சம்பாரிச்சதுதானே.. அத சரியான முறையில செலவழிக்கனும்டா.. அத நீ எங்களுக்காக செலவழிக்கிறத நான் விரும்பல..

 

 நீ ஒரு சிஸ்டர்க்கு மட்டும் செஞ்சா மத்தவங்க தப்பா நினைக்க வழியிருக்கு..அதோட ஒருத்தருக்கு அவங்க முன்னேறத்தான் வழிய காட்டனுமே தவிர இந்த மாதிரி நகையை கொடுத்து பழக்ககூடாது.. அடுத்து ஒரு சின்ன பிரச்சனை வந்தாலும் உழைச்சு முன்னேறாம இதுமாதிரி நம்மகிட்ட கேட்கத்தோனும்.. நம்மகிட்ட இருந்தா கொடுத்து உதவலாம் அந்த நேரத்தில ஏதோ ஒரு பிரச்சனையால கொடுக்க முடியலைன்னா அதுதான் அப்ப அவங்களுக்கு பெரிய குற்றமா தெரியுமே தவிர நாம முன்னாடி செஞ்ச எல்லாமே மறந்திரும்..

 

அதுக்காக அவங்களுக்கு கொடுக்க வேண்டிய சீரோ செய்ய வேண்டிய முறைகளோ அத நானும் நீயும்தான் செய்யனும் அதுக்கு நான் தடை செய்யல.. அது நம்மளோட கடமை.. ஆனா இது மாதிரி எதுவும் செய்யாம அவங்களையும் முன்னேற விட்டு நாம ஒதுங்கி நிக்கனும்.. புரியுதா.. இப்ப நீ என் மனைவியா வந்திருக்க இங்க இருக்கிறதையும் கொஞ்சம் வாட்ச் பண்ணு..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!