Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Varam Vaangi Vanthaval

Varam Vaangi Vanthaval Naan 4 2

 

.. தெய்வானை தம்பி வள்ளி வீட்டுக்கு  ஒரு எட்டு போய் அந்த பொண்ணப் ஒரு பார்வை பார்த்துட்டு வந்திருவோம்பு.. உன்ர தங்கச்சி நமுப்பா நமுக்குறா..

 

ஒரு வாரம் ஆகட்டும்த்தா.. அதற்குள் மழைக்காலம் அவர்களுக்கு கைகொடுக்க நிலத்தை உழ, நெல் விதைக்க என அந்த வேலைகளில் முழுமூச்சாய் ஈடுபட ஆரம்பித்தான்.. ஒவ்வொரு அடியும் கவனமாக வைத்துக் கொண்டிருந்தான்.. அன்று நாற்று நடும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்க விடியற்காலையிலேயே ஆட்கள் வந்திருந்தனர்.. அவர்களை பிரித்துவிட்டு வேலை செய்வதை பார்வையிட்டவன் சற்று தள்ளியிருந்த நிலத்தை பார்வையிட தன் பைக்கில் கிளம்பியிருந்தான்..



Advertisement

 

தன் யோசனையில் வந்து கொண்டிருக்க எதிரே தர்ஷினி நடந்து வந்து கொண்டிருந்தாள்.. ஏதோ சிந்தனையில் அவளை தாண்டி சென்றுவிட்டவன் நினைவு வந்து வண்டியை நிறுத்தி திரும்பி பார்க்க அவள் எதைப்பற்றியும் சிந்தனையில்லாமல் நடந்து கொண்டிருந்தாள்.. வண்டியை யூடேர்ன் அடித்து தர்ஷினி முன் நிறுத்த பயத்தில் ஒரு அடி பின்னால் வைத்திருந்தாள்..

 

Advertisement

எங்க போறிங்க..??” சுந்தரை பார்க்கவும் மூச்சை இழுத்துவிட்டு,

Advertisement

 

வா..வாக்கிங்..

 

Advertisement

வாக்கிங்கா.. இந்த பொண்ண பார்த்தா வாக்கிங் போற மாதிரி தெரியலையே..

 

அதுக்கு இவ்வளவுதூரமா வருவாங்க.. திரும்பி நடங்க.. இனி இந்த பக்கம் ஊர் எல்லை முடிஞ்சு காடாத்தான் இருக்கும்..

 

ம்ம் நீங்க போங்க நான் போறேன்..

 

அப்பத்தா எங்க.. துணைக்கு ஆள் இல்லாம இவ்வளவு தூரம் வரவிடமாட்டாங்களே.. இந்த காட்டுப்பகுதி கொஞ்சம் ஆபத்தானதுங்க.. பொம்பள பிள்ளைங்க தனியா வரக்கூடாது வாங்க..

 

ப்ளிஸ் நீங்க போங்க நான் வர்றேன்..

 

இல்ல வாங்க நானே வண்டியில கொண்டு போய் உங்கள வீட்ல விடுறேன்.. இல்ல வாங்க நானும் நடந்து வர்றேன்.. வண்டியை நிறுத்தியவன் அவளோடு சேர்ந்து நடக்கத் துவங்கினான்.. சுந்தரிக்கு போன் செய்து சுந்தரி.. அழகப்பத்தாவோட போன் நம்பர் இருந்தா ஆத்தாக்கிட்ட கேட்டுச் சொல்லு..

 

போனை எட்டிப் பறித்தவள் அதை ஆப் செய்து அவனிடம் கொடுக்க அவன் கைகட்டி பேசாமல் அவளை பார்த்தபடி நின்றிருந்தான்.. இப்போதும் சேலைதான் கட்டியிருந்தாள்.. இவ்வளவு தூரம் நடந்து வந்தது மேல்மூச்சு கீழ்மூச்சுவாங்கி வியர்வையில் உடல் தொப்பென நனைந்திருக்க சுந்தருக்கு பார்க்கவே பாவமாக இருந்தது.. திரும்பி எப்படியும் 3 கிலோ மீட்டருக்கு மேல் நடக்க வேண்டும்..

 

உங்களுக்கு ஏன் இப்ப இந்த தேவையில்லாத வேலை..என் விசயத்தில யார் தலையிட்டாலும் எனக்கு பிடிக்காது.. வந்த எனக்கு போக தெரியும்.. உங்க வேலை எதுவோ அத மட்டும் பாருங்க..??”கோபத்தில் முகம் தக்காளிபழம் போல சிவந்திருக்க, பசி வேறு அவளுக்கு வயிற்றை கிள்ளியது.. இத்தனை மணி நேரத்திற்கு ஒன்றும் காலையில் இருந்து சாப்பிடவில்லை.. இப்போது சுந்தரோடு பேசுவது வேறு அவளுக்கு எரிச்சலை கொடுத்திருந்தது..

 

அவனோ பொறுமையாக, உங்கள நான் ஒன்னும் டிஸ்டர்ப் பண்ணல.. நீங்க வீட்டுக்கு திரும்பி போங்க நான் பின்னாலயே வர்றேன்…இல்லனா அப்பத்தா நம்பர் சொல்லுங்க அவங்கள வந்து அழைச்சிட்டு போக சொல்றேன்.. நீங்க நினைக்கிற மாதிரி இந்த இடம் அவ்வளவு ஒன்னும் சேப்டி இல்லங்க.. கொஞ்சம் புரிஞ்சு நடந்துக்கோங்க.. ப்ளிஸ்.. அவ்வளவு பெரிய மனிதன் அவளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான்..

 

என்ன நினைத்து நாம வந்தோம்.. போச்சு இவனால எல்லாமே பாழாப்போச்சு … பெருமூச்சு விட்டவள் இவன்கிட்ட பேச பேச எனர்ஜிதான் வேஸ்டாகும் அவனை தீப்பார்வை பார்த்து வீட்டுக்கு போகும் வழியில் திரும்பி இரண்டெட்டுதான் எடுத்து வைத்திருப்பாள்.. ஒரு மாதிரி தலை சுத்துவது போலிருக்கவும் அங்கேயே மெதுவாக அமர ஒரே எட்டில் அவளிடம் வந்தவன்,

 

[the_ad id=”6605″]

 

மெதுவாக தன் மேல் சாய்த்துக் கொண்டு பதறியபடி,” தர்ஷினி என்னாச்சுங்க.. ஏங்க ஏங்க… அவள் கன்னத்தை தட்ட,

 

அவன் கையை பிடித்தவள் மெதுவாக விலக்கிவிட்டு ஒன்னுமில்ல விடுங்க..

 

ஒன்னுமில்லனா ஏன் இப்படி ரோட்ல உட்காருறிங்க.. என்னாச்சு உடம்புக்கு.. ஏதாச்சும் பண்ணுதா..?” அவன் பதட்டம் இவளுக்குள் ஏதோ செய்தது..

 

 ப்பச் ஒன்னுமில்ல.. பசிக்கிது.. பசி… இந்த வார்த்தை சுந்தரை அதிகம் பாதிக்கும்.. சிறுவயதில் இருந்து சாப்பாட்டிற்காக அதிகம் கஷ்டப்பட்டு பின் ஒவ்வொன்றிற்கும் கஷ்டப்பட்டு வளர்ந்தவன்.. அப்போதுதான் நினைவுக்கு வந்தது தான் காலை கிளம்பும் போது தாய் மோரை ஒரு தூக்குச்சட்டியில் ஊற்றி கொடுத்திருந்தது வேகமாக ஓடி அதை கொண்டுவந்து அவளிடம் நீட்ட ஒரே நிமிடத்தில் அதை காலிசெய்திருந்தாள். மேலெல்லாம் மோர் வடிந்திருக்க வேகமாக அவள் குடிக்கும் அழகை பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தாலும் தன் கையில் இருந்த துண்டால் அவள் சேலையை துடைத்து விட்டான்..

 

மோர் குடித்ததும் முகம் சற்று தெளிந்திருக்க, வாங்க வண்டியில கூட்டிட்டு போறேன்.. இல்ல அப்பத்தாவுக்கு போன் பண்ணி கார எடுத்துட்டு வரச் சொல்லவா…?”

 

இல்ல..” அவள் வண்டியை பார்க்கவும் வேகமாக வண்டியை ஸ்டார் செய்தவன் ஏங்க உங்க தெருமுனையில விட்டுருறேன்.. நீங்க வீட்டுக்கு நடந்து போய்க்கோங்க..

 

அவள் மண்டையை ஆட்டவும்,

 

என்னங்க ஒன்னும் சொல்லாம இருக்கிங்க.. நடக்க முடியாதா..??”

 

இல்ல இல்ல நடந்து போறேன்..வண்டியை மெதுவாக ஓட்ட ஆரம்பிக்க எல்லாம் சரியாகத்தான் போய் கொண்டிருந்தது.. அவர்கள் ஊருக்குள் வண்டியை விடும்வரை.. ஒரு தெருமுனையில் வண்டியை திருப்ப தர்ஷினி சேலையை சொருகாமல் விட்டிருந்ததால் அது வண்டியின் பின் சக்கரத்தில் மாட்டி அவளையும் சேர்த்து இழுத்திருந்தது..

 

ஓஓஓமைகாட்..” அவள் சுதாரிப்பதற்குள் வண்டியோடு சேர்த்து இருவரும் விழுந்திருக்க இவள் கீழேயும் அவன் மேலேயும் இருவருக்கும் மேல் வண்டியும் கிடந்தது..

 

ஸ்ஸ்ஸ்..” அவள் பாரம்தாங்காமல் சத்தம் எழுப்பவும் அவள் வெற்றிடையில் கைகொடுத்து தூக்கி மறுபக்கம் சரித்துவிட்டவன் இப்போது வண்டியின் முழுபாரத்தையும் தன் மேல் தாங்கி மெதுவாக அதை பிடித்தபடி எழ தர்ஷினியால் நகரமுடியவில்லை..

 

முந்தானை முழுவதும் மாட்டியிருக்க சேலையின் பின் அவிழ்ந்து பிளவுஸ் மட்டும் நன்கு தெரிய இடுப்பு கொசுவத்தோடு நின்றிருந்தாள்.. அவள் நின்ற கோலம் பார்த்து பதறி சுதாரித்து வேகமாக எழுந்தவன் அவளை இந்த நிலைமையில் பார்க்கமுடியாமல் வேகமாக வண்டியில் இருந்து சேலையை எடுக்க முயல அது நன்றாக அந்த சக்கரத்தில் சிக்கியிருந்தது.. பொறுமையாய் செய்தால்தான் அதை எடுக்க முடியும் ஆனால் சுந்தரின் கை நடுங்குவதை தன்னாலேயே கட்டுப்படுத்த முடியவில்லை..

 

ஒரு பெண்ணை இந்த கோலத்தில் பார்ப்பது இதுவே முதல்முறை.. தன்னுடைய இத்தனை வயதில் ஒரு நிமிடம்கூட அவன் சலனப்பட்டதில்லை.. எப்பொழுதும் குடும்பம், தங்கைகளின் திருமணம் அவை மட்டுமே நிறைந்திருக்கும்..

 

[the_ad id=”6605″]

 

ஆனால் இப்போதோ அவளின் அந்த இடையை பார்க்கையில் அதை ஒருகை பிடியில் அடக்கிவிடலாம் போலிருக்க, அங்கு கஞ்சத்தனம் செய்த பிரம்மனோ, எங்கு வைக்க வேண்டுமோ அங்கு கூடுதலாகவே வைத்திருந்தான் ஆலிழை வயிற்றில் முத்தமிட்டு அவள் மார்பில் முகம் புதைக்க மனம் துடித்தது.. அவனால் அவனை கட்டுப்படுத்த முடியவில்லை..அவள் இளமையின் செழிப்பு அவனை பித்தம் கொள்ள வைக்க.. தன் இளமை இந்தளவிற்கு ஆட்டம் போட்டது இப்போதுதான்.. அதை அடக்க முடியாமல்தான் சுந்தர் திணறிக் கொண்டிருந்தான்..

 

ஆனால் அதைவிட வேறு யாரும் இந்த நிலையில் தர்ஷினியை பார்த்துவிடக்கூடாது என்பதே முதன்மையாய் இருக்க வண்டியில் கவனத்தை செலுத்த முற்பட்டவன்..

 

அப்போதுதான் கவனித்தான் 100 நாள் வேலைக்கு பெண்கள் கூட்டமாக கிளம்பி வந்து கொண்டிருப்பதை.. போச்சு தர்ஷினிய இப்படி பார்த்தா என்னாகுறது அவர்கள் இவர்களை நோக்கி வருவது தெரியவும் சட்டென தன் சட்டையை கழட்டி தர்ஷினியிடம் கொடுத்து இதப் போட்டுக்கோங்க.. கையை வைத்து தன் மானத்தை காத்துக் கொண்டிருந்தவளுக்கு கோபம்தான் முதன்மையாக வந்தது..

 

நான்சென்ஸ்… தனியா போய்ட்டு இருந்த என்னை… ப்பச் இப்ப தேவையில்லாம ப்ரீ ஷோ காட்ட வைக்கிறான் ப்ளடி..!!” வாய்க்குள் முனுமுனுத்தவள் ஒருகையால் சட்டையை வாங்க கையை நீட்ட அந்த டாட்டூ அவனுக்கு பளிச்சென்று தெரிந்தது.. டேய் சோனமுத்தாஆஆ அது எப்படிடா எப்ப அந்த பொண்ண நீ பார்த்தாலும் அந்த டாட்டூவையும் சேர்த்து பார்த்துருர… உன் காட்டுல மழைதான்டா.. அடச்சே இதுவேற தேவையில்லாம..நான் இருக்கிற டென்சன்ல

 

அதற்குள் அந்த பெண்கள் கூட்டம் அவர்களை நெருங்கியிருக்க இனி பொறுமை வேண்டாம் என நினைத்து சேலையை அப்படியே வேக வேகமாக இழுத்தான்.. அது ஆங்காங்கே குதறியபடி கிழிந்து தொங்க ஏங்க இத இடுப்பில சொருகிட்டு அந்த பக்கம் திரும்பி நில்லுங்க..!!”

 

யாரு தெய்வானை அத்தாச்சி மவன் சுந்தரு மாதிரியில்ல இருக்கு.. என்னாச்சு சுந்தரு..??”

 

போச்சு போச்சு.. இது ஒரு சன்நியூஸ்ஸாச்சே.. ஒன்னுமில்லத்தே.. வண்டியில ஒரு சின்ன பிரச்சனை அதான் பார்த்துட்டு இருக்கேன்..

 

அது சரி மருமகனே இந்த பொண்ணு நம்ம அழகம்மை அயித்த பேத்தி மாதிரி இருக்கு.. ஆத்தா இங்கிட்டு திரும்பு..

 

ஐய்யய்யோ திரும்பாதிங்கன்னு சொல்ல மறந்திட்டமே.. தர்ஷினி அவர்கள் பக்கம் திரும்ப ,”அட அதுவேதான்..!!”

 

ஏப்பு மருமவனே அது ஏன்.. உன்ர சட்டையை அந்த பொண்ணு போட்டிருக்கு.. வண்டியில ஜோடியா வாரையில சேலைய வண்டிக்குள்ள குடுத்திருச்சாக்கும்.. கொக்கி போட்டு நிறுத்த..

 

ஆத்தி இவங்க எல்லாரும் சிபி சிஐடிய விட விபரமானவங்களே இந்த பொண்ணு கொஞ்சநேரம் வாய் திறக்காம இருக்கனுமே.. இவன் வேகமாக வண்டியில் சிக்கியிருந்த சேலை துணுக்குகளை எடுக்க ஆரம்பித்தான்..

 

 

ஆத்தா தங்கம் நீ சொல்லுடா.. மருமகனோட வார போதுதான் வண்டியில சேலை மாட்டிக்கிருச்சா..

 

தர்ஷினிக்கோ அவள் போட்டிருந்த சட்டையில் இருந்து வந்த அவனது வியர்வை மணம் அவளை ஏதோ செய்ய இதை எப்போது கழட்டுவோம் என்றிருந்தது.. அவளுக்கிருந்த எரிச்சலில் இவர்களை பார்த்து ,”ப்ளிஸ் நன்ஆப் யுவர் பிஸினஸ்…கெட் லாஸ்ட்..

 

நாங்க என்னத்தா பிசினஸ பார்க்கோம் நாங்களே அஞ்சுக்கும் பத்துக்கும் கம்மாய் வெட்டு வேலைக்கு… லாஸ்ட்டாத்தான் போறோம்… அதற்குள் அனைத்தையும் எடுத்து முடித்திருந்தவள் வண்டியை வேகமாக ஸ்டார்ட் செய்து..

 

இல்லத்த.. அவங்களுக்கு என்னமோ ஒரு அவசர சோலியிருக்காம் அதான் வரவா..? நீங்க ஏறுங்க.. தர்ஷினி அவன் இடுப்பை பிடித்துக் கொண்டு அமர வண்டியை வேகப்படுத்தியிருந்தான்..

 

[the_ad id=”6605″]

 

இருவரும் ஜோடியாக போவதை பார்த்தவர்களோ ஏல மீனாட்சி சுப்பையாண்ணே மவன் வேலு சொன்னாப்புல இவன் அந்த நாட்டுல இந்த பொண்ணத்தான் வைச்சிருந்திருப்பானோ..??”

 

இருக்கும் அத்தாச்சி ரெண்டு பேரும் ஒரே பிளேட்டுலதான் சோடிப்போட்டு வந்து இறங்கியிருக்குக.. அன்னைக்குகூட கருப்பன் கோவில்ல இந்த பொண்ணு தண்ணிக்குள்ள விழுந்தப்போ சுந்தருதான் காப்பாத்தியிருக்கு.. இப்ப பாரு ரெண்டும் ஒன்னா சோடிப்போட்டு சுத்துதுக.. அதுவும் சுந்தரோட சட்டைய போடுற அளவுக்கு..

 

இங்கிட்டு இருந்து வாராகளே அந்த பக்கம் காடு தானே இருக்கு..அப்போ ரெண்டுபேருக்குள்ளயும் நல்ல பழக்கம்தான் போல… ம்ம்ம் எந்த புத்துக்குள்ள எந்த பாம்போ யாரு கண்டா..??” சுந்தர் மேல் இருந்த துவேசத்தில் அவன் அண்ணன்கள் பற்ற வைத்த நெருப்பு இங்கு அழகாக புகையத் துவங்கியிருந்தது..

 

 

 

                                                                                               இனி………….????

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!