Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Varam Vaangi Vanthaval

Varam Vaangi Vanthaval Naan 8 2

 “ஆமாய்யா எல்லாருக்கும் ஒன்னாதான் டிக்கெட்டு போட்டோம்.. கடைசியில கிளம்புற நேரத்தில போலிஸ்ல ஏதோ விசாரனையிருக்கு அப்புடின்னு ஒருவாரம் கழிச்சு போகச் சொன்னாக.. அப்புறமா மருமவனோட வியாபாரகூட்டாளி வீட்ல தர்ஷினிய விட்டுட்டு நாங்க மட்டும் வந்தோம்.. அப்புறம் மூனுநாளு கழிச்சு நீ வரும்போதுதான் அவளும் வந்தா..

 

அவங்க கூட்டாளி எப்படி..?? ஒருவேளை அவங்க..??”

 



Advertisement

இல்லப்பு இல்லப்பு அவுக எல்லாரும் நல்ல குணம்.. இதுமாதிரி பிரச்சனை நடக்கும்போது அவுக அங்கனயே இல்ல.. இங்கன தஞ்சாவூர் பக்கத்துல அவுக ஊர் திருவிழான்னு இங்க இருந்திருக்காக அப்புறமா தகவல் தெரியவும்தான் அடிச்சுபிடிச்சு ஓடி வந்தாக..

 

அங்க இருந்த நகைக்கடை என்னாச்சு..? தர்ஷினிக்கும் அதில பங்கு இருக்குதானே..?”

Advertisement

 

Advertisement

ஆமாப்பு இருக்கு .. ஆனா அவுக ஊருக்கு போகும்போது எல்லா கணக்கு வழக்குகளை என் மருமவன்கிட்டதான் கொடுத்திட்டு போயிருக்காக.. அதோட நகைக்கடையில இருந்த விலைகூடுன நகை கொஞ்சம் என் மருமவன் வசம் இருந்திருக்கு..அதில நிறைய விலை கூடின வைரமாம்.. ஆனா அத ஏன் இவரு வீட்டுக்கு கொண்டு வந்தாருன்னுதான் அவுகளுக்கு தெரியலையாம்..

 

எப்பவும் இதுமாதிரி எல்லாம் ரெண்டு பேர்வீட்லயும் விலை அதிகமான நகை வைக்கிறது இல்லைன்னு.. அவுக சினேகிதப்புள்ள மாஞ்சு மாஞ்சு போறாரு.. இந்த பிரச்சனை நடக்கிறதுக்கு முதல்நாளுதான் இதப்பத்தி போன்ல சொல்லியிருக்காரு.. ஒரு வைர வியாபாரி வீட்ல வந்து நகை வாங்கிகிறேன்னு சொன்னாக அதான் வீட்ல வைச்சிருக்கேன்னு சொன்னாராம்.. இவுக மேல இருக்கிற நம்பிக்கையில அவுகளும் பத்திரம்னு சொன்னதோட இதப்பத்தி பேசலைன்னு சொன்னாக..

Advertisement

 

[the_ad id=”6605″]

 

ஆனா வீட்ல எந்த பொருள் எங்கன இருக்குன்னு விவரம் தெரிஞ்ச பயலுகதான் கொள்ளையடிச்சாங்கன்னு அந்த ஊர் போலிசு சொன்னாக.. ஏன்னா இந்த டிவி பொட்டி மாதிரி யாரு வீட்டுக்குள்ள வாரா போறா பார்க்க ஒரு பொட்டியிருக்குள்ள அத பார்த்தா அதுல ஒன்னுமே தெரியலையாம்..

 

இப்ப அதுவேற பெரிய பிரச்சனையா இருக்கு..அதான் கண்டுபிடிக்க இவ்வளவு தாமசமாம்.. நம்ம வீட்ல இருந்து நகை காணாம போனதால அத இவுக பங்குல இருந்து கழிச்சிருவாகலாம் ஏதேதோ சொல்றாகப்பு.. எல்லாம் என் சின்ன மகனுக்குத்தான் தெரியும்..

 

சுந்தருக்கே தெரிந்தது அதில் தெளிவு படுத்த வேண்டிய விசயங்கள் நிறைய இருக்கிறது என , கண்டிப்பாக தர்ஷினியின் சின்ன மாமாவை சந்திக்க மேண்டும் என்பதை குறித்துக் கொண்டான்..

 

ஆனா இங்கன உள்ளவிக எல்லார்கிட்டயும் தொழில்ல ரொம்ப சறுக்கல் எல்லாத்தையும் இழந்துட்டாகன்னு தாப்பு என் மவன் சொல்லச் சொன்னான்.. சொத்துபத்து நிறைய இருக்குன்னு தெரிஞ்சா அவளுக்கு ஏதாச்சும் பிரச்சனை வந்திரும்ன்னு இவன் பயப்படுறான்.. அதோட இவ ஒருத்தியையாவது காப்பாத்தி நல்லா வாழ வைக்கனும்னு அவனோட எண்ணம்..

 

அந்த நேரம் கதவை திறந்து கொண்டு தர்ஷினி உள்ளே வந்தவள் தன் அம்மாச்சியை கட்டிக் கொண்டு ஒரே  அழுகை.. கழுத்தில் சுந்தர் கட்டியிருந்த புத்தம்புது தாலி.. நல்ல வயலட்நிற பட்டுச்சேலை… மிதமான அலங்காரத்தில் ஒரு தேவதை போல ஜொலித்தவளை பார்த்தவனுக்கு இவளை அந்த துன்பத்தில் இருந்து எப்படி மீட்கப் போகிறோம் என்பதுதான் முதலில் தோன்றியது..

 

பிறக்கும்போதே அனாதையாக பிறப்பது ஒன்று.. தாய், தந்தை, சகோதரன் என உறவுகளோடு அருமையாக வளர்ந்து திடிரென அவர்களை இழந்தால் கண்டிப்பாக அதை தாங்கமுடியாது..

 

கிரான்மா உங்களுக்கு ஒன்னும் பிராபளம் இல்லையே.. ஆர் யூ ஆல்ரைட்..

 

எனக்கு ஒன்னுமில்லத்தா நான் நல்லாத்தான் இருக்கேன்.. அவளின் கண்ணை துடைத்துவிட்டவர் அவள் கைகளை பிடித்தபடி தன் அருகில் அமரவைத்து.. நான் உன்கிட்ட ஒன்னு கேட்கனுமே..??”

 

கேளுங்க கிரான்மா.. பட் அதுக்கு முன்னால இங்க பாருங்க.. இந்த ஸ்டுப்பிட் எனக்கு தாலி கட்டிட்டான்.??”.தன் தாலியை எடுத்து காட்டியபடி சுந்தரை கோபமாக முறைக்க..

 

ஆத்தி ஆத்தி அப்படியெல்லாம் சொல்லபிடாதுத்தா.. சுந்தரையும் ராமையாவையும் சங்கடமாக பார்த்தவர்.. ராமையா என்ர பேத்திய தப்பா நினைச்சுக்காதப்பு.. ஏதோ சின்னப்புள்ள தனமா பேசுரா..??”

 

ஏன்த்தா நான்தான் சொன்னேனே இவ என்ர தங்கச்சி மகதான்னு..??” அப்புறம் ஏன் நான் கோவிச்சுக்க போறேன்..

 

சுந்தருக்கோ இத்தனைநாள் சோகமாக பார்த்த தர்ஷினியை விட இந்த கோப முகத்தில் இருக்கும் மனைவியை பார்த்து புன்னகை.. சீக்கிரமே அவளை அந்த கூட்டுக்குள் இருந்து வெளிகொண்டு வந்துவிடலாம் என்ற நம்பிக்கை..

 

இனி சுந்தருதான் உனக்கு எல்லாமே.. உன் புருசன இப்படியெல்லாம் பேசக்கூடாது..

 

ப்பச்.. ஆன்ட்டி சொன்னாங்க நான் இவர மேரேஜ் பண்ணலைன்னா நீங்க செத்துப்போவிங்கன்னு.. இல்லனா உங்கள அவங்க வீட்டவிட்டு அனுப்பிருவேன்னு அதான் நான் சைலண்டா இருந்தேன்..

 

அப்பத்தா முதல்முறையாக பார்வதிக்கு மனதிற்குள் நன்றி சொன்னார்.. அவ என்ன நினைச்சு பண்ணினாலோ இது நல்லதுலதான் முடிஞ்சிருக்கு..

 

[the_ad id=”6605″]

 

ஆனா பேத்திக்கிட்ட வசதியில்லைன்னு நாங்க சொல்லவும் அவ இந்த பிள்ளைய என்ன பாடுபடுத்துனா..பார்வதி பேசிய பேச்சுக்களை நினைவுக்கு கொண்டு வந்தவர் தன் பேத்தியின் கன்னத்தை வருடி.. கருப்பா இனி என் பேத்திக்கு எல்லாம் நல்லது நடக்கும்னு எனக்கு நம்பிக்கை வந்திருச்சு.. தன் சுருக்கு பையிலிருந்து போனை எடுத்து பேத்தியிடம் கொடுத்தவர் ,

 

ஆத்தா உன் சின்ன மாமாவுக்கு போன போட்டு கொடுத்தா நான் பேசனும்..??”

 

தன் சின்ன மகனிடம் இங்கு நடந்தவற்றை மேலோட்டமாக சொல்லியவர் அவர் சுந்தரிடம் பேசுவதாக சொல்லவும் போனை அவனிடம் கொடுத்தார்..

 

அதை வாங்கி காதில் வைத்தபடி இவர்கள் காது கேட்காத தூரத்திற்கு சென்றவன்.. சொல்லுங்க சித்தப்பா..?”

 

 ஹாய் யெங்மேன்..என்னன்மோ பிரச்சனை நடந்திருக்கும் போல.. பாஸ்ட் இஸ் பாஸ்ட்.. யார் மேல தப்பு சரின்னு நான் பேசவிரும்பலை சுந்தர்.. எது நடந்தாலும் உனக்கும் தர்ஷினிக்கும் மேரேஜ் முடிஞ்சிருச்சு அதுவும் ராமையா அண்ணன் மகன்னு சொல்லவும் எனக்கு ரொம்ப ஹாப்பி.. அப்பாவ எனக்கு ரொம்ப நல்லா தெரியும் உன்னப்பத்தியும் ஆத்தா இப்போ சொன்னாங்க..ஒருத்தர பத்தி ஆத்தா கணிச்சா அது சரியாத்தான் இருக்கும்..என் தங்கச்சி பொண்ணு ஒரு பூ மாதிரி அத எப்பவும் நீ வாடாம பார்த்துக்கனும்..

 

கண்டிப்பா சித்தப்பா..

 

அப்புறம் உன்கிட்ட நிறைய பேசனும்.. இன்னும் ரெண்டுநாளுல நான் லீவ்போட்டுட்டு பேம்லியா அங்க வர்றோம்.. அதோட ஒரு முக்கியமான விசயம்.. ஆத்தா தர்ஷினி அங்க ஹாஸ்பிட்டல்ல இருந்தத சொன்னேன்னு சொன்னாங்க.. நீங்க அதப்பத்தி  தப்பா நினைச்சுறாதிங்க..  

 

அந்த சமயத்துல தர்ஷினிக்கு ஏற்பட்ட அதிகப்பட்ட அதிர்ச்சிதான் இதுக்கு காரணம்… அம்மா அப்பான்னு ரொம்ப செல்லமா வளர்ந்திட்டு ஒரே நாளுல அவங்க எல்லாரையும் அந்த நிலைமையில பார்த்தா ஸ்ட்ராங்கா இருக்க நாமே டிப்ரஷன் ஆகிருவோம்..

 

பட் அவ உலகம் தெரியாதவ..அதான் அவளால தாங்கமுடியல..அவளோட ரிப்போர்ட் எல்லாம் அங்கதான் இருக்கு நீங்க வேணா யாராவது உங்களுக்கு தெரிஞ்ச டாக்டர்கிட்ட கன்சல்ட் பண்ணிக்கோங்க.. தர்ஷினி ரொம்ப ரொம்ப சுட்டிப் பொண்ணு.. எனக்கு அவ மறுபடி அதே மாதிரி மாறனும் அதுதான் அந்த மாமனோட ஆசை சுந்தர்.. அத்தானுக்கு இவள பத்தி நிறைய கனவு இருந்திச்சு.. ப்பச் இப்ப அது எல்லாமே கனவா போச்சு..

 

ஆனா நீங்களும் உங்க பேம்லியும் அவள நல்லா பார்த்துக்குவிங்கன்னு நினைக்கிறேன்..  நீங்க ஆஸ்திரேலியாவுல 5 இயர்ஸ் வொர்க் பண்ணினதா ஆத்தா சொன்னாங்க.. அங்க போலிஸ் கேஸ், அதோட இவங்க நகைக்கடையோட பங்குன்னு ஏகப்பட்ட பிராபளம் இருக்கு அதையும் உங்ககிட்ட பேசனும்… நான் வர்றதுக்குள்ள உங்க மேரேஜ லீகலாவும் ரிஜிஸ்டர் பண்ணிருங்களேன் சுந்தர்..

 

கண்டிப்பா சித்தப்பா அதுக்கு முயற்சி பண்றேன்..

 

[the_ad id=”6605″]

 

 

அப்புறம் தர்ஷினியப்பத்தி அவ வசதியப்பத்தி இப்ப யாருக்கும் தெரிய வேணாம்.. முக்கியமா எங்க அண்ணா பேம்லிக்கு..??”

 

சரி சித்தப்பா..

 

ஓகே யங்மேன்..ரெண்டுபேரும் ஹாப்பியா இருங்க நான் எவ்வளவு சீக்கரம் வரமுடியுமோ அவ்வளவு சீக்கிரமா மீட் பண்ண வர்றேன்.. அது கிராமம் சுந்தர் இனி கொஞ்சநாளைக்கு உங்களையேதான் வாட்ச் பண்ணுவாங்க..கவனம் ..அவ சின்னபிள்ளதனமா ஏதாவது செஞ்சாலும் நீங்க பார்த்துக்கோங்க..

 

அவ வாழ்க்கை நல்லா இருக்கனும்னு ஒரு காரணத்துக்காகத்தான் சிலபல பொய்களை சொல்லி என் அண்ணனோட பையன் தர்ஷினிய கல்யாணம் பண்ணிக்கிறத நான் தடுத்தேன்..  நீ அவள நல்லா வைச்சுக்குவன்னு நம்புறேன்.. இன்னும் சில விசயங்களை பேசி அடுத்து போனை தர்ஷினியிடம் கொடுக்கச் சொன்னார்..

 

அவர் ஏதோ சொல்ல சொல்ல இவள் சரி அங்கிள்..” என்ற வார்த்தையைத்தான் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள்..கடைசியில் ஓகே அங்கிள் நான் அவங்க வீட்டுக்கு போறேன்.. ஆனா கிரான்மாவையும் கூட்டிட்டு போறேனே.. ப்ளிஸ் ப்ளிஸ்..

 

இதழை சுருக்கி அவரிடம் கெஞ்சி கொண்டிருக்க.. அவளின் அந்த அழகில் இவன் வீழ்ந்து கொண்டிருந்தான்.. இவ என்னோட பொண்டாட்டியா தன்னையே கிள்ளிப்பார்த்தவன்.. இவ்வளவு பிரச்சனை நடந்தாலும் தர்ஷினி தனக்கு மனைவியாய் வந்ததில் உள் மனதிற்குள் மகிழ்ச்சிதான்..நீ கவலைப்படாதடா லட்டு உனக்கு அம்மா அப்பான்னு எல்லாமா உன்ன பார்த்துக்குவேன்.. உன்ன பழைய தர்ஷினியா சீக்கிரமே மாத்திருவேன்டா..!!!

 

                                                                               இனி…..????

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!