Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

விலகாதே உயிரே

Vilagaathae Uyirae 2

தேவாவின் அப்பா என்ன கூற போகிறார் என்று ஆர்வத்துடன் அவன் பார்த்துக் கொண்டிருந்தான்…..

அவனது அப்பா உனக்கு பெண் பார்த்த இடம் நல்ல இடம். அந்தப் பெண் வீட்டில் அவளுக்கு ஒரு அண்ணன் இருக்கிறான், அவனும் நன்றாக படித்து நல்ல வேலையில் இருக்கிறான்…

உன் தங்கை ரம்யாவும் படிப்பை முடித்து  விட்டாள் பேசாமல் உன் தங்கையை அவளது அண்ணனுக்கு நாம் கேட்கலாமா????

அதான் உன்னிடம் கேட்போம் என்று உன்னை தனியாக அழைத்தேன் என் மனதிற்கு சரி என்று பட்டது சரி உன்னிடம் கேட்டுக் கொண்டு பிறகு வீட்டில் அனைவரும் கலந்து பேசலாம் என்று தான் உன்னை தனியாக வர வைத்தேன் என்று அப்பா கூறினார்……



Advertisement

அப்பா ரம்யா இன்னும் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள்… அவள் என்னும் படிக்கட்டும்ப்பா பிறகு கல்யாணத்தைப் பற்றி பேசிக்கலாம் என்று தேவா அப்பாவிடம் கூற அப்பாவிற்கு அது கொஞ்சம் சரி என்று தோன்றியது….

அப்படியா அதுவா சரிப்பா பேசினா ஓகே தான்  அவளுக்கும் ஒரு கல்யாணத்தை முடிச்சிட்ட எங்க கடமை முடிந்துவிடும் என்று நினைத்தேன் அந்தப் பெண் வீட்டில் எல்லாரும் நல்லவர்களாக தெரிகிறார்கள் நல்ல குடும்பம் அவன் அதை விட்டுவிட வேண்டாம் என்று நினைத்தேன்….

என்று அப்பா கூற சரிங்கப்பா கொஞ்ச நாள் ஆகட்டும் பிறகு சொல்றேன் என்ற தேவ கூறிவிட்டு அவன் தங்கையை தேடினான்….

Advertisement

ரம்யா….
எங்க இருக்க???

Advertisement

என் போனை கொடு எனக்கு முக்கியமாக ஒரு போன் கால் வரும் என்று போனை அவள் கையில் இருந்து பிடிங்கினான்…

தீபாவின் அழைப்புக்காக காத்துக் கொண்டே இருந்தான்…. அவனது அப்பா சொன்னதையும் மனதில் யோசித்துக் கொண்டிருந்தான்…

ரம்யாவிற்கு இப்போ கல்யாணம் பண்ணலாமா இல்லை வேறு படிப்பு படிக்க வைக்கலாமா என்று யோசித்துக் கொண்டே மொபைலை எடுத்தான்…

Advertisement

அப்போது தேவாவின் மொபைல் ரிங்டோன் அடிக்க அவன் ஆர்வமாக மொபைலை கையில் எடுத்தான்…

ஹலோ…..

மறுமுனைகள் இருந்து தேவா….

அப்படி என்று குரல் கேட்டது….

ஆமா நான் தேவா தான் பேசுகிறேன்……

நீங்க…..???

நான்…
நா….

அதற்குள் தேவா புரிந்து கொண்டான், மறுமுனையில் இருப்பது தீபா என்று..

தீபா அப்படி என்று கூப்பிட்டான்…

பரவாயில்லைங்க நான் யாருன்னு கண்டுபிடிச்சிட்டீங்களே…. என்று அவனைப் பார்த்து கேட்டாள்..

முதல் முறை உன் குரல் கேட்ட..அந்த நிமிடங்களில்!
என்னை மறந்து உன் குரலில் தொலைந்தே போனேன்..!

காற்றலை வழி வந்து
என் காது வழி வீழ்ந்து
உன் குரல் தொடுத்த இனிமையான-அன்பான பண்பான வார்த்தைகள்
என்னில் புகுந்து  என்னை உனது வசமாக்கியது..!

உன் குரல் மட்டும் கேட்காமல் போய் இருந்தால்என் வாழ்வின் அர்த்தம் புரியாமலே போய் இருக்கும்..!

என்று அவளிடம் காதல் கவிதைகளை சொன்னான்….

அவளுக்கும் ஒரே மகிழ்ச்சி… நான் கால் பண்ணும் போது யார் நீங்கள் என்று கேட்பீர்கள் என்றுதான் அவள் நிஜமான நினைத்தால், அப்படி நினைத்தவர்களுக்கு அவன் குரலை கண்டுபிடித்து கவிதை சொல்லியதும் அவன் மீது தனி மரியாதை வந்துவிட்டது…..

இவனை எக்காரணத்தை கொண்டும் விட்டுவிடக்கூடாது இவன்தான் தன் வாழ்க்கை துணை என்று தீர்மானித்தால்….

அதற்குள் அவள் அப்பா வரும் சத்தம் கேட்டதும் அவள் மொபைலை வைத்து விட்டாள் பிறகு கூப்பிடுகிறேன் என்று….

உடனே அவனுக்கு ஒரு மெசேஜ் அனுப்ப …அதில்,

பிரம்மன்  படைப்பின் சிறப்பு படைப்பு நீயடா!
வர்ணிக்க வார்த்தைகள் தேடி அலையும் பேதை நானடா.!
உன் அன்பு சிறையில் சிறைப்பட்டு எனது மனம்!
விடுதலை பெற விருப்பமில்லாமல்..
உன்னுடன் இறுதிவரை ஆயுள் கைதியாக
வாழ அடம் பிடிக்கிறது…!

அடம் பிடிக்கும் என் மனதிடம்
என்ன என்று சொல்வது
நீயே சொல்…..

என்று அவனுக்கு அனுப்பினாள்…..

அதை தேவா ஓபன் பண்ணி பார்த்து வாசித்துக் கொண்டு இருந்தான்…
அந்த நேரம் அவள் தங்கை அருகில் வந்தால் வந்து அண்ணா உனக்கு ஒரு போன் வந்தது நான் தான் எடுத்தேன் ஹலோ என்று நான் கூறியதும் கட் பண்ணிட்டாங்க யாருன்னு தெரியல என்று தேவாவிடம் அவள் கூறினாள்…..

நீ எதுக்கு எனக்கு வந்த போன் கால் எல்லாம் எடுக்கிற என்று தங்கையை சத்தம் போட்டான்…

சாரி அண்ணா…..
நீ போன் என்கிட்ட கொடுத்துட்டு அப்பா கிட்ட பேச போயிட்டேன் அப்பா போன் வந்துச்சு அதான் எடுத்தேன் ….

அவள் தங்கை யார் என்று கேட்கவும் தேவா ஒரு நிமிடம் யோசித்தான். இவளிடம் சொல்லலாமா வேண்டாமா என்று,

சரி நம் தங்கை தானே சொல்வோம் என்று அவளிடம் சொன்னான்..

உனது அண்ணி தான் அப்படி என்று…

ஓ… அப்பா உனக்காக பார்த்த பெண்ணா நீ அதற்கும் முடிவு பண்ணி விட்டாயா அவள் தான் அண்ணி என்று சூப்பர் அண்ணா என்றாள்…

சரி நீ போய் தூங்கு என்று என் தங்கையை அனுப்பிவிட்டு திரும்பவும் தீபாவுக்கு போன் பண்ணலாமா என்று யோசித்தவன் பிறகு நேரம் ரொம்ப நேரம் ஆகிவிட்டது அவள் அப்பா அருகில் இருப்பதால் அவள் கண்டிப்பாக பேச மாட்டாள் என்று எண்ணி நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று தூங்க சென்றான்…

அடுத்த நாள் காலை எப்போது வரும் என்று கடிகாரத்தை பார்த்துக் கொண்டே இருந்தான் தேவா வேகமாக குளித்து கிளம்பி அவளை பார்க்க செல்ல வேண்டும் என்று மனதிற்குள் எண்ணி அவளிடம் என்ன பேசலாம் என யோசித்துக் கொண்டே இருந்தான்…

அவளைப் பார்க்க அவள் பரதம் ஆடும் இடத்திற்கு சென்றான் அங்கு அவளுக்காக காத்திருந்தான்…

காதலில் காத்திருப்பதும் சுகம் தான் 💞💞💞💞

தூரத்தில் தீபா வருவதை பார்த்தான்.. அவளிடம் பேச நெருங்கினான்..

அதற்குள் தீபா என்ன இப்படி டெய்லி வந்து பார்க்கிறீங்க??
யாராவது பார்த்தால் தப்பா நினைப்பார்கள் இங்கே அடிக்கடி வராதீங்க என்று சொன்னாள்..

நேற்று வரை எதையோ தேடினேன்..இன்று என்னையே தேடுகிறேன்உனக்காக….

உன்னை காணாமல் நான் எங்கு செல்வேன்

நீ மூச்சி காற்றுப்படும் தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா தேசத்திலும்
உயிர் வாழ்வேன்…
என்ன இப்போது போக சொல்கிறாய் நான் எப்படி செல்வேன் என்று தேவா கூறினான்….

என்னுடைய சிறு இதயத்தில்
உன் மீது பெரிய காதல் இருப்பதற்கு
காரணம் என்ன என்று தெரியவில்லை…

உன் அருகிலேயே ஆயுள் முழுவதும் இருக்க வேண்டும் என்று தேவா கூற அமைதியாய் தீபா என்று ரசித்து கொண்டிருந்தால் அவன் பேசுவதை….

மொழியில் பேசிடு…
விழியில் பேசி வீழ்த்தாதே….

பேச தீபா நீ பேசினால் தான் நான் கிளம்புவேன் என்றான்

அவளுக்கோ பயம் யாராவது பார்த்தால் அவள் அப்பாவிடம் சொன்னால் என்ன செய்வது என்று ஏனென்றால் அவள் அப்பாவிற்கு மிகவும் பிடித்த பெண் அதே சமயம் அப்பா என்றால் பயமும் கூட…..

இதெல்லாம் அண்ணனுக்கு தெரிந்தால் பெரிய பிரச்சனை ஆகிவிடும் தயவுசெய்து கிளம்பங்கள் தேவா நாம் வீட்டில் பேசி முடிவு பண்ணியதும் நாம் பேசிக் கொள்ளலாம் என்றாள் …

உனக்காக வாழ ஆரம்பித்து விட்டேன்
என் வாழ்க்கையே நீயென்று
உணர்ந்து விட்டதால்…
இதை நீ புரிந்து கொள்ளும் காலம் சீக்கிரமாக வரும் என்று கூறி தேவா கிளம்பினான்….

தேவா கிளம்பியதும் தீபா பின்னாடி இருந்து
ஏங்க….
தேவா…..
ஒரு நிமிஷம் என்று கூப்பிட்டுக் கொண்டே வந்தாள்….

சாரி… என்மேல் கோபமா நான் கிளம்ப சொன்னதற்கு என்று அவனை பார்த்து கேட்டாள்??

உங்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது… ஆனால் இதுபோன்று பார்ப்பது எல்லாம் என் அண்ணனுக்கு தெரிந்தால் இந்த திருமணமே வேண்டாம் அப்படி என்று சொல்லிவிடுவான் ..அவனுக்கு இதெல்லாம் சுத்தமாக பிடிக்காது என்னை வெளியில் எந்த ஆணிடமும் பேச அவன் அனுமதிக்க மாட்டான் அதனால் தான் நான் உங்களை கிளம்ப சொன்னேன். கோபித்துக் கொள்ளாதீர்கள்
ப்ளீஸ்…..

என் அண்ணனுக்கு என் மேல் மிகவும் பாசம்… ஆனால் அந்த பாசத்தை அவன் எப்படி கோபமாக காட்டுவான் தங்கையை யாராவது தவறாக பேசி விடுவார்கள் என்று….

தீபா இவ்வளவு பொறுமையாக அனைத்தையும் கூறியதால் தேவாவிற்கு இன்னும் அதிகமாக அவளை பிடித்து இருந்தது….

“உன்னில் என்னை
தொலைத்தத் தருணம்
என்றுமே
மீளக்கூடாதத் தருணம்”..

“உன்னைக் காணாத
நொடிகளில் நான் இருண்டு போன உலகத்தில்இருப்பது
போல் உணர்கிறேன்”

அதனால்தான் தீபா நானும் உன்னை காண வருகிறேன் என்று கவிதை சாரலாக பொழிந்தான்….

தீபா இன்று ஒரு நாள் என்னுடன்  சிறிது நேரம் வருகிறாயா உன்னுடன் பேசிக் கொண்டே போக வேண்டும் போலிருக்கிறது என்றான்…

கதை பேசிக்கொண்டே வா
காற்றோடு போவோம்
உரையாடல் தீர்ந்தாலும்
உன் மௌனங்கள் பேசும் 💕……

ப்ளீஸ் வா என்று அழைத்தான்….

ஆனால் அவள் இல்லை வர முடியாது என்னை மன்னித்து விடுங்கள் இன்னொரு நாள் நான் கண்டிப்பாக வருகிறேன் நீங்கள் இப்போது கிளம்புங்கள் என்று சொன்னால் நான் உங்களுக்கு இரவு போன் பண்ணுகிறேன் என்று சொன்னாள்…

சரி நான் வருகிறேன் இன்னொரு நாள் கண்டிப்பாக என்னுடன் வர வேண்டும்….

“தவிக்கும் இரு நெஞ்சம்,
தடுமாறுகிறது என் நெஞ்சம்!
என் காலடி கெஞ்சும் உன் வருகைக்காக!”….❤️❤️❤️❤️

என்று சொல்லிவிட்டு தேவா அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்….

அவன் அப்போது செல்லும் போது பஸ் ஸ்டாப்பில் அவள் தங்கை யாரோ ஒரு ஆவலுடன் ஏற்கமாக பேசிக் கொண்டிருப்பதை கவனித்தான்….

அவள் எதிர் முனையில் நின்று பேசிக் கொண்டிருந்தாள் இவன் சிக்னலில் நின்று பார்த்தான் … கிரீன் சிக்னல் விழுந்ததும் வேகமாக பஸ் ஸ்டாப்பிற்கு போனால் அதற்குள் அவள் தங்கை கிளம்பி விட்டாள்..

சரி இரவு தங்களிடம் பேசிக் கொள்ளலாம் என்று இவனும் கிளம்பினான்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!