Skip to content
Post Views: 770
அத்தியாயம் – 22
மண் துகள்கள் சரியச் சரிய , மூவரின் இதயத்துடிப்பும் எகிறிக் கொண்டிருந்தது . அதே நேரம் அவர்களது கால்கள் ஈரத்தை உணர , அப்போது தான் தரையைப் பார்த்தனர் . கடிகாரத்தில் மண் துகள்கள் சரிய ஆரம்பித்தவுடன் , சுவரில் இருந்த சிறு துளைகள் மூலம் தண்ணீர் வர ஆரம்பித்ததை உணர்ந்தனர் ஆரியனும் , ஆதியும் .
Advertisement
அவர்கள் ஏதோ சொல்ல வருவதற்குள் , நந்தினி , “ இரண்டு பேரும் கொஞ்ச நேரம் வாயைத் திறக்கவே கூடாது ” என்று அழுத்தமாகக் கூறினாள் .
Advertisement
அதற்குள் பாதி நேரம் குறைந்திருக்க , நந்தினியின் மனதில் மின்னல் வேகத்தில் எண்ணங்கள் சென்றன .
Advertisement
“ எப்படியும் இந்த பார்ச்மென்டை கண்டுபிடிப்பதற்கு ஏதாவது ஒரு வழி இருக்கவேண்டும் . இங்கு ஏன் ஆறு நிமிடங்கள் என்று குறிப்பிட்டு நேரம் கொடுத்திருக்கிறார்கள் ? ஒருவேளை அந்த இரண்டாவது பார்ச்மென்டில் ஆறு பொருட்கள் இருந்ததைக் குறிக்கின்றதா ? சேச்சே … தேவையில்லாத எண்ணங்கள் . பேசாமல் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு பெட்டியைத் திறந்து பார்த்தால் கூட கண்டுபிடித்து விடலாம் அல்லவா ?” என்று ஒரு மனம் கேட்க ,
“ இதுக்கு தான் ஆரியன் கூட நட்பு வச்சிக்காதன்னு சொல்றது . ஒவ்வொரு நிமிடத்துக்கும் அந்த பார்ச்மென்ட் இடம் மாறும்னு எரேகன் சொன்னார்ல ” என்று இன்னொரு மனம் திட்டியது .
இவையெல்லாம் சில நொடிகளில் முடிந்துவிட , மீதம் பத்து வினாடிகள் கால அவகாசம் இருக்கலாமென்று தோன்றியது .
Advertisement
நந்தினி இப்போது தனது அதிர்ஷ்டத்தை வேண்டிக் கொண்டு இரண்டாம் பெட்டியைத் திறந்தாள் . சரியாக நேரமும் முடிந்துவிட , அந்தப் பெட்டி திறந்தது . மூவரும் ஆர்வத்துடன் பார்க்க , அது வெறுமையாக இருந்தது . மறுபடியும் அந்த பெட்டி மூடிக்கொண்டது .
பின்னர் ஐந்து பெட்டிகளும் மிளிர்ந்தன . மண் கடிகாரம் தலைகீழாகத் திரும்பி , அடுத்த நிமிடம் தொடங்கியதை உணர்த்தியது . அதற்குள் தண்ணீர் அரை அடி ஆழத்திற்கு அதிகமாக நிரம்பிவிட்டது .
இந்த முறை நந்தினி சிறிது நேரம் யோசிக்க அவகாசம் எடுத்துக் கொண்டாள் . “ நிச்சயமாக இவற்றில் இருக்கும் பார்ச்மென்டை எடுக்க ஏதாவது ஒரு Algorithm இருக்கும் . அது என்ன ? என்ன ?” என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள் நந்தினி .
“ ஏன் ஆறு நிமிடங்கள் ?” என்ற கேள்வி அவளது மனதைத் துளைக்க , சில நொடிகளில் அவளுக்கு விடை கிடைத்திடவே , அவள் முகம் மலர்ந்தது .
ஆரியனும் , ஆதியும் தண்ணீர் மட்டத்தைக் கண்டு பயந்து , அந்த வாயிலை அடைத்து இருந்த கல்லை புரட்ட முயன்றனர் . ஆனால் , அவர்கள் எவ்வளவோ முயன்றும் அவர்களால் அதை அசைக்கக்கூட முடியவில்லை .
இரண்டாவது நிமிடத்திற்கான முறையில் நந்தினி அங்கு தைரியமாக மூன்றாவது பெட்டியைத் திறந்தாள் . அதிலும் அந்த பார்ச்மென்ட் இல்லாமல் போக நந்தினி சிரித்துக் கொண்டாள் . அதற்குள் நீரின் அளவு முட்டியை தொட்டது .
ஆரியனும் , ஆதியும் அதைக் கண்டவுடன் அந்த அறையில் இருந்து வெளியேறுவதற்கு வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்று தேட தொடங்கினர் .
அடுத்த நிமிடம் தொடங்க , மீண்டும் பெட்டிகள் அனைத்தும் மிளிர்ந்தன . மூன்றாவது நிமிடத்தில் நந்தினி தனது மனதுக்குள் ஏதோ கணக்குப் போட்டு விட்டு , நான்காவது பெட்டியைத் திறந்தாள் . அதில் ஒன்றும் இல்லாமல் இருந்தது .
இப்போதும் நந்தினி கவலைப்படாமல் இருப்பதைக் கண்ட ஆரியன் , நந்தினியிடம் வந்து , “ நந்து ! என்ன ஆச்சு உனக்கு நீ மூணு சான்ஸை மிஸ் பண்ணிட்ட , இன்னும் மூணு தடவை தான் இருக்கு . நீ பாட்டுக்கு கூலா இருக்க ?” என்று கோபமாகக் கூற ,
“ நாம கண்டிப்பா இங்கிருந்து பார்ச்மென்ட்டோட தான் வெளிய போறோம் “ என்று அழுத்தம் திருத்தமாக நந்தினி உரைத்தாள் .
அவளிடம் இருந்த உறுதியைக் கண்ட ஆதி , “ ஆர்யா , வா நாம இந்த தண்ணீரை வெளியேற்ற ஏதாவது முயற்சி செய்வோம் ” என்று அழைத்தான் . ஆரியன் அவனை நோக்கி அரை மனதுடன் செல்ல , நந்தினி மணல் கடிகாரத்தைப் பார்த்தாள் . அது இன்னும் கால்வாசி நேரம் மீதம் இருந்ததைக் காட்டியது . நந்தினி மறுபடியும் தனது சிந்தனையில் ஆழ்ந்தாள் .
ஆதிக்கு அப்போது தான் அந்த அறையின் கட்டமைப்பு விளங்கியது . தேனீயைப் பின்தொடர்ந்து வந்தவர்கள் , அந்தக் கோட்டையின் அடி ஆழத்தில் இருக்கின்ற ஓர் அறையில் இப்போது உள்ளனர் . அதனால் எவ்வளவு முயன்றாலும் அங்கிருந்து தப்ப இயலாது என்பது புரிந்ததும் , ஆரியன் மற்றும் ஆதியின் ஒரே பற்றுக்கோலாக மாறினாள் நந்தினி .
நீர் இடுப்பளவுக்கு வந்துவிட , நான்காம் நிமிடம் தொடங்கியது . இந்த முறை நந்தினி சிறிது யோசித்து , அரை நிமிடத்திற்குப் பிறகு மறுபடியும் அந்த நான்காவது பெட்டியையே திறந்தாள் . அந்த பெட்டியிலும் எந்த பார்ச்மென்டும் இல்லாமல் போக நிம்மதி அடைந்தாள் நந்தினி . அதற்கு நேர்மாறாக ஆரியனும் , ஆதியும் பயப்படத் தொடங்கினர் .
“ இவள் தெரிந்து தான் செய்கிறாளா இல்லை வேறு ஏதாவது ஆகிவிட்டதா ?” என்று இருவரும் எண்ணத் தொடங்கினர் . சிறிது சிறிதாக அந்த அறையின் கூரையிலிருந்தும் தண்ணீர் ஊற்றத் தொடங்கியது .
சில நொடிகளில் ஐந்தாவது நிமிடம் தொடங்க , அதற்கு அடையாளமாக ஐந்து பெட்டிகளும் மிளிர்ந்தன . இந்த முறையும் நந்தினி யோசித்து , மூன்றாவது பெட்டியைத் திறந்தாள் . அதற்குள் தண்ணீர் கழுத்து அளவுக்கு உயர்ந்தது . அந்தப் பெட்டியிலும் பார்ச்மென்ட் இல்லாமல் போகவே , ஆரியன் சோர்வடைந்தான் .
ஆதித்யனுக்கு நந்தினி மேல் அதிக நம்பிக்கை வைப்பதா அல்லது ஆரியனின் கூற்றைக் கேட்பதா என்று புரியவில்லை .
ஆறாவது நிமிடம் தொடங்குவதற்குள் மூவரும் நீரில் மூழ்கி இருந்தனர் . கடந்த முறை 176C கிரகத்தில் சுவாசிப்பதற்கு ஏதுவாக உறுப்புகள் மாறியது போல இந்த முறை எதுவும் ஏற்படவில்லை .
பெட்டிகள் ஐந்தும் மிளிர , ஆறாவது நிமிடம் தொடங்கியதை உணர்ந்தனர் . நந்தினியை அந்தப் பெட்டிகள் அருகில் நெருங்க விடாமல் தண்ணீர் அவளை வேறு பக்கம் திருப்ப , அவள் கஷ்டப்பட்டு அந்தப் பெட்டிகளுக்கு அருகில் சென்றாள் . மனதில் செலினாவை நினைத்துக் கொண்டு , தனது இறுதி வாய்ப்பைப் பயன்படுத்தினாள் .
அவள் இரண்டாவது பெட்டியைத் திறக்க , ஒளி வெள்ளம் நீர் வெள்ளத்துடன் இணைந்தது . சில நொடிகளில் அந்த ஒளி வெள்ளம் குறைய , அந்தப் பெட்டியில் பார்ச்மென்ட் இருப்பதைப் பார்த்தாள் நந்தினி .
அவள் அதனை எடுத்து வைத்துக் கொள்ள , அறையை அடைத்து இருந்த பாறை நகர , மூவரையும் அந்த நீர் வேகமாக வெளியே அடித்துக் கொண்டு சென்றது. நந்தினி அந்த பார்ச்மென்டை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள் .
அந்தத் தண்ணீர் அலையால் அவர்கள் சுழன்று சுழன்று இறுதியாக அதே அறையின் வாயிலில் நிறுத்தப்பட்டனர் .
ஆரியன் , “ ஆங் ! நம்பள எங்கெங்கேயோ கொண்டு போன மாதிரி இருந்துச்சு . இப்ப கடைசியில் இந்த அறையோட வாசல்லயே வந்து நிற்கிறோம் ” என்று வியந்து கூறினான் .
ஆதி , “ ரெண்டு பேரும் இந்த பக்கம் பாருங்க “ என்று கூற , அங்குப் பார்த்த நந்தினியின் கண்கள் விரிந்தன .
நந்தினி , “ வாங்க ஓடிடலாம் . இந்த பார்ச்மென்ட எடுத்ததும் கோட்டை மறைய ஆரம்பிக்குது . இதுக்குள்ள மாட்டிகிட்டோம் , அப்புறம் வெளியே போகவே முடியாது ” என்று கூற , மூவரும் முடிந்த அளவுக்கு வேகமாக ஓடினர் . கோட்டையின் வாசல் கதவும் மறைய ஆரம்பிக்க , வேகத்தைக் கூட்டி , இறுதி நேரத்தில் மூவரும் வெளியே வந்துவிட்டனர் .
சிறிது நேரம் மூவரும் மூச்சு வாங்க அமர்ந்தனர் . இப்பொழுது தான் ஆதிக்கு அடுத்த பிரச்சனை ஞாபகம் வந்தது .
“ யாருக்காவது நாம வந்த வழி ஞாபகம் இருக்கா ? “ என்று ஆதி கேட்க , ஆரியனும் நந்தினியும் விழித்தனர் . தேனீயைத் தொடர்ந்து ஓடி வந்ததில் ,
அவர்கள் வந்த வழியைப் பார்க்கவில்லை . நந்தினி தன்னிடம் இருந்த பார்ச்மென்டை ஆரியனிடம் கொடுத்தாள் .
அதைக் கண்ட ஆரியன் , “ என்னாது இன்னும் இது மாதிரி அஞ்சு இருக்கா ? இனிமே யோசிச்சா நான் காலி தான் ” என்றான் .
நந்தினி , “ ஆரி அதெல்லாம் யோசிப்பவர்களுக்கு தானே பிரச்சனை . உனக்கு என்ன ?” என்று கேட்க , அந்தக் கூற்றில் இருந்த கேலி புரிந்து ஆதி சிரிக்க , ஆரியன் நந்தினியை முறைத்தான் .
“ இதுவரைக்கும் உங்களுக்கு நான் எந்த உதவியுமே பண்லேல , இனிமேலும் நான் உங்களுக்கு எந்த உதவியும் பண்ண மாட்டேன் ” என்று முகத்தைத் திருப்பிக்கொள்ள ,
நந்தினி அவனிடம் வந்து , “ டேய் , ஒழுங்கா இத இப்ப டீகோட் பண்ணி சொல்றியா இல்லையா ?” என்று கேட்க ,
“ அப்படின்னா முதல்ல நீ எப்படி கரெக்டா ஆறாவது நிமிஷத்துல அந்த பார்ச்மென்ட எடுத்தனு சொல்லு . கண்டிப்பா இதுல ஏதோ ஒரு விஷயம் இருக்கு . Fluke- னு மட்டும் சொல்லாத ” என்றான் ஆரியன் .
நந்தினி , “ அது பெரிய எக்ஸ்பிளநேஷன்டா . நான் வேணா space ship- க்கு போன உடனே சொல்லவா ?” என்று கேட்க ,
ஆரியன் , “ முடியாது . இப்பவே சொல்லணும் . அங்க உன்னோட பிளான பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லாம , சிரிச்சுட்டு இருந்தீல ? நீ சொன்னா தான் நான் டீகோட் பண்ணுவேன் ” என்றான் .
“ எப்படியும் இப்ப அந்த space ship- அ தேடி நடக்கணும் . அது வரைக்கும் என்ன பண்றது ? நீ எப்படி கண்டுபிடிச்சனு தெரிஞ்சுக்கிறதுக்கு எனக்கும் ஆர்வமா இருக்கு , சனா ” என்று ஆதியும் கூற ,
“ ஓகே ” என்றாள் நந்தினி . அவர்கள் மூவரும் குத்துமதிப்பாக ஒரு திசையை நோக்கி நடக்கத் தொடங்கினர் .
நந்தினி , “ சரி நீங்க சொன்ன மாதிரி நானும் முதல்ல fluke- ல தான் ட்ரை பண்ணலாம்னு நெனச்சேன் . ஆனா , இப்ப நான் வரிசையா ஒவ்வொரு பெட்டியா தொறக்குறேனு வச்சிக்கோங்க அந்த பார்ச்மென்ட் இரண்டாவது பெட்டியிலிருந்து நான் முதல் பெட்டியைத் திறந்தால் இருக்காது .
மறுபடியும் நான் இரண்டாவது பெட்டியைத் திறக்கும் போது முதல் பெட்டிக்கு மாறிடுச்சுன்னா , அப்பயும் இருக்காது . அடுத்து நான் மற்ற பெட்டிகளைத் திறக்கப் போய் அந்த பார்ச்மென்ட் மொத ரெண்டு பெட்டிக்கு மட்டும் மாறி மாறி போச்சுன்னா , மொத்த முயற்சியும் வேஸ்ட் . அதனால தான் fluke ஆப்ஷன் எலிமினேட் பண்டேன் ” என்றாள் .
ஆரியன் , “ அப்ப கேட்டதோட இப்ப நீ சொல்றத நினைக்கும் போது தான் தலை வெடிக்குது . அந்த பார்ச்மென்ட் இடத்தவிட்டு மாறிக் கொண்டே இருந்தா அத எப்படி தான் கண்டு பிடிக்கிறது ? ” என்று கேட்டான் .
ஆதித்யன் எதுவும் கூறாவிட்டாலும் அவன் முகமும் அந்தக் கேள்வியையே பிரதிபலித்தது .
நந்தினி , “ அந்த ஆறு நிமிஷம்னு சொன்னதுல தான் நான் வேற விதத்துல யோசிக்க ஆரம்பிச்சேன் . எரேகன் சொன்னபடி பார்த்தா கண்டிப்பா அது ஆறு ஸ்டெப்ஸ்ல கண்டுபிடிக்கிற மாதிரி ஒரு வழி இருக்கணும்னு யோசிச்சேன் . அப்பதான் ஒரு அல்காரிதம் கெடச்சுச்சு . சரி இனிமே நான் சொல்றத கொஞ்சம் கவனமா கேளுங்க ” என்று கூறிவிட்டு ,
“ அந்த ஆறு பெட்டில எந்த பெட்டியில் அந்த பார்ச்மென்ட் இருக்குன்னு நமக்குத் தெரியாது . நமக்கு அதிர்ஷ்டம் இருந்தா நாம திறக்கிற முதல் பெட்டியிலே கூட அது இருக்கலாம் . ஆனால் , இங்க வெறும் luck – அ மட்டும் வச்சிக்கிட்டு ஜெயிக்க முடியாது . Logical Reasoning- உம் தேவைப்படும் . அதுக்கு தான் ஒரு Algorithm யோசிச்சேன் . அந்த அஞ்சு பெட்டியையும் ‘A, B, C, D, E’-னு ஞாபகம் வச்சுக்குங்க. ஒவ்வொரு நிமிஷமும் சரியா, B-C-D-D-C-B இந்த வரிசையில் பெட்டிகள திறந்தா , கண்டிப்பா அந்த பார்ச்மென்ட் கிடைக்கும் ” என்றாள் .
“ அது எப்படி அவ்வளவு நிச்சயமா சொல்லுற ?” என்று ஆதி கேட்டான் . நந்தினி சிரித்துக் கொண்டே , “ நான் தான் சொன்னேன்ல algorithm படின்னு ” என்றாள் .
பின் , அவள், “இப்ப அந்த அல்காரிதம தெரிஞ்சுக்குறதுக்கு முன்னாடி, நீங்க சில விஷயங்கள ஞாபகம் வச்சுக்கனும். அந்த அஞ்சு பெட்டிகள நாம ரெண்டு பார்ட்டா பிரிக்கப் போறோம். Odd Numbered Boxes (ஒற்றைப்படை எண்களுடைய பெட்டிகள்) அண்ட் Even Numbered Boxes (இரட்டைப்படை எண்களுடைய பெட்டிகள்).
A,C,E – இது மூணும் ஒற்றைப்படை பெட்டிகள். B,D – இது ரெண்டும் இரட்டைப்படை பெட்டிகள். முதல் நிமிஷம் அந்த பார்ச்மென்ட் ஒரு ஒற்றைப்படை பெட்டில இருந்தா, அடுத்த நிமிஷம், அது ஒரு இரட்டைப்படை பெட்டிக்கு போயிடும். அதேமாதிரி தான், மொதல இரட்டைப்படை பெட்டில இருந்தா, அடுத்த நிமிஷம் ஒற்றைப்படை பெட்டிக்கு போயிடும். புரியுதா ?” என்று கேட்க, ஆதியும் ஆரியனும் தலையசைத்தனர்.
“இப்ப இன்னொரு கேள்விக்கு பதில் சொல்லுங்க. இப்ப அந்த பார்ச்மென்ட் ‘A’ – ல இருக்குனு வச்சுக்குங்க. இதுக்கு அடுத்த நிமிஷம் அது எந்த பெட்டில இருக்கும் ?” என்று கேட்டாள் நந்தினி.
ஆரியன், “B” என்று சொல்ல,
ஆதி, “அதேமாதிரி D – லேர்ந்து E – க்கு போகும்” என்றான்.
“சரி, நான் இப்ப சொல்ல போறத கவனமா கேளுங்க. உங்க மனசுல ஒரு 6*7 டேபிள் கற்பனை பண்ணிக்குங்க.
நான் அப்ப முதல்ல ‘B’ பெட்டிய திறக்குறேன் . நான் எதிர்பார்க்காம செஞ்சது கடைசியில அல்காரிதம் படி, கரெக்டா ஆகிடுச்சு. ஆனா , அதுல அந்த பார்ச்மென்ட் இல்ல .
அப்படின்னா அடுத்த நிமிஷம் அந்த பார்ச்மென்ட் கண்டிப்பா ‘A’ பெட்டில இருக்காது . ஏனா A- க்கு பார்ட்மென்ட் வரக்கூடிய ஒரே வாய்ப்பு , B தான் . இதுவரைக்கும் புரியுதா ?” என்று கேட்க , மற்ற இருவரும் தலையசைத்தனர் .
“ ரெண்டாவது நிமிஷம் algorithm படி, நான் C பெட்டிய திறந்தேன் . ஆனா , அதுலயும் இல்ல . இப்ப கொஞ்சம் யோசிச்சு பாருங்க , ரெண்டாவது நிமிஷத்துல, A, C – இந்த ரெண்டுபெட்டிலயும் அந்த பார்ச்மென்ட் இல்ல. அப்படினா, அடுத்த நிமிஷம், அந்த பார்ச்மென்ட் கண்டிப்பா B – பெட்டில இருக்காது ” என்றாள் நந்தினி .
அவர்களது குழம்பிய முகத்தைப் பார்த்தவுடன் , “ சரி கொஞ்ச நேரம் நான் சொன்னத யோசிச்சு பாருங்க ” என்றாள் நந்தினி .
சிறிது நேரம் கழித்து , இருவரும் , “ ஹம்ம் சரி , அப்புறம் சொல்லு , நந்தினி ” என்றனர் .
“ சரி , இப்ப நமக்கு நல்லா தெரிஞ்ச விஷயம் , மூணாவது நிமிஷத்துல கண்டிப்பா B பெட்டில பார்ச்மென்ட் இருக்காது . சரியா ? நான் இந்த தடவையும் , algorithm படி D பெட்டிய திறக்குறேன் . நான் எதிர்பார்த்த மாதிரியே அதுலயும் இல்ல . இப்ப கொஞ்சம் நான் சொல்றதை மனசுல நெனச்சு பாருங்க . மூணாவது நிமிஷத்துல B,D – இந்த ரெண்டு பெட்டிலயும் பார்ச்மென்ட் இல்லன்னு தெரிஞ்சிருச்சு .
அதாவது, இரட்டைப்படை பெட்டிகள்ள அந்த பார்ச்மென்ட் அல்ல. நம்ப முன்னாடியே பார்த்த மாதிரி, அடுத்த நிமிஷம், A,C,E – இந்த ஒற்றைப்படை பெட்டிகள்ள அது இருக்காது” என்றாள் நந்தினி .
“ அப்ப நாலாவது நிமிஷத்துல , அந்த பார்ச்மென்ட் B,D – இது ரெண்டுத்துல ஏதாச்சும் ஒரு பெட்டியில தான் இருக்கணும் . சரியா ?” என்று ஆதி கேட்டான் .
‘ ஆமாம் ’ என்பது போலத் தலையசைத்தாள் நந்தினி .
ஆரியன் , “ ஆனா நந்து , ஒருவேளை அந்த பார்ச்மென்ட் மூணாவது நிமிஷத்துல , நீ D பெட்டி திறக்கும் போதே கிடைச்சிருந்தா ?” என்று கேட்க ,
“ அதற்கு வாய்ப்பு குறைவு . ஏன்னா எரேகன் நமக்கு ஆறு நிமிடங்கள் இருக்குன்னு சொல்லி இருக்காரு . அப்படினா ஆறு நிமிடங்கள் எடுக்குற மாதிரி தான் இந்த லெவல வடிவமைச்சு இருப்பாங்க . May be அந்த பார்ச்மென்ட ஆறாவது நிமிடத்தில் மட்டும் பார்க்கிற மாதிரி ஏற்பாடு செஞ்சு இருக்கலாம் ” என்றாள் நந்தினி .
“ இப்படிலாமா செஞ்சு வெச்சிருப்பாங்க !” என்று வியந்தான் ஆரியன் .
நந்தினி , “ இனிமே கொஞ்சம் சிம்பிள் தான் . நாலாவது நிமிஷத்துல, நான் மறுபடியும் அல்காரிதம் படி, D பெட்டிய திறந்தேன் . அதுலயும் இல்ல , அப்ப நாலாவது நிமிஷத்துல, A,C,D,E – இந்த நாலு பெட்டிலயும் பார்ச்மென்ட் இல்ல . அப்படின்னா, கண்டிப்பா அது B பெட்டில தான் இருந்திருக்கணும் .
நாலாவது நிமிஷத்துல, B பெட்டில பார்ச்மென்ட் இருந்துச்சுன்னா , அஞ்சாவது நிமிஷத்துல அது , A இல்லனா C பெட்டியில தான் இருக்கணும் ” என்றாள் .
பின்னர் தொடர்ந்து நந்தினி , “ அதனால நான் அஞ்சாவது நிமிஷத்துல C பெட்டிய திறக்குறேன் . நம்ம நேரம், பார்ச்மென்ட் அதுலயும் இல்ல .
அப்ப கண்டிப்பா அஞ்சா வது நிமிஷத்துல அந்த பார்ச்மென்ட், A பெட்டில தான் இருந்திருக்கணும் ” என்றாள் நந்தினி .
ஆதி , “ அப்படினா ஆறாவது நிமிஷத்துல , அந்த பார்ச்மென்ட் கண்டிப்பா B பெட்டில தான் இருக்கும் ” என்றான் .
நந்தினி , “ ஆமா , அதனால் தான் நான் கடைசி நிமிஷத்துல, B பெட்டிய திறந்தப்ப பார்ச்மென்ட் இருந்துச்சு ” என்றாள் .
அவள் கூறிய அனைத்தையும் புரிந்துக் கொண்ட ஆரியன் , “ வாவ் ! Brilliant ! B-C-D-D-C-B algorithm செம்ம நந்து . அப்ப தண்ணி வேற நிரம்ப ஆரம்பிச்சுடுச்சா , அதான் கொஞ்சம் பயந்துட்டேன் . இத முன்னாடியே சொல்லியிருந்தா என்ன ?” என்று கேட்க ,
“ அடப்பாவிகளா நான் சொன்னத அப்ப சொல்லிருந்தேன்னா , இப்ப நம்ப உயிரோடு இருந்திருக்க மாட்டோம் ” என்றாள் நந்தினி .
“சரி சனா, நீ ஆரம்பத்துல, B பெட்டிய திறக்காம வேறு ஒரு பெட்டிய திறந்திருந்தா என்ன பண்ணியிருப்ப ?” என்று கேட்டான் ஆதி.
“இதுக்கு மொத்தம் நாலு அல்காரிதம் இருக்கு, ஆதி. மீதி இருக்குற மூணு என்னனா B-C-D-B-C-D, D-C-B-B-C-D, D-C-B-D-C-B. அதனால, நான் D பெட்டிய திறந்திருந்தாலும் நான் தப்பிச்சுருப்பேன்” என்றாள் நந்தினி.
ஆதி , “ யாஹு ! அங்க தூரத்தில பாருங்க . நம்ம வந்த ஸ்பேஸ் ஷிப் ” என்று கத்தினான் .
மூவரும் அதை நோக்கி ஓடினர் . இறுதியில் அந்த விண்கலத்தைப் பார்த்த பிறகுதான் , அவர்களுக்கு உயிர் திரும்பியது . மூவரும் அதில் ஏறிக் கொள்ள , அந்த விண்வெளி விமானம் கைகன்டாவிற்கு விடை கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பியது .
சிறிது நேரம் ஓய்வெடுத்த மூவரும், வழக்கமாகக் கூடும் இடத்திற்கு வந்தனர். ஆரியன் அந்தப் பார்ச்மென்டை மொழி பெயர்த்திருக்க, மறுபடியும் அவர்களுக்காக ஒரு விடுகதை தோன்றியது.
(1) .– .. … …. . … ……. – — ……. – …. . ……. .–. . .-. … . …- . .-. .- -. – … –..– ……. .– . ……. … .- -.—
(2) ..-. .. …- . ……. — — .-. . ……. -.. .- -. –. . .-. … ……. — -. ……. – …. . ……. .– .- -.—
(3) .– . ……. .- .-. . ……. – …. . ……. ..-. .-. .. . -. -.. … ……. .– …. — ……. -.. — -. .—-. – ……. .- .-. –. ..- .
(4) …. . ……. -.-. .- -. ……. -… . ……. — .- -.. . ……. ..-. .-. — — ……. — .
(5) .. ……. -.-. .- -. ……. -… . ……. — .- -.. . ……. ..-. .-. — — ……. …. .. –
(6) .— ..- … – ……. -. . . -.. ……. .- ……. … ..- — ……. .- -. -.. ……. .–. .-. — .–. . .-. ……. .– .- -.—
(7) .- -. -.. ……. .– . ……. .- .-. . ……. – …. . ……. .–. — — .-. . … – ……. ..-. .-. .. . -. -.. …
(8) .– . ……. ..-. .-. .. . -. -.. … ……. .– .. .-.. .-.. ……. — .–. . -. ……. – .– — ……. –. .- – . …
(9) .-. . …- . .- .-.. ……. -.– — ..- .-. … . .-.. ..-. ……. .- -. -.. ……. -… . .-.. .. . …- . ……. -.– — ..- .-. ……. ..-. .-. .. . -. -.. …
(10) .- ……. … ..- .-. .–. .-. .. … . ……. .. … ……. .– .- .. – .. -. –. ……. .- – ……. – …. . ……. . -. -..
Wishes to the perseverants, we say
Five more dangers on the way
We are the friends who don’t argue
He can be made from me
I can be made from him
Just need a sum and proper way
And we are poorest friends
We friends will open two gates
Reveal yourself and believe your friends
A surprise is waiting at the end.
ஆரியன் , “ இன்னும் இது மாதிரி எத்தனை விடுகதையைத் தான் தாண்டணும் ? நாம அந்த ஈரின் கல்ல எடுக்குறதுக்குள்ள கன்வர்ஜென்ஸே வந்துடும் போலிருக்கே ” என்றான் .
ஆதியும் நந்தினியும் வேகமாக அதை வாங்கிப் படித்தனர் .
ஆதி , “ இது என்ன ஒவ்வொரு தடவையும் அடுத்த கட்டத்துக்குப் போகப் போக புதிரும் கஷ்டமாக மாறிட்டே இருக்கு ” என்றான் .
நந்தினி , “ போன தடவையாச்சும் , ஏதோ பொருட்கள் மாதிரி வந்துச்சு . இந்த தடவை ஒரு க்ளூவும் இல்லையே ” என்று அலுப்புடன் கூறினாள் .
இன்னும் இப்படி எத்தனை கதவுகளைத் தாண்ட வேண்டுமோ என்ற எண்ணமே அவளுக்கு அயர்வை ஏற்படுத்தியது .
ஆரியன் , “ சரி சீக்கிரம் ஆரம்பிப்போம் . இல்லன்னா இன்னும் எவ்வளவு நாட்கள் ஆகுமோ ?” என்றான் .
நந்தினி , “ Wishes to the perseverants, we say – விடாமுயற்சியோடு போராடுறவங்களுக்கு வாழ்த்துக்கள் , அப்படின்னு முதல் வரி சொல்லுது ” என்று கூறியவளை , இடைமறித்து ,
“ இப்ப இந்த வாழ்த்துக்கள் ரொம்ப முக்கியம் ” என்று வெளிப்படையாகவே முனகினான் ஆரியன் .
“ Five more dangers on the way – நம்ம கேட்ட கேள்வியோட பதில் கிடைச்சிருச்சு . இன்னும் நம்ம இது மாதிரி அஞ்சு புதிர்களை கண்டுபிடிக்கணும் ” என்றான் ஆதி . மூவருக்கும் ‘ ஐயோ ’ என்றிருந்தது .
நந்தினி , “ We are the friends who don’t argue” என்று கூறி முடிப்பதற்குள் , “ என்னது சண்டையே போடாத நண்பர்களா ? அப்படி யாருப்பா இருக்க முடியும் ?” என்றான் ஆரியன் .
“ டேய் ஆரி , நடுவுல நடுவுல டிஸ்டர்ப் பண்ணாதடா . இன்னும் முழுசா படிச்சே முடிக்கல ” என்றவுடன் அமைதியானான் ஆரியன் . இல்லை … இல்லை … அமைதியானது போல் நடித்தான் .
நந்தினி மேலும் படிக்கத் தொடங்கினாள் , “ மேலும் ஒருத்தரிடமிருந்து இன்னொருவர் உருவாகுவாங்களா ? அதுக்கு ஒரு சரியான வழி இருந்தால் போதும்னு போட்டிருக்கு ” என்று தலையைப் பிய்த்துக் கொண்டாள் நந்தினி .
ஆதி , “ சனா ! இந்த முறை நாம கண்டிப்பா ஒரு முடிவு எடுத்தே ஆகணும் . இங்க குறிப்பிட்டு இருக்கிறது மனிதர்களையா இல்ல நம்பர்ஸயா ?” என்று கேட்டான் .
“ இவங்க கொடுத்து இருக்கிறத எல்லாம் பார்க்கும் போது , இது ஏதோ மனிதர்களைக் குறிக்கிற மாதிரி தான் இருக்கு . ஏன்னா இது வரைக்கும் Tell us the four இல்லன்னா six – னு போட்டிருக்கும் . ஆனா, இந்த தடவை அது மாதிரி எதுவும் போடலையே . சோ , இது மனிதர்களாக இருக்கத்தான் வாய்ப்பு அதிகம் ” என்றாள் நந்தினி .
“ And we are poorest friends – னு இருக்கு . எப்படி ரெண்டு ஏழை நண்பர்களுக்குள்ள சண்டை வராம இருக்கும் ?” என்று கேட்டான் ஆதி .
“ We friends will open two gates , அப்படினா என்ன ரெண்டு பேரும் வாட்ச்மேன் வேலையா பார்த்திருப்பாங்க ?” என்று கேட்ட ஆரியனை , மற்ற இருவரும் முறைத்தனர் .
“ ஒருத்தன் ஏதாச்சும் வித்தியாசமா யோசித்தாலே இப்படித்தான் முறைச்சே அவனை பயமுறுத்துறது ” என்று நினைத்துக் கொண்டான் ஆரியன் .
நந்தினி , “ ஒருவேளை இந்த வரிக்கு வேறு ஏதாவது அர்த்தம் இருக்கலாம் ” என்று யோசித்தவள் , “ ஆங் ! கண்டுபிடிச்சிட்டேன் . இந்த தடவை நாம ரெண்டு சிற்றரசர்களுடைய பாதுகாப்பு வளையத்துக்குள்ள போகப் போகிறோம் ” என்ற சந்தோஷமாகக் கூறினாள் . ஆதியும் , ஆரியனும் “ ரெண்டா ?” என்று திகைத்தனர் .
“ அப்பாடா ! ஒரு வரிக்காவது நாம அர்த்தத்தை கண்டுபிடிச்சுட்டோம் . Reveal yourself and believe your friends – ஆ , இது என்ன வித்தியாசமா இருக்கு ?” என்று கேட்டாள் நந்தினி .
“ என்னைய மாதிரி உண்மையான நண்பர்கள நம்பனும்னு அர்த்தம் ” என்று ஆரியன் வேகமாகக் கூற , நந்தினி அவன் தலையில் கொட்டினாள் .
ஆதித்யன் , “ A surprise is waiting at the end – ஆ ? ஆரம்பத்துல இருந்து அப்படித்தான் இருக்கு . இப்ப என்ன புதுசா சர்ப்ரைஸ் ?” என்று கேட்டான் .
“ இந்த விடுகதையில் மனிதர்கள குறிப்பிட்டிருந்தா , அவங்க எப்படி எல்லா கிரகத்துக்கும் பொருந்துற மாதிரி இருப்பாங்க ?” என்று கேட்டான் ஆரியன் .
“ ஒருவேளை , அவங்களோட நினைவுகள் தான் நமக்கு கொடுக்குறாங்கன்னு பொசய்டன் சொன்னார் . அவங்க கிரகத்துக்கும் நமக்கும் பொதுவா இருக்கிற நபர்கள் யாராச்சும் இருப்பாங்களோ ?” என்று தனது அனுமானத்தைக் கூறினாள் நந்தினி .
“ சரி , இதுல எந்த ஒரு நம்பரும் வரலேன்றதுக்காக , எப்படி ஆன்ஸர் ஒரு நம்பர் இல்லன்னு உறுதியாகச் சொல்லமுடியும் ? நம்மள குழப்புவதற்காக அப்படிக் கொடுக்கலாம் இல்லையா ? அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு லெவலா நாம மேல போகப் போக difficulty level- லும் அதிகமாகுது . அது மாதிரி இருக்கலாம்ல ?” என்று கேட்டான் ஆதி .
நந்தினிக்கு ஏதோ பெரிய சுழலில் மாட்டிக் கொண்டது போல இருந்தது . இதிலிருந்து எப்படி அடுத்த லெவலுக்கு போறது ?
அவள் மனதில் , “ We are the friends who don’t argue ” என்ற வார்த்தைகள் சொல்லத் தெரியாத ஓர் உணர்வை ஏற்படுத்தின . தன்னை இழுக்கும் சுழலை வென்று நந்தினி ஈரின் கல்லை அடைவாளா ? நந்தினிக்கும் ஈரின் கல்லுக்கும் இடையில் உள்ள தூரம் குறைந்தாலும் போட்டி அதிகமாக்கப்பட்டது .
error: Content is protected !!