Viswakarma 16
16
“விஷ்வா…”
Advertisement
வெகு நாளைக்கு பிறகான அவளின் அழைப்பு அவன் நடையை தடை செய்தது.
Advertisement
கடுமை கண்டிருந்த முகத்தில் இப்போது மென்மையின் சாயல் தெரிவதாய்.
Advertisement
“எதுக்கு இப்படி நடக்கறீங்க?? வந்து படுங்க…”
Advertisement
அவளின் கேள்வி அவனை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்திருந்தது, முகம் இறுக “நான் இப்போ படுக்கற நிலையில இல்லை…”
“அதான் கல்யாணம் நல்லபடியா முடிஞ்சிடுச்சுல்ல விஷ்வா…”
அவளின் அந்த அழைப்பு அவனை சற்று நிதானிக்கச் செய்திருந்தது அவ்வளவே மற்றபடி அவன் கோபத்தை அடியோடு குறைத்திருக்கவில்லை.
“எனக்கு இந்த கல்யாணம் நடந்த விதமே எனக்கு பிடிக்கலை. நானா வீட்டில எதாச்சும் சொல்லி முடிச்சிருப்பேன், நீ என்னமோ பண்ணிட்டே, நீ செஞ்ச எதுவுமே எனக்கு பிடிக்கலை…”
“அதை தான் அன்னைக்கே சொல்லிடீங்கலே…”
“அதே தான் திரும்பவும் சொல்றேன்…”
“என்னால நிம்மதியாவே இருக்க முடியலை… என்னவோ ஒரு தப்பு எங்கயோ ஒரு பெரிய தப்பு எனக்கு தெரியலை. மனசு ஏதோ சரியில்லைன்னு சொல்லுது…”
‘உங்க மனசாட்சி நான் உங்களை ஏமாத்தும் போது மட்டும் ஏன் சரியா வேலை செய்யலை’ என்று தான் அவள் மனம் நினைத்தது. ‘இது உனக்கு தேவையில்லாதது’ என்று அதுவே சொல்லிக்கொண்டது மீண்டும்.
“இப்போ என்ன வந்துச்சு உங்க மனசுக்கு. உங்க தங்கையை என் தம்பி நல்லாவே பார்த்துப்பான்”
“எனக்கு நம்பிக்கையில்லை…”
“ஏன்??”
“நீயும் உன் தம்பியும் பிராடுங்க…”
“உங்க தங்கச்சி தான் புத்திசாலியாச்சே அப்புறம் எப்படி விழுந்தா??” என்று சுடச்சுட கேட்டாள் அவள்.
“என்னை நீ ஏமாத்தின மாதிரி என் தங்கச்சியை உன் தம்பி ஏமாத்திட்டான்…” என்றான் அவனும் பதிலாய்.
“நீங்களும் நானும் பேசினா பேச்சு வளர்ந்திட்டே தான் போகும். போதும் இதோட நிறுத்திக்குவோம், சரியோ தப்போ உங்க தங்கச்சி கல்யாணம் நடந்திருச்சு…”
“நீங்க அந்த பேச்சை எப்படி ஆரம்பிக்கறதுன்னு யோசிச்சீங்க. நான் அதை எனக்கு தெரிஞ்ச வழியில முடிச்சி வைச்சிட்டேன் அவ்வளவு தான்…”
“அதுவும் உங்களுக்காக தான் செஞ்சேன் விஷ்வா…” என்றாள் சேர்த்து.
“கடைசியா ஒண்ணு சொல்றேன், இதுவும் உங்க நிம்மதிக்காக தான் சொல்றேன். என் தம்பி செஞ்சது தப்பு தான், எனக்கும் அவன் அப்படி செஞ்சது பிடிக்கலை தான்…”
“அதனால தான் அவன்கிட்ட நான் பேசறதில்லை… நீங்க எப்படி பார்த்தாலும் அது தான் நிஜம்… அவனை சீர் கொண்டு வரச்சொன்னது என்னோட உரிமையை காட்டத்தான்…”
“அதைத்தவிர நான் அவன்கிட்ட வேற பேசினதில்லை. இந்த கல்யாணம் கூட ரேகாவுக்காகவும் உங்களுக்காகவும் தான் சரின்னு சொன்னேன்…”
“இதுவே அவன் காதல் கத்திரிக்காய்ன்னு சொல்லி பேசியிருந்தா நானே அவன் வேணாம்ன்னு ரேகாகிட்ட சொல்லியிருப்பேன்…”
“என் தம்பியை பத்தி எனக்கு தெரியும். எனக்காக தான் அவன் இதை செஞ்சான்… அதுக்காக உங்க தங்கையை அவன் ஒண்ணும் கைவிட்டிர மாட்டான்… கண்டிப்பா நல்லா பார்த்துப்பான்…”
“கூடப்பிறந்த அக்காவோட சந்தோசம் முக்கியம்ன்னு நினைக்கிறவன், இன்னொரு பொண்ணை எப்பவும் காயப்படுத்த மாட்டான், அதுவும் அவன் விரும்பின பொண்ணை…” என்றாள் நீண்ட விளக்கமாக.
தன் போக்கில் விஸ்வாவிற்காக அவள் சொன்னாலும் தன்னை மறந்து ஒரு விஷயத்தை சொல்லியிருந்தாள். அவள் அதை உணரவில்லை விஸ்வா அதை முழுவதுமாய் உணர்ந்தான்.
“நாளைக்கே நாம ஊருக்கு கிளம்பலாம்…”
“ரெண்டு நாள் இருந்திட்டு அவங்களையும் மறுவீட்டுக்கு கூட்டிட்டு வரச்சொன்னாங்க தானே…”
“அப்போ நீ இரு, நான் ஊருக்கு போயிட்டு வர்றேன்…”
“சும்மா சீன் போடாதீங்க… உங்க தங்கச்சி முக்கியம்ன்னா நீங்க இருப்பீங்க, இல்லைன்னா கிளம்பிக்கோங்க…” என்றாள் அவள்.
மறுநாள் அவனுக்கு மற்றொரு அதிர்ச்சியை கொடுக்க காத்திருக்கிறது என்று அறியாதவனாய் அவன் உறங்கிப் போனான்.
“ரேகா…”
“சொல்லுங்க பாட்டி…”
“ரெண்டு பேரும் கோவிலுக்கு போயிட்டு வாங்க…”
“ஹ்ம்ம்…”
அவர் தன் பேத்தியை பார்த்தார் இப்போது. “காஞ்சனாம்மா…”
“பாட்டி”
“நீங்களும் அவங்களோட போயிட்டு வாங்களேன்…”
“ஓகே பாட்டி…”
“காளிகாம்பாள் கோவிலுக்கு போயிட்டு வாங்க, நம்ம சேகரை வண்டி கொண்டுட்டு வரச்சொன்னேன். இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திடுவான். நீயும் பேரனை கூட்டிட்டு கிளம்பு…” என்றார்.
‘அவருமா… இப்போ போய் சொன்னா அதுக்கு என்ன அலம்பல் பண்ணுவாரோ…’ என்று எண்ணிக்கொண்டே அவள் அறைக்கு வந்தாள்.
இரவு வெகு நேரம் கழித்து உறங்கியதால் அவன் இன்னமும் எழுந்திருக்கவில்லை. அருகே சென்று எழுப்பினாள்.
“விஷ்வா…”
அவனிடம் அசைவில்லை.
“விஷ்வா எழுந்திருங்க…” என்று மெதுவாய் அவன் தோளைத் தொட்டு உலுக்கினாள்.
ஒரு களித்து படுத்திருந்தவன் சடக்கென்று திரும்ப இவள் எதிர்பாராமல் அவன் மேல் விழுந்தாள்.
அவள் எழவும் இவன் கண் விழிக்கவும் சரியாய் இருக்க விழிகள் இரண்டும் விலகாமல் ஒருவரை ஒருவர் விழுங்கிக் கொண்டிருந்தது.
எவ்வளவு நேரம் சென்றிருக்குமோ தெரியாது வெளியில் பாட்டி “காஞ்சனாம்மா…” என்று அழைக்கவும் தான் இயல்பிற்கு வந்தாள் அவள்.
“பா… பாட்டி கோவிலுக்கு போகலாம்ன்னு சொன்னாங்க… நீ… நீங்க குளிச்சுட்டு வாங்க… அதுக்கு தான் எழுப்பினேன்…” என்றவளின் பேச்சு என்றுமேயில்லாத வகையில் இருந்தது.
அவனைப் பொறுத்தவரையில் அவளிடம் என்றுமே இந்த தடுமாற்றத்தை அவன் பார்த்ததேயில்லை. அவன் காதலை சொன்ன போது கூட அவள் கண்களில் அவன் காதலை கண்டதில்லை.
அவள் பேச்சு மட்டுமே காதல் போல் இருந்தது அப்போது. ஒவ்வொரு முறையும் அவள் கண்களில் காதலை தேடித்தேடி அவன் ஏமாந்திருக்கிறான். அப்போதெல்லாம் அவன் அதை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை.
தங்கள் காதல் நிறைவேறுமா என்பது குறித்தான அவளின் பயம் என்று தான் நினைத்திருக்கிறான். எப்போது பேசினாலும் அவள் கண்களில் எங்காவது தன் மேல் அந்த அன்பு ஒளிந்திருக்கிறதா என்று தேடியிருக்கிறான். இன்று தான் அவன் அதை கண்டான் முதல் முறையாய்.
நேற்றைய அவளின் பேச்சே அவனை ஏதேதோ சிந்திக்க செய்திருந்தது. உடன் பிறந்த தமக்கையின் சந்தோசம் பெரிதாய் நினைப்பவன் என்று தன் தம்பியை பற்றி சொல்லிக் கொண்டிருந்தாள்.
அப்படியென்றால் அவளின் சந்தோசம் நானா என்று நினைக்க நினைக்க அவனுக்குள் அப்படியொரு உணர்வு. அது மொத்தமும் சில மணி நேரத்தில் வடிந்து போகப் போவதறியாமல் அவன் எழுந்து குளித்து கிளம்பி வந்தான்.
கோவிலுக்கு என்பதால் பழக்கதோஷத்தில் வேட்டியும் கரும்பச்சை நிற முழுக்கை சட்டையும் அணிந்து வந்தான்.
அவனை பார்த்தவளின் கண்கள் எப்புறமும் திரும்பவில்லை. பாட்டி அவளை அழைத்துக் கொண்டிருந்தார். ரேகா தான் அவர் வெகு நேரமாய் கூப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து காஞ்சனாவின் தோளை தட்டி சுயநினைவுக்கு கொண்டு வந்தாள்.
“பாட்டி கூப்பிட்டாங்க…”
“ஹ்ம்ம் போறேன்…”
“போக வேண்டாம், அவங்க இங்க தான் இருக்காங்க…”
“சாரி பாக்கலை…” என்று உளறிவிட்டு “சொல்லுங்க பாட்டி”
“டிபன் செஞ்சு வைச்சிருக்கேன், சாப்பிடுங்கன்னு சொல்லிட்டு இருக்கேன் நீ என்ன யோசனையில இருக்க காஞ்சனாம்மா…”
“ஒண்ணுமில்லை பாட்டி அம்மா ஞாபகம்…” என்று மீண்டும் உளறினாள்.
எப்போதுமே அப்பா ஞாபகம் என்று சொல்லும் தன் பேத்தி இன்று அம்மா ஞாபகம் என்று சொன்னது அவரை யோசிக்க வைத்தது.
காஞ்சனாவிற்கு தாயை விட தந்தை தான் அதிக பிரியம் எப்போதும். அவளை அப்படி தாங்குவார் அவர், அவளின் அம்மா இறந்த பிறகு அனைத்துமே அவளுக்கு அப்பா அப்பா தான்.
“என்னாச்சுடாம்மா…” என்று பேத்தியின் தலையை வருடி கேட்டார் அவர்.
“ஒண்ணு இல்லைன்னு சொன்னா புரியாதா பாட்டி உனக்கு…” என்று வெடுக்கென்று பேசினாள்.
அவளை யாரும் கண்டுக்கொள்வது அவளுக்கு பிடிக்கவில்லை. பாட்டி தன்னை கவனிக்கிறார் என்று அவர் பேச்சில் உணர்ந்தவள் இயல்பிற்கு வந்தாள்.
விஸ்வா எந்த அளவிற்கு காஞ்சனாவின் நடவடிக்கைகளை கண்டுக்கொண்டிருந்தானோ அதே அளவிற்கு தன் தங்கையின் போக்கையும் பார்த்துக் கொண்டு தானிருந்தான்.
அவள் இயல்பாகவே நடமாடினாள். அமுதனுக்கு பரிமாறியதிலும் அவள் சாதாரணமாகவே இருந்தாள். அமுதனும் அப்படியே எப்போதும் போலவே இருந்தான்.
ரேகாவின் முகத்தில் கவலை எதுவும் தெரிகிறதா, சந்தோசமாக தானிருக்கிறாளா என்ற கவலை கொஞ்சம் மட்டுப்பட்டது அவளின் செயலில்.
சந்தோசமாயிருப்பாள் என்ற நிம்மதி எங்கோ ஒரு மூலையில் பிறந்தது அவனுக்கு. நால்வருமாய் கிளம்பி காளிகாம்பாள் கோவிலுக்கு சென்றனர்.
அம்மனுக்கு சாத்துவதற்காய் மாலையும் அர்ச்சனைக்கும் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றனர். கோவிலுக்குள் நுழைந்து முதலில் விநாயகரை தொழுது உள்ளே செல்லும் போது மனதிற்குள் ஒரு இதம் வந்தது விஸ்வாவிற்கு.
அமுதனும் ரேகாவும் முன்னால் சென்றுவிட விஸ்வா மெதுவாய் வந்துக்கொண்டிருந்த காஞ்சனாவுடனே நடந்து வந்தான்.
“நீங்க முன்னாடி போறதுன்னா போங்க, எனக்கு இது பழக்கம் தான்…”
“நீயும் நானும் சேர்ந்து தானே கோவிலுக்கு வந்தோம். சேர்ந்தே போய்க்கலாம், பேசாம வா…” என்று அதட்டினான்.
எப்போதும் போல் அவனுடன் வாயாடாமல் அமைதியாகவே வந்தாள் அவள்.
அம்மனின் முன் சற்று நேரம் அமர்ந்து அவன் வேண்டுதலை வைக்க ஆரத்தி காட்டி மணியடிக்கவும் சரியாக இருந்தது. எது நடந்தாலும் நல்லதிற்கே என்ற எண்ணத்தோடே எழுந்தான்.
வீட்டிற்கு செல்ல அவர்கள் மீண்டும் காரில் ஏறினார்கள். டிரைவரின் பக்கத்தில் அமர்ந்திருந்த விஸ்வா, “கடை இங்க தானே இருக்கு…”
என்ன கடை என்பது போல் பார்த்தாள் காஞ்சனா. “அதான் கேஎம் ஜுவல்லர்ஸ்”
அவள் முகம் மாற “ஹ்ம்ம்” என்ற பதிலை கொடுத்தாள் அவனுக்கு.
“போய் பார்க்கலாமா??”
“பார்க்கணுமா??” என்றவள் அமுதனை அர்த்தத்தோடு பார்த்தாள்.
அவன் கண் மூடித் திறக்க அவள் கடைக்கு செல்லும் வழியை சொன்னாள் டிரைவரிடம்.
“எனக்கு தெரியும் மேடம்” என்ற டிரைவர் “அங்க வண்டியை பார்க் பண்ண முடியாது சார். நான் மெயின் ரோடுல நிறுத்திக்கறேன். நீங்க போயிட்டு வந்து எனக்கு போன் பண்ணுங்க. நான் உங்களை இறக்கின இடத்தில ஏத்திக்கறேன்…” என்று சொல்ல அவர்களும் ஆமோதித்தார்கள்.
சொன்னது போலவே அவன் வண்டியை நிறுத்த இவர்கள் இறங்கிக் கொண்டனர். அமுதன் முன்னால் நடக்க மற்றவர்கள் அவனை பின் தொடர்ந்தனர்.
கேஎம் ஜுவல்லர்ஸ் வாசலில் நின்றிருந்தனர் அவர்கள். “என்ன இங்கவே நின்னுட்டு இருக்கீங்க உள்ள போகலாம் வாங்க…” என்றான் விஸ்வா.
“விஜயன் சார் இன்னும் வரலை, இப்போ தான் பேசினேன் வந்திட்டு இருக்காரு…” என்றான் அமுதன் மொட்டையாய்.
“என்ன பேரு சொன்னே?? விஜய… விஜயன் ரைட், இவர் பேர்ல தானே எனக்கு வக்கீல் நோட்டீஸ் வந்துச்சு…”
“ஹ்ம்ம் ஆமா…” என்றாள் காஞ்சனா.
அந்நேரம் உள்ளே அறுபதை தாண்டிய வயதில் இருந்த ஒருவர் வந்தார். “என்னம்மா வெளியவே நிக்கறீங்க, உள்ள வாங்க…” என்று உபசரித்தார்.
“உங்களுக்காக தான் காத்திட்டு இருந்தோம்…” என்றான் அமுதன்.
“என்ன தம்பி புது டிசைன் எதுவும் ரெடி ஆச்சா??” என்றார் அவர்.
“ரெடியாகிட்டே இருக்குங்க…” என்று பதில் கொடுத்தாள் காஞ்சனா.
விஸ்வாவிற்கு அங்கு என்ன நடக்கிறது என்று புரியவேயில்லை. பேச்செல்லாம் மர்மமாகவே இருந்தது.
“இவரு…” என்று விஸ்வாவை காட்ட “விகே ஜுவல்லர்ஸ் கன்னியாக்குமரி” என்றாள் அவன் மனைவி.
“அட அந்த தம்பியா, நம்ம டிசைன்எல்லாம் இவங்க பண்ணதா சொன்ன தம்பி தானே…” என்று அவர் சொல்ல விஸ்வாவிற்கு ரத்த அழுத்தம் எக்கச்சக்கமாய் எகிறியது.
அக்காவையும் தம்பியையும் வெளிப்படையாய் முறைத்தான் அவன். “இங்க என்ன நடக்குது??” என்று பற்களை கடித்தான் அவன்.
“இவர் தான் விஜயன் சார்… இந்த கடையோட ஓனர்… இவங்க பசங்க பேருல தான் இந்த கடை நடக்குது…” என்று அதன் பெயரின் காரணத்தை சொன்னாள்.
‘என்ன அப்போ கேஎம் ஜுவல்லர்ஸ் என்றால் காஞ்சனா மாலா இல்லையா… இங்கேயும் தான் ஏமாந்து தான் போனோமா…’ என்று அவனுக்கு ஆத்திரம் வர கண்கள் சிவந்தது சினத்தில். காஞ்சனா கொஞ்சம் கூட அலட்டாத குரலில் “இவர் கடையில தான் அமுதன் வேலை பார்க்கிறான் மேனேஜரா…”
“நானும் வேலை பார்த்தேன் இங்க தான், நான் மட்டுமில்லை என்னோட அப்பாவும் இங்க தான் வேலை பார்த்தாரு… இந்த கடைக்கு நான் ஓனர் இல்லை…”
“ஆனா இப்போ இதுல நான் பார்ட்னரா இருக்கேன்… எப்படின்னு தெரியுமா?? அப்புறம் சொல்றேன்…” என்று கிசுகிசுப்பாய் சொன்னாள் அவள்.
விஸ்வா நிற்காமல் அங்கிருந்து சென்றுவிட்டான். அவனுக்கு பைத்தியமே பிடித்துவிடும் போலானது. தன்னைச் சுற்றி என்ன தான் நடக்கிறது என்ற கோபம், இயலாமை அவனை நிதானமிழக்க செய்தது.
கார் விட்டுச் சென்ற இடத்தில் நிற்க அதில் ஏறி அமர்ந்தான். மற்ற மூவரும் ஒருவர் பின் ஒருவராய் வந்து அமர வீட்டை நோக்கிச் சென்றது கார்.
வீடு வந்தது தான் தெரியும் முதலில் இறங்கிய விஸ்வா விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டவன் அதே வேகத்தில் தன் உடைமைகளுடன் வெளியில் வந்தான்.
அதை எதிர்பார்த்தவள் போல் நின்றிருந்தாள் காஞ்சனா. பாட்டி அப்போது தான் மதிய சமையல் முடித்து அறைக்கு சென்று படுத்திருந்தார்.
“எங்கே கிளம்பிட்டீங்க??”
விஸ்வா பதிலே பேசவில்லை. காஞ்சனா ரேகாவை முறைத்து பார்த்தாள்.
அதன் பொருள் நீ கேள் என்பதே. அவளுக்குமே அங்கு என்ன நடக்கிறது என்று முழுதாய் தெரியாது என்பதால் புரியாமலே பார்த்திருந்தாள். அமுதன் தான் நான் பார்த்துக்கொள்கிறேன் என்பதாய் அவளின் கரம் பிடித்திருக்க அமைதியானாள்.
காஞ்சனாவின் முறைப்பில் “அண்ணா எங்கே கிளம்பிட்டீங்க??” என்றாள்.
“ஊருக்கு…”
“அமுதா நீ பொண்டாட்டியை கூட்டிட்டு உள்ளே போ…” என்று அவள் சொல்ல அடுத்த கணம் தன் தமக்கை சொன்னது போல ரேகாவை அழைத்துக் கொண்டு அவனறைக்கு சென்றுவிட்டான் அமுதன்.
வாசல் கதவுக்கு பக்கத்தில் நின்றுக் கொண்டிருந்த காஞ்சனா கதவை அடைத்து தாழிட்டு வந்தாள்.
“உங்ககிட்ட பேசணும் வாங்க…”
“எனக்கு உன்கிட்ட பேசவே இஷ்டமில்லை காஞ்சனா. தயவு செஞ்சு வழி விடு…”
“உங்களுக்கு இஷ்டமிருக்கா இல்லையான்னு நான் கேக்கவேயில்லையே. உங்ககிட்ட நான் இப்போ பேசணும். நான் சொல்றதை நீங்க இப்போ கேட்டு தான் ஆகணும்…”
“நான் என்ன நீ வைச்ச ஆளா… என்னை நீ என்னன்னு நினைச்சுட்டு இருக்கே??”
“என் புருஷன்னு நினைச்சுட்டு இருக்கேன்…”
“என்ன நக்கலா??”
“நக்கல் இல்லை உண்மை”
“சத்தியமா உன்னை மாதிரி ஒரு ஜென்மத்தை நான் பார்த்ததேயில்லைடி…”
“ஏன் பார்த்ததில்லை அதான் உங்க முன்னாடி நிக்கறேனே??”
“என்னால முடியலை உனக்கு என்ன தான் வேணும்…” என்றவன் நின்ற இடத்திலேயே தொப்பென்று அமர்ந்துவிட்டான்.
அவனுக்கு வெறுத்து போய்விட்டது. அவள் விஷயத்தில் தான் கொண்டது உச்சபட்ச தோல்வியாகவே நினைத்தான்.
“உள்ள வாங்க விஷ்வா ப்ளீஸ்… பாட்டி தூங்கறாங்க…” என்றாள் மெதுவான குரலில்.
“அவங்க நல்லா தூங்கறாங்க, நான் தூங்கி நாளாச்சு தெரியுமா… என்னைக்கு உன்னை பார்த்தனோ அன்னைக்கு பிடிச்சது எனக்கு சனி…”
“நான் சாகற வரைக்கும் இனி அது விடாது போல. உனக்கு என்ன வேணும் காஞ்சனா…”
“உள்ள வாங்க விஷ்வா…” என்றாள் மீண்டும்.
“நான் சொல்லிட்டே இருக்கேன், நீ திரும்ப திரும்ப அதையே சொல்லிட்டு இருக்க, உள்ள வந்தா நீ எல்லா உண்மையும் சொல்லிடுவியா சொல்லு…”
“சொல்லுவன்னா நான் உள்ள வர்றேன்… எப்படியும் நீ எதையும் சொல்லப் போறதில்லை, அப்புறம் எதுக்குடி என்னை சாவடிக்குற”
“உங்களுக்கு என்னால சொல்ல முடிஞ்ச உண்மையை கண்டிப்பா சொல்றேன்” என்றவள் அதன்பின் உன்னிஷ்டம் என்பது போல் உள்ளே சென்றுவிட்டாள்.
