Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

VMN FINAL 3

இரண்டாவது குழந்தைக்கே தாய்வீட்டிற்க்கு அனுப்பாத திருமலை தற்போதா அனுப்புவான்.. இரண்டு குழந்தைகளை வச்சிக்கிட்டு தாருவையும் பார்த்துக்கிறது ரொம்ப சிரமமா இருக்கும் தன் வீட்டிற்க்கு அழைத்து செல்கிறேன் என என சுந்தரியும் சதாசிவமும் அஜய் வரும் முன்னே ஆனவரை கேட்டு பார்த்துவிட்டனர்.. திருமலை பதில் சொல்லும் முன்னே.. ரத்தினமும் மஞ்சுளாவும் அவர்களின் கோரிக்கையை மறுத்துவிட்டனர்.

       தற்போது அஜய் வந்த பின்னே சிரமின்றி அனைவரையும் சமாளித்தான் இன்பமாகவே. பத்தாவது மாதமும் வந்திருக்க.. கேட்டாலும் மீண்டும் கிடைக்கப் பெறாத புன்னியச்சிறையிலிருந்து குழந்தைகள் பெரும் சிரமத்திற்க்குப் பிறகு விடுதலையாகினர். 

     முன்னிரண்டு குழந்தைகளை ஈன்றெடுத்ததை விட இக்குழந்தைகளை ஈன்றெடுப்பதற்க்குள் பெரும் சிரமத்திற்க்கு ஆளாகிவிட்டாள் தாரணிகா.. இதற்க்கும் குழந்தைகள் வழக்கத்தை விட எடை குறைவாகத்தான் இருந்தது. 

      இதில் பெரும் சந்தோசம்.. கடவுளிடம் வேண்டியது போலவே இரண்டும் பெண்குழந்தைகள்.. குழந்தைகளைக் காண கோடி கண்கள் பத்தாது.. தாமரை மொட்டாக பளபளத்து மின்னியது திருமலையின் இரு பெண்தெய்வங்களும்.. 



Advertisement

        அஜய்யின் சத்தான சமையலோடும்..  திருமலையின் அக்கறையான கண்டிப்போடும்.. நல்ல முறையில் பிரசவிக்க வேண்டும் என மஞ்சுளா ரத்தினத்தின் வேண்டுதலோடும் இஷ்ட தெய்வத்தின் துணையோடும் நல்ல முறையிலேயே குழந்தை பிறந்திருந்தது.  குழந்தை பிறப்பிற்க்கு முன்பு போலவே அன்பாக அக்கறையாக.. கவனமாக.. என இன்னொரு குழந்தையாய் கவனிக்கப்பட்டாள் தாரணிகா.   

     மேலும் மூன்று வருடங்கள் முடிந்திருக்க..  

     திருமலையின் வீட்டினில் எப்போதும் சத்தம் கலகலப்பு என வழக்கமாகியிருந்தது.. உங்க கல்யாணத்துக்கும் முன்ன அஜய்யும் இல்லாத போது வீடு வீடா இருக்காது.. இப்போதான் நல்லா இருக்கு.. என ரத்தினமும் மஞ்சுளாவும் சொல்லாத நாளில்லை.  

Advertisement

      திருமலையின் மகன்கள்.. தாரணியைப் போல அஜய்யை ரத்துமா என அழைக்க பழகியிருக்க.. இந்த இரட்டை பெண்குட்டிகளும் தனது ஏழாம் மாதத்திலேயே.. அஜய் முகம் முன்னே வந்தால் போதுமே.. மம்மா.. மம்மா..என அழைக்க ஆரம்பித்து இதோ தற்போது இரண்டு வயதை கடந்து அழகாய் மழலை பேச ஆரம்பித்திருந்தனர் குழந்தைகள்.

Advertisement

       தாரணியை  தாது..என்றும் திருமலையை திம்மலா..என அஜய் அழைப்பது போல் பெண் குழந்தைகள் அழைக்கப் பழகியிருக்க.. அஜய்யை அம்மா என்றழைக்க பழக்கப்படுத்தியிருந்தாள் தாரணிகா. ம்.. குழந்தைகளை குளிக்க வைப்பதிலிருந்த மேக்கம் போடுவது.. ஊட்டுவது விளையாடுவது என தானே அம்மாவான சந்தோசத்தில் அஜய் முகம் ஜொலிப்பதை கண்ட பின்னே இப்படி அழைக்கப் பழக்கியிருந்தாள். 

       நான்கு குழந்தைகள் என்றாலும் தாரணிக்கு ஒரு சிரமமும் இருக்காது.. மகன்களை மஞ்சுளா ரத்தினம் பார்த்துக்கொள்ள.. மகள்களுக்கு தான்தான் உன் அன்னை என்பதை நினைவு படுத்தினால்தான் உண்டு.. அம்மா அம்மா என சாப்பிடுவது குளிப்பது மட்டுமல்ல.. இரவில் உறக்கமும் அஜய்யோடுதான் இரு பெண்குட்டிகளும்.

       பேரன்களின் காலனிகளை ரத்தினம் துடைத்துக்கொண்டிருக்க.. தாரணி மகன்களுக்கு சீருடை அணிவித்துக் கொண்டிருக்க.. அஜய்யிடம் அழகாய் தன்னை அலங்கரித்துக்கொண்டிருக்கும் பேத்திகளை ரசித்தவாறு  பேரன்களுக்கு மதிய உணவை எடுத்து வந்த மஞ்சுளா..

Advertisement

       நீ இங்க வந்த நேரம்தான் என் பெரியவன் கிடைச்சான்.. பொண்ணு இல்லாத வீடு பொணம் போனாலும் தெரியாதுன்னு சொல்வாங்க… மூனு தலைமுறையா பொண்ணு இல்லாத பரம்பரைக்கு இரண்டு பொண்ணுங்களை லட்டாட்டம் பெத்து கொடுத்திருக்க.. பேத்திகளை விட்டுட்டு இருக்க முடியாதுங்கிறதுனாலதான் அஜய் இங்கையே வந்துட்டான்.. என் பெரியவன் எனக்கு கிடைச்சிட்டான்.. இனி செத்தாலும் சந்தோசமா சாவேன்..என மஞ்சுளா நிறைந்த அன்போடும் கண்ணீரோடும் தாரணிக்கு நன்றி பாராட்ட.. 

       ‘நானிருக்கேன்.. நானிருக்கேன்னு நீங்க சொன்னதை நம்பி இரண்டு பொண்ணுங்களை பெத்துருக்கேன்.. உங்கள்ட்ட வேலை வாங்காம அவ்ளோ ஈசியா உங்களை சாக விட்ருவேனா..?” என தாரணி முறைக்க.. 

       சாவேன் என சொன்னதை ஏற்க்க முடியாமல் தன்னை முறைக்கும் மருமகளின் அன்பில் கரைந்தவராய்.. போடி பஜாரி..என சிரித்தார். 

       ‘என்ன..? பஜாரியா..?” என முறைத்தவள்.. ராங்கி.. ரௌடி வரிசையில இப்போ பஜாரியா..? அப்போ இந்த கேங்குக்கு தலைவியான உங்களுக்கு ஒரு பேர் வைக்கனுமே..என தாரணி தீவிரமாய் யோசிக்க.. தாரு..என திருமலை குரல் கொடுத்தான். 

      தாரணி உள்ளே வர.. மனைவியை அணைத்தவன்.. எங்கம்மா என்னவோ நீயே புள்ள பெத்த மாதிரி உன்னை தலைமேல தூக்கிவச்சி ஆடுறாங்க.. நீயும் அப்படியே திளைச்சி போற.. என் உழைப்பை உனதாக்கியிருக்கியே.. உனக்கு கொஞ்சம் கூட வெக்கமா இல்ல..?” என்றான் காதலாக. 

     தாரணி வெக்கத்தோடு முறைக்க.. இப்படி வெக்கப்பட்டே என்னை சாய்சிடறடி ராங்கி..என்றவாறு தாரணி இதழை தனதால் நெருங்க.. தாது.. திம்மலா.. அண்ணா.. ச்சூளு.. லேட்டு.. வா சொல்லி..என்ற தகவலோடு உள்ளே வந்த குழந்தைகள் தகப்பனின் கைலியை பிடித்து இழுக்க.. மனைவிக்கு அவசர முத்தம் பதித்து.. மணக்கும் குழந்தைகளை அள்ளி வாசம் பிடித்து கொஞ்சியவன்.. 

     ‘ஸ்கூல்க்கு லேட் ஆகிடுச்சின்னு அண்ணா கூட்டிட்டு வர சொன்னானா.?” என சிரிப்போடு கேட்க.. ஆமாம் என்பதாய் அருந்ததியும் ஆராதனாவும் வேகமாய் தலையசைக்க.. அப்பா டிரெஸ் மாத்திட்டு வந்திடறேன்..என குழந்தைகளை இறக்கி விடவே..

      ‘அண்ணா.. திம்மலா.. தெஸ்.. மாத்தி..என்ற கத்தலோடு குழந்தைகள் வெளியேற.. ஏய்.. மெல்ல..என குழந்தைகளை அள்ளினான் அஜய்.  

      இப்படியாக நாட்கள் அழகாய் நகர.. அருந்ததியும் ஆராதனாவும் பள்ளி செல்ல ஆரம்பித்தனர். குழந்தைகள் பள்ளிக்கு சென்றதும் அஜய்யின் முகம் வாடிவிடுவதை கவனித்த தாரணி திருமலையிடம் தன் கவலையை தெரிவிக்க.. நானும் கவனிச்சிட்டுதான் இருக்கேன்.. தோப்புக்கு கூப்பிட்டாலும் வரமாட்றான்.. யோசிச்சி அவனுக்கு பிடிச்சமாதிரி  எதாவது செய்யலாம்..என தேற்றினான் மனைவியை. 

     இதற்க்கும் குழந்தைகள் பள்ளியில் சேர்த்து ஒரு வாரம்தான் ஆகியிருந்தது.. மதியம் பனிரெண்டு மணிக்கெல்லாம் இரு பெண்குட்டிகளும் வந்துவிடுவார்கள். ஆனாலும் அஜய்யால் தாளமுடியாமல் போக.. ஸ்கூல்ல அழறாங்களோ என்னவோ..என புலம்பிக்கொண்டே இருப்பான்.

      சனி ஞாயிறு பள்ளி விடுமுறை என்பதால் குழந்தைகளிடம்.. இன்னைக்கு ஸ்கூல் லீவ்.. அதுனால அம்மா உங்களை வெளில கூட்டிட்டு போகப்போறேன்..என அஜய் உற்ச்சாகத்தோடு சொல்ல.. இரு பெண்குட்டிகளும்.. ஹே.. அம்மா ஐஸ் க்ரீம் வாங்கி தருவாங்க..என சந்தோசத்தோடு கத்த.. ரத்துமா நாங்க..என அறிவழகனும் மதியழகனும் முகம் வாடினர். 

     ‘அப்போ உங்கப்பாம்மாவையும் வர வை.. அப்போதான் நீங்களும்..என அஜய் பேரம் பேச.. அப்பாகிட்ட கேட்டா வியாபாரம் பார்க்கனும்.. மார்கெட் போகனும்.. தோப்புக்கு போகனும்னு எதாவது சொல்வாரு..என அழ வருவதுபோல் மகன்கள் பேச.. தனதறையிலிருந்து இவர்கள் பேச்சை கேட்டிருந்தவன் சிரிப்போடு வெளியே வந்து..       

      ‘உங்க ரத்துமா என்னைக்குடா உங்களை விட்டுட்டு வெளிய போயிருக்கான்..? அதோட ஒன்னு ரெண்டு முறைதான் நீங்க கூப்பிட்டு இன்னைக்கு வேணாம் வேலையிருக்குன்னு சொல்லியிருக்கேன்.. அதையே சொல்லி காட்டுவிங்களாடா.?” என நியாயம் கேட்டான் மகன்களிடம்.

      ‘ஆனாலும் சொல்லியிருக்கிங்கதான.?” என அறிவழகன் முகத்தை உர்ரென வைத்தவாறு ஏமாற்றத்தோடு சொல்ல.. சரியான கேடிப்பையன் டா நீ.. பயந்த மாதிரியே எல்லாத்தையும் சொல்லிடறது..என தன் மகனை கொஞ்சினான் திருமலைரத்தினம்.

       தகப்பன் கொஞ்சலுக்கு மயங்கினாலும்..இன்னைக்கு எல்லாரும் போறோமா.? இல்லையா.?”என மதியழகன் தன் காரியத்தில் கண்ணாய் கேட்க.. ஹா..ஹா..என பலமாய் சிரித்தவன்.. ஆயா தாத்தான்னு எல்லாரும் போலாம்.. ஆயாகிட்ட சொல்லி ரெடியாகுங்க..என சொல்லி குழந்தைகளை அனுப்பி வைத்தவன் அஜய்யை பார்க்க.. 

     அஜய்.. என்னடா அப்படி பார்க்குற..?” என்றான் தனது வழக்கமான நளினத்தோடு.

     ‘நேரா விசயத்துக்கு வரேன்..என்றவன்.. சில நிமிட மௌனத்திற்க்கு பிறகு.. குழந்தைகளுக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்துட்டன்னு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அஜய்..என்றான்.

      ‘என் குழந்தைகளுக்கு நான் பார்க்காம வேற யார் பார்ப்பா.?” என்றான் உரிமையாக.

      ‘குழந்தைகளுக்காக நீ பார்க்கிறது சரிதான்.. ஆனா எத்தனை பெரிய வேலைல கம்பீரமா இருந்த.? யார் துணையும் இல்லாம அந்த உயரத்தை அடைய எத்தனை சிரமப்பட்டிருப்ப.? நீ பட்ட கஷ்டமெல்லாம் இப்படி நாலு சுவத்துல அடங்கனுமா.?” என்றான் வருத்தத்தோடு.

        மகன்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த மஞ்சுளா.. ரொம்ப வருசம் ஆளுக்கொரு பக்கம்னு இருந்துட்டு இப்போதான் எல்லாரும் ஒன்னா இருக்கோம்.. பெரியவன் இங்கையே இருக்கட்டும் திருமல..என அவசரமாய் குறுக்கிட்ட..

       ‘ப்ச் ம்மா.. அஜய்யை எங்கையும் வெளில போக சொல்லல..  கொஞ்சம் அமைதியா இருங்க..என அடக்கியவன்.. அஜய்யிடம்.. சின்னதா ஒரு ப்ரைமரி ஸ்கூல் ஆரம்பிக்கலாமா அஜய்..?” என்றான் ஆவலாக.

       வேணாம் என தலையசைத்து மறுத்தவன்.. எனக்கு இந்த ஊரு செட்டாகல திரு.. குழந்தைகளுக்காகத்தான் இங்க இருக்கேன்..என்றான் முகம் வாடியவனாய்.

        யார் என்ன சொன்னார்கள் என கேட்கத் துடிக்கும் மனதை சிரமப்பட்டு அடக்கியவன்.. சரி அப்போ உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு.. அது சரிவருமா பார்க்கலாம்..என்றான். 

       அஜய்.. பெரியவன் வயித்துல இருக்கும்போது மும்பைல இந்தியன் இன்ஸ்டியூட் யுனிவர்சிட்டிக்கு சீப் கெஸ்ட்டா வந்திருந்தேன்ல.? நான் அமெரிக்கால ரிசைன் செய்தது தெரிந்ததுமே அங்கயிருந்து கூப்பிட்டாங்க.. இப்போ ஒரு வருசம் முன்ன கூட திரும்பவும் கூப்பிட்டாங்க.. அமெரிக்கால இருந்த மாதிரியே அங்க என்னால இருக்க முடியும்.. ஆனா குழந்தைகளை விட்டுட்டு என்னால இருக்க முடியும்னு தோணல.. அதான் வரமாட்டன்னுட்டேன்..

       ‘முட்டாளா நீ..? இங்க இருக்க மும்பைக்கு வரலன்னுருக்க..? அதுவும் எவ்ளோ பெரிய யுனிவர்சிட்டி..என திருமலை திட்ட.. 

       ‘இப்போவும் ஒன்னும் பிரச்சனையில்ல.. ஜாயின் செய்றதுன்னா செய்துக்கலாம்.. ஆனா குழந்தைகள்..என அஜய் மீண்டும் ஆரம்பிக்க.. 

      ‘இப்போதான் இரண்டு பேரும் ஸ்கூல் போக ஆரம்பிச்சிட்டாங்கள்ல.? அப்புறமென்ன.? நீ ஜாயின் பண்ணு.. வாரம் ஒரு முறை வந்து போய்க்கலாம்..என்றான் கண்டிப்போடு.

       திருமலையின் பேச்சில் உடன்பாடில்லாமல் அஜய் முகம் திருப்ப.. அருந்ததி ஆராதனாவை உங்களோட கூட்டிட்டு போறதுன்னா கூட்டிட்டு போங்க ரத்துமா.. அங்கயே ஸ்கூல் சேர்த்துடலாம்..என்றாள் தாரணி.

       அஜய்யின் முகத்தில் ஒளிவெள்ளம் வீச.. இப்போதைக்கு வேணாம் தாரு.. இங்கையே படிக்கட்டும்.. ஒரு சிக்ஸ்த்துக்கு மேல குழந்தைகளுக்கு விருப்பம்ன்னா அழைச்சிட்டு போய்டட்டுமா.?” என்றான் ஆவலாக.

       ‘அறிவழகனும் மதியழகனும் அவங்க ஆயா தாத்தா பசங்க.. அருந்ததியும் ஆராதனாவும் உங்க குழந்தைங்க.. இதுல என்கிட்ட கேக்க என்னயிருக்கு.. உங்க விருப்பம் போல செய்ங்க.. இப்போ அங்க ஜாயின் பண்ண முடியுமா பாருங்க.. குழந்தைகள் சந்தோசம் எந்தளவுக்கு முக்கியமோ அதுக்கு கொஞ்சமும் குறையாம உங்க சந்தோசம் எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்..என்றாள் பாசமாக.

      வழக்கம்போல் தாரணியின் பாசத்தில் உருகினாலும்.. நான் மும்பை போன பிறகும் இப்போ மாதிரி ஏழு மணி வரை தூங்க கூடாது.. ஐஞ்சு மணிக்கெல்லாம் எழுந்து குழந்தைகளை பார்த்துக்கனும்.. என முறைப்போடு கண்டிசன் போட.. 

       தாரணி.. ரத்துமா உங்கள்ட்டதான் சொல்றாங்க.. நல்லா கேட்டுக்கோங்க.. ஏழு மணிக்கெல்லாம் எழுந்துக்கனும்..என திருமலையிடம் சிரிப்போடு சொல்ல..

       ‘சரிடிம்மா.. நீ நல்லா தூங்கு.. நானே பார்த்துக்கிறேன்..என்றான் தானும் சிரிப்போடு.

       முன்பிருந்த பயத்தில்.. எங்க போனாலும் அங்கையே இருந்துடுவான் என அஜய் மும்பை செல்வதற்கு மஞ்சுளா மறுக்க.. முன்ன மாதிரியெல்லாம் என்னால தனியா இருக்க முடியாதும்மா.. குழந்தைகளுக்காகவே வாரம் வாரம் வந்துடுவேன்..என நம்பிக்கையளித்து மும்பைக்கு கால் செய்தான்.

       அடுத்த வாரத்தில் அஜய் மும்பை செல்லவிருக்க.. நான்கு மற்றும் இரண்டாம் வகுப்பு படிக்கும் அண்ணன்களிடம் தங்கையை பத்திரமாக பார்த்துக்கொள்ள அறிவுருத்தி.. மூன்றரை வயது பெண்குழந்தைகளிடம்.. நானும் ஸ்கூல் போகப் போறேன்.. லீவ் விடும்போது அம்மா உங்களை பார்க்க வந்திடுவேன்..என குழந்தைகளுக்கு ஏற்றார்போல் எடுத்துரைத்து மும்பை கிளம்ப ஆயத்தமானான். 

       இரு குழந்தைகளுக்கும் மாறி மாறி முத்தம் வைத்து.. பாய் டா செல்லம்..என அஜய் சொல்ல.. ம்மா.. ஸ்கூல் போகும் போது அழக்கூடாது சொன்னிங்க.. இப்போ நீங்க அழறிங்க..என ஆராதனா கேட்க.. 

       கண்ணீரோடே சிரித்தவன்.. சரி.. அம்மா அழல.. நீங்களும் அழாம.. தாரு திருமலையை படுத்தாம இருக்கனும் சரியா..? அம்மா பைவ் டேஸ் கழிச்சி ஓடி வந்துடுவேன்..என தற்போது குழந்தைகளிடம் முத்தம் வாங்கி கிளம்பினான் அஜய். 

       அஜய் சென்ற பின் குழந்தைகளின் முகம் வெகுவாய் வாடிட.. தாரணிக்கும் திருமலைக்கும் ஆராதனா அருந்ததியை சமாளிப்பது பெரிய சவாலாகிப் போனது.. ஐந்து நாளில் வருகிறேன் என சொன்னவன் நான்கைந்து பெரிய பைகளோடு மூன்றாம் நாளே வந்திருந்தான்.

       ‘ஹே.. என குழந்தைகள் ஆர்பரிக்க.. வாரம் நாலு இல்ல மூனு நாள்தான் எனக்கு க்ளாஸ் இருக்கும்.. என் ஸகெட்யுல்க்கேத்தாற்போல அடிக்கடி வந்துடுவேன்..என அஜய் சந்தோசிக்க.. வீட்டிலுள்ள அனைவருக்கும் நிம்மதி பிறந்தது.

      தாரணி.. நீங்க இல்லன்னாலும் உங்க ரூம்லதான் படுக்கனும் சொல்றாங்க ரத்துமா.. ரெண்டுங்களும் தனியாவே படுத்துக்குதுங்க.. நாங்களும் அங்க படுக்கக்கூடாதாம்.. அது அவங்க அம்மா பெட்டாம்.. என்னை உக்கார கூட விடமாட்றாங்க..என குழந்தைகளின் சேட்டையை தாரணி வாசிக்க.. அதானே.? அவங்கம்மா பெட்ல நீ எப்படி உக்காரலாம்..?” என பெருமையோடு குழந்தைகளை கொஞ்சியவன்..

     ‘அப்படியே பழகிக்கட்டும் தாரு.. எதாவது உடம்புக்கு சரியில்லன்னா பக்கத்தில இருந்தா போதும்.. இல்ல எனக்கொரு கால் பண்ணுங்க.. எத்தனை முக்கியமான வேலைன்னாலும் ஓடி வந்துடறேன்..என்றான் நெகிழ்வோடு.

      அவ்வப்போது நாலு குழந்தைகளிடையே ஏற்படும் சண்டையை விலக்குவது.. அவர்கள் வாசிக்கும் புகார்களுக்கு பஞ்சாயத்து செய்வது.. பள்ளியில் நடந்தது என குழந்தைகள் சொல்லும் கதைகளை கேட்பது என அதிலேயே களைத்து போனாள் தாரணிகா. 

        தற்போது குழந்தைகளின் கவனம் அஜய் வாங்கி வந்த பொருள்களில் இருக்க.. ஷப்பா என நிம்மதியோடு தனதறைக்குள் வந்த தாரணியை கட்டியணைத்தான் திருமலை ரத்தினம். 

     தாரணி முறைக்க.. சும்மா கட்டிபிடிக்கிறதுக்கே முறைப்பியா.. ?”என மனைவியின் இதழோடு இதழ் தொட்டு விலக்க.. எதாவது செய்திங்க.. அடுத்த முறை மூனு குட்டியா போட்டுடுவேன்..என தாரணி சிரிப்போடு மிரட்ட..

       ‘அச்சோடா… ஏற்கனவே நாலு பிள்ளைங்க.. இதுல இன்னும் மூனா..?” என பொய்யாய் பதறி விலக்கினான் மனைவியை. 

       ‘அந்த பயம் இருக்கட்டும்..என தாரணி சிரிக்க.. தானும் சிரித்தவன்..இந்த நிலாவோட அருமை ஆரம்பத்துலயே புரியாம போய்டுச்சி.. கல்யாணம் ஆகி ஒரு வருசம் வேஸ்ட் செய்துட்டேன்..என வழக்கம்போல் திருமலை வருந்த.. 

     ‘அப்போல்லாம் உங்க கண்ணுக்கு நான் அம்மாவாசையால்ல தெரிஞ்சேன்..?” என தாரணி முறைக்க.. போச்சுடா ஆரம்பிச்சிட்டா..என வன்மையாய் அணைத்தவன்.. 

     ‘கோவிக்காதடி ராங்கி..என கொஞ்சி..அதுக்கப்புறம் இப்போ எட்டு வருசமா தேய்பிறை காணாத நிலா போல எப்பவும் ஜொலிச்சிட்டே இருக்கல்ல..என கிசுசிசுத்து கன்னத்து முத்தம் வைத்து.. தாரணி பௌர்மியை திருமலை வானம் எப்பவும் ஜொலிக்க வச்சிட்டே இருக்கும்.. இனி அம்மாவாசையே கிடையாது..என்றான் காதலாக.

      நான்கு குழந்தைகளானபோதும் திருமலையின் அன்பில் சிறு குறையும் கண்டிராத தாரணிகாவும் கணவனை அணைத்தாள் கர்வமாக.  

                    இனி எல்லாம் சுபம் சுபமே..

       

                  

          

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!