Skip to content
Post Views: 4,610

அந்த ரெஸ்டாரண்ட் கண்ணாடியால் ஆனது… வெளியில் என்ன நடக்கிறது என்று உள் இருந்து பார்த்தாலும் தெரியும்… வெளியில் இருப்போருக்கும் உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியும்….
அந்த ரெஸ்டாரண்டில் தேவியின் பெற்றோர், தேவி, அர்ஜுனன் நால்வரும் அமர்ந்து உண்டு கொண்டு இருந்தனர்…
Advertisement
அர்ஜுனன் தேவியின் அப்பாவிடம் “இன்னிக்கு வீட்டுல சொல்லாம்னு இருக்கேன் அங்கிள்… இத்தனை நாள் சொல்லாம இருந்ததுக்கு கொஞ்சம் கோவப்படுவாங்க… ஆனா என்னோட விருப்பத்தை மறுக்க மாட்டாங்க அங்கிள்… ” என்று கூறினான்
Advertisement
“சரிங்க தம்பி… நாங்களும் வந்து பேசட்டுமா தம்பி” என்று கேட்டார் அவர்….
Advertisement
“அதுலாம் வேண்டாம் அங்கிள்… நான் பேசிட்டு உங்க கிட்ட சொல்றேன் “என்று அவரிடம் கூறினாலும் பார்வை எதிரில் இருக்கும் அவனின் தேவியிடம் தான் இருந்தது…
Advertisement
ஆனால் அவளோ அலைபேசியில் யாரிடமோ செய்தி மூலமாக பேசிக்கொண்டு இருந்தாள்… அதனை கவனித்த அவளின் அம்மா அவளிடம் “ஸ்ரீம்மா என்ன பண்ணிட்டு இருக்க… மாப்பிளை பேசிட்டு இருக்காருல… நீ யாருகூட மெசேஜ் பண்ணிட்டு இருக்க” என்று கேட்டார்….
“ம்மா டால் கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்… இங்க வர சொல்லி இருக்கேன்… பார்த்து ரொம்ப நாள் ஆயிடிச்சு… ப்ரீயா’னு கேட்டா அது தா இங்க வானு சொல்லி இருக்கேன்… இப்ப கிளம்ப போறாளாம்… பத்து நிமிஷத்துல வந்துடுவேன்னு சொன்னா” என்று கூறிக்கொண்டு இருந்தாள்
“யாரு டால்???” என்று கேட்டான் அர்ஜுனன்….
“அஜி உங்க கிட்ட சொல்லி இருக்கேன்ல பரதநாட்டியம் கிளாஸ்ல ஒரு பொண்ணு என்கூட பேசுவானு அவ தான்…. அவ என்கூட ரொம்ப கிளோஸ்… தேவி அக்கானு பின்னாடியே வருவா… நான் கோவை போனதுனால மீட் பண்ண முடியல… அதுதான் இன்னிக்கு வர சொன்னேன்….” என்று கூறினாள் தேவி
தேவியின் அப்பாவும் “அந்த பொண்ணு எந்த ஊரு ஸ்ரீம்மா???” கேட்டார்….
“அப்பா அஜியோட பக்கத்து ஊரு தான் மெய்யனூர்… ஒரு மாசம் முன்னாடி கால் பண்ண அப்ப கொஞ்சம் சோகமா பேசுனா… என்னனு கேட்ட அப்ப சொல்லல… திரும்பியும் கேட்டேன்… அவ அவளோட மாமாவை சின்ன வயசுலஇருந்து லவ் பண்றா… ஆனா அவ இது வரைக்கும் அவர் கிட்ட கூட சொன்னது இல்ல… ரொம்ப மெச்சூர் ப்பா அவ…
அவளோட ட்வல்த் படிக்குற அப்ப அவ பேரெண்ட்ஸ் ரெண்டு பேரும் ஆக்சிடென்ட்ல தவறிட்டாங்க ப்பா….
ஆனாலும் போல்டா இருந்து தெளசண்ட் ஹண்ட்ரட் மார்க் எடுத்து இருக்கா…. அண்ணா அண்ணியை விட்டுட்டு போக மனசு இல்லாம மெடிக்கல சீட் கிடைச்சும் போகல ப்பா ரியலி கிரேட் அவ” என்று கூறினாள் தேவி
“தேவி ஊர் பேரு என்ன சொன்ன???” என்று மீண்டும் கேட்டான் அர்ஜுனன்….
“மெய்யனூர் அஜி… ஏன் கேட்குற???” என்று அவனை வினவினாள் அவள்
“தேவி அவங்களுக்கு அண்ணன் ரெண்டு பேரா… அவங்க பேரு கூட மேகவாணன் மேகவர்ணன் ஆமா தானு???” என வினவினான்….
“ஆமா அஜி அந்த அண்ணாங்க நேம் அது தான் உனக்கு தெரியுமா அவங்களை… அவளோட மாமாவை உனக்கு தெரியுமா… தெரிஞ்சா சொல்லு அவ கடைசி வரைக்கும் சொல்ல மாட்டா போல.. உனக்கு தெரிஞ்சவங்களா இருந்தா நாம போய் பேசலாம் ” என்று கூறி படபடத்தாள்
சுபா தன்னை காதலித்து கொண்டு இருக்கிறாளா என்று அதிர்ச்சியாகி உட்கார்ந்து இருந்தான் அர்ஜுனன்… தன் காதல் அவளிற்கு தெரிந்தால் வீட்டில அவள் காதலிப்பது யாருக்காவது தெரிந்து இருந்தால் என்ன செய்வது…
தன்னுடைய காதலை வீட்டில் ஏற்பார்களா…. தன்னுடைய காதலால் வீட்டில் பிரச்சனை வருமா என்று யோசித்தான்…
அவன் யோசித்தது எல்லாம் ஒரு நொடி தான் தேவி தான் தன்னுடைய மனைவி என்று தீர்மானித்து இருந்தான் அர்ஜுனன்…
அவனின் யோசனையை பார்த்து தேவி அவனை உலுக்கி ” அஜி தெரியுமா தெரியாதா உனக்கு???” என்று வினவினாள்….
“ம்ம் தெரியும் தேவி அது…. ” என்று கூறிக்கொண்டு இருக்கும் போதே வெளியில் பெரும் சத்தம்….
இவர்கள் நால்வரும் வெளியில் செல்லும் போதே யாரையோ ஒருவர் தூக்கி கொண்டு காரில் படுக்கவைத்து வேகாமாக மருத்துவமனைக்கு செல்லுவதை போல் இருந்தது…
இவர்கள் விரைந்து அந்த பக்க சாலைக்கு செல்லும் முன் அந்த கார் வேகமாக சென்று இருந்தது… ஆனால் அந்த காரை பார்த்த அர்ஜுனனுக்கு சந்தேகமாக இருந்தது…..
அங்கிருந்த ரத்தத்தை பார்த்து உறைந்து நின்று இருந்த தேவியின் மீது கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று இடித்து அவளை தூக்கி வீசி இருந்தது….
அர்ஜுனன் மற்றும் அவளின் பெற்றோர்கள் சாலையின் வலது பக்கம் நிற்க அவள் மட்டும் இடது பக்கம் நின்று இருந்தாள்….
இடித்த லாரி அங்கிருந்த மரத்தில் மோதி நிற்க தேவியோ தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயத்துடன் உயிர்க்கு போராடி கொண்டு இருந்தாள்….
மூவரும் அவளிடம் கதறியபடி ஓடி வந்தனர்… வேகமாக சென்ற அர்ஜுனன் “தேவி தேவி” என்று அவளின் கன்னத்தை தட்ட அவள் அவனிற்கு ஒரு சிரிப்பினை கொடுத்துவிட்டு அவளின் பெற்றோர்களை பார்த்தும் சிரித்தாள்
பின் மூவரிடமும் “அஜி என்னோட கடைசி நிமிடம் இது… உன்கூட கடைசி வரை வாழுற லைப் எனக்கு இல்ல போல… நீ சந்தோசமா இருக்கனும் அஜி… என்னையே நினைச்சிட்டு நீ இப்படியே இருக்க கூடாது…. அ..ம்..மா அ..ப்..பா இவன் மறுத்தாலும் இவனோட வீட்டுல பேசி நீங்க தான் இவனுக்கு க..ல்யா…ணம் பண்ணி வைக்கணும்…. கண்டிப்பா உனக்கு பொ…ண்..ணா நான் மறுபடியும் பிறப்….பேன் அ..ஜி ஐ.. ல..வ் யூ அ..ஜி ” என்று கூறி தன் மூச்சை நிறுத்தி இருந்தாள் ஸ்ரீ தேவி
அவளின் பெற்றோர்கள் ஸ்ரீ என்று அழுக அர்ஜுனனோ தேவி என அந்த இடமே அதிர கத்தினான்… அருகில் இருந்தோர் தான் ஆம்புலன்ஸ்க்கு தகவல் சொல்லி இருந்தனர்…. ஆம்புலன்ஸும் வந்து இருக்க தேவியை அதி ஏற்றி அந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்…
ஆம்புலன்ஸில் உள்ளவரே தேவியை சோதித்து விட்டு அவள் இந்த உலகை விட்டு சென்றுவிட்டாள் என்று கூறிவிட்டனர்…
மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவரும் சோதித்து பார்த்துவிட்டு அவரும் “ஐயம் சாரி சார் அவங்க உயிர் ஆல்ரெடி போயிடிச்சு அவங்க பிரைன் டெட் ஆகிட்டாங்க சார்… தலைல பலமா அடி பட்டு இருந்து இருக்கு… அஞ்சு நிமிஷம் பேசுனாங்கனு சொன்னிங்க அந்த அஞ்சு நிமிஷம் எப்படி முழுச்சு இருந்தாங்கனு தெரியல… என்ன பார்மாலிட்டீஸ் பண்ணனும்னு இந்த நர்ஸ் பல்லோவ் பண்ணுவாங்க” என்று அவர் கூறி விடைபெற்றார்…..
அர்ஜுனன் இடிந்து போய் நின்று இருக்க தேவியின் அம்மாவும் அப்பாவும் எதுவோ அழுதவாறே பேசிக் கொண்டு இருந்தனர்….
அப்போது யாரும் எதிர்பார்க்கா நேரம் முகுந்தன் அர்ஜுனனை அறைந்து இருந்தான்… அவன்பின் வந்த வர்ணன் அவனை தடுக்க முயற்சிக்க அவனை தள்ளிவிட்டு விட்டு மீண்டும் அர்ஜுனனை அடிக்க பாய்ந்தான்….
வாணன் அவ்விடம் வந்தபின் தான் அவனை அமைதியாக்கினான்…. “முகி என்ன ஆச்சு எதுக்கு அர்ஜுனனை அடிக்குற இப்ப அவன் என்ன பண்ணான்… முதல்ல பாப்பாவுக்கு என்ன நடந்தது தெளிவா சொல்லுடா… இன்னொரு இழப்பை எங்களால தாங்க முடியாதுடா ஏற்கனவே அம்மா அப்பா இறந்து போனதே எங்களால இத்தனை வருஷம் ஆகியும் மீள முடியல… பாப்பாவுக்கு எதோ ஆச்சுனா சத்தியமா எங்களால முடியாது டா” என்று கண் கலங்கியவாறே கூறினான்…
“தேவி பொண்ணை பாக்கணும்னு கூட்டிட்டு போக சொன்னா ண்ணா… நானும் அவளும் தான் போனோம் அந்த பொண்ணு ஒரு ரெஸ்டாரண்ட்க்கு வர சொல்லிச்சு…. நாங்க ரெண்டு பேருமே அங்க போனோம்
அங்க இவன் அந்த பொண்ணுகூட பேசிட்டு இருந்தான்… இவனும் அந்த பொண்ணும் லவ் பண்றாங்களாம்… இவன் லவ் பண்ணது தப்பு இல்ல… இவன் பண்றதை ஏற்கனவே சொல்லி இருந்தா பாப்பா இவனை மனசுல நினச்சு இருக்க மாட்டால…. இவன் முன்னாடியே சொல்லி இருந்தா இவனுக்காக அவ அவளோட அசைய மறைச்சு இருப்பா..
இவங்க ரெண்டு பேரும் பக்கத்துல பக்கத்துல உட்கார்ந்து பேசிட்டு இருந்தாங்க… இவங்களுக்கு எதிர்ல அந்த பொண்ணோட அப்பா அம்மா இருந்தாங்க போல…. பாப்பா இவனை அந்த பொண்ணோட பார்த்ததும் மனசு உடைஞ்சி போச்சு…
அண்ணா இங்க இருந்து போகலாம்னு என்ன கூட்டிட்டு வெளிய வந்துட்டா… கார் நான் அந்த சைடு தான் பார்க் பண்ணி இருந்தேன்…
நான் கார் பார்க்கிங் பக்கத்துல இருக்குற மரத்துக்கு கிட்ட பாப்பாவை உட்கார வெச்சுட்டு உள்ள போயிட்டு காரை எடுத்துட்டு வர அப்ப பாப்பா மயக்கம் போட்டு கீழ விழுந்து இருந்தா அவ பின்னாடி தலை கல்லுல மோதி ரத்தமா இருந்தது…. அப்பயே தான் கீழ விழுந்து இருப்பா போல…
அப்போ ஒரு கார் பார்க் பண்ண அந்த பக்கம் வந்தது… அது கொஞ்சம் மறைவான இடம் பாப்பா கீழ விழுந்து இருந்ததை பார்த்துட்டு அவங்களும் எவ்வளவோ ட்ரை பண்ணாங்க பட் அவங்க டயர் பாப்பா கை மேல ஏறி இறங்கிடிச்சு….
அந்த கார் ஓட்டிட்டு வந்தவர் தான் சீக்கிரம் இறங்கி வந்து எனக்கு ஹெல்ப் பண்ணாரு…” என்று என்ன நடந்தது என கூறி முடித்தான் முகுந்தன்..
மீண்டும் வந்த அழுகையை கட்டு படுத்தி கொண்டு “டாக்டர் செக் பண்ணிட்டு ஆல்ரெடி பாப்பாவோட ஹார்ட்ல ஆல்ரெடி ப்ரோப்லம் இருக்கானு கேட்டாரு ஆமானு சொன்னேன்… பெரியம்மா பெரியப்பா இறந்து போறப்ப பாப்பாவை ஹாஸ்பிடல் அட்மிட் பண்ணோம்ல அத சொன்னேன்…
அவரு செக் பண்ணிட்டு பாப்பாவுக்கு ஹார்ட் ரொம்ப வீக்கா இருக்குனு சொல்லிட்டாங்க ண்ணா… பாப்பாவுக்கு சீக்கிரம் ஹார்ட் டிரான்ஸ்பேலன்ட் பண்ணனும்னு சொல்லிட்டாங்க அண்ணா… முடிஞ்ச அளவு இந்த ஒரு வாரத்துக்கு உள்ள ஹார்ட் டிரான்ஸ்பேலன்ட் பண்ணலைனா.. ” என்று கூறி வந்த கேவலை அடக்கி கொண்டு ” பாப்பா நம்மள விட்டுட்டு போயிடுவானு சொல்லிட்டாங்க ண்ணா என்று கூறி அடக்கி இருந்த அழுகையை வாணனை அணைத்து கொண்டு அழுதுவிட்டான் முகுந்தன்…..
error: Content is protected !!