அர்ஜுனன் உடம்பில் இருந்து அய்யனார் இறங்கியவுடன் அர்ஜுனன் மயங்கி இருக்க சுபாவிடம் வீட்டிற்கு போய் விசாரித்து கொள்ளலாம் என எண்ணி அர்ஜுனனை பார்க்க சென்றனர்… அர்ஜுனனும் மயக்கம் தெளிந்து எழுந்து இருக்க அனைவரும் வீட்டிற்கு சென்றனர்… அனைவரும் அர்ஜுனன் வீட்டில் தான் இருந்தனர்…
அர்ஜுனனை அறையில் தூங்க வைத்து விட்டு சுபாவை ஹாலிற்கு அழைத்து வந்த அவளின் அண்ணன்கள் “சொல்லு சுபா என்ன பண்ணுது உனக்கு.. இனிமே மறைக்க நினைக்காத.. சாமியே சொல்லிடுச்சு.. என்ன ஆச்சு” என்று கலங்கிய குரலில் கேட்டனர்…
அவர் அமைதியாக இருக்க “சொல்லு குட்டிமா.. உனக்கு என்ன பண்ணுது… எங்க கிட்ட சொல்லுடா…” என்று கேட்டனர்…
Advertisement
சுபா மெதுவாக “ண்ணா இப்போ எல்லாம் நெஞ்சுல சுருக்கு சுருக்குனு குத்துது… அப்போ என்னால வலியை தாங்க முடியல ண்ணா… அது எல்லார்கிட்டயும் சொல்ல கொஞ்சம் தயக்கமா இருந்தது.. திருவிழா முடிஞ்சதும் உங்க கிட்ட சொல்லலாம்னு இருந்தேன்…. அதுக்குள்ள ” என்று கூறி கொண்டு இருக்கும் போதே “உன் வலியை என்கிட்ட கூட மறைக்க கத்துக்கிட்டியா சுபத்ரா” என்று கோவமாக கேட்டு கொண்டே அர்ஜுனன் நிதானமாக கீழே இறங்கினார்..
அந்த நேரத்தில் அர்ஜுனனை அங்கு யாரும் எதிர்பார்க்கவில்லை.. அவர் சோர்வில் நன்றாக உறங்கிய பின் தான் அனைவரும் கீழே வந்தனர்… சுபாவுக்கு ஒன்று என்றால் அவரால் தாங்க முடியாது என எண்ணி தான் அவர் உறங்கிய பின் சுபாவிடம் கேட்டனர்.. நன்றாக தூங்கியவர் எழுந்து வருவார் என யாரும் எண்ணவில்லை..
அர்ஜுனன் எப்போதும் ரா பூசைக்கு பின் நன்றாக உறங்கிவிடுவார்… சுபா எப்போதும் அவரை தனியே விடாமல் அவருடன் இருப்பார்… ஆனால் இன்று அவரின் அருகாமை இல்லாமல் துயில் கலைந்தவர் என்ன நினைத்தாரோ கீழே வந்தார்..
Advertisement
கீழே சுபாவை சுற்றி நின்று அனைவரும் கேள்வி கேட்டு கொண்டு இருப்பதை புரியாமல் பார்த்தவர் சுபாவின் உடல்நிலை பற்றி கேட்பதை கேட்டு பதறி கீழேஇறங்கி வந்தார்… ஆனால் சுபா கூறும் பொழுது அந்த வலி நீண்ட நாட்களாக இருப்பதை போல் இருக்க தன்னிடம் மறைத்துவிட்டாள் என்ற விஷயம் அவரை கோவப்படுத்தி இருந்தது…
Advertisement
சுபா “மாமா” என்று அவர் அருகில் செல்ல பார்வையிலேயே தடுத்து நிறுத்தியவர் நிதானமாக கீழே இறங்கி வந்து தனி சோபாவில் அமர்ந்தவர் “சாமி என்ன வாக்கு சொல்லிச்சு” என்று சுபாவை அழுத்தமாக பார்த்து கேட்க அனைவரும் அமைதியாக இருந்தனர்.. “உங்களை தான் கேட்டேன்..” என்று கேட்டார்….
அனைவரும் அமைதியாக இருக்க “ரொம்ப நல்லது” என அவர் கூறி விட்டு வேகமாக அறைக்கு சென்று விட சுபா பாவமாக தன் குடும்பத்தினரை பார்த்தார்… யாவரும் அமைதியாக இருக்க சசி தான் “உனக்கு அவரை சமாதானம் செய்ய தெரியாதா… போ எங்க கிட்ட மறைச்சது கூட பிரச்சனை இல்லை… அவர் கிட்ட மறைச்சது தான் பிரச்சனையே… எத எத மறைக்கனும் இல்லை உனக்கு.. வயசு தான் ஆகிடுச்சு ஆனா பச்ச புள்ளையாவே இருக்க போ.. சிங்கம் எப்படி சீற போகுது தெரியல…” என்று கூறினார்… சுபா பாவமாக பார்த்து கொண்டே அறைக்கு சென்றார்…
அவரை கொஞ்சம் கேலி செய்து அனுப்பினாலும் அனைவரும் வருத்தமாக தான் இருந்தனர்.. அனைவருக்கும் சுபா என்றால் உயிராகிற்றே… முகுந்தன் தான் “நாளைக்கே ஹாஸ்பிடல் போய் காட்டலாம்… நம்ம பாப்பாவுக்கு ஒன்னும் ஆகாது… போங்க போய் எல்லாரும் தூங்குங்க…” என்று அனைவரையும் அறைக்கு அனுப்பி வைத்து விட்டு தானும் அறைக்கு சென்றார்…
Advertisement
அங்கு கோவமாக சென்ற அர்ஜுனன் தங்கள் அறையில் இருக்கும் சிறிய அறைக்குள் சென்று விட சுபா வரும் போது வெறுமையான அறையே வரவேற்றது..
அவர் எங்கு இருப்பார் என அறிந்த சுபா “மாமா சாரி… உங்க கிட்ட மறைக்கனும்னு நினைக்கல.. திருவிழா முடிஞ்சதும் உங்க கிட்ட சொல்லலாம்னு இருந்தேன்… உங்க கிட்ட சொல்லாம நான் யார்கிட்ட சொல்ல போறேன் மாமா…” என்று அழு குரலில் கூறினார்…
அர்ஜுனன் அமைதியாக இருக்க “மாமா நான் தான் சாரி சொல்றேன்ல.. உன் அம்மு தானே மன்னிக்க மாட்டியா” என்று அவர் அழுதவாறு கேட்க “நீங்க மட்டும் நம்ம மாமானு உங்க வலியை என்கிட்ட சொன்னிங்களா சுபத்திரா” என்று அழுத்தமாக கேட்டு கொண்டே வெளியில் வந்தார்…
“மாமா” என்று அவரை நெருங்கினார்… அதற்குள் அறையின் கதவு தட்டப்பட்டது… கதவை திறந்தால் அவர்களின் மகள்கள் தான் நின்று இருந்தனர்… இருவரும் பேசிக்கொள்ளவில்லை.. ஆனால் இருவரும் ஒரே போல் அவர்களின் அறையின் முன் நின்று இருந்தனர்..
கதவை திறந்ததும் ஆளுக்கு ஒரு பக்கம் சுபாவை கட்டிகொள்ள அர்ஜுனன் மூவரை தான் பார்த்து கொண்டு இருந்தார்…
சுபா இருவரையும் பார்த்து “எனக்கு ஒன்னும் இல்லடா…கொஞ்சம் வலி மட்டும் தான்.. டாக்டர் கிட்ட காட்டுனா சரி ஆகிடும்… கவலைப்படாதீங்க போய் ரெண்டு பேரும் தூங்குங்க..” என்று அவர்களாய் கஷ்டப்பட்டு அறைக்கு அனுப்பி விட்டு அர்ஜுனனை சமாதானம் செய்ய நெருங்கும் போது ஆரவ் அழைத்து விட்டான்…
(சுபாவின் மைண்ட் வாய்ஸ் என்னவா இருக்கும்?!?!?!?)
சுபா அட்டனெட் செய்தவுடன் “அம்மா… என்ன ஆச்சு உனக்கு.. நான் நான் இந்தியா வரட்டா.. இப்போ தேடுனேன் டிக்கெட் கிடைக்கல.. இங்க ஸ்னோ பால்லா(snow fall) இருக்கு.. சோ ப்லைட் எல்லாம் கேன்சல் பண்ணிட்டாங்க.. இங்க அல்லோவ் பண்ணதும் பர்ஸ்ட் ப்லைட்ல அங்க வரேன்” என்று தாயிடம் கலங்கிய குரலில் கூறிக்கொண்டு இருந்தான்..
“தம்பி அம்மா சொல்றதை கேளு.. நிஜமா ஒன்னும் இல்ல.. லைட்டா தான் வலிக்குது.. டாக்டர் கிட்ட நாளைக்கு காட்டுறேன்… அவசர அவசரமா கிளம்பி வராதா… லீவு கிடைக்குறப்ப வா… அம்மா நல்லா இருக்கேன் தம்பி.. என்னை பத்தி கவலைப்படமா ஒழுங்கா உன் உடம்பை பாத்துக்கோ…. யூனிவர்சிட்டி விட்டு வந்துட்டியா..” என்று கேட்டார்..
“அம்மா யூனிவர்சிட்டிவிட்டுஎப்பயோவந்துட்டேன்.. இப்போகொஞ்சம்வெளியபோயிட்டு கொஞ்ச நேரம் முன்னாடி தான் வந்தேன்… நிஜமா ஒன்னும் இல்லல ம்மா.. எனக்கு உன்னை பாக்கனும் போல இருக்கு ம்மா… நான் ஒருக்கு வரேன் ம்மா….” என்று வருத்தமாக கேட்டான்…
“தம்பி அம்மா வீடியோ கால் பண்றேன்.. பேசலாம்.. இதுக்கு எல்லாம் குட்டி பையன் மாதிரி பீல் பண்ணலாமா” என்று கூறி வீடியோ கால் செய்து விட்டார்..