Skip to content
Post Views: 2,584
யாதுமாகி #28
ஏற்கனவே நேத்ராவை வெறுக்கும் ஜோதிக்கு அவள் கருத்தரித்திருக்கும் செய்தி கேட்டு உவப்பாக இல்லை.
மகன் இறந்தாலும் மருமகள் மாங்கல்யம் இழக்க வேண்டும் என்ற ஒரு குரூப் மாமியார்கள் இருப்பார்களே அதில் ஜோதியும் அடக்கம்.
தன் வம்சம் தழைக்கப் போகிறது என்ற மகிழ்வு அவரிடம் துளியும் இல்லை. மாறாக ஒரு வாரிசை பெத்து கொடுத்துவிட்டால் நேத்ராவின் கை ஓங்கிவிடும்,தான் செல்லா காசு ஆகி விடுவோமோ என்ற பயம் அவருக்கு.
Advertisement
தன் முன் நீட்டப்பட்ட ஸ்வீட்டை வெறித்துக் கொண்டிருந்தார்.
ஜோதி விஷ்ணு எவ்வளவு நேரமா ஸ்வீட்டை நீட்டிட்டு இருப்பான்? வேணு அதட்டினார்.
பேரனா? பேத்தியானு உன் பொண்டாட்டி யோசிச்சுட்டு இருப்பா… நம் பரம்பரையில் முதல் குழந்தை ஆண் குழந்தை தான்… நக்கலாய் சிரித்தார் அன்னம்.
Advertisement
உள்ளுக்குள் புகைந்த எரிமலையை மறைத்து மெல்ல சிரிக்க முயன்றார் ஜோதி.
Advertisement
மனதில் கசப்பு நிறைந்திருக்கும் போது எந்த இனிப்பு தான் தித்திக்கும்? அவருக்கும் அவ்வாறே கிருஷ்ணா ஸ்வீட்சின் நெய் மணம் அவருக்கு குமட்டியது.
மங்களம் உப்பு மிளகாய் எடுத்துட்டு வா! நேத்ராக்கு சுத்தி போடணும்.காத்து கருப்பு அண்டாம கருப்பு கயிறு ஒன்னு காலில் கட்டி விடணும். ஒரு கண்ணு போல இருக்காது பிள்ளையை கவனமா பாத்துக்கணும்!அன்னம் ஜோதியை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே சொல்லிக் கொண்டிருந்தார்.
கிழவிக்கு ஏகத்தாளத்தை பாரு! என்னையே மட்டம் தட்டுறியா… இருக்கு கிழவி உனக்கு.கொலை வெறியோடு மாமியாரை முறைத்தார்.
Advertisement
டேய் வீரா கருப்பண்ணசாமிக்கு படையல் போடணும், கோயிலுக்கு சொல்லிவிடு! பச்சை வழி அம்மனுக்கு அபிஷேகம் பண்ணி பட்டு சாத்தனும் ஏற்பாடு பண்ணுடா… வேணு ஆனந்தத்தில் துள்ளினார்.
என்னங்கையா சந்தோஷமான செய்தியா? வீரன் கேட்க…
நான் தாத்தா ஆயிட்டேன் டா, அவர் பெருமையாய் மீசையை முறுக்கினார்.
ரொம்ப சந்தோஷம் ஐயா. இந்த சந்தோஷத்தை கொண்டாட எங்களுக்கு எதுவும் இல்லைங்களா? வீரன் தலையை சொரிந்தான்.
என்னடா இப்படி சொல்லிட்ட? நம்ம பண்ணை ஆளுங்க மொத்த பேருக்கும் புதுத் துணி வாங்கிட சொல்லிட்டேன், ஊருக்கே கறி விருந்து ஏற்பாடு பண்ணிட்டேன்.
எதுக்கு இப்படி குதியா குதிக்கிறீங்க? நீங்க தாத்தாவாகி மூன்று வருஷம் ஆகப்போகுது! ஜோதியில் மொழியில் அவ்வளவு ஆவேசம்.
என்ன சொல்ற? வேணு புரியாமல் பார்த்தார்.
வினிதாக்கு குழந்தை பிறந்து மூணு வருஷம் ஆகப்போகுது. தியா தான் நமக்கு முதல் பேரக்குழந்தை.
ஹா ஹா ஹா… அது மறக்குமா ஜோதி? இருந்தாலும் நம்ம மகனோட வாரிசு தான் நம்ம சொந்த பேரக்குழந்தை. அதுதான் நம் வம்சம்.
வேணுவின் பதிலில் காண்டாகி போன ஜோதி கணவரை கொன்றுவிடும் கோபத்துடன் முறைத்துக் கொண்டே உள்ளே போனார்
தந்தையின் துள்ளளையும், மகிழ்ச்சியையும் கண்டும் காணாது மனம் நிறைந்தான் விஷ்ணு.
அன்னத்திற்கு தலைகால் புரியவில்லை. அடுத்த தலைமுறை காணும் பெரு மகிழ்வு அவருக்கு.
பேரனையும்,பேத்தியையும் இரு கரங்களிலும் அணைத்துக் கொண்டார்.
நேத்ரா…விஷ்ணு தாத்தாவை மாதிரியே ஒரு கொள்ளு பேரனை பெத்து என் கையில் கொடுத்துடு தங்கம் அது போதும் எனக்கு. அவள் தலைகோதி நெற்றியில் முத்தம் வைத்தார்.
அனைவரின் கொண்டாட்டமும் உற்சாகமும் அவளுக்குள் ஏதோ ஒரு உணர்வை கிண்டி கிளறி விட்டது. இப்போது அவளுக்குள் தாய்மை வெள்ளம் பொங்கி வழிந்து சிலிர்க்க வைத்தது. மெல்ல தன் பட்டு வயித்தை தடவி பார்த்தாள்.
“——————-”
அறைக்குள் நுழைந்த உடனே விஷ்ணு காதல் மனையாளை கரங்களில் அள்ளிக் கொண்டான்.
நீ உண்டான செய்தி அப்பா, பாட்டி எல்லாருக்கும் எவ்வளவு மகிழ்ச்சியை கொடுத்திருக்கு பார்த்தியா? அவள் முகம் முழுவதும் எச்சில் முத்தம் பொழிந்தான்.
ஆனா உங்கம்மா? அவங்க முகத்துல மருந்துக்கு கூட சிரிப்பு இல்லையே…தவிப்பாய் கேட்டாள்.
அடி எவடி இவ? கூறு கெட்டு பேசிகிட்டு… நான், என் அப்பா,பாட்டி எல்லோரும் கொண்டாடி மகிழ்கிறோமே அது உன் கண்ணுக்கு தெரியலையா?
கம்சனுக்கு எண்ணமெல்லாம் கிருஷ்ணன் மேலே தான்னு சொல்லுவாங்களே.. அதே போல எப்போ பார்த்தாலும் எங்க அம்மா அம்மா தானா உனக்கு?
நீ எந்நேரமும் அவங்களையே நினைச்சு டென்ஷன் ஆகிட்டே இரு அவங்களை மாதிரி குணத்தோட உனக்கு குழந்தை பிறக்க போகுது.
அவன் விளையாட்டாய் சொல்லி வாய் மூடுவதற்குள் அவன் வாயை பொத்தினாள்.
அவள் கரத்தை தட்டி விட்டு விழுந்து விழுந்து சிரித்தான்.
வேண்டாம்,என்னை டென்ஷன் பண்ணாதீங்க ப்ளீஸ்! உங்க அம்மா மாதிரி என் குழந்தை இருக்கும்னு இன்னொரு முறை சொல்லிடாதீங்க…நான் பத்ரகாளியா மாறிடுவேன். அவள் முகம் சுருங்கி கடுப்புடன் முறைத்தாள்.
சரி,கூல் டவுன்!இந்த மாதிரி நேரத்தில் எதுக்கு உனக்கு இவ்வளவு டென்ஷன்? அவளை மடியில் சாய்த்துக் கொண்டு விரலுக்கு சொடக்கெடுத்தான்.
சரி உனக்கு ஏதாவது சாப்பிடணும் போல இருந்தா என்கிட்ட சொல்லு!அவளை மிருதுவாய் அனைத்துக் கொண்டான்.
அவள் புரியாமல் பார்க்க…பாட்டி சொன்னாங்க, இந்த மாதிரி நேரத்தில் ஆசைப்பட்டதை சாப்பிடனுமாம் இல்லைனா ஏக்கத்தில் கைகால் வீங்குமாம்! அவன் சீரியஸாக சொல்லிக் கொண்டிருக்க..அவன் கழுத்தை இறுகப்பற்றி இரு கன்னத்திலும் முத்தமிட்டு சிரித்தாள்.
என்னடி ரொமான்ஸ் வழியுது? அவள் முகத்தில் கோலமிட்டான்.
ஒரு புடலங்காயும் இல்லை…நீங்கள் நல்ல புருஷனோ இல்லையோ..நல்ல மகன்,நல்ல அப்பா.உதடு சுழித்து கேலியாய் சிரித்தாள்.
நான் நல்ல புருஷனா இல்லாமலா நீ அடுத்த மாசமே வாந்தி எடுத்த? அவள் மென் இதழை மீட்டினான்.
அய்ய பேச்சை பாரு… பெரிய சாதனைதான்! உதட்டை பிதுக்கினாள்.
இல்லையா பின்ன? ஒவ்வொரு கருத்தரிப்பு மையத்திலும் போய் பாரு! எத்தனை கணவன் மனைவி கியூவில் நிக்கிறாங்கன்னு. அவன் இயல்பாய் சொல்ல…குற்றவுணர்வுடன் அவன் மார்பில் புதைந்தாள்.
சாரிப்பா… நான் உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் எனக்கு குழந்தை பிடிக்காமல் இல்லை.கொஞ்சம் பயம்,குழப்பம்… அவன் மார்பில் புதைந்தாள்.
என் செல்லத்துக்கு என்ன பயம்? நான் இருக்கேன்டா …அவளை ஆதரவாய் மார்புக்கூட்டிற்குள் பொத்திக் கொண்டான்.
——————”
ஜோதியைத் தவிர குடும்பமே நேத்ராவை தாங்கியது.
வாரம் இரண்டு முறை சமயத்தில் மூன்று முறை கூட வேதம் வந்துவிடுவார் விதவிதமாய் பலகாரம் செய்து கொண்டு.
அது வேண்டும் இது வேண்டும் என்று நேத்ரா வாய் திறந்து கேட்க வேண்டும் என்பதில்லை. ஒரு பொருளை அவள் உன்னிப்பை பார்த்தாலே அது எவ்வளவு மதிப்பு மிக்க தாயினும் அதை வாங்கி வந்து நிற்பான் விஷ்ணு.
தான் அத்தையாகும் மகிழ்ச்சியான செய்தி கேட்டு வினிதா குடும்பத்தோடு வந்து சேர்ந்தாள்.
கூடை கூடையாய் பழமும், பெட்டி பெட்டியாய் இனிப்பும், பருப்பும் வாங்கி வந்திருந்தாள்.
அண்ணன் குழந்தை வரவை கேட்டு மகிழ்ச்சியில் துள்ளினாள் அஸ்விதா.
ஹையா..முன்னாடி சித்தி,இப்போ அத்தை! அவள் உற்சாகத்தில் பெருமை பேசினாள்.
இன்னும் ரெண்டு வருஷத்தில் உன் படிப்பு முடிஞ்சதும் என்னை போல் ஒரு இளிச்சவாயனா பார்த்து கட்டி வச்சுடனும். அப்புறம் அம்மா ஆகிடுவ… சந்தோஷ் மச்சினியை சீண்டினான்.
அனைவரும் சிரிக்க.. போங்க மாமா சிணுங்கினாள் அஸ்வியா. வீடு மகிழ்ச்சியில் திளைத்தது.
பாருங்க அக்கா மாமாவை…நான் இப்போ மேரேஜ் பண்ணிக்க மாட்டேன் கையோட எம்டி பண்ணனும் அக்காவிடம் முறையிட்டாள்.
ஜோதிக்கு பற்றி கொண்டு வந்தது. எந்த மகிழ்விலும் அவரால் ஒன்றவும் முடியவில்லை, ஒதுங்கவும் முடியவில்லை.
குடும்பமே நேத்ராவை கொண்டாடினாலும் கூந்தல் என்று கூட அவளை கண்டுகொள்ளவில்லை ஜோதி.
தன் கையால் ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்து கூட அவளை சீராட்டவில்லை.
அவள் உண்டாளா? உறங்கினாளா? அவளுக்கு உபாதைகள் என்ன?எதையும் அவர் கண்டு கொண்டதில்லை.
தன்னை சீராட்டவும் வேண்டாம் பாராட்டவும் வேண்டாம் அவர் பார்வை தன் மீது படாமல் இருந்தாலே போதும் என்று நேத்ரா ஒதுங்கி கொண்டாள்.
விஷ்ணுவும் மனைவியை அடைகாத்து வந்தான்.
“——————-”
இவ பொம்பளையா? பேயா? கடவுள் இவ மனசை கல்லா படைச்சிட்டானோ? இவளும் ரெண்டு பொண்ணு பெத்தவ தானே.. அன்னம் வாய்விட்டே புலம்பினார்.
விடுங்க பாட்டி! அவங்க மேல எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நீங்க இத்தனை பேர் என் மேல் இவ்வளவு அன்பை பொழியும்போது..அவங்க உதாசீனம் என்னை பலவீனப்படுத்தல! நிமிர்வாய் சொன்னாள் நேத்ரா.
கணவனின் அதீத அன்பு, பாட்டியின் அக்கறையான கவனிப்பு,பெற்றவர்களின் பூரித்த முகபாவம்… புதியதொரு உலகில் தான் மட்டும் வாழ்வதாய் உணர்ந்தாள் நேத்ரா.
“——————-”
என்னங்க, மாமா சொல்ற மாதிரி பையனே பிறக்கணும்! கணவன் மடியில் படுத்து அவன் விரல் இடுக்கில் தன் விரல்களை கோர்த்துக் கொண்டாள்.
ஏன் பொண்ணு பிறந்தா ஏத்துக்க மாட்டியா? கோபம் போல் அவள் மூக்கை திருகினான்.
இல்ல… இல்ல பையனே பிறக்கட்டும்…! ஏதோ மளிகை கடையில் உப்பு,பருப்பு வாங்குவது போல் ஆர்டர் போட்டாள்.
எனக்கு பொண்ணு தான் பிடிக்கும் மகிழ்வுடன் சொன்னான்.
வேண்டாம் பையனே இருக்கட்டும்…மகன் பிறந்து உங்களைப் போல் குணாதிசயத்தில் இருக்கணும்! அவள் கண்களில் அளவற்ற காதல் தேங்கி நின்றது.
கலாய்க்கிறீயா? பொய்யாய் சிணுங்கினான்.
நெஜமாத்தான் சொல்றேன்! பழிப்பு காட்டினாள்.
ஏன் அப்படி?மீசையை முறுக்கி கொண்டான்.
அதுதான் சொன்னேனே… உங்களை மாதிரி குணத்தோட பிறக்கணும்.
அடியே…என்னையே சமாளிக்க முடியாம திணறிட்டு இருக்க.. இதுல என் குணத்தோட பிள்ளை வேணுமா? கேலியாய் சிரித்தான்.
என் புருஷன் கோபக்காரன் தான் ஆனால் குணத்தில் கோபுரம்.
பாருடா உன் புருஷன் அவ்வளவு நல்லவனா? அவள் இதழில் சிறு சிறு முத்தமிட்டான்.
என்னை நீங்க தாங்குற மாதிரி உங்க பிள்ளையும் அவன் மனைவியை தாங்குவன் தானே…?பெருமையாய் கேட்டாள்.
மனைவியின் பேச்சில் வாய்விட்டு சிரித்தான்.
மூஞ்சிய பாரு, என்ன ஜோக் சொல்லிட்டேன்? இப்படி விழுந்து விழுந்து சிரிக்கிறீங்க… நொடித்துக் கொண்டாள்.
நேத்ரா நீ இப்போ மருமகள், உன்னை உன் புருஷன் கொண்டாடினா பிடிக்கும். அதுவே நீ மாமியார் ஆகி உன் பிள்ளை அவன் பொண்டாட்டியை கொண்டாடினால் உனக்கு பத்திகிட்டு எரியும். ஏன்னா அப்போ நீ வில்லியான மாமியார்! மீண்டும் குலுங்கி குலுங்கி சிரித்தான்.
ஹலோ லாயர் சார் நாங்க அப்படி இருக்க மாட்டோம். அன்பான மாமியாரா நடந்துக்குவோம்.அவன் கன்னத்தை பிடித்து வலிக்கும்படி திருகினாள்.
ஸ் ஆ…வலிக்குதுடி! அழுந்த கன்னத்தை தேய்த்துக் கொண்டவன்… தற்காப்பிற்காக கொஞ்சம் தள்ளி அமர்ந்து கொண்டு, எல்லா மருமகளும் இப்படி சொன்னவங்க தான்! அவன் மீண்டும் சிரிக்க…அவள் தலையணையை எடுத்து மொத்த தொடங்கினாள்.
“——————-”
பலமான கவனிப்பிலும், தாய்மையின் பூரிப்பிலும் ஒன்பதாம் மாதத்திற்கு உரிய அமைப்போடு எடை கூடி கன்னம் பூசி, தோல் மினு மினுத்து பேரழகு பெட்டகமாய் இருந்தாள் நேத்ரா.
நேத்ரா இப்போ எல்லாம் ரொம்ப அழகா இருக்கடி! அவள் மணிவயிற்றை வருடி தோளோடு பிணைத்துக் கொண்டான்.
அப்போ குழந்தை பிறந்தா அழகா இருக்க மாட்டேன் அப்படித்தானே?
மே பி சிரிப்புடன் தோளை குலுக்கினான்.
என்னது? விழியை உருட்டினாள்.
இல்லம்மா..குழந்தை பிறந்து சதை எல்லாம் தொங்கி, கொஞ்சமா தொப்பை வந்து புதுசு புதுன்னு அழகா இருப்ப… அதை சொல்ல வந்தேன்!அவன் கண் சிமிட்டி சிரிக்க அவள் முகம் கறுத்து போனது.
ஏய் நேத்து ஜஸ்ட் கிட்டிங்…இதுக்கு போய் சீரியஸா ரியாக்ட் பண்ற? தன்னையே நொந்து கொண்டான்.
இல்ல கொஞ்ச நாளாவே எனக்கும் அந்த பயம் இருக்கு! அவள் விழிகள் கலங்கியது.
எந்த பயம்? புரியாமல் கேட்டான்.
குழந்தை பிறந்த பிறகு வெயிட் போட்டு அசிங்கமாயிடுவேன். அப்போ உங்க கண்ணுக்கு என்னை பிடிக்காது தானே..
அரேஞ்சேன்னா மொத்த பல்லும் உதிர்ந்திடும். என்ன பேச்சுடி பேசுற?
குழந்தை பெறுவது ஒரு வரம்.நம்ம மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கைக்கான பரிசு. என் வாரிசை பெத்து கொடுக்க நீ எவ்வளவு கஷ்டத்தை தாங்குற…கர்ப்ப காலம் தொடங்கி பிரசவ காலம் முடிகிற வரைக்கும் ஒரு பெண்ணோட உடலில் எவ்வளவு ஹார்மோன் சேஞ்சஸ் உருவாகும் என்று நானும் படித்திருக்கிறேன்.
பிரசவம் என்பது உயிரை கொடுத்து உயிரை பெற்றெடுக்கும் விஷயம் என்று பாட்டி சொல்லுவாங்க. அது புரியாத முட்டாள் இல்லை நான்.
உன் அழகு, இளமை, ஆரோக்கியம் எல்லாத்தையும் கொடுத்து என் குழந்தைக்கு என்னை அப்பாவுக்கும் நீ பிரசவத்திற்கு பிறகு எப்படி இருந்தாலும் பேரழகி தான்! உலக அழகி எல்லாம் உன் கால் தூசுக்கு இணையாக முடியாது.
இனி இப்படி உளறிட்டு இருந்தா பிள்ளைத்தாச்சின்னு கூட பார்க்க மாட்டேன். வன்மையாய் அவள் இதழில் அழுந்த முத்தமிட்டு தன் காதலை தெளிவு படுத்தினான்
“—————”
வீட்டு முற்றத்திலே மிகப்பெரிய பந்தல் போட்டு மேடை அலங்காரம் செய்து ஊர் உறவு என்று திருவிழா கூட்டம் போல் கூடி நின்றது நேத்ராவின் வளைகாப்பு வைபவத்திற்கு.
ஒன்பது வகை சாதம், ஒன்பது வகை ஊறுகாய், ஒன்பது வகை இனிப்பு, ஒன்பது வகை காரம், விதவிதமான பழங்கள் என்று 71 தட்டு சீர்களை பரத்தி வைத்தார் வேதவள்ளி.
அரைத்த பசு மஞ்சள் வண்ண காஞ்சிபட்டில் பச்சை வண்ண பார்டர் வைத்த புடவை. கழுத்து கொள்ளா நகை, முகம் கொள்ளா புன்னகை, அழகிய அலங்காரத்தோடு கர்ப்பிணி தேவதையாய் நாற்காலியில் வந்தமர்ந்தாள் நேத்ரா.
சுற்றி சுற்றி வேலை செய்து கொண்டே தன் மனைவியின் அழகை ரசித்துக் கொண்டிருந்தான் விஷ்ணு.
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்றெல்லாம் சொல்வார்களே அது வெறும் பேச்சுக்கு தான் போலும்.
இந்த நிமிடம் கூட நேத்ராவை பற்றிய ஆசை அவனுக்கு எள் முனையளவும் குறைந்ததில்லை.
மனைவியாய் ஒரு அழகு என்றால்,தாயாய் வேறொரு பரிணாமத்தில் அழகு… மனைவியின் அழகை ஆங்காங்கே நின்று வெவ்வேறு கோணத்தில் ரசித்துக் கொண்டிருந்தான்.
இவன் ஒருத்தன் நேத்துதான் கல்யாணம் ஆன மாதிரி இவ்வளவு கூட்டத்துக்கு மத்தியில் பார்த்து பார்த்து ரசிக்கிறான். நாணி தலை கவிழ்ந்து பூரித்து போனாள் நேத்ரா.இந்த குன்றாத காதல் போதுமே…
“————-”
யாருக்கு வந்த விருந்தோ என்று ஓரமாய் அமர்ந்திருந்தார் ஜோதி.
ஜோதி இது உன் வீட்டு விசேஷம்! நீ என்னவோ விருந்துக்கு வந்த மாதிரி உட்கார்ந்து இருக்க? அன்னம் மருமகளை அதட்டினார்.
வெறுப்புடன் ஜோதி மாமியார் முகம் காண… போ!போய் நம்ம குலதெய்வத்தை வேண்டி உன் மருமகளுக்கு மாலை எடுத்து போட்டு நலங்கு வை.
.முதலில் வேப்பங்காப்பு போட்டு,அப்புறம் கண்ணாடி வளையல் போட்டு,இந்த வைர வளையலை போடு!மருமகள் கையில் திணித்தார் அன்னம்.
தகதகவென்று ஜொலித்த வைர வளையல்களைக் கண்டு எரிமலையாய் பொங்கினார் ஜோதி.
error: Content is protected !!