Skip to content
Post Views: 4,304

இடைப்பட்ட நான்கு நாட்களில் சுபாவிற்கும் காய்ச்சல் வந்து இருந்தது…. அதை அவள் யாரிடமும் கூறவேண்டாம் என கூறிவிட்டாள்…. யாரையும் மருத்துவமனை வர வேண்டாம் என கூறிவிட்டாள்… கல்யாண வேலை அதன்பிறகான வேலை கோவிலுக்கு செல்வது மறுவீடு செல்வது என அனைத்தையும் பாருங்கள் என கூறிவிட்டாள்…..
ஏற்கனவே சுபாவின் மீது மனவருத்தத்தில் இருந்த நந்தினிக்கு அவள் அங்கு வேலை செய்யாமல் குழந்தையை சாக்காக வைத்து இருந்து விட்டு தங்களை வேலை ஏவுகிறாள் என்று தோன்றிவிட்டது….
Advertisement
கிரிஜா இதை இன்னும் பெரிதாக மாற்றிவிட்டார்….. கல்யாணத்தில் எடுத்த புகைப்படத்தை பார்க்கவேண்டும் என்று கூறி வீட்டிற்கு வர கூறிவிட்டார்… பாலா பட்டு பாட்டி இருவரும் அர்ஜுனன் இருக்கும் வீட்டில் இருக்க நந்தினியும் கிரிஜாவும் மட்டும் தான் அந்த வீட்டில் இருந்தனர்…
Advertisement
Advertisement
இந்த பதினைந்து நாட்களில் நந்தினி கிரிஜாவிடம் சகஜமாக பேச ஆரம்பித்துவிட்டாள்…. கல்யாணத்தில் நடந்ததை பற்றி கூறிக்கொண்டு இருந்தாள்….
தற்போது குழந்தைக்கு உடம்பு முடியாமல் மருத்துவமனையில் இருப்பது வரை கூறிவிட்டாள்… இந்த பதினைந்து நாட்களில் அவர் அந்த வீட்டில் இருந்து சென்றதில் இருந்து நடந்த அனைத்து விஷயத்தையும் கூறிவிட்டாள்… அர்ஜுனன் காதல் சுபா சண்டையிட்டது குழந்தைக்கு தேவியின் மச்சம் இருப்பது உட்பட……
Advertisement
“குழந்தையை அவ கவனிக்காம பாட்டிங்க குடுத்துட்டு அங்க இங்கனு சுத்திட்டு இருக்கா…. குழந்தை பசிக்கு அழுதா கூட யாரோ கொண்டு போய் குடுத்தா கூட பால் தரல… ” என்று கூறிக்கொண்டு இருந்தாள் நந்தினி…
அதற்கு கிரிஜாவோ “அது அப்படி இருக்காது நந்து ம்மா குழந்தை அர்ஜுனன் காதலி போல இருக்குறதுனால அவளுக்கு பிடிக்கல போல அது தான் அழுக விட்டு இருக்கா… இப்போ கூட அவ ஒழுங்கா பாத்துட்டு இருந்தா காய்ச்சல் வந்து இருக்காதுல நீங்க போய் பார்த்தா அவ குழந்தை கவனிச்சுக்குற லட்சணம் தெரிஞ்சிடும்னு தான் வர வேண்டாம்னு சொல்லி இருக்கா ” என்று கூறினார்
“நிஜமா இப்படி இருக்குமா… அவளுக்கு தான் அந்த பொண்ணை பிடிக்குமே… எதுக்கு அழுக வைக்கணும் ” என்று நந்தினி கேட்டாள்….
“என்ன பிடிச்சு இருந்தாலும் அந்த பொண்ணும் அர்ஜுனனும் காதலிச்சு இருக்காங்க அதுனால பிடிக்காம போய் இருக்கலாம்… இப்ப அந்த பொண்ணு மாதிரி குழந்தை இருக்கறதுனால அழுக வைக்கலாம் ” என்று கூறினார்…
அவர் கூறியதை யோசித்து கொண்டே வருகிறேன் என்று கூறி வீட்டிற்கு வந்து விட்டாள்…
வீட்டிற்கு வந்து சுபாவை பற்றி திட்டி கொண்டே இருந்தாள் நந்தினி… வாணன் கேட்ட போதும் “அவ அங்க மஹாராணி போல உட்காந்து வேலை சொல்லுவா… நாங்க வேலை செய்யணுமா… குழந்தைக்கு உடம்பு சரி இல்ல ரெண்டு நாள்ல கூட்டிட்டு போகலாம்னு டாக்டர் சொன்னாங்கனு சொன்னாங்கல இப்போ குழந்தைக்கு சரியாகிடுச்சு சொல்றாங்க… ஆனா இன்னும் வீட்டுக்கு வராம என்ன பண்றா… ” என்று கூறினாள்…
அதோடு இல்லாமல் “குழந்தையை ஒழுங்கா பாத்துட்டு இருந்தா காய்ச்சல் வந்து இருக்குமா… குழந்தை அந்த பொண்ணு மாதிரி இருக்குறதுனால தானு அவ இப்படி பண்றா ” என்று பேசிக்கொண்டே போக வாணனோ “போதும் நிறுத்து நந்தினி என்ன விட்டா பேசிட்டே போற…. சுபா அப்படிலாம் இருக்க மாட்டா ” என்று கூறினான்…
“அப்டினா குழந்தைக்கு நேத்தே சரி ஆகிடிச்சுனு சொன்னாங்கல ஏன் வரல….?? ” என்று கேட்டாள்..
“எதோ டெஸ்ட் கூட எடுத்துட்டு வரலாம்… எதுவும் தெரியாம பேசாத… வர வர ஏன் இப்படி ஆகிட்டனு தெரியல…. “என்று தலையில் அடித்து கொண்டு சென்றுவிட்டான்….
“ஆமா ஆமா உங்க தங்கச்சி பண்றது தெரியாத மாதிரி பேசாதீங்க…” என்று இவளும் முனகி கொண்டு சென்று விட்டாள்…. நந்தினி பேசிய கோவத்தில் தான் அதை சுபாவிடம் காட்டிவிட்டான் வாணன்…
சுபாவிற்கு இன்னும் காய்ச்சல் இருந்தாலும் வீட்டில் வேலை இருக்கும் என அர்ஜுனனிடம் அடம்பிடித்து வீட்டிற்கு வந்தாள்… அவள் உள்ளே நுழைந்த நொடி குழந்தையை பாட்டிகள் வாங்கி கொள்ள வர்ணன் அவளின் பொலிவு இழந்த முகத்தை பார்த்து ” என்ன ஆச்சு பாப்பா உனக்கு காய்ச்சலா ஏன் முகம் இவ்வளவு டல்லா இருக்கு… முதல்ல வந்து உட்காரு…” என்று அவளை சோபாவில் உட்கார வைத்து அவளின் தலையில் கை வைத்து பார்த்தான் வர்ணன்… இன்னும் காய்ச்சல் இருந்த காரணத்தினால் அவள் உடம்பு சூடாக இருந்தது…..
“அர்ஜுன் பாப்பாவுக்கும் காய்ச்சலா சொல்லவே இல்ல…. இன்னும் காய்ச்சல் இருக்குல இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு வர வேண்டியது தானு அதுக்குள்ள ஏன் டா வந்திங்க…. காய்ச்சல் விட்ட வாட்டி வர வேண்டியது தானு இப்போ யாரு உங்களை அழைச்சா…. போ பாப்பாவை கூட்டிட்டு போய் ரெஸ்ட் எடுக்க வை…. ” என்று கூறினான்….
அர்ஜுனன் பதில் கூறுவதற்குள் சுபா வர்ணனின் தோளில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்… கண்களில் இருந்து கண்ணீர் அவளை அறியாமலே வெளியேறியது… அவளின் கண்ணீரை கண்டு மேலும் பதட்டமாகி “டேய் பாப்பா என்ன ஆச்சு எதுக்கு அழுவுற…” என்று கேட்டான்…. அவளோ எதுவும் இல்லை என தலையசைத்து அவனும் தோளில் மேலும் புதைந்து கொண்டாள்…
அவனும் அவளின் தலையை கோதி கொடுத்தான்… மீண்டும் காய்ச்சலின் வீரியத்தில் தூங்கிவிட்டாள்… அவளை அர்ஜுனன் தூக்கி கொண்டு மேலே உள்ள அவர்களின் அறைக்கு சென்றான்…
அவளுக்கு இன்னும் காய்ச்சலின் அளவு அதிகமாகியது… அவளுக்கு நன்றாக போர்த்திவிட்டு அவள் நன்றாக உறங்குகிறாள் என்று உறுதி செய்து கொண்டு யாருக்கோ அழைத்து பேசினான்… அந்த பக்கம் என்ன கூறப்பட்டதோ இவன் மேலும் பல விஷயத்தை கூறி அழைப்பை தூண்டித்தான்… அவர்கள் மருத்துவமனையில் இருந்து வந்து மூன்று மணி நேரம் ஆகியும் வாணன் இன்னும் வீட்டிற்கு வரவில்லை….சரியாக குழந்தை பாலிற்காக அழ சுபாவிற்கு காய்ச்சல் இருந்ததால் அவளை பால் தர வேண்டாம் என பாட்டிகள் இருவரும் கூறிவிட்டனர்…
அவள் இன்னும் எழுந்துகொள்ளவே இல்லை… அப்போது தான் வாணன் உள்ளே நுழைந்தான்… நந்தினிக்கும் சுபாவிற்கு காய்ச்சல் என தெரியாது அவர்கள் வந்த போது அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்… குழந்தை பாலுக்காக அழுகும் போது தான் இருவரும் ஹாலிற்கு வந்தனர்…
வீட்டில் பெரியவர்கள் பாட்டிகள் மட்டுமே இருந்தனர் மற்றவர்கள் அனைவரும் அவரவர் வீட்டிற்கு சென்றுவிட்டனர்… குழந்தை அழுவதை பார்த்து “நான் சொன்னேன்ல பாருங்க குழந்தை பாலுக்காக அழுவுது இவ எங்கயோ போயிட்டா…. குழந்தை அந்த பொண்ணு மாதிரி இருக்கறதுனால தான் பழி வாங்குறா உங்க அருமை தங்கச்சி ” என்று நந்தினி கோவமாக கூறினாள்…
மற்றவர்களை பார்வையாலே அமைதியா இருங்க என்று கூறிவிட்டான் அர்ஜுனன்… மற்றவர்கள் நந்தினி ஏன் இவ்வாறு பேசுகிறாள் என்று தெரியாமல் அதிர்ந்து தான் நின்று இருந்தனர்… சுபா வாணன் வந்த போது தான் கீழே வந்தாள்… நந்தினி பேசியதை கேட்டு அவள் அதிகமாக அதிர்ந்து நின்றாள்….
வாணன் அவள் வருவதை பார்த்து விட்டு “குழந்தைக்கு உடம்பு சரி இல்லாதப்ப குழந்தையை பார்த்துக்காமா மேலே என்ன பண்ணிட்டு இருந்த சுபா… குழந்தையை பார்த்துக்குறது விட அவளோ பெரிய வேல வேற என்ன இருக்கு…. ” என்று கோவமாகவே கேட்டான் வாணன்….
நந்தினி பேசியது கேட்டு அதிர்ந்ததை வாணன் பேசியதை கேட்டு தான் அதிகமாக அதிர்ந்தனர்… சுபாவோ அழுகவே ஆரம்பித்து விட்டாள்…. அவள் அழுவதை பார்த்து அர்ஜுனன் வேகமாக சென்று அவளை தாங்கிக்கொள்ள நந்தினி மேலும் கோவமடைந்து நல்லா நடி… குழந்தையை பழி வாங்குற அளவுக்கு நீ மோசமானவளா… குழந்தையை கல்யாணத்துல ஒழுங்கா பார்த்து இருந்தா காய்ச்சல் வந்து இருக்குமா… எங்க உனக்கு மினிக்கிட்டு திரியவே நேரம் பத்தலையே “…. என்று அவள் கூறி முடிக்கும் முன் சுபா சத்தமாக அழுது இருக்க… அர்ஜுனனோ “போதும் நிறுத்து க்கா… என்ன பேசுறன்னு யோசிச்சு பேசு…” கோவமாக கத்தி விட்டான்… சுபாவை வர்ணனிடம் விட்டுவிட்டு நந்தினியிடம் பேச திரும்பினான்…
“என்ன சொன்ன அவ குழந்தையை பார்த்துக்கலயா… அவ அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு தடவ குழந்தையை பார்த்துட்டு தான் இருந்தா… ஏன் எங்க கல்யாணத்தப்ப சிவாவுக்கு வலிப்பும் ஜன்னியும் வரல…. அவன் அதிகமா ஐஸ்கிரீம் சாப்பிட்டதுனால தானு வந்துச்சு…. அப்போ நீயும் தான் அவனை ஒழுங்கா பாத்துக்கல…. உன்னை என்ன சொல்லாம்… சேர கூடாதவங்க கூட சேர்ந்துட்டு இருக்க…..பார்த்து வார்த்தையை விடுக்கா ” என்று கூறிவிட்டு வாணன் கையை பிடித்து கொண்டு சுபா அருகில் சென்றான்…
” அம்மு இங்க பாரும் அத்தான் நான் சொல்லி தான் அப்படி பேசுனாங்க.. அக்கா நாம எடுத்து சொன்னா புரிஞ்சிக்க மாட்டா…. அது தான் அத்தானை பேச சொல்லி அவளை பேச வெச்சு நான் பேசினேன்.. அழுவாதா அம்மு இன்னும் காய்ச்சல் அதிகமாயிட போகுது” என்று கூறி அவளை அமைதி படுத்தினான்… சுபாவாலும் காய்ச்சலின் காரணத்தினால் பேச முடியவில்லை…
அவளுக்கு சாப்பிட கஞ்சி ஜனனி எடுத்து வர வாணன் வாங்கி அவனுக்கு ஊட்டிவிட்டான்… “வேணும்னு உன்கூட பேசாம இல்ல பாப்பா… அண்ணாவை மன்னிச்சுடு பாப்பா… அழுகாம சாப்பிடு..” என்று அவளுக்கு ஊட்டிவிட்டான்…. வர்ணன் அவளை தன் தோளில் சாய்த்து கொண்டான்… அனைவரும் சுபாவின் அருகில் இருக்க நந்தினி மட்டும் தனியாக நின்று கொண்டு இருந்தாள்….
கிரிஜாவின் வலையில் இருந்து தப்புவாளா நந்தினி?!?!? இல்லை மேலும் அவரின் பேச்சை கேட்டு இவர்களில் இருந்து தனித்து நிற்பாளா?!?!?!
error: Content is protected !!