ஆறு மாதங்களுக்கு முன்……
தடக்….. தடக்…. என்ற சத்தத்துடன் தனது நீண்ட உடலை வளைத்து வளைத்து தண்டவாளத்தில் அசைந்து ஆடி கொண்டே சென்றது அந்த விரைவு வண்டி.பெட்டிகளில் இருக்கும் மக்கள் காலை பொழுது என்பதால் சிலர் உறங்கி கொண்டும், சிலர் எழுந்து தேனீர் பருகி கொண்டே பக்கத்தில் இருக்கும் சக பயணிகளுடன் அந்த அற்புதமான காலை பொழுதை ரசித்து கொண்டு இருந்தனர். இந்த காட்சிகள் , ரம்மியமான காலை பொழுது எதுவும் தன்னை பாதிக்கவில்லை என்பது போல் புருவங்கள் சுருங்க எதையோ யோசித்து கொண்டு இருந்தாள் இனியா. அவளின் யோசனையை தடை செய்வது போல் “…டமார்….” என்று உலகமே அதிர வைக்கும் அளவிற்கு ஒரு சத்தம்.அதை தொடர்ந்து ஏதேதோ சத்தங்கள்.
சட்டென்று எழுந்து அமர்ந்து விட்டாள் இனியா.சுற்றி சுற்றி பார்த்து தான் இருப்பது தனது அறையில் தான் என்று உறுதி செய்து கொண்டும் தனது உடலை ஆராய்ந்து கொண்டு இருக்கும் போது தான் தெரிந்தது இது யாவும் கனவு என்று.நினைத்து பார்த்தாலும் அது எல்லாம் கனவு போல் இல்லை. ஏதோ முற்பிறவியில் வாழ்ந்த வாழ்க்கை போன்று தான் தோன்றியது இனியாவிற்கு.எத்தனையோ தடவை இந்த கனவு வந்து இருந்தாலும் ஒவ்வொரு முறையும் நிஜம் என்று நம்பி இதே போல் ஏமாந்து விடுவாள் இனியா. இந்த கனவு ஏன் வந்தது எதற்காக வந்தது என்று யோசித்து யோசித்து அன்றைய நாளும் தலை வலியில் முடிந்து விடும். ஆகையால் ஜாக்கிரதையாக இப்போது இதை எல்லாம் நினைத்தால் தலைவலி தான் மிஞ்சும் என்று உணர்ந்து அந்த யோசனைகளை புறம் தள்ளி தனது அன்றாட பணிகளில் தன்னை புகுத்தி கொண்டாள். அவள் அமுது இனியாள். வீட்டில் அமுது ,நண்பர்களுக்கு இனியா.பிரபலமான மென்பொருள் கம்பெனி ஒன்றில் கொரோனா காரணமாக வீட்டில் இருந்தவாறே வேலை பார்க்கும் 26 வயது யுவதி . காலை கடன்களை முடித்து கொண்டு யோகா செய்வதற்கு, விரிப்பை விரித்து முழுதாக ஒரு மணி நேரம் யோகா செய்துவிட்டு மணியை பார்த்தாள். இன்னும் நேரம் இருக்க அவசரமாக காக்கா குளியல் போட்டு விட்டு காலை சமையலை கவனிக்க சென்று விட்டாள். இல்லையென்றால் அவளின் சின்ன சிட்டுக்கள் இரண்டும் எழுந்தவுடன் ஒரு வேலை செய்ய விடமாட்டார்கள். அவர்கள் பின் செல்வதற்கே நேரம் சரியாக இருக்கும்.ஆமாம் இனியாவிற்கு இரட்டை குழந்தைகள் பிறந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. மகன் சாத்விக் மகள் ஷன்வி என்று பெயரிட்டு உள்ளாள்.
ஆனால் பார்க்கும் போது இரண்டு குழந்தைகளுக்கு அம்மா என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.அவளின் வயது ஒரு காரணம் என்றாலும் அவள் உடல் நல்லதில் மிகுந்த கவனமாக இருப்பாள். இரண்டு முறை சாவின் விளிம்பை பார்த்தாலும் மனம் என்னவோ இன்னும் கொஞ்ச நாள் வாழ ஆசைப்பட்டு அவளின் உடல் நலத்தையும் குழந்தைகளின் நலத்தையும் பார்த்து பார்த்து கவனித்து கொள்கிறாள். இனியா, கோதுமை நிறத்தில் அளவான உயரத்துடன், உயரத்திற்கு ஏற்ற உடல்வாகு உடன் பார்ப்பவர்களை மீண்டும் திரும்பி பார்க்க சொல்லும் வகையில் சாந்தமான அழகுடன் இருப்பாள். ஆனால் அவள் அப்படி இல்லை , பேசினால் அனைவரும் அரண்டு விடுவர். இனியா இரண்டு ஆண்டுகள் டெல்லியில் எம்.பி.ஏ முடித்துக் கொண்டு திரும்பும் வேளையில் நடந்த விபத்தில் டெல்லியில் நடந்த நிகழ்வுகளின் நினைவுகளை மறந்து விட்டாள். அதன் பிறகு எத்தனையோ பிரச்சினைகளை சந்தித்தாலும் அதை எல்லாம் தூசு போல் பறக்கவிட்டு பீனிக்ஸ் பறவை போல் உயர உயர பறந்து கொண்டு இருக்கிறாள். இவளின் பெற்றோருக்கும் இவளுக்கும் இவள் கருவுற்ற போது நடந்த சண்டையில் கோவம் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டாள். சில மாதங்கள் சென்று தான் எடுத்த முடிவு தவறு என்று புரிந்தது.அதன் பிறகு வீட்டினரோடு பேசினாலும் வீம்பும் பிடிவாதமும் அவளை வீட்டிற்கு செல்ல தடுத்து விட்டது.ஆகையால் அவளின் பெற்றோர்கள் தான் இறங்கி வந்தனர்.நேரம் கிடைக்கும் போது வந்து செல்வர். இவளின் உதவிக்கு வேலைக்கு ஒரு ஆளும் வைத்துவிட்டனர். அவரை மேல் வேலைகளை செய்ய சொல்லி விட்டு சமையல் வேலைகளை மட்டும் இவள் பார்த்து கொள்வாள்.குழந்தைகளை பார்த்து கொள்வதிலும், அவர்களின் உணவு விசயத்திலும் வேறு யாரையும் அனுமதிக்கமாட்டாள் . அவள் அம்மா கூட ” ஏன் டி உன்ன வளர்த்தவளே நான் தான் எனக்கு தெரியாதா எப்படி பிள்ள வளர்கனும் ” என்று சொல்லி எத்தனை திட்டினாலும் யார் சொல்வதையும் கேட்டு கொள்ளமாட்டாள். அவளைப் பொறுத்தவரை அவள் தான் குழந்தைகளுக்கு அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும். கொரோனா காலத்தில் வீட்டில் இருந்து கொண்டே போட்டி தேர்வுகளுக்கு படித்தால். அதன் விளைவு இன்னும் ஆறு மாதங்களில் அரசு கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்ற உள்ளாள்.
வருவாள்…..
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.