அகம் கொய்த அனலி டீசர்
ஹாய் டியர்ஸ் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். பிள்ளையார் எல்லா வரங்களையும் உங்களுக்கு அளிக்கட்டும்.
அழகோவியம் உயிரானது படிச்சவங்க கலைச்செல்வன் இலக்கியா மறந்து இருக்க மாட்டீங்க அவங்களுக்காக ஒரு கதை அகம் கொய்த அனலி படிச்சு பாருங்க
Advertisement
***********
“ஆர் யூ அவுட் ஆஃப் மைன்ட் செல்வா. நீ என்ன செஞ்சிருக்கத் தெரியுமா…?”தன் கழுத்தில் கிடந்த மஞ்சள்கயிறை தூக்கி காண்பித்தபடி அவள் கேட்க
Advertisement
“தாலி கட்டியிருக்கேன். இது தெரியாம இருக்க நான் என்ன சின்னத்தம்பி பிரபுவா?” என்று நக்கலாய் அவன் கேட்க
Advertisement
“திஸ் இஸ் க்ரைம். என் அனுமதி இல்லாம தாலி கட்டினது தப்பு.”அனலாய் தகித்தவளை ஆழ்ந்து பார்த்தவன்
“அனுமதி இல்லாமல் கட்டினேனா?”என்றான் புருவமுயர்த்தி
“எல்லாரும் சேர்ந்து என்னை குழப்பி ரஷ் பண்ணிட்டீங்க” என்றாள் மீண்டும் குற்றம்சாட்டி.
Advertisement
“இலா… சண்டை போடுற மனநிலையில நான் சுத்தமா இல்லை. தயவு செஞ்சு லைட் ஆஃப் பண்ணிட்டு வா” என்றான்.
“எங்கே வர்றது?” என்று விழி விரித்து பார்த்தவளை சீண்டிப் பார்க்கும் எண்ணம் கலைச்செல்வனுக்கு.
“கலைஇலக்கிய விழாவுக்குத்தான்”என்றவனை மூக்கு நுனி சிவக்க முறைத்தவள்,” ஹோ டு ஹெல் மேன்” என்று கத்தி விட்டு விளக்கை அணைத்தாள்.
“அதுக்குத்தான் காலையிலேயே என்ட்ரி டிக்கெட் வாங்கிட்டேனே?!” என்று அதற்கும் உல்லாசமாய் கிண்டலடித்தான்.
“ஓஓஓ… அப்போ நான் ராசியில்லாதவ ‘ன்னு தெரியுது தானே ?”என்று குரல் கரகரக்க கேட்டவளின் பரிமாணம் அவனை திகைக்க வைத்தது.
“இலா…?!”
“ப்ளீஸ்… இதுவரை நான் கலங்கியது என்னோட நெருக்கமானவங்களின் மரணத்துக்கு தான். அழ வச்சுடாதீங்க” என்று கீழேயே படுத்து விட்டாள்.
*************
“உனக்கு உண்மையா இல்லை நான். உன்னை விட்டுட்டேன் நான். ஐம் எ. …ஐ எம் ஏ “என்று தன் நெஞ்சில் ஒற்றை விரலை வைத்துக் குத்திக் கொண்டவள் தேம்பி அழுதாள்.
“இலா!” என்று ஆதரவாக அவளைத் தொட்டிட
“டோன்ட் டச் மீ கலை.”என தட்டி விட்டவள்,” நீங்களாவது என்னை புரிஞ்சு இருப்பீங்கன்னு நம்பினேன் நான்” என்றாள் குற்றச்சாட்டாக.
“புரிஞ்சதால தான் இலா “என்றதும் தீயென முறைத்தவள்,” இதுவா நீங்க என்னை புரிஞ்சுக்கிட்டது.” என ஆத்திரமாய் கேட்க
“நானும் மனுசன்தான்டி. தெய்வப்பிறவி எல்லாம் இல்லை. எனக்கும் உணர்ச்சிகள் இருக்கு.”என்றவன்,” வாரிசு தானே வேண்டாம்.”என்றவன்,” ஆழ்ந்த பெருமூச்செறிந்து,” கலைச்சிடு . இனி உன் பக்கம் வரமாட்டேன்” என்றபடி அங்கிருந்து வெளியேறியிருந்தான்.
‘அபார்ஷனா?!’ என்று முணுமுணுத்தவள் வயிற்றை மெல்ல வருடிக் கொண்டாள்.
நெஞ்சமெல்லாம் புண்ணாய் இருந்தது. மனதில் ஏதோ ஒரு இறுக்கம். அவனிடத்தில் நெகிழவும் விடாமல் விலகவும் விடாமல் ஒரு பற்றுதல்.
********
“இதோப்பாரு கலை உன் மனசுக்கு மதிப்பு குடுத்து நாங்க அமைதியா கெடந்தோம் இனிமேட்டுங்கும் அப்படியே இருந்தா சரியா வராது. நீயி என்னமும் பண்ணிக்க. ஒனக்கு வார பொதன்கெழமை திருப்பரங்குன்றம் முருவன் கோயில்ல கலியாணம் வெச்சிருக்கோம். பொண்ணு நம்ம சின்னமனூர் அத்தை மவதேன். ஒனக்கு பொருத்தமா இருக்குது சாதகம்.”என்றவர்
“இதுக்கு மேற்பட்டு முடியாது வைக்காதுனு ஆராச்சும் பேசுனீக என்னிய உசுரோடவே பாக்க முடியாது”என்றார் கடுமையான குரலில்.
“ஆத்தா… அப்பத்தா !”என்று ஆளாளுக்கு அரற்ற
“என்னடே… என்னிய அரட்டுனா கம்மினு இருப்பேனு நெனப்போ…? நாஞ்சொன்னா சொன்னதுதேம். இது எம்ம வீட்டு மனுசன் மேல சத்தியம் “என்க
‘போற போக்குல என்னைய கொல்ல ப்ளான் போடுதா பாரு.’என்று அவரின் கணவன் மனதில் புலம்பிக் கொண்டார்.
