Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் – 27.2

திருமணம் உறுதி செய்யப்பட்ட பிறகு ராஜீவ் பாரதி இடையில் அலைப்பேசி அழைப்புகள் சகஜமாகின , தங்களின் குடும்பம் பற்றி, ஜெகன்நாதன் குடும்பம் அங்கு வந்தது முதல் இன்று வரை உள்ள அணைத்து விவரங்களையும் அவளிடம் இந்த பத்து நாட்களில் பகிர்ந்து கொண்டான்.

தும்பியை பற்றி கேட்டபிறகு அவளை இன்னும் இன்னும் பிடித்தது பாரதிக்கு , மனைவியுடன் இரண்டு வாரங்கள் வெளியூர் செல்வதாக அனைவரிடமும் கூறினான் ஆனால் எங்கே என்று அவனும் சொல்லவில்லை அவர்களும் கேட்கவில்லை.

ஹனிமூன் அழைத்து செல்கிறான் என்று அனைவரும் எண்ணினர், ஹிமாச்சல் நோக்கி அவர்களின் பயணம் தொடங்கியது , நேரே அந்த வைத்தியசாலைக்கு சென்றனர்.

பெயர் பலகையை கண்டவுடன் அவனை திரும்பி பார்க்க அவள் கை பற்றி தட்டிக்கொடுத்தவன் கண் சிமிட்டி “சும்மா ரிலாக்ஸ் பண்ண போறோம் அவ்ளோதான்” என்றான் .



Advertisement

ரிஷப்ஷனிஸ்ட் அவர்களை அங்கே அமரவைத்து தகவல் சொல்ல, அவர்களுக்கான  தனிப்பட்ட கேர் டெக்கர் வந்து  உடைமைகளை வேலை செய்வபவரிடம் எடுக்க சொல்லி அவர்களுக்கான குடிலை காண்பித்தார்.

மலை மேலே தனி தனியாக சிறு சிறு குடில்கள் போல அமைப்பு, சொர்க்கமாக தோன்றியது அந்த இடமே, அமைதியும் குளுமையும் மனதிற்கு இனிமை சேர்த்தது .

அவர்கள் இரவு நேரம் சென்று சேர்ந்ததால் உணவை உண்டுவிட்டு பயண களைப்பு தீர உறங்கி எழுந்தனர்.

Advertisement

அடுத்த நாள் காலை அவர்களுக்கான தெரபி தொடங்குகிறது , அதிகாலை ஆள் வந்து எழுப்பி செல்ல அங்கு தியானம் பயிற்றுவித்தனர்.

Advertisement

சைக்கியாட்ரிஸ்ட் காலை பத்துமணிக்கு அவர்களை சந்திப்பார் என்று இருக்க அந்த இடைப்பட்ட நேரத்தில் மனைவியை மலை முகட்டில் நிறுத்தி , இயற்கையை ரசித்து தாங்கள் வந்திருக்கும் காரணத்தையும் கூறினான்.

முழுமனதோடு அவளும் தீர்வுக்காக காத்திருந்தாள் , முதல் நாள் இருவரையும் ஒன்றாக அமர்த்தி பேசினார் .

அதன் பிறகு நான்கு நாட்கள் அவர்களின் கதையை இருவரிடமும் தனி தனியாக கேட்டு இருவரும் ஒருவர் மீது மற்றவர் வைத்திருக்கும் அன்பின் ஆழத்தை தெரிந்து கொண்டார்.

Advertisement

அவளுக்கு பெரிதாக பிரச்சனைகள் இல்லை , ஒரு சிறிய பயம் அதை நிச்சயம் மாற்றிவிடலாம் என்று அவருக்கு நம்பிக்கை பிறந்தது , தினமும் மூலிகை என்னை குளியல் , பத்திய சாப்பாடு தியானம் நல்ல உறக்கம் மூலிகை மருந்துகள் என்று இருவரின் மனமும் மிக மிக லேசாக மாறியது.

உடலே புது தேஜஸில் ஜொலித்தது தினமும் உறங்குவதற்கு முன், தியானம் முடிந்து சுவாமிஜி ஒருவர் அழகான கதைகள் மூலம் வாழக்கை தத்துவத்தை கூறினார்.

ஒருவாரம் கடந்த நிலையில் தன்னுடைய கவுன்சிலிங் தொடங்கினார் டாக்டர் வீணா  “தும்பிக்கு மனசுல இருக்கற பயம் தேவை இல்லாததுனு எப்போவாவது தோனியிருக்கா” என்க.

“ம்ம்” என்றவள்  “நந்தேட்டன் எப்போவும் என்ன விட்டுட்டு போக மாட்டார் எனக்கு அது தெரியும் , ஆனா சில சமயம் அப்படி ஒரு பயம் எனக்கு வருது , தனிமை ரொம்ப கஷ்டமா இருக்கு” என்றவள் சொல்ல அவருக்கு சிறு குழந்தையாக தெரிந்தாள் அவள்.

“சேர்ந்தே இருக்குற தம்பதி எப்போவும் சந்தோஷமா இருக்கிறதா நீங்க நினைக்குறீங்களா” என்ற கேள்விக்கு.

“தெரியல அப்படி இருப்பாங்க தானே? தினமும் முகம் பாத்து பேசமுடியும் எல்லா விஷயங்களையும் ஷேர் பண்ண முடியும் , ரெண்டு பெரும் ஒண்ணா இருக்கறதே சந்தோசம் தானே”.

“ம்ம் சரிதான்…. ஆனா எத்தனை தம்பதி அப்படி இருக்காங்கனு நீங்க நினைக்கறீங்க , உங்க பெரியம்மா பெரியப்பா இத்தனை வர்ஷம் ஒன்னாவே இருந்தாங்க அவங்களுக்குள்ள இந்த அன்பு இருந்ததா” என்க.

அவள் யோசித்து “இல்லை” என்று தலை ஆட்டினாள்.

“சரி அவங்கள விடுங்க , உங்க சித்தப்பா சித்தி ரெண்டு பெரும் எப்போவும் இணை பிரியாம இருந்த ஆதர்ஷ தம்பதி , ஆனா உங்க சித்திக்கு தெரியாம எவ்ளோ விஷயங்கள் அவர் பண்ணியிருக்கார்”.

“கூடவேயிருந்த ஒரு மனிதனோட உண்மையான முகத்தை உங்க சித்தியால இத்தனை வருடங்களில் கண்டு பிடிக்க முடியல அப்போ அது என்ன” என்றவரை அவள் குழப்பமாக பார்த்தாள்.

“கார்தம்பிக்கும் ஜெகன்நாதனுக்கும் இடையில் இருக்குற அன்பு ரொம்ப அழகா இருக்கு , பல வருடங்கள் பிரிந்திருந்தும் நீங்க ரெண்டு பேரும் மனசால ஒண்ணா தான் இருந்திருக்கீங்க”.

“இரண்டு மனங்களுக்கான இணைப்பு மட்டுமே வாழ்க்கையோட அடிப்படை வேர் , அது உங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப பலமா இருக்கு ,முதல் விஷயம்  உங்க கணவரோட வேலை அந்த மாதிரி”.

“முக்கியமான இரண்டு உயிர்களை இழக்குறதுக்கு முன்னாடி இருந்த தும்பிக்கு அவர் இதே வேலைக்கு போறது பிரச்சனை இல்லாம இருந்தது, காரணம் அப்போ எல்லாமே சரியா நடந்தது , உங்க சீதா அம்மாயி உங்க கூட இருந்து பார்த்துப்பாங்கனு உங்களுக்கு நம்பிக்கை இருந்தது”.

“அவங்க இறந்து இவர் உங்ககிட்ட இருந்து விலகினது உங்க மனசுல ஒரு காயத்தை ஏற்படுத்தி இருக்கு , என் மனைவியை விட எதுவும் எனக்கு முக்கியம் இல்லை , இந்த வேலையை விட்டுட்டு அவ கூட நான் இருக்கறது தான் அவளுக்கு சரியா இருக்கும்னா  வேலையை விட நான் தயார்னு உங்க கணவர் சொல்லியிருக்கார்”.

“அவர் இந்த வேலையை ரிசைன் பண்ணிட்டா உங்களுக்கு ஓகே வா” என்க.

“இல்லை இல்லை” என்று பதறியவள்  “இது அவரோட கனவு அதை போய் எப்படி…” என்க.

“அதுதான்.. ஜெகனோட கனவை யார் காப்பாத்தணும் இப்போ” என்றவரிடம் “நான்” என்றாள் அவள்.

“கரெக்ட் , ஒரு காதலியா  மனைவியா உங்க உணர்வுகள் எனக்கு புரியுது, குடும்பத்தை காப்பாத்த நாட்டை காப்பாத்த இந்த உலகத்தில எத்தனையோ மனைவிகள் தங்கள் கணவர்களை தூர அனுப்பிட்டு தனிமையோட போராடிட்டு இருக்காங்க”.

“பெண்கள் தங்களை சுற்றி அம்மா அப்பா இல்லனா மாமனார் மாமியார் குழந்தைகள் இப்படி ஏதோ ஒரு உறவோடு இருப்பாங்க , கணவன் பக்கத்துல இல்ல அப்படின்ற துணைக்கான தனிமை மட்டும் தான் , ஆனா.. கணவன்??”

“இவங்க யாருமே இல்லாம முழு தனிமையில இருப்பாங்க, அவங்களோட  நாட்கள் எப்படி கடக்குது , ஊர்ல இருக்குற மனைவி குடுக்குற தைரியம், உனக்காக நான் காத்துட்டு இருக்கேன் அப்படின்ற நம்பிக்கை , என் இடத்துல இருந்து என் மனைவி எல்லாத்தையும் பார்த்துக்குறா என்ற நிம்மதி”.

“உங்க அழகான காதலோட , இந்த மாதிரி நம்பிக்கையையும் தைரியத்தையும் குடுத்து அவருக்கு துணை நிக்குற பழைய கார்தும்பியா இருக்க போறிங்களா… கணவன் உங்க கூடவே இருக்கறது தான் முக்கியம்னு சொல்லி அவரோட கனவு வேளையில் இருந்து வரவெச்சு உங்ககூட இருக்கவெக்குற புது கார்தும்பியா மாற போறீங்களா”.

“எந்த முடிவையும் இப்போ எடுக்காதீங்க , உங்களுக்கு மூணு நாள் டைம் இருக்கு  இந்த மூன்று நாட்கள் நீங்க ரெண்டு பெரும் சந்திக்க அனுமதி இல்லை , இது உங்கள நீங்களே சுய அலசல் செய்ய தேவையான நேரம், யோசிங்க”.

“தியானம் மூலிகை குளியல் தினமும் இருக்கும் , யோசிச்சு எந்த முடிவா இருந்தாலும் உங்க கணவர் கிட்ட நீங்களே  நேரடியா சொல்லலாம் , ஒரு விஷயம் நல்லா ஞாபகம் வெச்சுக்கோங்க கார்த்தும்பி உங்க முடிவு எதுவா இருந்தாலும் மிஸ்டர்.ஜெகன்நாதன் உங்க பக்கம் மட்டுமே நிப்பார்”.

“மனச ரிலாக்ஸா வெச்சுக்கோங்க எந்த பதட்டமும் வேண்டாம் , உங்கள யாரும் ஜட்ஜ் பண்ண போறதில்லை , இது உங்க வாழக்கை மத்தவங்க முடிவுகளை நீங்க ஏத்துக்க தேவை இல்லை , உங்க வாழ்க்கை உங்க முடிவு” என்றவர் .

புன்னகையோடு ஒரு மலர் கொத்தை அவள் கையில் கொடுத்து “மிக அழகான உங்க காதல் அப்படியே தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று கூறி அவளை அனுப்பி வைத்தார்.

அறைக்கு வந்தவள் இரவு வரை அதை பற்றியே சிந்தித்தாள் , என்ன செய்கிறேன் நான் , எதற்கு இந்த பயம் எனக்கு , கணவன் கூறிய வார்த்தைகள் செவிகளில் முழங்கியது.

“எங்கும் இருள்… எங்கும் அமைதி…  நடுக்கடல் , இப்பொழுது வானமும் கடல் நீரும் கூட கருமை நிறம் , அந்த நொடிகளில் உன் பெயரை சொல்லிப்பார்ப்பதில் எனக்கு அலாதி இன்பம்” என்றவன் விழிகள் மூடி “கார்த்தும்பி” என்று இதயத்தின் அடியாழத்தில் இருந்து அழைத்தானே , அந்த தனிமையை விடவா தன்னுடையது பெரியது.

தன்னை போல அவனுக்கும் பிரிவு வேதனை தானே , அதற்காக நாம் செய்ய வேண்டிய கடமைகளை மறந்து வீட்டிற்குள் முடங்கி கிடக்க முடியுமா என்று யோசித்து யோசித்து இரண்டாம் நாளே தன்னுடைய சிறுபிள்ளை தனத்தை உணர்ந்து கொண்டாள்.

அடுத்த முறை அவன் போகும்போது முகம் நிறைய புன்னகையோடு அவனை வழி அனுப்ப போவதில்லை , நிச்சயம் பிரிவின் வலி இருக்கும், ஆனால் அது அவனை முடக்க கூடாது இருவரும் ஒன்றாக இருக்கும் நாட்களின் நினைவுகளை பொக்கிஷமாக சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அவனுடைய தைரியமாக மாற வேண்டும் மேலும் மேலும் வெற்றி பெற அவனுக்கு தோள் கொடுக்கும்  துணையாக மாற வேண்டும் .

கார்த்தும்பிக்குள் வெளிச்சம் பிறந்தது , இப்பொழுது சிந்தை தெளிவாக இருந்தது முகத்தில் அதுவே ஒரு பொலிவை தர , மூன்று நாட்களுக்கு பிறகு மூலிகை குளியல் முடித்து அறைக்கு வந்து குளித்து தயாரானவள் இரவு உடையை அணிந்துக்கொண்டாள்.

கதவு தட்டும் ஓசையில் சென்று ஜன்னல் வழி பார்க்க அவன் நின்றிருந்தான் , கதவை திறந்தவள் அவனை கண்டவுடன் பாய்ந்து சென்று கட்டிக்கொண்டாள் , அவனும் அவளை தன்னுள் புதைத்துக்கொண்டான் “தும்பிமா…. ஐ மிஸ்ட் யு சோ மச்” என்று இன்னும் தன்னுடன் இறுக்கினான்.

வெள்ளை நிறத்தில் மெலிதான காட்டன் பைஜாமா அணிந்திருந்தான், அவன் அணைப்பில் இருந்தவள் அந்த குடிலின் மெல்லிய வெளிச்சத்தில் அவன் மார்பில் இருக்கும் வண்ணங்களை கண்டு விழி விரித்தாள்.

மெல்ல பைஜாமாவின் பட்டன் விளக்கி பார்க்க வண்ணங்களில் குளித்த தும்பி பச்சை குத்தப்பட்டிருந்தது , அதை மெல்ல வருடியவள் விழிகள் நிறைய “இது எப்போ” என்றாள் தொண்டை அடைக்க.

அவள் வதனத்தை தன் இரு கையில் தாங்கியவன் “ஏதோ கோவம் உன்கிட்ட சண்டை போட்டு வந்துட்டேன் , ஆனா ஒரு நாளை கூட கடக்க முடியல , எல்லாமே வெறுத்து போய் எனக்கு ஏதாவது ஆயிடுமோனு நானே பயந்த நாட்கள் , உன்ன என்னோட வெச்சுக்கிட்டேன் நீ கூடவே இருக்கற மாதிரி ஒரு நம்பிக்கை” என்றவனின் மார்பில் அழுத்தமாக முத்தம் வைத்தாள் கார்த்தும்பி .

அங்கேயே பற்தடங்கள் பதிய மெல்ல கடித்தவள் அவன் கழுத்தில் முகம் புதைத்து “நந்தேட்டா சொர்கம் எப்படி இருக்கும்” என்றவளை அவன் தன்னில் இருந்து விலக்கி “என்ன கேட்ட” என்றான் விழிகள் மின்ன .

“உன்னில் நான் நிறையும் நொடிகள் சொர்க்கம்” என்று முன்பு அவன் சொன்னதை இப்பொழுது நினைவு படுத்தினாள் காரிகை,  “எனக்கு அதை காட்டுங்க”  என்றாள் மயக்கும் குரலில்.

அவளை தன்னில் இழுத்தணைத்து இதழில் தேன் சுவைத்தவனின் கைகள் அவள் மேனியில் படர பெண்மை தடுமாறியது , அவளை அள்ளிச்சென்று கட்டிலில் விட்டவன் “கண்மூடு தும்பிமா ” என்றான்.

அவள் விழிகள் மெல்ல அடைய சில நொடிகளில் பாதத்தில் சில்லென்ற உணர்வு , அவள் கால்களை இழுத்துக்கொள்ள முயல அழுத்தமாக பிடித்தான் , காலில் தங்க கொலுசு தவழ அவன் இதழ்கள் அங்கே அழுத்தமாக பதிந்தது .

அந்த சுக அவஸ்தயில் தலையணையை அழுத்தமாக பற்றிக்கொண்டாள், மெல்ல மெல்ல இதழ் ஊர்வலம் அவள் அதரங்களை அடைய பெண்மை மொத்தமாக வசம் இழந்தது, அவன் விரல் தொடும் இடம் எல்லாம் பணியை போல உருகி கரைந்தது.

வெளியே கொட்டி தீர்த்தது மழை , கண்ணாடி ஜன்னலில் விழுந்து சிதறிய மழைத்துளிகள் சங்கீதத்திற்கு இணையாக அவளின் கொஞ்சலும் சிணுங்கலும் அறையை நிறைத்தது.

மழையை நேசிக்கும் கார்த்தும்பியை துளி துளியாய் நனைத்து பெருமழையாய் அவளில் பெய்திறங்கினான் வருண் ஜெகன்நாதன்.

அற்றைத் திங்கள் வானிடம்

அல்லிச் செண்டோ நீரிடம்

சுற்றும் தென்றல் பூவிடம்

சொக்கும் ராகம் யாழிடம்

காணுகின்ற காதல் என்னிடம்

நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்

அடிதொட முடிதொட … ஆசை பெருகிட …

நேரும் பலவித பரிபாஷை

பொடிபட பொடிபட.. நாணம் பொடிபட..

 கேட்கும் மனதினில் உயிரோசை

முடிதொட முகந்தொட.. மோகம் முழுகிட…

 வேர்க்கும் முதுகினில் இதிகாசம்

உருகிடஉருகிட.. ஏக்கம் உருகிட…

கூடும் அனலிது குளிர்வீசும்

குலுங்கினேன் உடல் கூசிட …

கிறங்கினேன் விரல் நீந்திட

மயங்கினேன் சுகம் சேர்ந்திட..

தளும்பினேன் எனை நீ தொட

பாய்ந்திட ..ஆய்ந்திட

காணுகின்ற காதல் என்னிடம் ,

நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்.

இரவெல்லாம் நின்றாடிய மழையின் நர்த்தனம் முடிவுற்றபோதும் குடிலின் உள்ளே கூடலின் பெருமழையின் சங்கீதம் அன்று முழுதும் நிறைந்து நின்றது.

அந்த நாளில் அவர்கள் குடிலில் இருந்து வெளியில் வரவே இல்லை, வெட்கத்தில் சிவந்து கொண்டே இருக்கும் முகத்தை எங்கே மறைக்க என்று தெரியாமல் போராடினாள் கார்த்தும்பி .

நாளை அவர்கள் திரும்பி செல்ல வேண்டும் , செய்திருந்த டிக்கட்டை கேன்சல் செய்தவன் வீட்டிற்கு அழைத்து ஒரு வாரம் சென்று வருவதாக கூறிவிட்டான்.

டாக்டர் வீணாவை இருவரும் சென்று கண்டு பேச தும்பியின் தெளிவான பேச்சே அவருக்கு நம்பிக்கை அளித்தது , இருவரையும் வாழ்த்தி அனுப்பி வைத்தார் .

அவளுடன் அங்கிருந்து சிம்லா சென்றுவிட்டான் , உயிரை உறையவைக்கும் குளிரில் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டே கிடக்க ஒரு வாரமும் நொடிகளாய் கரைந்தது.

உடலெது உடையெது… தேடும் நிலையிது..

காதல் கடனிது அடையாது

இரவெது பகலெது…தேடும் சுகமிது..

சாகும் வரையிலும் முடியாது

கனவெது நினைவெது…கேட்கும் பொழுதிது…

காமப் பசி இதுஅடங்காது

வலமெது இடமெது…வாட்டும் கதையிது…

தீண்டும் வரையிலும் விளங்காது

நடுங்கலாம் குளிர்வாடையில்…..

அடங்கலாம் ஒரு ஆடையில்

தயங்கலாம் இடைவேளையில்….

உறங்கலாம் அதிகாலையில்
கூடலில் ஊடலில்

காணுகின்ற காதல் என்னிடம்
நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!