Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kaathal Theeyum Kaanal Neerum

அத்தியாயம் 16.2 : காதல் தீயும் கானல் நீரும்!!!

“அட பாவி, இது எப்ப டா? சத்தியமா நான் இதை எதிர் பாக்கலை. நீயா டா?”

 

“நீங்க மட்டும் தான் லவ் பண்ணனும். நான் பண்ண கூடாதா”

 



Advertisement

“பண்ணு டா ராசா பண்ணு. சரி அவ கிட்ட சீக்கிரம் சொல்லிரு டா.மனசுலே வச்சிக்காதே”

 

“சரிண்ணா, இருந்தாலும் உன் பொண்டாட்டி ரொம்ப மோசம்”

Advertisement

 

Advertisement

“அவ என்ன டா செஞ்சா?”

 

“என்ன செஞ்சாளா? ஒரு நம்பர் கேட்டதுக்கு என்னவெல்லாம் சொல்லிட்டா தெரியுமா?”, என்று ஆரம்பித்து அனைத்தையும் சொன்னான்.

Advertisement

 

“இது தான் அன்னைக்கு நான் என்ன பண்ணட்டும்னு கேட்டு நின்னதுக்கு காரணமா?”

 

“ஆமாண்ணா, தேனு கிரேட். அவளை நல்லா வச்சிக்கோண்ணா”

 

“நானா வைக்க மாட்டேன்னு சொல்றேன்”, என்று மனதில் எண்ணியவன் அவனைப் பார்த்து சிரித்தான். அப்போது மாடியில் இருந்து கீதா இறங்கி வருவதைக் கண்ட கதிர் இருவரும் பேசட்டும் என்று எண்ணி “நான் என் பர்ஸ் எடுத்துட்டு வரேன் டா”,என்று சொல்லி விட்டு சென்றான்.

 

கதிரும் தினேஷும் இருப்பதைக் கண்டு தான் கீழேயே வந்தாள் கீதா. இப்போது கதிரும் செல்லவே தினேஷுடன் இருப்பது அவளுக்கு தயக்கமாக இருந்தது.

 

ஆனாலும் ஒரே வீட்டில் இருந்து கொண்டு எப்படி அவனை தவிர்க்க முடியும் என்று எண்ணி அவனுக்கு எதிரே சென்று அமர்ந்தாள்.

 

இப்படி அவளுடன் பேச சந்தர்ப்பம் கிடைக்கும் என்று அவன் எண்ணவே இல்லை. “அண்ணா நீ வாழ்க, இப்ப பேசலைன்னா வேற சான்ஸ் கிடைக்காது டா தினேஷ்”, என்று மனதில் எண்ணிக் கொண்டு “நாளைக்கு எப்ப கீதா காலேஜ் போகணும்?”,என்று கேட்டான்.

 

அன்று அவன் வீட்டுக்கு சாப்பாடு கொண்டு வந்த போது அவனுடன் சகஜமாக பேசியவள் இன்று அவனுக்கு பதில் சொல்வதற்கு தடுமாறினாள். அந்த தயக்கம் அவன் கட்டிய தாலியினால் தான் என்று அவளுக்கு புரியவும் செய்தது. அவன் தன்னுடைய பதிலுக்கு காத்திருப்பது புரிய “எட்டரை மணிக்கு அங்க இருக்கணும். இங்க நம்ம ஊர்ல இருந்து ஏழே முக்காலுக்கு எப்பவும் கிளம்புவேன்”, என்றாள்.

 

“என்கூட வரது உனக்கு ஒண்ணும் கஷ்டம் இல்லையே”

 

“அப்படி எல்லாம் இல்லை. என்னால உங்களுக்கு தான் அலைச்சல்”

 

“அது பரவால்ல. சாயங்காலம் எப்ப விடும்?”

 

“அஞ்சு மணிக்கு முடியும்?”

 

“உன்னோட மொபைல் நம்பர் தாயேன். ஏதாவது கேக்கணும்னா தேவைப்படும்”

 

…..

 

“என்ன யோசிக்கிற? எனக்கு நம்பர் கொடுக்க விருப்பம் இல்லையா?”

 

“இது என்ன அர்த்தமில்லாத கேள்வி? இவர் என்னுடைய வீட்டுக்காரர். இவர் இப்படி கேக்கலாமா?”, என்று மனதில் எண்ணியவளை “அப்ப நீ அவனை உன் கணவனா நினைக்க ஆரம்பிச்சிட்டியா?”,என்று கேள்வி கேட்டது மனசாட்சி.

 

“கீதா”, என்று அவன் அழைப்பில் நடப்புக்கு வந்தவள் “நேத்து என்னோட போனை அந்த நாய் உடைச்சிட்டான்”, என்றாள்.

 

“பரவால்ல வேற வாங்கிக்கலாம். இன்னொன்னு கேக்கணுமே”, என்று அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே “நீங்க  ரெண்டு பேரும் கிளம்பிட்டீங்களா?”, என்று கேட்ட படி அங்கு வந்து அமர்ந்தாள் வேணி.

 

“இந்த அம்மா, கொஞ்ச நேரம் கழிச்சு வந்திருக்க கூடாது”, என்று மனதுக்குள் பல்லைக் கடித்தான் தினேஷ்.

 

அறைக்குள் சென்ற கதிரோ, தன்னுடைய கப்போர்டை திறந்து ஏ. டி. எம் கார்டை தேடிக் கொண்டிருந்தான்.

 

கதிர் குளித்து முடித்து வெளியே வந்த போது உள்ளே சென்ற தேன்மொழி சிறிது நேரம் கழித்து வெளியே வந்து துண்டை எடுத்து சென்றாள். அப்போது கதிர் அறையில் இல்லாததால் “அவன் தான் கீழே போய்ட்டானே”, என்று எண்ணிக் கொண்டு இப்போதும் தலையில் துண்டோடும் ஏற்றிக் கட்டிய பாவாடையோடும் அறைக்குள் வந்தாள்.

 

 

[the_ad id=”6605″]

 

 

 

 

அப்போதும் அங்கிருக்கும் அவன் அவள் கண்களுக்கு தெரிய வில்லை. கார்ட் கிடைத்ததும் திரும்பியவன் கண்களில் பட்டது அவள் கோலம். அப்போது தான் அவளும் அவனைப் பார்த்தாள்.

 

இருவரும் அதிர்ந்து போய் நின்றது ஒரு நொடி தான். அவன் முன் தான் நிற்கும் கோலத்தை எண்ணி அவன் அருகே கிடந்த சேலையை எடுக்க வேகமாக வந்தவள் அவள் மேலிருந்து வடிந்த நீரில் கால் வைத்து அப்படியே வழுக்கி விழ போனாள்.

 

அவளை கீழே விழ விடாமல் தாங்கி பிடித்தான் கதிர். அவள் இடையை அவன் கரம் பற்றி இருக்க அவன் சட்டையை அவள் பிடித்திருந்தாள். இருவர் கண்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்தது.

 

முதன்முதலாக ஒரு ஆணின் தொடுகை அவளை சிலிர்க்க வைத்தது. அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கும் போது தான் தன்னுடைய உடையைப் பற்றிய நினைப்பே வந்தது அவளுக்கு.  அவன் முன்னால் தான் எந்த கோலத்தில் இருக்கிறோம் என்பது புரிந்து அங்கிருந்து ஓடவும் முடியாமல் அவனை விட்டு விலகவும் முடியாமல் அசையாமல் நின்றாள்.

 

அவனோ அவளை விடவே முடியாது போல அவளை பிடித்திருந்தான். அதுவும் அவள் கோலம் அவனை பித்தம் கொள்ள செய்தது. அவனுடைய மனதுக்கு பிடித்தவள், அவ்வளவு நெருக்கத்தில் இருக்கும் போது அவளை விட தோணுமா என்ன?

 

எந்த ஒப்பனையும் இல்லாமல் ஆங்காங்கு நீர்த்திவலைகள் அவள் முகத்தில் நிலைத்திருக்க அவன் கண்களுக்கு ரதியாக தெரிந்தாள். அவள் உடலில் இருக்கும் குளிர்ச்சி மெதுவாக அவன் உடலை சூடாக்கியது.

 

அந்த உணர்வில் அவன் கைகள் அவள் இடையை சற்று இறுக்கியது. அந்த இறுக்கத்தில் கண்களை நன்கு மூடிக் கொண்டு அவன் நெஞ்சில் சாய்ந்தாள் தேன்மொழி.

 

அவள் அடைக்கலத்தில் சிறகில்லாமல் வானத்தில் பறந்தவன் அவளை கட்டி அணைத்துக் கொண்டான். அவள் காதில் அவன் உதடுகள் உரசி செல்ல அவன் நெஞ்சில் இன்னும் அழுந்திக் கொண்டாள்.

 

அவனுடைய முரட்டு கரத்தின் திண்மையும், அவன் நெஞ்சின் மீது ஒட்டி இருந்ததால் கன்னம் உரசிய அவன் நெஞ்சின் முடிகளும் அவளுக்குள் புரியாத உணர்வைக் கொடுத்தது.

 

அவனது தேகத்தில் இருந்து வந்த ஆண்மை வாசனை அவள் நாசிக்குள் நுழைந்து. மூளைக்குள் இறங்கி தேகத்தில் பரவியது. அவன் கைகளுக்குள் இருக்கும் போது ஒரு கதகதப்பையும் ஒரு பாதுக்காப்பையும் உணர்ந்த தேன்மொழி இது எப்போதுமே வேண்டும் என்று எண்ணினாள்.

 

அவனுக்கோ அவளை இன்னும் தனக்குள் புதைத்துக் கொள்ள ஆசை. முகமெல்லாம் முத்தம் கொடுக்க ஆசை இருந்தாலும் அவள் முகத்தை விலக்க வேண்டுமே என்று அமைதியாக இருந்தான்.

 

அவள் முதுகில் அலைந்த அவன் கைகள் மீண்டும் அவள் இடையை கைபற்றி ஆங்காங்கே அலைந்தது. அவன் கொடுக்கும் உணர்வுகளை தாங்க முடியாமல் அவன் முதுகில் கைகளை அலைய விட்டாள்.

 

அவன் அடுத்த கட்டத்துக்கு செல்ல நினைக்கையில் “கதிரு நேரம் ஆச்சுப்பா. இன்னும் கிளம்பலையா?”, என்ற வேணியின் குரல் கேட்டது.

 

அடுத்த நொடி இருவரும் பிரிந்து நின்றனர். அவனுக்கு முதுகு காட்டி நின்றவளின் உருவம் கூட அவனை பைத்தியமாக்கியது. “இதுக்கு மேல இங்க இருந்தா அவ்வளவு தான்”, என்று எண்ணிக் கொண்டவன் “இதோ வரேன் மா”, என்று சொல்லிக் கொண்டே சென்று விட்டான்.

 

அவன் சென்றதும் இது வரை இருந்த மாயவலை அறுந்து விழ அவசர அவசரமாக ஒரு சேலையைக் கட்டி கிளம்பி வந்தாள் தேன்மொழி.

 

அனைவரும் பெரியவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்க அப்போது “உள்ளே வரலாமா?”, என்று கேட்டுக் கொண்டே அங்கு நின்றனர் துரைராசுவும் ரேகாவும்.

 

 

[the_ad id=”6605″]

 

 

 

 

 

அவர்களைப் பார்த்த கீதா அடுத்த நொடி அருகில் இருந்த தேன்மொழி கையைப் பற்றி வெளியே இழுத்துக் கொண்டு சென்று விட்டாள். ஐயோ பரிதாபம் கோபம் கண்ணை மறைத்ததால் அவள் இழுத்து வந்தது தினேஷை என்று கூட அவளுக்கு தெரிய வில்லை.

 

அவள் தினேஷை அழைத்து சென்றது அனைவருக்கும் புன்னகையை வரவழைத்தாலும் அவள் கோபம் அனைவருக்கும் வருத்தத்தையும் கொடுத்தது.

 

“அவளுக்கு எங்க மேல உள்ள கோபம் அவ்வளவு சீக்கிரம் குறையாது மாமா. நாங்க கீதாவோட திங்க்ஸ் எல்லாம் கொடுக்க வந்தோம்”, என்றார் துரைராசு. அப்போது தான் அங்கிருந்த இரண்டு பெரிய பைகளை பார்த்தார்கள்.

 

“உள்ள வாங்க, உக்காருங்க. வேணி அவங்களுக்கு டீ போடு”, என்றார் மதி.

 

“சரிங்க”, என்று அவள் உள்ளே போனதும் “பிள்ளைங்க கடைக்கு போறாங்க”,என்று தர்மசங்கடமாக இழுத்தார் மதி.

 

“அவங்க போயிட்டு வரட்டும்.நாங்களும் கிளம்புறோம்”,என்று எழுந்தார் துரைராசு.

 

“நீங்க எங்க எந்திக்கீங்க சித்தப்பா? நீங்களும் சித்தியும் இருந்து அத்தை மாமா கிட்ட பேசிட்டு போங்க. கீதா கொஞ்ச நாள்ல சரியாகிருவா. நாங்க கிளம்புறோம்”, என்று சொல்லி விட்டு வெளியே வந்தாள் தேன்மொழி. அவள் பின்னேயே கதிரும் வரும் போது இங்கே தினேஷை முறைத்துக் கொண்டிருந்தாள் கீதா.

 

“அவனைப் பார்த்து எதுக்கு டி முறைக்கிற?”, என்று கேட்டாள் தேன்மொழி.

 

“நல்லா கேளு தேனு, இவ உன்னைன்னு நினைச்சு என் கையை பிடிச்சு இழுத்துட்டு வந்துட்டு நான் என்னமோ செஞ்ச மாதிரி என்னை பாத்து முறைச்சிட்டு இருக்குறா”, என்றான் தினேஷ்.

 

“நான் உங்க கையை பிடிக்கும் போதே நீங்க சொல்ல வேண்டியது தானே?”, என்றாள் கீதா.

 

“ஏது… நீ தேனுன்னு நினைச்சு என்னை இழுத்துட்டு வருவேன்னு நான் என்ன கனவா கண்டேன்? நீ இழுத்துட்டு வரும் போது என் கையை விடு, நான் தேனு இல்லை தினேஷ்னு எல்லார் முன்னாடியும் சொல்ல சொல்றியா?”, என்று அவன் கேட்ட பின்னர் தான் தன்னுடைய தவறு உரைத்தது.

 

“சாரி”, என்றாள் கீதா. “பரவால்லன்னு சொல்ல மாட்டேன்”, என்று முறைத்துக் கொண்டே சொல்லி விட்டு காரின் பின் சீட்டில் ஏறி அமர்ந்தான் தினேஷ்.

 

அவன் அங்கே அமர்ந்ததும் “நாங்க எங்க உக்கார?”, என்று எண்ணிக் கொண்டு கதிரைப் பார்த்தாள் தேன்மொழி.

 

அவளைப் பார்த்த கதிர் “முன்னாடி உக்காரு தேனு. கீதா பின்னாடி உக்காரு”, என்று சொல்லி விட்டு டிரைவர் சீட்டில் ஏறிக் கொண்டான்.

 

தினேஷ் கீதா அருகருகே அமரட்டும் என்று எண்ணி கதிர் பக்கத்தில் அமர்ந்தாலும் “இவன் பக்கத்தில் உக்காந்துருக்குறது இவன் பொண்டாட்டின்னு இவனுக்கு தெரியுமா? முகத்தில் எந்த காதலாவது இருக்கா?”, என்று நினைப்பு வந்தது. “இப்படி இருக்குறவன் ரூம்ல எப்படி என்னை கட்டி பிடிச்சிட்டு நின்னான்?”, என்று யோசனை வந்தது. விடை தான் தெரிய வில்லை.

 

“என்ன இப்படி இவன் கூட மாட்டி விட்டுட்டாங்க. ஏற்கனவே முறைச்சிட்டு போனான். அத்தானும் அக்காவும் பக்கத்துல உக்காரணும்னு தான் இப்படி செஞ்சிட்டாங்க போல?”, என்று எண்ணிக் கொண்டு வேறு வழியில்லாமல் தினேஷ் அருகில் ஏறி அமர்ந்தாள் கீதா.

 

தினேஷ் கோபமாக அமர்ந்திருந்ததால் காரில் யாருமே பேச வில்லை. ஆள் ஆளுக்கு ஒவ்வொரு யோசனையில் வர அவர்கள் வீட்டு தெருவில் காரை திருப்பும் போது கதிரின் கால் தேன்மொழி மீது பட்டு விட்டது. அதில் அவள் முகம் சிவந்து போனது.

 

 

 

[the_ad id=”6605″]

 

 

 

 

 

“சாரி”, என்று சொல்ல வந்தவன் கண்ணில் பட்டது அவள் முகச்சிவப்பு. “என் அத்தை மகள் வெக்கமெல்லாம் படுறாளா?”,என்று எண்ணிக் கொண்டே மெதுவாக அவள் கரத்தின் மீது தன் கையை வைத்தான் கதிர்.

 

அதிர்ந்து அவன் பக்கம் திரும்பி பார்த்தவள் அவன் கண்களில் இருந்த புரியாத உணர்வில் தலை குனிந்து கொண்டாள். அவளை மேலும் சோதிக்காமல் தன் கரத்தை எடுத்து விட்டு ஒரு பாட்டை போட்டு விட்டு கார் ஓட்டுவதில் கவனம் செலுத்தினான் கதிர்.

 

அதே நேரம் “இவ என் கையை பிடிச்சதுக்கு இப்படி கோப படுறா? அப்ப எனக்கு பிடிச்ச மாதிரி இவளுக்கு என்னை பிடிக்காதா?”, என்று கோபமாக நினைத்துக் கொண்டிருந்தான் தினேஷ்.

 

அவன் கோபம் அவன் முகத்திலே தெரிய அது கீதாவை வெகுவாக பாதித்தது. என்ன சொல்லி அவனை சமாதான படுத்த என்று தெரியாமல் மெதுவாக அவன் கையை பற்றினாள்.

 

அவள் தொடுகையில் அதிர்ந்து போய் திரும்பினான் தினேஷ். இதை அவன் எதிர் பார்க்கவே இல்லை. அவன் திரும்பி பார்த்ததும் படக்கென்று கையை எடுத்து விட்டாள். அதில் அவளைப் பார்த்து மேலும் முறைத்தவன் அவள் கையைப் எடுத்து தன் கையோடு கோர்த்துக் கொண்டு வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அவன் முகத்தில் இருந்த கோபம் குறைந்தது கீதாவுக்கு நிம்மதியாக இருந்தது.

 

நால்வருடைய மனமும் ஒவ்வொரு யோசனையில் இருக்க கார் போக்குவரத்தில் கலந்தது.

 

காதல் தீயை நீர் அணைக்குமா?….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!