Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kaathal Theeyum Kaanal Neerum

அத்தியாயம் 18.2 : காதல் தீயும் கானல் நீரும்!!!

“சரி சரி, எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற? உன்னை விட எனக்கு இந்த செயின் முக்கியம் இல்லை தேனுமா”, என்று சொல்லிக் கொண்டே அதை கழட்டி தன்னுடைய சட்டை பையில் போட்டுக் கொண்டான்.

 

நிம்மதியாக அவனைப் பார்த்து சிரித்தாள் தேன்மொழி. “இப்ப என்னை உனக்கு பிடிச்சிருக்கா தேனு?”

 



Advertisement

“ரொம்ப பிடிச்சிருக்கு”

 

“அதை இவ்வளவு  தள்ளி இருந்து தான் சொல்லணும்னு இல்லை. இப்படி கிட்ட இருந்தே சொல்லலாம்”,என்று சொல்லி அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

Advertisement

 

Advertisement

“அத்தான் கீழ போகலாமா?”, என்று கிறக்கத்துடன் கேட்டாள் தேன்மொழி.

 

“கண்டிப்பா போகணும். இதுக்கு மேல இங்க இருக்க முடியாது. வா வா”, என்று அவசரப் படுத்தினான் கதிர்.

Advertisement

 

“எதுக்கு அத்தான் இவ்வளவு அவசரம்?”

 

“எனக்கு நீ வேணும் தேனு. எனக்கே எனக்குன்னு. அதுவும் இப்பவே”, என்று கண்களில் காதலுடனும்  ஒரு வித தாபத்துடனும் சொன்னவனிடம் அதற்கு மேல் கேள்வி கேட்பாளா என்ன? அவனுடன் அறைக்கு சென்றாள்.

 

இருவரும் உள்ளே சென்றதும் அறைக் கதவை தாளிட்டான் கதிர். பின் அவள் பின்னாக வந்து நின்றான். (Xanax) அவனுடைய மூச்சுக் காற்று அவள் முதுகை சுட ஒரு வித நடுக்கத்தை உணர்ந்தாள் தேன்மொழி.

 

பின்னால் கிடந்த அவள் கூந்தலை விலக்கியவன் அவள் பின்னங்கழுத்தில்…. ஜாக்கெட் மறைக்காத இடத்தில் இதழை அழுத்தமாக பதியச் செய்ய அவள் தேகம் மொத்தமாக கூசியது.

 

 

 

 

அவன் செய்கையை தாங்க முடியாமல் அவன் புறம் திரும்பியவள் அவன் மார்பில் முகம் புதைத்தாள். அடுத்த நொடி அவள் மூடிய இதழ் மீது அவன் முரட்டு இதழ் பதிய அவள் கரங்கள் இரண்டும் உயர்ந்து அவன் கழுத்தில் மாலையாகின. அவன் அணைப்பு இன்னும் இறுக அவள் கரங்கள் அவன் சிகைக்குள் நுழைந்து நெருக்கியது.

 

அவன் செய்கையில் ரத்த ஓட்டம் தாறுமாறாக … அவன் கைகள் அவள் மேனியில் பதிந்து பெண்ணவளை உணர அவன் செய்கையில் விதிர்த்து போனாள்.

 

அவன் செய்கையின் கணம் தாங்க முடியாமல் “அத்தான்…”, என்று கிறக்கத்துடன் அழைத்தாள் தேன்மொழி.

 

“சொல்லுடி…. வேண்டாமா?… பிடிக்கலையா?”, என்று அதே கிறக்கத்துடன் கேட்டான் கதிர். அவள் பதில் சொல்லாமல் போக அவன் உடலில் சிறு இறுக்கம். அதை உணர்ந்தவள் “ஐயோ அத்தான் நான் அப்படி சொல்லலை. ஒரு மாதிரி தவிப்பா இருந்தது அதான். எனக்கு சொல்ல தெரியலை…”, என்று உளறிக் கொட்டினாள்.

 

 

 

 

அதில் மலர்ந்து சிரித்த கதிர் “தெரியாததை சொல்லிக் கொடுக்க தானே நான் இருக்கேன்”, என்று சொல்லிக் கொண்டே விளக்கை அணைத்தவன் அவளை அணைத்துக் கொண்டே கட்டிலில் சரிந்தான். அங்கே இனிய தாம்பத்யம் ஆரம்பமானது.

 

அதிகாலை நான்கு மணி ஆகும் போது தான் அவளை விட்டு நீங்கியவன் அவளை அணைத்துக் கொண்டே தூங்க தொடங்கினான்.

 

அவன் செல்ல செய்கைகளால் உடல் களைத்திருக்க அவளும் தூங்கிப் போனாள். நீண்ட வருடங்களாக அவன் உணராத ஆழ்ந்த தூக்கம் அவனை தழுவியது. தேன்மொழியே அவன் மொத்த சந்தோஷம் என்ற போது அது கிடைத்து விட்டதில் அவனுக்கு அலாதி இன்பம்.

 

பிறந்ததில் இருந்து இது வரை யாராலும் அளிக்க முடியாத நிம்மதியை தேன்மொழி என்ற ஒரு ஜீவனால் மட்டுமே அவனுக்கு அளிக்க முடிந்தது.

 

காலையில் விழிப்பு தட்டிய கதிருக்கு தன் தலை மெத் மெத்தென எதன் மீதோ பதிந்திருக்கும் உணர்வு வந்தது. நேற்றைய பொழுதுகள் அனைத்தும் நொடியில் நினைவில் வர கண்களை திறவாமலே அது எது என்று உணர்ந்தான்.

 

அதன் மென்மையும் வாசனையும் அவள் மார்பில் முகம் புதைத்திருப்பதை அவனுக்கு எடுத்துரைக்க இன்னும் அழுத்தமாக தன் முகத்தை அங்கே பதித்தான்.

 

அதில் கண்களை திறந்த தேன்மொழியோ தான் இருக்கும் நிலை கண்டு வெட்கம் கொண்டு போர்வையை அவனுக்கும் சேர்த்து இழுத்து மூடினாள். அவன் முகத்தை சற்று அசைக்க அதை தாங்க முடியாமல் அவள், அவனை தன்னை விட்டு அகற்ற முயற்சி எடுக்க அதை உணர்ந்தவனோ தான் உணரும் சொர்க்கத்தை விட்டுக் கொடுக்க மனதில்லாமல் இன்னும் அவளுள் புதைந்தான்.

 

வேறு வழி இல்லாமல் அவள் தான் அவனுக்கு விட்டுக் கொடுக்க வேண்டியதானது.

 

அவன் ஏற்படுத்திய உணர்வுக் கொந்தளிப்பில் நடுக்கத்துடன் அவன் சிகைக்குள் ஓடியது அவள் கரம்.

 

ஆனாலும் விடிய போவது புரிய “அத்தான், விடிய போகுது விடுங்க”, என்றாள்.

 

“ஒரு நாள் நேரம் கழிச்சு எழுந்தா ஒண்ணும் ஆயிராது”, என்று சொன்னவன் அவளை பேச விடாமல் அவள் இதழ்களை சிறை செய்திருந்தான்.

 

இப்போது அவன் தேவை என்னவென்று அவளுக்கு புரிய அவன் செய்கைக்கு கட்டுப் பட்டாள்.   அவன் கரங்கள் அவளை உணர, வெட்கம் துறந்து அவனிடம் அடைக்கலாமானாள்.

 

“இவனுக்குள் இவ்வளவு தேடல் இருக்குமா? இத்தனை கெஞ்சலும்

கொஞ்சலும் கதிரிடம் இருந்தா?”, என்று எண்ணி பிரமித்து போனாள்.

 

அவளை மட்டுமல்லாமல் அவள் பெண்மையைக் கொண்டாடினான் கதிர். சில நேரம் அவளுடைய வெட்கத்தையே துறக்க வைத்தான். வில்லன் போல மிரட்டி அவளை திருமணம் செய்து கொண்டவன் இன்று அவள் எதிர்பார்த்த ராஜகுமாரனாக இருந்தான்.

 

அவனை ஓட ஓட விரட்ட என்று எண்ணி திருமணம் செய்து கொண்ட தேன்மொழி அவன் அன்பில் குழைந்து கரைந்து கொண்டிருந்தாள். அவன் தேவைகள் தாபங்கள் என்று அனைத்தையும் தீர்த்து விட்டு அவன் மார்பிலே முகம் புதைத்து

தூங்கி போனாள்.

 

தன்னுள் அடைக்கலமான அவளை இறுக அணைத்தவனும் அவளுடன் தூங்கினான். அவர்கள் இப்போது தூங்க ஆரம்பிக்கும் போது ஆதவன் கிழக்கில் உதயமானான்.

 

காலையில் சீக்கிரமாக குளித்து கிளம்பினான் தினேஷ். ஒற்றைக் கண்ணை திறந்து அவனைப் பார்த்த செல்வா “காலேஜ் போற நானே, தூங்குறேன். இவனைப் பாரேன். கீதா எட்டு மணிக்கு போறதுக்கு இவன் ஆறு மணிக்கே கிளம்பி இருக்கான்”, என்று எண்ணிக் கொண்டு தன் தூக்கத்தை தொடர்ந்தான்.

 

கீதா ஏழரை மணிக்கு கிளம்பி வரவும் அவளுக்கு முன்னே அங்கு வந்து நின்ற தினேஷ் அவளை காதல் பார்வை பார்க்க, அவன் பார்வையை தாங்க முடியாமல் “அத்தை முன்னாடி என்ன பண்ணுறீங்க?”, என்று அவனை கடிந்து கொண்டாள் கீதா. ஆனாலும் வெட்கத்தில் அவள் முகம் சிவந்தது.

 

தினேஷ் மற்றும் கீதாவுக்கு காலை உணவை பரிமாறிய வேணி “இந்தா மா கீதா, மதியத்துக்கு சாப்பாடு இருக்கு”, என்று சொல்லி சாப்பாடு பாத்திரத்தைக் கொடுத்தாள்.

 

இருவரும் சாப்பிட்ட பின்னர் வேணி மற்றும் அப்போது எழுந்து வந்த மதியிடமும் சொல்லி விட்டு கிளம்பினார்கள். அவன் பைக்கில் ஏறி அமர்ந்ததும் மனதுக்குள் ஒரு நடுக்கத்தை உணர்ந்தாள் கீதா. அதனால் கொஞ்சம் தள்ளியே அமர்ந்திருந்தாள். இருவரும் ஒன்றாக செல்வதை பால் வாங்கிக் கொண்டு வரும் வழியில் பார்த்த துரைராசு கண்கள் கலங்கியது.

 

 

 

 

ஊர் எல்லை வரை அமைதியாக இருந்த தினேஷ் அதற்கு மேல் தாங்க முடியாமல் “இன்னும் கொஞ்சம் தள்ளியே உக்காரு. என் மேல பட்டுட்டா நீ அழுக்கா ஆக போற?”, என்று கடுப்புடன் சொன்னான்.

 

அவன் கடுப்பு எதனால் என்று புரிந்தவள் ஒரு தயக்கத்துடன் இன்னும் அவனை நெருங்கி அமர்ந்து அவன் தோளில் கை வைத்துக் கொண்டாள். அதில் அவன் முகமும் மலர்ந்தது. அதன் பின் இருவரும் எதை எதையோ பேசிய படி சென்றார்கள்.

 

தூங்கி எழுந்து கீழே வந்த அன்னம் கண்ணில் பட்டது சோகமாக அமர்ந்திருந்த வேணி தான்.

 

“என்ன மருமகளே, ஏதோ கவலையா இருக்குற மாதிரி இருக்கு”

 

“ஆமாங்க அத்தை. எப்பவும் கதிரும் தேனும் சீக்கிரம் எழுந்து வந்துருவாங்க. இன்னைக்கு ரெண்டு பேரையும் காணும். ஏதாவது சண்டையா இருக்குமோ? அவன் முகம் வேற சரியே இல்லை”, என்று சோகமாக சொன்னாள் வேணி.

 

“இன்னும் கீழ வராததுக்கு சண்டை தான் காரணமா இருக்கணுமா என்ன? நைட்டு நேரம் கழிச்சு தூங்கிருக்கலாம். அவங்க வயசைக் கடந்து வந்தவ தானே நீ? புரியும்னு நினைக்கிறேன்”

 

“அத்தை”, என்று ஆவலாக அழைத்தாள் வேணி.

 

“அவங்க வந்த பிறகு உனக்கே புரியும். சரி குஞ்சு காலேஜ் கிளம்பிட்டானா?”

 

“ஐயையோ அவன் எந்திக்கவே இல்லை போல? இவனோட… என் மொத்த சத்தும் இறங்கிருது அத்தை. அவனை எழுப்பிட்டு வந்து உங்களுக்கு காபி தரேன்”, என்று சொல்லி விட்டு அவனை எழுப்ப சென்றாள் வேணி.

 

எவ்வளவு யோசித்தும் இன்று தன்னால் சௌமியை எதிர்கொள்ள முடியாது என்று புரிந்ததால் இன்றைக்கு லீவ் போட முடிவெடுத்து தான் நன்கு உறங்கிக் கொண்டிருந்தான் செல்வா.

 

“குஞ்சு, டேய் குஞ்சு. இன்னுமா நீ எந்திக்கல? மணி என்ன தெரியுமா?”, என்று கத்தினாள் வேணி.

 

அவள் குரல் கேட்டும் கேட்காதது போல படுத்துக் கிடந்தான் செல்வா.

 

“காது கேக்கலையா டா? குஞ்சு நேரம் ஆச்சு. இப்ப நீ கிளம்புனாளே லேட்டா தான் போவ. இப்ப நீ எந்திக்கல தண்ணியை மூஞ்சில ஊத்திருவேன்”

 

“எம்மாவ், நீ செஞ்சாலும் செய்வ”, என்று சொல்லிக் கொண்டே எழுந்து அமர்ந்த செல்வா “அம்மா அதான் நேரம் ஆகிருச்சே. நான் வேணும்னா நாளைக்கு போறேனே?”, என்றான்.

 

“கொன்னுறுவேன் டா கொன்னு. கல்யாணத்துக்கே ரொம்ப நாள் லீவ் எடுத்துட்ட. இப்ப எந்திச்சு கிளம்பு. நவீன் வேற உனக்காக காத்துட்டு இருப்பான்”

 

 

 

 

“அதெல்லாம் அவன் கிட்ட வர மாட்டேன்னு சொல்லிட்டேன்”, என்று மனதில் நினைத்துக் கொண்டு “அம்மா பிளீஸ் மா, இன்னைக்கு ஒரு நாள் மட்டும்”, என்று கொஞ்சலாக கேட்டான்.

 

“இரு உன் அப்பாவை வர சொல்றேன். அவர் கிட்டயே நீ பேசிக்கோ”, என்று சொன்ன வேணி “என்னங்க”, என்று சத்தம் கொடுத்ததும் “இந்த விருமாண்டிக்கு அந்த ராட்சசி பரவால்ல”, என்று முணுமுணுத்து விட்டு “சரி சரி காலைலே பஞ்சாயத்தைக் கூட்டாதே. நான் கிளம்புறேன்”, என்று சொல்லி விட்டு குளிக்க சென்றான்.

 

செல்வா காலேஜ் சென்ற பின்னர் மதியும் காலை உணவை முடித்து விட்டு தோட்டத்து பக்கம் செல்ல அன்னம் தன்னுடைய அறைக்கு சென்று விட்டாள்.

 

அப்போது வரைக்கும் கதிரும் தேன்மொழியும் வந்த பாடில்லை. அடுப்படியில் வேலை செய்வதும் மாடியில் ஒரு கண்ணுமாக தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள் வேணி.

 

இரவு ஒரு மணி வரை கதை பேசி, பின்னர் காலையில் ஆறு மணிக்கு கண்ணயர்ந்தவர்கள் ஒன்பது மணிக்கே எழுந்து வந்து விடுவார்களா என்ன?

 

காதல் தீயை நீர் அணைக்குமா?…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!