Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorizedகாதலாகுமோ உறவு

அத்தியாயம் 2

அத்தியாயம் 2

“அகல்யா செல்வம் ரெண்டு பேரும் வீட்ட போய் சுத்தி பாருங்க”என பர்வதம் கூற

அகல்யாவை செல்வம் திரும்பி பார்த்தான்.

அவள் தலை குணிந்தே நின்று கொண்டு இருந்தாள்,செல்வம் அகல்யா அகல்யா என இரண்டு முறை கூப்பிட்டும் அவள் காதுகளில் விழவில்லை.



Advertisement

செல்வம் அவளின் கையை லேசாக பிடித்தான்.

அகல்யா சடாரென்று கையை உதறினாள்.செல்வத்திற்க்கு மனம் துவண்டு விட்டது. அவன் வா போகலாம் என்றான்.

அவள் சரி என்று தலையசைத்து பின்னே சென்றாள்.

Advertisement

அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்து மாடிக்கு வந்தனர்.

Advertisement

“நம்ம ரூம் மேல தான் இருக்கு,உனக்காக நான் ஸ்பெஷலா ரெடி பண்ணி இருக்கேன்.”செல்வம் கூற, அவளிடம் எந்த பதிலும் இல்லை.

“அகல்யா நம்ம ரூம் பார்க்க பிளஸன்டா இருக்கட்டும்னு க்ரீன் கலர் பெயின்ட் பண்ணிருக்கு ,உனக்கு புடிச்சிருக்கா??” அகல்யாவிடம் எந்த அசைவும் இல்லை.

கீழே இருந்து அம்மாவின் குரல் கேட்டது,”அகல்யா வீட்டுக்கு போகனும்டா கீழ வா”.

Advertisement

“இப்ப தான் வந்ததே அதுக்குல்ல கீழ வான்னு கூப்பட்ற ஏன் மா “என முனுமுனுத்தான் செல்வம்.

“சரி மா, வா அகல்யா கீழ போகலாம்”,இப்பொழுதும் பதில் இல்லை.

“ ம்ம் ,ம்ஹும்,வரேன், வரல, சரி, இல்லை ஏதாச்சும் சொன்னா இவ என்ன கொறஞ்சுடுவாளா,நல்லா மேக்கப் போட்ட ரோபோ பொம்மை மாதிரி இருக்கா பாரு, மண்டைலேயே நாலு வைக்காலாமான்னு இருக்கு.”என்று செல்வம் முணுத்து கொண்டே பின்னால் சென்றான்.

இப்பொழுது அகல்யாவின் வீட்டில், மாலை சிற்றுண்டி, இரவு உணவு என தடபுடலாக தயாராகிக் கொண்டடிருந்தது.

மாப்பிள்ளையும், பெண்ணும் வந்ததும், தெருவில் மண்ணாலேயே வாசல் அமைத்து செம்மண் இட்டு கோலம் போட்டு அதன் மீது மணப்பென்,மாப்பிள்ளையை நிற்க வைத்து ஆரத்தி எடுக்க அக்கா தங்கைகள் அனைவரும் போட்டியிட்டு கொண்டு, ஆரத்தி எடுத்த பின்பு,” மாமா தட்டுல பலமா போட்டா தான் உள்ள போகலாம் இல்ல உள்ள போக முடியாது” எனக்கூறி அனைவரும் கண்ணடித்து சிரித்தனர்.

மச்சினிகள் முன் கெத்து காட்ட செல்வம் கத்தையாக போடலாம் என எண்ணி பாக்கெட்டுக்குள் கைவிட்டா, ஒரே நோட்டு தான் தயங்கி தயங்கி போட்டான்,

“என்ன மாமா கத்தையா போடுவார்ன்னு பார்த்தா ஒத்தையா போட்றாரு” என ஒரு குட்டி வாண்டு கெளன்டர் குடுக்க ,

“இன்னும் எதிர்பார்கிறோம் மகாபிரபு”, இப்ப யாருடா இது பக்கத்துல இருந்து குரல் வருது, செல்வம் திரும்ப அகல்யாவின் கமெண்ட் தான் அது,ஓஓஓஓஓ மகாராணி பேசலாம் செய்வாங்களோ என பார்வையாலே சிரித்தான், சரி இவளுக்கு கேப் விடக்கூடாது நம்மளும் ஓண்ணு போடுவொம்.

“எனக்கும் காசு குடுக்கணும்னு தான்மா ஆசை.ஆனால், இப்ப என் கிட்ட இருக்கிறது எல்லாமே உங்க அக்காவுக்காக நான் வச்சிருக்க லவ் தான் அத உங்களுக்கு குடுத்தா என் பொண்டாட்டி கோச்சிப்பாளே, சாரி…….”எனக்கூறி கிண்டலாக சிரித்தான்.

“ஐயோ!!!!!!முடியலடா சாமிமிமி……. என அனைவரும் சிரிக்க, மாமா நீங்க அல்டிமேட்,யு மே கோ நவ்.”எனக்கூறி இருவருக்கும் திலகமிட்டு உள்ளே அழைத்து சென்றனர்.

செல்வம் தனியாக அறையில் அமர்ந்து கொண்டிருக்க அகல்யா எங்கு சென்றாள் என தெரியவில்லை,நேரமோ ஆமைபோல் சென்று கொண்டிருக்க,அகல்யாவின் தம்பி வந்தான்.

“மாமா,வாங்க நாம வெளிய போய் கொஞ்சம் நடப்போம் ரூம் ரெடி பண்ண போறாங்களாம்.”

இருவரும் வெளியே நடக்க ஆரம்பித்ததும்,சங்கர் தன் மாமாவிடம்,”மாமா அக்கா உங்க கிட்ட பேசறாளா??”

“எங்கப்பா உங்க அக்கா பேசறா, கல்யாணம் பிக்ஸ் ஆனதும் எப்படியோ நம்பர் வாங்கி மெஸேஜ் பண்ணா உன் அக்கா ரிப்ளையே பண்ணல, சரி கொஞ்சம் ரொமான்டிக்கா ட்ரை பண்ணுவோம்னு அழகி, செல்லம் , அப்படின்னு மெஸேஜ் பண்ணா அதுக்கும் ரிப்ளை இல்ல, சரி கால் பண்ணா எப்பையாச்சும் போன் எடுப்பா அப்பையும் சாரிங்க நான் வேலையா இருக்கேன்னு கட் பண்ணிடுவா, இப்படியே நிச்சயதார்த்தமும் முடிஞ்சது,அப்பறமாச்சும் பேசுவான்னு பார்த்தா இல்ல,சரி போன் வாஙாகி குடத்தா கொஞ்சம் மனசு மாறும்னு பார்த்தா அதுவும் இல்ல.”

“ஒரு நாள் லவ் யூ டின்னு மெஸேஜ் அனுப்பிட்டேன், அத்தோட ப்ளாக் பண்ணவதான் இன்னும் நான் ப்ளாக்லிஸ்ட்ல தான் இருக்கேன்.”என பொலம்பி தீரத்தான் செல்வம்.

“மாமா, அக்காக்கு கல்யாணத்துல துளிகூட இன்ட்ரஸ்ட் இல்ல, அப்பா கம்பள்ஷன்ல தான் ஒத்துகிட்டா.”

“அதான் நல்ல பளபளன்னு உன் அக்கா முகத்திலயே தெரியுதேப்பா நீவேற சொல்லுனுமா”

“மாமா,ஆன நீங்க செம மாமா எங்க அக்கா சீண்டவே இல்ல,ஆனா நீங்களும் விடவே இல்லையே உங்க காண்பிடன்ஸ் செம!!!!”

“அலைஞ்சு திரியரவனுக்கு தான் பொண்ணு கிடச்சி கலயாணம் பண்றதோட வலி தெரியும், அதெல்லாம் இப்ப சொன்னாலும் புரியாது,அதவிடு உங்க அக்கா அல்டிமெட்டா ஒண்ணு பண்ணா அத சொன்னா நீ அசந்து போய்டுவ”

“நிச்சயம் முடிஞ்சி ஒரு ரெண்டு நாள் கழிச்சு உங்க அக்கா நைட் பத்து மணிக்கா எனக்கு கால் பண்ணா எனக்கு செம்ம சந்தோஷம் இருந்தாலும் கொஞ்சம் டெளட் தான் சரின்னனு போன் எடுத்து பேசுனா, நான் உங்க கிட்ட ஒரு ஹெல்ப் கேக்கலாமா, இந்த கல்யாணம் பிடிக்கலன்னு அப்பா கிட்ட சொல்றிங்களா ????”எனக்கு கோபம்னா கோபம் ஏங்க நீங்க படிச்சவங்க தான??? இப்ப எப்படி நிறுத்த முடியும்,உங்க அப்பாகிட்ட நான் நாளைக்கே வந்து பேசுறேன்னு சொல்லி கட் பண்ணிட்டேன்.அதுக்கு அப்புறம் நானும் அத பத்தி பேசல உன் அக்காவும் எதுவும் பேசல,ஆமா நான் எவ்ளோ பெரிய விஷயம் சொல்ரேன் நீ என்னப்பா நார்மலா இருக்க?????” என சந்தேகமாக பார்த்தான் செல்வம்.

உடனே தனக்கு ஒன்றுமே தெரியாதது போல முகபாவனையை அதிர்ச்சியானது போல மாற்றிக்கொண்டான்.

“கொஞ்ச நேரத்துல நான் மாட்டியிருப்பேன் போல”என முனுமுனுத்து கொண்டான் சங்கர்.

“மாமா எனக்கு அதிர்ச்சில பேச வரல,அதான்.”என ஒரு வழியாக சமாளித்தான்.

“சரி,சரி,எப்படியோ உங்க அக்காவ கல்யாணம் பண்ணியாச்சு எப்படி கரெக்ட் பண்றது அதான்டா புரியல”

“மாமா, நீங்க கல்யாணம் பண்ணதே ஆச்சரியம் தான்,அவ அப்பா அம்மாக்கு பயப்படுவா ஸோ கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டா இனி உங்க சமார்த்தியம்”

“சரி பார்ப்போம்……….”

சங்கர் மாமாவ கூட்டிட்டு வா என அகல்யாவின் தாய் அழைக்க , வாங்க மாமா போகலாம் இல்லனா இவங்க வந்து க்ளாஸ் எடுக்க ஆரம்பிச்சுடுவாங்க.

இருவரும் உள்ளே செல்ல அகல்யாவின் தாய் மாப்பிள்ளையின் கையை பிடித்து பூஜை அறைக்குள் அழைத்து சென்றார்.

“மாப்பிள்ளை உங்க கிட்ட கொஞ்சம் பேசலாமா??”

“சொல்லுங்க அத்தை.”

“ இல்ல,அகல்யா உங்க கிட்ட கொஞ்சம் கோபமா நடந்துக்றா,அவ உங்க கிட்ட மொகங்குடுத்து பேசல, அதெல்லாம் தப்பா நினைக்காதிங்க.அவளுக்கு சீக்கரமா கல்யாணம் பண்ணிட்டோம்னு கோபம்,அவள் நல்ல பொண்ணு போக போக உங்கள புரிஞ்சிப்பா” என கண்கலங்கினார்.

“அச்சோ!!!அத்தை எனக்கு புரியுது நான் ஒண்ணும் நினைக்கல.”

“அவள நல்லா பாத்துக்கோங்க மாப்ள”என சொல்லும்போதே கண்களில் நீர் வழிந்தது.

“சரி,சரி நீங்க போங்க நல்ல நாள் அதுவுமா உங்கள அழுது கஷ்ட படுத்துரேன்.”

செல்வத்திற்கு தனது பொறுப்பு அதிகமானது போல உணர்ந்தான்.

அவரின் கண்ணீர் அவனை வெகுவாக பாதித்தது.

அகல்யாவிடம் பேசியே ஆக வேண்டும் என எவ்வளவு முயன்றும் அவனால் அவளை தனியாக சந்திக்க முடியவில்லை. இப்படியே இரவு வேளை வந்துவிட்டது.

“ஏஏஏஏ !!!!! குட்டிஸெல்லாம் மேல போங்க போய் படுங்க, சங்கர் மாமாவ குளிச்சு ரெடி ஆக சொல்லு,அப்பறமா நீயும் மேல போய் படுத்துக்க,அகல்யாவ எல்லாரும் ரெடி பண்ணிடுங்க லேட் பண்ணாதிங்க”என லட்சுமி அம்மா அடுக்கி கொண்டே போனார்.

“சரிம்மா…… போதும் போதும் என்னை சொல்லிட்டு இப்ப உன்னை பார்த்தா தான் டென்ஷனா இருக்க.”என அகல்யாவின் தந்தை சிரித்தார்.

“நான் என்ன பண்றது எல்லாரும் பேசிட்டே டைம் போறதே தெரில யாருமே நவுர மாட்ராங்க,மாப்ள வேற உள்ள வெயிட் பண்ணிட்டோ இருப்பாரு… அகல்யாவ வேற சமாளிக்கனும், நான் டென்ஷனா தான் இருக்கேன்.”என சலித்துக்கொண்டார் இலட்சுமி.

இங்கே வெளியே இவ்வளவு பரபரப்பு இருக்க அங்கே உள்ளே செல்வம் தனியாக அறைக்குள்.

அவனுக்கு மனம் படபடத்தது அகல்யா வர அவன் வெகுவாக காத்திருந்தான்.

அறை எங்கும் பூவின் வாசம்,பழம் பூ என அறை முழுதும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதை ரசிக்க கூட மனமில்லாமல் செல்வம் தவித்தான்.

அவன் மனம் பல யோசனைகள் செய்து கொண்டு இருந்தது.

அகல்யாவிடம் முதலில் பேசலாம். அவள் மனதில் என்ன தான் இருக்கிறது என அறிய வேண்டும்.

அவன் யோசித்துக்கொண்டிருக்க அறையின் கதவு திறந்தது.

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!