செல்லமடி நீ எனக்கு அத்தியாயம் -8
அத்தியாயம் – 8:
கதிரவன் சிறகு இல்லாமல் பறந்துக்கொண்டிருந்தான். குருவிற்கு கால் செய்து ரஞ்சனி அவன் காதலை ஏற்றுக் கொண்டதை பற்றி கூறினான்.
“கதிரவா இனிமேலாது ஒழுங்கா இரு உனக்குனு இப்போ ஒரு பொண்ணு வந்துட்டா, பொறுப்பா நடந்துக்கோ”.
” அந்த பொண்ணுக்கு பிடிச்சது பிடிக்காதது கேட்டு தெரிஞ்சிக் கிட்டு அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கோ சரியா “என்றான் குரு.
Advertisement
“நான் அவளுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்குறேன் மச்சான் “என்றான் குரு.
மதியம் ஒரு மணி அளவில் கதிரவனின் போன் இசைத்தது. அவன் அதை எடுத்து “ஹலோ யாரு பேசுறது “
“நான் அனுரஞ்சனி பேசுறேன் “
Advertisement
“அனுரஞ்சனியா “என்றான் யோசனையுடன்.
Advertisement
“கதிர் நான் தான் ரஞ்சனி, என் முழுப் பெயர் அனுரஞ்சனி “என்றாள்.
“ஹாய் ரஞ்சனி, நீ போன் பண்ணது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. இது தான் உன்னோட போன் நம்பரா , சாப்பிட்டையா “
“இது என்னோட போன் இல்லை. பிரண்ட் ஓட போன். என் வீட்டில ரொம்ப ஸ்ட்ரிக்ட் போன்லாம் வாங்கி தரமாட்டாங்க.”
Advertisement
“அப்பறம் எப்படி நான் உங்கிட்ட பேசுறது, நான் வேணுனா போன் வாங்கி தரவா”
“அதுலாம் எதும் வேண்டாம், என் பிரண்ட் ஓட போன்ல இருந்து டெய்லி இந்த டைம்க்கு நானே கால் பண்ணுறேன் ஓகே வா “
“ம்ம் சரி, சாப்டையா இல்லையா”
“உங்க கூட பேசிட்டே சாப்பிட்டுட்டு இருக்கேன் “.
” நீங்க சாப்டீங்களா “
” இனிமேல் தான் ஹோட்டல்ல போய் சாப்பிடணும் “
” ஏன் ஹோட்டல்ல போய் சாப்பிடணும் வேலைக்கு வரும்போது டிபன் பாக்ஸ் கொண்டு வரமாட்டின்களா “.
” ஐயோ ரஞ்சனி நான் ஸ்டார் வாட்ச்ல வேலை பார்க்கல அந்த கடையே எங்களோடது தான் “.
“ஓ அப்படியா சாரிப்பா நான் உங்களை அந்த கடையில அடிக்கடி பார்த்திருக்கேனா அதான் நீங்க அந்த கடைல வேலை பாக்குறீங்கனு நெனச்சிட்டேன் “.
” பரவால்ல ரஞ்சனி விடு, நான் அப்பாவ சாப்பிடுவதற்கு அனுப்புவதற்காக வருவேன் “
” அப்பாவும் அம்மாவும் அக்காவை பார்க்க கனடா போய் இருக்காங்க அதுனால நான் தான் கடைய பாத்துக்கிறேன் “.
” நீங்க மட்டும் வீட்ல தனியாவா இருக்கீங்க கூட யாருமே இல்லையா அப்போ சாப்பாடுக்கு என்ன பண்ணுவீங்க”.
” ஹோட்டல்ல தான் ரஞ்சனி மூணு வேலையை சாப்பிட்டு இருக்கேன் “
” ஏன் ஹோட்டலில் சாப்பிடுறீங்க நீங்களே வீட்ல சமைச்சு சாப்பிட வேண்டியதுதானே “.
” எனக்கு சமைக்க தெரியாது ரஞ்சினி அதனாலதான் ஹோட்டலா வாங்கி சாப்பிட்டுட்டு இருக்கேன் “
” என்ன கதிர் சொல்றீங்க ஒரு இட்லி தோசை கூட செய்ய தெரியாதா “.
” இட்லி, தோசை எல்லாம் செய்ய தெரியும் ஆனா மாவாட்ட தெரியாது மாவுக்கு நான் என்ன பண்றது “.
” கடைகளில் தான் பாக்கெட் மாவு விக்கிறாங்க இல்ல கதிர்,அதை வாங்கி இட்லி இல்ல தோசை செஞ்சு சாப்பிடுங்க “.
” மூணு வேளையும் இட்லி தோசையை சாப்பிட முடியுமா ரஞ்சனி “.
” சின்ன குழந்தையா கதிர் நீங்க காலையில நைட் இட்லி தோசை செஞ்சுக்கோங்க மத்தியானம் வீட்ல ரைஸ் செஞ்சு சாப்பிடுங்க “.
” மூணு வேலையும் ஹோட்டலே சாப்பிட்டு தேவை இல்லாம உடம்பை கெடுத்துக்காதீங்க மணி வேஸ்ட் பண்ணாதீங்க கொஞ்சமாவது சமைக்க கத்துக்கோங்க கதிர் “.
அனுவின் அக்கறை கதிருக்கு மிகவும் பிடித்திருந்தது. காலையில் அனு காலேஜ்க்கு போகும் போது பார்ப்பது, மதியம் போனில் பேசுவது, மாலை காலேஜ் முடிந்து வரும் போது தூரமா இருந்து பார்ப்பது இப்படியே ஒரு மாதம் ஓடி விட்டது. கதிரவனுக்கு ரஞ்சனியை பார்ப்பதும் பேசுவதும் மிகவும் மகிழ்ச்சியை அளித்தது.
வழக்கம் போல் மதியம் அனு கதிரவனுக்கு கால் செய்தால்
“கதிர் நாளைக்கு நீங்க நாளைக்கு ப்ரியா நம்ம மீட் பண்ணலாமா.”
“நானே சொல்லணும் நெனச்சிட்டு இருந்தேன் நீயே சொல்லிட்ட எங்க மீட் பண்ணலாம் எப்ப மீட் பண்ணலாம்”.
“நாளைக்கு சனிக்கிழமைல எனக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு கிளாஸ் முடிஞ்சுதும் மீட் பண்ணலாம் உங்க கடையில “.
கடையிலையா,ம்ம் ஆமாம் கிளாஸ் முடிஞ்சதும் நானே வாரேன் என்றாள்
சரி வா நான் வெயிட் பண்ணுறேன் என்றான் .
அனு கதிரவன் காதலிக்க ஆரம்பித்த பின் இப்பொழுது தான் முதல் முறையாக நேரில் பேசுக்கொள்ள போகிறார்கள்.
கதிர் அனுவிடம் என்ன பேசுவது எப்படி பேசுவது என்று இரவு முழுவதும் யோசித்துக் கொண்டே இருந்தான்.
மறுநாள் காலை பஸ் ஸ்டாப்பில் அனுவை பார்ப்பதற்காக நின்றிருந்தான். அனு கதிரவனை பார்த்து 11 மணிக்கு வருவதாக சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.
கதிரவன் 11 மணி எப்பொழுது ஆகும் என்று காத்துக் கொண்டிருந்தான். 11 மணி கடந்தும் அனு வராததால் கடையின் வெளியில் எட்டி பார்த்துக் கொண்டுடே இருந்தான்.
அனு 12மணிக்கு கதிரவனின் கடைக்கு சென்றாள். சாரி கதிர் கிளாஸ் முடிய டைம் ஆயிட்டு, 11மணிக்கு கிளாக் முடிஞ்சுரும் நெனச்சேன் 11.30 வரைக்கும், சாரி கதிர் என்றாள்.
பரவாயில்லை வா வந்து உக்காரு இந்த சேர்ல. என்ன கடைல வேற யாரும் இல்லையா என்றாள். கடைல வேலை பாக்குறபையன் டி குடிக்க போயிருக்கான் இப்போ வந்துருவான்.
நீ டி காபி ஜுஸ் என்ன குடுக்குற சொல்லு வாங்கிடு வாரேன். இல்ல இல்ல எதும் வேண்டாம் என்றாள்.
அப்பொழுது கருப்பசாமி உள்ளே வந்தான். வாங்க அண்ணி எப்படி இருக்கீங்க என்றான்.
அனு கதிரவனை பார்த்தால், அண்ணி நான் இந்த கடைல தான் ஒரு வருசமா வேலை பாக்குறேன். படிப்பு வரல அதான் இங்க வேலைக்கு வந்துட்டேன். அப்பறம் நீங்களும் அண்ணாவும் லவ் பண்ணுற விஷயம் எனக்கு தெரியும். நீங்க ஓகே சொன்ன அன்னைக்கே அண்ணா உங்கள கட்டி இவதான் உன் அண்ணின்னு சொன்னாங்க அனு சிரித்தாள் அவனை பார்த்து சிரித்தாள்.
கருப்பு நீ கடைய பார்த்துக்கோ நாங்க உள்ள பேசிட்டு இருக்கோம். சரி அண்ணே நீங்க போங்க. ரஞ்சனி வா போலாம் என்று அவளை அழைத்து சென்றான் கடையின் உள்ளே இருந்த குடோனுக்குள். அனு உள்ளே வந்து சுத்தி பார்த்துக் கொண்டு இருந்தால் கதிரவன் கதவை முடிவிட்டு வந்தான்.
கதிர் அனுவை பின்னால் இருந்து கட்டி பிடித்தான். அனு அதிர்ச்சியில் உறைந்து விட்டாள்.அனுவிடம் அசைவில்லை என்றதும். அவள் தோள் தொட்டு திருப்பினான்.
அனுவின் கண்களை பார்த்து முண்டகண்ணி பயப்படாதடி உன்ன எதும் பண்ண மாட்டேன் என்றான் சிரித்துக் கொண்டே
கதிரவனின் கைகுள்ள இருந்த அனு நெளிய ஆரம்பித்தால். லூசு நெளியாதடி நான் கைய எடுத்துறேன் என்றான். பின் இருவரும் கீழே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.
இது என்ன ரூம். இதுவா குடோன். குடோன் சொல்றீங்க காலியாயிருக்கு. முன்னாடி இந்த கடைய ஆரம்பிக்கும் போது இந்த சைடுலையும் நம்ம கடை மட்டும்தான் இருந்ததா அப்போம் நிறைய ஸ்கூல் நோட்டு புக்கு இதெல்லாம் நம்ம கடையில வந்து வாங்குவாங்க சோ நிறைய ஸ்டாக் இந்த குடோன்ல இருக்கும். இப்ப கடைகள் நிறைய வந்துட்டனால நம்ம கடைல வியாபாரம் குறைஞ்சிடுச்சு.
கடைக்கு ஒரு நாள் வருமானம் எவ்வளவு வரும். என்ன ஒரு 500 1000 வரும் ஒரு நாளைக்கு. இவ்வளவு பெரிய கடை சொந்தமா வச்சிருக்கீங்களே இவ்வளவு இடமும் காலியாக இருக்கு நீங்க கடைய டெவலப் பண்ணலாம்ல வேற ஏதாவது சரக்கு வாங்கி வச்சு பாத்துக்கலாம்ல.
இது அப்பா ஓட கடை அவரு என்ன வேணா பண்ணிட்டு போறாரு நமக்கு என்ன. உங்க அப்பா வந்ததுக்கு அப்புறம் உங்க அப்பா இந்த கடையை பார்த்துப்பாங்க நீங்க என்ன பண்ண போறீங்க.
அத பத்தி எல்லாம் இன்னும் யோசிக்கவே இல்ல ரஞ்சனி. அரியர் முடிச்சுட்டு வேலைக்கு போகலாம் அதில் எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல.
அடுத்து என்ன பண்ணலாம்னு இனிமேல் தான் யோசிக்கணும்.
சரி அம்மன் கோவில் திருவிழாக்கு நீ வருவியா என்றான் கதிர். எங்க வீட்டுல எல்லாருமே வருவோம் அன்னைக்கு என்றாள்.அப்போ உன் பேமிலி மெம்பெர்ஸா எனக்கு காட்டு சரியா. அவங்க முன்னாடி வச்சு எதுவும் என்கிட்ட பேசிராதீங்க. ம்ம் ஓகே உன்ன பாக்க மட்டும் செய்யுறேன் பேச மாட்டேன் என்றான்.
அம்மன் கோவில் திருவிழாவிற்கு அனு அவளின் அம்மா அப்பா அண்ணா அண்ணி தங்கை என்று அனைவருடனும் கோவிலுக்கு வந்தாள் . கதிர் அவனது நண்பர்கள் செந்தில், மணி இவர்களுடன் வந்திருந்தான். கோவில் கூட்டம் அதிகமாக இருந்தது.
தூரத்தில் அனு குடும்பத்துடன் வந்து கொண்டருந்தால்.அனுவை பார்த்ததும் கதிர் உறைந்து போய் விட்டான். அனு பட்டுசேலை உடுத்தி தலை நிறைய மல்லிகைப்பூ வைத்து மிகவும் அழகாக இருந்தான். அவனின் கண்கள் அனுவை விட்டு விலகவில்லை.
அவர்களுக்கு சற்று இடைவெளி விட்டு கதிர் சென்றான். கோவிலுக்கு உள்ளே சென்று அனைவரும் சாமி கும்பிட்டு விட்டு பிரகாரம் சுற்ற சென்று விட அனு மட்டும் கண்முடி கடவுளிடம் வேண்டிகொண்டிருந்தாள்
திடீரென யாரோ இவள் நெற்றியை தடவியது போல் தெரிய கண் விழித்து பார்த்தால். அருகில் யாரும் இல்லை நெற்றியை தொட்டு பார்த்தால் அதில் குங்குமம் வைக்க பட்டு இருந்தது.இது கதிரின் வேலை தான் என்று புரிந்துவிட்டது.
அனு தனியாக பிரகாரம் சுற்றி வர கதிர் அவள் அருகில் வந்து செல்லம் பட்டுசேலைல நீ ரொம்ப ரொம்ப அழகா இருக்கடி என்று கூறிவிட்டு. அவள் கையில் ஒரு ரோஜாப்பூவை தந்து விட்டு ஓடி விட்டான். அவள் அம்மா பூ ஏது என்று கேட்டதுக்கு பூசாரி கொடுத்தார் என்று கூறிவிட்டால்.
அனைவரும் மண்டபத்தில் அமர்ந்து பேசிகொண்டிருந்தனார்.அப்பா வாங்க போய் ராட்டிணம் சுத்தலாம் என்றாள் சுஜா. அப்பா ரொம்ப பசிக்குது முதல்ல சாப்பிட மிளகாய்பஜ்ஜி வாங்கி தாங்க என்றாள் அனு.என்னடா இன்னும் அனு எதும் கேக்கலயேன்னு பாத்தேன் கேட்டுடா என்றான் அனுவின் அண்ணன். ரைஸ்மில்லு எப்போ பாத்தாலும் அரைச்சிட்டே இருக்குற வாய் வலிக்காதாடி உனக்கு என்றாள் சுஜா.
அனு சுஜாவை முறைத்து விட்டு. அப்பா பாருங்கபா என்ன கிண்டல் பண்ணிட்டே இருக்குற. இருடி நான் பஜ்ஜி சாப்பிட்டும் எனக்கு கொஞ்சம் குடுனு கேப்பாள அப்போ வச்சிக்கிறேன் உன்ன என்றாள் அனு.
அனுமா காரமான ஐட்டம் இல்லாம வேற என்ன வேணுமோ கேளு அப்பா வாங்கி தாரேன். இப்போ தான் உனக்கு வயிறு வலியும்,எரிச்சலும் இல்லாம இருக்கு இன்னும் கொஞ்சநாள் போகட்டும் அப்பறமா மிளகாய்பஜ்ஜி சாப்பிடலாம் சரியா.
மிளகாய்பஜ்ஜிய பார்த்ததும் தான் அவளுக்கு பசியே வந்தது. நீங்க அதையே வாங்கி தரமாட்டேன்னு சொல்லுறீங்களே அப்பா என்றான் கார்த்திக். அனு கேட்டான்னு வாங்கி தந்துட்டு நைட் புள்ள வயிறு வலிக்குதுனு அழுதுட்டு இருப்பா. அனுமா அப்பா சொன்ன கேக்கணும் பஜ்ஜி வேண்டாம் வா உனக்கு ஐஸ்கிரீம் வாங்கி தாரேன் சரியா. ம்ம் சரிப்பா என்றாள் அனு.அவள் ஐஸ்கிரீம் சாப்பிடும் அழகை தூரத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்தான்.
வளையல் கடையை பார்த்ததும் அனு சுஜா கீதா மூவரும் அங்கு சென்றுவிட்டனர். சாந்தி நீ அவங்களுக்கு வேண்டியதை வாங்கி தா நான் தெரிஞ்சவர் ஒருத்தரை பாத்துட்டு வந்துறேன். கார்த்திக் நீ அவங்க கூட இரு என்றார்.
அனுவிற்கு பிரேஸ்லெட் என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் அங்கிருந்த பிரேஸ்லெட்டுகளை பார்த்து தன்னிடம் இல்லாத டிசைனாக எடுத்து கொண்டிருந்தாள். சாந்தி அனுவிடம் பாப்பா உங்கிட்ட நிறைய பிரேஸ்லெட் இருக்கு இப்போவும் அதையே கேக்காத நான் வாங்கி தரமாட்டேன்.
கிலிப், பாண்ட் ஏதாவது வாங்கு என்றார். அம்மா இந்த டிசைன் என்கிட்ட இல்லமா இதை மட்டும் வாங்கி தாங்க ப்ளீஸ்.சொன்ன பேச கேளு அனு உங்கிட்ட இதே மாதிரி நிறைய இருக்கு வேண்டாம். அனுவின் முகம் வாடி விட்டது.வேற எதையும் அனு வாங்க வில்லை.
அனு சோகமாகவே வந்துக் கொண்டிருந்தாள் அப்பொழுது யாரு ஒருவன் அவளை இடித்துவிட்டு சாரி என்று சொல்லிவிட்டு போய் விட்டான். சிறிது நேரம் கழித்து மீண்டும் அதே ஆள் அனுவை இடித்து விட்டு சென்றான். அனு திரும்பி பார்த்து முறைத்து விட்டு சென்றால். கீதா என்ன என்று கேட்டால் இடிச்சிடு போறான் அண்ணி என்றாள். இவனுங்கலாம் இதே வேலையா தான் தெரியுரானுக நீ வா போலாம் என்றாள் கீதா.
சற்று நேரம் கழித்து ஏதோ சத்தம் கேட்டு அனைவரும் திரும்பி பார்த்தனர். அங்கு கதிர் அனுவை இடித்துவிட்டு சென்ற ஆளை போட்டு அடித்துக் கொண்டிருந்தான். கதிர் அடித்ததில் அவன் முகத்தில் ரத்தம் வளைந்து கொண்டிருந்தது. இருந்தும் கதிர் வெறி பிடித்தவன் போலா அவனை அடித்துக் கொண்டிருந்தான். கதிரின் கோவத்தை பார்த்து அனுவிற்கு பயத்தில் உடல் நடுங்க ஆரம்பித்து விட்டது.
திருவிழா பொங்கல் இப்படி ஏதாவது வந்துட்டா போதும் தண்ணி அடிச்சிடு வந்து இப்படி மல்லுக்கட்டிட்டு கிடக்குறதே இந்த பொறுக்கி பையன்களுக்கு வேலையா போச்சி என்றார் ராமசந்திரன் கதிரை பார்த்து.தந்தை கூறியதை கேட்ட அனுவின் கண்கள் கலங்க ஆரம்பித்துவிட்டது.
வாசகர் தெய்வங்களே இந்த கதையை படித்து அதில் உள்ள குறை, நிறைகளை கருத்துக்கள் மூலம் தயவுசெய்து கூறுங்கள். நீங்கள் குறைக்களை கூறினால் தான் என்னால் என் தவறை திருத்தி கொள்ள முடியும் 🙏🙏🙏🙏🙏🙏🙏.
.
