Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா? அத்தியாயம்- 6

அத்தியாயம் 6:

 

 

 



Advertisement

கோவிலுக்குச் சென்ற  மல்லி, “சாமி தரிசனம் செய்து விட்டு அமைதியா ஒரு இடத்தில் அமர்ந்து விட்டாள்”.

 

 

Advertisement

 

Advertisement

குட்டி, “டார்லிங் இன்னும் எவ்வளவு நேரம் தான் காத்துக்கொண்டு இருக்கிறது”.

 

 

Advertisement

கண்ணன், “டேய் அமைதியா இருடா இன்னும் பத்துநிமிடத்தில் தந்துவிடுவார்கள்”. 

 

 

“அமைதி!”…  “அமைதி! அண்ணா”,இந்த உலகத்தில் எதைவேண்டுமானாலும் அடக்கலாம். ஆனால் “கோயில் தரும் சுண்டலும், புளிசாதமும் மற்றும் சர்க்கரை பொங்கலும் சாப்பிடும் ஆவளை மட்டும் அடக்கமுடியாது”….

 

 

 

விடு டார்லிங்,  “அவன் சின்னபையன், அவனுக்கு இது எல்லாம் புரியாது”.

 

 

அதற்கு கண்ணன், “எல்லாம் என் நேரம்டா: நீ நடத்து ராசா நடத்து”.

 

 

பண்ணையார்வீட்டில் இருந்து வந்த பெண்மணிகள் சாமிதரிசனம் முடித்துவிட்டு பூசாரியிடம் சென்று நிச்சயத்தேதி குறிக்க குறி கேட்டனர். 

 

 

நாச்சியார், “சாமி பேத்திக்கு என் மகளோட மகனையே கட்டாமுனு எங்க எல்லாருக்கும் விருப்பம். நித்திய தேதி குறிக்க குறி கேட்கலாமுனு வந்தோம்னு”. 

 

 

பூசாரி, “அதுக்கு என்னங்கம்மா பாத்திடலாம்”, கொஞ்சம் நேரம் அப்படி உட்காருங்க நான் கூப்பிடறேன் எனக்கூறி சென்றுவிட்டார்.

 

 

சகுந்தலா, “அத்தை வாங்க அங்க உட்காரளாம்”, அவங்க கூப்பிடும் போது வரலாம். 

 

 

காயத்திரி, அத்தை வாங்க…  அங்க பொங்கல் கொடுக்கராங்க. 

 

 

நீங்க போய் வாங்கிகிட்டு வாங்க நான் இப்படி உட்காரரோன். 

 

 

மீனா, சரிபட்டி…  இங்கேயே இருங்க நாங்க வாங்கிகிட்டுவந்துவிடரோம் எனக்கூறி அனைவருக்கும் சென்றுவிட்டனர். 

 

 

 

நாச்சியாருக்கு பின் உட்கார்ந்து இருந்த குட்டி, “ஆகா! ஆகா!… இந்த பொங்கலுக்காக எவ்வளவு நேரம் காத்துகிட்டு இருக்கிறது இல்ல டார்லிங்”.

 

 

“ஆமாம் டார்லிங்”…. “இங்க பாரு டார்லிங் எனக்கு சுண்டல் கொஞ்சம் இருக்கு. உன்கிட்டதான் அதிகமா இருக்கு நீ சுண்டல்  தா டார்லிங்… நான் உனக்கு பொங்கல் தரேன் என்றால் மல்லிகா”… 

 

 

 

குட்டி, “எனக்கு பொங்கல் வேண்டாம் டார்லிங், அந்த புளிசாதமும் தா…  அது இன்னைக்கு சூப்பரா இருக்கு”. 

 

 

 

அதற்கு கண்ணன், “உங்க அளப்பறை தாங்க முடியலடா சாமி”…இருக்கிறது கொஞ்சூண்டு பிரசாதம் அதற்கு இத்தனை அளப்பரையா?…

 

 

 

“அந்த கொஞ்சூண்டு புளிசாதத்தையும் நீ இப்ப எனக்கு தா அண்ணா”, நான் உனக்கு பொங்கல் தரேன என்றவனிடம், எனக்கு பொங்கல் வேண்டுடாம்.. இந்தா புளிசாதம் நீ சாப்பிடு எனக்கூறி கொடுத்துவிட்டான் கண்ணன். 

 

 

 

அனைவரும் ஒருவழியாக சாப்பிட்டுவிட்டு வந்து அமர்ந்தனர். 

 

 

இவர்களின் பேச்சி நாச்சியாருக்கு சிரிப்பை வரவைத்தது. 

 

 

பின் மீனாவும், அவளின் சித்திகள் மற்றும் பாட்டிகள் என அனைவரும் பிரசாதத்தை சாபிட்டுவிட்டு சிறிது நேரம் அமர்ந்து இருந்தனர். 

 

 

 

பின் பூசாரி வரும்படி கூப்பிட்டு பூஜை முடித்துவிட்டு, சாமி ஆடி வாக்கு சொன்னார்.

 

 

மீனாவை அழைத்து, “நீ ஆசைப்பட்ட வாழ்க்கை உனக்கு கிடச்சிடுச்சி. போர இடத்தில நல்ல மருமகளாக நடந்துக்குங்க. எந்த குறையும் இல்லாம நீ சந்தோசமா இப்ப”. 

 

 

சகுந்தலாவை அழைத்து, “ஆத்தா உன்னாலயும், உன் மூத்தவளாலையும் தான் இந்த குடும்பம் இம்புட்டு நாளும் நல்லா இருந்தது”…  அதே மாதிரி வரமருகளாளையும் உன் குடும்பம் நல்ல வளமான வரும் ஆத்தா நீ கவலைபடாம இரு. 

 

 

 

காயத்திரியும் அழைத்து, “உன் மகன் நல்ல குணசாலி, அதே மாதிரி வரவும் இருப்பா. நீ ஆசைபட்டமாதிரியே உன்பையன் கல்யாணம் இந்த வருஷத்துல நடக்கும். வெசனப்படாம இருத்தா”.

 

 

நாச்சியாரிடம், “உன் வீட்டுக்கு  வரவு வரப்போகுது. உன் பேத்தி, பேரன் கல்யாணம் இந்த வருஷத்துல நடக்கும்”. அதே மாதிரி “பல எதிரிகள் வருவாங்க. சில விேராதிகள் உனக்கும், உன் குடும்பத்துக்கும் தெரிய வரும்”. 

 

 

பேரனுக்கு கல்யாணம் பண்ணி பாக்கனும்னு ஆசை இருக்கு. இதுவரை சம்மதம் சொல்லி அவனுங்க. இனி அவனே வந்து செல்லுவான்,எந்த கேள்வியும் கேட்காத பண்ணி வை. 

 

 

 

வரமருமகளாள தான் உன் குடும்பம் சூழ்ச்சி, துரோகத்திலுருந்து தப்பிக்கும். “கையிலையே வெண்ணை வச்சிக்கிட்டு நெய்கழகு அழையர”. காலம் கூடி வருது ஆத்தா. 

 

 

 

“வீட்டுக்கு வர மருமகளேட வசதிவாய்ப்ப பாக்காத…  மனசபாரு…  எல்லாம் தானா நடக்கும்..  அப்போ கைநளுவவிட்டுடாம சூதானமா இருந்துக்கோ ஆத்தா”. 

 

 

[the_ad id=”6605″]

 

 

“உன் பேத்தி கல்யாணத்தை பண்ணு, எல்லாம் தானா வரவேண்டிய விவகாரமும் வெளிச்சத்துக்கு வரும்”. போ போய் கல்யாண வேலைய பாரு. 

 

 

அங்கு குட்டியுடன் விளையாடிக்கொண்டு இருந்த மல்லியை அழைத்து, “இனி தான் நீ சந்தோசமா இருப்ப. அதுக்கு முன்ன சில இழப்பை நீ சந்திக்கபோர. உண்மையான மனிதனின் சுயம் உனக்கு புரியவரும். அப்ப உனக்கு இருக்க உண்மையான உறவை கெட்டியா பிடிச்சிக்கோ ஆத்தா”. 

 

 

 

நீ பட்டபாடுக்கு இனிதான் விடிவுகாலம் வரபோகுது எனக்கூறினார். 

 

 

கண்ணன் அமைத்தவர், “உங்களுக்கு புதிய சொந்தம் வரபோகுது. அந்த சொந்தம் உங்க வாழ்க்கையை வளப்படுத்தும்”. 

 

 

குட்டியை பார்த்தவர், “வாழ்க்கையில் நீ ஒரு பழைய உறவைபார்க்க போர”. “அந்த உறவு உனக்கு வேண்டாம். அது உன் வாழ்க்கையை அழித்துவிடும்”. “உன் அக்கா கையை கெட்டியா பிடிச்சிக்கோ. அந்த கையை விட்டுவிடாதே”. 

 

 

 

அப்புறம் அவ காணாமபோய்டுவா. பாரத்து சூதானமா நடந்துக்கோ, எனக்கூறி அடுத்தவருக்கு வாக்கு சொல்ல சென்றுவிட்டார். 

 

 

இதைகேட்ட குட்டி பயந்துவிட்டான்…. “கண்ணன் அவனை அதை பற்றி யோசனை செய்யவிடாமல் வேறுபக்கம் திசைதிருப்பி, மறுபடியும் பொங்கல் வாங்கி கொடுத்து அமைதிபடுத்தினான் (பொங்கல் என வந்தால் குட்டிக்கு தான் அனைத்தும் மறந்துபோகுமே). 

 

 

“மல்லிக்கு சற்று பயமாக இருந்தது”. மறுபடியும் ஒரு இழப்பை சந்திக்கும் சக்தி அளுக்கு இல்லை. பயத்தை மறைத்துகொண்டு குட்டி, கண்ணனை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றுவிட்டாள்.

 

 

 

நாச்சியாரின் தன் குடும்ப பெண்களுடன் வீட்டிற்கு சென்றுவிட்டார். “அவரின் மனதில் அத்தனை குழப்பம். சற்று நிதானித்து எதுநடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என நினைத்துக்கொண்டு அமைதியாக சென்றுவிட்டார்”. 

 

 

 

 

சந்திரனிடம் பேசிவிட்டு வீட்டுக்கு வந்தவர்கள், கண்ணன் மற்றும் குட்டி, மல்லியிடம் விசயத்தை கூறினார்கள். 

 

 

 

மல்லி, “எனக்கு என்னமோ கண்டிப்பா Sheet கிடைக்கும்னு தோனுது புள்ள. நீ பயப்படாத அம்மு”… உன் மார்க்குக்கு கண்டிப்பா Sheet கிடைக்கும். 

 

 

அம்மு,  “Sheet பத்தி எனக்கு கவலையில்லை மல்லிக்கா…. என் பயமே இந்த மார்க்குக்கு Fees குறைப்பாங்களானுதான்க்கா”.

 

 

 

இதை கேட்ட உமா, “ஏன் அம்மு நான் உனக்கு College Fees  Pay பன்னமாட்டேன்னா?. ஏன் இந்த பயம் உனக்கு?”…

 

 

 

“அச்சோ அக்கா!”, “நான் அப்படி எல்லாம் நினைக்கலக்கா…  நீ எவ்வளவு தான் கஷ்டப்படுவ. இந்த வருடம் College Fees  இதுவரை கட்டுவதை விட இரண்டு மடங்கு ஆகும்”. 

 

 

“என்னைய மட்டும் பாத்தா கண்ணன், குட்டிபடிப்புக்கு எப்படி Fees கட்டுவது.. அதுமட்டுமல்ல நீயும் எவ்வளவு நாள் தான் இப்படி ஓய்வு அல்லாம மாடு மாதிரி வேலை செய்வ?”…… அதுனால தான் அக்கா நான் Fees  கம்மி பன்ன முடியும்னு பார்க்கிறேன்.

 

[the_ad id=”6605″]

 

 

“அப்படி  Fees Amount கம்மி பன்னிட்டா, நீ கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாமுனுதான் அக்கா பார்த்தேன்”. இது தவிர வேற எதுவும் இல்லக்கா என்றால் அம்மு….

 

 

சுந்தரம், “விடுங்கமா இனி இதை பத்தி யாரும் பேசக்கூடாது… போங்க போய் வேலையை பாருங்க”. அம்மா உமா…

 

 

“சொல்லுங்க அப்பா.. நாளைக்கு காலையில  பத்துமணி பஸ்சுக்கு போரமாதிரி ரெடியா இருமா”. சரிங்கப்பா…

 

 

அப்புறம் அம்முக்கு தேவையான எல்லா பொருளையும் நீ எடுத்து வச்சிக்கு. அவங்க எதாவது கேள்வி கேட்டா, நீ தைரியமா பதில் செல்லு…

 

 

“சரிங்கப்பா”… நீங்க சொன்னமாதிரி எல்லாத்தையும்  நான் போய் எடுத்து வைக்கிறேன் ப்பா எனக்கூறி சென்றுவிட்டால் அம்மு.

 

 

 

அவள் சென்றதும் சுந்தரம் உமாவிடம், “நீ ஏம்மா அப்படி கேட்ட அம்முகிட்ட…. புள்ள முகமே சரியில்ல”… 

 

 

அதுவந்துபா.. . “என்னமோ தெரியல, கொஞ்சம் பயமா இருக்கு. எங்க நான் என் தம்பிங்க, தங்கச்சிய சரியா பார்த்துக்களையோனு”..  ஏற்கனவே குட்டிய தொலைக்க பார்த்தேன். எங்க இவங்களை எல்லாம் நிரந்தரமா பிரிஞ்சிடுவோனோனு பயம். வேற ஒன்னும் இல்லப்பா… 

 

 

 

நீ பயப்படர மாதிரி எதுவும் நடக்காது உமா. தைரியமா இரு. “சரி புள்ளய சமாதானம் செஞ்சி சாப்பிடவை உமா. நாங்க கிளம்பறோம். கதவை நல்ல சாத்திக்குமா”. 

 

 

சரிங்க அப்பா எனக்கூறிய உமா, மல்லி மற்றும் சுந்தரம் சென்றவுடன்  அனைவரையும் அழைத்து தானே சாப்பாட்டையும் ஊட்டிவிட்டால்.

 

 

 

“அம்முசாரிடீ”… “அக்கா தெரியாம இப்படி போசிவிட்டேன், இனி இந்தமாதிரி பேசமாட்டேன், நீ எதையும் மனசில வைச்சிக்காதடீ”.

 

 

“அட போக்கா”… இதுக்கு போய் இப்படி Feel பண்ற… அதை நான் அப்பவே மறந்துவிட்டேன். நீ என்னடானா இவ்வளவு நேரம் அதையே மனசில நினைத்துக்கிட்டு இருக்க… 

 

 

 

அக்கா நீ எது செய்தாலும் அது எங்க மூனுபேரோட நன்மைக்காக தான் இருக்கும். அது எங்க எல்லாருக்கும் நல்லா தெரியும்…. 

 

 

“எங்க கவலை என்னா நீ இப்படி மாடா உழைக்கரதுதான்…  அதை தவிர வேற ஒன்னும் இல்ல. நீ ஊட்டி விடுக்க ரொம்ப பசிக்குது என்ற அம்முவின் வார்த்தையில் சகலமும் மறந்து விட்டது உமாவிற்கு”.

 

 

 

பின் அனைவரையும் வயிறு நிறைய உண்ணவைத்தவள், உடனே படுக்க விடாமல் சிறு வேலையை கொடுத்து செய்ய வைத்தபின்தான் தூங்க விட்டால் உமா. 

 

 

 

பின் அனைத்து வேலையையும் முடித்துவிட்டு தானும் படுத்துவிட்டால் உமா. 

 

 

ஆனால் உமாவின் மனதில், “நான் சரியான வழியில் தான் என் தம்பி, தங்கையை கூட்டிக்கிட்டு போறேனா? இவங்களை பாதுகாப்பா தான் வச்சி இருக்கேனா? கொஞ்ச நாளா ஏதோ தப்பா நடக்கிறமாதிரி தோனுது”… எக்காரணம் கொண்டு அந்த ஆளுகிட்ட அம்மு சிக்க கூடாது. கடவுளே நீ தான் எங்களை காப்பாத்தனும். 

 

 

“எப்படியாவது அம்முவை படிக்கவச்சி ஒரு நல்லவன் கையில கொடுக்கனும்”.

 

 

 

கண்ணனா நல்லா படிச்சி, எப்படியாவது ஒரு நல்ல வேலையில் சேர்ந்து விட்டானா அது போதும். அவன் மனசுக்கு புடிச்ச நல்ல பெண்ணா பாத்து கட்டிவைக்கனும். 

 

 

 

குட்டியும் படித்துவிட்டு அவன் மனசுக்கு நிறஞ்சமாதிரி ஒரு வேலையில் அமர்ந்துவிட்டானா அது போதும் சாமி. 

 

 

“இவங்க குழந்தைகளை வளர்த்துக்கிட்டு மீதி காலத்தையும் தள்ளிட்டா போதும் கடவுளே”… வேற எதுவும் வேண்டாம் எனக்கு. 

 

[the_ad id=”6605″]

 

என மனதில் பலவற்றையும் நினைத்துக்கொண்டு வெகு நேரத்திற்கு பிறகே தூங்கினால் உமா. 

 

 

இவள் இப்படி நினைக்க கடவுளோ,” உமா நீ உன் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டியவைகள் நிறைய இருக்கு. சம்சார பந்தயத்தில் வெற்றி பெற்று வாழவேண்டாமா!…  கணவனின் மனதில் ராணியாகவும், போகும் வீட்டில் சிறந்த இல்லத்தரசியாகவும் வாழவேண்டாமா! என நினைத்துக்கொண்டு அவளை பார்த்து புன்னகை முகமாக படத்தில் காட்சி தந்தார்”. 

 

 

 

 ஆனால் அதை புரிந்து கொள்ள தான் யாராலும் முடியவில்லை. 

 

 

 

*********************************************************************************************//**

 

 

 

அங்கு வெற்றியோ கையில் தன்னவள் புகைப்படத்துடன் மானசீகமாக பேசிக்கொண்டு இருந்தான். 

 

 

“மகாம்மா(ஊருக்கே உமானாலும் வெற்றிக்கு மட்டும் மகாம்மா தான்) உன்மனசில என்னமோ இருக்கு. அப்பஅப்ப எதையோ நினைச்சு பயப்படர. உன்கண்ணுல பயத்தையும் மீரிய ஒரு எச்சரிக்கை தெரியுது”. 

 

 

என் மனசு சொல்லுதுடாம்மா, “நீ ஏதோ பெரிய பிரச்சனையில் இருக்கைனு. எது எப்படியே உன்னையும், உன் தம்பிங்க, தங்கையை நாம்ப நல்லா பார்த்துக்கலான்டாம்மா”… 

 

 

அவங்களை நம்பகூடவே வச்சிக்கலாம். அவங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமச்சிக்குடுக்கனும். இனி நீ தனியா இல்லடாம்மா, நான் இருக்கேன்…. உன் வெற்றி இருக்கேன். 

 

 

“எது எப்படியோ”… “இனி நீ நிம்மதியா இருக்க இந்த வெற்றி பொறுப்பு. உன் வெற்றி பொறுப்பு. எல்லாத்தையும் சரிப்பண்ணி, உன்ன நிம்மதியா பார்த்துக்குவேண்டாம்மா”. 

 

 

“மகாம்மா சீக்கரமா இந்த மாமாகிட்டவந்துடுடா. அந்த நாளுக்காக காத்துக்கிட்டு இருப்பேன். என மனம்போனபோக்கில் யோசனையில் இருந்தவன் அப்படியே உறங்கியும் விட்டான்”.

 

 

 

“ஒரு வாரமா அவனின் மாகாவை பார்க்காததால் மிகவும் தவித்து போய்விட்டான் வெற்றி”.

 

 

 

 

 

“பக்கத்து அறையில் இருந்த விஷ்ணுவோ, இரவு உணவை முடித்து விட்டு ஊருக்கு செல்லவதர்கான பொருள்களை அனைத்தையும் பெட்டியில் அடக்கிக்கொண்டு இருந்தவன் கையில் அந்த புடவை தட்டுப்பட்டது, அதை பார்த்ததும் அவனின் கற்பனை எங்கெங்கோ சென்றது”. 

 

 

முதல் நாள் மாலையில் மீட்டிங் முடிந்தவுடன் வெற்றி  Clientவுடன் வேலை விசயமாக வெளியே சென்று இருந்தான். 

 

 

அப்பொழுது Roomல் அடைந்து இருக்க பிடிக்காமல் பக்கத்தில் உள்ள Shopping Mallக்கு சென்று இருந்தான் விஷ்ணு. அங்கு ஒரு கடையில் கண்ணை கவரும் வகையில் இந்த புடவை தன்னவளுக்காக வாங்கிக்கொண்டு வந்து இருந்தான். 

 

 

“அத்தனை அழகாக இருந்தது. மல்லிக்கு மிகவும் எடுப்பாக இருக்கும். அதை யார்கண்ணிலும் படாதவாரு தன்னுடைய பெட்டியில் வைத்துஇருந்தான். அதை மல்லி கட்டினால் எப்படி இருக்கும் என்ற ஆராய்ச்சியில் இருந்தான். அதுவும் அந்த சேலையை தங்களுக்கான பிற்த்தேயோகமான நேரத்தில் கொடுத்து, அவளை அழகு பார்க்க வேண்டும் என்பது விஷ்ணுவின் அவா”.

 

 

 

 

“அந்த சேலையை மல்லியிடம் கொடுக்கும் போது அவளின் முகம் எப்படி இருக்கும் என்ற கற்பனையில்  இருந்தான். கண்டிப்பாக மல்லியிடம் இருந்து தர்ம அடி நிச்சயம்  என்பது இந்த கற்பனையில் மூலமாக முன்பே தெரிந்தவுடன் திடுக்கிட்டு எழுந்துவிட்டான் விஷ்ணு”.

 

 

 

அவன் வாங்கி வந்த புடவை அந்த மாரிதி. “அதை உடுத்துவதும் ஒன்று உடுத்தாமல் இருப்பதும் ஒன்று தான். ஏனெனில் அந்த புடவை அத்தனை மெல்லியதாக இருந்தது. எப்படி என்றால் மறைக்க வேண்டியவை அனைத்தும் வெளிப்படையாக தெரியும் அளவிற்கு. அதுவும் வெண்மை நிறம் கொண்டது அந்த புடவை”. 

 

 

 

தன் மனதிற்கு இனியவளிடம் மானசீகமாக மன்னிப்பு படலம்நடத்தயவன். “இறுதியில் லட்டுகுட்டி கண்டிப்பா இந்த புடவை உனக்கு கட்டி அழகு பாப்பாண்டி இந்த மாமன்”. நீ அடிச்சா கூட விடமாட்டேன்டீ லட்டுகுட்டி, என புளம்பிக்கொண்டு உறங்கிவிட்டான். 

 

******************************************************×***************************

 

 

 

அடுத்த நாள் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு மாதிரியாக விடிந்தது.

 

 

உமா எப்பவும் போல் விரைவாக எழுந்து அனைத்து வேலையையும் முடித்துவிட்டு. தம்பிகள், தங்கையை எழுப்பி அவர்களை குழிக்க அனுப்பிவிட்டு, தானும் குளித்துவிட்டு,உணவினை முடித்துவிட்டு, அனைத்து பொருள்களையும் எடுத்துக்கொண்டு இருந்தனர். 

 

 

உமா, “கண்ணன் நீ குட்டிய, வெள்ளையனை கூட்டிக்கிட அப்படியே மேச்சலுக்கு போய்ட்டு வந்துவிடு”.

 

 

மதியம் எங்களுக்கு காத்துகிட்டு இருக்காத, நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டு விடுங்க.  

 

 

“ஆத்து பக்கமும் குளத்தாங்கரைக்கும் போகாதிங்க …. புரியுதா?”….

 

 

 

“குட்டி உனக்கு தான் முக்கியமா சொல்லறேன்.  கண்ணன் சொல்லறத கேட்டு நடந்துக்கோ. புரியுதா?” என்ற உமாவிடம்… 

 

 

குட்டி,” புரியுதுக்கா”… . நான் ஆத்துக்கு போகமாட்டேன் போதுமா. அப்புறம் கண்ணன் அண்ணா கூடத்தான் இருப்பேன். 

 

 

 

“குட்டி…அக்காவ கோவிச்சுக்காதடா… நீங்க என்ன பண்ணரீங்களோனு அக்கா பயந்துகிட்டே இருப்பேன்…. புரியுதா குட்டி”. 

 

 

 

கண்ணன், “அக்கா நீங்க பயன்படாத போய்ட்டுவாங்க…  நாங்க மல்லி அக்கா கூடத்தான்  இருப்போம்.  அதனால நீங்க பயப்பட அவசியமே இல்லாமல் நிதானமா போய்ட்டு வாங்க”. 

 

 

“அம்மு நீ ஒன்றும் பயப்படாத, நீ எடுத்த மார்க்குக்கு நிச்சயமா Fees குறைப்பாங்க.  அதனால அவங்க கேட்கற கேள்விக்கு நல்லா பதில் சொல்லி Sheet வாங்கனும். All the best “…..

 

 

அதற்கு அம்மு  நன்றி டா கண்ணா என்றால் … .” குட்டி அம்முவிடம், அக்கா நீ நினைத்த மாதிரி தான் எல்லா நடக்கும் சந்தோசமா போய்ட்டு வா எனக்கூறி அக்காவை அனுப்பிவைத்தான் குட்டி”. 

 

 

பின் அனைவரும் சுந்தரம் வீட்டிற்கு சென்று, புறப்பட்டு தயாராக இருந்தவரை அழைத்துக்கொண்டு காங்கேயம் சென்றனர். 

 

 

[the_ad id=”6605″]

 

 

**************************************************************,*,,**********************

 

வெற்றியும், விஷ்ணுவும் முக்கியமான ஒரு  File ல் கையெழுத்து போட்டுவிட்டு, ஊரை நோக்கி கிளம்பத் போது மணி 11 ஆகி இருந்தது. 

 

விஷ்ணு வெற்றியிடம், “ஏண்டா இவனுங்களுக்கு வேற வேலையே இல்லையாடா. எப்பப்பாரு Meeting னு சாவடிக்கரானுங்க.  முடியலடா சாமி”…. .

 

 

என் லட்டுகுட்டிய பாத்து ஒருவாரம் ஆச்சிடா வெற்றி….

 

 

வெற்றி, “பாரத்து மட்டும் நீ என்ன பண்ணபோற? ஒன்னுங்கிடையாது”….

 

 

ஒரு வார்த்தையும் பேசி இருப்பையாடா நீ அந்த பெண்ணுகிட்ட…

 

 

அதற்கு விஷ்ணு, “அவன் அவனுக்கு வந்தாதாண்டா தெரியும்…  நானே எப்படிடா அவளை கல்யாணம் பன்றதுனு தெரியாம இருக்கேன், இதுல நீவேற ஏண்டா இப்படி படுத்தர வெற்றி”….. 

 

 

“ஆமா வெற்றி!”, வீட்டில் கல்யாணவிசயம் பேசரதா சொன்ன இல்ல…  எப்படா போசபோர…  சீக்கிரம்மா பேசுடா… எவனாவது வந்து என் லட்டுகுட்டிய கொத்திக்கிட்டு போரதுக்குள்ள பேசுடா… 

 

 

 

சரிடா.. . “நம்ம குட்டிமா நிச்சியம் முடிந்த உடனே சொல்லிவிட்டுடறேன் விஷ்ணு. கண்டிப்பா நம்ம வீட்டுல யாரும் உன் ஆசைக்கு எதிரா நட்டமாட்டாங்க அதனால Free யா இருடா” எனக்கூறி வண்டியில் கவனம் செலுத்தினான். 

 

**********************************************/*//***********************************************

 

 

 

பஸ்விட்டு இறங்கி பத்துநிமிடம் நடை தூரத்தில் பண்ணையாரின் SNM College இருந்தது. கல்லூரிக்கு வர அதிகமான சிரமம் ஏற்படவில்லை இவர்களுக்கு…. 

 

 

 

 

College க்கு சென்றவர்கள் ரிசப்சனிஸ்ட் அருணை பார்க்க அனுமதிக்க காத்திருந்தனர். “அருண் முக்கியமான Meetingலல் இருப்பதால் வர நேரமாகும் என காத்திருக்கும் படி ஆனது”. 

 

 

அப்பொழுதுகூட கல்லூரியை பார்த்த அம்மு, “அக்கா பாத்தியா எவ்வளவு பெரிய College.. இங்க படிச்சா நிச்சயம் நான் நல்ல வேலைக்கு போய் உன்னைய ராணிமாதிரி பாா்த்துக்கறேன் க்கா” என்ன கூறிய அம்முவிடம்…. 

 

 

உமா, “அப்படியா!”… “அதுக்கு நீங்க இன்னும் நல்லா படிக்கனும், நிறைய கத்துக்கனும். அப்புறம்தான் வேலைக்கு போகமுடியும்… உன்ன நீ பாத்துக்கிட்டு எனக்கு அதுபோதும் அம்மு”…..

 

 

“இப்பவும் நான் ராணி தான்… நம்ம வீட்டுக்கு என்றால் உமா”.

 

 

இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது அவங்கு வந்த ரிசப்சனிஸ்ட் அம்முவிடம் ஒரு படிவத்தை கொடுத்து அதை பூர்த்தி செய்து உள்ளே செல்லம் போது அருணிடம் கொடுக்க சொல்லி சென்றுவிட்டார். 

 

 

“காலை மணி 11க்கு சென்றவர்கள் மதியம் இரண்டு வரை அருண் வருவதற்காக காத்திருக்கும் படி ஆனது”. 

 

 

“ரிசப்சனிஸ்ட் யிடம் உமா சென்று அருண் வர எவ்வளவு நேரம் ஆகும் என விசாரித்து விட்டு அம்மு, சுந்தரம் இருவரையும் அழைத்து சென்று மதியஉணவை முடித்துவிட்டு வந்து அருணை பார்க்க மறுபடியும் இரண்டுமணிநேரம் காத்திருக்கும் படி ஆனது. இந்த காத்திருப்பு சற்று எரிச்சலை ஏற்படுத்தியது அம்முவிற்கு”. 

 

 

உமா, “மல்லிக்கு போன் செய்து தம்பிகள் இருவரும் என்ன செய்கிறார்கள், சாப்பிட்டார்களா. இல்லையா  என விசாரித்து கொண்டு இருந்தால்”. 

 

 

 

அதற்குள் சுந்தரத்திற்கு முக்கியமான வேலை வந்ததால் செல்லும்படி ஆனது. அதுவும் உமா தான் அவரை வற்புறுத்து அனுப்பி வைத்தால்.

 

 

 

பின் மூன்று மணிக்கு அவனுடைய கேபினுக்கு  வந்த அருண், “தன்னை சிறிது ஆசுவாசம் செய்து கொண்டு வந்திருந்த அனைவரையும் பார்க்க அனுப்பும்படி சொன்னான்”. 

 

 

இறுதியாக அம்முவும், உமாவும் அவனை பார்க்க சென்றனர். 

 

 

அருண், “அம்முவை பார்த்து சிறிது சாக்கானவன், அதை அவர்களுக்கு காட்டாமல் சாமர்த்தியமாக மறைத்துவிட்டவன்”, வாங்க மேடம்… உட்காருங்க…. என்ன விசயம்மா வந்து இருக்கீங்க.

 

 

உமா, “சார் நாங்க M. Phil Sheet விசயமா பார்க்க வந்தோம்”. 

 

 

“சரிங்க மேடம்”..  Mark Sheet கொடுக்க பார்க்கலாம்.

 

 

அம்மு,  “இந்தாங்க சார்..  இதுல B. Come, M. Come மார்க் சீட்”… 

 

 

அதை வாங்கி பார்த்தவன், பரவாயில்லை நல்ல மார்க் தான் இருக்கு, கண்டிப்பா சீட் கிடைக்கும் உங்களுக்கு.

 

 

உமா,  “எதாவது சலுகைகள் இருக்குமாங்க சார். அதபத்தி தான் உங்களின் பேசலாம்னு வந்தோம் சார் என்றால்”.

 

 

“அருணுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. தன்னவள் கல்லூரி கட்டணம் கட்ட அல்லாடுவது அவனுக்கு அத்தனை கஷ்டமாக இருந்தது”. 

 

 

“உமா இத்தனை கட்டத்திலும் தன் தங்கையை மேற்படிப்பு படிக்க வைப்பதை பார்த்து, உமா மேல் தனி மதிப்பும், மரியாதையும் வந்தது”.

 

 

அதைவிட தான் பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு படிப்பும், வேலையும் கொடுக்கும் போது, தன்னவள் வருட கட்டணம்கட்டமுடியாமல் தவிப்பது அத்தனை கஷ்டமாக இருந்தது. 

 

 

ஆவலுடன் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்த பெண்களை பார்த்து, கண்டிப்பா கிடைக்கும் மேடம். 

 

 

அதுமட்டுமல்ல “உங்களுக்கு பெற்றோர்கள் இல்லாததால் கண்டிப்பாக சில சலுகைகள் கிடைக்கும்”.

 

 

“நீங்கள்  Exam Fees  மட்டும் கட்டுனா போதும்…  கல்லூரிக்கட்டணம் கட்ட தேவையில்லை, எனக்கூறி அட்மிஷன் பேப்பரில் கையெழுத்து போட்டு, அட்மிஷன் உறுதி செய்தது மட்டுமல்லாமல். அத்தனை வேலைகளையும் தன் காரியதரிசி மூலம் செய்துவிட்டு அவர்களை அனுப்பிவைத்தான்”. 

 

 

[the_ad id=”6605″]

 

 

“அத்தனை வேலைகளையும் முடித்துவிட்டு கல்லூரிவிட்டு வெளியே வரும்போது மணி  ஆறு”. 

 

 

சுந்தரத்திடம் சீட்கிடைத்துவிட்டதை கூறிவிட்டு, பஸ் ஸ்டாண்டிற்கு செல்வதாக கூறி வைத்துவிட்டால். 

 

 

மல்லிக்கு பேரன் செய்து தம்பிகள் என்ன செய்கிறார்கள் என தெரிந்து கொண்டு பஸ் ஸ்டாண்டிற்கு நடையை எட்டி வைத்தால்.

 

 

“அதிகமான அளைச்சலில் அம்மு மிகவும் செல்வாக இருந்தால்”. 

 

 

“பஸ் ஏறும்போது மணி 7 .30  தொட்டுவிட்டது. அவர்களின் ஊர் செல்லும் போது மணி 8.15 ஐ அடைந்து இருந்தது. போனும் பஸ் ஏறிய சிறிது நேரத்தில் Off ஆகிவிட்டது”.

 

 

 

பின் ஊர் எல்லையில் இறங்கி நடக்க தொடங்கி இருந்தனர் இருவரும்.

 

 

“அந்த இருட்டில் இரு உருவம் அவர்களை பின் தொடர்வதை அறியவில்லை”.

 

 

சிறிது தூரம் சென்றதும் அந்த இரண்டு உருவமும் அம்மு, உலாவு சுற்றி வளைத்து விட்டது. 

 

 

அவர்களை பார்த்ததும் “அம்முவிற்கு அத்தனை பயமாக இருந்தது. உமா தன் பயத்தை வெளியே காட்டாது நிர்மலமான முகத்துடன் இருந்தால்”.

 

 

இருவரில் ஒருவன், “சரியா வந்து மாட்டுனீங்களா.. இப்ப யாராள உங்களை காப்பாத்தமுடியும்”. 

 

 

“மூனுவருசமா Jail ல இருக்க வச்சயில்ல அதற்கு நீங்கள் இருவரும் அனுபவிக்க வேண்டாம் எனக்கூறிவிட்டு அம்முவின் கையை பிடிக்க வந்தவன் பெண்கள் இருவரும் தன் பலம் கொண்டமட்டும் தள்ளிவிட்டு ஓடதுவங்கி இருந்தனர்”. 

 

 

ஓடும்போது உமாவின் கை பையில் எதையோ தேடிக்குக்கொண்டு இருந்தது. 

 

 

அது கிடைத்தவுடன் “பையை உமாவிடம் கொடுத்துவிட்டு அதில் இருந்த கத்தியை மறைத்துக்கொண்டு அம்முவை வேறு வழியில் போகச்சொன்னவள் தானும் வேறுவழியில் சென்றால். 

 

 

பின் தொடர்ந்து வந்தவர்களை அம்முவிடம் இருந்து திசைதிருப்பி இவள் பின் வரவைத்தால் உமா”. 

 

 

அன்பு தொடரும்……… 

 

 

 


 

அன்புடன் பூர்ணிமா மாதேஸ்வரன்?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!