Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா? அத்தியாயம்-9

அத்தியாயம் 9:

 

 

அடுத்த நாள் காலையில் எழுந்ததும் கார்த்திக் குளித்துவிட்டு காலை உணவின் போது தன் அன்னை மற்றும் தந்தையிடம் கல்யாணவிஷயமாக பேச்சை ஆரம்பித்தான். 



Advertisement

 

 

 

Advertisement

கார்த்திக், “அம்மா நீங்க பாட்டியபார்க்க போகனுமுன்னு சொன்னாங்க இல்ல”… வர வெள்ளிக்கிழமையிலிருந்து முக்கியமான வேலை எதுவும் இல்ல ம்மா… அதனால பாட்டிவீட்டுக்கு போலாம் என்றவனிடம்…

Advertisement

 

 

அவனின் தந்தை சங்கர், “சரிடா போகலாம்”… அங்க போனா நல்ல சாப்பாடு சாப்பிடலாம். ஒரு ஒரு வாரம் உன் அம்மா சமையலில் இருந்து விடுதலையாவது கிடைக்கும் நமக்கு.

Advertisement

 

 

அதற்கு கார்த்திக், “அப்பா மாமா வீட்டுக்கு போனா ஒரு வாரம்தான் இருப்போம்”. அங்க அத்தைங்க, பாட்டிங்க, மாமாங்க அவங்க பசங்கனு உங்களை நல்லா கவனிச்சி, உங்களுக்கு தேவையானதையெல்லாம் வாய்க்கு ருசியா செஞ்சி தருவாங்க தான்… ஆனா அது எல்லாம் நீ அங்க இருக்கவரை தான் அப்பா… 

 

 

நம்ம வீட்டுக்கு வந்துவிட்டா அம்மா சமையல்தான், அதனால கவனமா இருங்க… அம்மா சமையலை பத்தி வாய் பேசாம இருந்தா உங்களுக்கு விதவிதமாக சாப்பாடு கிடைக்கும். அப்புறமா தாமு அண்ணன் சமையலை சாப்பிடனும் இல்லனா நீங்களே சமச்சிதான் சாப்பிடனும் ப்பா… இந்த தண்டை உங்களுக்கு தேவையா சொல்லுங்க.

 

 

“அச்சே கார்த்திக்!” அந்த தண்டனைக்கு பதிலா நான் உன் அம்மா சமையலை சாப்பிட்டுக்குவேன்டா… “உன் அம்மா கூட இந்த தாமுவை விட அருமையா சமைப்பாடா”, இந்த தாமு வைக்கிற குழம்பு ரசம் மாதிரி இல்ல இருக்கும் என்றவரிடம் கார்த்திக், “அதுக்குதான் சொல்லறேன் ப்பா பேசாம அம்மா காலில் விழுந்துவிடுங்க அம்மா மன்னித்துவிடுவாங்க… இல்லைனா அம்மாக்கு புடிச்ச மாதிரி மருகளை நம்மவீட்டுக்கு கூட்டிகிட்டு வாந்தா அம்மா சந்தோசப்படுவாங்க ப்பா” என்ற கார்த்தியிடம்…

 

 

விசாலாட்சி, “அப்படி சொல்லுடா அப்பதான் அவருக்கு என் சமையல் அருமை தெரியும்”. நீ வாடா கார்த்தி, அம்மா உனக்கு பிடிச்ச புட்டும் தேங்காய்பாலும் செஞ்சி வச்சி இருக்கேன் சாப்பிடுவ. நீங்க என்மருமகளை சீக்கிரமா நம்ம வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வரவேண்டிய ஏற்பாடைபன்னுங்க. அப்பதான்  உங்களுக்கு பிடிச்ச சமையல் இந்த வீட்டில் செய்வேன். 

 

“அதுவும் இல்லாம உங்களுக்கு தான் என் சமையல சாப்பிட அவ்வளவு கஷ்டமா இருக்கே”… இனி நீங்களே சமையல் பண்ணுங்க நான் எதுவும் பண்ணமாட்டேன் என் மருமகள் வரவரைக்கும் என முறுக்கிக்கொண்டவரை தாஜா செய்து சமாதானம் செய்தார் சங்கர். 

 

 

சாப்பிட்டு முடித்ததும் கார்த்தியிடம் வந்த சங்கர், “ஏன்டா மகனே!“ இந்த அப்பா மேல அப்படி என்னடா உனக்கு கோபம்? இப்படி வசமா உன் அம்மாகிட்ட மாட்டிவிட்டுட்டயே மை சன். “அதுவா தகப்பா”… “நான் மட்டும் இப்படி சிங்கிளா இருக்கும்போது நீங்க ரெண்டு பேரு மட்டும் எப்படி மிங்கிளா இருக்களாம்?”… நான் எப்ப மிங்கிளாகிறனோ அப்பதான் தாங்களும் மிங்கிள், அதுவரை நீங்களும் சிங்கிள் தான் அப்பா. அதனால் தான் தகப்பா இங்கு இப்படி அம்மாகிட்ட உங்களை போட்டுவிட்டேன்  என்றவனை பார்த்து சங்கர்.

 

 

 

“அடப்பாவி!” இதுக்கு போயாடா அப்படி பண்ணுன? இருடா மகனே… “என் மருமக மீனுவ இந்தவீட்டுக்கு கூட்டிகிட்டுவந்த பிறகு உன்னை கவனிச்சிக்கிறேன்” எனக்கூறியவரிடம்…

 

 

 

முதலில் அதற்கான வேலையை இன்னைக்கே பாருங்க எனக்கூறி சென்றுவிட்டான் கார்த்திக். 

 

 

அவன்போவதையே பார்த்துக்கொண்டு இருந்த சங்கர், “விசாலாட்சி நம்ம பையன் கல்யாணம் சீக்கிறமா வச்சிடலாம்”… அதுதான் நமக்கு நல்லதுடீ. “ஆமாங்க”… நானும் அதுதாங்க யோசிக்கிறேன். இந்த விஷயத்த நம்மகிட்ட சொல்லத்தான் இவன் இப்படியெல்லாம் செஞ்சிட்டுபோறான்…

 

 

“ஆமான்டி விசாலா!”… சரிசரி உன் அம்மாகிட்ட விசயத்தை சொல்லு. அவங்களை மீனா அப்பா அம்மா கிட்ட கேட்டு தேதிகுறிக்க எப்ப ஜாதகம் பார்க்கபோகலாம்னு கேட்டு சொல்லுடீ… சரிங்க நான் கேட்கிறேன் எனக்கூறியவர் சிறிதும் தாமதப்படுத்தாமல் போன் செய்து விட்டார். 

 

*************************************×********************

 

 

அல்லியூரில் சுந்தரம், மல்லி மற்றும் உமாவை பண்ணையாரின் வீட்டில் வேலைக்கு அழைத்து சென்றார். அங்குவேலைக்கு செல்ல தயங்கிய உமாவை மல்லியும் சுந்தரமும் வற்புறுத்தி அழைத்து சென்றனர்.

 

 

போகும் வழியில் சுந்தரம், “உமா”… சொல்லுங்க அப்பா என்றவளிடம்… “அப்பா உங்க எல்லார் நல்லதுக்காக தானடா பண்ணையார்வீட்டுக்கு வேலைக்கு கூட்டிகிட்டு போகிறேன்”… அங்க வேலைக்கு போனா உங்க எல்லாருக்கும் அவங்க பாதுகாப்பா இருப்பாங்க ம்மா… நானும் கொஞ்சம் நிம்மதியா என்னுடைய வேலையை பார்ப்பேன் என்றவரிடம்…

 

 

உமா,  “சரிங்க அப்பா”… உங்களுக்காக நான் போறேன். “அங்க ஏதாவது விரும்பதாகாத விஷயம் நடந்தா அதுக்குபிறகு அந்த வீட்டுக்கு நான் வேலைக்கு போகடாட்டேன் ப்பா”. சரிடா… நீ இதுவரை இறங்கி வந்ததே போதும் உமா. 

 

 

“அச்சே அப்பா! “… இதுல நான் இறங்கி வர என்ன இருக்கிறது. அவங்க எல்லாம் பெரிய இடம், அதுதான் என்பயம் ப்பா என்றவளிடம்…

 

 

மல்லி,  “பெரிய இடம்னா என்னடீ?  அவங்க தலையில  என்ன கொம்பா முழச்சி இருக்கு? அவங்களும் மனுசங்கதான்டீ”…  என்ன அவங்கிட்ட இருக்க மூன்று எழுத்து நம்பகிட்ட இல்ல அதுமட்டும்தான் அவங்களுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம்.

 

 

“அடபோடி மல்லி”… “அந்த மூன்று எழுத்து கொண்ட பணம் மட்டும் நம்மகிட்ட இருந்தா நாம ஏன் இப்படி இருக்கபோறோம். நாமும் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாமே புள்ள” என்ற உமாவிடம்…

 

 

 

“அந்த மூன்று எழுத்து கொண்ட பணம் அளவுக்கு  அதிகமாக மட்டும் நம்மகிட்ட இருந்தா நாமும் நிம்மதியில்லாம, நல்ல தூக்கம் இல்லாம, உடம்புள பாதி நோய் தான் வந்து இருக்கும்” என்ற சுந்தரின் கூற்றில் மல்லி,  உமா இருவரும் சிரித்துவிட்டனர். 

 

 

 

மல்லி உமாவிடம், “ஏம்புள்ள உமா”… “இந்த பசங்க எப்படிடீ அமைதியா இருந்தாங்க? உங்கூடயில்ல வருவேன் சொல்லுவாங்க பார்த்தா, எதுவும் செல்லாத உன்னமட்டும் அனுப்பிவிட்டாங்க” என்றவளிடம் உமா,  “அப்படியே நம்ம பின்னாடி திரும்பி பாரு மல்லி வருவாங்க அந்த மூனுவாண்டும்”. சரிடீ பார்க்கிறேன் எனக்கூறி திருப்பிபார்த்த மல்லியின் கண்ணுக்கு யாரும் தெரியவில்லை.

 

 

மல்லி,  “யாருயில்ல உமா”… “அப்படியா? அந்த மரத்துக்குபின்னாடி பாருடீ மல்லி” என்றுகூறிய உமாவின் கூற்றில் மரத்தை பார்த்த சுந்தரம், மல்லி மற்றும் உமா என மூன்று பேரும் சிரித்துவிட்டனர். 

 

 

காரணம் மூவரும் மறைந்திருந்த லட்சணம் அப்படி. அவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையால் “குட்டியின் பாதி உடம்பு வெளியே தெரிந்தது. அதுமட்டுமல்ல அம்முவின் தாவணியும் கண்ணனின் தலையும் நன்றாகவே தெரிந்தது” அதனால் தான் அனைவரும் சிரித்துவிட்டனர். 

 

 

உமா மரத்திற்கு பின் மறைந்து இருந்தவர்களை பார்த்து, “போதும் நீங்க மறைந்துயிருந்தது வாங்க வெளியே”…. “டேய் குட்டி, கண்ணா, அம்மு உங்களைதான் சொன்னேன் வாங்க வெளியே. உங்களை பாரத்தவிட்டேன் வாங்க” எனக்கூறியதும் மூவரும் வெளியே வந்துவிட்டனர். 

 

 

 

வெளியே வந்தவர்கள் அசடுவழிவதை பார்த்த மற்ற அனைவரும் விழுந்துவிழுந்து சிரித்தனர். 

 

 

“அதில் கோபம் அடைந்த குட்டி மல்லியை அடிக்க ஆரம்பித்துவிட்டான்”. அவனிடம் போக்கு காட்டியே மல்லி குட்டியை பண்ணையார்வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டாள். 

 

 

பண்ணையார்வீட்டுவாசலில் நின்றுவிட்டாள் மல்லிகா. பின் தொடர்ந்து வந்த குட்டியும் நின்றுவிட்டான்.  “இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டுவிட்டு பின்னாடி திரும்பிபார்த்தனர் மற்றவர்கள் இன்னும் வரவில்லை என்றதும் இருவரும் சிரிக்க ஆரம்பித்துவிட்டனர்”.

 

 

அப்பொழுது குட்டி, “டார்லிங் எங்க சிரிச்சி சிரிச்சியே எங்களை அக்காகிட்ட மாட்டிவிட்டுவையோனு பயந்துவிட்டேன் தெரியுமா?”…

 

“அச்சோ சாரி டார்லிங்”… நீங்க எல்லாம் மறைந்து இருப்பதை பார்த்தவுடன் சிரிப்புவந்துவிட்டது டார்லிங், என்ற மல்லியிடம்… 

 

 

“போ டார்லிங்”… “எங்க நாங்கதான் அக்காவுக்கு பண்ணையார்வூட்டின் வேலை வாங்கி தரசொன்னேம்னு நீ உளரிவிடுவையோனு நாங்க பயந்துவிட்டோம் தெரியுமா?” தெரியும் டார்லிங் அதனால்தான் உன்னைவெறுப்பேத்தி ஓடிவந்தேன் எனக்கூறி சிரித்த மல்லியை பார்த்து சிரித்தான் குட்டி. 

 

 

“அம்மு மற்றும் உமாவிற்கு பரமனால் ஏற்றப்பட்ட விபரீதத்தால் பயந்த கண்ணன் மற்றும் குட்டியும் சுந்தரத்தின் சென்று ஒரு பாதுகாப்பான இடத்தில் வேலைவாங்கி கொடுக்குமாறு கேட்டனர்”. ஏற்கனவே மல்லியும் இதையே கூறியதால் சிறிதும் யோசிக்காமல் நாச்சியாரிடம் வந்து உமாவுக்கும் மல்லிக்கும் வேலை கேட்டார். பெண்களுக்கு பாதுகாப்பு மட்டுமல்லாமல் நல்ல சம்பளமும் கொடுப்பார்கள் என்பதால் சுந்தரம், கண்ணன் மற்றும் மல்லியும் சற்று ஆசுவாசம் அடைந்தனர். இன்று தான் இவர்கள் இருவருக்கும் முதல்நாள். 

 

 

பின் மற்றவர்கள் வந்தவுடன் வீட்டிற்குள் சென்றனர். சுந்தரம் முற்றத்தில் அமர்ந்திருந்த நாச்சியாரிடம் இவர்களை அழைத்துச்சென்றார்.

 

 

இவர்கள் அனைவரையும் பார்த்த நாச்சியார், “வாப்பா சுந்தரம்… பிள்ளைங்களை கூட்டிகிட்டு வந்துட்டையா?” வாங்கம்மா… வாங்கப்பா…  “அம்மு,  உமாவை பார்த்து நாச்சியார், இப்ப உடம்புக்கு பரவாலையாம்மா?  உன்னை பத்தி பசங்க சொன்னாங்க உமா”. ரொம்ப தைரியமா நிலைமையை சமாளிச்சி, உன் தங்கையையும் பாதுகாப்பா தப்பிக்கவச்சைனு. எல்லா பெற்றோர்களும் இப்படி இருந்தா நம்நாட்டில் பாதிபிரச்சனை காணாம போய்விடும் என்றவரிடம்…

 

 

உமா, “நீங்கள் சொல்லுறதும் சரிதான் பாட்டி”. அம்மு என்னுடைய தங்கையில்லையா, அவளுக்கு நான் தான் பொறுப்பு பாட்டி. “அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமச்சிக்குடுக்கரவரை நான் பாதுகாப்பா பாத்துக்கனும் இல்லயா பாட்டி?”  என்றவளை ஆச்சரியமாக பார்த்தார் நாச்சியார். 

 

 

“அதுவும் சரிதாம்மா”…  நான்பாரு வந்தபிள்ளைங்களுக்கு குடிக்க ஏதாவது தராத பேசிகிட்டு இருக்கேன், எனக்கூறி சகுந்தலாவை அழைத்தார். “சகுந்தலாவோ கையில் டீ மற்றும் வடையுடன் சிரித்தமுகமாக வந்தார்”. 

 

 

வந்தவர், “அத்தை நீங்க பேசுனது எனக்கு கேட்டுச்சா அதனால்தான் டீ போட்டுகிட்டுவந்தேன்” என்றவர்… 

 

 

அனைவருக்கும் டீயையும் வடையையும் கொடுத்தார். குட்டிக்கு கொடுத்து டீயைவாங்கி ஆற்றிக்கொடுத்த உமாவை சகுந்தலாவுக்கு ரொம்பவே பிடித்துவிட்டது.

 

 

பின் சகுந்தலா அம்முவிடம்,  “இப்ப உடம்புக்கு பரவாலையாம்மா… நீ ரொம்ப நல்ல படிப்பைனு பசங்க சொன்னாங்க”. மீனுகிட்ட வந்து புத்தகம் கேட்டையாமா? அவ எல்லாம் எடுத்துவச்சி இருக்கா ம்மா…  நீங்க வீட்டுக்கு போகும்போது வாங்கிக்கு. “சரிங்கம்மா”…  நான் மீனு அக்காகிட்ட வாங்கிக்கிறேன் என்றால் அம்மு. 

 

 

பின் நாச்சியார், “சகுந்தலா நீ இவங்களுக்கான வேலையை பத்தி சொல்லிடும்மா”… சரிங்க அத்தை என்ற சகுந்தலா உமா மற்றும் மல்லியிடம், “இங்க பாருங்க ம்மா…  நீங்க ரெண்டு பேரும் சமையல் வேலையை சாந்திகூட சேர்ந்து இன்னைக்கு பார்த்துக்குங்க மதத்தை அப்புறமா பாத்துக்கலாம்”. இப்ப நீங்க போய் சாந்திக்கு கூடமாட ஒத்தாசைபண்ணுங்க எனக்கூறி அனுப்பிவைத்தார்.

 

 

குட்டியிடம் சகுந்தலா, “நீங்க என்ன படபடிக்கிறீங்கஉங்களை பத்தி மீனு சொல்லியிருக்கா” என்றவரிடம்…

 

 

குட்டி, “நான் ஏழாவது படிக்கிறேன். மீனு அக்கா என்னை பத்தி என்ன சொன்னாங்க? என்றவனிடம், நீங்க ரொம்ப சேட்டைபண்ணுவீங்களாம், அப்படியா?” என்றவரிடம்… “ரொம்ப எல்லாம் பண்ணமாட்டேன். கொஞ்சூண்டு பண்ணுவேன் என்றவனின் பதிலில் அனைவரும் விழுந்துவிழுந்து சிரித்தனர்”.

 

 

இப்படியே அன்றைய பாதிபொழுது சென்றது. 

 

உணவின் போது விசாலாட்சியிடமிருந்து போன் வந்தது. 

 

 

நாச்சியார்,  “என்னடீ… இப்பதான் போன் பண்ணும் தோனுச்சா. மாப்பிள்ளை எப்படி இருக்காங்க? கார்த்திக் எப்படி இருக்கான்?” என்றவரிடம்…

 

 

“அம்மா”… “அம்மா”… எல்லாரும் நல்லா இருக்காங்க. நான் இப்ப பேசவந்ததே வேற விஷயத்தை பத்தி ம்மா.  “அப்படி என்னடி விஷயம்”… “அம்மா நம்ம கார்த்திக் – மீனா கல்யாணத்தை பத்தி ம்மா. அவரும் சீக்கிறமா நிச்சியம் வச்சிக்கலாம் சொல்லராருனு ம்மா”.  இத சொல்ல உனக்கு இவ்வளவு நாளாடீ… எங்க இந்த பையன் வேற எவளையாவது புடிச்சி இருக்குனு சொல்லிடுவானான் தான்பயந்தது எனக்கு தான தெரியும் என்றவரிடம்…

 

 

“அடபோமா நீவேற”… இவன் தான் இப்ப கல்யாணம் வச்சிக்கலாமுனு நைசா சொல்லிகிட்டு அலுவலகம் போயட்டான். அவரும் சரினு சொல்லிட்டார் ம்மா. 

 

 

“அதுசரிடீ”…  “உன் மாமியாருகிட்ட இதபத்தி முதல்ல பேசுடீ”.  நான் உன் அண்ணன் கிட்ட சொல்லி நல்ல நாள் பார்க்கிறேன் என்ற நாச்சியாரிடம்,  “சரிங்க அம்மா”…  நான் அத்தைகிட்ட பேசிவிடறேன் எனக்கூறி வைத்துவிட்டார்…  நாச்சியார் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.

 

 

சிறிது நேரத்தில் ஜெயா அனைவரையும் அழைத்தவர்…  “அத்தை நம்ம ஜெயந்தி போன் பண்ணுனா”… 

 

 

“பிள்ளைக்கு நா தள்ளிபோய் இருக்கு… மருத்துவமணைக்கு போய் பரிசோதனை பண்ணி பார்த்து இருக்காங்க சகு…  கர்ப்பம்னு உருதி பண்ணீட்டாங்களாடீ”. 

 

 

“மாமா”… “எனக்கு புள்ளைய பார்க்கனும் போல் இருக்கு. நாம போய் பார்த்துவிட்டு வந்துவிடலாம் மாமா”. 

 

 

“அக்கா நீங்களா பேசரீங்க? இத்தனைவருடத்தில் நீங்க வீட்டைவிட்டு எங்கேயும் போனதில்லையே அக்கா”…  உங்க மகளை பாக்கனும்னு தோனுனதும் போலாம்னு சொல்லுரீ்ங்க என்ற காயத்திரியிடம்…. 

 

 

“ஆமாண்டீ காயத்ரி”… என் பெண் பார்க்க தான்டீ நான் போறேன். “அதுமட்டுமல்ல டாக்டர் வேற புள்ளைய ஒரு வாரம் பெட்ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டாங்க… அதனால் நீங்க எல்லாரும் என்னபண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ அது எனக்கு தெரியாது… நாம எல்லாரும் மூணாறு போயே ஆகனும் சொல்லீட்டேன்”…  

 

 

என்ற ஜெயாவின் கூற்றை ஆமோதித்து நாச்சியார், “ஆமாண்டா சந்திரா… நாம எல்லாரும்  போய் ஒரு எட்டு பார்த்துவிட்டு, மாரியம்மன் பண்டிகைக்கு எல்லாரையும் அழைத்துவிட்டு வந்துடலாம்” எனக்கூறியவர் அனைவரும் அங்கு செல்லவதர்கான வேலையை செய்துவிட்டு தான் ஓய்ந்தார்.

 

 

 

இன்று ஜெயந்தி, மதன் மற்றும் வர்ஷாவுக்கு பிடித்த உணவுகளான தட்டை, அதிரசம், அல்வா, பர்பி, லட்சுமி, மைசூர்பா மற்றும் முறுக்கு என செய்து கொண்டவர்கள்… அங்கு போய் செய்வதற்கு தேவையான சில பொருள்களையும் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர். 

 

 

அதுமட்டுமல்லாமல் உமாவின் கைபக்குவம் மற்றும் மல்லியின் சுறுசுறுப்பு இரண்டும் பிடித்துவிட அவர்களையும் அங்கு வேலை செய்ய அழைத்து சென்றனர். 

 

 

தனியாக வரமாட்டேன் எனக்கூறிய உமாவிற்காகா, குட்டி, கண்ணன் மற்றும் அம்முவையும் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டனர்.  வீட்டை பாதுகாக்க சுந்தரத்தையும் இன்னும் சில நம்பிக்கையானவர்களையும் விட்டுவிட்டு சென்றனர். 

 

 

“அலுவலகம், கல்லூரி மற்றும் பழப்பண்ணையும் இன்னும்பிறவற்றையையும் பார்த்துக்கொள்ள மார்க்கை நியமித்தான் வெற்றி”. 

 

 

“மீனு Shopping செய்த பொருட்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு தன் தமக்கையை பார்க்க உற்சாகமாக சென்றாள்”. 

 

 

“வெற்றியே தன்னவளை பார்வையால் தொடர்ந்து கொண்டு இருந்தான்”. அவன் மனதில் அவள் மீதான காதல் இன்னும் அதிகமானது. அவளை பார்த்ததும் இந்த வரிகள் தான் அவனுக்கு தோன்றிமறைந்தது….

 

 

 

 

பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்துவிட்டாய்

என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பிவைத்தாய்

உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்

 

நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பிவைத்தாய்

நிலவுக்கு வன்முறைகள் கற்று கொடுத்தாய்

என் கண்ணில் ஏன் ஊசி ஏற்றினாய்

பிரம்மா ஓ பிரம்மா

தகுமா இது தகுமா

ஐய்யோ இது வரமா சாபமா

பிரம்மா ஓ பிரம்மா

தகுமா இது தகுமா

ஐய்யோ இது வரமா சாபமா

 

 

பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்துவிட்டாய்…

 

 

கண்களிலே பௌவ்தம் பார்த்தேன்

கன்னத்தில் சமணம் பார்த்தேன்

பார்வை மட்டும் கொலைகள் செய்யப் பார்கிறேன்

 

 

பற்களிலும் கருணை பார்த்தேன்

பாதங்களில் தெய்வம் பார்த்தேன்

புன்னகையோ உயிரை தின்னப் பார்கிறேன்

 

 

புயலென்று நினைத்தேன் என்னை

புயல் கட்டும் கயிராய் வந்தாள்

மலையென்று நினைத்தேன் என்னை

மல்லிகையால் மலையை சாய்த்தாள்

நெற்றி பொட்டில் என்னை உருட்டி வைத்தாளே..

 

 

பிரம்மா ஓ பிரம்மா

தகுமா இது தகுமா

ஐய்யோ இது வரமா சாபமா

பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்துவிட்டாய்…

 

 

பகலெல்லாம் கருப்பாய் போக

இரவெல்லாம் வெள்ளை ஆக

என் வாழ்வில் ஏதேதோ மாற்றமோ

 

 

ஐய்யாய்யோ உலக உருண்டை

அடி வயிற்றில் சுற்றுவதென்ன

அச்சச்சோ தொண்டை வரையில் ஏறுமோ

எரிமலையின் கொண்டை மேலே

ரோஜாவை நட்டவள் யாரோ

காதலெனும் கணவாய் வழியே

என் தேசம் புகுந்தவள் யாரோ

சிறுக சிறுக உயிரை பருகி சென்றாளே

 

 

பிரம்மா ஓ பிரம்மா

தகுமா இது தகுமா

ஐய்யோ இது வரமா சாபமா

 

பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்துவிட்டாய்…

 

 

நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பிவைத்தாய்

நிலவுக்கு வன்முறைகள் கற்று கொடுத்தாய்

என் கண்ணில் ஏன் ஊசி ஏற்றினாய்

 

 

பிரம்மா ஓ பிரம்மா

தகுமா இது தகுமா

ஐய்யோ இது வரமா சாபமா

 

 

பிரம்மா ஓ பிரம்மா

தகுமா இது தகுமா

ஐய்யோ இது வரமா சாபமா

 

 

 

 

 

 

 

“அருண் தன்னவளின் குழந்தை மனத்தில் தன்னை மறந்து அம்முவை ரசித்துக்கொண்டு இருந்தான். அவன் மனமே இந்த பாடலை  பாடிக்கொண்டு இருந்தது.

 

 

 

ரகசியமானது காதல் மிக மிக ரகசியமானது காதல்

ரகசியமானது காதல் மிக மிக ரகசியமானது காதல்

முகவரி சொல்லாமல் முகம் தனை மறைக்கும்

ஒரு தலையாகவும் சுகம் அனுபவிக்கும்

சுவாரஸ்யமானது காதல் மிக மிக சுவாரஸ்யமானது காதல்

 

 

சொல்லாமல் செய்யும் காதல் கனமானது

சொல்ல சொன்னாலும் சொல்வதும் இல்லை மனமானது

சொல்லும் சொல்லை தேடி தேடி யுகம் போனது

இந்த சோகம் தானே காதலிலே சுகமானது

வாசனை வெளிச்சத்தை போல அது சுதந்திரமானதும் அல்ல

ஈரத்தை இருட்டினை போல அது ஒளிந்திடும் வெளி வரும் மெல்ல

 

 

 

(ரகசியமானது)

 

 

கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது

கேட்டு கொடுத்தாலே காதல் அங்கு உயிராகுது

கேட்கும் கேள்விக்காகத்தனே பதில் வாழுது

காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது

நீரினை நெருப்பினை போல விரல் தொடுதலில் புரிவதும் அல்ல

காதலும் கடவுளை போல அதை உயிரினில் உணரனும் மெல்ல

 

விஷ்ணு தன்னவளை பகிரங்கமாக ரசித்துக்கொண்டு இருந்தான். “அவளின் பேச்சு மற்றும் செயல் என அனைத்தும் அவனை மல்லிகாவின் பக்கமாக ஈர்த்தது”. அவனே தன் வாய்க்க வந்த பாடலை பாடிக்கொண்டு இருந்தான். 

 

 

 

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க

இத்தனை நாளாய் தவித்தேன்

கனவே கனவே கண்ணுறங்காமல்

உலகம் முழுதாய் மறந்தேன்

 

 

கண்ணில் சுடும் வெய்யில் காலம்

உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்

அன்பில் அடை மழைக்காலம்

இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

 

 

நீ நீ ஒரு நதி அலையானாய்

நான் நான் அதில் விழும் இலையானேன்

உந்தன் மடியினில் மிதந்திடுவேனோ

உந்தன் கரை தொட பிழைத்திடுவேனோ

 

 

அலையினிலே பிறக்கும் நதி

கடலினிலே கலக்கும்

கனவினிலே இருப்பதெல்லாம்

மௌனத்தினிலே கலக்கும்

 

 

அன்பே என் அன்பே

 

 

 

நீ நீ புது கட்டளைகள் விதிக்க

நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க

இந்த உலகத்தை ஜெயித்திடுவேன்

அன்பு தேவதைக்கு பரிசளிப்பேன்

 

 

எதை கொடுத்தோம் எதை எடுத்தோம்

தெரியவில்லை கணக்கு

எங்கு தொலைத்தோம் எங்கு கிடைத்தோம்

புரியவில்லை நமக்கு

 

 

 

அன்பே என் அன்பே உன்…

 

 

 

 

அன்பு தொடரும்…. 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!