Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

SEMBULAM SERNDHA NEERTHULI

அ32_2 – Shoba Kumaran’s செம்புலம் சேர்ந்த நீர்த்துளி 

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி  –  32_2

 

நின்ற இடத்தில் அப்படியே நின்றிருந்தாள். இதயம் தன் துடிப்பை நிறுத்த தயார் ஆனது. முடியுமா? மூர்த்தி இல்லாமல் முடியுமா? மூர்த்தியை விட அவளின் மற்ற விருப்பம் பெரிதா?

 



Advertisement

பேசியது அவள் மூர்த்தி சார் இல்லை. இது யாரோ என்றது மனது. அதனால் கண்ணீர் வரவில்லை. பேசியது அனைத்துமே பொய். ஏன் பேசினான்?

 

பேச்சின் அர்த்தம் புரிந்தது. மெல்ல உணர்வு வரவும்… திறந்திருந்த கதவின் வழி நடுக்கூடம் சென்றாள். பானு பானை ஓலைப் பாயில் உறங்கி இருந்தார்.

Advertisement

 

Advertisement

வெளிக் கதவு பூட்டப்படாமல் சாத்தியிருக்க… வெளியே பார்த்தாள். வெறும் இருட்டு. எங்குச் சென்று மூர்த்தியைத் தேட… வழியில் தான் இருப்பான். பிடித்துவிடலாம். வாசலைத் தாண்டி… ரோஜா பந்தல் தாண்டவும்.. “துளசி மா…” திண்ணையிலிருந்து சத்தம்.

 

கலக்கத்திலும் மொழிந்த வார்த்தைகளைக் கவனிக்கத் தவறவில்லை. என்றுமே அவள் அவன் ‘துளசி மா’ தான்.. இதில் அவன் திருமணத்தை நிறுத்துவானாமா? இருட்டில் நின்றிருந்தவனிடம் சென்றவள்..

Advertisement

 

“ரொம்ப பேசிடீங்க மூர்த்தி சார்..” அவளுக்கும் கோபம். எப்படி இப்படிப் பேசலாம் என்ற கோபம்.

 

“நான் பேசினா நீ கவனிக்கவே மாடேன்றியே… அப்புறம் நான் என்ன பேசினா உனக்கு என்ன?” அலட்டிக்கொள்ளாமல் அவன் பதிலுரைக்க..

 

“இனி மேல் அப்படி பேசாதீங்க..” என்றாள் முடிவாய்.

 

“ஏன்?”

 

“ஏன்னா.. எனக்கு மனசு வலிக்குது..”

 

“எனக்கு மனசில்லையா? அது வலிக்காதா? நான் சொல்றத காது கொடுத்து கேக்கவே மாட்டேன்னு முடிவில இருக்க!”

 

“நீங்க என்ன சொல்லி நான் கேக்கல?”

 

“நீ போனது தப்பில்ல. போன நேரம் தப்பு.. காரணம் அது ஆபத்தான நேரம். கூட போன நபர் தப்பானவன் இல்ல… ஆனா நீ இல்லாத நேரம் எதுகாது உன்ன அக்கா தேடி இருந்தா… நீ இல்லேனதும் நாங்க எல்லாரும் எப்படி பயந்திருப்போம்.. அத நீ யோசிக்கல. போன இடத்தில ஏதாவது ஆகி இருந்தா… உன்ன மட்டும் தான் அது பாதிக்குமா? நான் என்ன ஆவேன்னு நீ யோசிக்கவே இல்லியே! உன்னோடு ஒரு சின்ன செயல்ல கூட நான் உன் புருஷனா இருக்கவே இல்லியே…

 

அப்போ என் உணர்ச்சி? அதுக்கு மதிப்பு? அத சொல்ல வந்தா கூட புரிஞ்சுக்க மாட்டேன்னு நீ அடம் பிடிச்சா நான் வேற எப்படி பேச?”

 

“ஏன் நீங்களும் சராசரி ஆம்பளைங்க மாதிரியே பேசறீங்க மூர்த்தி சார்?” சலிப்பாய் தோன்றியது.

 

“நான் சராசரி ஆம்பள தான் துளசி. என் மனைவிய என் குழந்தையா கைல தாங்கணும்னு நினைக்கிற சராசரி ஆம்பிள தான். என் துளசிய யாரும் ஒரு வார்த்த தப்பா பேச கூடாதுன்னு நினைக்கிற சராசரி ஆம்பிள தான். என் பொண்டாட்டியோட நம்பிக்கையும் காதலும் நானா இருக்கணும்னு நினைக்கிற சராசரி ஆம்பிளை தான்.. அது இல்லன்னு நினைக்கும் போது மனசு உடைஞ்சு போற சராசரி ஆம்பிள்ளை தான் நான்.  

 

இதுல தப்பிருக்கதா எனக்கு தெரியல துளசி.”

 

[the_ad id=”6605″]

 

 

 

அமைதியாய் திண்ணையில் அமர்ந்துகொண்டாள். இப்படி எல்லாம் அவள் நினைக்கவே இல்லை. சின்ன செயல் அவனை இப்படி துன்பத்தில் தள்ளும் என்று நினைத்தாள் இல்லை.  தான் இன்னும் வளரவேண்டுமோ?

 

“தாத்தா வீட்டுல பட்டாம் பூச்சியா பறந்தேன். என் சிறக உடச்சு  கூண்டுக்குள்ள போட்டாங்க அப்பா வீட்டுல. ஒரு கை அந்த சிறையில இருந்து மீட்க வந்ததுன்னு நம்பி ஏமாந்தேன். என்னை அறியாமலே வேற சிறைக்குப் போனேன். என்னைத் தின்ன வந்த கடைசி மிருகம் வரைக்கும் போராடினேன். அப்பவும் பாம்பே போனதும் மிருகங்க கிட்ட இருந்து தப்பிச்சுட்டேன்னு தான் நினைச்சேன்… நடந்தது ஒரு விபத்துன்னு என்னையே தேற்றிக்கிட்டேன். இது எல்லாமே உங்களுக்குத் தெரியும்.

 

உண்மை எதுவும் தெரியறதுக்கு முன்ன… அதாவது நான் பணத்துக்காக ஒருத்தனுக்கு உழைச்சு கொட்டிட்டு இருந்தேன்னு தெரியறதுக்கு முன்ன… நடந்த அசிங்கம் எல்லாம் மனசில பச்சையா இருந்த காலம்.. ஒரு நாள் அந்த வீட்டுக்குப் பின்னாடி இருந்த துணி கல்லுல உக்காந்திருக்கும் போது ஒரு பட்டாம் பூச்சிய பார்த்தேன். ரொம்ப அழகா இருந்துது. அது அழகா இருந்தாலும் அது சிறக யாரும் பிடுங்கவே இல்ல… எனக்கு அதப் பார்த்ததும் திரும்பவும் பறக்கணும்னு ஆசை வந்தது.”

 

நிறுத்தி நிதானமாக மூர்த்தியின் முகம் பார்த்தவள், “அந்த நிலமைல நான் சாக நினைச்சிருக்கணுமா மூர்த்தி சார்? தெரியல. எனக்கு சாக தோணலை. யாரோ தப்பா போனதுக்கு நான் ஏன் சாகணும்னு தோணிச்சு. எனக்கு சிறக விரிச்சு பறக்க தான் அப்பவும், அந்த நிலமையிலேயும் ஆசையா இருந்துது. அந்த ஆசை தப்பா? அதுவும் அசட்டு தனமா?

 

அந்த அசட்டு ஆசை இருக்கவே தான் போராடினேன் மூர்த்தி சார். அந்த அசட்டு ஆசை தான் என் வாழ்க்கையை நான் நிர்னைக்கணும்ன்னு என்னை எழுப்பி நிறுத்திப் போராட வச்சுது. இல்லேனா… ‘அது தான் ஒரு தரம் பாழாயிட்டேனே.. எதுக்குப் போராடணும்’னு ரெண்டாவது நாளே நினைச்சிருப்பேன்.”

 

“..”

 

“உண்மை எல்லாம் தெரியவும்… கேவலம் பணத்துக்காக…? அப்போ தான் உடஞ்சே போனேன். என் முதுகுல குத்தினதை தான் தாங்க முடியல. அப்போ தான் உண்மையாவே என் சிறகு கிழிஞ்சு போச்சு மூர்த்தி சார். முழுசா செத்தே போயிட்டேன்.”

 

முன் போல், பழைய காயங்கள் கண்ணீர் கொண்டுவரவில்லை. குரலில் வெறுமை அவ்வளவு தான். கடந்திருந்தாள். காயங்கள் விட்டுச் சென்ற தழும்பு மட்டும் தான். இரண்டு வருடத்தில் மாறியிருந்தாள். இல்லை மாற்றியிருந்தான் அவளை.

 

வீட்டின் அருகே சருகு மிதிபடும் சத்தம். அவள் கவனம் சிதற.. “என்ன துளசி?”

 

“சத்தம் மூர்த்தி சார். யாரோ?”

 

“நம்ம தோட்டம் தான் கடைசி. சுத்தி வீடு கூட இல்ல. யார் வர போறா? காட்டு பூனை சுத்திட்டு இருக்கும்.”

 

சிறிது நேரம் இரவில் மூழ்கினர். ஆரம்பித்த கதையை முடிக்கும் நோக்கம் எழ..

 

“நீங்க வராட்டி… பச்! காப்பாதினதும் அப்பா வீட்டில விட்டுட்டு போயிருக்கலாமே? ஏன் மூர்த்தி சார் என் கூட அவ்வளவு போராட்டம் உங்களுக்கு? செத்துப் போன எல்லா உணர்வையும் நீங்க தானே மீட்டு எடுதீங்க? யாரையுமே நம்பாத இருந்த எனக்கு நம்பிக்கையான ஆட்களைக் காட்டி உறவை ஏற்படுத்திக் கொடுத்தது நீங்க தானே? காலேஜ்… ஹாஸ்டல்.. ஃப்ரெண்ட்ஸ்.. எல்லாமே பாத்துப் பாத்து எதுக்கு என் வாழ்கைல அனுமதிச்சீங்க?

 

எனக்காக தரையில முதல் நாள் நீங்க படுத்திருக்கறத பார்த்ததும் பிரமிப்பா இருந்துது. எனக்காகவான்னு? காரமும் புளிப்புமா என் கையில நக்க கொடுத்த அந்த மொச்சகொட்ட குழம்புல ஆரம்பிச்சு, இனிப்பா, கசப்பா இறங்கின காபில தொடர்ந்து… காலுக்கடியில் சருக்கிப் போன பீச் மணல் வரைக்கும் எல்லாமே பிரமிப்பு தான்.

 

செத்த உணர்வ எல்லாம் மீட்டது நீங்க தானே? உங்களுக்கு என்னை தெரியலியா? நீங்க என்னை எங்கேயுமே பூட்டி வைக்கல. நான் கனவு கண்ட மாதிரியே என்னை உயிர்ப்பான பட்டாம் பூச்சியா மாத்தினது நீங்க தானே..

 

செல்வா உங்க தம்பி. எனக்கும் அவன் தம்பி தான். அப்படி தான் நினைச்சேன். நிலா, ராட் மாதிரி ரொம்ப நல்ல ஃப்ரெண்ட். அவன நம்பினேன்… அவன் எதையோ ரசனையா சொன்னதும் எனக்கு ஆசை வந்துது. அதுல என்ன தப்பு? சொல்லாம போனது வேணும்ன்னா தப்பா இருக்கலாம். ஆனா நான் போனது தப்பில்ல.

 

நான் போனது தம்பி கூட. தப்பான இடத்துக்கு போகல. நட்சத்திரம் பாக்க சரியான நேரம் தான் அது. திருடன் பயம் கூட இல்லதா ஊர் இது. பிரச்சினை இருக்கும்ன்னா அவன் என்னை அங்க கூட்டிட்டு போவானா? அவன் உங்க தம்பி மூர்த்தி சார். நான் சாப்பிடுற ஸ்னாக்ஸ் கூட எனக்கு பிடிச்சதா.. உடம்பு நல்லத மட்டுமே தர உங்க தம்பி மூர்த்தி சார். என்னை தப்பான.. ஆபத்தான இடத்துக்கு கூட்டிட்டு போவானா? ஏன் நீங்க அத யோசிக்கல? உங்களுக்கு எப்படியோ..? எனக்கு அவன் மேல முழு நம்பிக்கை இருந்துது.. அதனால போனேன். இப்போ, இன்னும் அதிகமா இருக்கு.

 

[the_ad id=”6605″]

 

 

 

இதுல அசட்டு தனம் எங்க இருந்து வந்துது?

 

நீங்க புரிஞ்சுக்காம.. விசாரிக்காம அவன ரொம்ப ஹர்ட் பண்ணிட்டிங்க.

 

நாங்க ஒண்ணும் பிரச்சினையைத் தேடி போகல.. போன இடதில தெரியாம தூங்கிட்டோம்.

 

‘பாத்தா தப்பா பேசுவாங்க’.. அந்த மாதிரி சத்தியமா எனக்கு யோசிக்க தெரியல. அவன் எனக்கும் தம்பின்னு நினைக்காம இருந்திருந்தா யோசிச்சு இருப்பேன்… கண்டிப்பா போயிருக்க மாட்டேன். வயசுல பெரியவன் தான்.. ஆனா உறவால எனக்கு செல்வன் தம்பி தான்.

 

தெரியும் போது நீங்க கோபப்படுவிங்கன்னு தெரியும்… என் காதுல ரத்தம் வர வைப்பிங்கன்னு நினைச்சேன்… என் மனசில இல்ல. மனசுக்கு பிடிச்சத செய்யறது.. அவ்வளவு பெரிய தப்பா?”

 

எதுவும் பேசாமல் நடக்க ஆரம்பித்தான் தோட்டத்தைச் சுற்றி. எழுந்து கூடவே நடந்தாள்.

 

“எனக்கு என் சந்தோஷம் தான் முக்கியம்.. எல்லாருக்கும் அப்படி தானே மூர்த்தி சார். மத்தவங்க சந்தோஷத்துக்காக யாரும் வாழறது இல்லியே. அதே மத்தவங்க சந்தோஷத்தில நமக்கு நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும்ன்னா தான் அவங்க நம்ம கண்ணுக்கே தெரிவாங்க. எல்லாருமே இந்த உலகத்தில செல்ஃபிஷ் தான்.

 

நானும் தான். என் ஹேப்பினஸ் எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்.

 

என் சந்தோஷம் நீங்க தான். உங்க கூட இருந்தா மட்டும் தான் நான் நானா இருக்கேன். நீங்க இருக்க தைரியத்தில தான் சிறக விரிச்சு பறக்குறேன், எனக்கு பிடிச்சத நான் செய்யறேன்.

 

அது உங்க நிம்மதிய குலைக்கும்னு எனக்கு தெரியல. அதுக்காக எனக்கு உங்க ஃபீலிங்க்ஸ் மேல அக்கறை இல்லேன்னு நினைக்காதீங்க. இனி மேல் செய்ய மாட்டேன். உங்கட்ட கேக்காம செய்யவே மாட்டேன். நீங்க எனக்கு முக்கியம். ரொம்ப முக்கியம்.

 

நேத்து மலைல பார்த்த பிரமிப்பு உங்க முன்ன எனக்கு ஒண்ணுமே இல்ல. நீங்க.. உங்க மனசு.. உங்க காதல்.. அத விட பெருசா என்னை பிரமிக்க வச்ச விஷயம் எதுவுமே இல்ல. உங்கள முதல் முதலா பார்த்த அன்னைக்கே வாய பிளந்தேன்… அந்த எபெக்ட் இன்னைக்கு வரைக்கும் எனக்கு எதைப் பார்த்துமே ஏற்படலை.

 

நான் உங்கள ரொம்ப காதலிக்கறேன் மூர்த்தி சார். உங்க கூட என்னுடைய வாழ்கையைப் பங்கு போட ஆசை படுறேன். நம்பக் கஷ்டமாயிருந்தாலும் அது தான் உண்மை.

 

உங்க மேல நான் எக்கசக்க பைத்தியாமா இருக்கேன் மூர்த்தி சார்.”

 

நின்று அமைதியாக அவளைப் பார்க்க..

 

“நிஜம் மூர்த்தி சார்.” அவன் மறுப்பாய் ஒன்றும் பேசவில்லை.

 

“தமிழ் தான் பேசறேன் மூர்த்தி சார். புரியாத பார்வை பாக்கறீங்க…?” அந்த இருட்டிலும் மின்னிய அவன் கண் அவளை ஊடுருவ..

 

பார்வையை எதிர்நோக்க முடியாமல் மெல்லத் தழுவினாள். நெஞ்சில் கன்னம் பதித்து, “லவ் பண்றேன் மூர்த்தி சார் உங்கள, என் மனசார! கல்யாணம் பண்ணிக்கலாம் மூர்த்தி சார்.. கடைசி மூச்சு இருக்க வரைக்கும் சேர்ந்து வாழலாம் மூர்த்தி சார்.” ஏக்கமாய்… காதலாய்.. மொழிந்த வார்த்தைகள்.

 

அமைதியாகத் தலை வருடியவனின் முகம் பார்த்து.. “நீங்க உள்ள சொன்னது எல்லாம் பொய்ன்னு எனக்கு தெரியும் மூர்த்தி சார். இனி மேல் என்னை பயமுறுத்தக் கூட இப்படி எல்லாம் பேசாதீங்க” என்றாள்.

 

“சொல்ல மாட்டேன் துளசி. நீ நீயாவே இரு துளசி மா..  உனக்கு பிடிச்சத செய். ஆனா என்னையும் அதில சேர்த்துக்கோ அவ்வளவு தான். உன் உலகத்தில இருக்க விரும்பறேன்.. தள்ளி நிறுத்தாத.”

 

இறுக்கி கொண்டாள். “நான் உங்க சின்ன பொண்ணு மூர்த்தி சார்..” செல்லம் கொஞ்ச..

 

“ஆமா துளசி மா..” உச்சந்தலையில் இதழ் பதிக்க..

 

“நானே நினைச்சா கூட தள்ளிப் போக முடியாது. காத்து புல்லாங்குழல் குள்ளதான் நுழையும் மூர்த்தி சார்.”

 

“ஆமா துளசி மா..” சிரித்தான். இருவர் முகத்திலும் ஒட்டிக் கொண்டது அந்த சிரிப்பு.

 

[the_ad id=”6605″]

 

 

 

கூட்டை திறந்து வைத்துக் காத்திருந்தான். இரண்டு வருடம் பிடித்தது அவன் கிளி அவனிடம் வர! காத்திருந்த காலம் எல்லாம் பனி போல் கரைந்தது அவளின் ஒற்றை அணைப்பில்.

பார்க்க தயங்கி.. பேச தயங்கியவள்,  இன்று உல்லாசமாய்.. உற்சாகமாய்.. நெஞ்சோடு நெஞ்சாக நின்று.. அவன் காதில் சங்கீதம் பாடிக்கொண்டு..  

 

உன்னை காணாது உருகும் நொடி நேரம்

பல மாதம் வருடம் என மாறும்

 

நீங்காத ரீங்காரம் நான் தானே

நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே

 

ராகங்கள் தாளங்களோடு

ராஜா உன் பேர் சொல்லும் பாரு

 

சிந்தாமல் நின்றாடும் செந்தேனே

சங்கீதம் உண்டாகும் நீ பேசும் பேச்சில் தான்…

 

 

 

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!