Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

இடம் தருவாயா மனசுக்குள்ளே?? 19

மனசு 19
ஆல்கஹால் அருந்திக் கொண்டிருந்த ஆபிஸ் ஆட்கள் மட்டையாகவும் மெதுமெதுவாக விதார்த் அருகே வந்தாள் ஷோபனா.
விதார்த் போதையில் இருக்க கை காட்டி ஒருவனை அழைத்து மேலும் ஒரு பானத்தை விதார்த் கையில் கொடுத்தாள். அவன் ஆபிஸ் ஆட்கள் என எண்ணி மதுவை அருந்த, “டிரக்ஸ் நல்லா வேல பாக்கும்ல?” பேரரிடம் கேட்டாள்.


Advertisement

“வீரியம் மிக்க போதை மேடம்…” என்று அவன் தலையை சொறிய, அவனுக்கு சில பணக்கட்டுகளை கொடுத்து, “இவன பாத்துக்கோ. நீ அரேஞ்ச் பண்ணி வச்சிருக்கிற ரூமை நான் பாத்துட்டு வாரேன்” என கையில் மதுக்குவளையை எடுத்து சிப் சிப்பாக அருந்தியவாறு சென்றாள்.

Advertisement

சற்று நேரத்தில் அவள் வரவும்,

Advertisement

மேடம்…

Advertisement

“இரு…என்ன விட நீ அவசரப்படுற…” கைபேசியை எடுத்து நகர்ந்து பேசிக் கொண்டிருந்தாள் ஷோபனா.
உடனிருந்தவனை பணக்காரன் ஒருவன் அழைக்கவும் அவன் ஷோபனாவை பார்த்துக் கொண்டே சென்றான். அவன் சென்ற நிமிடம் உள்ளே வந்த சாயாலி சுற்றும் முற்றும் பார்க்க….ஷோபனாவை பார்த்து விட்டாள்.
விழிகள் அலைய விதார்த்தை கண்டு அவனிடம் ஓடி வந்து அவனை நிமிர்த்தி,
“அய்யோ இப்படி குடிச்சிருக்காறே! ஏன்டா எல்லாரும் லவ் பண்ற பொண்ண காப்பாத்த வருவாங்க…ஆனா நம்ம விசயத்துல எல்லாம் உல்ட்டாவா இருக்கு. உன்ட லவ் சொல்லி நான் கல்யாணம் பண்ணி என்ன செய்யப் போறேனோ? அப்பவும் உன்ன நான் தான் வச்சு காப்பாத்தணும்…” சொல்லி தலையில் அடித்தாள்.
ஷோபனா திரும்புவது போல இருக்க, அவசரமாக டேபிள் அடியில் மறைந்தாள் சாயாலி. ஷோபனா விதார்த்தை பார்த்து விட்டு பேச்சை தொடர்ந்தாள். இதுக்கு மேல இங்க இருந்தா நமக்கு ஆபத்து தான் என்று விதார்த்தை எழ வைக்க முயற்சி செய்து கடைசியாக அவன் தலையில் மூன்று கொட்டு கொட்டினாள். அவன் போதையில் இருக்க ஒன்றும் தெரியவில்லை..
வேற வழியேயில்ல என்று அவளது தாவணியை அவிழ்த்து அவனையும் அவளோடு சேர்த்து கட்டி விதார்த் கால்கள் தரையில் இழுபட சிரமப்பட்டு இழுத்து சென்றாள்.
“மேடம்…” பேரர் இவர்களை பார்த்து கத்த,
திரும்பிய ஷோபி, “அவங்க ரெண்டு பேரையும் பிடிங்கடா. இவள எப்படி விடுவேன்?” என அவளும் ஓடி வர, மற்றவர்களும் விரட்ட, விதார்த்தையும் இழுத்துக் கொண்டே வெளியே வந்து பட்டென இருவரையும் பிணைத்திருந்த தாவணியை அவிழ்த்து அவனை பின்னிருக்கையில் தள்ளி விட்டு காரை எடுக்க எல்லாரும் வந்து விட்டனர்.
“விடாதீங்கடா…விரட்டுங்கடா அவங்கள விட்றக்கக் கூடாது” ஷோபனா கத்த, ஷோபனாவின் நண்பர்கள் அவளை விரட்டினார்கள். அதுவரை மட்டும் தான் பதிந்து இருந்தது…
அதோடு விடாமல் இன்பவேணி கைபேசியிலிருந்த மற்றுமொரு வீடியோவை ஓட விட்டாள். சாலைக்கம்பத்தில் இருந்த சிசிடிவியில் கலெக்ட் செய்தது அது.
ஷோபனாவும் அவள் ஆட்களும் பைக், காரில் விரட்ட, பயங்கர வேகத்தில் காரை ஓட்டி அவர்களிடமிருந்து தப்பி வரும் போது எதிரே வந்த லாரியை பார்த்து காரை திருப்ப…கார் போஸ்ட் கம்பத்தில் மோதியது.
ரவுண்ட்ஸ் வந்திருந்த போலீஸை பார்த்து ஷோபனா கட்டளையின் பெயரில் அவர்கள் சென்று விட, இவள் ரிவர்ஸ் எடுத்து போலீஸை ஓட விட்டு விதார்த்தை வீட்டில் சேர்த்திருந்தாள்.
பாட்டி வாயில் கை வைத்து பார்க்க,. “இருங்க..இன்னும் இருக்கு” என்று மற்றதையும் போட்டாள். அதில் மீண்டும் பப் வந்த ஷோபனா கோபமுடன் அங்கிருந்த பொருட்களை அடித்து நொருக்க, ஓனர் அவளை பிடித்து அடித்து விட்டான்.
“நான் நினச்ச மாதிரி தார் என்னோட கைக்கு வரல…அவள…” கத்தினாள்.
அங்கே வந்த ஒருவன், “பணத்த குடு…அதான் அந்த பொண்ணு தப்பிச்சிட்டால்ல? அவள எனக்கு குடுக்குறேன்னு ஒன் குரோர் வாங்கின…இப்பவே பணத்த வை இல்ல நான் உன்ன கொல்லாமல் விட மாட்டேன்” கத்தியை எடுத்தான்.
உதய்கிருஷ்ணாவும் மற்றவர்களும் இதை கண்டு திகைத்து விட்டனர்.
உதய்கிருஷ்ணாவை மிரட்டும் எண்ணம் ஷோபிதாவிற்கு இல்லை. அவள் வேண்டுமென்றே தான் சாயாலிக்கு அனுப்பி வர வைத்தாள்.
கத்திய உள்ள வை. அவள கண்டிப்பா உன்ட ஒப்படைப்பேன். பிராமிஸ்,…என்னோட தாரை கூட தனியே பாத்துக்கிறேன். முதல்ல அவ கதை முடிச்சா தான் நான் நிம்மதியா இருப்பேன். அவ கண்ணுல தார் மேல காதல் தெரியுது. தார் என்ன மட்டும் தான் காதலிக்கணும்…ப்ளீஸ் ஒரு வாய்ப்பு மட்டும் குடு..
ம்ம்…சரி. உனக்கு ஒரு நாள் தான் டைம்.
என்னோட அண்ணா கௌதம்ட சொல்றேன். அவன் கண்டிப்பா அந்த சாயாலிய தூக்கிட்டு வந்துருவான்..
நீ என்ன செய்வன்னு தெரியாது. அந்த அழகி எனக்கு நாளையே வேணும்..
“கண்டிப்பா..” என கை குலுக்கி அவனை சமாதானப்படுத்தி திமிருடன் பப் ஓனர் முகத்தில் பணத்தை விட்டெறிந்தாள். அந்த கோபத்தில் தான் பப் ஓனர் அனைத்தையும் மானவ் இன்பவேணியிடம் வீடியோவை கொடுத்திருப்பான்.
“விதுவ சாயா லவ் பண்றாளா?” சித்ரலேகா குரலில் கண் மூடி இருந்த மானவ் விழித்தான்.
“அப்படின்னா? அந்த பொண்ணு விதுவ கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சுல்ல இருக்கணும்? ஆனா அவ உதய்ட இருந்து விதுவ பிரிக்க நினைக்க மாட்டாளே!” என்றார் ராமநாதன்.
என்ன? மானவ் எழுந்தான்.
அங்கிள்..அவ கோபத்துல பேசி இருப்பா என்றாள் இன்பவேணி.
“இல்லம்மா, அந்த பொண்ணு உங்க மேரேஜ் முடியவும் எங்கேயோ போறதா சொல்லீட்டா” ராமநாதன் வருத்தமுடன் அமர்ந்தார்.
சாயாலியிடம் தான் தவறாக தான் பேசி விட்டோம் என உணர்ந்து யோசனையுடன் நின்றிருந்தார் உதய்கிருஷ்ணா.
“உங்களுக்கான ஆதாரம் குடுத்துட்டோம் பாட்டி. இதுக்கு மேல என்ன பண்ணலாம்னு நான் பாத்துக்கிறேன்” என்று மானவ் செல்ல, எல்லாரையும் பார்த்து உதய்கிருஷ்ணாவை முறைத்து குழந்தையை பார்த்தவாறு இன்பவேணி மானவ் பின் ஓடினாள்.
ராமநாதன் அமர்ந்திருக்க, பாட்டியும் சித்ரலேகாவும் அவர்கள் பின் சென்றனர்.
விதார்த் கை பிடித்தவாறு கோசலை அழுத தோற்றத்தில் அமர்ந்திருந்தார்.
மானவ் இவர்களை பார்த்துக் கொண்டே சாயாலி அறைக்கதவை தட்ட, உறங்க முடியாமல் தவித்து சோர்வுடன் அழுது கொண்டிருந்த சாயாலி முகம் கழுவி முகத்தை துடைத்து கதவை திறந்தாள்.
மேடம், எல்லாரும் ஏதோ சொல்றாங்க?
அது..அ…து…சாயாலி தயங்கி இன்பவேணியை பார்க்க, அவள் இடுப்பில் கை வைத்து வெறித்து நின்றிருந்தாள்.
அவள விடுங்க. நீங்க சொல்லுங்க? எங்க போகப் போறீங்க? நானும் அனீஷூம் வாரோம்..
அவன் முதுகில் அடித்த இன்பவேணி, “என்ன விளையாடுறீங்களா? நீங்களே அடிச்சு பத்துனாலும் நான் உங்கள விட்டு போக மாட்டேன்னு சொன்ன?” கோபமாக கேட்டாள்.
“அக்கா…” தயங்கி அவள் தலை கவிழ்ந்தாள்.
பாட்டியும் சித்ரலேகாவும் வந்தனர்.
“எங்க போகப் போற? தனியாலாம் எங்கேயும் போகாத..” சித்ரலேகா பொரிந்து தள்ள,
“நான் அடிச்ச கோபத்துல போறீயாம்மா? நான் கோபத்துல…விது எம் முன்னாடி இருந்தா அவன அடிச்சிருப்பேன். அவன் முன்னாடி இல்ல அதான் கோபத்துல்ல உன்ன அடிச்சிட்டேன். மன்னிச்சிரும்மா..” சாயாலி கையை பிடித்தார்.
கண்ணீர் வந்தது அவளுக்கு.
“அதுக்கு நான் போகல. ஆனா நான் போறது தான் நல்லது” விதார்த்தை பார்த்தாள்.
“யாரு சொன்னா நீ போறது தான் நல்லதுன்னு…????” உதய்கிருஷ்ணா கேட்க, யாரும் அவனை எதிர்பார்க்கவில்லை. கோசலையும் விதார்த்தும் எழுந்து நின்றனர்.
விதார்த்தை பார்த்து விட்டு சாயாலியிடம் வந்தான்.
எனக்கு எல்லாமே விதுவும் பாப்பாவும் தான். திடீர்ன்னு ஒரு பொண்ணு அவனோட அறையிலிருந்து சோர்ந்து வந்தா…அதுவும் அவன் போதையில் இருக்கும் போது…நான் என்ன நினைப்பேன்? தப்பா தோணுச்சு பேசிட்டேன். அதுக்காக எங்கள பிரிக்க இப்படி அவன்ட கண்டிசன் போடுவியா?
சாயாலி அமைதியாகவே இருந்தாள்.
மானவ்வை ஏதும் பேச விடாமல் அவன் கையை அழுத்தி பிடித்தாள் சித்ரலேகா. அவன் முறைக்க அவள் மேலும் அழுத்தி பேசாதே! என அவளது எதிர்ப்பை காட்டினாள்.
“சரி, நீ எதுவும் பதில் சொல்லாத. வா விது, உனக்கு வேற பொண்ணு பாக்கலாம்” கூற, எல்லாரும் திகைக்க, சாயாலிக்கு அழுகை வந்தது.
“எதுக்கு அழுற? எல்லாரும் உம் மேல தப்பில்லன்னு சொல்லீட்டாங்க. உன்னோட அக்காவும் இவனும் ஆதாரம் காட்டிட்டாங்க. உம் மேல தப்பேயில்ல.. உனக்கு இவ்வளவு நல்லா டிரைவ் பண்ண தெரியுமா? என்னால இதெல்லாம் ஹேண்டில் பண்ண முடியாது” உதய்கிருஷ்ணா சாயாலியை பார்த்தான்.
அவளை பேச வைக்க உதய்கிருஷ்ணா முயற்சிக்க, “டிரைவ்வா? என்னது?” விதார்த் கேட்க, வேகமாக நிமிர்ந்து உதய்கிருஷ்ணாவையும் மற்றவர்களையும் பார்த்தாள்.
“முழிக்காத! விது, உங்க அம்மா தவிர எங்க எல்லாரும் உன்னோட சீக்ரெக்ட் தெரிஞ்சுடுச்சு..” சித்ரலேகா புன்னகைக்க, கோசலையும் விதார்த்தும் பார்த்துக் கொண்டனர்.
இன்பவேணியை நெருங்கி, “அக்கா…” சாயாலி அவள் கை பிடிக்க…
தொடாதடி, எங்கிட்ட மறைச்சுட்டேல்ல?
“என்ன மறைச்சா? எதுவும் பிரச்சனையா?” பதறினார் கோசலை.
சொல்ல மாட்டோம். யாரும் சொல்லாதீங்க. அவளே இவங்கட்ட சொல்லட்டும்..
“இல்ல, நான் போகணும்” இன்பவேணி கையை விட்டு சாயாலி அறைக்குள் செல்ல பார்க்க, மானவ் கையை விட்டு ஓடிச் சென்று அறைக்கதவில் சாய்ந்து கை நீட்டி மறைத்து நின்று புருவம் உயர்த்தி புன்னகைத்தாள் சித்ரலேகா.
அண்ணீ…
அண்ணீ தான்…நீ விதுட்ட சொல்லு…அப்புறம் ஓய்வெடுக்கலாம்.
அப்படிலாம் ஒண்ணுமில்ல.
“அக்கா இவள விடுங்க. வா விது, பாட்டி நீங்க கூட அக்காவுக்கு மாப்பிள்ள பாக்கும் போது விதுவ யாரோ ஒரு பொண்ணுக்கு விசாரிச்சதா சொன்னாங்கல்ல…அவங்கட்ட பேசலாம்..” என்று விதார்த்தை இழுத்து சென்றான் உதய்கிருஷ்ணா.
“எங்கிட்ட சாயா என்ன சொல்லணும் அண்ணா?” புரியாதவனாக விதார்த் கேட்க, கோசலை ஏதோ புரிந்தவராக சாயாலியை பார்த்தார்.
“ஆமா பாட்டி, இவ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டா. வாங்க நாமும் போகலாம்” என ராமநாதனை சித்ரலேகாவை பார்க்க, அவரும் கிளம்பி விட்டார்.
“நான் சரிப்பட்டு வர மாட்டேனா?” அவளது இயல்பில் முணுமுணுத்தாள் சாயாலி
புன்னகையுடன் தலையாட்டி சித்ரலேகா சிரித்துக் கொண்டே செல்ல அனீஷீம் அவளுடன் சென்றான்.
சித்ரலேகாவை ரசித்துக் கொண்டிருந்த மானவ்…தலையை சிலுப்பி…சாயாலியை பார்த்தான்.
மேடம், உங்களுக்கு அவர பிடிச்சிருந்தும் ஏன் இப்படி பண்றீங்க?
அது..மாமா…இழுத்தாள் சாயாலி.
அவர் பேசுனா நீயும் பதில் கொடுக்க வேண்டியது தான? அதுக்காக அவங்களே கேட்டு வரும் போது விதுவ வேண்டாம்னு சொல்வீயா? உனக்கு பேசவா சொல்லி தரணும்?
“மேடம், எங்க போறதா உத்தேசம்?” மானவ் அமர்ந்து சாயாலியை உறுத்து பார்த்தான்.
அவள் திணற..
அவர பத்தி கவலைப்படாதீங்க மேடம். அதான் அவங்க வீட்ல மேரேஜ் பண்ணி வைக்கிறதா சொன்னாங்கல? உங்க அவரு ஹாப்பியா இருப்பாரு. நாம எங்க போகலாம்? பெங்களூர்…இல்ல என்னோட ப்ரெண்டோட ஊர் தூத்துக்குடிக்கு போகலாமா? நக்கலாக கேட்டான் மானவ்.
உதட்டை பிதுக்கி அவள் கவனம் வெளியே செல்ல, இருவரும் சிரிக்க, கோசலை கோபித்துக் கொண்டார்.
ஆன்ட்டி…
“சாயா என்ன பேசிட்டா தெரியுமா?” கோசலை அழுது கொண்டே விசயத்தை சொல்ல, இருவரும் கோபமாக அவளை பார்த்தனர்.
சாரிம்மா..கோபத்துல சொல்லீட்டேன். நீங்க அவங்களுக்காக அடிச்சுட்டீங்க…
“அடிக்க எனக்கு என்ன உன்ட உரிமையா இருக்கு? மன்னிச்சிரும்மா…” கோசலை முகம் திருப்ப, “சாரிம்மா இனிமே இப்படி பேச மாட்டேன்” என அழுது கொண்டே அவரை அணைத்துக் கொண்டாள்.
வேணி, நம்ம மனோகர் அண்ணா மகன் நம்ம சாயாவ விட ஒரு வயசு தான் மூத்தவன். இருவரும் பொருத்தமா இருப்பாங்க. கல்யாணம் பண்ணிடலாம்…
இல்ல, நான் விது மாமாவயே கல்யாணம் பண்ணிக்கிறேன்..
“உனக்கு தான் உதய பிடிக்கலைல்ல? எப்படி இந்த கல்யாணம் நடக்கும்? இதுல உதய விட்டு தனியா விதுவ வர சொல்லி இருக்க? அவன் ஒத்துக்க மாட்டான்..” கோசலை முறைத்தார்.
“நான் மட்டும் அக்காவ விட்டு பிரிஞ்சு இருந்துருவேனா? உதய் மாமா மேல இருந்த கோபத்துல தான் இப்படி சொன்னேன். நான் யாரையும் பிரிக்க நினைக்கல” கொஞ்சலுடன் பேசினாள் சாயாலி.
“அப்ப கன்பார்ம்மா எங்களோட சேர்ந்து இருக்க நீ தயாரா இருக்கியாம்மா?” பாட்டி கேட்க, அவரை அணைத்து மன்னிப்பு கேட்டாள் சாயாலி.
“சரி, உதய் கல்யாணத்தோடவே விதுவுக்கும் உனக்கும் கல்யாணம் பண்ணிடலாம். உனக்கு ஓகேவாம்மா?” கோசலையிடம் பாட்டி கேட்க, விதார்த் அவ்விடம் வந்தான்.
“நல்லா கேட்டுக்கோங்க பாட்டி. அப்புறம் தனியா வீட்ட விட்டு வர்றத பத்திலாம் பேசக் கூடாது” அதட்டலுடனான கோபத்துடன் சொன்னான்.
நான் யாரையும் பிரிக்கணும்னு மனசால கூட நினைக்க மாட்டேன். உனக்கு பிடிக்கலைன்னா சொல்லிடு…
ஹப்பா, எப்படியோ நேரடியாவே கேட்டுட்ட? இன்பவேணி கேட்க, சாயாலி முகம் சிவந்தது.
பாட்டி தாத்தா வந்துருக்கார் எனவும் அனைவரும் முகத்திலும் பதட்டம்.
அவர நான் பாத்துக்கிறேன். நீங்க ஆகுற வேலைய பாருங்க. கல்யாணத்துக்கு ரெண்டு நாளு தான் நல்லா தயாராகுங்கம்மா என இரு மருமகளையும் நெற்றி வழித்தார் புன்னகையுடன்.
“பாட்டி, வந்து அவர பாருங்க. அப்புறம் கொஞ்சிக்கலாம்” என விதார்த் சாயாலியை பார்த்தவாறே சென்றான்.
உங்களுக்கு ஓ.கே தான? சாயாலி கேட்க,
நின்று அவளை பார்த்து…இல்லன்னு சொன்னா விட்ருவியா? வேற பொண்ணு பாக்க சொல்லவா? விதார்த் கேட்டான்.
அவள் முகம் கறுக்க, “சும்மா பேசுனேன். அதான் என்னோட பதில அப்பவே சொன்னேன்ல. திருமணத்துக்கு தயாராகு” என்று கோசலையை பார்த்து…
“ஆன்ட்டி, உங்க பொண்ணுங்க ரெண்டு பேரும் என்னோட பொறுப்பு. கண்டிப்பா இன்னுவும் சாயாலியும் எங்க வீட்ல சந்தோசமா இருப்பாங்க. பயப்படாம வேலைய கவனிங்க” என்று விதார்த் உறுதி கொடுத்து சென்றான்.
 “உனக்கென பிறந்தவ
றெக்ககட்டி பறந்தவ இவ தான்
 என்னைவிட உனக்கிங்கு
மனசுக்கு பிடிச்சவ எவ தான்??”
விதார்த் சாயாலி திருமணம் உதய்கிருஷ்ணா இன்பவேணி திருமணத்துடன் சேர்த்து வைத்துக் கொள்ளலாம் என பெரியவர்கள் பேச,
அதுக்கு முன்னாடி நான் உங்கட்ட பேசணும் என்றாள் சாயாலி.
இன்பவேணி கோசலை முகம் பதட்டத்தை தத்தெடுத்து இருந்தது.
உதய்கிருஷ்ணாவிற்கு அடிதடி சண்டையெல்லாம் அரவே பிடிக்காது என்பதால் சாயாலியை விதார்த் திருமணத்தை மறுத்து விடுவானோ? என்று பதட்டமுடன் அவனை பார்த்திருந்தனர்.
சாயாலி தயங்கிக் கொண்டே இருந்தாள்.
“என்ன விசயம்மா?” ராமநாதன் கேட்க, தாத்தாவும் இவர்கள் யார் திருமணத்திலும் விருப்பமில்லாமல் நின்றிருந்தார்.
“மேடம் வெயிட்.. நான் சொல்றேன்” என்று சாயாலியின் குடும்பத்தை பற்றி மானவ் கூறத் தொடங்கினான்.
நீங்க எல்லாரும் நினைக்கிற மாதிரி மேடம் சாதாரண ஆள் இல்ல. அவங்க அப்பா எங்க குஜராத்ல பெரிய டான். அவர பாத்து யாரும் விரல் நீட்டி கூட பேச முடியாது. இதில் குடும்பத்தினர்களும் அடக்கம். எப்பவும் பாதுகாப்புக்கு ஆள் கூடவே இருப்பாங்க. மேடம் படிச்ச பள்ளி கல்லூரி எல்லா இடத்திலும் அவங்க தந்தையின் ஆட்கள் கண்காணிச்சுட்டே இருப்பாங்க..மேடம் அங்க இருந்தவரை கூண்டுக்கிளியா தான் வாழ்ந்தாங்க.
கல்லூரி படிப்பு மும்பைல படிச்சாங்க. மும்பை தாதாங்க கூட இவங்க அப்பாவுக்கு அஞ்சுவாங்க. இவங்க அப்பாவுக்கு எதிரான பெரிய கும்பல் அவர கொல்ல காத்துட்டு இருந்திருக்காங்க. இவங்க கல்லூரி படிப்பு முடிச்சி வரும் போது தான்…அவங்க குடும்பம் மொத்தமும் எதிரி கும்பலால் கொல்லப்பட்டாங்க…ஒருத்தர் கூட உயிரோடயில்ல. இவங்களும் அவங்கட்ட மாட்டிட்ட அப்ப தான் கோசலை ஆன்ட்டியும் இன்பவேணியும் பார்த்தாங்க. அப்புறம் தான் இவங்க எல்லாரும் சேர்ந்து வாழ ஆரம்பிச்சாங்க..என சுருக்கமாக சொல்லி முடித்தான்.
“டானோட பொண்ணா? என்னடா உதய்? இப்படி பொண்ண நம்ம வீட்ல எப்படி மருமகளா ஏத்துக்க முடியும்?” தாத்தா கொந்தளித்தார்.
கோசலை முன் வந்து, “அய்யா…அந்த குடும்பம்னாலும் பொண்ணு நல்ல பொண்ணுய்யா..” என சாயாலியை தவறாக எண்ணி திருமணம் நின்று விடுமோ என்று பயம் வந்தது அவருக்கு.
“ஏய்ய்ய்…நான் உன்ட பேசல” தாத்தா விரல் நீட்ட, மானவ் நரம்புகள் புடைத்தது.
சாயாலி அவன் கையை அழுத்தி, “வேண்டாம்” தலையசைத்தாள்.
தாத்தா, அவங்க இப்ப நம்ம எதிர்வீட்டுக்காரவங்க இல்ல. நான் கட்டிக்கப் போறவளோட அம்மா…என்றான் விதார்த்.
கட்டிக்கப் போறீயா? இவ ரௌடி குடும்பத்து பொண்ணு விது. நம்ம குடும்ப மானம், கௌரவம் என்னாவது? தாத்தா சீறினார்.
கௌரவமா? எனக்கு அதெல்லாம் தேவையில்ல. சாயாலி கடந்த வாழ்க்கை எனக்கு தேவையில்லாதது. நான் அவளை தான் திருமணம் செய்து கொள்வேன்.
உதய், இவன் என்ன பேசுறான்? தாத்தா கேட்க,
மானவ்வை நெருங்கிய உதய்கிருஷ்ணா, “நீ யாரு? எங்கிருந்து வந்த? உனக்கும் இவங்களுக்கும் என்ன சம்பந்தம்?” இன்பவேணியையும் சாயாலியையும் பார்த்துக் கொண்டே கேட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!