Skip to content
Post Views: 1,519
மனசு 6
மகாலட்சுமி மீண்டும் பேச்சு கொடுக்க, “அண்ணீ ஒரு நிமிசம்” என்று வேகமாக மேடையிலிருந்து இன்பவேணி இறங்கினாள்.
“எங்கடி போற?” கோசலை பதறி இன்பவேணி பின்னால் ஓடி வந்தார்.
Advertisement
உதய்கிருஷ்ணாவிடம் வந்தவள், “கிருஷ் உன்ன யாரும் திட்டீட்டாங்களா? அதான் சோகமா இருக்கீயா? யாருன்னு சொல்லு?” அனைவருக்கும் கேட்கும் படியே கேட்டாள்.
Advertisement
எல்லாரும் உதய்கிருஷ்ணாவை பார்க்க, ராமநாதனும் விதார்த்தும் அவளின் கூற்றில் அவ்விடம் விரைந்தனர்.
Advertisement
“உதய் என்னாச்சு?” பதட்டமுடன் கோசலை கேட்க, ஒண்ணுமில்லை ஆன்ட்டி. நான் நல்லா தான் இருக்கேன்.
Advertisement
என்னடி…???? கோசலை இன்பவேணியை முறைக்க,
அம்மா சத்தியமா கிருஷ்ஷோட மூஞ்சி சரியில்ல. பொய் சொல்றான்..
மீண்டும் எல்லாரும் அவனை பார்க்க,
தூசி விழுந்துருச்சி ஆன்ட்டி. அதான் அப்படி இருந்திருக்கும்..
கார்த்திகேயனுக்கு புரிந்து விட, விசுவமூர்த்தி அவனது உடலை விசாரிக்கும் முன் அவர் கை பிடித்து தடுத்தான் உதய்கிருஷ்ணா..
“இல்லம்மா…” இன்பவேணி கண்ணிமைக்காமல் உதய்கிருஷ்ணவையே பார்க்க, அவன் அவளை நிமிர்ந்து பார்க்க கூட தயங்கினான்.
“பெரிம்மா வேணிய அழைச்சிட்டு போங்க” கார்த்திக் கூற, உதய்கிருஷ்ணாவை பார்த்துக் கொண்டே சென்றாள்.
“யாரும் எதுவும் சொன்னாங்களாடா??” ராமநாதன் கேட்க,
இல்லப்பா தூசி விழுந்திருச்சி. கண்ணு கலங்கி இருக்கும். அத பாத்துட்டு தப்பா நினைச்சிட்டா..
விதார்த்தால் அவன் அண்ணன் சொல்வதை நம்பமுடியவில்லை. அதே போல பாலாஜி உதய்கிருஷ்ணாவை கவனித்து பின் இன்பவேணியை பார்க்க, அவள் அவ்வப்போது அவனையே பார்த்தாள்.
பாலாஜி வந்தாலே மச்சான் என ஓடி வரும் இன்பவேணி இன்று சிறுபுன்னகை மட்டும் கொடுத்து…அதுவும் பக்கத்து வீட்டுக்காரனுக்காக ஓடி வர்றாளா? யோசனையுடன் நின்றான்.
“தூசி வெளிய வந்துருச்சா உதய்” விசுவமூர்த்தி காலை நொண்டிக் கொண்டே அவனது விழிகளை ஆராய்ந்தார்.
“மாமாவும் இவனை இப்படி தாங்குகிறார்? என்ன நடக்குது?” பாலாஜி அவனுக்குள்ளே கேட்டு கார்த்திக்கை பார்க்க, அவன் விழித்துக் கொண்டிருந்தான்.
நீ ஓய்வெடு உதய். இதுக்கு தான் நான் பாத்துக்கிறேன்னு சொன்னேன்.
“அங்கிள்” கண்டிப்புடன் அவரை பார்த்தான்.
இல்லப்பா..
“ப்ளீஸ் அங்கிள்..இப்ப புட் சர்விங் தான பாக்கணும். வா கார்த்திக்” கார்த்திகேயனை இழுத்து நகர்ந்தான்.
இன்பவேணி உதயை தேட, அவளருகே வந்தனர் பாலாஜியும் அவன் தம்பிகளும். கலகலப்பாக அவ்விடம் நகர, உதய்கிருஷ்ணாவை மறந்து விட்டாள் இன்பவேணி.
உதய் அவன் மனதை மாற்ற மற்றவர்களை கவனிப்பதில் ஈடுபட்டான்.
அவன் தந்தை உணவுண்ண அழைத்த போது, “நீங்க சாப்பிட்டு கிளம்புங்க. நானும் விதுவும் வாரோம். அவன் இப்பொழுதைக்கு கிளம்ப மாட்டான்…” என அவரை அனுப்பி விட்டான்.
“விச்சு யாரு அந்த பையன்? நம்ம கார்த்தியோட சேர்ந்து எல்லாரையும் நல்லா கவனிக்கிறான்?” சொந்தம் ஒருவர் விசுவமூர்த்தியிடம் கேட்டார்.
நம்ம பக்கத்து வீட்டு பையன் அண்ணா. அவனோட தம்பியும் நம்ம பாப்பாவும் சின்னதுல இருந்தே ப்ரெண்ட்ஸ். நல்ல பழக்கம் தான்..
“படிக்கிறானா?” உதயை கண்டு ஆர்வமாக விசாரித்தார்.
அண்ணா, உதய் பெரிய இடத்து பையன். அவங்க அப்பா
ஒத்துக் கொண்டதால் தான் வந்திருப்பான். நம்ம பொண்ணுங்கள எல்லாம் அவங்க ஏத்துக்க மாட்டாங்க..
புள்ள சம்மதிச்சா போதாதா?
“அண்ணா…” சத்தமிட்ட விசுவமூர்த்தி,
“சின்னதுல இருந்து நான் உதய பாக்குறேன். அவன் குடும்பத்தை மீறி அவனால எதுவும் செய்ய முடியாது. செஞ்சா அவன் தான் கஷ்டப்படுவான். அவன் கஷ்டப்படுற மாதிரி எதையும் செய்ய எனக்கு விருப்பமில்லை” சொல்லி நிற்காமல் நகர்ந்தார்.
“இப்ப என்ன சொல்லீட்டேன்னு இப்படி கோபப்படுறான்?” அவர் புலம்ப, அவரருகே வந்தனர் பாலாஜியும் அவன் தந்தையும்.
அவர் நடந்ததை சொல்ல, பாலாஜியோ… “மாமா, விச்சு மாமா சொன்னா ஏதாவது காரணம் இருக்கும். புரிஞ்சுக்கோங்க…வேற பையன பாருங்க..”
“ஆமா, பொல்லாத பணக்காரன்…” முகம் திருப்பி சென்றார் அவர். பாலாஜி உதய் கார்த்திக்கை விட ஒரு வயது பெரியவன். பெருமூச்சுடன் அமர்ந்து அவன் மாமாவையும் உதய் கிருஷ்ணாவையும் கவனித்தான்.
விசுவமூர்த்தியிடம் ஏதோ கேட்க வந்த உதய் மேடையின் ஆர்ப்பரிப்பில் அவனை மீறியும் அவன் விழிகள் அவ்விடம் செல்ல, இன்பவேணி அவளது அத்தை மகன்களுடனும், மகள்களுடனும் மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தாள். அவளது மகிழ்ச்சியை பார்த்து நெகிழ்ந்த அவனின் மனம் அவளையே பார்க்க வைத்தது.
தன் அண்ணனின் செயல்களையே கவனித்துக் கொண்டிருந்த விதார்த்திற்கு இன்பவேணியை கண்களால் நிரப்பி உதட்டிற்கு சிரிப்பை அனுப்பிய அண்ணனின் காதல் மனம் முதலில் புரியவில்லை என்றாலும் இன்னும் சில நேரம் உதயை கவனித்து அறிந்து கொண்டான். அவனால் நம்ப முடியவில்லை என்றாலும் மகிழ்ச்சியே!
அதற்காக உதயிடம் அவன் காதலை பற்றி கேட்கவோ இல்லை இன்பவேணியிடம் சொல்லவோ எண்ணவில்லை. தன் அண்ணனை மகிழ்ச்சியாக பார்க்க கண்டிப்பாக இன்பவேணி தேவை என்று மட்டும் புரிந்தது.
ராமநாதன் கிளம்பவும் கோசலை உதயையும் விதார்த்தையும் உணவுண்ண அழைத்தார்.
“எல்லாரும் சாப்பிட்டு கிளம்பட்டும் ஆன்ட்டி. நாம சேர்ந்து சாப்பிடலாம்” உதய் சொல்ல, விதார்த் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.
விது நீயாவது சாப்பிட வா..
ஆன்ட்டி இன்னு பசியோட இருப்பா. அவ வரட்டும் சாப்பிடலாம்..
தன் மகள் மீது விதார்த் வைத்திருக்கும் அக்கறையை பார்த்து சிலிர்த்து அவனை நெட்டி முறித்து புன்னகையுடன் உறவினர்களை கவனிக்க சென்றார் கோசலை.
விழா முடிந்து உறவினர்களுடன் இன்பவேணி அமரும் வேளை விதார்த்தையும் அழைத்தாள். அனைவரும் சேர்ந்தே உணவை முடித்தனர்.
அண்ணா, வீட்டுக்கு வா…விசுவமூர்த்தி அழைக்க,
இன்னொரு நாள் பாக்கலாம் விச்சு. கார்த்திக் காலேஜ் போகணும். இப்ப வீட்டுக்கு போனா தான் அவனும் தூங்கிப்பான்.
உறவுகள் அனைவரும் கிளம்ப, கார்த்திக் உதயை அணைத்து பேசி சென்றான்.
“கேப்புக்கு புக் பண்ணுங்க” கோசலை சொல்ல, விசுவமூர்த்தி அவரது கைபேசியை எடுத்தார்.
“அங்கிள் வீட்டுக்கு தான போகப் போறோம். நம்ம கார்ல போகலாமே!” உதய்கிருஷ்ணா கேட்டான்.
தயக்கமுடன் அவனை பார்த்தனர் பெற்றோர்…
“மா…சீக்கிரம் கிளம்பலாமா? இல்ல வேற டிரஸ்ஸாது மாத்திக்கிறேனே!” இன்பவேணி கொஞ்சலுடன் அன்னையை ஏறிட்டாள்.
“வாங்க ஆன்ட்டி…” விதார்த் கை பிடித்து இழுக்க, அவர்களுடன் முன்னேறினாள் இன்பவேணி. விசுவமூர்த்தியும் அமைதியாக செல்ல, காரை எடுத்தான் உதய்கிருஷ்ணா.
பின் சீட்டில் பெற்றோர்கள் ஏற, உதய் அருகே விதார்த் அமர்ந்து இன்பவேணிக்கும் இடம் கொடுத்தான். அவள் பாவாடை போல புடவையை தூக்கி ஏற முடியாமல் மண்டையை உள்ளே விட்டு, “கெல்ப் பண்ணுடா…” விதார்த்தை எரிச்சலுடன் பார்த்தாள்.
அவளது செயலில் கோசலை சிரிக்க,
“ஏய் கோசல…சிரிச்ச அவ்வளவு தான். டிரஸ்ஸ மாத்தக் கூடாதுன்னு பாடா படுத்துற. மேப் பையும் கலைக்காமல் அய்யோ….எரிச்சலா இருக்கு” கத்தினாள் இன்பவேணி.
விதார்த்தும் சிரிக்க, “வாய மூடுடா” அவன் வாயிலே அடித்தாள்.
“கைய குடு…” விதார்த் உதவியுடன் அமர்ந்தாள்.
“கிருஷ்…ஏதாவது சாங் போட்டு விடேன்…என்னால முடியல. நான் ரிலாக்ஸ் ஆகணும்…” என்று கூந்தலில் சூடி இருந்த மல்லிகையை எடுக்க கை வைத்தாள்.
பின்னிருந்து மகளின் கையில் அடி போட்டு, “பூவுல கை வச்ச அவ்வளவு தான்” மிரட்டினார்.
“கோசல உன் தொல்ல தாங்க முடியல. எனக்கு கசகசன்னு இருக்கு” கடுப்புடன் பேசினாள். ஆனால் தந்தையை கண்டு கொள்ளாதவளாக வந்தாள்.
ஏசியை அவள் பக்கம் திருப்பிய உதய்கிருஷ்ணா பாடலை ஒலிக்க விட்டு காரை எடுத்தான். பக்கம் கூட திரும்பி அவளை பார்க்க முடியாத தன் நிலை எண்ணி நொந்து காரை செலுத்திக் கொண்டிருந்தான்.
“கனவே! கனவே!
கண்ணை கடனாக தருவாயா??
அடியே! அடியே!
உயிரினை காதல் தாங்காதா?
ஒரு விழியாவது தூங்காதா?
மொழி இருந்தும்
வழி இருந்தும்
என் காதலை சொல்ல முடியாதா?”
விதார்த்தை நகர்த்தி மெதுவாக உதய்கிருஷ்ணாவை எட்டி பார்த்தாள் இன்பவேணி. அவன் காரை ஓட்டுவதிலும் பாட்டின் வரிகளை உள்வாங்கிக் கொண்டிருந்தான்.
ஏய்..இன்னு, என்ன? விதார்த் கேட்க,
மீண்டும் அவனை நகர்த்தி “கிருஷ்” ஹஸ்கி வாய்சில் அழைத்தாள்.
திடுக்கிடலுடன் காரை பிரேக்கிட்டு நிறுத்தினான்.
உனக்கு லவ் பெலியராகிடுச்சா என்ன? இன்னிக்கி உன்ன பாத்தா வித்தியாசமா தெரியுது…????
புருவம் சுருக்கி, என்ன?
“அப்புறம் என்ன? நல்ல சாங்கா போடுவன்னு பாத்தா. சோகப்பாட்ட போட்டு அதுல முங்கி வேற போயிருக்க. பாட்ட மாத்து…கடுப்பா இருக்கு..” அவனையும் காய்ந்தாள்.
உதய்ட ஏன்டி சத்தம் போடுற?
அப்புறம் என்ன??? மையிண்ட சரி பண்ண சாங் கேட்டா இவன் போடுறான் பாரு பாட்டு…விது நீயாவது மாத்து…
“பாப்பா…” அதட்டினார் விசுவமூர்த்தி. இன்பவேணி சன்னல் பக்கம் பார்த்து முகம் திருப்பினாள்.
“இப்ப என்ன பாட்டு தான? நீயே போடு…இந்த பக்கம் வா” என்று உதய் அருகே அவளை அமர வைத்து விதார்த் சன்னல் பக்கம் அமர்ந்தான்.
காதலை உணர்ந்து காதல் சேரும் வாய்ப்பில்லை என எண்ணி இருந்த உதய்கிருஷ்ணா அருகே இன்பவேணி நெருங்கி அமர்ந்திருக்க, மறுபடியும் மூச்சு முட்டியது அவனுக்கு. கண்ணை மூடி மூச்சை இழுத்து வெளி விட்டு காரை எடுத்தான்.
ஹைய்…செம்ம சாங் இருக்குடா…என்று பாடலை ஒலிக்க விட்டாள் இன்பவேணி.
“மல்லிகை மல்லிகை பந்தலே
அடி மயக்கும் மல்லிகை பந்தலே
என்னை மயக்கி பார்க்க வந்தேன்
என்றாளே!
கண்கள் மயங்கி போயி
நின்றேன் தன்னாலே”
பாடல் ஒலிக்க கஃம் செய்து கொண்டே வந்து இடையிடையே பாடலை பாடினாள் இன்பவேணி. காதல் பறவைகளாய் சேர்ந்து கேட்க வேண்டிய அருமையான காதல் பாடல். பாடலின் வார்த்தைகள் முழுதும் உதய்கிருஷ்ணா மனதை தகிக்க வைத்தது.
இதில் அவளிடமிருந்து வந்த சந்தனம், குங்குமம், பூவின் நறுமணம்…அய்யோடா என விழித்து விட்டான். இதில் அவள் பாடும் வார்த்தைகள் அவன் தொண்டைக்குழியை ஏறி இறங்க வைத்துக் கொண்டிருந்தது. காரை வேகமெடுத்து வீட்டிற்கு வந்து நிறுத்தவும் தான் நிம்மதி அவனுக்கு…
வரிசையாக காதல் பாடல்கள்…ஹப்பா தப்பிச்சேன் என்று முதலாவதாக காரிலிருந்து இறங்கி வாயால் காற்றை ஊதித் தள்ளினான். விதார்த் தன் அண்ணனை கண்டு சிரிப்புடன் இறங்கினான். இருவரையும் கவனித்து வந்த விதார்த்தால் சிரிப்பை கட்டுப்படுத்த போதும் போதும் என்றானது…
“பை விது…” என்று இன்பவேணி உதய்கிருஷ்ணாவிடம் வந்து, “கிருஷ்..இந்த சோகப்பாட்டெல்லாம் கேக்காத. ஏதோ கிழவன் போல இருக்கு..” என்றாள்.
விதார்த் வாய் விட்டு சிரிக்க பெற்றோர்கள் அவளை முறைத்து, தப்பா எடுத்துக்காத உதய். வேணிய தா உனக்கு தெரியுமே! சாரிப்பா..
இருக்கட்டும் அங்கிள்..
நான் என்ன தப்பா சொல்லீட்டேன்..??? காலேஜ் படிக்கிற பையன் கேக்குற பாட்டா இதெல்லாம்? நல்ல லவ் சாங்கா கேளு கிருஷ்..
“வாயப் பாரு இவளுக்கு… எப்படி செல்லம் கொடுத்து வச்சிருக்கீங்க பாருங்க…” கோசலை திட்ட,
“இப்ப நீ தான் கிழவி மாதிரி பேசுற. உனக்கு என்னோட அண்ணாவ பாத்தா கிழவன் மாதிரியா இருக்கு…” உதய்கிருஷ்ணா தோளில் கை போட்டு விதார்த் கேட்க,
பாட்ட சொன்னேன்டா. கிருஷ் ரொம்ப க்யூட். ஆமா எதுக்கு இப்பெல்லாம் கிளாஸ் யூஸ் பண்ற கிருஷ்..
அது…அவன் தயங்க..
“ஓ.கே ஓ.கே இது கூட ரொம்ப அழகா இருக்கு. அப்புறம் பாட்ட மறந்துறாம டெலிட் பண்ணிடு கிருஷ்” உதய்கிருஷ்ணா தோள் தட்டி,
“ம்ம்ம்..பெருமூச்சுடன் இத வேற தூக்கிட்டு வீடு வரைக்கும் போகணும்” இன்பவேணி புடவையை தூக்கி நகர, உதய்கிருஷ்ணா சிரித்தான்.
அவனை திரும்பி பார்த்து, ஹப்பா சிரிச்சிட்ட..உம்மணாமூஞ்சிய விட இது அழகா இருக்கு. இப்படி சிரிச்சிட்டே இருந்த உன்னோட படிக்கிற பொண்ணுங்க எல்லாரும் உன்ட பிளாட் தான்..
“அய்யோ! என்ன பேசுறா பாருங்க…வாடி…” கோசலை மகளை அழைத்து செல்ல,
அண்ணன் தம்பியை பார்த்து கண்ணடித்து, “இப்படி இழுத்துட்டு போறதுக்கு தூக்கிட்டு போம்மா…காலெல்லாம் வலிக்குது..” புலம்பிக் கொண்டே தாயுடன் செல்ல, விசுவமூர்த்தி இருவரிடமும் தலையசைத்து விடை பெற்றார்.
சிக்கிடுத்து…விதார்த் கூற,
என்ன?
ஒண்ணுமில்ல அண்ணா. எனக்கு தான் நல்லா சிக்கிடுச்சு…
“என்னடா பேசுற?” கேட்டுக் கொண்டே வீட்டினுள் நுழைந்தான் உதய்கிருஷ்ணா.
“நில்லுங்க….” ராமநாதன் அழைப்பில் இருவரும் நின்றனர்.
“நீ எதுக்கு அவங்களுக்கு உதவுணும்??” உதய்கிருஷ்ணாவிடம் சத்தமிட்டார். பேச வந்த விதார்த்தை அடக்கி அமைதியாக பதிலளிக்காமல் நின்றான் உதய்கிருஷ்ணா.
உதவியா இருந்தாலும் பாத்து தான் செய்யணும்…என்றவர், “விது இனி விசுவமூர்த்தி வீட்டுக்கு போகக் கூடாது…” ராமநாதன் சொல்ல, கத்தி விட்டான் விதார்த்.
“எனக்கு அப்பாவா என்ன செஞ்ச? பணம் தான் இருக்கு. மத்த படி ஒண்ணுமேயில்ல. என்னோட சந்தோசம் அங்க தான் இருக்கு. நான் போக தான் செய்வேன். இன்னுவும் வருவா. அதுக்காக அங்கிள், ஆன்ட்டி இன்னுட்ட ஏதாவது பேசுன அவ்வளவு தான்… நான் மனுசனா இருக்க மாட்டேன். நான் உதய்கிருஷ்ணா இல்ல நீ மிரட்டவும் பணிய….” என்று தன் அண்ணனை முறைத்து வேகவேகமாக அறைக்கு சென்று விட்டான் விதார்த்.
“உதய், அந்த பொண்ணு பெரிய பொண்ணாகிடுச்சு. இன்னும் இவன் போனாலோ அவ இங்க வந்தாலோ தப்பா பேச மாட்டாங்களா?” சத்தமிட்டார்.
“திடீர்னு நிறுத்தினா தான் தப்பாகும்பா. அவங்க நல்ல நண்பர்களா இருக்காங்க. அவனுக்கு இருக்கிற ஒரே ப்ரெண்டு இன்பவேணி. அவளையும் பேச விடாம செஞ்சி விதுவ மொத்தமாக தனியாக்கிடாதீங்க….” சொல்லி அவனும் அறைக்கு சென்று விட்டான்.
அவருக்கும் சரியாக பட இருவரும் சகஜமாக இருந்தனர். ஆனால் உதய்கிருஷ்ணா தான் அவ்வாறு இல்லை. இன்பவேணியை பார்க்கும் போதெல்லாம் அவளுடன் விதார்த் போல நெருக்கமா பழகணும்னு ஆசை வந்தது. தன்னையும் தன் உணர்வுகளையும் மிக சிரமப்பட்டு கட்டுப்படுத்தி வைத்திருந்தான்.
எல்லாம் நினைத்தவாறு விழித்த உதய்கிருஷ்ணா வெளியே பார்க்க இரவாகி இருந்தது.
நேரத்தை பார்க்க அது பத்து என காட்டியது.
“இவ்வளவு நேரமாச்சா?” வேகமாக கீழே சென்றான். பாட்டி அறையில் தாத்தாவுடன் உறங்கிக் கொண்டிருந்தது குழந்தை..
“புள்ள தூங்கிட்டா உதய்…விது…விதுவ தான் காணும். எங்க போனான்னு தெரியல. உன்னோட அப்பனும் தாத்தாவும் தேடிட்டாங்க. இன்னும் அவன் வீட்டுக்கு வரல…பயமா இருக்குப்பா…” பாட்டி கலக்கமுடன் கூறினார்.
இன்னும் வரலையா? எங்க போனான்?
“எல்லார்டையும் கேட்டு பாத்துட்டோம்” ராமநாதன் சோர்வாக, வெளியே வந்து காரை எடுத்து தள்ளி வந்து ஓரிடத்தில் நிறுத்தி சிந்தித்தான் உதய்கிருஷ்ணா.
இருக்காது என எண்ணினாலும் பார்க்கலாம் என மனம் உந்த உடனே அந்த பப் நோக்கி பயணித்தான்.
“டி ஜே” இசையில் பெண்களும் ஆண்களும் குதியாட்டம் போட, ஒவ்வொரு இடமாக விதார்த்தை தேடினான் உதய்கிருஷ்ணா. ஒரு டேபிளில் தலைசாய்த்து போதையில் உளறிக் கொண்டிருந்தான் விதார்த். அவன் முகத்தில் காயம் இருந்தது…
பதறி தமையனை தூக்கி வெளியே வந்த உதய்கிருஷ்ணா நேராக வீட்டை நோக்கி பயணித்தான். அவர்களின் தெருவில் அவன் கார் வர, அதற்கு முன் ஒரு கார் செல்வதை பார்த்து யோசனையுடன் அக்கார் பின் சென்றான்.
நேராக இன்பவேணி வீட்டின் முன் கார் நின்றது. அதிலிருந்து கோசலையும் சாயாலியும் இறங்கினர்.
சாயாலியை ஏற்கனவே பார்த்த நினைவு வந்தது. பின்னே இறங்கிய கோசலையை கண்டு மறுநிமிடம் காரிலிருந்து இறங்கி, “ஆன்ட்டி..” அழைத்தான்.
அவனை முறைத்த கோசலை முன்னேற, “மாமா… அக்கா…” என சாயாலி உதய்கிருஷ்ணா நோக்கி வர,
“சாயா…” சத்தமிட்டு அவளை நகர விடாமல் அவருடன் இழுத்து சென்றார் கோசலை. கண்ணீருடன் அவரை பார்த்துக் கொண்டிருந்தான்.
மூச்சை இழுத்து விட்டு விதார்த்தை தூக்க, சன்னலிலிருந்து இவர்களை பார்த்த இன்பவேணி விழிகள் கலங்கியது.
“இங்க எதுக்குடி வந்த?” கோசலை நேராக இன்பவேணியை நெருங்கி அவளின் கலங்கிய விழிகளை பார்த்து அவளின் கவனம் சென்ற இடத்தை பார்த்தார்.
விடு..என்ன விடு….சிறுபிள்ளை போல உளறியவாறு விதார்த் உதய்கிருஷ்ணாவை அடிக்க, அவன் அடிகளை தாங்கியவாறு அவனிடம் அடியும் வாங்கி தமையனை தூக்கி கண்ணீருடன் உள்ளே செல்ல, பாட்டியும் ராமநாதனும் ஓடி வந்தனர்.
“ஏன்டா குடிச்ச? உதய் குடிச்சாளே திட்டுவ?” பாட்டி விதார்த்திடம் சத்தம் போட, அவன் மேலும் ஏதோ உளறிக் கொண்டிருக்க,
“கத்தி மானத்த வாங்காதீங்க. என் தம்பிய பாத்துக்க எனக்கு தெரியும்” சென்று விட்டான்..
யாரையும் எடுத்தெறிந்து பேசும் குணமுள்ளவன் இல்லை உதய்கிருஷ்ணா. தாயும் மகளும் ஒருவரை ஒருவர் பார்க்க,…
அம்மா, நீங்க ரொம்ப மோசம். மாமா பாவம்…
“ஆமாடி…உங்களுக்கு அவமானப்பட்ட நாங்களெல்லாம் பாவமா தெரிய மாட்டோம்” கோசலை சத்தமிட, அமைதியானாள் சாயாலி. அவள் கோபம் முழுவதும் விதார்த் மீது திரும்பியது.
“நாங்க இந்த அறையிலே தங்கிக்கிறோம்” என வீட்டு உறுப்பினரிடம் கூறி, இன்பவேணி அறையிலே மூன்று பெண்களும் தங்கினர்.
error: Content is protected !!