Skip to content
Post Views: 5,896

சசி சுபாவை விட நான்கு மாதம் தான் பெரியவன்…. எனவே சிறுவயது முதல் நண்பர்களாக தான் பழகினர்… இருவரும் ஒரே பள்ளி தான்… ஒரே வகுப்பு… ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை…
இவளுக்கு அர்ஜுனன் உடனான காதல், அவளுடைய விருப்பு வெறுப்பு எல்லாம் அத்துப்படி சசிக்கு… சுபாவுக்கும் அப்படி தான்ஒரு விஷயத்தை தவிர… அது சசிக்கு ரேவதி உடனான காதல்…
Advertisement
ரேவதி இவர்களைவிட ஒரு வயது சிறியவள்…. சசி சுபாவை தவிர வேறு யாரிடமும் பேசமாட்டான்… அதனால் அவள் அவர்கள் பள்ளி என தெரியாது… ஆனால் சுபாவிற்கு அவளை பற்றி தெரியும்…
பள்ளியில் இருந்தே அவள் அலட்டல் பேர்வழி தன யாரையும் மதிக்கமாட்டாள்…. அந்த பள்ளியில் சுபாவிற்கு என்று தனி கூட்டமே இருக்கும் அவளின் பாரதநாட்டியத்திற்கு….
ரேவதி பார்ப்பவர்கள் இன்னொரு முறை திரும்பி பார்க்க வைக்கும் அழகி…. ஆனால் இவளையும் சுபாவையும் நிற்க வைத்தால் சுபாவை தான் அழகு என்று சொல்லுவர்…
Advertisement
அதனால் அப்போது இருந்தே அவளுக்கு சுபாவை பிடிக்காது… பொறாமை குணத்துடன் தான் சுற்றுவாள்…
Advertisement
இருவரும் பேசிக் கொள்ள வாய்ப்பு ஏற்படாது.. ஆனாலும் அவளின் குணம் மற்ற நண்பர்கள் மூலம் சுபாவிற்கு தெரியும்… அவள் அவளை கண்டுகொள்ளவே மாட்டாள்..
இவளை பற்றி சுபா சசியிடம் சொல்லவில்லை… சொல்லியிருந்தால் மூன்று வருட பிரிவு வராமல் இருந்து இருக்கும்….
பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து சுபா அருகில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ந்து கொள்ள சசியோ கலினரி ஆர்ட்ஸ்(culinary arts) படிக்க ஆசை பட்டு டெல்லியில் உள்ள பிரபலமான கல்லூரியில் மூன்று ஆண்டுகள் படித்துவிட்டு ஒரு வருடம் அங்கிருக்கும் ரெஸ்டாரண்டில் பணிபுரிந்து விட்டு சென்னையில் பணிபுரிய மாற்றல் வாங்கி வந்துவிட்டான்….
Advertisement
அவன் இங்கு வந்து பின்தான் அர்ஜுனனிற்கு சுபாவிற்கும் திருமணம் நடைபெற்றது… திருமணம் முடிந்து ஆதவ் பிறந்த பின்தான் சசி மாறியது…
மாறியது என்பதைவிட மாற்றினாள் என்று தான் சொல்லவேண்டும்… சுபாவின் குழந்தை பேற்றில் கொஞ்சம் சிக்கல் இருந்தது… அதனால் இவனை யாரும் கண்டுகொள்ளவில்லை…
குழந்தை பிறந்து ஒரு மாதத்தில் அவனோடு சுபா பேச முற்படும் போது மொத்தமாக மாறியிருந்தான்… எப்போதும் சுபாவின் பிறந்தநாளிற்கு முதலாவதாக சசி தான் வாழ்த்துவான் ஆனால் அந்த வருட பிறந்தநாளிற்கு அவன் வாழ்த்த கூட இல்லை…
ஒரு வாரம் முன்பே சசி ரேவதியிடம் பிறந்தநாள் என்று சொல்லியிருந்தான்… அதனால் சரியாக அவள் பிறந்தநாளிற்கு முதல் நாள் இரவு அவளின் ஹாஸ்டல் படிக்கட்டில் இருந்து கீழே விழுவது போல் செட் செய்து ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி அதை மறக்க செய்துவிட்டாள்…
அடுத்த நாள் சுபாவிற்கு அழைத்து அவன் பேசுமுன் “வர வர என்கூட பேச கூட பிடிக்கலையா சச்சு…. என்கிட்ட பேசி எவளோ நாள் ஆகுதுனு ஞாபகம் இருக்கா… நேத்து என் பர்த்டே அதகூட மறந்துட்டல…” என்று கலங்கிய குரலுடன் கோவமாக கேட்டாள்..
அவன் விளக்க முற்படும் போது வேண்டுமென்றே “ஆஆஆ சசி கால் ரொம்ப வலிக்குது” என்று அலறினாள் ரேவதி…
அதனால் போனை வைத்துவிட்டு அவளிடம் ஓடிவிட்டான்…. இங்கு அவனின் ஒதுக்கத்தில் கண்ணீர் வலிய மீண்டும் அழைத்தாள்… முதல்முறை எடுக்கவில்லை.. அடுத்த முறை அழைத்த போது எடுத்தான்…
ஆனால் அவளிடம் “அறிவிருக்கா சுபா ஒருடைம் எடுக்கலைனா பிஸியா இருக்கேன்னு அர்த்தம்… ஆனா நீ போன் அடிச்சிட்டே இருக்க… நீ மட்டும்தான் பிறந்தநாள் கொண்டாடுறியா…. நான் விஷ் பண்ணலனா ஒன்னும் குறைஞ்சி போயிடாது……. நான் போன் பண்ணாம எனக்கு பண்ணாத” என்று கோவமாக கத்திவிட்டு வைத்துவிட்டான்…
அவன் கோவப்படுவதற்கு காரணம் அங்கு ரேவதி அவனை அந்த அளவு பயப்பட வைத்து இருந்தாள்… கால் ரொம்ப வலிக்குது என… டாக்டரிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது தான் மீண்டும் அளித்து இருந்தாள் சுபா… அதனால் தான் கோவமாக கத்தியிருந்தாள்….
இங்கு சுபா இடிந்து போய் அமர்ந்து இருந்தாள்… குழந்தை அழுவது கூட தெரியாமல் அமர்ந்து இருந்தாள்… குழந்தையின் சத்தத்தில் உள்ளே வந்த கிரிஜா அவளை கூப்பிட்டார்… அப்போது கூட அவள் அசையவில்லை…
அதனால் அவரே குழந்தையை சமாதானப்படுத்தி உறங்க வைத்து விட்டு அவளின் தோளில் பட்டென்று அடித்தார்…
“ஏய் எதுக்கு இப்ப அழுதுட்டு இருக்க… தம்பி அழுவுறது கூட தெரியாம என்ன ஆச்சு சொல்லு” என்று கேட்டார் கிரிஜா…
“அத்த” என்று அழுதுகொண்டே சசி கூறியதை கூறி “அவன் என்கூட பேசி ரெண்டு மாசம் ஆகுது அத்த… என் பர்த்டேக்கு விஷ் பண்ணுவான்னு பார்த்தா அவன் எனக்கு அன்னிக்கு கூட கால் பண்ணல….
நான் கால் பண்ணவுடனே எடுத்தான் நானும் கேட்டேன்… ஆனா பட்டுனு வெச்சிட்டான்… நான் அவனுக்கு எதோ ஆகிடுச்சானு பயந்து இன்னொரு தடவ கூப்பிட்டேன்.. அப்போ எடுக்கல… திரும்பியும் பண்ணேன்… கடைசி ரிங்ல போன் எடுத்து திட்டி என்கூட பேசாதனு சொல்லி வெச்சிட்டான் அத்த” என்று அழுது கொண்டே கூறினாள்…
அவளை அணைத்து கொண்டு “அமைதியா இரு சுபா பச்சை உடம்புக்காரி இப்படி அழுகக்கூடாது…. அவன் என்கூட பேசியும் கூட மூணு மாசம் ஆகுது… அழுகாத… அர்ஜுன் கிட்ட சொல்லி விசாரிக்க சொல்லலாம்… அழுகாத அவன் ஊருக்கு வரட்டும் இருக்கு அவனுக்கு” அழுகக்கூடாது என்று கூறி சமாதானம் படுத்தி தூங்க வைத்தார்….
அந்த நேரம் உள்ளே வந்த அர்ஜுனனிடம் சசி சுப்பாவின் கூறியதை கூறி “அவன் எதோ தப்பு பண்றான்னு தோணுது தம்பி அவனை பத்தி விசாரி… தப்பு பண்ணா இனிமே அவன் அங்க இருக்க வேணாம்… இங்கு ஊருக்கே கூட்டிட்டு வந்துடலாம்” என்று கூறினார் கிரிஜா….
“என் தம்பிய எங்க இருந்தாலும் நான் கவனிச்சிட்டு தான் இருக்கேன்… அவன் ஒரு பொண்ணை காதலிக்குறான்… பொண்ணு நம்ம பக்கத்து ஊரு தான்… “என்று கூறினான்….
“பொண்ணு நல்ல பொண்ணா தம்பி” என்று எதிர்பார்ப்போடு கேட்டார் கிரிஜா…..
“பொண்ணு பத்தி நான் விசாரிக்கல…. நான் விசாரிக்குறது சரி வராது… நீங்களே பாத்துக்கோங்க” என்று கூறிவிட்டான்… அவரும் சரி என கூறிவிட்டு அறையில் இருந்து வெளியேறி விட்டார்….
அதன்பிறகு அவனின் காதல் அனைவருக்கும் தெரிந்தது.. சுபா வேறு அர்ஜுனனிடம் “அவனுக்கு என்கிட்ட கூட சொல்ல தோணல பாரு மாமா… நான் அவளோ வேண்டாதவ ஆகிட்டேன் போல அவனுக்கு” என்று வருத்தப்பட்டாள்….
அவனோ “விடு தாருமம்மா.. நீ வருத்தப்படாத பாத்துக்கலாம் “என்று கூறிவிட்டான்… அவளும் வருத்ததுடனே சரியென கூறிவிட்டாள்…
பாலாவும் கிரிஜாவுக்கு சென்னை சென்று நேரிலேயே அவனிடம் விசாரித்தனர்…. அவனும் ஒத்துக்கொண்டான்… ரேவதியிடமும் தன் பெற்றோர் வந்துள்ளனர் எனக் கூறி வர வைத்து இருந்தான்…
அவளோ இருவரிடமும் நல்ல பெயர் வாங்க… நல்லவள் போல நாடகமாடி இருவரிடமும் சம்மதம் வாங்கிவிட்டாள்…
ஆனால் அவளின் வீட்டில் ஒத்துகொள்ளவில்லை… வீட்டில் இருந்து அவளின் அக்காவின் நகையை எடுத்து கொண்டு வீட்டை விட்டு வந்து விட்டாள்…
இங்கு இவர்களிடம் “என் அக்கா பொறாமை பிடிச்சவ அத்த… நம்ம குடும்பம் அவளுக்கு பார்த்த மாப்பிளையோட குடும்பத்தை விட வசதி அதிகம்னு தெரிஞ்சி அப்பா அம்மா கிட்ட எதோ சொல்லி என்னை வீட்டை விட்டு அனுப்பிட்டா” என்று அழுது நாடகமாடி இவர்களை வைத்து மட்டும் கல்யாணம் செய்து கொண்டாள்…
கல்யாண விஷயத்தில் பாட்டி அர்ஜுனன் சுபா கர்ணன் யாரும் தலையிடவில்லை… பாட்டி ரேவதியை பார்த்து அவளிடம் எதோ பொய் உள்ளது என தெரிந்து கொண்டார்.. அதனால் அவர் இந்த திருமண ஏற்பாட்டில் கலந்துகொள்ளவில்லை…
கர்ணனிற்கும் அவ்வாறு தான் அவளை பார்த்தவுடன் பிடிக்கவில்லை…. அதனால் எதிலும் கலந்துகொள்ள முடியவில்லை…
சசி சுபாவிடம் பேசாதே என்று கூறியதால் அவள் இதில் கலந்துகொள்ளவில்லை… அதுமட்டுமில்லாமல் ரேவதியை பார்த்து அதிர்ந்து விட்டாள்… அதுவும் ரேவதி இவளை பார்க்கும் போது எல்லாம் வன்மத்தை கண்களில் கக்கிக்கொண்டு வெளியே தேன் தடவி பேசினாள்…
அதனால் அவளோடு ஒன்ற முடியவில்லை… அர்ஜுனன் மட்டும் தான் மேம்போக்காக வேலை செய்து கொண்டு இருந்தான்…
சுபா எதிலும் கலந்து கொள்ளாமல் ஓரமாக நிற்பதை பார்த்து ரேவதி சசியிடம் “என்னமோ சொன்னிங்க சசி.. உங்க ப்ரண்ட் ரொம்ப சந்தோஷம் படுவாங்கன்னு… ஆனா அவங்க என்ன முறைச்சிட்டே இருந்தாங்க… உங்க கூட பேசவே இல்ல…” என்று அவனிடம் கூறி சுபாவின் மீது கோவத்தை ஏற்றி இருந்தாள்…
அவனும் சுபாவிடம் பேசியதை வசமாக மறந்து சுபாவிற்கு ரேவதியை பிடிக்கவில்லை என்பதை மட்டும் யோசித்து சுபாவை தவிர்த்து இருந்தான்…
இவ்வாறு தான் மெல்ல மெல்ல அனைவரை பற்றியும் எதோ எதோ பேசி சசியை மொத்தமாக மாற்றி இருந்தாள் ரேவதி….
தற்போது தான் ரேவதியின் வேலைகள் சசிக்கு புலப்பட்டது… தந்திரமாக செயல்பட்டு இருவரையும் பிரித்துள்ளாள் என….
அதை நினைத்து இன்னும் சுபாவின் மடியில் ஆழ புதைந்து அழுதான்… இருவரும் அழுவதை பார்த்த அர்ஜுனன் தான் இருவரையும் சமாதானம் படுத்தி அழுகையை நிறுத்திவிட்டு நான் வயலுக்கு போறேன் பேசிட்டு இருங்க என்று கூறி வயலுக்கு சென்றுவிட்டான்…
இங்கு நண்பர்களோ சிறிதுநேரம் அமைதியாய் களித்தனர்… பின் சசியே “சாரி சுப்பு… அவ பேச்சை கேட்டு என்ன என்ன பண்ணி இருக்கேன்… உன்ன ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல சாரி சுப்பு…” என்று மன்னிப்பு கேட்டுக்கொண்டு இருந்தான் சசி…
“விடு சச்சு நடந்தது நடந்து போச்சு…அத பத்தி பேசாத…. பெங்களூரு நீ அவசியம் போயே ஆகனுமா சச்சு” என்று கவலையாக கேட்டாள்…
“ஆமா சுப்பு… இங்கயே இருந்தா நான் நடந்ததை பத்தி தான் யோசிப்பேன்…. படிச்சதை கொஞ்சமாச்சும் செயல்ல காட்டணும்ல… அவ பேச்சை கேட்டு சென்னைல வேலையை விட்டு இத்தனை வருஷம் சும்மா இருந்தேன்…
இந்த வேலை எனக்கு எவளோ பிடிக்கும்னு தெரியும்ல உனக்கு… இனிமேவாச்சும் நான் வேலைக்கு போறேன்… போயிட்டு ஒரு ஆறு மாசம் ஒரு வருஷம் அங்க ஒர்க் பண்றேன் …
அதுக்கப்புறம் நம்ம ஊருக்கு பக்கத்துல இருக்குற சிட்டில நானே ஒரு ரெஸ்டாரண்ட் ஸ்டார்ட் பண்ணி இங்கயே இருக்குறேன்… ஒரு ஆறு மாசம் இல்லனா ஒரு வருஷம் நான் அங்க இருக்கேன்” என்று கூறினான்…
அவளும் அரைமனத்துடன் அவனுக்கு சரி என கூறினாள்.. அதன்பிறகு நண்பர்கள் இருவரும் மூன்று வருடம் பேசா கதையை தற்பொழுது பேசிக்கொண்டு இருந்தனர்…
நேரம் செல்வது கூட தெரியாமல் பேசிக்கொண்டு இருந்தனர்….
அர்ஜுனன் மீண்டும் தோப்பிற்கு இரவு தான் வந்தான்… அப்போதும் பேசிக்கொண்டு இருந்தனர்… அவன் வந்து எதுவும் பேசாமல் அவள் கையில் ஒரு பொருளை வைத்தான்….
அவளும் அதை பார்த்து கண் கலங்கிவிட்டாள்… சசியும் அதை பார்த்து மன்னிப்பு கேட்க்கும் பாவனையில் பார்த்தான் சுபாவை….
அவள் அவனிடம் “இனிமே இதை கழட்டாத சச்சு… இன்னொரு தடவ இதை கழட்டி என்னை உடைச்சிடாத… நாளைக்கு நான் வரேன்” என்று கூறி அவனிடம் விடை பெற்றாள்…
இரவுணவை முடித்துவிட்டு கணவனை அணைத்து கொண்டு சந்தோசமாக உறங்கிவிட்டாள் நண்பனோடு பேசிய காரணத்தினால்…
அன்று இரவும் கர்ணன் சசியுடன் தான் தூங்கினான்… சசியும் அன்று கொஞ்சம் மகிழ்ச்சியாக தான் தூங்கினான்…
அடுத்த நாள் காலை பாலா கிரிஜாவை தவிர அனைவரும் சசியை பெங்களூருக்கு வழியனுப்பி வைத்தனர்…
அடுத்த மூன்று மாதம் காற்றாய் பறந்தது… ஒருநாள் இரவு அர்ஜுனன் வர தாமதம் ஆகியதால் மிகவும் சலிப்படைந்து வீட்டினுள்ளே வாக்கிங் நடந்து கொண்டு இருந்தாள்…
அப்போது தான் அவளுக்கு அவனின் அலுவலக அறை கண்ணில் பட்டது… அந்த அறையினுள் இன்னொரு குட்டி அறை உள்ளது.. கல்யாணம் ஆகி இத்தனை வருடத்தில் அவள் அந்த அறைக்கு செல்லவே இல்லை.. அர்ஜுனன் செல்ல விட்டதும் இல்லை…
அங்கு என்ன இருக்கும் என்ற ஆர்வத்தில் அந்த அறைக்குள் நுழைந்தாள் சுபத்திரா… அந்த அறை அவளின் வாழ்க்கை மற்றும் அறையாக மட்டும் இல்லாமல் அவளின் மாமன் மறைத்து வைத்த ரகசியத்தை அவள் அறிந்து கொள்ள கூடிய அறையாகவும் இருந்தது…
error: Content is protected !!