Skip to content
Post Views: 4,939

சசி பெங்களூரு சென்று ஒரு மாதம் முடிந்து இருந்தது…. இங்கு அய்யனார்புரத்தில் கிரிஜா அப்போது தான் சசியை பற்றி யோசித்தார்…. அவன் வீட்டை விட்டு வெளியே சென்றது எல்லாம் ஞாபகம் வந்தது…
இந்த ஒரு மாதம் பாலாவை சமாதானம் செய்வதை மட்டும் தான் யோசித்தார்.. ஆனால் பாலா இவரை மதிக்கவே இல்லை… காலை வயலுக்கு சென்றால் இரவு தான் வருகிறார்…
Advertisement
வயல் என்றால் இவர்களின் பரம்பரை சொத்து… அர்ஜுனன் அவனின் அம்மா வழி சொத்தை மட்டும் தான் பார்த்து கொள்கிறான்… முன்பு அர்ஜுனனே இரண்டு வயலையும் பார்த்து கொள்ளவான்… தற்போது இவர் தான் பார்த்து கொள்கிறார்..
கர்ணன் அர்ஜுனன் வயலையும் பார்ப்பான்.. பரம்பரை வயலையும் பார்ப்பான்… பாலாவுடன் வேலை பார்த்தாலும் ஒரு வார்த்தை பேச மாட்டான் அவரிடம்….
கர்ணன் தான் பாட்டியை பார்க்க அவப்போது வீட்டுக்கு வந்து செல்லுவான்… கிரிஜா அவனிடம் பேச முயற்சி செய்வார்… அவன் அவரை உதாசீனப்படுத்திவிட்டு சென்று விடுவான்..
Advertisement
அப்போது கூட அவருக்கு சசியின் நியாபகம் வரவில்லை… அப்படி ஒருநாள் கர்ணன் வீட்டிற்கு வந்து இருக்கும் போது பாட்டி கர்ணனிடம் “கர்ணா சசி போன் செஞ்சானா… நீ பேசுனியா.. எப்படி இருக்கானாம்???” என்று கேட்டார்…
Advertisement
“நல்லா இருக்கான் பாட்டி… நேத்து தான் பேசுனேன்” என்று கூறிக்கொண்டு இருந்தான்…
அதை தண்ணீர் குடிக்க வெளியே வந்த கிரிஜா கேட்டார்.. அப்போது தான் அவனின் நியாபகம் வந்தது….அவன் வீட்டை விட்டு வெளியேறியது எல்லாம்… கர்ணனிடம் “கர்ணா சசி எங்க இருக்கான்????” என்று கேட்டார்….
அவனோ அவரை முறைத்துவிட்டு சென்றுவிட்டான்…
Advertisement
பாட்டியோ “இத்தனை நாள் இல்லாத பாசம் எதுக்கு உனக்கு… என் பேரன் நல்லா இருக்கான்…… முக்கியமா நிம்மதியா இருக்கான்… உன் வேலையை பார்த்துட்டு போ” என்று கூறி அவரும் அறைக்கு சென்று விட்டார்…
யாரிடம் கேட்பது என்று தெரியாமல் சோகமாக அறைக்குள் சென்றுவிட்டார் கிரிஜா…
இங்கு அர்ஜுனன் வீட்டில்
சுபாவிற்கு கொஞ்சம் எடை அதிகமாகி இருந்தது அதனால் அர்ஜுனன் விடியற்காலையில் அவளை எழுப்பிவிட்டு வாக்கிங் அழைத்து செல்வான்… பின் அவளையே வீட்டு வாசலை கூட்டி குனிந்து கோலம் போட கூறுவான்…
அவளின் உணவு பழக்கத்தை மாற்றி அமைத்தான்… சுபா அனைத்தயும் சிணுங்கி கொண்டே செய்வாள்….
காலை அவ்வளவு வேலை செய்ய வைப்பவன் இரவு அவளின் கைகால்களை அம்முகிவிடுவான் அவள் மறுத்தாலும்….
அன்றும் அப்படி தான் இரவு அவளின் காலை அமுக்கிவிட்டு கொண்டிருக்கும் போது அவள் முகம் யோசனையில் சுருங்கி இருந்தது….
“என்ன அம்மு எதை பத்தி உன் குட்டி மூளைக்குள்ள ஓடிட்டு இருக்கு” என்று கேட்டான் அர்ஜுனன்….
“அது மாமா எங்க ஸ்கூல் ப்ரண்ட் ஒருத்தன் கால் பண்ணி இருந்தான்…. அவன் ஒரு விசயத்தை சொன்னான் அதை பத்தி யோசிச்சிட்டு இருந்தேன்” என்று கூறினாள் சுபா…
அவன் எழுந்துவந்து அவள் அருகில் அமர்ந்து அவளை தன்மீதி சாய்த்து கொண்டு “என்ன சொன்னான் அவன்… நீ யோசிக்குற அளவு என்ன சொன்னான்” என்று கேட்டான்…
“மாமா அந்த ரேவதி பத்தி தான்… அவன் ஒரு *** கம்பெனில ஒர்க் பண்றான்.. அந்த கம்பெனில தான் அவளும் முதல்ல ஒர்க் பண்ணாலாம்… பட் இப்ப திரும்பியும் அங்க ஒர்க் சேர்ந்து இருக்கா போல…” என்று கூறி முடித்து அவன் முகத்தை பார்த்தாள்..
“வேலைக்கு தான் போறா… அதுக்கு ஏன் தயக்கம்… இனிமே நம்ம பக்கம் வராம இருந்தா போதும்…. இந்த ஒரு மாசத்துல டிவோர்ஸ் வாங்கியாச்சு… இனிமே நமக்கும் அவளும் சம்பந்தம் இல்ல தாரும்மா யோசிக்காத அதை பத்தி” என்று கூறினான்…
“மாமா அது இல்ல… அவ பணத்துக்காக அவளோட எம்டியை ஒரு வாரத்துக்கு முன்னாடி தான் செகண்ட் மேரேஜ் பண்ணிட்டாளாம்… அந்த எம்டிக்கும் டிவோர்ஸ் ஆகிடுச்சாம்…. பட் அந்த எம்டி ரொம்ப பொசெசிவ் போல… முன்ன மாடர்னா தான் ஆபீஸ் வருவாளாம்…. இப்போலாம் புல்லா கவர் பண்ற மாதிரி தான் வரலாம்….
அவங்க ஆபீஸ்ல லேடீஸ் ஸ்டாப் பேசிக்குறாங்களாம் அவளோட முதுகுல சூடு பட்ட காயம் இருந்ததாம்…. அந்த விஷயம் ஆபீஸ் புல்லா ஸ்ப்ரெட் ஆகிடுச்சாம்… ஆனா அந்த எம்டிக்கு பயந்து யாரும் எதுவும் பேசலயாம்…
பட் பணத்துக்கு ஆசை பட்டு அந்த எம்டி கிட்ட மாட்டிகிட்டாளாம்…. பணத்தை வெச்சு என்ன தான் செய்ய போறாளோ தெரியல… நல்லவேள சசியை விட்டு பிரிஞ்சிட்டா” என்று கூறி முடித்தாள்….
“ஓகே விடு அம்மு அவ வாழ்க்கையை அவ டிசைடு பண்ணிட்டா…. சசிகிட்ட இத பத்தி சொல்லாத…. ஓகேவா… அவன்கிட்ட ஒளறி வெச்ச அவளோ தான் அம்மு….. வா தூங்கலாம்” என்று கூறி தூங்க வைத்தான் அவளை….
ஆனால் அவளோ ஏற்கனவே சசியிடம் கூறியிருந்தாள்… அவளின் திருட்டு முழியில் கண்டுகொண்டான்… தனக்கு கூறுவதற்கு முன்பே சசியிடம் கூறிவிட்டாள் என….
“அவன்கிட்ட எதுக்கு சொன்ன அம்மு… அவனே எல்லாமே மறக்க தான் பெங்களூர் போனான்… ஆனா நீ ஒளறி வெச்சி இருக்க அவன் கிட்ட உன்னை என்ன சொல்றது…” என்று அவளின் தலையில் கொட்டி திட்டினான்…
“அது மாமா அவன் போன் வெச்ச உடனே சசி கால் பண்ணானா…. அவன் யார்கிட்ட பேசிட்டு இருந்தனு கேட்டான்… நான் அப்படியே அவன் கிட்ட எல்லாமே சொல்லிட்டேன்… அவனும் அத பத்தி கண்டுக்கல….
சசியும் நீங்க சொன்னது தான் சொன்னான்… அவ வாழ்க்கை அவ இஷ்டம்னு சொல்லிட்டான்… அவன் தெளிவா தான் இருக்கான் மாமா… வாங்க தூங்கலாம்” என்று கூறி அவனின் மார்பில் சாய்ந்து தூங்கிவிட்டாள்…
அங்கு பெங்களூரில் சசி அதை பற்றி தான் யோசித்து கொண்டு இருந்தான்…அவளிடம் இருந்து விவாகரத்து பெற்றதை பற்றி யோசித்து கொண்டு இருந்தான்…
அவன் பெங்களூரு சென்ற அடுத்த நாள் வீட்டிற்கு டிவோர்ஸ் நோட்டீஸ் வந்து இருந்தது…. அவனுக்கு கொரியர் அனுப்பி வைத்தான் அர்ஜுனன்… அவனும் கையெழுத்து போட்டு அடுத்த நாளே கோர்ட்டில் சமர்பிக்க பட்டது…
அடுத்த ஒரு வாரத்தில் இருவரின் கேஸ் குடும்பநல நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு வந்து இருந்தது…
இருவரும் பிரிவதில் உறுதியாக இருந்த காரணத்தினால் டிவோர்ஸ் உடனே வழங்க பட்டது….. ஜீவனாம்சம் வேண்டும் என்று கோர்ட்டில் முறையிட்டு இருந்தாள்…
ஆனால் நீதிபதியே “நியாயபடி உன்னை ஜெயிலுக்கு அனுப்பி இருக்கனும் மா… இவங்க கம்பளைண்ட் தரல இல்லனா நானே உன்னை போலீஸ் கிட்ட பிடிச்சி குடுத்து இருப்பேன்…நீ பண்ண காரியத்துக்கு ஜீவனாம்சம் வேணுமா…
உன்னோட பெத்தவங்களே உன்னை பொண்ணு இல்லனு சொல்லிட்டாங்க ….
அந்த குடும்பத்தை மனவுளைச்சல் ஏற்பட வெச்சதுக்கு நீ தான் அவங்களுக்கு பணம் தரணும்… அவங்க இதை விரும்பல.. இனிமே உனக்கும் சசிகுமாருக்கு அவர் குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்ல” என்று கூறினார் அந்த ஐம்பத்தி ஐந்து வயது நீதிபதி…
அந்த டிவோர்ஸ் பேப்பரை கையில் வாங்கிய பின் தான் நிம்மதி பெருமூச்சு விட்டான் சசிகுமார்…
டிவோர்ஸ் கிடைத்தவுடன் ரேவதி சசிகுமாரை ஒரு நக்கல் பார்வை பார்த்துவிட்டு ஒரு காரில் ஏறி சென்றுவிட்டாள்…
இவனும் அவளை கண்டுகொள்ளாமல் தோப்பு வீட்டிற்கு சென்றுவிட்டான்…
அங்கு தங்கிவிட்டு அடுத்த நாளே ஊருக்கு சென்றுவிட்டான்….வீட்டுக்கு வா என்று சுபா கூறியும் இங்கு வந்து பார் என்று கூறிவிட்டான்…
நடந்ததை நினைத்து பார்த்துவிட்டு ரேவதியை நினைத்து பார்க்காமல் தூங்கிவிட்டான்…
அடுத்து அவன் ஊருக்கு வந்தது சுபாவின் வளைகாப்பிற்கு தான்…
error: Content is protected !!