Skip to content
Post Views: 4,453
இரண்டு வாரம் சென்று இருந்தது…. ஆஷா தன்னுடைய உடன் பிறவா அண்ணனுக்காக ஸ்ரீ தேவியுடன் தோழமை அமைத்து கொண்டாள்… ஸ்ரீ தேவியும் முதலில் தயங்கி பேசினாலும் பின் நட்புணர்வுடன் பேச ஆரம்பித்தாள்…
முதலில் அர்ஜுனனுக்காக பேசினாலும் அடுத்து வந்த நாட்களில் நிஜமாவகவே ஆவலுடன் நட்பு பாராட்ட தொடங்கிவிட்டாள் ஆஷா…
Advertisement
ஸ்ரீ தேவி ஆஷாவை தவிர மற்ற யாரிடமும் பேச ஆரம்பிக்கவில்லை… அவர்கள் கேள்வி கேட்டால் பதிலுடன் நிறுத்தி கொள்வாள்…
இரண்டு மாதம் கழித்து அன்று ஒருநாள் ஆஷாவை அழைக்க அர்ஜுனன் அவளின் வகுப்புக்கு சென்றான்… ஆஷாவின் வகுப்பு என்றால் ஸ்ரீ தேவியின் வகுப்பும் தானே… தன்னவளை பார்க்க ஆவலுடன் சென்றான்…
Advertisement
Advertisement
மாணவ மாணவியர்கள் அதிகம் இருக்கவில்லை வகுப்பில்… இரண்டு மூன்று பேர் தான் இருந்தனர் அந்த வகுப்பில் …
இவன் வரவை பார்த்த ஒரு மாணவன் அர்ஜுனனிடம் “என்ன வேணும் சீனியர்???” என்று கேட்டான்…
Advertisement
அர்ஜுனோ தேவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு “ஆஷா வந்தா பிடி மிஸ்ஸை போய் பாக்க சொல்லு வினோத் ” என்று கூறினான்…
“சீனியர் இப்ப நாங்க ரெண்டு பேரும் லேப்க்கு போறோம் .. சார் வர சொன்னாரு… அந்த பொண்ணு கிட்ட சொல்லுங்க” என்று கூறிவிட்டு…. “நாங்க வரோம் சீனியர்” என கூறிவிட்டு அங்கிருக்கும் இரு மாணவர்களும் வெளியேறி விட்டனர்…
அர்ஜுனன் ஹாஸ்டல் அதனால் சீக்கிரம் வந்துவிட்டான் பள்ளிக்கு…. தேவியும் அவளின் பெற்றோர் வெளியே செல்லும் காரணத்தினால் அவளை சீக்கிரம் பள்ளியில் விட்டுவிட்டு சென்றுவிட்டனர்…
தற்போது அவனின் வருகை உணர்ந்தும் தலை குனிந்து தான் அமர்ந்து இருந்தாள்… அர்ஜுனனும் மெதுவாக அவளின் டெஸ்க்கின் முன் நின்று டெஸ்க்கை தட்டினான்… அவள் மெதுவாக தலை நிமிர்த்தி பார்த்தாள்…
இவன் அவளின் கண்ணில் தொலைந்து பின் தெளிந்து “ஆஷா வந்ததும் பிடி மிஸ்ஸை போய் பாக்க சொல்லுங்க” என்று கூறிவிட்டு வேகமாக சென்றுவிட்டான்….
இங்கு வெளியே வந்த அர்ஜுனனுக்கு தன்னவளுடன் முதல் முறை பேசியது இன்பமாய் இனித்தது… சிறப்பு வகுப்பு இருந்ததால் ஒரு சின்ன சிரிப்புடன் வகுப்புக்கு சென்றுவிட்டான்…
இங்கு உள்ளே இருந்தவளுக்கு அவன் குரலை கேட்டவுடன் இனிய படபடப்பு…. அவன் அருகில் அருகில் வர வர ஏனென்றே தெரியாமல் இதயத்தில் இதம் பரவியது….
அவன் முதன் முதலில் பேசியது…. அது மட்டுமில்லாமல் மிக அருகில் பார்த்தது எல்லாம் இன்பமாய் மூச்சு அடைத்து இருந்தது அவளுக்கு … அவன் வெளியே சென்றவுடன் தான் மூச்சை நன்றாக எடுத்து விட்டாள்….
மனதிற்கு பிடித்தவனிடம் முதல் பேச்சு வார்த்தை அவ்வளவு இதமாய் இருந்தது…. ஆம் மனதிற்கு பிடித்தவன் தான்… ஆஷா இந்த இரண்டு மாதமும் இவளிடம் பேசும் போதெல்லாம் இவனை பற்றி தான் அதிகமாக இருக்கும்…
ஆஷா பேசும் போதெல்லாம் முதலில் தேவிக்கு அவ்வளவு பிடித்தம் இல்லை… ஆனால் போக போக அவளுக்கு பிடித்தம் வர ஆரம்பித்தது… ஆஷா அவனை பேசாது இருந்தால் கூட இவளே அர்ஜுனனின் பேச்சை ஆரம்பிப்பாள்….
ஆகஸ்ட் மாதம் ரக்ஷா பந்தன்… அந்த பள்ளியிலேயே ராக்கி ஏற்பாடு செய்தனர்… அர்ஜுனனிற்கு பள்ளியில் இருக்கும் பாதி பேர் ராக்கி கட்டி இருந்தனர்… அவனும் அனைவரையும் தன் தங்கையாக தான் பார்ப்பான்….
ஆஷாவுடன் தேவியும் கையில் ராக்கியுடன் அர்ஜுனனை நோக்கி வந்து கொண்டு இருந்தாள்… ஆஷாவும் கண்ணில் பீதியுடன் நடந்து வந்து கொண்டிருந்தாள்….
தேவி ராக்கியுடன் வருவதை பார்த்து அர்ஜுனனும் அதிர்ந்து நின்றுவிட்டான்…
ஆஷா முதலில் வேகமாக அர்ஜுனிடம் ஓடி வந்து “ஹாப்பி ரக்ஷா பந்தன் ண்ணா” என கூறி ராக்கி கட்டி விட்டாள்…. அவனும் அவளுக்கு பிடித்த சாக்லேட் குடுத்தாள்…
அவள் பின் வந்த தேவியை பார்த்து டக்கென்று கையை பின்னால் கட்டி கொண்டான்… மனதில் வேறு அத்தனை வேண்டுதல் இவனுக்கு கட்ட கூடாது என்று….
ஆஷாவும் பயத்தில் தான் நின்று இருந்தாள் எங்கே தேவி அர்ஜுனனிற்கு கட்டி விடுவாளோ என்று… அவளிற்கு தான் தெரியுமே தன் உடன்பிறவா சகோதரனின் காதல்…
ராக்கியை அர்ஜுனனை நோக்கி நீட்டி “ஹாப்பி ரக்ஷா பந்தன் ண்ணா” என கூறி அவனுக்கு அருகில் கொண்டு சென்று டக்கென்று அவனின் பக்கத்தில் நின்று இருந்த அப்துலிற்கு கட்டினாள்….
அப்போது தான் மற்ற இருவருக்கும் நிம்மதி பிறந்தது… அர்ஜுனனும் ஆஷாவும் ஒருவரை ஒருவர் பார்த்து இளித்து கொண்டனர்…
தேவியின் விருப்பம் அறிந்து சந்தோஷம் வேறு…. தேவி அவர்களிடம் இருந்து விடைபெற்று வகுப்பறைக்கு சென்று விட்டாள்…
அர்ஜுனன் மற்றும் ஆஷாவை பார்த்து அப்துல் வெடித்து சிரித்தான்… அவனின் சிரிப்பை பார்த்து அர்ஜுனன் “என்ன டா கொழுப்பா.. எதுக்கு இப்படி சிரிக்குற????” என்று பல்லை கடித்து கொண்டு கேட்டான்…
“இல்ல ஸ்ரீமா ராக்கி கொண்டு வர அப்ப உங்க பேஸ் ரியாக்ஷன் ப்பா சான்ஸே இல்ல.. ” என்று கூறி மீண்டும் சிரித்தான்
அவனின் சிரிப்பில் இவர்கள் இருவரும் முறைக்க முயன்று தோற்றனர்…. ஆஷாவோ “அண்ணா பயந்தே போயிட்டேன் வா ராக்கி கட்டலாம்னு கூப்பிட்டுட்டு உங்கிட்ட வந்த உடனே… இப்ப தா ஹாப்பியா இருக்கு… அவளுக்கும் உன்னைபிடிச்சு இருக்கு… ஓகே ண்ணா பை” என்று கூறிவிட்டு அவனிடம் இருந்து விடைபெற்றாள்…
ஆனால் ஆஷா தேவியிடம் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை… நாட்கள் அதன்பின் பம்பரமாய் சுழன்றது…. அர்ஜுனனிற்கு பொது தேர்வு என்பதால் அவனால் அதிகம் தேவியின் வகுப்பிற்கு செல்ல முடியவில்லை…
இருவரும் காதலை வாய் விட்டு சொல்லி கொள்ளவில்லை… கண்களால் காதல் செய்து கொண்டு இருந்தனர்….
அடுத்த நாள் அவனிற்கு கடைசி தேர்வு… தேவி சோகமாக அமர்ந்து இருந்தாள்… இனிமேல் அவளை காண முடியாதே என…
“அடியே ஏன் இப்படி மூஞ்சியை வெச்சி இருக்க… இன்னும் ஒரு வருஷம் தான்… அதுக்கு அப்பறம் நீயும் அண்ணா படிக்க போற காலேஜ்ல சேந்துக்கோ… அண்ணா இப்படி பாத்தா பீல் பண்ணுவாங்க… லாஸ்ட்டா இன்னிக்கு தான் பாக்க முடியும்…
அப்பறம் எப்ப பாக்க முடியும்னு தெரியல … சிரி கொஞ்சம்… வீட்டுலயும் போய் அழுது தொலையாத … பாரு எல்லாரும் உன்னை தான் பாக்குறாங்க” என்று கூறி சமாதானம் செய்து கொண்டு இருந்தாள் ஆஷா…
அவள் பேசிய பின் தான் தேவி கொஞ்சம் தெளிந்தாள்… தூரத்தில் இருந்து தான் இருவரும் பார்த்து கொண்டனர்…
தேர்வு முடிந்து அடுத்த இரு வாரத்தில் அப்துலின் மூலம் தேவியிற்கு ஒரு கடிதம் அர்ஜுனன் தந்திருந்தான்….
அப்துலும் ஆஷாவும் பக்கத்து பக்கத்து வீட்டில் உள்ளவர்கள்… ஆஷாவும் பள்ளி தேர்வு முடிந்து வீட்டிற்கு வந்து இருந்தாள்…
இரண்டு வாரம் பள்ளி விடுமுறை அடுத்து பன்னிரெண்டாம் வகுப்பிற்கான சிறப்பு வகுப்பு ஆரம்பிப்பதாக கூறி இருந்தனர்… எனவே அவள் விடுமுறை முடிந்து பள்ளிக்கு கிளம்பும் முன் ஆஷாவை அழைத்து அப்துல் அந்த கடிதத்தை கொடுத்து இருந்தான்…
தேவியின் குடும்பம் சொந்த ஊரிற்கு சென்ற காரணத்தினால் தேவி சிறப்பு வகுப்பு ஆரம்பித்து ஒரு வாரம் பள்ளிக்கு வரவில்லை…
அவள் பள்ளி வந்தவுடன் முதல் வேலையாக ஆஷா அவளிடம் கடிதத்தை தான் கொடுத்தாள்…அந்த கடிதத்தை ஆர்வமுடன் பிரித்து படித்தாள்…
அன்புள்ள என் தேவியே ,,,
“ரெண்டு பேருமே அவங்களோட காதலை சொல்லிக்கல…. ஆனா ரெண்டு பேருக்குமே அளவு கடந்த காதல் இருக்கு…. இது பப்ளிக் எக்ஸாம் உனக்கு எதை பதியும் கவலை படாம நல்லா எக்ஸாம்க்கு படி… “
உன்னை தினமும் பாக்க முடியாது… ஆனா என்னால முடிஞ்ச வரைக்கும் வாரத்துல ஒரு நாள் பாக்க முயற்சி பண்றேன்… எத பதியும் கவலை படாம எக்ஸாம்ல கான்சன்ட்ரேட் பண்ணுமா…
நான் ஜாயின் பண்ற காலேஜ் தான் சேரணும்னு இல்ல… உனக்கு எங்க படிக்க ஆசையா இருக்கோ அங்க படி… வேற காலேஜ் படிச்சாலும் உன்னை பாக்க வாரத்துல ஒரு நாள் வருவேன்..
திரும்பியும் சொல்றேன் எத பதியும் கவலை படாம எக்ஸாம்ல கான்சன்ட்ரேட் பண்ணு…. அன்ட் லவ் யூ தேவியே…
இப்படிக்கு,
உன்னுடைய அஜி ….
அந்த கடித்ததை தன்னுடைய நெஞ்சோடு சேர்த்து அணைத்து கொண்டாள் ஸ்ரீ தேவி… அவனை வாரத்தில் ஒரு நாள் பாப்போம் என்று சந்தோசமாக உணர்ந்தாள்…
error: Content is protected !!