உனக்காய் மறுகணம் என்னுள் உருகணும்
ஞாயிற்று கிழமை என்பதால் விடிந்தும் உறங்கிக் கொண்டு இருந்த அவளின் தலை முடியை கோதி விட்டு சென்றார் அவரின் தந்தை.
சிறிது நேரத்தில் எழுந்த அவள் காலை கடன்களை முடித்து விட்டு சமையலறை சென்று அவளுக்கு ஒரு கப் டி எடுத்துக் கொண்டு வந்து அவர் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்…
வழக்கம்போல் அன்று காலையில், அப்பா டீ குடித்துக் கொண்டே பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டில் இருந்து பைக் சத்தம் ஒன்று கேட்க அது தொடர்ந்து ஒரு கார் வந்த சத்தமும் கேட்டது…
அவர்களது வீடு நகரத்தின் இருந்து சிறிது வெளிபுற இடத்தில் வாங்கி கட்டியதாகும். அதனால் அந்த சாலையில் அதிக வாகன வருது குறைவு..
Advertisement
கார் சத்தம் கேட்டு ஆருத்ரா வெளியே வந்து பார்க்க அங்கே இளம் வயது இளைஞன் ஒருவன் அவனது வசீகரிக்கும் புன்னகையோடு வண்டியில் இருக்கும் கண்ணாடியில் முடியை சரி செய்து கொண்டு இருந்தான்..
இதை கண்ட ஆருவிற்கு அவனது புன்னகையும் அவனது செயல்களும் மட்டுமே கண்களுக்கு தெரிந்தது. விசில் அடித்தபடியே முடியை சரி செய்வதும் கலைப்பதுமாக இருக்க அதையே இமைக்க மறந்து பார்த்துக்கொண்டு இருந்தாள்…
ஆருவை நடப்பிற்க்கு கொண்டு வந்தது அவள் தந்தையின் வரவேற்பு ” வா தங்கச்சி வாங்க மாப்பிள்ளை ” என்று புன்னகையுடன் வீட்டினுள் அழைத்தார்…
Advertisement
அனைவரும் வீட்டிற்குள் செல்ல ஆரு அவர்கள் பின்னே சென்றாள்.
Advertisement
ஆருவின் தந்தை கோவிந்தராஜன் அவர்களிடம் நலம் விசாரித்து கொண்டு அதற்கிடையில் ஆருத்ரா அவர்களுக்கு குடிக்க தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள்….
அதை இன் முகத்துடன் பெற்றுக்கொண்டவர்கள் “உன் பேர் என்ன மா ..???” என்று கேட்க பத்மாவதி கேட்க “ஆருத்ரா ஆண்டி ஆருத்ரா கோவிந்தராஜன்” என்றாள்…
“அருமையான பேரு மா ” என்றவர் கோவிந்தராஜனிடம் திரும்பி ” அண்ணா என்னோட பையனுக்கு நான் கல்யாணம் வச்சிருக்கேன் அண்ணா நீங்க கண்டிப்பா வந்து கல்யாணத்த சிறபிச்சு தரனும் ” என்க பத்மாவதியின் கணவரும் அதை ஆமோதிக்கும் விதமாக ” ஆமா மச்சான் கண்டிப்பா நீங்க இந்த கல்யாணத்த முன்ன இருந்து நடத்தி தரனும் ” என்று கேட்டுக் கொண்டார்…
Advertisement
இதை கேட்ட ஆருத்ராவிற்கு ஒரு நொடி உலகமே நின்றது போல் இருந்தது.. உடனே அவளது விழிகள் வெளியே நின்றிருந்தவனின் மேல் பட்டு தெரித்தது.. இதை எதுவும் அறியாத அவன் அவனது மொபைலில் யாரிடமோ கதை அளந்து கொண்டிருந்தான்.
அவளது காதில் அடுத்து அவர்கள் பேசிய எதுவும் காதில் விழவில்லை.. அவளது கண்கள் அவன் செய்யும் சிறு சிறு செயல்களில் மேலே பதிந்திருந்தது.
[the_ad id=”6605″]
ஃபோன் பேசி முடித்த அவன் எதற்ச்சியாக திரும்ப இருவரது விழிகளும் அதன் நேர்க்கோட்டை சந்தித்தது. அடுத்த நொடியே ஆரு அவளது விழியை திருப்பி பெரியோர்களிடம் பதித்தாள்…
“என்னோட ரெண்டாது பையன் கல்யாணத்துக்கு கண்டிப்பா வரனும் அண்ணா ” என்றவள் வெளியே நின்றிருந்த தன் மகனை அழைத்து ” கார்ல பத்திரிகையும் ஒரு பையும் இருக்கும் பாரு அதை எடுத்துட்டு வா ” என்று அன்பு கட்டளை இட
அவனும் ” சரி மா ” என்று கூறி ஆல் காட்டி கார் கீயை கோர்த்து சுழற்றிய படியே காரை நோக்கி சென்று அதை எடுத்து வந்து கொடுத்தான்..
“கண்டிப்பா வந்துருங்க ” என்று கோவிந்தராஜன் முன் நீட்ட அவரும் மகிழ்வுடன் அதை பெற்றுக் கொண்டு ” கண்டிப்பா மா என் தங்கச்சி பசங்க கல்யாணத்துக்கு இந்த மாமா இல்லாமையா “என்றவர் ” நாங்க கண்டிப்பா வந்தரோம் மா ” என்றார்…
பின் சிறிது நேரம் இருந்து பேசிவிட்டு மூவரும் கிளம்பினர்….
ஆருத்ரா எதுவும் பேசாமல் அமைதியாக அவளது அறைக்குள் புகுந்து கொண்டாள்…
ஏனோ அந்த சில நிமிட சந்திப்பிலே அவளுள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டு சென்றிருந்தான்..
அவளுள் நிகழ்ந்த அந்த மாற்றத்தை அவள் கண்ணீரால் அதை கழித்தாள். அந்த நாள் முழுவதும் அப்படியே செல்ல அவளும் அவன் தந்து சென்ற நினைவுகளை கொண்டு அந்த நால்லை கழித்து வந்தாள்…
நாட்கள் அதன் போல் போக..ஆருவும் வீடு உண்டு தன் வேலை உண்டு என்று இருந்து விட்டாள். திருமண நாளும் வேகமாக வந்தது..
கோவிந்தராஜனும் ஆருவும் அந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். அந்த நாளின் பிறகு அவள் நினைவுகளில் அவன் வந்து போனாலும் அதை ஒதுக்கி விட்டு அடுத்த வேலையை பார்க்க சென்றாள்.
இன்றோ அந்த திருமணத்தில் கலந்துக் கொண்டால். ஆனால் அந்த நொடிவரை அவனை சந்திக்க வில்லை . அவளது மூலை அவளுக்கு உணர்த்தியது இது தவறு என்றும் அவனுக்கு நாளை திருமணம் என்றும் வார்னிங் செய்தது. ஆனால் மனமோ அவனையே தேடியது…
தீடிரென்று அவளது இதயம் தாறுமாறாக துடிக்க அதே போல் இயற்கையான காற்று அவள் உடலில் பட்டு சிலிர்ப்பு பூட்ட அவளது கண்கள் அவளுக்கு சொந்தமான இணையை நோக்கி தேடியது…
அதன் தேடலிற்கு பலனாக அவனே வந்து கொண்டிருந்தான் ஆனால் கூடவே மணப்பெண்ணும் அவளுடன் வந்துக் கொண்டிருந்தாள்…
இதை கண்ட அவளின் விழிகளில் இருந்து கண்ணீர் துளி எட்டி பார்த்திட அதை யாரும் தெரியாமல் துடைத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு வேகமாக சென்று விட்டாள்….
இரவு நேரம் வர..,,நிச்சியத்திற்கு தேவையான அணைத்து வேலைகளையும் திறம்பட செய்தனர்.. பத்மாவதி ஆரு இருந்த அறைக்கு சென்று கதவை தட்ட சில நிமிடத்திலேயே கதவை திறந்த ஆரு ” சொல்லுங்க அத்தை எதாவது வேணுமா..??”என்று கேட்க “எனக்கு ஒன்னும் வேணாம் மா. இந்த புடவையை நீ சீக்கிரமா கட்டிட்டு வந்து நிச்சயத்துல கலந்துக்கோ மா ” என்று கூறி அவளிடம் புடவையை கொடுக்க
அதை வாங்க தயங்கிய ஆரு ” எனக்கு எதுக்கு அத்த இப்போ இந்த சாரி ” என்றிட ” ஒரு அத்தையா நான் என் மருமகளுக்கு எடுக்கும்போது உனக்கும் சேர்த்து தான் எடுத்தேன் மா .எனக்காக இந்த புடவைய வாங்கி கட்டிக்கோ மா ” பாசமாக கொடுக்க அதை ஆருவும் அன்புடன் பெற்றுக்கொண்டு கட்டத் தொடங்கினாள்…
பத்மாவதி கொடுத்த புடவைக்கு ஏற்றவாறு அணிகலன்கள் அணிந்தவள் அதை அவள் முன் வைக்கப் பட்டிருந்த கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்து அதிசியித்து நின்றாள். அவளுக்கு அந்த புடவை கணக்கச்சிதமாக பொருந்தி இருந்தது…அதை ஒரு முறை தடவி பார்த்தவள் கண்களுக்கு முன் அவள் நாயகன் அதே வசீகரிக்கும் சிரிப்புடன் நிற்க அதை காண இயலாதவள் வெட்கத்துடன் தலை கவிழ்ந்தாள்.
இதை உணர்ந்த அவன் அவளது முகத்தை தன் முகத்தை காணுமாறு செய்தவன் அவன் கண்களில் முழு காதலுடன் அவளின் நாயகனாக நின்றிருந்தான். அதை கண்ட அவளுக்கு ஆனந்தத்தில் புன்னகை மலர்ந்தாலும் விழி ஓரம் ஒரு துளி கண்ணீர் எட்டி பார்க்க அதை துடைத்து விட்டவன் இனி உனக்கு நான் மட்டுமே என்று உணர்த்தும் வகையில் அவனது உரித்தான அவளது இதழை ஒரு நொடியில் சிறை செய்தான்.. அந்த இதழணைப்பில் ஆரு திகைத்தாலும் அதை ஏற்றுக் கொண்டாள்.
சில நிமிடத்திற்கு பிறகே விடுவித்தவன் அவளது கண்ணத்தை தன் இரு கரங்கள் கொண்டு தாங்கியவன் “இன்னைக்கு இந்த புடவையில நீ ரொம்ப ரொம்ப அழகா இருக்க ருத்ரா அப்படி உன்ன இறுக்கி அணைச்சிக்கனும்னு போல தோணுது டி ” என்று காதலுடன் சொல்ல அதை கேட்ட அவளுக்கு உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் அவளது இதயம் தாறுமாறாக துடிக்க தொடங்கியது…
இதை உணர்ந்த அவன் அவள் இதயத்தை தொட்டு பார்க்க வர அதற்குள் கதவை தட்டும் சத்தம் கேட்க அங்கே கோவிந்தராஜன் நின்றுக் கொண்டிருந்தார்.
“அப்பா ” என்று இதழ்கள் உரைக்க “கிளம்பிட்டியா டா ” என்றிட ” ஹான் பா கிளம்பிட்டேன் ” என்று கூற ” அப்போ வா மா கீழே போகலாம் ” என்று சொல்ல “இதோ பா ” என்றவள் அறைக்குள் சென்று அவனை தேட அவன் இல்லாமல் போகவே பிரமை என்று தெரிந்ததும் அவளது முகம் சோகத்தில் மூழ்கி போனது.. அதன் பின் அந்த அறை கதவை சாத்தி விட்டு தன் அப்பாவுடன் கீழே சென்றாள்..
அங்கே அவளின் நாயன் மேடையில் தனித்து நிற்க அதற்கு கூடவே மற்ற ஒரு ஜோடியும் நின்றிருந்தது..
ஐயர் சீக்கிரம் இவருக்கான ஜோடியை அழைத்து வாங்கோ என்று கூற பத்மாவதியும் ஆருவின் அருகே வர ” அத்தை நான் போய் பொண்ண கூட்டிட்டு வரேன் “என்று செல்ல எத்தனித்தவளை கரம் பிடித்து நிறுத்திய பத்மாவதி ” பொண்ணே நீ தான்ற பட்சத்தில் நீ யார போய் கூட்டிட்டு வருவ ஆரு மருகமகளே ” என்று சொல்லி புன்னகைக்க
இதை கேட்ட அவளுக்கு தலை சுற்றாத குறை தான் அவள் மெதுவாக தன் தந்தையை காண அவரும் சிரிப்புடன் ஆமாம் என்பது போல் தலையைத்தார்.
அடுத்த நொடி என்ன ஆனாது என்று தெரியவில்லை அதற்குள் அவள் கால்கள் தன்னிச்சையாக அவனின் புறம் சென்று அவன் பக்கத்தில் நின்றது…
அவள் ஏதோ திக்பிரம்மை பிடித்தது போல் நிற்க ..,,”அடியே பொண்டாட்டி..!!கொஞ்சமாச்சும் சிரி டி ” என்று அவளது காது மடலில் கூற அவள் உடல் அவனது இத்தக செயலில் சிலிர்த்து அடங்கியது..
அவனை ஆழப் பார்த்தவள் சிறிது நேரத்திற்கு முன் அவன் கண்களில் பார்த்த அதே காதல் இப்போ அவன் கண்களில் தெரிய வர இதையும் மாயம் என்று நினைத்தவள் கையில் கில்லி பார்க்க அவனோ “ஸ்ஆ ” என்று கத்த ” அப்போ இது உண்மைதான் போல ” என்று எண்ணி மனம் குத்தாட்டம் போட்டது…
[the_ad id=”6605″]
“எதுக்கு டி என்ன இப்போ கில்லுன்ன ” என்று கேட்டிட “நான் எங்க உங்கள கில்லுனேன் ” என்று பார்வையை பதிக்க ” இப்போ கில்லுனது என்ன டி ” என்றவன் அவனும் பார்வையை அவள் மேல் பதிக்க ” அது வந்து இது உண்மையா இல்லையான்னு என்ன தான் கில்லி பார்தேன் ” என்று பாவமாக முகத்தை வைத்து சொல்ல “அடியே அதுக்கு உன் கையை வச்சி உனக்கு கில்லிக்கனும் டி ஆனா எனக்கு கில்லி பார்த்து டெஸ்ட் பண்ண கூடாது சரியா ” என்று சொல்ல
அப்போதே அவள் உணர்ந்தாள் அவனை கில்லியது “சாரி ஏதோ ஒரு வேகத்துல உங்கள கில்லிட்டேன் ” என்று குழந்தை போல் சொல்ல
“இப்படிலாம் பண்ணாத டி அப்புறம் உன்ன இறுக்கி அணைச்சிக்கனும்னு போல தோணுது டி ” என்று கிசுகிசுக்க அவளோ வேகமாக அவனை பார்த்து “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இதையே..” என்று சொல்ல வந்தவள் வாயை மூடிக் கொள்ள
“ஆமாம் இதையே தான் சொன்னேன் அப்பவும் சரி இப்பவும் சரி உன்ன இறுக்கி அணைச்சிக்கனும் ஆசையா தான் இருக்கு அப்போ என்னோட மாமனாரு வந்துட்டாரு இப்போ எல்லாரும் இருக்காங்கன்னு பாக்குறேன் ” என்றான் காதலுடன்….
ஆருவிற்கு ஆச்சரியமாகவும் அதே நேரம் அதிர்ச்சியாகவும் இருந்தது.விழிகள் அகல விரித்து பார்க்க “ஹே முட்ட கன்னி அப்படி பாக்காத மாம்ஸ்க்கு ஒரு மாதிரி வெக்கமா வருதுல ” என்க இதை அனைத்தையும் பெரியவர்கள் பார்த்து சிரித்தனர்…
ஆருவிற்கும் நாயகனுக்கும் மற்றும் நாயகனின் தம்பி அவனது வருங்கால பெண்ணுடன் இனிதே நிச்சயம் நடந்து மோதிரம் மாற்றினர்…
அடுத்தநாள் விடியல் சீக்கிரமே விடிய..,,மண்டபமே கலைக் கட்டியது.. பெரியோர்கள் சிறியோர்கள் என்ன மண்டபத்திற்குள் ஒரு அமர்ந்து சலசலத்து கொண்டு இருக்க நாயகன்கள் இருவரும் தன்னவள்களின் வருகைக்காக மண மேடையில் அமர்ந்து ஐயர் சொல்லும் மந்திரங்களை சொல்லிக் கொண்டு இருக்க..
கூரை பட்டு உடுத்தி அழகு பதுமையாக தோழிகளின் படைச் சூழ நாணத்தின் பொருட்டு தலை கவிழ்ந்த படி வந்த ஆருவை கண்ட அவன் கண்கள் காதல் மின்ன அவளை கண்டது..இமை மறந்து அவளை காண தோழிகளிடம் இருந்து பிரிந்து அவளவனின் வலப் புரத்தில் வெட்கத்துடன் அமர்ந்தாள்.
இருப் பெண்களும் தன்னவன்களின் பக்கத்தில் அமர ஐயர் தனது மந்திரத்தை ஓத ஆரம்பித்தார்…
அனைத்து விதமான சடங்குகளும் முடிவடைய ஐயர்கள் இருவரும் பொன் தாலியினை மண மகன் கைகளில் கொடுத்து கெட்டி மேளம் கெட்டி மேளம் என்று கூற முதலில் ஆருவின் சங்கு கழுத்தில் மூன்று முடிச்சினை இட்டு தன் பாதியாக தன்னவளை ஏற்றுக் கொண்டு உனக்காய் மறுகணம் என்னுள் உருகணும் என்று மனதில் நினைத்துக்கொண்டான்.
ஒரு சில நிமிட வினாடி விட்டு அவனின் தம்பியின் மாங்கல்ய தாரமும் முடிந்தது. அதன் பின் அனைத்து சடங்குகளும் முடிவடைய இரு ஜோடிகளையும் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்…
இரவு நேரம் வரவும் இரு பெண்களையும் அவர் அவர்களின் கண்வன் அறைக்கு அனுப்பி வைத்தனர்..
ஆரு வெட்கத்துடன் அவனது அறைக்குள் நுழைய அவள் முதலில் கண்டது அந்த பெரிதாக மாட்டி இருந்த அவளது புகைப்படமே அதுவும் ஒரு நாய்க்குட்டியை தூக்கி வைத்திருந்த மாதிரி .அதை கண்ட அவளுக்கு அந்த நாள் ஞாபகத்தில் வந்தது. அதையே வெரித்து பார்த்துக் கொண்டு இருக்க..,அவளை பின்னிருந்து அணைத்து”என்ன பொண்டாட்டி இந்த ஃபோட்டோவையே வச்ச கண்ணு வாங்காம பாத்துட்டு இருக்க ” என்று காதோரம் கூறி அவளை கழுத்து பக்கத்தில் இதழ் ஒற்றி எடுக்க..
” இந்த ஃபோட்டோ எப்படி..???இது நான் முதல் நாள் இன்டர்வியூக்கு போனப்ப அங்க இருந்த நாய் குட்டிய கொஞ்சியது” என்று தட்டி தடுமாறி கேட்க
” அடடா இந்த ஃபோட்டோ எப்படி வந்துச்சி தெரியுமா நீ கொஞ்சினுயோ ஒரு நாய்க்குட்டி அந்த நாய்க்குட்டி என்னோடது தான் .அன்னைக்கு தான் உன்ன முதல் தடவ பார்த்தேன் அப்போவே எனக்கு உன்ன ரொம்ப புடிச்சு போச்சி அதுனால எதற்ச்சியா என் ஃபோன்ல ஃபோட்டோ எடுத்தேன் அதுக்கப்புறம் நீ என்னோட ஆஃபிஸ்லயே வேலைக்கு வருவன்னு நான் நினைக்கவே இல்ல டெய்லியும் உன்ன பாத்த பின்பு தான் எனக்கு மத்த வேலையே. ஆனா நீ இப்படி ஒருத்தன் இருக்கான்னு கூட உனக்கு தெரியாது . உன்னோட ஒரு பார்வைக்கு ஏங்கி தவிச்சேன். ஆனா அது நடக்கவே இல்ல . நானும் ஒரு வேலையா வெளி ஊருக்கு பொயிட்டேன் . அப்போ தான் என்னோட தம்பிக்கு கல்யாண வேலை ஆரம்பிச்சாங்க .அப்போ தான் ஒரு நாள் அம்மா என்ன கூப்பிட்டு பத்திரிகை கொடுக்க உங்க வீட்டுக்கு வர வச்சாங்க. நானும் அம்மாக்காக வந்தேன். ஆனா எனக்கு ஒரே ஆச்சிரியமா போச்சி அங்க நீ நின்னுட்டு இருந்த அதுவும் என்னையவே பாத்துட்டு இருந்த எந்த காதலுக்காக ஏங்கி தவிச்சேன்னோ அந்த காதல் அப்போ உன்னோட கண்ணுல பாத்தேன். அப்பவே முடிவு பண்ணிட்டேன் அடுத்த மூகூர்த்தத்துல நமக்கு கல்யாணம் நடக்கனும்னு அதான் அடுத்த நாளே மாமா கிட்ட அப்பா அம்மா கிட்ட பேசி சம்மதிக்க வச்சேன். இப்போ நீ எனக்கு பொண்டாட்டியா என்னோட அணைப்புல இருக்க ” என்று சொன்னவன் அவளது முகத்தை தன் பக்கம் திருப்ப அடுத்த நொடி அவளின் இதழணைப்பில் திக்குமுக்காட வைத்தாள்…
“லவ் யூ சோ மச் டா புருஷா ” என்று காதலுடன் அந்த இதழணைப்பிலே சொல்ல அவனும் ” லவ் யூ டி மொச குட்டி ” என்றான்..
இருவரும் அணைப்பிலே இருந்தனர். இருவரது காதலையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர் .
[the_ad id=”6605″]
” நான் ஒன்னும் கேட்பேன் அதுக்கு நீங்க என்ன திட்டவோ கிண்டலடிக்கவோ கூடாது அதுக்கு பதில் மட்டும் தான் சொல்லனும் சரிங்களா ” என்று அவனின் அணைப்பில் இருந்த படி கேட்க…
” சரி கேளு நான் பதில் சொல்றேன் ” என்றான் அவன்..
“அ…அது வ…வந்..வந்து ” திக்க ” என்னடி இப்படி டைபிங் பண்ற ஒழுங்கா கேளு ” என்று மிரட்ட
“அது வந்து உங்க பேர் என்ன..??? என்கிட்ட யாரும் உங்க பேர் சொல்லல . மத்தவுங்க கிட்ட கேக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கு அதான் உங்க கிட்டயே கேக்கலாம்னு கேக்குறேன் ” என்றாள்.
“அடியேய் ஒரு புருஷன் பேர் கூடவா உனக்கு தெரியாது ” என்று கேலி செய்ய “பாத்தீங்களா சிரிக்கிறீங்க ” என்று உதட்டை பிதுக்கியவளை கண்டு “சரி சரி நான் சிரிக்கில ” என்றவன் ” என்னோட அதிரூபன் டி ” என்றான் .
“என்னது அப்போ நீங்க தான் அந்த ரூபன்னா டெய்லியும் என் டேபிளில பொக்கே வச்சிட்டு போறது “என்று விழி விரித்து கேட்க
“ஆமாம் டி மொச குட்டி அது உன் புருஷனே தான் ” என்றான் கண் அடித்த படி…
அவனை தாறுமாராக அடித்தவள் அந்த அடிக்கு மருந்தாக அவளையே அவனுக்கு தந்திருந்தாள். அவர்கள் வாழ்வில் அவர்களின் காதலே அவர்களை பிணைத்து வைத்தது.
??..முற்றும்..??
