Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uyir Niraigiraen Azhaga

உயிர் நிறைகிறேன் அழகா-18

அத்தியாயம்-18

ஒரு வாரம் கடந்திருந்தது..ராஜா இவளுடன் பேசுவதில்லை..இவளே சென்று வம்பு செய்தாலும், ஒரு முறைப்புடன் கடந்து விடுவான்..

அதுவும் மரகதம் முன்பு இப்படி நடந்தால், அவனை திட்ட ஆரம்பித்து விடுவார்.எனவே, அவர் முன்பு வம்பு செய்ய மாட்டாள்..

‘இந்த வரு ரொம்ப தான் பண்ணுறார்..என்ன பண்ணலாம்..??’
தீவிர சிந்தனையோடு கூடத்தில் அமர்ந்திருந்தாள்..



Advertisement

மாடியில் இருந்து ராஜா இறங்கி வந்தான்..

“இந்த மாமனோட மனசு மல்லிகைப்பூ போலே பொன்னானது..!!
இந்த வண்ண மயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுது.!!.”
அவனிடம் வம்பை ஆரம்பித்தாள்..

வழக்கமான முறைப்போடு, உணவு மேஜைக்கு சென்றான்..
இவளும் பின்னே சென்று,உணவு பரிமாற போனாள்.
கை காட்டி மறுத்தவன், அவனே போட்டு சாப்பிட ஆரம்பித்தான்..

Advertisement

“ரொம்ப பண்ணாதீங்க வரு..இப்போ என்ன ஆச்சு..??”

Advertisement

“இதுக்கு மேல என்ன ஆகனும்.??.”

அதற்கு பதில் சொல்ல முயலும் போது, பாண்டி வந்தான்..
அவள் மனதில் ஒரு ஐடியா தோன்றியது..

மரகதம், பேச்சியோடு வீட்டிற்கு பின் புறம் இருந்த தோட்டத்தில் நின்றார்.. தோட்ட வேலையை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்..

Advertisement

இப்பொழுதைக்கு வரப்போவதில்லை என்று உறுதி செய்து கொண்டவள்..

“வாங்க ண்ணா..”
வாயெல்லாம் பல்லாக வரவேற்றாள்..

“என்னம்மா பாசமலரே, வரவேற்பு பலமா இருக்கு..”
சந்தேகமாய் கேட்டான்..

“உட்காருங்க அண்ணா சாப்பிடலாம்..”

“என்ன,உன் மாமனுக்கு போட்டுட்டு மிச்சம் மீதி இருக்கோ..அதை தள்ள ஆள் பார்க்குறியா??”

“என்ன அண்ணா,என்ன பார்த்து இப்படி சொல்லிட்டீங்க..நாம அப்படியா பழகி இருக்கோம்..??”

‘டேய் பாண்டி, இவ எதுக்கோ வலை பின்னுறா.. சிக்கிடாத..’

சாப்பிட அமர்ந்தான்..அவனுக்கு பரிமாறியவள்..

“ஏன் அண்ணா எனக்கு ஒரு டவுட்டு.??.”

அவளை சந்தேகமாய் பார்த்து,
“என்ன டவுட்??”

“இந்த நாவல் சினிமால எல்லாம் கட்டாய கல்யாணம் பண்ணுறாங்க தானே, ஹீரோ ஹீரோயின் அஹ்..அதை பத்தி என்ன நினைக்குறீங்க..??”

“இதை பத்தி என்ன நினைக்க??பாவம் தான் ஹீரோயின், விருப்பம் இல்லாம எப்படி வாழும்..??”

“ச்சு.. அது இல்ல ண்ணா.. எல்லாத்துலயும், இந்த ஹீரோவே அப்படி செய்யுறாங்க..சுலபமா..ஏன் தெரியுமா??”

“ஏன்??”

“ஏன்னா, இந்த தாலி கட்டுற விஷயம், ஆண்கள் கையில இருக்கு..அதான்.. ஹீரோயின் எதிர்பார்க்காத போது, பொசுக்குன்னு தாலி கட்டுறாங்க..”

“சரி,அதுக்கு??நீ இப்போ என்ன சொல்ல வர்ற..??”

“இதுனால நான் ஒரு முடிவு பண்ணி இருக்கேன்..பெண்களுக்கு அந்த உரிமை வேணும்..இதுக்காக ஒரு ஊர்வலம் நடத்தி, மாவட்ட ஆட்சியர் கிட்ட ஒரு மனு கொடுக்கணும்..அதுக்கு தலைமை தாங்க, ஒரு வீரமான ஆள் தேடுறேன்.. தேடிட்டே நிமிர்ந்து பார்த்தா, நீங்க வரிங்க..நான் முடிவு பண்ணிட்டேன்..உங்க தலைமையில கொடுக்குறோம்..என்ன சொல்லுறீங்க அண்ணா..??”

ஒரு நொடி திகைத்து விழித்தவன்..

‘இவ நம்மள வச்சு, காமெடி கிமெடி பண்ணுறாளோ??
ஏன்டா பாண்டி, உனக்கு வாரதுக்கு வேற நேரமே கிடைக்கலையா??இவ இப்படி ஏடாகூடமா  சிந்திக்கும் போதா வரணும்..’

“இந்த பாரு மா..நல்ல சோறுக்கு ஆசைப்பட்டு வந்ததுக்கு..நீ செய்யுறது சரி இல்ல..இதுக்கு பேசாம, எங்கூட்டுல கம்பங்கூல் குடிச்சுட்டு, அப்படியே போய் இருப்பேன்..”

“என்ன அண்ணா, உங்களை மாதிரி வீரமான ஆள் இப்படி சொல்லலாமா??”

“நான் சொன்னனா நான் வீரன்னு.. விட்டா, எவ கையிலையாச்சும் தாலியை கொடுத்து, கட்ட சொல்லுவ போல..இப்போ என்ன பிரச்னை உனக்கு..??”

“பெண்களுக்கு, ஆண்களை கட்டாய கல்யாணம் பண்ணுறது பிரச்சனையா இருக்கு..அதுக்கு ஒரு தீர்வு வேணும்..”

‘இன்னிக்கு நேரமே சரி இல்ல..இவ கிட்ட வான்டெட் அஹ் வந்து சிக்கிட்டேனே..’

“இப்போ என்ன, இவனை நீ கட்டாய கல்யாணம் பண்ணணுமா??வா, நானே இவனை குண்டு கட்டா தூக்கிட்டு வந்து விடுறேன்..நீயே தாலி கட்டு.. முடிஞ்சா, ஒரு மெட்டி கூட மாட்டி விடு..என்னை ஆளை விடு..”

‘வந்து சேருதுங்க பாரு எனக்குன்னு..’

வேகமாய் சாப்பிட்டு விட்டு, விட்டால் போதும் என்று பின் புறம் ஓடிவிட்டான்..

“அண்ணா, இன்னும் கொஞ்சம் சாப்பிட்டு போங்க..”
சத்தமாய்,
புன்னகையுடன் அழைத்தாள்..

“வேண்டாமா தாயே..உங்க சாவஹாசமே வேண்டாம்..”

சத்தமாய் சிரித்தவள்..
இவன் புறம் பார்த்தாள்..

“ஏண்டி, இப்போ வம்பு பண்ணுற??அவன் கிட்ட..”

“நீங்க பேசலைனா, அப்படி தான் பண்ணுவேன்..”

அவளை முறைத்து விட்டு, எழுந்து சென்றான்..

பின் புறம் சென்ற பாண்டியின் கற்பனையில், அவன் கழுத்தில் தாலி தொங்கியது..

“கன்றாவி..”
என்று தலையை சிலுப்பி கொண்டான்..

“என்ன லே கன்றாவி..??”
அவனை பார்த்து மரகதம் கேட்டார்..

‘என்ன சொல்லி சமாளிக்க??’

“பொங்கலா அது..நல்லாவே இல்ல..முந்திரி மிளகு ஒண்ணும் இல்ல..”

“ஏலே, இன்னிக்கு பொங்கலே செய்யலயே லே..”

“அப்போ, அங்க மஞ்சளா இருந்துச்சே அது என்ன??”

“அது கேசரி லே..”

“அப்போ சரி..அதுல இனிப்பு இல்ல,முந்திரி இல்ல..இப்போ சரியாய் சொன்னனா??”

“உனக்கு மண்டை குழம்பி கிடக்கு லே..அதான், கோட்டி மாதிரி எப்போ பாரு உளறிட்டே கிடக்க..”

“க்கும்.. இன்னும் கொஞ்ச நாளுல, உன் பிள்ளையும் மருமகளும், அப்படி தான் ஆக்க போறாங்க..”
முணுமுணுத்தான்..

“என்ன லே சொல்லுற..??”

“ஒண்ணும் இல்ல..கிளம்புறேன்..”

‘வீட்டுக்குள்ள, ஒரு காதல் கதை ரொம்ப நாளா ஓடுது..இந்த அத்தைக்கு விவரமே பத்தல..என்னத்தை சொல்ல.நான் பேசுனா மட்டும், விளக்கம் கேட்க ரெடியா நிக்குது..அதுங்களை கண்டுக்கவே மாட்டேங்குது…’

மனதுள் புலம்பிக் கொண்டே சென்றான்..

மூன்று வாரம் கடந்திருந்தது..
ஓரளவுக்கு,  மது கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் அளவு, பேச ஆரம்பித்திருந்தான் ராஜா..

அன்று ஞாயிற்று கிழமை..ராஜா தோட்டத்துக்கு கிளம்பிக் கொண்டிருந்தான்..

அகல் பொதுவாய், விடுமுறையில் வர மாட்டாள்.. கணவன் வீட்டில் தான் இருப்பாள்..

ராஜா அறையை விட்டு வெளியே வந்ததும்,
“வரு,நானும் வரேன் தோட்டத்துக்கு….கூட்டிட்டு போங்க.போர் அடிக்குது…”

“அதெல்லாம் கூட்டிட்டு போக முடியாது..பேசாம வீட்டிலேயே இரு..”

“இல்ல, நானும் வருவேன்..”

“வர வர ரொம்ப பிடிவாதம் பண்ணுற..சொன்னதை கேளு..இன்னிக்கு அங்க யாரும் வேலைக்கு இருக்க மாட்டாங்க..எனக்கு வேலை இருக்கும்..நீ அன்னைக்கு மாதிரி புதர் கிட்ட போய், ஏதாவது இழுத்து விட்டா, உன்னை பார்த்துட்டே இருக்க முடியாது என்னால..”

“நான் எங்கேயும் போக மாட்டேன்..குட் கேர்ள் அஹ் இருப்பேன்..உங்க பக்கத்துலேயே. ப்ளீஸ் வரு..”

மறுப்பாய் தலை அசைத்து விட்டு, கீழே சென்றான்..

அவனை முறைத்தவள்..
‘என்னை விட்டுட்டு, எப்படி போறீங்கன்னு பார்க்குறேன்??..’
அவன் பின்னே சென்றவள்..

மரகதத்திடம்,
“அத்தை, மாமா கிட்ட சொல்லி..தோப்புக்கு கூட்டிட்டு போக சொல்லுங்க..நான் சொன்னா, கேட்கவே மாட்டேங்குறாங்க..”

“ஏன் லே, பிள்ளை ஆசை பட்டு கேட்குது. கூட்டிட்டு போயேன்..”

“அம்மா,அங்க யாரும் வேலைக்கு இருக்க மாட்டாங்க..இவளை என்னால காவல் காத்து கிட்டே இருக்க முடியாது..நீங்க வேற, இவளுக்கு முள்ளு குத்துனா கூட,நான் தான் காரணம்னு மல்லுக்கு நிப்பீங்க..இந்த வம்பே வேண்டாம்..”

“நான் எங்கேயும் போக மாட்டேன் அத்தை.. கூட்டிட்டு போக சொல்லுங்க..”

முகத்தை பாவமாய் வைத்துக் கொண்டு கேட்டாள்..

“குழந்தை ஆசை படுது. கூட்டிட்டு போடா..ரொம்ப பண்ணாத..”

“யாரு இவளா குழந்தை??மூஞ்சியை குழந்தை மாதிரி வச்சுட்டு, பண்ணுறதெல்லாம் கேடி வேலை..”

“அப்படி என்ன லே பண்ணா??”

அவளை முறைத்தவன்..
“ஒண்ணுமே பண்ணல..
வந்து தொலை…”
பல்லை கடித்துக் கொண்டு கூறினான்..

“ஏலே, உன்ற கோவத்தை அவ கிட்ட காட்டாத.. ஒழுங்கா கூட்டிட்டு போய்ட்டு வா..”

“அவளை, ஒழுங்கா என் கூட இருக்க சொல்லுங்க..”
கூறிவிட்டு முன்னே நடந்தான்..

“ஏன் கண்ணு,இவன் கூட போகனுமா..??சிடுமூஞ்சியா இருக்கான் வர வர..”

“அதெல்லாம், மாமா நல்லா பார்த்துக்குவார்..நீங்க கவலைப்படாதிங்க அத்தை..”

அவன் பின்னே சென்று, காரில் ஏறினாள்..

அங்கு சென்றதும், அவன் தோப்பை சுற்றி விட்டு,தோப்பு வீட்டில் அமர்ந்து, கணக்கு வழக்குகள் எல்லாம் பார்க்க ஆரம்பித்தான்..

இவளும் அவன் பின்னோடு சுற்றி விட்டு,அவன் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து, கொஞ்ச நேரம் தன் அலைபேசியில் விளையாண்டாள்..

அதுவும் சலிப்பு தட்ட,நிமிர்ந்து அவனை பார்க்க ஆரம்பித்தாள்..
முதலில் அதை கவனிக்காதவன், பின் பார்வை உறுத்தலில் நிமிர்ந்து பார்த்தான்..

அதற்கு காத்திருந்தது போல,
“உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு..
என் உள் நெஞ்சு சொல்கின்றது..
மெல்லிய ஆண் மகனை பெண்ணுக்கு பிடிக்காது
முரடா உன்னை ரசித்தேன்..
தொட்டதும் விழுந்து விடும் ஆடவன் பிடிக்காது..
கர்வம் அதை மதித்தேன்..
நான் பிறக்கும் முன்னே, அட நீ பிறந்ததேன்..
நான் பிறக்கும் போது  நீ உந்தன் கையில் என்னை ஏந்த தானோ…!!”

அவள் பாடலில் சாய துடித்த மனதை இழுத்து பிடித்து,அவளை முறைத்தவன்..

“பெருசா பேசுன,ஒழுங்கா சமத்தா இருக்கேன்னு..இப்போ என்ன பண்ணுற நீ??”

“நான் என்ன பண்ணேன்..பாடுனது குத்தமா..??நான் என்ன, உங்க கையை பிடிச்சா இழுத்தேன்..??”

“அது வேற பண்ணுவிய நீ??”

“அதுக்கெல்லாம் முழு ரைட்ஸ் இருக்கு எனக்கு, தெரிஞ்சுக்கோங்க..”

தன் தாலியை தூக்கி ஆட்டி காண்பித்தாள்..

அதை பார்த்ததும் முகம் மாற,
மறுபடியும் கோப்பில் பார்வையை பதித்தான்..

‘போச்சு..திரும்ப வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சு..’

அவன் அலைபேசியை எடுத்தாள்..
“என்ன பண்ணுற..??”

“உங்க ஊர் பஞ்சாயத்து தலைவருக்கு போன் போட போறேன்..”

“எதுக்கு??”
சந்தேகமாய் கேட்டான்..

“ஹ்ம்ம்..என் புருஷன் என் கூட பேச மாட்டேங்குறார்..அப்படின்னு ஒரு கம்பிளைன்ட் கொடுக்க போறேன்..”

“ச்சு.. ஒழுங்கா போனை கொடுடி..”

“முடியாது..”

வேகமாய் எழுந்து எட்டி நின்றாள்..

“இப்போ தரியா இல்லியா??”

“மாட்டேன்..”

கூறிவிட்டு, தோப்பு வீட்டை விட்டு வெளியே ஓடினாள்..

“ஏய் நில்லுடி..”
அவனும் அவள் பின்னோடு வந்தான்..

தோப்பு வீட்டுக்கு வெளியே நின்று கொண்டு,
“யாராவது இருக்கீங்களா??இந்த கொடுமையை பாருங்க..என் புருஷன் என் கையை பிடிச்சு இழுக்க மாட்டேங்குறார்..”
சத்தமாய் கத்தினாள்..

‘இவளை..’
பல்லை கடித்தவன்..

“ஏய்..ஏண்டி..??”
வேகமாய்  சென்று, அவள் வாயை மூடினான்..

“ஒழுங்கா உள்ள வாடி..யார் காதுலயாச்சும் விழுந்துட போகுது..”

அவளை உள்ளே இழுத்தான்..அவன் கரத்தை விலக்கி விட்டவள்..

“அப்படி தான் சொல்லுவேன்..தோப்புக்கு வெளிய நின்னு சொல்லிட்டு வரேன்..”

வேகமாய் சிரித்துக் கொண்டே ஓடினாள்..

‘இவளோட..’
ஒரு புன்முறுவளோடு, அவளை துரத்தினான்..

தோப்புக்கு வெளியே சாலையை அடைந்தாள்..வேகமாய் பின்னால் வந்தவன், அவள் கை பிடித்து இழுத்தான்..

அவனோடு மோதி நின்றாள்..இருவரும், கையை பிடித்து இழுத்து விளையாண்டு கொண்டிருந்தார்கள்..

அப்பொழுது கேட்ட பைக்கின் ஒலியில், இருவரும் திரும்பினார்கள்..

அவர்கள் நெருக்கத்தை பார்த்த வண்ணம், வண்டியை நிறுத்தினான் பழனி..

அவனை பார்த்ததும் அவள் கையை விட்ட ராஜா,
“எப்படி இருக்க பழனி..??எப்போ டிஸ்சார்ஜ் ஆனா.. ??இப்போ பரவால்லையா??”

“ஹாய் பழனி. உடம்பு எப்படி இருக்கு??ஐ மீன், இப்போ சரி ஆகிடுச்சா..??
நீங்க ரொம்ப லக்கி.இந்த தடவை சின்ன பூச்சி கடிச்சுது, பொழச்சுட்டீங்க..எப்போவும் இப்படியே இருக்காது.அடுத்த தடவை, வீரியம் அதிகம் உள்ள பூச்சி கடிச்சா, ஸ்பாட் அவுட் தான்.. சோ, பார்த்து இருங்க..”

கண்ணில் கேலியோடு,
நமுட்டு சிரிப்போடு கூறினாள்..
மறைமுகமான எச்சரிக்கை, ராஜாவுக்கு தெரியாமல்..

அவளை முறைத்து விட்டு கிளம்பினான்..

அவன் போனதும்,கடுகடுத்த முகத்தோடு,
“அவன் கிட்ட என்ன பேச்சு உனக்கு??”

“இதென்னங்க வம்பா போச்சு..நீங்க நலம் விசாரிச்சீங்க.. உங்க பக்கத்துல நின்னுட்டு விசாரிக்காட்டி,
நல்லாவா இருக்கும்..அதுவும், உங்க பொண்டாட்டி நான்.நாளைக்கு சரித்திரம் தப்பா பேசாது..”

அவள் நீட்டி முழக்கியதில்,
“வர வர ரொம்ப பேசுற டி..”
அவள் மூக்கை  பிடித்து ஆட்டி, புன்முறுவளோடு கூறியவன்..

“அவன் கிட்ட பேசாத. எனக்கு பிடிக்காது..”

“நீங்க என் கிட்ட பேசுனா.. நான் ஏன்?? அவன் கிட்ட எல்லாம் பேச போறேன்..”

அவள் பதிலில்
சிரித்தவன்..

“சரி உள்ள வா..”

“நம்ம பஞ்சாயத்து..தலைவர் கிட்ட சொல்லலியே..??”
தீவிரமாய் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள்..

“வாடி வாயாடி..”
அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றான்..

அதன் பின், அவளோடு ஒழுங்காய் பேசினான்..

இரண்டு நாட்கள் சென்றது..

அன்று காலையில், மரகதத்துக்கு ஒரு போன் வந்தது..

அதை எடுத்து பேசியவர்,அதை வைத்து விட்டு, யோசனையில் ஆழ்ந்தார்..

அருகில் இருந்த மது,
“என்ன ஆச்சு அத்தை??”

“ராசா அப்பா வழில, எனக்கு கொழுந்தன் முறை, அவரு உடம்பு முடியாம ரொம்ப நாளா இருந்தார்..நேத்து நைட் தவறிட்டார்னு சேதி வந்துச்சு..நெருங்குன உறவு, நான் போனும்..விசேஷமுன்னா உன்னை கூட்டிட்டு போயிடுவேன்..இதுக்கு முடியாது..அதான் யோசிக்குறேன்..”

” பரவால்ல அத்தை.. நான் இருந்துக்குறேன்..எப்போ வருவிங்க அத்தை..??”

“ஒரு வாரம் ஆகும்..ராசாவோட கிளம்புறேன்..அவன், இன்னிக்கு ராவுக்கு திரும்பிடுவான்.. நான் வர, ஒரு வாரம் ஆகும்..
உனக்கு, ராவுக்கு துணைக்கு அகலை வர சொல்லுறேன்..சரியா கண்ணு..??”

“சரி அத்தை.. போய்ட்டு வாங்க..”

“ஒண்ணும் பயம் இல்ல கண்ணு..இருந்தாலும், சுதானமா இரு..”

“நீங்க கவலை படாதீங்க அத்தை.. நான் பார்த்துக்குறேன்..”

அவரும் ராஜாவும் காரில் கிளம்பினார்கள்..
ஆயிரம் பத்திரம் சொல்லி விட்டு கிளம்பினார் மரகதம்..

அன்று இரவு, அகல் இவளுக்கு துணைக்கு வந்தாள்.. இவள் அறையில், இருவரும் பேசிக் கொண்டு உறங்கினார்கள்..

நள்ளிரவுக்கு மேல் வந்த ராஜா,வெளியில் உள்ள குளியல் அறையில் குளித்து விட்டு,  அவன் வைத்திருந்த சாவி கொண்டு திறந்து கொண்டு, அவன் அறைக்கு சென்றான்..

மறுநாள் அவனோடு பேசி விட்டு, அகல் அவள் வீட்டுக்கு சென்றாள்..

அன்று மதியம், வீட்டு தொலைபேசிக்கு அழைத்த அகல்,
“அண்ணி,என் மாமியார் சமையல் கட்டுல இருந்த ஈரம் பார்க்காம, காலை வச்சு விழுந்துட்டாங்க..டவுனு ஆஸ்பத்திரில சேர்த்துருக்கு..நான் கூட இருக்கணும்.. நீ, பேச்சியை துணைக்கு வச்சுக்கோ..சரியா??”

“இப்போ, எப்படி இருக்காங்க அகல்??”

“இடுப்புல பலமான அடி அண்ணி..எப்போ டாக்டர் போக சொல்லுறாரோ, அப்போ தான் கிளம்பணும்..எவ்ளோ நாள் ஆகுமுன்னு தெரியல..”

“சரி அகல்..பார்த்துக்கோ..அவங்களை..”

ராஜா, மருத்துவமனை சென்று பார்த்து விட்டு வந்தான்,அகலின் மாமியாரை..

இரவு தங்க சொல்லி,
பேச்சியிடம் சொன்னாள்..

அன்று இரவு பேச்சி  வந்தாள்.. சமையல் அறையில் உறங்கினாள்..
மது அவள் அறையில் இருந்தாள்..

அப்பொழுது, அவள் அலைபேசி இசைத்தது..
எண்ணை பார்த்தவள், எடுத்து பேசினாள்..
வெகு நேர பேச்சு வார்த்தைக்கு பிறகு, அழுகையும் கோபமுமாய் அலைபேசியை தூக்கி படுக்கையில் எறிந்தாள்..

சிறிது நேரம் நிலவை வெறித்தவள்.. கண்ணை துடைத்துக் கொண்டு, ஒரு முடிவோடு அறையை விட்டு வெளியே வந்தாள்..

முதல் முறையாக, ராஜாவின் அறைக்கு முன்னே சென்றவள்..நடுங்கும் கரங்களோடு கதவில் கை வைத்தாள்.. திறந்து கொண்டது..

உள்ளே சென்றவள் பார்வையை சுழற்றினாள்..
அவளுக்கு முதுகு காட்டி நின்று, மேஜையில் ஏதோ செய்து கொண்டிருந்தான் ராஜா..

தைரியத்தை கூட்டி கொண்டு, மெதுவாக நடந்து சென்றவள், சற்று தயங்கி நின்றாள்..
பிறகு, ஒரு நீண்ட மூச்சை விட்டு தன்னை சமன் செய்தவள்.

தயக்கத்தோடு அவன் பின்னே நெருங்கி சென்று, அவனை மெதுவாய் பின்னிருந்து அணைத்துக் கொண்டாள்..

ஒரு நிமிடம் திகைத்தவன்,அதிர்ந்து திரும்பினான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!