உயிர் நிறைகிறேன் அழகா-2
அத்தியாயம்-2
நட்சத்திர தோழர்களோடு நிலவு உலா செல்லும், இரவுப் பொழுது..காதலனை கண்ட காதலி போல, பூமி மகள் குளிர்ந்திருந்தாள்..சாதாரண மக்களுக்கு அது நடுநிசி..
உயர் ‘குடி’ மக்களுக்கு, அது உற்சாகப் பொழுது..
நகரத்தின் முக்கிய பகுதியில் இருந்தது அந்த பப்..
இரவை பகலாக்கி கொண்டிருந்த, வண்ண வண்ண விளக்குகள்..கண்ணை பறித்தது..
ஆண் பெண் பேதமில்லாமல், அனைவரும் உற்சாகத்தோடு ஆடி கொண்டிருந்தனர்..சிலர் மது கோப்பைகளோடு இருக்கைகளில் அமர்ந்து,ஆடுபவர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்..
Advertisement
ஆடுபவர்களுக்கு மத்தியில், இடது கையில் மது கோப்பையோடு,ரத்த சிகப்பு நிறத்தில் பென்சில் வியர் ஸ்லிம் கவுன்,ஸ்லீவ் லெஸ், முட்டிக்கு மேல் வரை அணிந்து, இசைக்கு ஏற்ப வளைந்து நெளிந்து ஆடிக் கொண்டிருந்தாள் மதுவந்தி..
வெண்ணையில் குழைத்த குங்கும பூவின் நிறம்,சராசரி உயரத்தோடு,ஸிரோ சைஸ் என்னும் அளவோடு, இறுக்கி பிடித்த உடையில், ஒரு லயத்தோடு ஆடிக் கொண்டிருந்தவள் அருகே வந்த இளைஞன் ஒருவன்,
“ஹாய் பியூட்டி,கேன் ஐ ஜாயின் வித் யூ..”
Advertisement
அவனை நிமிர்ந்து பார்த்தவள், ஒரு அலட்சிய உதட்டு சுளிப்புடன்,கையை அசைத்து விட்டு, முகத்தை திருப்பிக் கொண்டாள்..
Advertisement
அதற்கு ‘போடா’ என்று அர்த்தம்..
அவள் அலட்சியத்தில், முகம் சுருங்க விலகிச் சென்றான் அந்த இளைஞன்..
அவன் நண்பன் அவனை கவனித்து விட்டு,
“டேய்,மச்சான்..அந்த குதிரை பணக்கார வீட்டு குதிரை டா. யாருக்கும் அடங்காது.அது மேல பணம் கட்டாத.தள்ளி விட்டு, காலை வாரி விட்டுடும்..உனக்கு தகுந்த ஆளை பாரு..வாடா..”
அவன் கூறிய முரட்டு குதிரையின் அருகே சென்ற,யாதவ்..
Advertisement
“ஹாய் பேபி.. ஷல் ஐ..”
என்று அவள் கை பிடித்தான்..
ஒரு மோகன புன்னகையுடன்,
“ஒய் நாட்..”
என்று அவன் கைகள் கோர்த்து, ஆட தொடங்கினாள் மது..
“பார்த்தியா,கோடீஸ்வரன் கூட தான், ஆடுவாளுங்க,இவளுங்க எல்லாம்..”
வெகு நேரத்திற்கு பிறகு
ஆட்டம் ஓய்ந்து, மாதுவின் மது போதையும் அதிகம் ஆக, தன் காரை நோக்கி சென்றாள் மது..
“ஹாய் பேபி,ஷல் ஐ ட்ராப் யூ..”
கேட்ட படி கூட வந்தான், யாதவ்..
[the_ad id=”6605″]
அவனின் போதை இவள் அளவுக்கு இல்லை..
கண்கள் போதையில் சொருக,
“யா,சூர்..”
அவன் மீதே போதையில் விழுந்தாள் மது..
அவளை கை தாங்கலாக பிடித்து, அவளின் காரில் ஏற்றியவன்,அவன் டிரைவரை அழைத்து..
“இந்த காரை பாலவ் பண்ணுங்க..”
அவளின் காரை திறந்து, ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து, வண்டியை எடுத்தான்..
போதையில், அவன் தோளில் சாய்ந்தாள் அவள்..
மென்னகையுடன் அவள் கரம் பற்றி முத்தமிட்டவன்,அவள் வீடு நோக்கி வண்டியை செலுத்தினான்..
நகரத்தின் புற நகர் பகுதி.அங்கிருக்கும் வீடுகளை பார்த்தாலே தெரியும்,அது பணக்காரர்கள் மட்டும், வசிக்க கூடிய பகுதி என்று..
அந்த வீட்டின் ஹாலில் அமர்ந்திருந்தார் ராஜசேகர்..முகத்தில் கவலை அப்பிக் கிடந்தது..
அவரின் படுக்கை அறையில் இருந்து வெளியே வந்த அவர் மனைவி பிரமிளா.. அவர் அமர்ந்திருப்பதை பார்த்தார்..இரவு உடையில் இருந்தார்..
நாசுக்காய் ஒரு கொட்டாவியை வெளியேற்றியவர்..
“தூங்கலை..”
“இல்ல..மது இன்னும் வரல..”
“அவ என்ன குழந்தையா.. ??டோன்ட் ட்ரீட் ஹேர் அஸ் எ சைல்ட்.. எல்லாம் வருவா..வந்து படுங்க..”
“என்ன பேசுற பிரமி.. வயசு பொண்ணு.மணி ரெண்டு ஆக போகுது..இன்னும் காணும்..நீ என்னடானா,வருவா, அப்படிங்குற..ஒரு அம்மாவா, நீ பட வேண்டிய கவலை இது..”
“நிறுத்துறீங்களா.. உங்க கிராமத்து புத்தி,இன்னும் உங்களை விட்டு போகலியா..??நாட்டு புறம் மாதிரி பேசாதீங்க..பொண்ணு, விளக்கு வைக்குறதுக்கு முன்ன வீட்டுக்கு வரணும்..வெளிய சுத்த கூடாதுன்னு.. உங்களை பிடிச்சு என் தலையில கட்டி வச்ச, என் அப்பாவை சொல்லணும்..உலகத்துல இல்லாத மாப்பிள்ளைன்னு.. ச்சை.. கொஞ்சம் கூட நாகரீகம் தெரியாத மனுஷன்..எங்க லேடீஸ் கிளப்ல எல்லாம் கேட்குறாங்க.. ஏன் எந்த பார்ட்டிக்கும், உன் ஹஸ்பண்ட் வர மாட்டேங்குறாருன்னு..என்னால பதில் சொல்ல முடியல..பார்ட்டி கல்ச்சர் தெரியாத மனுஷன் என் புருஷன்னு, சொல்ல முடியல..”
அவர் ஆதங்கத்தை
அவர் பொரிந்து தள்ளி கொண்டிருக்கும் போது, கார் வந்து நிற்கும் ஒலி கேட்டது..
அவசரமாய் எழுந்து, வாசல் அருகே சென்றார் ராஜசேகர்..
அங்கு அவர் கண்ட காட்சி,
போதையில் தள்ளாடிய படி,நடக்க முடியாமல் தன் முக்கால் வாசி பாரத்தை, ஒரு ஆடவன் மேல் இறக்கிய படி வந்த மகளை தான்.. அவள்,அவன் தோளில் கைகள் போட்டிருக்க,அவன், அவள் இடை தாங்கி, அணைத்த படி நடத்திக் கூட்டி வந்தான்..
அதிர்ந்து நின்றவரை, பார்த்த யாதவ்,
“ஹாய் அங்கிள்..”
அதற்குள் அங்கு வந்த பிரமிளா..மகள் இருந்த கோலம் பார்த்து,அவளை தன் வசம் திருப்பி, தோள் சாய்த்தார்..
அவளை நடத்தி சென்று ஷோபாவில் அமர்த்தினார்..
“ஹாய் ஆன்டி..”
“நீ..??”
“விஸ்வநாதன் பையன் ஆன்டி..மது கூட தான், எம்பிஏ பண்ணுறேன்..”
“எஸ்..எஸ்..ஞாபகம் இருக்கு..பிஸ்னெஸ் பார்ட்டில பார்த்துருக்கேன்..உன் அம்மா பானு கூட, லேடீஸ் கிளப் மெம்பெர் தானே..??”
“ஆமா ஆன்டி..”
“தேங்க்ஸ் ஃபார் யூர் ஹெல்ப்..”
“பரவால்ல ஆன்டி..கிளம்புறேன்.பை அங்கிள்…”
“ஓகே..பை..”
பிரமிளா மட்டும் விடை கொடுக்க, கிளம்பினான் யாதவ்..
திகைப்பில் இருந்து மீளாதவராய், நின்றார் ராஜசேகர்..
“மது டார்லிங்..”
பிரமிளா மகளின் அருகே சென்று, அவள் கன்னம் தட்டினார்..
“ஹ்ம்ம்..”
என்ற முனங்களோடு, கண் திறந்தாள் மது..
அந்த பேச்சில், சுயநிலை அடைந்த ராஜசேகர்..
மதுவின் அருகே வந்து,
“என்ன பழக்கம் இது மது??,எத்தனை நாளா இருக்கு உனக்கு..??”
“எதுக்கு அவளை மிரட்டுறீங்க.. அவ, பயந்துக்க போறா..”
மனைவியை முறைத்தவர்,
மதுவின் கன்னம் தட்டி,
“சொல்லு..எவ்ளோ நாளா இருக்கு..இந்த பழக்கம்..??எவ்ளோ குடிச்ச..??”
[the_ad id=”6605″]
அவர் கன்னம் தட்டியதில், அவர் முகம் பார்த்தவள்,ஆட்காட்டி விரலையும், கட்டை விரலையும் சுருக்கி காட்டி,
“இவ்ளோண்டு தான் டாட்.. என் பிரெண்ட்ஸ் எல்லாம் குடிச்சாங்க.. அதான் நானும், ஜஸ்ட் எப்படி இருக்குன்னு பார்க்க குடிச்சேன்..”
அரை கண் திறந்து, பதில் சொன்னாள் குளரியபடி..
அவளை பார்த்தால், புதிதாய் குடிப்பவள் போல இல்லை..
“அறிவிருக்கா உனக்கு..??என்ன பழக்கம் இது..??உன் சகவாசம், ஏதும் சரி இல்லை.. எல்லாரையும் கட் பண்ணு..”
“எதுக்கு இப்போ கத்துறீங்க..??அவ தான்..இன்னிக்கு தான் குடிச்சேன்னு சொல்லுறா இல்ல..சோசியல் ட்ரிங்க் ஒன்னும் தப்பு இல்ல..இப்போ எல்லாம் சகஜம் தான்.. உங்க பட்டிக்காட்டு புத்தியை, இங்கு காட்டாதிங்க..”
“ஏய்,அவ குடிச்சுட்டு இப்படி நடு ராத்திரிக்கு மேல வர்றா.அதுவும், ஒரு பையன் கூட… நீ, இப்படி பேசிட்டு இருக்க..இத்தனை நாள், இது தான் நடக்குதா..??இது தெரியாம இவ்ளோ நாள் இருந்துட்டேன்..”
தலையில் அடித்துக் கொண்டார், சேகர்..
இன்று ஒரு டாக்குமெண்ட்டில் மகளின் கையெழுத்து வாங்க வந்தவருக்கு, அப்பொழுது தான், அவள் வீட்டில் இல்லாதது தெரியும்..
அதிலிருந்து காத்திருக்கிறார்..மகளுக்காக..
‘தப்பு பண்ணிட்டேன்..பிசினஸ் பிசினஸ்ன்னு, பொண்ணை கவனிக்காம விட்டுட்டேன்..அம்மா பார்த்துக்குவா பொண்ணென்னு விட்டது, பெரிய தப்பு..இவளை நம்பி விட்டது, பெரிய தப்பு..’
தலையை இரு கரங்களில் தாங்கி, இன்னோரு சோபாவில் அமர்ந்து கொண்டார்..
“எல்லாத்தையும் பெருசு பண்ணாதீங்க..அவ என்ன பண்ணுறான்னு அவளுக்கு தெரியும்..ஒரு வயசுக்கு மேல பிள்ளைங்களை, பிரெண்ட்ஸ் போல நடத்தனும்.. ரிங் மாஸ்டர் சிங்கத்தை மிரட்டுற மாதிரி, மிரட்டக் கூடாது..இதான், ஹய் சொசைட்டி கல்ச்சர்..அது எங்க உங்களுக்கு தெரியும்..??”
அலட்சியமாய் அவரை பார்த்தார்..
“தெரியவே வேண்டாம்..இந்த கலாச்சாரம், எனக்கு தெரியவே வேண்டாம்..எனக்கு தெரிஞ்ச கலாச்சார படி என் பொண்ணு, ஒழுக்கத்தோடு இருந்தா போதும்..”
“எதை பத்தி, யாரு பேசுறதுன்னு, விவஸ்தை இல்லாம போச்சு..உங்க ஒழுக்கம் பத்தி, என்கிட்டேயே சொல்லுறீங்க..”
இது தான் பிரமீளாவின் பிரம்மாஸ்த்திரம்..இதை எடுத்தால்,இனி கணவர் பேச மாட்டார் என்று தெரியும்..
அதே போல் வாய் அடைத்து நின்றார் சேகர்..
“மது டார்லிங்..வா ரூம்க்கு போலாம்..”
அவளை கைத்தாங்கலாய் பிடித்து, அவள் அறைக்கு கூட்டி சென்றார்..
அவளை படுக்கையில் படுக்க வைத்து விலகும் முன்,
“லவ் யூ மம்..”
குளரலாக கூறி,
அவர் கை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தமிட்டாள் மது..
“லவ் யூ டு டார்லிங்..”
கூறிவிட்டு, விளக்கு அணைத்து விட்டு வந்தார் பிரமிளா..
இன்னும் ஹாலில் தான் அமர்ந்திருந்தார் சேகர்..வயது காலத்தில் அவர் செய்த ஒரு தவறு,இன்று வரை பிரமிளாவின் பேச்சுக்கு மறுப்பு தெரிவிக்க முடியாமல், நிற்கிறார்..
அதை தவறு என்று இன்னும் கூட, ஏற்று கொள்ள அவர் மனம் மறுக்கிறது.. அது, அவர் வாழ்வின் சொர்க்கம்..
சில காலம் மட்டுமே, அவர் அனுபவித்த சொர்க்கம்..
தவறு என்று ஒத்து கொள்ளவதென்றால், இந்த கல்யாணத்தை,அவர் கல்யாணத்தை தான், அவர் வாழ்நாளில் செய்த பெரிய தவறு என்று சொல்லுவார்..
கண்கள் மூடி,விழி நீர் தேங்கி விழி ஓரத்தில் வடிய காத்திருக்க,அமைதியாய் அமர்ந்திருந்தார்..
“இன்னும் தூங்க போகலையா நீங்க..??”
அவர் பேச்சில், கண் விழித்து மனைவியை பார்த்தார் சேகர்..
“என்ன நடந்து போச்சுன்னு இப்படி உட்கார்ந்து இருக்கீங்க..இதெல்லாம், இப்போ சகஜம் தான்.. இதெல்லாம் வெளிய சொல்லி..உங்க பொண்ணு பேரை நீங்களே கெடுத்துடாதீங்க..”
அவர், யாரை சொல்கிறார் என்று புரிந்தது..அவர் நண்பர் நடராஜனை தான் கூறுகிறார்..அவருக்கு மட்டுமே இவர் வாழ்வில் நடக்கும், அனைத்து விஷயமும் தெரியும்..
இவரின் நலம் விரும்பி அவர்..இதுவரை, அவரிடம் போன ரகசியம் எதுவும் வெளியே வந்தது கிடையாது..அவர், மிடில் கிளாஸ் வகையை சேர்ந்தவர்..அதனாலேயே, பிரமிளாவிற்கு அவரைப் பிடிக்காது. குறை கூறிக் கொண்டே இருப்பார்..
இத்தனைக்கும், இவரிடம் நடராஜன் எந்த உதவியும் கேட்டதில்லை..
பிரமிளாவிற்கு, ஹய் கிளாஸ் மக்கள் மட்டுமே பிடிக்கும்..அவர் வளர்ந்தது அப்படி..
பார்ன் வித் சில்வர் ஸ்பூன் என்பது போல, பணத்தில் பிறந்து வளர்ந்தவர்..
தந்தையின் கட்டாயத்தில், ராஜசேகரை மணந்து,விதியை நொந்து கொண்டு, கடமைக்கு வாழ்பவர்..
சமுதாயத்தில் நானும், கணவர் குழந்தையுடன், நிறைவாய் வாழ்கிறேன் என்று காட்டுவதற்கு வாழ்கிறார்..
[the_ad id=”6605″]
பணத்தின் பிறகு தான் வேறு எதுவும் அவருக்கு,பணத்தை வைத்து அடுத்தவர்களை எடை போடுபவர்..
மதுவும், அவரின் வார்ப்பு..
அவர் வளர்ப்பு அல்லவா..
அதற்கு மேல் அங்கு அமர்ந்து இருந்தால்,இன்னும் பேச்சு வரும் பிரமிளாவிடம் இருந்து என்று அறிந்து,படுக்கை அறைக்கு சென்றார்.
தூக்கம் தூர சென்றிருந்தது..
மறுநாள்,
சூரியன் யாருக்காகவும் காத்திருப்பதில்லை..
அவன் பணியை, செய்ய ஆரம்பித்தான்..
“மது டார்லிங்..”
மகளை எழுப்பினார் பிரமிளா..
“ஹ்ம்ம்…”
மெதுவாய் சோம்பல் முறித்து எழுந்தாள் மது..
“குட் மார்னிங் டியர்..”
“மோர்னிங் மம்மி..”
எழுந்தவள், தலையை பிடித்துக் கொண்டாள்..
“என்னாச்சு டியர்..??”
“ஒரே ஹெட் ஏக் மாம்..”
“எதுலயும் லிமிட் வேணும் டா செல்லம்..அதிகம் குடிக்காத..சோசியல் ட்ரிங்க் தப்பில்லை..ஓவர் அஹ் குடிச்சா ஹெல்த் ஸ்பாயில் ஆயிடும் டா..”
“ஐ நோ மாம்..நேத்து..ஒரு பெட்..அதான்.. இனி இப்படி ஆகாது மாம்..”
“தட்ஸ் குட்..போய்.. ரெபிரேஷ் ஆகிட்டு வா.. காபி குடிக்கலாம்..”
“ஓகே மாம்..”
சிறிது நேரத்தில், ரெஸ்ட் ரூம்மில் இருந்து வெளியே வந்தாள்..
அம்மாவும் பொண்ணும் காபி குடித்த படி, பேசிக் கொண்டிருந்தார்கள்..
ராஜசேகரின் அறையில், யோசனையில் ஆழ்ந்து இருந்தார் அவர்..
“குட் மோர்னிங் மாமா..”
புன்னகையுடன் நுழைந்தாள் மீனா..
அவளை பார்த்ததும், அவர் முகம் மலர்ந்தது..
“வா டா மா..”
“என்ன, ஒரே சோக கீதம் வாசிக்குறிங்க.. முகத்துல, குடம் குடமா வலியுது..”
“சந்தோசமா இருந்தா தான், கேள்வி கேட்கணும்..டா.. சோகத்துல தானே வாழ்கை ஓடம் போகுது..அப்போ, குடம் என்ன, கன்டைனேர்,கன்டைனேர் அஹ் வழிஞ்சாலும் ஆச்சர்யமில்லை..”
“எதுல ஓடுனாலும் கவிலாம ஓட்டுங்க.. அதான் முக்கியம்..”
அவள் பேச்சில் மென்னகை தோன்ற,
அவளிடம் கையை நீட்டினார்..
ரத்த அழுத்தம் பார்க்கும் கருவியை எடுத்து அவர் கைகளில் சுற்றிய மீனா,சோதிக்க ஆரம்பித்தாள்..
“ஓ..மை.. காட்.. என்ன மாமா இது, ஏகத்துக்கும் ஏறி இருக்கு..மாத்திரை ஒழுங்கா போடுறீங்களா இல்லியா..??”
ஒரு பெரு மூச்சு விட்ட சேகர்..
“அதெல்லாம் போடுறேன் டா..”
“அப்புறம் ஏன் ஏறுது.. பிரஷர்..??”
“இவ்ளோ நாள் மனைவி தான் கஷ்டம் கொடுத்தா. இப்போ, மகளும் சேர்ந்துட்டா.. அதான் ஏகத்துக்கும் ஏறி இருக்கும்..”
“மாமா..எதையும் மாத்த முடியாது..ரிலாக்ஸ்..டெய்லி மெடிடேஷன் பண்ணுங்க..நாளைக்கு சீக்கிரம் வந்து சொல்லி தரேன்..இப்போ, ஹாஸ்பிடல்க்கு நேரம் ஆச்சு..டேப்லெட் மறக்காம போடுங்க..
சாயங்காலம், ஒருக்கா வரேன்..அதுக்குள்ள பிரஷர் குறைஞ்சு இருக்கனும்..இல்ல..உண்டு இல்லைன்னு பண்ணிடுவேன்..”
செல்லமாய் அவர் கன்னம் திருக்கினாள் பெண்..
இது தான் மீனா,எதையும் தோண்டி துருவ மாட்டாள்.. என்ன பிரச்சனை என்று அடுத்தவர் பிரச்சனைக்கு, காது தீட்ட மாட்டாள்..
தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பாள்..
பிரச்சனையை சொல்லி
ஆறுதல் கேட்பவருக்கு ஆறுதல்..சொல்லாமல் இருப்பவருக்கு தோள் சாய, தோள் கொடுப்பாள்..
அருமையான பெண்..
‘யார் மகள்,நடராஜன் பெண் ஆயிற்றே, அவனை போல தான் இருப்பாள்..
என் பெண் ஏன், என்னை போல இல்லை.. ??இவளை போல கூட இல்லை..இவளை போல இருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்..’
[the_ad id=”6605″]
பெரு மூச்சு வந்தது..
“மாமா..இப்போ தானே சொன்னேன்..லெஸ் டென்சன், மோர் ஒர்க்.மோர் ஒர்க், லெஸ் டென்சன்..”
புன்னகைத்தவர், அவளுடன் வெளியே வந்தார்..
அப்பொழுது, மாடியில் இருந்து மதுவும் பிரமிளாவும் இறங்கி வந்தார்கள்..
“ஹாய் அத்தை.. நல்லா இருக்கீங்களா..??”
“ஹ்ம்ம்..”
வேண்டா வெறுப்பாய் தலை அசைத்தார் பிரமிளா..
“மது..எப்படி இருக்க..??”
அவளை அலட்சியமாய் பார்த்து உதடு சுளித்து விட்டு, திரும்பிக் கொண்டாள் மது..
“மது..”
கண்டனமாய் அழைத்தார் சேகர்..
“மாமா..”
அவர் கை பிடித்து அழுத்தம் கொடுத்த மீனா,கண்ணால் வேண்டாம் என்று ஜாடை காட்டினாள்..
“சரி மாமா..கிளம்புறேன்..”
கூறிவிட்டு கிளம்பினாள்..
மீனா, இளங்கலை செவிலியர் பயிற்சி முடித்து, கடந்த ஒரு வருடமாய் ஒரு தனியார் மருத்துவ மனையில், நர்ஸ் ஆக இருக்கிறாள்..
அவர் நண்பர் நடராஜனின், ஒரே பெண்.
தினமும் இவருக்கு ஹெல்த் செக் பண்ண வருவாள், இவர் இல்லத்திற்கு..
பிரமிளா மது, இவர்கள் அலட்சியத்தை கண்டு கொள்ள மாட்டாள்..
சிறு வயதில் இருந்து பழகியது தான் அவளுக்கு..
அவள் சென்றதும்,
“மது..”
தந்தையின் குரலுக்கு திரும்பினாள்..
“நேத்து எப்போ வீட்டுக்கு வந்த, ஞாபகம் இருக்கா..??”
தன் அன்னையின் முகம் பார்த்தாள் மது..
“எப்படி வந்த,அதாவது ஞாபகம் இருக்கா??”
“எதுக்கு அவளை,விசாரணை கைதி மாதிரி குறுக்கு விசாரணை பண்ணுறீங்க..??”
“நீ பேசாத..அவ பதில் சொல்லட்டும்..”
“ஓ..டாட்.. நேத்து கொஞ்சம், லேட் ஆகிடுச்சு.. கொஞ்சம் ஆல்கஹால் ட்ரை பண்ணேன்..எல்லாரும் குடிச்சாங்க..ஜஸ்ட் டு நோ,ஹௌ இட் ஈஸ்..அவ்ளோ தான்.. டோன்ட் டேக் இட் அஸ் சீரியஸ்..சும்மா ஃபன்க்கு டாட்..”
“நீ செய்யுறது சரின்னு, உனக்கு தோணுதா..??உன் பழக்க வழக்கம் சரி இல்ல..பழகுற ஆட்களும்..அவங்க நட்பை விட்டா, சரி ஆகிடுவ..”
“ஊப்ஸ்.. ஓகே டாட்.. இனி இப்படி செய்யல போதுமா..”
“உன் நல்லத்துக்கு தான் சொல்லுறேன் டா.. பார்த்து நடந்துக்கோ..உன் ஃபன்,உனக்கு துன்பம் கொடுக்கும்..எல்லாம் ஃபன் இல்ல..புரிஞ்சுக்குவன்னு நினைக்குறேன்..”
அவள் தலையில் கை வைத்து, கூந்தலை கோதிய படி கூறினார்..
“ஓகே டாட்.. டோன்ட் ஒர்ரி..இனி செய்யல போதுமா..”
“ஹ்ம்ம்..”
பெரு மூச்சுடன் எழுந்து சென்றார் சேகர்..
“என்ன டியர்..உன் அப்பா சொல்லுறதை கேட்க போறியா..??”
ஆச்சர்யமாய் கேட்டார் பிரமிளா..
“ஓ..மாம்..நான் அப்போஸ் பண்ணா.. டாட், என் காதுல பிளட் வர வைப்பார்..நான் ரிஸ்க் எடுக்க தயாரா இல்ல..ஹீ இஸ் போரிங் லெக்சரர்..”
கூறி விட்டு புன்னகைத்தாள்..
அவளுடன், பிரமிளாவும் இணைந்து கொண்டார்..
