Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uyir Niraigiraen Azhaga

உயிர் நிறைகிறேன் அழகா-36(1)

“ஏய் மது,இதெல்லாம் எதுக்கு இப்போ..??பழசை எல்லாம் விடு..”

“இல்ல,என் மனசுக்குள்ள பூட்டி பூட்டி வச்சு, பைத்தியம் ஆகிடுவனோன்னு பயமா இருக்கு..
சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லிடுறேன்..கேட்க வேண்டிய மன்னிப்பையும் கேட்டுடுறேன்..

வெளிய இருந்து பார்க்குறவங்களுக்கு, நான் லக்கி அஹ் தெரிவேன்.. பணக்கார வாழ்க்கை.. அப்பா, அம்மா அரவணைப்பு..இப்படி..

ஆனா, உண்மையிலேயே நீ தான் லக்கி..சிறந்த வளர்ப்பு..பிடிச்ச கணவன்..காதல் வாழ்க்கை.. இதுக்கு மேல, வைரம் மாதிரி குழந்தை..



Advertisement

உனக்கு ஒன்னு தெரியுமா??நம்ம அம்மா, பெண் குழந்தை பிறந்தா, மித்ரான்னு பேர் வைக்க சொல்லி, அப்பா கிட்ட சொல்லி இருக்காங்க..

அதான் உனக்கு, அந்த பேர்..
அம்மா ஆசை பட்ட பேர் கூட, உனக்கு தான் கிடைச்சு இருக்கு பாரு..அம்மாவோட ஆசிர்வாதம் முழுக்க, உனக்கு தான் இருக்குன்னு, இதுலேயே தெரியலையா..??

அந்த பாட்டி ஏன், உன்னை தூக்கிட்டு போய் அப்பா கிட்ட முதல்ல காட்டாம,என்னை காட்டணும்..
எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கு..”

Advertisement

ஒரு நீண்ட பெரு மூச்சை விட்டாள்..

Advertisement

அவள் உணர்ச்சிவச பட்டிருப்பதை உணர்ந்து,அவளுக்கு தண்ணீர் கொடுத்து அமைதி படுத்தினாள்..

“பணம் மட்டுமே சந்தோசம் இல்லைன்னு புரிஞ்சுகிட்டேன் மது..ஆனா, அதுக்கு நான் கொடுத்த விலை அதிகம்..”

“மது,கொஞ்சம் அமைதியா இரு..”

Advertisement

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது,அவள் அறைக்கதவு அனுமதிக்காக தட்டப்பட்டது..

மது அனுமதி அளித்ததும் உள்ளே வந்த ராஜா,

“மது, உன்னை பார்க்க ஒருத்தர் வந்திருக்கார். வா..”

 

[the_ad id=”6605″]

 

 

“என்னையா??”

ஆச்சர்யமாய் கேட்டபடி வெளியே வந்தாள்..வெளியே, வினோத் நின்றிருந்தான்..

மதுவுக்கு தலை சுற்றுவது போல இருந்தது..

அவளையும் அவனையும் தனிமையில் விட்டு விட்டு, மதியும் ராஜாவும் சென்றார்கள்..

மதுவின் நினைவுகள் பின் நோக்கி சென்றது..அவனோடு பழகியது,சுற்றியது,பிறகு விலகியது, அனைத்தும் ஞாபகம் வந்தது..

இரண்டு மாதங்களுக்கு முன் யாதவ், தன் திருமணப் பத்திரிகையோடு வந்திருந்தான்…இவளை பார்க்க..

“சாரி மது..நான், என் அம்மா கிட்ட எவ்வளவோ பேசி பார்த்தேன்..அவங்க, உன்னை மருமகளா ஏத்துக்க விரும்பல. என்னால, அவங்கள மீற முடியல..என் மாமா பொண்ணையே, உடனே பிக்ஸ் பண்ணிட்டாங்க..சாரி..”

“ஏய், எதுக்கு இவ்ளோ பீல் பண்ணுற..??நீ என்ன, என்னை காதலிச்சா கை விட்ட..??ஜஸ்ட், ஒன் சைட் லவ் ப்ரொபோசல் தானே..லீவ் இட்..
கங்கிராட்ஸ் பாஃர் யுவர் மேரேஜ்..”

வாழ்த்தி அனுப்பி வைத்தாள்..

இன்று இவனும் அது போல, பத்திரிகை கொடுக்க வந்துள்ளானா..??
மனம் வலித்தது..

அங்கு உள்ள அமைதியை உடைத்தாள்,
“ஹாய் வினோ..எப்படி இருக்க??”

“மது, என்னால நம்பவே முடியல..??”

“எதை??”

“உன்னை மாதிரியே ஒரு பொண்ணை..ராஜா சொன்னப்போ கூட நம்பலை. பொய் சொல்லுறான்..என்னை சமாளிக்கன்னு நெனச்சேன். ஐ காண்ட் பிலீவ் திஸ்..இப்போ கூட..”

அவன் குரலில் ஆச்சர்யம்..அவன், வியப்பில் இருந்து வெளி வரவில்லை என்று புரிந்தது. அவள் இதழில் புன்னகை தோன்றியது..

“அவ, என் ட்வின்..”

“எஸ்..ராஜா சொன்னான்..சரி சொல்லு, எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்..??”

அவன் அதிரடியில், இவள் விழித்தாள்..

“வினோ??என்னை பத்தி..”

அவள் தொடரும் முன் குறுக்கிட்டு,
“உன் கடந்த காலம் எல்லாம், எனக்கு வேண்டாம்..எனக்கு, நீ மட்டும் தான் வேணும்..என் மது..என்னோட, பழைய தைரியமான மது..”

“நான், உன்னை ஏமாத்துனவ வினோ..”

அதை கூறும் போது, அவள் மனம் வலித்தது..

“அப்படி பார்த்தா, நான் கூட தான், உன்னை ஏமாத்தி இருக்கேன்..பணக்காரன்னு பொய் சொல்லி..அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு..”

“நான், பணத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, உன் அன்பை புரிஞ்சுக்காதவ..”

“யார் தான், பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கல..??அளவு வேறுபடும்..நீ கொஞ்சம், ஜாஸ்தி கொடுத்துட்ட..இப்போ, என் அன்பு புரிஞ்சுடுச்சு இல்ல..”

“இடையில, நான் ட்ரக்ஸ் எல்லாம் யூஸ் பண்ணி..இப்போ, என் ஹெல்த் நல்லா இருந்தாலும், பின்னாடி, பாதிப்பு வரலாம்..”

“நான் கூட தான், மெண்டல் ஹாஸ்பிடல்ல இருந்துட்டு, மருந்து,மாத்திரை எல்லாம் எடுத்துட்டு, வெளிய வந்தேன்..கிட்ட தட்ட, ஒன்னு, ஒன்றரை வருஷம்..
அப்போ எனக்கும், என்ன வேணா ஆகலாம்..”

“உனக்கு ஒன்னும் ஆகாது வினோ..”
பதறியபடி கூறினாள்..

“அப்போ உனக்கும், ஒன்னும் ஆகாது..அப்புறம் என்ன??”

“எனக்கு, ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு வினோ..நான் ஒரு விதவை..”

“உன் கடந்த காலம் தேவை இல்லைன்னு, முன்னவே சொல்லிட்டேன்..”

“நான், உன் அன்புக்கு தகுதி இல்லாதவ வினோ..”

“தகுதி எல்லாம் முடிவு பண்ண வேண்டியது நான்..எனக்கு, உன் தகுதி போதும்..”

“நீ என்ன சொன்னாலும், என்னால ஏத்துக்க முடியல வினோ..நான் ஒரு சுயநலவாதி.என்னால தான் உனக்கு, மனநிலை பாதிச்சுது…”

 

[the_ad id=”6605″]

 

 

“பரவால்ல. எனக்கு, பொது நல வாதி வேண்டாம்..நீ போதும்..நீ கிடைக்க மாட்டேன்னு நினைச்சு தான், மனநிலை பாதிச்சுது..இப்போ தான், சரி ஆகிடுச்சே..”

“ச்சு.. புரிஞ்சுக்கோ வினோ..”

“நீ தான் புரிஞ்சுக்க மாட்டேங்குற..அப்போவும் என் அன்பை புரிஞ்சுகல..இப்போவும், அதே தப்பை பண்ணுற..

ஒருத்தங்க எப்படி இருக்காங்களோ, அப்படியே ஏத்துக்குறது தான் காதல்..குறை நிறையோட..

நான் உன்னை, அப்படியே ஏத்துக்குறேன்..நீயும் என்னை, இப்படியே ஏத்துக்கோ..இப்போ, நீ தான் பதில் சொல்லணும்..”

“இப்போ கூட, நான் உனக்கு நல்ல மனைவியா இருப்பேன்னு தோணால..என் பிறவி குணம், எப்போ வேணா வரும்..”

“நிச்சயம், நீ ஒரு நல்ல மனைவியா இருப்ப..இவ்ளோ தூரம் எனக்காக யோசிக்கிற. இதுக்கு மேல என்ன வேணும்..??

நல்லவனாவே இருக்குறவங்களா விட, இப்படி அனுபவபட்டு திருந்துறவங்க, மறுபடியும் மாற மாட்டாங்க..
அது, உன் பிறவி குணம் இல்ல..வளர்ந்த சூழ்நிலை..

அப்படியே, இது பிறவி குணமா இருந்து, அது திரும்ப வந்தாலும், எனக்கு, என் மது தான் வேணும்..”

என்ன சொல்லுவது என்று தெரியாமல் நின்றாள்..

“அவசரம் இல்ல மது..நான் காத்திருக்கேன்..என் வாழ்நாள் முழுக்க..உன் சம்மதத்துக்காக..உங்க கம்பெனில தான் வேலை பார்க்குறேன்..எப்போ தோணுதோ கூப்பிடு, உடனே வரேன்..”

தன் விசிட்டிங் கார்டை அவள் கையில் திணித்து விட்டு சென்றான்..

போகும் அவனை, கண் இமைக்காமல் பார்த்த படி நின்றாள் மது..

சில மாதங்கள் கடந்தது..
ராஜாவின் மருத்துவமனையில் ராஜா,மதி,பாண்டி அனைவரும்  இருந்தார்கள்..

மீனாவை பிரசவதுக்காக சேர்த்திருந்தார்கள்..

அனைவரும், சற்று பதட்டதோடு நின்றிருந்தார்கள்..

அவளுக்கு வலி வந்ததும், பிரசவ அறைக்கு அவளை கொண்டு சென்றார்கள்..உள்ளே நுழையும் முன், அருகில் இருந்த செவிலியரிடம் சொல்லி, பாண்டியை அருகில் அழைத்தாள்..

சற்று தள்ளி நின்ற பாண்டி, அவள் அழைப்பில்,
“பாரு மாப்பு..என்னை விட்டு உள்ள போக, மீனுவுக்கு மனசே இல்ல..எவ்ளோ காதல் பாரு என் மேல..”
கூறிவிட்டு, அவள் அருகில் சென்றான்..

“என்ன டா செல்லம்??”

“நான் பிரசவம் முடிஞ்சு வாரத்துக்குள்ள, இங்க எந்த நர்ஸ் கிட்டயாவது கடலை போட்டீங்க.. தொலைச்சுடுவேன்..ஒழுங்கா, நல்ல பிள்ளையா இருங்க..”

சுட்டு விரல் நீட்டி எச்சரித்து விட்டு சென்றாள், அவ்வளவு வலியிலும்..

ராஜா வந்த புன்னகையை அடக்கி, வேறு புறம் பார்த்தான். மதி, சங்கடமாய் குனிந்து கொண்டாள்..

‘உனக்கு இது தேவையா??..’

பாண்டியின் மனசாட்சி, வடிவேலு பாணியில் விரல் நீட்டி கேட்டது..

பாண்டிக்கு பெண் குழந்தை பிறந்தது..மீனாவை போன்றே..

குழந்தை பிறந்த செய்தி அறிந்து, அவன் அக்காக்கள்,அம்மா,அப்பா, அனைவரும் வந்தார்கள்.

மீனாவின் பெற்றோர், விஷயம் அறிந்து, வந்து கொண்டிருந்தார்கள்..

குழந்தையை பார்க்க வந்த,
அவன் அக்காக்கள்..

“பிள்ளை, என் தம்பி மாதிரி களையா இல்ல..??ஆத்தா மாதிரியே இருக்கு, மூக்கு முகம் எல்லாம்..என்ன ம்மா..??”

தாயை துணைக்கு அழைத்தார்கள்..

மீனாவின் மாமியார், அதுவரை பேத்தியை கொஞ்சியவர். இப்பொழுது, வானிலை ஆராய்ச்சி மாதிரி,குழந்தையை உற்று உற்று பார்த்தார்..

‘ரைட்டு..அடுத்த ஷோக்கு டிக்கெட் ரிசர்வ் பண்ணிட்டாளுங்க..’

“அம்மா, கான்டீன் வரை போய்ட்டு வரேன்..”

‘கிரேட் எஸ்கேப்..’

பிரசவத்துக்கு கூட தாய் வீட்டுக்கு அனுப்ப மாட்டேன் என்று வம்பு செய்த பாண்டி, அக்காக்களின் அலப்பறையில்,மீனாவையும் குழந்தையையும், அவள் அன்னையின் வீட்டுக்கு, சென்னைக்கு அனுப்பி வைத்தான்..

ராஜாவின் வீட்டில்..

குழந்தையை உறங்க வைத்துக் கொண்டிருந்தாள் மதி..
உள்ளே வந்த ராஜா,குழந்தை உறங்கும் வரை பொறுத்திருந்தான்..

பிறகு, தன் கையில் இருந்த விண்ணப்பத்தை கொடுத்தான்..

“என்ன வரு இது??”

“பிரிச்சு பாரு..”

ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட்..முதுநிலை படிப்புக்கான விண்ணப்பம்..

ஆச்சர்யமாய் விழி விரித்தாள்..
“உனக்கு, டாக்டர் படிக்க ஆசைன்னு தெரியும்..ஆனா, மீனா படிக்க முடியாததால, நீயும் படிகல..அப்போ, உன் அப்பா மேல கோபம் வேற.

ஆனாலும், உனக்கு இந்த துறைல தான் விருப்பம் அதிகம்..
மருத்துவம் படிச்சுட்டு தான் சேவை பண்ணணுமா..??அந்த மருத்துவத்துறை பத்தி தெரிஞ்சுகிட்டு பண்ண கூடாதா..?? அதான், இந்த படிப்புக்கு விண்ணப்பம் வாங்கிட்டு வந்தேன்..

குழந்தைக்கு ஒரு வயசு ஆகட்டும்ன்னு வெய்ட் பண்ணேன்..
இப்போ, இவன் அம்மா கிட்டவே இருந்துக்குவான்..

இது, தொலை தூர கல்வி தான்.. அதுனால, குழந்தையையும் அதிகம் பிரிஞ்சு இருக்க தேவை இல்லை..”

கண்ணில் மகிழ்வோடு, அதை பெற்றுக் கொண்டாள்..

மது வினோத்தோடு, இவர்கள் வீட்டுக்கு வந்தாள்..

“வாம்மா மது, எப்படி இருக்க??வா லே வினோத்..”

இருவரையும் வரவேற்ற மரகதம்..

“மதுக்கண்ணு, யாரு வந்துருக்கா பாரு..??”
மாமியாரின் அழைப்பில், வியந்து போய் அங்கு வந்தாள் மதி..

ராஜாவும், பேச்சு குரல் கேட்டு வந்தான்..தந்தையை கண்டதும், அன்னையிடம் இருந்து தந்தையிடம் தாவினான் புதல்வன்..

இருவரையும் வரவேற்று அமர சொன்ன ராஜா,எதிரில் அமர்ந்தான்..

 

[the_ad id=”6605″]

 

 

“என்ன கண்ணு, இங்கேயே நிக்குற?? போய்,சாப்பிட ஏதாவது கொண்டு வா..”

மாமியாரின் அழைப்பு தந்த மகிழ்வில், வேகமாய் உள்ளே சென்றாள்..

ராஜா, தனக்குள் சிரித்துக் கொண்டான்..

பிடித்தவர்களை மட்டுமே மரகதம், அவ்வாறு அழைப்பார்..
மதியை மன்னித்தாலும், அவர் மனதில் இருந்த உறுத்தல் மறைய, இத்தனை நாட்கள் தேவைப் பட்டிருக்கிறது..

“ஆன்டி, நெஸ்ட் வீக் எங்க கல்யாணம்..டாட் வருவார் இன்வைட் பண்ண..சிம்பிள் அஹ் தான் பண்ணுறோம்.நெருங்குன சொந்தம், பிரெண்ட்ஸ் மட்டும் அழைச்சு.. கிராண்ட் அஹ் வேண்டாமுன்னு சொல்லிட்டேன்..எல்லோரும் வரணும்..”

“கண்டிப்பா, நம்ம வீட்டு கல்யாணம் இது.நான் இப்போ, வெளியூர் அதிகம் போறதில்லை..இந்த கல்யாணத்துக்கு அவசியம் வரேன்..”

வினோத்தும் அழைத்தான்..

“மேடம், இப்போ தான் ஓகே சொல்லி இருக்காங்க.. திரும்ப மனசு மாறும் முன்ன, முகூர்த்த நாள் பிக்ஸ் பண்ணிட்டேன்..எல்லோரும் வந்துடுங்க..”

மதி வீட்டினராய், விருந்தினரை உபசரித்தாள்..

“பையன், உன்னை மாதிரியே இருக்கான் ராஜா..”

வினோத் குழந்தையை கொஞ்சினான்..

மரகதத்தின் முகத்தில் பெருமிதம்..

மதுவின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை பார்த்த மதி,
இந்த இருவர் மகிழ்வுக்கும் காரணம், தன் கணவன் என்ற பூரிப்பில், அவன் முகத்தை காதலோடு பார்த்தாள்..

அவளை நிமிர்ந்து பார்த்த  ராஜா,ஒற்றை புருவம் உயர்த்தி, என்ன என கேட்டான்..

புன்னகையுடன், ஒன்றும் இல்லை என்று தலை அசைத்தாள் மதி..

இவர்களை கண்ட மது,
தொண்டையை செருமி,
“நாங்களும், இங்க தான் இருக்கோம்..”

அவளை செல்லமாய் முறைத்த மதி,
“நாங்க தான் இப்போ கிண்டல் பண்ணனும்..புது மண தம்பதியர் ஆக போறது, நீங்க தான்..”

“ஆனா, இங்க அப்படி தெரியலையே..”
அப்பாவியாய், விழி விரித்துக் கூறினாள் மது..

அங்கு ஒரு சிரிப்பலை எழுந்தது..

சிறிது நேரம் பேசிவிட்டு, சாப்பிட்டு விட்டு கிளம்பினார்கள், இருவரும்..

அன்று இரவு, அவள் பார்வைக்கு விளக்கம் கேட்ட ராஜாவிடம்,

“என் வரு, எவ்ளோ கிரேட்..மதுக்கு ஒரு வாழ்க்கை அமைச்சு கொடுத்துட்டார்..அதே நேரம், தன் பிரெண்ட் வாழ்க்கையும் சரி பண்ணிட்டார்..”

“நான் என்ன பண்ணேன்..??அவங்க காதல், அவங்களை சேர்த்து வச்சுது..உன் காதல், என் கிட்ட கொண்டு வந்த மாதிரி..யாருன்னு தெரியாம, காதல் நிறைவேறுமான்னு தெரியாம..

என்னை, உருகி உருகி காதலிச்ச பொண்ணு கிடைச்சது, என் அதிர்ஷ்டம்..

மதுன்னு நினைச்சு நான், அவ்ளோ கஷ்டப்படுத்தியும்,அந்த பொண்ணு உறுதியா நின்னு,என்னையும் லவ் பண்ண வச்சது..அப்போ, அந்த பொண்ணு தான் கிரேட்..நீ, இவ்ளோ லவ் பண்ணுற அளவு, நான் என்ன பண்ணேன் மதி??”

“தெரிலியே..”

இரு கைகளையும் விரித்தவள்..

“என் வரு கிரேட்ன்னு, முன்னவே தெரிஞ்சுடுச்சு போல, என் மனசுக்கு..”

“நீ தான் கிரேட்..”

“நீங்க தான்..”

இருவரும் மாறி மாறி கூறிவிட்டு, ஒரு நிலைக்கு மேல் நகைத்துக் கொண்டார்கள்..தங்கள் சிறுபிள்ளை செய்கையில்..

“என் அருகிலே, கண் அருகிலே
நீ வேண்டுமே..
மண் அடியிலும், உன் அருகிலே நான் வேண்டுமே..

சொல்லமுடியாத காதலும்,
சொல்லில் அடங்காத நேசமும்,
எண்ண முடியாத ஆசையும்,
உன்னிடத்தில் தோன்றுதே..!!”

கண்ணில் காதலோடு, தன்னவனை பார்த்துப் பாடினாள்..

அவளை பார்த்து கண் அடித்து விட்டு, மறு வரியை பாடினான் அவளவன்..

“நீ தானே பொஞ்சாதி
நானே உன், சரி பாதி..”

அவனை அணைத்து, அவள் தோள் சாய்ந்தாள் பாவை..
அவளை அரவணைத்துக் கொண்டான், அவளின் அழகன்…

உயிர் நிறைந்தது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!