Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uyir Niraigiraen Azhaga

உயிர் நிறைகிறேன் அழகா-9

 

அத்தியாயம்-9

மாடுகள் வளர்ப்பு பற்றிய பழனியின் சந்தேகங்களை தீர்த்து வைத்தான்..

“இங்க பாரு பழனி, நாட்டு மாடுன்னா மூணு வருஷத்துக்கு ஒருக்கா தான் கன்னு போடும்..ரெண்டு வருஷம் பால் கொடுக்கும்..



Advertisement

அப்புறம் கிடைக்கு போய்ட்டு வந்து கன்னு போட, ஒன்பது மாசம் ஒன்பது நாள்..

இதான் கலப்பு மாட்டுக்குக்கும் பிரசவ கணக்கு..
ஆனா கலப்பு மாடு, வருஷம் ஒரு கன்னு போடும்..

கன்னு போட்டு மூணு மாசத்துல சினைக்கு ஊசி போடலாம்..”

Advertisement

“அதான் கன்னு போட மாட்டேங்குது ராஜா..”

Advertisement

“அதுக்கு நெறைய காரணம் இருக்கு..மாட்டோட மரபு,அதுக்கு கொடுக்கிற உணவு,அப்புறம் சூழ்நிலை இது மூணும் தான், அதை முடிவு பண்ணும்..

மாட்டுக்கு கர்ப்ப பை பிரச்சனை இருக்கானு முதல்ல அதோட கோழையை சோதிச்சு பாரு.. அதுல பிரச்சனை இல்லைனா,தீவனம், உலர் தீவனம்,பசும் தீவனம், அடர் தீவனம் தண்ணி எல்லாம், அதுக்கு தேவையான அளவு கொடுக்குறியா பாரு..

மாட்டோட எடைக்கு தக்க கொடு..
அப்புறம் மாவு சத்து, தாது உப்பு,உயிர் சத்து, நார் சத்து,புரதம்,கொழுப்பு இதெல்லாம் சம அளவு உள்ள, உணவு கொடு..

Advertisement

அப்புறம், மாடு கட்டி இருக்குற இடம், சுத்தமா ஆரோக்கியமா வச்சுக்கோ..
மாடு ஆரோக்கியமா இருந்தா, சீக்கிரம் சினை பிடிக்கும்..பாலும் அப்படி தான், ஆரோக்கியமான மாடு, அதோட மரபு எப்படியோ, அப்படி கறக்கும்..
கன்னுக்குட்டிக்கு நெறைய பால் விடு..

சினை பிடிக்குற நேரம், சரியாய் ஊசி போடணும்,தரமான கரு,போடுற ஆள் சரியாய் இருக்கனும்..நல்லா போட தெரிஞ்ச ஆளா பார்த்து, போட சொல்லு..”

“சரி ராஜா..வேற எதுவும் சந்தேகம்னா வரேன்..”

உள்ளே பார்த்துக் கொண்டே கூறினான்..

“வா, ஆனா வயலுக்கு வா.. வீட்டுக்கு வராத”

கூர்மையான பார்வையோடு கூறினான் ராஜா..

ஒரு நிமிடம் விழித்து, பின்  அசட்டு சிரிப்பு சிரித்து, சமாளித்த பழனி..

“சரி ராஜா..என்னை  எப்போவும் தப்பாவே நினைக்காத பா..”

“ஹ்ம்ம்..கிளம்பு..”

“சரி பா..”

அவன் கிளம்பியதும், கோபமாய் உள்ளே வந்தான் ராஜா..

ஹாலில்  மது மட்டும் அமர்ந்திருந்தாள்..
இவன் திட்ட ஆரம்பிப்பதற்குள், கண்ணில் மகிழ்வுடன்,

“நீங்க டாக்டர் அஹ்..??வெட்னரி டாக்டர் அஹ்??செம்மையா  டிப்ஸ் சொல்லுறீங்க..”

“நான்  டாக்டர்லாம் இல்லை..”

[the_ad id=”6605″]

“அப்புறம் எப்படி, இவ்ளோ தெரிஞ்சு வச்சுருக்கிங்க??”

“எல்லாம் அனுபவம் தான்.. என்னோட படிப்புல, இதுவும் வரும்..”

“ஓ..நீங்க என்ன படிச்சுருக்கிங்க..??”

அவளை கூர்ந்த ராஜா,
“ஏன், வேலை போட்டு தர போறியா??உன் கம்பெனி எதுலயாச்சும்..”

“இல்ல..அது..”

“உன் நேர்காணல் எல்லாம் நிறுத்து..இனி, அந்நிய ஆம்பளைங்க வந்துருக்கும் போது, வெளிய வந்த,காலையில வாங்குன அடி மறந்துருக்காதுன்னு நினைக்குறேன்..”

இன்னும் விண் என தெரித்த கன்னத்தை தொட்டு பார்த்தவள்,

“ஓ..இவர் தான் அந்நியனா..??”

அவள் கிண்டலில் முறைத்தான்..

“என் போன் உடைஞ்சு போச்சு. அதான் சரி பண்ண சொல்ல வந்தேன்..”

“மாடு கிட்ட எல்லாம்  செல்பி எடுக்க போனா அப்டி தான்..என்ன பிள்ளைங்களோ..இப்போ உள்ள பிள்ளைங்க எல்லாத்துக்கும் செல்பி,பாத் ரூம் போனா கூட….”

அவன் பேச்சில் இடையிட்டவள்,
“ஹலோ இப்போ, போன் சரி பண்ண தான் பேச வந்தேன்..டு கே கிட்ஸ், நயன்ட்டிஸ் கிட்ஸ் பத்தி, பட்டிமன்றமா நடக்குது..
பத்தி பத்தியா பேசுறீங்க..”

அவள் பேச்சில், இன்று ஒரு மாறுதல் தெரிந்தது..

‘இவ்வளவு நாள், தெரியாமல் பார்த்தவள்,பேச பயந்தவள்,இவள் தானா??காலையிலும்  இப்படி தான், உரிமை என்கிறாள்,கண் அடிக்கிறாள்..
இதை வளர விடுவது  சரி இல்லை ராஜா..மற்றவர்களை போல, உன்னையும் வளைக்க பார்க்கிறாள்..உஷார்..ஏமாந்து விடாதே..’

மூளை  எச்சரிக்கை மணி அடிக்க..
ஒற்றை புருவத்தை உயர்த்தியவன்,

“என்ன, அதிகாரம் எல்லாம் தூள் பறக்குது..”

“அது அப்படி தான்..போன் பத்தி சொல்லுங்க..”

“பாண்டி வருவான் கொடுத்து விடு.. டவுனுக்கு போகையில, சரி செஞ்சு தருவான்..”

“நான் எதுக்கு  அவர் கிட்ட கேட்கணும்..உங்களால செய்ய முடியுமா??முடியாதா??”

அவள் பேச்சில் கோபம் வர,
“முடியாது டி..”

“டி யா??”

“ஆமாம் டி..”

“அப்போ சரி..”

‘இது என்ன ரியாக்சன்..’
இவன் தான் விழித்தான்..

“நீங்க சரி பண்ணாட்டி,நானே தனியா டவுனுக்கு போய் பண்ணிக்குறேன்..அத்தை கிட்ட சொல்லிட்டு..உங்க பிள்ளை செய்ய மாட்டேங்குறார் அத்தைன்னு..”

“என்ன டி மிரட்டுறியா??”

“ச்சே,ச்சே..நடக்க போறதை சொன்னேன்..”

[the_ad id=”6605″]

அவள் கையில் இருந்த போனை பிடுங்கி கொண்டு, இவளை முறைத்து விட்டு சென்றான்..

குப்புற விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டலை மொமெண்ட்..

அவனை  மென் நகையோடு பார்த்துக் கொண்டு நின்றாள் மது..

இரண்டு நாட்கள் கழித்து,அவள் போனை சரி செய்து வாங்கிக் கொண்டு, பைக்கில் வந்து கொண்டிருந்தான் ராஜா..

அப்பொழுது, அவள் போன் இசைத்தது..
வண்டியை ஓரமாய் நிறுத்தி விட்டு,எடுத்துப் பார்த்தான்..ஏதோ நம்பர்..

‘எடுப்போமா?? வேண்டாமா??’
அவன் யோசித்து முடிப்பதற்குள், ரிங் நின்று விட்டது.

மறு நிமிடம், மீண்டும் இசைத்தது..

அதை இயக்கி, காதில் வைத்தான்..
“ஹலோ..மது,ஒரு முக்கியமான விஷயம்..”
அவசரமாய், ஒரு பெண் குரல் கேட்டது..

“ஹலோ..”
இவன் பதில் குரலில், அந்த பக்கம் ஒரு நொடி மௌனம்..

“ஹலோ யாருங்க..??ஹலோ..”

இந்த முறை, போன் கட் ஆகி இருந்தது..

‘ஒரு வேளை,  ஆண் குரல் கேட்டதும், தவறான எண் என நினைத்து, தொடர்பை துண்டித்து விட்டார்களோ..??’

மீண்டும்  அந்த எண்ணிற்கு முயற்சித்தான்..

போன்  சுவிச் ஆப் செய்ய பட்டதாய் தகவல் வந்தது..

‘அவ்வளவு பயந்த பெண்ணா??
உடனே போனை சுவிச் ஆப் செய்து விட்டாள்..’

யோசித்து விட்டு, அவள் போன் ஸ்கிரீனை பார்த்தான்..

அவள் அப்பாவின் தோளில்  சாய்ந்து கொண்டு நின்றாள் மது..முகத்தில் மகிழ்ச்சி மின்னியது..

‘இத்தனை அழகிய பெண் மனம் முழுதும் விஷம்..’

கோப மூச்சு விட்டவன்..கிளம்பி வீட்டிற்கு சென்றான்..

“செம்மையா இருக்கு அத்தை.. பருப்பு உருண்டை குழம்பு..”

சமையல் அறையில்  மதுவின் குரல் கேட்டது..
இவன் ஹாலில் அமர்ந்து கொண்டான்..

சில நிமிடத்தில் வெளியே வந்தாள்..அவனை பார்த்ததும்,அவன் அருகில் வந்தவள்,

“எப்போ வந்திங்க??சாப்பிட வரிங்களா??”

ஒன்றும் கூறாமல் அவள் போனை அவளிடம் நீட்டினான்..

“சரி பண்ணிட்டிங்களா??சூப்பர்..”
மகிழ்ச்சியுடன் வாங்கினாள்..

“உனக்கு ஒரு போன் வந்துச்சு..முதல்ல எடுக்கல. அப்புறம்  தொடர்ந்து கூப்பிடவும் எடுத்தேன்..என் குரல் கேட்டதும் கட் ஆகிடுச்சு..யாரோ ஒரு பொண்ணு,ஹலோ சொன்னுச்சு..சரி திரும்ப கூப்பிட்டு விவரம் சொல்லலாம்னு நினைச்சா, போனை அமத்தி போட்டுடுச்சு..”

[the_ad id=”6605″]

அவள் முகத்தை கூர்ந்து கவனித்த படி கூறினான்..அவள் முக மாறுதல்களை அவதானித்த படி..
அவள் முகத்தில் இருந்த மகிழ்ச்சி, நொடியில் துணி கொண்டு துடைத்தது போல மறைந்தது.,பின் சுதாரித்து,

“என் தோழி யாராச்சும் இருக்கும்..”

“ஓ..உன் தோழி பேரை பதிய மாட்டியா உன் போன்ல, அவ்ளோ நெருக்கமான தோழியா..??”

“போன் கீழ விழுந்ததுல, பேர் போய் இருக்கும்..”

“ஓ..உன் ஸ்கிரீன் போட்டோ, அப்படியே தான் இருக்கு..பேர் மட்டும் போயிடுச்சு போல..”

“அது எப்போவச்சும் பண்ணுற தோழியா இருப்பா..”

“ஓ..ஹோ..அந்த பொண்ணு,ஆண்கள் கிட்ட பேசவே பேசாது போல..என் குரல் கேட்டதும்  கட் பண்ணிடுச்சு..”

“அது, அவ கொஞ்சம் கூச்ச சுபாவம்..”

“ஹ்ம்ம்..யாருன்னு சரியாய் தெரியாம, சரியாய் குணம் பத்தி சொல்லுற.. உனக்கு ஏதோ  சக்தி இருக்கு..”

“அது..இல்ல..ஒரு யூகம் வச்சு..”

அதன் பின் அவன் ஏதும் கேட்க வில்லை.. ஒரு பார்வை பார்த்துவிட்டு, சென்று விட்டான்..

அவள் சமாளிக்காமல் இருந்திருந்தால் கூட, இவ்வளவு சந்தேகம் வந்திருக்காது..

அவன் சென்றதும்,வேகமாய்  தன் அறைக்கு சென்றவள்..அந்த நம்பருக்கு அழைத்தாள்..

இப்பொழுது ரிங் போனது..
அந்த பக்கம் எடுத்தவர்கள், கவனமாய் பேசவில்லை..

இவள் பொரிய ஆரம்பித்தாள்..
“நானே கால் பண்ணுவேன்ல..அதுக்குள்ள  என்ன அவசரம்..போன் உடைஞ்சு, ரிப்பேர்க்கு கொடுத்துருந்தேன்.. இப்போ தான் வந்துச்சி..இப்படியே செஞ்சா, அப்புறம் கிளம்பி வந்துடுவேன்..பார்த்துக்கோ..”

எதிர் புறம் பேச விடாமல் பேசினாள்..
பிறகு, அவர்கள் பேசியதை கேட்டு விட்டு, பதில் கூறிவிட்டு வைத்தாள்..

அப்படியே படுக்கையில் விழுந்தவள்,
‘இங்கு வந்திருக்கவே கூடாது..நான் தப்பு செய்கிறேன்..இது மட்டும் ராஜாவுக்கு தெரிந்தால்,இல்லை..தெரிய விட மாட்டேன்..அவர் எனக்கு தான்.. இங்கு வந்ததால் தான், அவரை பார்க்க முடிந்தது..

இன்னொரு முறை  அவரை மிஸ் பண்ண மாட்டேன்..
எப்படியாவது  அவர் மனதை மாற்றி  காதல் சொல்ல வைப்பேன்..’

உறுதி எடுத்தவள், சற்று தெளிந்து, கீழ் இறங்கி வந்தாள்..

அதன் பிறகு, ராஜா அது பற்றி இவளிடம்  எதுவும் கேட்க வில்லை..
சொல்லப் போனால், முன்பை விட இவளிடம்  நன்றாக பேசினான்..சகஜமாய் சிரித்து..
இவளுக்கே ஆச்சர்யம்..

“ஏலே ராசா.. எங்க உன் சகா, அந்த பாண்டி பயல, வீட்டு பக்கமே காணும்..”

“உங்க கிட்ட சொல்ல மறந்துட்டேன் ம்மா.. அவனை ஒரு அவசர வேலையா மும்பைக்கு அனுப்புச்சேன்..வர பத்து நாள் ஆகும்..”

“ஓ..இந்த பயலும், சொல்லாம கொள்ளாம கிளம்பிட்டான்..வரட்டும் பேசிக்குறேன்..”

“நான் தான் ம்மா, அவசர வேலை கொடுத்தேன்..அதான்..”

“உன்ற தோழனை விட்டு கொடுப்பியா நீ..”

“அகல் எங்க ம்மா.. இன்னிக்கு வரலியா??”

“என்ன லே,உன்ற கிட்ட சொல்லலியா அவ??,அவ மாமியாருக்கு, நாத்தனார் வழில  எதோ விசேஷம்,வர நாலஞ்சு நாள் ஆகும்ன்னு, நேத்து சொல்லிட்டு தானே போனா..”

“ஓ..மறந்துட்டேன் ம்மா..பட்டுப்பாறை ஓடைக்கு போலாம்னு பார்த்தேன்..நீதான், உன் அண்ணன் பொண்ணை  எங்கேயும் கூட்டிட்டு போகலைன்னு, குறை பட்டுக்குவியே.. அதான், அங்க கூட்டிட்டு போலாம்னு பார்த்தேன்..”

“அது, காட்டுக்குள்ள இல்ல இருக்கு..வெள்ளனவே கிளம்பணுமே..வர, ராவாயுடும்..அவ வந்ததும்  போலாம்..”

“எனக்கு இந்த மாசம் முழுசும் வேலை இருக்கும்மா..நாளைக்கு மட்டும் தான் நேரம் இருக்கு..”

“ஓ..அப்போ  மது கண்ண மட்டும் கூட்டிட்டு போய்ட்டு வா..”

இந்த வர்த்தைக்காக மட்டும் தானே எதிர் பார்த்தான் ராஜா..

“உன் அண்ணன் பொண்ணு,என் கூட தனியா வருவாளா??”

“நீ என்ன  புலியா சிங்கமா லே, பயப்புட.. அது பட்டணத்துல படிச்ச புள்ள..அதெல்லாம் வரும்..”

அதன் பிறகு, மதுவிடம் இது பற்றி பேசினார் மரகதம்.

அவனோடு  தனியாக போகும்  முதல் பயணம்..மனதில்  இனம் புரியா உணர்வு..இன்பமா??  துன்பமா?? பிரித்தறிய முடியவில்லை..

இந்த உணர்வு, அவனோடு பயணிக்கும் பொழுதும் இருந்தது..
அத்தையிடம் சம்மதம் கூறியவள், அந்த நொடிக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்..

இதோ இப்பொழுது, இது நிஜம் தானா?? என்னும் உணர்வில், பயணித்துக் கொண்டிருக்கிறாள்..

“என்ன, ஒன்னுமே பேசமாட்டேங்குற??”

[the_ad id=”6605″]

ராஜாவே  பேச்சை ஆரம்பித்தான்..

“ஹான்.. இல்ல..இது நிஜம் தானான்னு, ஒரு நினைப்பு..”

“ஏன் அப்படி தோணுது..??”

“இல்ல..உங்கள பார்த்ததுல இருந்து,நீங்க சரியா பேசல,ரொம்ப அவாய்ட் பண்ண பீல், அதான்..”

“ஓஹோ..ஏன் அப்படி பண்ணேன்னு, தெரியுமா??”

இல்லை என்று மறுப்பாய் தலை அசைத்தாள்..

“சரி,நான் அப்படி செஞ்சா  உனக்கு ஏன் கஷ்டமா இருக்கு..??”

ஒரு நொடி விழித்தவள்..

“அது..நான் உங்க வீட்டுக்கு விருந்தாளியா வந்துருக்கேன்..நீங்க முகம் திருப்புனா.. கஷ்டமா இருக்காதா..??”

“ஓ..அது மட்டும் தான் காரணமா??இப்படி யார் வீட்டுக்காவது நீ போய்,அவங்க  என்னை மாதிரி நடந்தா, கஷ்டமா இருக்கும்..அதுக்கு அப்புறம், அங்க இருப்பியா??”

சிறிது தயங்கியவள்,
“மாட்டேன்..”

“ஏன்??”

“அப்படி நடக்கிறவங்க வீட்டுல  எப்படி இருக்க முடியும்..??”

“அப்போ, இங்க மட்டும் ஏன் இருக்க??”

“அது…அப்பா சொன்னதால..”

“ஓஹோ..அப்போ, அப்பா சொன்னா, யார் அவமான படுத்தினாலும், முகம் திருப்புனாலும், அவங்க வீட்டுல இருப்ப..அப்படித் தானே??”

“அதெப்படி முடியும்..”
ஒரு வேகத்தில் கூறியவள்,பின் சொன்னது உணர்ந்து, மௌனமானாள்..

அவளை, ஒரு நொடி பார்த்தவன்,
“சொல்லு,இங்க மட்டும் ஏன் இருக்க..??இங்க, நாம ரெண்டு பேர்  மட்டும் தான் இருக்கோம்..அதுக்காக தான்  உன்னை தனியா கூட்டிட்டு வந்தேன்..சொல்லு..”

தலை குனிந்து கொண்டு, அமைதியாய் இருந்தாள்..

“உன் கிட்ட தான் கேட்குறேன்..காதுல விழுதா??”

அவன் கடுமையில், உடல் தூக்கி போட,

“அது..அது..உங்களை…, உங்களை…”

“என்னை??”

எச்சில் விழுங்கியவள்,
“உங்களை, எனக்கு பிடிச்சிருக்கு..உங்களை காதலிக்கிறேன்..அதுனால தான், இங்க இருக்கேன்..”

கண்களை மூடிய படி, வேகமாய் சொல்லி முடித்தாள்..

அவனை  காதல் சொல்ல வைப்பேன் என்றவள்,அவளே  காதல் சொல்லி நின்றாள்..

வண்டியும் நின்றிருந்தது..
சில நொடிகள் கழித்து அதை உணர்ந்தவள், கண் திறந்து பார்த்தாள்..

அவளை பார்த்தபடி  அமர்ந்திருந்தான் ராஜா..

அவன் கண்கள், அவளை விட்டு இம்மியும் அசைய வில்லை..

“இறங்கு..”
அவன் சொல்லில், சுற்றம் உணர்ந்து பார்த்தாள்.. சுற்றிலும் காடு..ஆள் நடமாட்டம்  எங்கும் இல்லை..

“இதுக்கு மேல  வண்டி போகாது. இறங்கி நடக்கனும்..இறங்கு..”

வேகமாய் கதவை திறந்து இறங்கினாள்..

‘நாம் கூறியது  இவர் காதில் விழுந்ததா??  அதற்கு  எதுவும் சொல்ல வில்லை..’
யோசித்தப்படி நடந்தாள்..

அவனும் மௌனமாய்  அவளோடு நடந்தான்..

சிறிது தூரம் கடந்ததும்,
“எத்தனையாவது  ஆளு..??”
திடீரென்ற அவன் கேள்வியில்,மொழி தெரியாத குழந்தை போல விழித்தாள்..

“என்ன??”

“இல்ல..நீ இது வரை  காதல் சொன்னவங்க எண்ணிக்கையில, நான் எத்தனையாவது,அப்படின்னு கேட்டேன்..”
அந்த இடத்திலேயே  ஸ்தம்பித்து நின்றாள்..பேச்சற்று..

“சரி, கேள்வியை மாத்தி கேட்கவா..உனக்கு எத்தனை பிரேக் அப்.. ??எத்தனை பேரை, பிரெண்ட் அஹ் தான் பழகினேன்னு சொல்லி கழட்டி விட்டுருக்க..”

“ராஜா,பார்த்து பேசுங்க..”

கண்கள் கோபத்தில் மின்ன, முதல் முறையாக அவன் பேரை சொல்லி,சுட்டு விரல் நீட்டி எச்சரித்தாள்..

அவளின் விரலை  மடக்கிப் பிடித்தவன்,

“என்னடி, பேர் சொல்லுற..நீதான் எனக்கு  பேர் வச்சியா??விரல் நீட்டி பேசுற..ஒழுங்கா மரியாதையா பேசு…”

அவனிடம் இருந்து  விரலை விடுவித்துக் கொண்டவள்,

“நீங்க அப்போ  சரியாய் கேள்வி கேளுங்க..”

“நான் கேட்டதுல  என்ன டி தப்பு..எனக்கு தெரிஞ்சு  ஒருத்தன் ஏமாந்திருக்கான்..தெரியாம எத்தனை பேரோ..”

“என்ன சும்மா, ஏமாத்திட்டேன் ஏமாத்திட்டேன்னு சொல்லுறீங்க..யாரை ஏமாத்தினேன்..?? நீங்க பார்த்தீங்களா??வாய்க்கு வந்த படி பேசாதிங்க..”

“நான் பார்க்கலைனா, உண்மை பொய் ஆயுடுமா..??”

“அப்படி என்ன உண்மை??.சொல்லுங்க, நானும் தெரிஞ்சுக்குறேன்..”

“நக்கலு..சரி சொல்லுறேன் கேளு..வினோத் தெரியுமா??”

“எந்த வினோத்..??”

“அதானே,ஒருத்தன்  ரெண்டு பேருன்னா  ஞாபகம் இருக்கும்..இதே வேலையா இருந்தா, அப்படி தான்..மறந்துடும்.. எத்தனை பேரை ஞாபகம் வச்சுக்க முடியும்..??”

“தேவை இல்லாம பேசாதிங்க..யாருன்னு  தெளிவா சொல்லுங்க..”

“தெளிவா என்ன, படமே காட்டுறேன்..”

தன் போனை எடுத்தவன்,அதில் அவளும்,இன்னொரு ஆணும் இருந்த புகைப்படங்களை காட்டினான்..

அத்தனையிலும், வெகு நெருக்கமாய் இருவரும்..

பல படங்கள்..
கண்களை இறுக்க  மூடித் திறந்தாள் மது..

“இன்னும், உன் எப் பி போட்டோ பார்க்குறியா??”

அதில் இருந்து  சில புகைப்படங்களை காட்டினான் ராஜா..

இன்னும்  சில ஆண்களுடன் மது.அவள் போட்டிருந்த ஆடைகள் அனைத்தும்,  சொல்லும் படி இல்லை..

“உன் பேஸ் புக் பக்கத்துல, நான் ஜல்லடை போட்டு தேடி கூட, ஒரு சேலை, வேண்டாம், ஒரு சுடிதார் போட்ட போட்டோ கூட இல்ல..அப்போ இங்க வந்ததுல இருந்து  நீ போடுறது எல்லாம், வேஷம் தானே..??”

அவளை, மேலே இருந்து கீழே வரை காட்டிக் கேட்டான்..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!