Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

என் கவிதைகளின் நாயகன்

அத்தியாயம் 3

“என்னடி இது?” என்றபடி தன் காலை கடன்களை முடித்து, தன் அறையில் இருந்து வெளிவந்த மகிழினியின் முன், கையில் ஒரு கோப்புடன் வந்து நின்றான் மித்ரன்.

அவனை சட்டை செய்யாமல் சமையல் அறையை நோக்கி நடந்தவள்…
“ஃபைல்… பாத்தா தெரியலையா?” என்றாள், தனக்கான தேனீரை கோப்பையில் ஊற்றிய வாறே.

“ஃபைலுக்குள்ள என்ன?” என்றபடி அவனும் அவள் பின்னால் வந்தான்



Advertisement

“ஓபன் பண்ணி பாருங்க தெரியும்”

“பாத்துட்டு தான் கேட்குறேன்… என்னோட சர்டிபிகேட்ஸ் இருக்கு… எப்படி? நான் இவ்வளவு நாளா போய் கேட்டும் கொடுக்கல… நீ உண்மையாவே பெரிய ஆள் தான். உன் ஃபேன்ஸ் யாரயாவது வச்சு வாங்கிட்டியா?” என்றான் ஆச்சரியம் அகலாமல். 
இத்தனை நாட்களாக அவன் யார்யாரின் மூலமாகவோ முயற்சி செய்து பார்த்துவிட்டான், அவனுடைய சான்றிதழ்களை… அந்த நிறுவனத்திடம் இருந்து திரும்பப் பெற. ஆனால் அவனால் முடியவில்லை.

“யாரா இருந்தாலும் கேக்குற மாதிரி கேட்டா கொடுக்க போறாங்க” என்றபடி அவள் அருந்திய தேனீர் கோப்பையை சுத்தம் செய்து அதற்கான இடத்தில் வைத்தாள்.

Advertisement

“ஏய்… நான் கெஞ்சியும் கேட்டுப் பாத்துட்டேன் மிரட்டியும் கேட்டுப் பாத்துட்டேன் எதுக்குமே அவன் மசியல… போட்ட கேஸ்ச வாப்பஸ் வாங்குனா தான் சர்டிபிகேட்ஸ்ச தருவவேன்னு ஒத்தக் கால்ல நின்னான்… நீ அப்படி எப்படி கேட்ட? ஒடனே கொடுக்கற அளவுக்கு….”

Advertisement

“அவன் கேட்டத செஞ்சேன்… கொடுத்துட்டான். அதுவும் ஒடனே எல்லாம் இல்ல… இரண்டு நாளுக்கு அப்பறம்”

“ஏய் என்ன டி பண்ண… அவன் கேட்டதுனா… கேஸ் வாப்பஸ் வாங்கறது… நான் இல்லாமல் அத உன்னால பண்ண முடியாது…” என்றபடி அவன்சிந்திக்க

“உங்களோட வக்கீல் கிட்ட சொல்லி வாப்பஸ் வாங்க வச்சேன்” அவள் கூறி முடிக்கவும் அவனுடைய கோபம் தலைக்கேறியது.

Advertisement

“என்ன பண்ணி வச்சிருக்க டி…. அவன் என்ன தப்பு பண்றான்னு உனக்கு தெரியுமா? பணத்தை கொடுத்து வக்கீலையும் விலைக்கு வாங்கிட்டியா? சீ… நீ சீப்பானவனு மட்டும் தான் நினைச்சேன் இப்போதான் நீ எவ்வளவு கேவலமானவனு புரியுது. அப்படியே உன்ன அரைஞ்சா என்னனு தோனுது ஆனா பொண்ணாச்சேன்னு பாக்குறேன்.”

” எதுக்கு இப்போ இப்படி கத்தறீங்க? நீங்க போட்ட கேஸ்க்கு என்ன எவிடென்ஸ் இருக்கு ஒன்னும் இல்ல… கோர்ட்ல இந்த கேஸ் நிக்கவே நிக்காது. உங்க ஆபீஸ்ல எத்தனை பேர் வேலை செய்றாங்க யாருக்குமே இல்லாத அக்கறை உங்களுக்கு எதுக்கு? ஒழுங்கா வேற வேலைக்கு போற வழிய பாருங்க”

அவள் கூறுவதைக் கேட்டு நக்கலாய் சிரித்தவன்… “அப்போ என்னையும் எல்லாரையும் போல சுயநலவாதியா இருக்க சொல்ற அப்படிதான”

“ஆமா… இருந்தா என்ன தப்பு?” என்று அவள் கேட்கவும் அவனுடைய கோபம் மீண்டும் ஏறியது.

” என்ன தப்பா? இன்னைக்கு நீ சாப்பிடுற சாப்பாடு தான் விஷம்… நாளைக்கு நீ குடிக்கிற தண்ணியும், முச்சு விடுற காத்தும் கூட விஷமா மாறும் அப்போ புரியும் நீ என்ன தப்பு பண்றன்னு…” என்றவன் மேலும் ” இந்த கேஸ் நிக்காதுன்னு எனக்கும் தெரியும் ஆனா என்னோட ஒரு சின்ன எதிர்ப்பால இந்த விஷயம் நாலு பேர் காதுக்கு போகும்ன்னு நினைச்சேன்… அதையும் தடுத்துட்ட இல்ல… ச்ச இதெல்லாம் எதுக்கு கேவலம் இந்த சர்டிபிகேட்ஸ்சுக்காக… இப்போ எனக்கு அவனவிட நீ தான் மோசமானவளா தெரியுற….” என்றபடி சான்றிதழ்கள் அடங்கிய கோப்பை அவள் கையில் கொடுத்தவன் ” எனக்கு இனி இந்த சர்டிபிகேட்ஸ் தேவை இல்ல. கவலை படாத அதுக்காக உன் சம்பாத்தியத்துல உட்கார்ந்தும் சாப்பிட மாட்டேன்” என்றுவிட்டு அவ்விடம் விட்டு அகன்றான்.

அவன் ஒரு வேதியியல் பட்டதாரி. அவன் வேலை பார்த்த அலுவலகம் தொழிற்சாலைகளின் சாதக பாதகங்களை ஆராய்ந்து… அதற்கேற்ப அந்த தொழிற்சாலையை அந்த குறிப்பிட்ட இடத்தில் அமைக்கலாமா? அது மக்களுக்கு எந்த வகையிலாவது  பாதிப்பை ஏற்படுத்துமா? என்பன பற்றிய விரிவான ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.  ஆனால் அந்த அலுவலகம் மக்களுக்காக வேலை செய்வதை நிறுத்தி தொழிற்சாலைகளுக்காக வேலை செய்து வருகிறது. இப்பொழுது அவர்கள் அனுமதி பெற்று தந்திருப்பது மிகவும் அபாயகரமான தாமிர தொழிற்சாலைக்கு. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகையில் சல்பர் டை ஆக்சைடு என்னும் நச்சு வாயு கலந்திருக்கும் இது மனிதன் சுவசிப்பதற்கு உகந்தது அல்ல. மேலும் இந்த தொழிற்சாலை கழிவுகள் சரியான முறையில் அகற்றப்படாவிட்டால் நிலத்தில் ஊடுருவி நிலத்தடி நீரையும் பாதிக்கும். இந்த தொழிற்சாலை அமையும் இடத்தினைச் சுற்றி வாழும் மக்களின் அடிப்படை வாழ்வாதரமான நீரும், காற்றுமே மாசடைந்து விடும்.

இதனை அறிந்த மித்ரன் தன் மேலிடத்தில் புகார் செய்ய… அவர்களுக்கு தெரிந்தே தான் இது நடந்து கொண்டிருக்கிறது என்பது அவனுக்கு புரிந்தது. இதனைத் தொடர்ந்து தான் அவன் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தான். 

இன்று…அனைவரும்  சுயலாபத்திற்காக தாங்கள் தங்களுக்கே தான் பாதம் செய்கிறோம் என்று கூட தெரியாமல் சில செயல்களைச் செய்து கொண்டிருக்கின்றனர்.

இன்று அந்த பட்டியலில் மகிழினியும் இணைந்து விட்டதைத் தான் அவனால் தாங்க முடியவில்லை. ஏனெனில் மித்ராவின் எழுத்துக்கள் தான் அவனுடைய இக்தகைய முயற்சிக்கு முதல் காரணம். அவளுடைய  ‘குறைகளைத் தட்டிக்கேள் குறையாவிட்டால் மீண்டும் கேள்’ என்னும் இந்த வரிகள் தான் அவனை தவறுகளைத் தட்டிக்கேட்க துண்டியது. இன்னும் நம்பமுடியவில்லை அவனால் மகிழினிதான் மித்ரா என்பதனை.

****
தன் அறைக்குள் நுழைந்த மகிழினியின் நிலையோ மித்ரனுடைய நிலையை விட மோசமக இருந்தது. “சாரி மித்து நான் பண்ணினது எவ்வளவு பெரிய தப்புன்னு எனக்கு புரியுது… ஆனா எனக்கு வேற வழி தெரியலை எனக்கு எல்லாத்தையும் விட நீ தான் டா முக்கியம்…”

என்னவனே…
என் ஒவ்வொறு செயலும் 
உனக்காகத் தான்
உன்னைக் காக்கத் தான்

வழக்கம் போலத் தன்னுடைய நாளேட்டுடன் தான் உறையாடிக் கொண்டிருந்தாள் மகிழினி.

நான்கு நாட்களுக்கு முன்…
மகிழினி தன்னுடைய அலுவலகத்தில் அவளுடைய அடுத்த புத்தகத்தின் முதல் பரதி பிழையின்றி சரியாக அச்சிடப்பட்டிருக்கிறதா என சரிபார்த்துக்  கொண்டிருந்தாள். இதுவே அவளுடைய வழக்கம். முதலில் அவள் அனைத்தையும் சரிபார்த்த பின்பே புத்தகங்கள் அச்சிடப்பட்டு விற்பனைக்குச் செல்லும். 
அப்பொழுது தான் அவளுடைய அலுவலக அறைக்குள் தடாலடியாக நுழைந்தான் ஒரு ஆங்கிலேயன்.
(உறையாடல் தமிழில் புரிதலுக்காக)

அவன் அறைக்குள் அனுமதி இன்றி நுழைந்ததால் அதிர்ச்சி அடைந்த மித்ரா

“யார் நீங்க? வேர் ஆர் யுவர் மேனர்ஸ்…” என்று அவள் அவனை திட்ட ஆரம்பிக்க… அவனோ நிதானமாக இருக்கையில் அமர்ந்தபடி…

“நான் யாருன்றது இருக்கட்டும்… மித்ரன் உன் புருஷன் தான? அவனை உடனே என் ஃபக்ட்ரி மேல போட்டு இருக்குற கேஸ வாப்பஸ் வாங்க சொல்லு”

“ஓ அப்போ நீ தான் அந்த ஃபக்ட்ரி ஓனரா? அதெப்படிங்க கப்பேனிஸ் டெக்னிக்கள் இன்ஸ்டிடியூக்ஷன்ஸ் எல்லாம் உங்க கன்ட்ரில பில்ட் பண்ற நீங்க ஃபக்ட்ரீஸ் னா மட்டும் எங்க கன்ட்ரிய தேடி வர்றீங்க? ஐ ஜஸ்ட் டோன்ட் கெட் ட். இங்க பாருங்க… ஐ சப்போர்ட் ஹிம். உங்க ஃபக்ட்ரி யால என்னென்ன  பிரச்சனைகள் வரும்னுனு தெரிஞ்சிகிட்டு தான் அதை பத்தி கேஸ் போட்டு இருக்காங்க. உங்களுக்கு இந்த ஃபக்ட்ரியை எங்க கன்ட்ரில தான் வச்சாகணும்னா… டெசர்ட் ரீஜியனா பாருங்க. இவ்வளவு நிறைய மக்கள் இருக்கிற ரிஜியன் ல இப்படி ஒரு ஃபக்ட்ரிய அமைக்க  நான் கண்டிப்பா ஒத்துக்க மாட்டேன். என்னோட ஆபீஸ்ல வந்து மிரட்டின உடனே பயப்பிடற அளவுக்கு நான் கோலை இல்ல. ஜஸ்ட் கெட் அவுட் ஆஃப் ஹியர்”

கோபமாக தனது இருக்கையை விட்டு எழுந்தவன் மேஜையின் மேல் கைகளை ஊன்றியபடி குனிந்து…
“ஆமா… உங்க நாட்டில் மட்டும் தான் இந்த ஃபக்ட்ரியால உங்க நாடு வல்லரசாகும்ன்னு சொன்னா உடனே நம்பி பர்மிஷன் கொடுப்பாங்க… அன்ட் நீ சொல்ற மாதிரி ஒரு டெசர்ட் ரீஜியன்ல என்னோட ஃபக்ட்ரிய நான் பில்ட் பண்ணினா எனக்கு ஹியூமன் ரிசோர்சஸ்சும்  கிடைக்காது மினரல் ரிசோர்சஸ்சும் கிடைக்காது. சோ ஜஸ்ட் கெட் அவுட் ஆஃப் மை வே. உனக்கு சும்மா பூச்சாண்டி காட்டிட்டு போக இங்க வரல” என்றவன் மீண்டும் இருக்கையில் அமர்ந்து…

“ஃபோன் பண்ணி உன் புருஷன் எந்த ஹாஸ்பிடல்ல இருக்கான்னு கேளு.” எனவும் பதறிய மகிழினி “என்னடா பண்ணின அவங்கள என அவன் சட்டையை பிடித்து உழுக்க ஆரம்பித்தாள். அவளிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டவன். 
“அத அவன் கிட்டயே கேளு” என்றான்.

உடனே கைகள் உதற தனது அலைபேசியை எடுத்து அவனுக்கு அழைத்தாள். வேகு நேர அழைப்பிற்கு பின் தான் எடுத்தான் மித்ரன்.

“என்னடி வேணும் உனக்கு?” என்று அவன் எடுத்த எடுப்பில் சிடுசிடுக்கவும் தான் மூச்சே வந்தது அவளுக்கு.

“ஏ…ஏ… எங்க இருக்கீங்க?” என்று அவள் தினற

“நான் எங்க இருந்தா உனக்கு என்னடி?”என்று சொல்ல ஆரம்பித்தவன் அவளுடைய குரலில் தெரிந்த ஏதோ ஒன்றில் நிதானித்து “மளிகை சாமான் வாங்க வெளிய வந்துருக்கேன். ஏன் என்னாச்சு?” என்றான்.

“இல்ல உங்கல ஹாஸ்பிடல்ல….” என்று அவள் ஆரம்பிக்க

“ஏய்… எல்லா எடத்துலையும் ஸ்பை வச்சிருக்கியாடி நீ… ஆமா, மளிகை சாமான் வாங்க வந்த வழியில வண்டி ஸ்கிட் ஆகி கீழ விழுந்துட்டேன். லைட்டா ஒரு கம்பி கிளிச்சிட்டு… அதான் ஒரு டீடீ இன்சக்க்ஷன் போட்டா சேப்ன்னு ஹாஸ்பிடல் வந்தேன். போதுமா… உயிர வாங்காத ஃபோன வை” என்றபடி பேசியை அனைத்து விட்டான்.

அவள் தன் முன் வக்கிரமான புன்னகையுடன் நின்றுகொண்டிருந்தவனைப் பார்க்க… “இப்போ உன்னோட வீக்னஸ் என்னனு எனக்கு நல்லாவே புரியுது. ஒரு நிமிக்ஷத்துல எவ்வளவு பதட்டம் உன் முகத்துல… அவ்வளவு லவ்வா?

  இது வெறும் சாம்பில் தான்… நாளைக்கு இந்த கேஸ் கோர்ட்ல இருந்ததுன்னா…. அவன் ஹாஸ்பிடல்ல இருக்க மாட்டான்…மார்ச்சுவராில இருப்பான்… என்ன புரிஞ்சுதா?” என்று கூறி விட்டு வெளியே சென்று விட்டான்.

அவனுக்காகத் தான் அவனுடைய உயிரைக் காக்கத்தான் அவள் அப்படிச் செய்தாள். சான்றிதழ்களுக்காக அல்ல. முதல் வேலையாக அவனுடைய வக்கீலைப் பார்த்து வழக்கினை தள்ளுபடி செய்ய வைத்தாள்.

‘ஆனா இத இப்படியே விட மாட்டேன் கண்டிப்பா இங்க அந்த ஃபக்ட்ரி வராது மித்து நான் எதாவது பண்ணி அத தடுப்பேன்’ என உறுதியும் எடுத்துக் கொண்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!