Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கருவறை சொந்தம் 31.1

அத்தியாயம் 31 (1)

கெளதம் மற்றும் யாழினி இருவரும் வேலைக்குச் சேர்ந்து நாட்கள் ரக்கை கட்டி பறக்க, கிட்டத்தட்ட, ஒரு வருடம் கடந்திருந்தது. அன்றொரு நாள், அலுவகத்தைத் தாண்டி இருக்கும், கொலீக் ஒருவனின் வீட்டிற்கு அவன் அழைத்ததின் பேரில், பைக்கில் கிளம்பினான் கெளதம். அலுவகத்தைத் தாண்டிச் செல்லும் நேரம், யாழினி, பஸ் ஸ்டாப்பில் இறங்கி, அலுவகத்திற்கு உள்ளே செல்வது இவன் கண்களில் பட்டது.

அவளைப் பார்த்ததும், உடனே தன் வண்டியை நிறுத்தியவன், “இன்னைக்கு ஆபீஸ் லீவ் ஆச்சே. வரச் சொல்லி நமக்கு எதுவும் இன்ஸ்ட்ரக்க்ஷன் வரலையே. இவ எதுக்கு ஆபீஸ் போறா??!!” என்ற யோசனை மண்டையில் ஓட, யாழினி பே ட்ச்சில் அவளுடன் ஒன்றாக வேலை செய்யும் இளைஞனுடன் ஒன்றாகத் தங்கி இருக்கும், நண்பன் ஒருவனை உடனே போனில் அழைத்து, விஷயத்தைச் சொல்லி, அவனிடம் கேட்கச் சொல்ல, வர சொல்லி யாரும் சொல்லவில்லை என்ற தகவில் கிடைத்தது. சரி என்று நண்பனிடம் கூறிவிட்டுப் போனை வைத்தவனுக்கோ, ஏதோ சரி இல்லை என்று மனது அடித்துக் கொண்டது. வீட்டிற்கு வரச் சொல்லியிருந்த இருந்த நண்பனிற்குப் போனில் அழைத்து, வேலை இருப்பதால், தற்பொழுது வீட்டிற்கு வர முடியவில்லை என்று சொல்லி வைத்துவிட்டு, வண்டியை திருப்பிக்கொண்டு அலுவகத்துக்குச் சென்றான்.

காலையில் எழுந்த யாழினிக்கு, அவளது மொபைலில் கால் வந்தது. யாரென்று தெரியாததால், போனை அட்டென்ட் செய்து பேச, மறுமுனையில் அவளது TL பேசினான். அவர்களது ப்ரொஜெக்டில் ஒரு சின்ன வேலை பாக்கி இருப்பதாகவும், இன்றைக்கே முடித்துக்கொடுக்க வேண்டிய அவசரம் என்பதால், அவள் டீம் மெம்பர்ஸ் அனைவரும் அலுவகத்திற்கு வர சொல்லி இருப்பதால், அவளையும் அலுவகம் வந்து அதை முடித்துவிட்டு போகும்படி கூறினான். ஒரு அரை மணிநேர வேலை என்பதால், சரி போய்விட்டு வருவோம் என்று முடிவு செய்தவள், கிளம்பி அலுவகம் வந்தாள்.



Advertisement

இங்கே பார்கிங்கில் வண்டியை பார்க் செய்துவிட்டு லிப்ட் ஏற கெளதம் வர, அது வேலை செய்யாததால், வேகமாகப் படிகளில் ஏறியவனுக்கு, அவனுக்கு முன் படிகளில் யாழினி ஏறிக் கொண்டிருப்பது தெரிந்தது. அவளைப் பார்த்ததும், யாழினி என்று சத்தமாகக் கெளதம் அழைக்கவும், அவள் திரும்பி பார்க்க, அதற்குள் அவள் அருகில் வந்தவன், “இன்னைக்கு லீவ் ஆச்சே, ஆபீஸ் வந்திருக்க?!” என்று கேட்க, (சில மாதங்களாகவே யாழினியை ஒருமையில் அழைக்க ஆரம்பித்திருந்தான் கெளதம்.) “லீவ் தான். ஆனா வொர்க்ல கொஞ்சம் பெண்டிங் இருக்காம். அதான் வந்து முடிச்சு கொடுத்துட்டுப் போகச் சொல்லி, TL வர சொன்னாரு. பெண்டிங் வொர்க் முடிஞ்சாதான், ப்ராஜெக்ட் சப்மிட் பண்ண முடியுமாம். அதான் சரின்னு வந்துட்டேன். ஆமா நீங்க வந்துருக்கீங்க. உங்களையும் வர சொன்னாங்களா?” என்று அவள் பதிலுக்குக் கேட்க, உன்னைப் பின் தொடர்ந்து தான் வந்தேன் என்றா சொல்ல முடியும், ஆகையால், “ஆமாம். கொஞ்சம் வொர்க்.” என்று கூறி சமாளித்தான்.

ஆனால் அவன் மனதில் வேறொரு கேள்வி ஓடிக் கொண்டிருந்தது. ‘இவளை வர சொல்லி இருக்காங்கன்னா, நம்மளையும் வர சொல்லி இருக்கணுமே. ஆனா அப்படி ஒரு நியுஸ் நமக்கு வரலையே. அப்புறம் இவ டீமை மட்டும் எதுக்கு வர சொல்லி இருக்காங்க?’ என்ற கேள்வி ஓடிக்கொண்டே இருந்தது.

சில சமயம் அவர்கள் அலுவகத்தில் சிறிய வேலை என்றாள், TL பொறுப்பில் இருப்பவர்களே, கௌதமின் வேலையை முடித்து, பைலை சம்பிட் செய்வது நடக்கும். ‘ஒருவேளை, அப்படியும் இருக்குமோ!’ என்ற எண்ணம் தோன்ற, ஒருவேளை அப்படியும் இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டான்.

Advertisement

பேசி முடித்துவிட்டு சரி என்று இவனிடம் விடைபெற்று யாழினி சென்றுவிட, இவனும் தன் பகுதிக்குச் செல்லும் நேரம், மற்றோர் ப்ரொஜெக்டில் இருக்கும் நண்பன் ஒருவன், இவனை வழிமறித்து, “டேய் மச்சான், உன்னைத் தாண்டா நினைச்சேன், ஆபத்பாண்டவன் மாதிரி நீயே வந்துட்ட. ஒரு கோட், எப்படிப் பண்ணாலும் எர்ரர் காட்டுது. நீ கொஞ்சம் வந்து என்னன்னு பாருடா.: என்று அடம்பிடித்து அழைக்க, வேறு வழியில்லாமல், முன்னே போகும் யாழினியை பார்த்துக்கொண்டே நண்பனுடம் சென்றான்.

Advertisement

அரை மணிநேரத்தில் நண்பனின் செக்க்ஷனில் இருந்து வெளியே வந்தவன், தங்களது செக்க்ஷனுக்குள் நுழைந்து, உள்ளே சென்று, யாழினியை தேடிப் போக, அவள் சீட்டில் அவளைக் காணவில்லை. அதே நேரம் அவள் டீம் மெம்பர்ஸ் யாரையும் காணவில்லை. ஒருவேளை வேறு பகுதியில் உட்கார்ந்து இருக்கிறாளா? என்று பார்க்க, அந்த ப்ளோரில் எங்கும் அவள் இல்லை. அவள் சிஸ்டத்தைப் பார்த்தாள், அது ஆன் செய்யப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

ஏதோ சரி இல்லை என்று இவன் மனதுக்குப் பட, யாழினியின் TL அறைக்குச் சென்று பார்த்தான், அவனையும் காணவில்லை. உடனே தனது செக்க்ஷனை விட்டு வெளியே வந்தவன், தனக்குத் தெரிந்த இடத்தில் எல்லாம், யாழினியை தேடிப் பார்க்க, எங்கும் அவளைக் காணவில்லை.

என்ன செய்யலாம் என்று யோசித்தவன், சரி என்று அவளது மொபைலுக்கு அழைக்க, ரிங் போய்கொண்டே இருந்தது. ஆனால் எடுக்கப்படவில்லை. மீண்டும் மீண்டும் போட்டுப் பார்க்க, மூன்றாவது ரிங்கில் அழைப்பு எடுக்கப்பட, “ஹலோ! யாழினி!! ஹலோ!!” என்று கெளதம் கத்த, அந்தப் பக்கம் எந்தச் சத்தமும் இல்லை. தன் காதில் இருந்து போனை எடுத்துக் கெளதம் பார்க்க, அவள் லைனில் இருப்பது தெரிந்தது. ஆனால் அவளின் குரல் கேட்கவில்லை. ‘என்னாயிற்று!’ என்று நினைத்தவன், “ஹலோ! ஹலோ!” என்று மீண்டும் அழைத்துப் பார்க்க, இம்முறை’, “ம்ம்!!! ம்ம்!!” என்று பெண் குரல் கேட்க, இவனுக்குப் பகீர் என்றது.

Advertisement

பதற்றத்துடன், “யாழினி! யாழினி!” என்று கிட்டத்தட்ட கத்தியவன், “நீ எங்க இருக்க??!!” என்று சத்தமாகக் கேட்க, இம்முறை எந்தச் சத்தமும் இல்லாமல் நிசப்தமாக இருந்தது. போன் துண்டிக்கப் பட்டதற்கான பீப் ஒலி கேட்டது. அதன்பின்பே தெரிந்தது, கால் கட் செய்யபட்டிப்ருப்பது. மீண்டும் அவளின் நம்பருக்கு அழைக்க, இம்முறை ‘சுவிட்ச் ஆப்’ என்ற மெசேஜ் வந்தது.

இதயம் தடதடக்க, வேகமாகப் படிகளில் இறங்கியவன் எங்குச் செல்வது என்று தெரியாமல், அங்கும் இங்கும் கண்களைச் சுழல விட்டுகொண்டே, பதைபதைக்க ஓட, அப்பொழுது எதிரில் யாழினியின் அலுவகத் தோழி ஒருத்தி வர, அவளிடம் “யாழினியை பார்தீங்களா?!” என்று கெளதம் கேட்க, அவளோ, “யாழினி, கொஞ்சம் நேரம் முன்னாடி தான், ஒருத்தர் கூட ட்ரைனிங் ரூம் பக்கம் போனா??” என்று பதில் கூறியவள் “ஏன்? எதாவது பிரச்சனையா??” என்று அடுத்தக் கேள்வி கேட்கும் முன் கெளதம் அந்த இடத்தில இருந்து புயலாகக் கிளம்பி இருந்தான்.

ட்ரைனிங் ரூம், முதல் தளத்தில், சந்து போன்ற பகுதியில், கடைக்கோடியில் இருக்கும். கிட்டத்தட்ட, குடோன் போன்ற பகுதி. “அங்க எதுக்கு இவ போனா?” என்ற கேள்வியுடன், வேகவேகமாகப் படிகளில் ஏறியவன், கடகடவென ட்ரைனிங் ரூம் சென்று, அதன் கதவின் இருந்த கண்ணாடி போன்ற பகுதி வழியாகப் பார்க்க, உள்ளே அவன் கண்ட காட்சியில் அதிர்ந்தான். உள்ளே அந்த TL, யாழினியை வலுக்கட்டாயமாக இழுத்து அணைத்திருக்க, துப்பட்டா இல்லாத அவளது சுடி டாப்பின், பின்பக்க சிப் பாதி இறங்கி இருக்க, கை பகுதியில், அவளது ஆடை சற்றே கீழே இறங்கி இருந்தது.

எப்பொழுதும் ட்ரைனிங் ரூமை திறக்க, அலுவக ஐ.டி கார்ட் ஆக்செஸ் தேவைப்படும். நல்லவேளை கெளதம் எப்பொழுதும், பர்சில அலுவக ஐ.டி கார்டை வைத்திருப்பான். வேகமாகத் தனது பர்சில் இருந்து கார்டை எடுத்து ஆக்செஸ் செய்து, புயலென உள்ளே சென்றவன், TL சுதாரிக்கும் முன், யாழினியை அவன் பிடியில் இருந்து பிரித்தெடுத்தவன், அவன் முகத்தில் ஒரு குத்து விட்டான். அதில் நிலை தடுமாறி கீழே விழுந்தவனை, சட்டையைப் பிடித்துத் தூக்கியவன், ”பொறிக்கி நாயே! உங்களை நம்பி வேலைக்கு வர்ற பொண்ணு கிட்ட இப்படித் தப்பா நடந்துக்குற. அசிங்கமா இல்லை?!!” என்று திட்டிக்கொண்டே மீண்டும் மீண்டும் அவனின் முகத்திலேயே குத்த, யாழினியோ, கௌதமின் முதுகில் பல்லி போல ஒட்டிக்கொண்டாள். அவளின் உடலின் நடுக்கம், தன் முதுகில் பதிந்திருக்கும் அவள் கைகளின் மூலம் கௌதமிற்குத் தெரிய, அதில் இன்னுமே வெறி எரியவன், அந்த TLஐ துவைத்து எடுத்துவிட்டான்.

வலி தாங்காமல், முனங்கியபடி கீழே கிடந்தவனின், பாக்கெட்டில் இருந்து அவனது ஐ.டி கார்டை எடுத்து தன் கையில் வைத்துக்கொண்ட கெளதம், யாழினி பக்கம் திரும்ப, அதிகமான அழுகையிலும், நடந்த சம்பவத்தின் தாக்கத்தின் நடுக்கத்திலும், நெஞ்சு பகுதி விம்மியபடி, விக்கிகொண்டி இருந்தாள். உடனே அவளது ஆடையைச் சரி படுத்தியவன், அவளை அங்கிருந்த சேரில் உட்கார வைத்துவிட்டு, பக்கத்தில் இருந்த கேனில் இருந்து தண்ணீர் பிடித்து வந்து கொடுக்க, கைகள் உதறல் எடுக்க, க்ளாசை வாங்கியவள், வேகவேகமாகக் குடிக்க, கிடத்தட்ட பாதித் தண்ணியைக் கீழே சிந்தியபடி, மீதியை மடமடவெனக் குடித்தாள். அவள் குடித்து முடித்ததும், அவளது முதுகை கெளதம் நீவிவிட, பல நிமிடங்கள் கழித்தே அவளது விக்கல் நின்றது. சுயநினைவுக்கு வந்த பின்பே அவளுக்குக் கெளதம் அருகில் இருப்பது கண்ணில்பட, சிறு குழந்தை போல, அவனது சட்டையை இறுக பிடித்துக் கொண்டவள், அழுகையுடன் அவனது வயிற்றில் முகம் புதைத்து, விம்மி அழுதாள். அழும் அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் கெளதம்.

பல நிமிடங்கள் கழித்தே தன்னைச் சமன் செய்துகொண்ட யாழினி, கௌதமிடம் இருந்து விலகி தனது துப்பட்டாவைத் தேட, சற்று தள்ளி கீழே கிடந்த அதை எடுத்து வந்து கொடுத்தான் கெளதம். பின் அவளிடம் என்ன நடந்தது என்று கேட்க, என்ன நடந்தது என்று சொல்ல ஆரம்பித்தாள்.

கௌதமிடம் பேசிவிட்டு தனது பகுதிக்கு சென்ற யாழினியை, அங்கே செக்க்ஷனில் இருந்த சிஸ்டத்தை அப்டேட் செய்ய டெக்னிசியன் வரவிருப்பதால், ட்ரைனிங் ரூமில் இருக்கும் சிஸ்டத்தில் அவளது பைலை லோட் செய்து வைத்திருப்பதாகவும், அங்குச் சென்று வேலை செய்யுமாறும் கூறி அங்கு அழைத்துச் சென்ற TL, சிஸ்டத்தை ஆன் செய்து கொடுத்துவிட்டு, போய்க் கதவை லாக் செய்தவன், அவள் அருகில் வந்து அவள் சுதாரிக்கும் முன், அவளை அணைத்து அவளிடம் தவறாக நடக்க முயற்சித்தாகவும், அப்பொழுது, டேபிளில் இருந்த இவளின் போன் அடிக்கவும், இந்தப் போராட்டத்திற்கு இடையில், மொபைலை அவள் ஆன் செய்துவிட, அதற்குள் அவன், போனை தூக்கி எறிந்துவிட, அதற்குள் கெளதம் வந்து விட்டதாகவும் கூறினாள்.

அவள் சொன்னதும், மீண்டும் கீழே கிடந்தவனிடம் சென்று அவனை ஒரு எட்டு விட்டவன், யாழினியிடம் திரும்பி அவளை நன்றாக வசைபாடினான். “உனக்குக் கொஞ்சமாச்சும் அறிவிருக்கா!! வொர்க் இருக்கு வான்னு சொன்னா, யார்கிட்டையும் சொல்லாம வந்துடுடுவியா?? உன்கூட வேலை பார்க்கிறவங்ககிட்ட ஒரு வார்த்தை போன் செஞ்சு கேட்க மாட்டியா?? அன்னைக்கே நான் என்ன சொல்லி இருக்கேன். என்கிட்டே சொல்லனும்னு சொல்லி இருக்கேன்ல, நம்ம டீம்ல தான நானும் வொர்க் செய்றேன். என்கிட்டே ஒரு வார்த்தை கேட்டியா?? வேலை செஞ்சா, உனக்கு இங்க என்ன அவார்ட்டா கொடுக்கப் போறாங்க. சண்டே அதுவுமா கிளம்பி வந்திருக்க?! இதுல வேற யார்கிட்டயும் சொல்லாம கிளம்பி வந்திருக்க. அறிவில்லை உனக்கு. எதாவது நடந்திருந்தா என்னவாகி இருக்கும்.” என்று குரலுயர்த்திக் கத்தியவனுக்கு, அவளை ஒரு அறை விடலாமா என்ற அளவுக்கு ஆத்திரம். ஆனால் இவன் கத்தியதற்கே, அவள் மீண்டும் அழ, ஆழ மூச்செடுத்து, தன்னைச் சமன் படுத்திக்கொண்டு, தலை முடியை அழுத்த கோதியவன், தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள மிகவும் கஷ்டபட்டான்.

சில நொடிகள் அமைதியாக நின்றவன், அதன்பின் அவளின் தோற்றத்தை ஆராய்ந்து, அவள் அருகில் வந்தவன், அவளது தலைமுடியை சரி செய்துவிட்டு, அவள் கைபிடித்து எழுப்பி, “வா, ஹராஸ்மென்ட் செல்லுக்குப் போவோம்.” என்று சொல்ல, அவளோ நகராமல், “எதுக்கு??” என்று பற்கள் தந்தியடிக்கக் கேட்க, அவளை முறைத்து பார்த்தவன், “எதுக்கா?! இதைப் பத்தி கம்ப்ளைன்ட் கொடுக்க.” என்று சொல்ல, அவளுக்கு முகம் வெளிறியது. “இது…இது வெளிய தெரிஞ்சா, எல்லாரும், ஒரு மாதிரி பார்பாங்க. வீட்டில திட்டுவாங்க.” என்று கூற, “அப்போ அப்படியே விட்டுடவா!! இவன் மேல கம்ப்ளைன்ட் செஞ்சா தான், இவனை இந்த ஆபீஸ்ல இருந்து வெளிய அனுப்புவாங்க. இன்னைக்கு இவ்ளோ தூரம் செஞ்சவன், நாளைக்கு இதுக்கும் மேலையும் உன்கிட்ட ஏதாவது வாலாட்டினா என்ன பண்ணுவா?? இன்னைக்கு நான் வந்து காப்பாத்திட்டேன். நாளைக்கு யாரும் இல்லாத நேரம் எதாவது நடந்தா?? விஷப்பாம்பை பக்கத்திலேயே வச்சுக்கப் போறியா??” என்று பதிலுக்குக் கெளதம் ஆவேசமாகப் பேச, அவன் சொல்வதும் சரி என்று தெரிந்தும், திரும்பி அந்த TLஐ பார்த்தவளுக்கு, ஒருவேளை இதற்கு அவன் எதுவும் பழி வாங்குவானோ?! என்ற பயம் எழ, அந்த யோசனையில் இவள் அமைதியாக இருக்க, அவளின் எண்ணம் கௌதமிற்கு நன்றாகப் புரிந்தது.

குனிந்து அவள் அருகில் மண்டியிட்டவன், “நான் இருக்கிற வரைக்கும் யாரும் உன்கிட்ட நெருங்க முடியாது. நியாபகத்தில வச்சுக்கோ. அது எப்படின்னு கேட்காத. அது அப்படித் தான். கூடிய சீக்கிரம் எப்படின்னு காட்டுறேன். இப்போ வந்து கம்ப்ளைன்ட் கொடு யாழினி. உன்னை மாதிரி நாளைக்கு மத்த பொண்ணுங்க பாதிக்கபடாம இருக்கணும்ல. அதுக்காகவாவது. கம்ப்ளைன்ட் பண்ணு. யாரும் உன்னைத் தப்பா பார்க்க மாட்டாங்க. தைரியசாலி பொண்ணுன்னு உன்னைப் பாராட்டுவாங்க. நான் சொல்றதை புரிஞ்சிக்கோ.” என்று பல நிமிடம் அவளிடம் பேசிப் பேசியே அவள் மனதை மாற்றியவன், கீழே கிடந்தவனிடம் இருந்து, அவன் யாரையும் தொடர்புகொண்டு அங்கிருந்து தப்பிக்காத வகையில், அவன் மொபைலை வாங்கிக்கொண்டு, யாழினியுடன் அந்த அறையைவிட்டு வெளியே வந்ததும், அறை கதவை லாக் செய்துவிட்டு, HR டிபார்ட்மெண்ட்டுக்கு யாழினியை அழைத்துசென்று, அவள் பெயரில் புகார் கடிதம் கொடுத்து, தானும் சாட்சி வாக்குமூலம் கொடுத்து, தங்களது டீமின் ஹெட்டிடமும் பேசி விஷயத்தைச் சொல்ல, என்று துரிதமாக இவன் செயல்பட,

அடுத்த சில மணிநேரத்தில், இரண்டு தரப்பிடமும் விசாரணை செய்யப்பட்டு, யாழினியிடம் தவறாக நடந்துகொண்ட அந்த TL உடனே வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டான். இவையெல்லாம் நடந்து முடிந்திருக்க, விஷயத்தை மேலோட்டமாக மட்டும் இனியனிடம் கூறியிருந்தான் கெளதம். அதைகேட்டு அதிர்ச்சி அடைந்த இனியன், கௌதமிற்கு நன்றி கூறியவன், யாழினியை கண்டித்ததோடு, கூடிய சீக்கிரம் வீட்டில் சொல்லி அவளுக்குத் திருமணத்தை முடிக்கவேண்டும் என்று கூறினான்.

அன்றைய இரவு, தன் அறையில் படுத்திருந்த கௌதமிற்கு, இனியன் சொன்ன யாழினி திருமணச் செய்தி, மனதுக்குள் ஓடிக்கொண்டே இருக்க, அதை ஏற்றுக்கொள்ள அவனால் முடியவில்லை. அன்றைய தினம் அவள் ஆபத்தில் இருப்பதைப் பார்த்ததுமே, தன்னையும் அறியாமல், அப்படிக் கோபம் கொண்டவனுக்கு, இப்பொழுது அதை யோசிக்கையில், ஏனோ திருமணம் என்ற பெயரில் யாழினியை வேறு ஒருவருக்கு விட்டுக்கொடுக்க மனம் வரவில்லை.

அன்று அவளிடம், என்னை மீறி உன்னை யாரும் நெருங்க முடியாது என்று சொன்னதற்குக் காரணம், அவள் இனி தன் மனைவி என்று இவன் மனதுக்குள் முடிவெடுத்ததனால் தான். அதிலும், உலகம் தெரியாத சிறு குழந்தை போல் அவள் இருப்பது, நாளை மீண்டும் அவள் ஏதேனும் ஆபத்தில் மாட்டி கொள்வாளோ என்ற பயத்தை இவனுக்குள் விதைத்திருந்தது. அப்படி ஒரு சூழ்நிலையில் அவளைப் பார்க்க இவனுக்கு சக்தியும் கிடையாது. ஏனோ இப்பொழுதே அவளைத் தன் கைவளைவுகுள் வைத்து பாதுக்காக்க வேண்டும் என்ற உந்துதல் தோன்ற, அவளின் அந்தப் பளீர் சிரிப்புடன் கூடிய அந்தக் குழந்தை முகம் இவன் கண்களுக்குத் தெரிய, ஒரு முடிவுடன் உறங்கி போனான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!