Skip to content
Post Views: 1,613
அவனுமே இப்படி ஒரு திருப்பதை எதிர் பார்க்கவில்லை.. சையின் அவனுடையது.. அதில் நிச்சயம் மோதிரம் கோர்த்து..
அதுவும் பல்லவி அவளை அப்படி பேசிய பின்னும்.. அவள் அண்ணனுடையது தன்னோடு வைத்து கொண்டு இருந்து இருக்கிறாள்.. அதுவும் யாருக்கும் தெரியாது..
Advertisement
ஆம் முதல் பிரச்சனை பல்லவியால் வந்ததா…? இல்லை சூழ்நிலை அப்படி அமைந்து விட்டதா… தெரியவில்லை..
அதே சமயம் நந்திதாவும் தன் அறையில் தன் கழுத்தில் தொங்கி கொண்டு இருந்த சையினையும், அதில் கோர்த்து இருந்த அந்த நிச்சய மோதிரத்தையுமே கண் சிமிட்டாது பார்த்து கொண்டு இருந்தாள்..
Advertisement
Advertisement
பி..ஏ வரலாறு அவளின் கல்வி தகுதி…அந்த படிப்பை அவள் எடுக்கும் போதே சுற்றம் என்ன இது.. என்று ஒரு பரிகாசம் அவர்களுக்குள்..
ஏன் சூர்யா அண்ணன் கூட… “ ஏன் நந்து நீ நல்லா படிக்கும் பெண் தானே.. ப்ளஸ் டூவீல் இவ்வளவு மார்க் எடுத்து விட்டு இது என்ன பி.ஏ வரலாறு…” என்று அதிருப்தியாக தான் ..
Advertisement
“ நான் இந்த படிப்பு தான் படிப்பேன்…” என்று சொன்ன போது சூர்ய தேவ் கேட்டது..
அதற்க்கு நந்திதா நம் வரலாறு படிக்க…தகுதி என்பது படிப்பில் சுமார் மக்கு இவங்க மட்டும்
படிக்கிற லிஸ்ட்டில் எப்போது அண்ணா வந்தது.. எனக்கு பிடித்து இருக்கு..” என்று படிப்பில் இது தான் என்று ஆணித்தரமாண முடிவு எடுத்த நான்..
எப்படி என் கல்யாண வாழ்க்கை.. எப்போது யாருடன் என்று அழுத்தம் திருத்தமாக என்னால் சொல்ல முடியாது போய் விட்டது…
அன்று நடந்ததை நினைத்தால், அதுவும் தோழிகள் ஐந்து பேர் காஞ்சிபுரம் அகழாராய்ச்சி பற்றிய சில குறிப்புகள் எடுக்க அங்கு இருக்கும் ஒரு சிறு கோயிலுக்கு சென்ற போது..
அப்போது அம்மா போன் செய்து சொன்ன விசயமான.. “ உன் அண்ணா லவ் பண்றான்..” என்றதில்.
இவளுக்கும் பல்லவியை தெரியும்..ஆனால் அதை சொல்லாது அப்படியா..? என்பது போல் கேட்டு கொண்டாள்..
ஆனால் ஒரு நாள் தனக்கும் அந்த வீட்டு பையன் தான் மாப்பிள்ளை எனும் போது.. “ என்ன இது தான்..
பல்லவிக்கு அண்ணன் இருப்பது தெரியும்.. அவனை பார்த்தது இல்லை என்றாலுமே டால்பீன் நிறுவனத்தை பற்றி தெரியாதவர்கள்.. அதுவும் சென்னையில் கிடையாது..அவ்வளவே..
ஏன் இப்படி என்று கேட்டதில் தெரிந்த விசயம்.. என்ன இது பைத்தியக்காரதனமாக இருக்கிறது.. படித்தவர்கள் தானே.. இதற்க்கு எப்படி அவர்கள் வீட்டி ஒத்து கொண்டார்கள்..
அவர்கள் ஒத்து கொண்டால் நான் ஒத்து கொண்டு விட வேண்டுமா…? என்று நினைக்கும் போது பல்லவி தற்கொலை முயற்ச்சி இதற்க்கு தான் செய்தார்களா…?
அது தான் எனும் போது.. அதுவும் சூர்யா அண்ணனுக்கு பல்லவியை எந்த அளவுக்கு பிடிக்கும் என்பது நந்திதாவுக்கு தெரியுமே..
பல்லவிக்கும் தான் சூர்யா அண்ணா என்றால் விருப்பம்..
இரண்டு பேர் விரும்பும் போது.. “ ரிஜிஸ்ட்டர் மேரஜ் செய்து கொள்ளலாமே. இதை அண்ணாவிடம் சொன்ன போது..
அவன் தன்னிடம் கேட்ட.. “ நீ யாரையாவது விரும்புறியா நந்து..?” என்ற கேள்விக்கு அவளாள் உண்மையான பதில் கொடுக்க முடியவில்லை..
அப்போது தன் மனதில் தோன்றிய அந்த உணர்வு காதலா.. இல்லை தனக்கு பிடித்த துரை மீது இருக்கும் ஆர்வத்தில், அதை பற்றிய அனைத்தும் தெரிந்து வைத்து இருக்கும் தன் குரு ராகவ் ..
அதுவும் இந்த துரையில் இருக்கும் ஒட்டு மொத்த பெண்கள் மட்டும் அல்லாது ஆண்களும் அவர் மீது பாசம் அன்பு வைத்து கொண்டு இருப்பவர்..
தன்னிடம் காட்டும் தனிப்பட்ட அந்த அன்பில் அவள் உள்மனது பாதி ரசிப்பும் மீதி இந்த துரையில் இருப்பவரையே மணந்தால், கிடைக்கும் நன்மைகளையும் கணக்கிட்டு கொண்டு இருந்தவளுக்கு, ஆண்ணனின் பேச்சில் இரண்டு வகையில் அவளை யோசிக்கி வைத்தது..
ஒன்று தன் முடிவு என்பது.. இது தனக்காக மட்டுமே யோசித்தி எடுக்கும் முடிவு கிடையாது.. தன் அண்ணனை பற்றியும் யோசிக்க வேண்டும்..
அடுத்து ராகவ் விருப்பத்தை தான் ஏற்ற பின் கூட அண்ணனுக்கு நடந்தது போல் தனக்கும் நடக்கலாம்.. அதாவது இருவருக்கு ஜாதகம் பார்த்து பொருந்தவில்லை என்றால், அம்மா கண்டிப்பாக ஒத்து கொள்ள மாட்டார்கள்..
வீட்டை எதிர்த்து ராகவையே தான் கல்யாணம் செய்து கொள்ள நினைக்கும் அளவுக்கு, அவர்களுக்குள் அவ்வளவு பழக்கம் கிடையாது.. பிடித்தம்.. அது இனி தான் தெரியும். தெரிந்த பின் பிரிவதற்க்கு பதிலாக இப்போதே.. என்று இரு வேறு மாறுப்பட்ட சிந்தனைக்கு எல்லாம் ஒரு நாள் முற்று புள்ளி வைத்து விட்டாள்..
அந்த நிகழ்வு பெண் பார்க்கும் வைபோகம் என்பதா..? இல்லை… அண்ணன் பல்லவியின் நிச்சயம் மோதிரம் எடுக்க சென்ற போது..
கூடவே வேலையோடு வேலையாக.. தங்களுக்கு பிடித்து இருக்கிறதா..? பிடிக்கவில்லையா..? என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டிய சந்திப்பு என்று எடுத்துக் கொள்வதா…
ஆனால் ஒன்று இருவரும் சூர்யா பல்லவி திருமணம் முன் நாள் தங்களுக்கு நிச்சயம் என்று முடிவு அன்று தான் எடுக்கப்பட்டது..
அந்த நகை கடைக்கு முதலில் சூர்யா குடும்பம் தான் சென்றது.. அதன் பின் தான் யுகேந்திரன் தன் குடும்பத்தோடு அந்த பெரிய நகை கடைக்குள் நுழைந்தார்கள்..
நந்திதா வெளியில் இருந்த நீர் ஊற்றை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கும் போது தான் யுகேந்திரனின் கார் அந்த அங்கு வந்து நின்றது..
கார் ஆடி கார்.. அதுவும் கருப்பு நிறம்.. என்னவோ நந்திதா ஆடி கார் மீது அவ்வளவு ஒரு க்ரேஸி.. அதே போல் கருப்பு நிறம் அவளுக்கு அவ்வளவு பிடிக்கும்..
பிடித்த கார் பிடித்த கலரின் வந்து நிற்கவும் அவளின் பார்வை அந்த காரின் மீது தான் இருந்தது..
அந்த காரில் இருந்து முதலில் இறங்கியது யுகேந்திரன் தான்.. அவன்
இறங்கியதும் நந்திதாவின் பார்வை அவனையும் தொட்டு மீண்டது தான்..
பின் அவளின் பார்வை நீர் ஊற்று பக்கம் சென்று விட்டது.. அவளின் பார்வை மட்டுமே நீர் ஊற்றை பார்த்து கொண்டு இருந்தது மனம்.. இப்போ மட்டும் சுப்பூ இருந்தால்..
யப்பா சம சைட் என்று ஆடி கார் காரனை தான் பார்த்து கொண்டு இருக்கும் என்று நினைக்கும் போது தான் அவள் தோள் மீது கை பட்டது..
யார் என்று திரும்பி பார்த்தவள் அங்கு பல்லவி நிற்கவும்..
“ என்ன என் அண்ணன் கிடைக்க.. சாம பேத தான தண்டம் எல்லாம் முயன்று இருக்கிங்க போல..” என்று எப்போதும் பல்லவியை பார்த்தாலும் கல கலப்பாக பேசும் பழக்கப்படி பேசிக் கொண்டு இருக்கும் போது தான்..
தான் ரசித்து பார்த்த காரின் சொந்தக்காரன் பல்லவி அருகில் வந்து நின்றவனையும் பல்லவியையுமே நந்திதாவின் கண் மாறி மாறி பார்த்து கொண்டு இருந்தது..
இவள் தான் பார்வையை மாற்றி மாற்றி பார்த்து கொண்டு இருந்தவளுக்கு இவன் தான் பல்லவியோட அண்ணனா…? என்ற சந்தேகம் வந்த நொடி அவளின் பார்வை அவன் பக்கம் திரும்பாது பல்லவியை மட்டுமே பார்த்தாள்..
ஆனால் அவன்… அவனின் பார்வை தன்னிடம் தான் இருக்கிறது என்பதை அவனை பார்க்காதே அவளாள் உணர முடிந்தது..
அந்த உணர்தலே அவளுக்கு ஒரு வித பதட்டத்தை கொடுத்து விட்டது.. அதனால் தானோ என்னவோ.. பல்லவி பேசியது.. அவர் அப்பா அம்மா பேசியது .. கேட்டதற்க்கு பதில் கொடுத்து கொண்டு இருந்தாலுமே, கவனத்தை அவர்கள் பேச்சில் வைக்க முடியவில்லை..
பின் அவர்களோடு கடைக்குள் நுழைந்து நிச்சயம் மோதிரம் எடுத்த போது… அதுவும் பல்லவியின் அம்மா..
“ யுகி உங்களுக்கும் இப்போவே எங்கேஜ்மெண்ட் ரிங்க் எடுத்து விடலாம் என்று சொல்றான்.. நீ என்னம்மா சொல்ற..?” என்று கேட்டதற்க்கு..
தலையசைத்து தன் விருப்பத்தை தெரிவித்தாள்..
அந்த விருப்பம் என்பது அந்த மோதிரத்திற்க்கு மட்டுமே கிடையாது.. யுகேந்திரனை திருமணம் செய்ய விருப்பம் என்ற பதிலும் அதுவே என்று தெரிந்தே தான் சொன்னாள்..
ஆனால் ஒன்று அவளின் அந்த முடிவு யுகேந்திரனை பார்த்ததால் நந்திதா எடுத்தது கிடையாது.. இங்கு வரும் முன்னவே.. அதாவது யுகேந்திரனை பார்ப்பதற்க்கு முன்னவே இந்த முடிவை எடுத்து அவள் விட்டாள்..
இங்கு வரும் முன் சூர்யா சொன்ன.. “ என்னை வைத்து எல்லாம் நீ உன் வாழ்க்கையை முடிவு செய்ய கூடாது நந்து.. “ என்று சூர்ய தேவ் பேசிக் கொண்டு இருக்கும் போதே..
பல்லவியிடம் இருந்து கைய் பேசியின் மூலம் அழைப்பு வர… அதை ஏற்று பேசிக் கொண்டே வெளியேறிக் கொண்டு இருந்தவன் பேசிய..
“ அப்படி எல்லாம் நான் நந்துவை நிர்பந்திக்க மாட்டேன்.. அவளுக்கு பிடித்தா மட்டும் தான் மத்தது..” என்று சொன்னவனின் பேச்சுக்கு அழைப்புக்கு அந்த பக்கம் இருந்த பல்லவி என்ன சொன்னாளோ..
சூர்ய தேவ்… “ நந்துவுக்கு விருப்பம் இல்லேன்னா.. நாம கொஞ்ச நாள் வெயிட் பண்ணி தான் ஆகனும்.. உன் விருப்பம் படி தான் எல்லாம் ஆடி முடியாது..” என்று அவன் பேசிக் கொண்டே வெளியில் சென்று விட்டாலுமே.. அவர்களுக்குள் என்ன பேச்சு வார்த்தை நடந்தது என்பதனை நந்திதாவால் புரிந்து கொள்ள முடிந்தது..
இதே ஒத்து கொண்டு முதலில் பல்லவி சூர்யாவுக்கு தான் நிச்சயம் மோதிரம் வாங்கியது… அடுத்து ஒரு சில நகைகள் பல்லவிக்கு என்று சாந்தி வாங்கும் போது மீனாட்சியும் தன் வருங்கால மருமகள்களுக்கு என்று முதலில் வாங்குவது மங்கலகரமானதாக தான் இருக்க வேண்டும் என்று காசி மாலை வாங்கி கொடுத்தார்..
அந்த காசி மாலை பல்லவிக்கு பிடித்து இருந்தது தான்.. ஏன் பல்லவியிடம் கூட இரண்டு காசி மாலை சின்னது பெரியதுமாக அவளிடம் இருக்கிறது..
ஆனால் தனக்கு வாங்கும் போது தன் விருப்பம் கேட்டு தானே வாங்கி கொடுக்க வேண்டும் என்று பல்லவி நினைத்தாள்.. அது நியாயமும் கூட..
அது என்னவோ பல்லவிக்கு மீனாட்சியை இங்கு பார்த்ததுமே இவர்களால் தானே நான் சாவு வரை சென்று வந்தேன் என்ற
விதை அன்றே அவள் மனதில் விதைத்து விட்டது..
அதோடு தன் அண்ணன் தனக்காக தான், விருப்பம் இல்லாது போனாலும் நந்திதாவை திருமணம் செய்ய ஒத்து கொண்டார் என்றும் நினைத்து விட்டாள்… அது கொண்டே இன்றைய பிரச்சனைக்கு பல்லவியின் அந்த நினைப்பு காரணமாகி விட்டது…
error: Content is protected !!