Skip to content
Post Views: 4,978
“மன்னிப்பு கேட்க முடியுமா முடியாதா?”என்று கேட்டவனிடம் “உங்க தங்கச்சி என்ன பேசினாளோ அதை ஒண்ணு விடாம இப்போ சொல்ல சொல்லுங்க நான் மன்னிப்பு கேட்கணுமா வேண்டாமா னு அடுத்ததா முடிவு பண்றேன்”என்ற நீரதி அவனுக்கு புதிதானவள்.
“நீ அடிச்சதுக்கு மன்னிப்பு கேளு நான் அவளை கேட்கிறேன்”என்று அவனும் பிடிவாதமாக நிற்க
Advertisement
நிலா வேகமாய் முந்திக் கொண்டு,”அண்ணா நான் அவங்க எனக்கு ஸ்வாதி மேல உரிமை இல்லைன்ற மாதிரி பேசவும் ஏன் உங்க மகளும் உங்களை மாதிரி காதல் கல்யாணம் பண்ண போறாளானு கேட்டேன். அதுக்கு போய் அப்படி அடிக்கிறாங்க இன்னும் கொஞ்சம் நேரத்தில் என் வீட்டுக்காரர் வந்திடுவாரு அவர் கேட்டா நான் என்ன பதில் சொல்வேன்.”என்று விம்மி அழுதவள், “நான் இனிமே இந்த வீட்டுக்கே வரலை. சாதாரணமாக பேசக் கூட உரிமை இல்லாத வீட்டில்”எனும் போதே
Advertisement
“சாதாரணமா பேசினியா…ச்சீ உனக்கு வாய் கூசலை. இவ்வளவு பெரிய பொய் பேசறீயே”என்று முகத்தை சுளித்த நீரதி, “பிறந்து நாலு மாசம் ஆகாத பிள்ளைய பத்தி தப்பா சொல்றா… நான் உங்களை வெள்ளைத்தோலை காட்டி மயக்கினேனாம் அதை விட ஒண்ணு”என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே குறுக்கிட்டவன் “போதும் நிறுத்து ரதி”
Advertisement
“ஏன்டா என் பொண்ணை அவ அடிச்சு இருக்கா, உன் தங்கச்சி அவ. அவளுக்கு கன்னமே வீங்கி போச்சு என்னவோ சமாதானம் செய்ற மாதிரி பேசற…இதுக்கா நீ ஆசைப்பட்டன்னு இவள கட்டி வச்சோம் நம்ம குடும்ப கௌரவம் மானம் மரியாதையை சொந்தம் எல்லாம் கேலி பேசறதை பொறுத்துகிட்டு உன் ஆசை ஒண்ணு தான் பெருசுனு கல்யாணம் பண்ணி வச்சது இந்த நாளுக்காகவா…?இதுக்கு மேல நான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன். என் மகளும் நானும் போறோம். நீயும் இவளுமே ஆளுங்கப்பா”என்று வளர்மதி குதிக்க ஆழியன் நடந்த சம்பவம் முழுதாய் புரியாமல் யார் பக்கம் பேசுவதென்று குழம்பி நின்றான்.
Advertisement
“ம்மா அமைதியா இருங்க ” என்றவன் “மன்னிப்பு கேளு ரதி. “என்று கூற
“அவ பேசினதுக்கு ஒரு அறை கம்மி”என்றவள் “நான் அடிச்சது தப்பு இல்லை மன்னிப்பு கேட்க மாட்டேன்”என்றதும் நிலா மகனைப் பிடித்து இழுத்து தன் பையைத் தூக்கிக் கொண்டு “எனக்கு இனி பொறந்த வீடே இல்லை. எதுவும் வேணாம் இதுக்கா நான் இங்க வந்தேன்”என்று ஆவேசமாக பேசியபடி வெளியேற நீரதி கண்டு கொள்ளாமல் பிள்ளையோடு உள்ளே செல்ல ஆழியன் தங்கையை பிடித்து இழுத்து வந்தான்.
“சாரி நிலா அவளுக்காக நான் சாரி கேட்கிறேன் அண்ணனுக்காக ப்ளீஸ்”என்று மன்னிப்பை வேண்டி விட்டு அறைக்குள் செல்லப் போக
வளர்மதியோ”நீ மன்னிப்பு கேட்டா ஆச்சா…?அவ என் மக கிட்ட மன்னிப்பு கேட்கணும் இல்லைன்னா இந்த வீட்டில் அவ இருக்க முடியாது”
“நான் மன்னிப்பு கேட்க முடியாது”என்றவள் நிலாவிடம்”நடந்த முழுசையும் உங்க அண்ணன் கிட்ட சொல்லு யார் மன்னிப்பு கேட்கணும் னு அவர் முடிவு பண்ணுவார்”என்றாள் அழுத்தமாக.
அதற்குள் பொன்னி வீட்டில் பிரச்சினையாக இருக்கிறது என்று தேசிகன் அமுதன் தரங்கினி மூவரையும் அழைத்து விட்டார். வருணிற்கு சளி பிடித்து இருக்கிறது என்று அமுதன் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தான்.
“எனக்காக கேட்க மாட்டியா ரதி?”என்று ஆழியன் அமைதியாக கேட்டதில் “இதுவரைக்கும் உங்களுக்காக தான் எல்லாம் செஞ்சேன். இந்த ஒரு விஷயம் என் மகளுக்கானது. நிச்சயம் தீர்மானமா மன்னிப்பு கேட்க மாட்டேன்”என்று உறுதியாக பேசியவளை ஆழ்ந்து பார்த்தவன் அதற்கு மேல் மன்னிப்பு கேட்கும்படி கூறவில்லை. மற்றவர்களும் வீடு வந்து சேர்ந்திருக்க
“நிலா என்ன நடந்தது யார் என்ன பேசினீங்கனு எதுவும் எனக்கு தெரியாது. ரதி மன்னிப்பு கேட்க மாட்டேன் னு சொல்றான்னா அதுல”
“அதுல என்ன இருக்கும் ண்ணா. திமிரைத் தவிர வேறென்ன இருக்க போகுது. எல்லாம் நீங்க குடுத்த இடம்”என்று நிலா பட்டென்று பேசிவிட ஆழியனுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. என்னிடமே இப்படி பேசுகிறாள் என்றால் நீரதியிடம் நிச்சயம் இவள் சரியாக பேசி இருக்கப் போவதில்லை என்று உணர்ந்து அமைதிகாத்தான் அவன்.
“என்னடா பிரச்சினை?”என்று தேசிகன் கேட்க வளர்மதி வேகமாக நிலாவை அடித்து விட்டதை நீரதியின் கைத்தடத்தை காட்டி ஒரு மூச்சு அழுதார்.
“என்ன நீரா இது ஏன் நிலாவை அடிச்ச?”என்று அமுதனுமே கேட்க கல்லாய் நின்றாள் அவள்.
“ச்சைக் என் மானம், மரியாதை, குடும்ப கௌரவம் எல்லாம் விட்டுட்டு நீ ஆசைப்பட்டன்ற ஒரு காரணத்துக்காக கல்யாணம் பண்ணி வச்சா என் மகளை கை நீட்டுவாளா உன் பொண்டாட்டி. இதான் புகுந்த வீட்டில் நடந்துக்கிற லட்சணமா…?என் பொண்ணுக்கு இல்லாத உரிமை இங்கே யாருக்கு இருக்கு. மன்னிப்பு கேட்டு இங்கே இருக்கிறதுனா இருக்க சொல்லு இல்லாட்டி இப்பவே போக சொல்லு”என்று தேசிகனும் பேச
“அவ மன்னிப்பு கேட்பா ப்பா ஆனா”என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போதே நீரதி குறுக்கிட்டவள் “உங்க பொண்ணு உங்களுக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு என் பொண்ணு எனக்கு முக்கியம். என் பிள்ளையை பார்த்து என்ன சொன்னாங்க னு கேட்டுட்டு அதுக்கு அப்புறம் நான் என்ன செய்யணும் னு சொல்லுங்க.அது வரைக்கும் என் வாயில் இருந்து அந்த வார்த்தை வரவே வராது.”என்று திடமாக நிற்க தரங்கினியே நிலாவை சந்தேகமாகப் பார்த்தாள்.
“இனிமே இந்த வீட்டுக்கு வந்தா கேளுங்க.”என்று வெடுக்கென்று கிளம்பிய மகளை பிடித்த தேசிகன் “அப்போ இந்த வீட்டை விட்டு வெளியே போ காலையில் என் கண்ணில் நீ படக் கூடாது”என்றார் தேசிகன்.
அறைக்குள் சென்று விட்டாள் நீரதி. இதில் இருந்து பின்வாங்குவதாக இல்லை அவள். ஆழியனும் வேகமாய் உள்ளே செல்ல “நீ எங்கடா போற மில்லுக்கு போ”என்றார் தேசிகன்.
“அப்பா!”என்றவன் அமைதியாக வெளியேறியதில் உள்ளிருந்த நீரதிக்கு காதல் கொண்ட மனம் பெரிதாய் அடி வாங்கியது.
‘இவன் நிஜமாகத்தான் என்னை விரும்பினானா?’என்று தன்னைத் தானே கேட்டு நொந்து கொண்டாள். ஆழியன் மனதில் ஆழிப்பேரலை ஒன்று அமைதியாக உள்வாங்க அது பிரளயமாக வெளியே வர காத்திருக்கிறது என யார் அறிவார்.
************
“என்ன இந்த பொண்ணு அடிச்சுட்டு மன்னிப்பு கேட்காதா…? அப்படி என்ன நிலாக்குட்டி தப்பா பேசி இருக்க போறா… மருமகள் னு சொன்னது ஒரு குத்தமா அதுக்கு போய் அடிப்பாங்களா?”என்று அமுதன் பேசிக் கொண்டே ஆடை மாற்ற, தரங்கினி மகனை கட்டிலில் படுக்க வைத்து விட்டு தலையணையை இருபுறமும் வைத்தவள் தன் ஆடையை மாற்றி இரவு உடைக்குள் புகுந்தாள்.
“சொன்னா தப்பா எடுத்துக்க வேணாம் மாமா.”என்ற பீடிகையோடு துவங்கிய தரங்கினி “நீராவே கோபப்பட்டு அடிச்சு இருக்கான்னா அவ பக்கம் உள்ள நியாயத்தை நீங்க பார்க்கணும்”என்றாள்.
“என்ன அதிசயமா நீராக்கு சப்போர்ட் பண்ற?”என்று நக்கலாக கேட்ட கணவனிடம் “ஏதோ தோணுச்சு மாமா. நிச்சயம் நிலா நீராவை ஏதோ சொல்லி இல்லை ஸ்வாதி பாப்பாவை ஏதோ சொல்லி இருக்கணும் இல்லாட்டா இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிற ஆள் நீரா கிடையாது.”என்று கூற “அதுவும் சரிதான் ஆனா அடிக்கிற அளவுக்கு என்ன பேசி இருக்க போறா?”என்று குழப்பமானான் அமுதன்.
************
“எப்படி அடிச்சுட்டா பாதகத்தி அவ கையில கட்ட மொளைக்க வெளங்காம போவ”என்று சாபமிட்டபடியே மருந்தை தனக்குத் தானே போட்டுக் கொண்டாள் நிலா.
“என்ன இருந்தாலும் நீ பேசினது அதிகம் தான் நிலா”என்று பொன்னி சொல்லியே விட
“நான் என்ன பாட்டி தப்பா பேசினேன்?”என்று வலியோடு மல்லுக்கு நின்றவளிடம்”பச்சைக் குழந்தை அதைப் போய் ஓடிப் போயிடும் காதலிக்கும்னு பேசற. அப்படி பேசலாமா? முதல்ல உங்கப்பனுக்கும் அண்ணனுக்கும் தெரிஞ்சது அவ்வளவுதான் பாத்துக்க. இந்த மட்டுக்கு இப்படியே நீ கிளம்பி போறது நல்லது. இல்லை வேண்டாம் நான் எதுவும் சொல்லலை”என்று ஆதங்கமாய் பேசிவிட்டார் பொன்னி.
“என்ன பாட்டி அவளுக்கு சப்போட்டா நீங்க?”என்றதில் கடுப்பான பொன்னி”என்ன வளரு மகளை பேச விட்டு வேடிக்கை பாக்கிற. ஸ்வாதி உனக்கு பேத்தி. உன் மக பேசினா என்ன பேசினாலும் சரி னு நிப்பியா நீ…? நாளைக்கு உன் பிள்ளைய யாராவது இப்படி சொன்னா அமைதியா இருப்பியா நீ?”என்று திட்ட
“ச்சீ என் மக ஏன் அப்படி செய்ய போறா. நான் என்ன இந்த மாதிரி காதல் கல்யாணமா பண்ணேன்”என்று நக்கலாக கூற
“அடச்சீ வாய மூடு. வேற ஏதாவது சொல்லிடப் போறேன் நான். “என்றவர் எழுந்து போய் விட்டார்.
வளர்மதியோ அமைதியாக, “இனிமே வந்தா உன் புருஷன் கூட மட்டும் வா நிலா”என்றார்.
“ம்மா?!”என்று அதிர
“நீ எனக்கு பொண்ணு தான் நீரா உன்னை அடிச்சது தப்பு தான், அதுக்காக நீ பேசினது சரின்னு ஆகிடாது. உன்னைக் காப்பாத்த ஏதேதோ மழுப்பி பேசி வச்சிருக்கேன் நான். ஆனா பிஞ்சுக் குழந்தை அதுவும் என் பேத்தியை அப்படி பேசினதுக்கு நியாயமா உன் வாயை கிழிச்சு தச்சிருக்கணும் நான்”என்றார் நறநறவென்று பல்லைக் கடித்தபடி.
“ம்மா?”என்றவளை “என்னடி அம்மா. வந்தோமா பாத்தோமானு போயிட்டு இரு. அவ அடிச்சான்ற கோவம் மட்டும் தான் எனக்கு. மத்தபடி நீ பேசினதும் கம்மி கிடையாது. மகளா மருமகளானு பார்த்து நான் உன் பக்கம் நின்றுக்கேன் அதுக்கே என்னை என் வீட்டுக்காரர் எதில் அடிக்கப் போறாரோ தெரியலை. “என்றவர் படுத்துவிட ஏதேதோ சிந்தனையில் அமிழ்ந்து உறங்கியும் போனார்.
நிலா வலித்ததில் உறங்காமல் இருக்க மனமோ உலைக்கலனாக கொதித்தது.
‘இவள் மட்டும் என் அண்ணனை காதலித்து திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் என் சுதந்திரம் பறிபோயிருக்குமா…?என் சுதந்திரம் போய் நான் நினைச்சது எல்லாம் நடக்காம போய் அவஸ்தைபட்டேன். இதுக்கே இவளை சும்மா விட்டு இருக்க கூடாது. நான் எதுவும் தப்பா பேசலை. வெள்ளைத் தோலை காட்டி மயக்கி தானே கட்டி இருக்கா என் அண்ணனை’என்று தான் பேசியதற்கு தனக்கு தானே நியாயம் கற்பித்தாள்.
தேசிகன் மறுநாள் காலையில் எழுந்து வந்ததுமே நீரதியை மன்னிப்பு கேட்க சொல்ல அவள் தன் நிலையில் இருந்து மாறவே இல்லை.
….. தொடரும்
error: Content is protected !!